மாங்கல்யம் தந்துனானேனா

ரபியா

New member
Member
"மாங்கல்யம் தந்துனானேனா"

அத்தியாயம் 1

நிலா,இனிய காலை வணக்கம்..
இன்றைய நாள் இனிதான நாளாக நமக்கு அமையட்டும்.

சரவணன், எழுந்துட்டீங்களா? நீங்க என்னுடன் இருக்கும் வரை..என்றும் இனிய நாள் தான்."லவ் யூ மை பேபி.."

நான் எழுந்து இரண்டு மணி நேரமாச்சு.
எழுந்துட்டு என்னை விட்டுட்டு, "டெடியை கட்டிப் பிடிச்சு தூங்கற உன் அழகை" ரசிச்சுப் பார்த்துட்டேயிருந்தேன்.

'ம்' "எனக்குத் தெரியும் சரவணன்.."

'ஏய்' நிலா..."தெரிஞ்சுகிட்டே வா கண் திறக்காமல் தூங்கிட்டு இருந்தே?"

என் புருஷன், இன்னும் எப்படியெல்லாம் "என்னை ரசிச்சுப் பார்க்கிறார்னு பீஃல் பண்ண தான்.."

இப்படியே எவ்வளவு நேரம் பேசுவே நிலா? "காலை வாசம் அதிகமாயிருக்கே?"

அனுபவிங்க இன்னும் கொஞ்ச நேரம்..
நேற்று நீங்க வாங்கித் தந்த மல்லிப்பூ வாசத்தை நான் பொறுத்துக்கிட்டேன்..ஷோ..ஷோ..என, தன்னுடைய கண்களை பாதி திறந்து கொஞ்சிய அழகை தனது மொபைலில் எடுத்து விட்டு, இன்னைக்கு என் வாட்ஸ் அப் டிபி..இது தான்..அபௌட்டில் "காலை டூத் பேஸ்ட் வாசம்" எனப் போடப் போறேன்.

மாமா.."என்னை தூக்கிட்டு போய் விடுங்களேன்" நான் ப்ரஸ் பண்ணிட்டு வர்றேன். இன்னைக்கு தான் நீங்கயிருப்பீங்க..ப்ளீஸ்..

மாமான்னு கூப்பிட்டா நான், "நாக்அவுட்னு நீ நல்லா தெரிஞ்சு வச்சிருக்கே நிலா.."

சரி வா..எனக் இருக் கைகளில் ஏந்தி..
இறக்கி விட்டவன்..முந்திலாம் "ரோஜா பூமாலை போல இருப்பே நிலா"இப்போ செவ்வந்தி மாலை மாதிரி வெயிட்டா இருக்கே.மதியம் தூங்கறதை நிப்பாட்டிடு..அப்புறம் "மாமாவை தூக்கச் சொன்னா முடியாதுடா என் செல்லம்"

மதியம் தூங்கலைன்னா "தலைவலி வருதே மாமா.."

"ப்ரஸ் பண்ணிட்டு பேசு.." நிலா

நான் காபி போட்டு எடுத்து வைக்கிறேன்..வயிறு காலியா இருக்கு. வாமிட் வர்ற மாதிரியிருக்கு..
என ஓடினான் சரவணன்.

பூனையை விட மெதுவாக நடந்து வந்து, பின்னாலிருந்து அணைத்தவாறே மாமா எனக் காதைக் கடித்தாள் நிலா..

ஏய், காபி இப்போ கொட்டினா க்ளீன் பண்றது உன் வேலையாகிடும்.காபி எடுத்துட்டு வர்ற வரைக்கும் சேட்டை பண்ணாமல் போய் டைனிங் டேபிளில் உட்கார் நிலா..கீழே வெறும் தரையில் உட்கார்ந்துட்டியா? இந்தப் பழக்கம் எப்ப மாற்றிக்கப் போறே நிலா?


'ம்' மாமா...'ப்ச்'...அதை விடுங்க மாமா...ஆனால், நீங்க காலையில் இப்படி அணைக்கும் போது எனக்கு உலகமே மறந்து போகும்.பரபரன்னு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணித் தர்றதுக்கு க்ளூகோஸ் குடிச்ச மாதிரி எனர்ஜி கிடைக்கும்.நீங்க என்ன போய் உட்கார சொல்றீங்க மாமா..நான் கோச்சுக்கிட்டேன் என "உம்மென தன் முகத்தை வைத்துக் கொண்டாள்" நிலா.

'ம்ஹூம்' எனக்குத் தெரியும் இந்த கோபத்தை எப்படி சரி பண்ணனும்னு.
இதோ வந்துட்டேன் என இரு காபி கப்களை டேபிளில் வைத்து விட்டு,"கை சுடுது நிலா தாங்க முடியலை" என கைகளை உதறினான் சரவணன்.

"மாமா...என்னாச்சு?" கையை காட்டுங்க
எனச் சுற்றி வந்தவளை அணைத்து, தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு, "காபி ப்ளீஸ்" என்றவனின் முகம் பார்த்து, "என் மாமா நீங்க எவ்வளவு அழகு?" என தன் கைகளை சொடுக்கியவள் எவ்வளவு கண்? "உங்களுக்கு சுற்றிப் போடனும் மாமா"

வேற யார் கண்ணும் இல்லை. "உன்னோட கண்ணே தான்..நிலா" என நெற்றியில் தன் நெற்றியை வைத்து லேசாக இடித்தான்.

நிலா..."எங்கேயாச்சும் போகலாமா?"

நோ மாமா. இந்த ஞாயிற்றுக்கிழமை முழுக்க "உங்களை நான் ஒரு நொடி கூட விடாமல் ரசிக்கறதுக்கு மட்டும் தான்.."

'அடடா' ரசி நிலா.."லாங் ட்ரைவ் போகலாம்"

இல்ல மாமா...வேண்டாம்."ஐ வாண்ட் டூ பி வித் யூ.." என்று சிரித்த நிலாவின் காதலில், தன்னை மறந்து நின்ற சரவணனின் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

அங்கே நீண்ட மௌனம் நிலவியது..

தொடரும்
 

ரபியா

New member
Member
மக்களே
இத் தளத்திற்கு புதிதாக வந்துள்ளேன்..மாங்கல்யம் தந்துனானேனா தொடர்கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்..உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
நன்றி
ரபியா
 

Admin

Administrator
Staff member
Writer
வாழ்த்துகள் மா
தொடர்ந்து எழுதுங்கள். வாசகர்களின் ஆதரவு கிடைக்கும்.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom