மயானப் புளியமரம்− அத்தியாயம் 11 | Ezhilanbu Novels/Nandhavanam

மயானப் புளியமரம்− அத்தியாயம் 11

Santirathevan_Kadhali

✍️
Writer
பிட்டுவும் சுந்தரும் யார்?

காலம் நகர நகர தந்தரனும் வளர்ந்து வந்தான். அவன் மந்திர வித்தைகளைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தான். அவனை மிஞ்ச எவரும் இல்லாத அளவிற்கு அவன் சிறந்து விளங்கினான். தந்தரன் ஒரு மாவீரனாக இருந்தான் என்று தான் கூற வேண்டும்.

தந்தரனைக் கண்ட காசிமிர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் இல்லாத சமயத்தில் தந்தரன் தன் ஊர் மக்களைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்வான் என்று எண்ணினார். அவ்வூர் மக்களும் தந்தரனுக்கே பக்கப் பலமாக இருந்தனர். அவனே மந்திரப்புரத்தின் அடுத்த தலைவனாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டனர்.

ஆனால், காலப் போக்கில் தந்தரனின் குணாதிசயங்கள் அனைத்தும் மாற ஆரம்பித்தது. அவன் தன்னிடம் அதிகமான சக்திகள் இருப்பதனை உணர்ந்தான். அவனுக்குப் பேராசை மட்டும் குறைந்தப்பாடில்லை. பாதாள தேவியை நோக்கித் தவமிருந்து இன்னும் சக்திகளைச் சேர்த்துக் கொள்ள எண்ணினான். அவன் தன் தந்தையின் அனுமதியுடன் காட்டிற்குள் சென்று பாதாள தேவியை நோக்கித் தவமிருந்தான்.

அவனின் தவத்தை மெச்சிய பாதாள தேவி அவன் முன் தோன்றி வரத்தைக் கேட்கும்மாறு கூறினார்.இதுதான் தக்கச் சமயம் என்றெண்ணியவன்

"தாயே எனக்கு இப்புவியிலுள்ள அனைத்துச் சக்திகளையும் கட்டுப்படுத்தும் சக்தி வேண்டும்.என்னால் நல்ல சக்திகளையும் தீய சக்திகளையும் கட்டுப்படுத்தக் கூடிய சக்தி வேண்டும்"என்றான்.

பாதாள தேவியும் "உன் கையில் போடக்பூர் நாட்டில் உள்ள மாய ஓலை இருந்தால் நீ நினைத்தவற்றை நிச்சயம் அடையலாம். இப்போதைக்கு உன்னால் அதனை எடுக்க முடியாது. ஏனெனில், அது மகாராஜா சத்ய சீலனிடம் பாதுகாப்பாக உள்ளது."என்று கூறிவிட்டு மறைந்தார்.

அதைக்கேட்ட தந்தரன் ஏமாற்றத்துடன் தன் இல்லம் திரும்பினான். அவனின் மனம் முழுவதிலும் மாய ஓலையைப் பற்றியச் சிந்தனை மட்டுமே இருந்தது. எவ்வாறாவது அதனை மகாராஜா சத்திய சீலனிடமிருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்று எண்ணினான்.அவன் மனதில் பல திட்டங்களைத் தீட்டினான். தன் குடும்பத்தினரிடம் அவன் பல விஷயங்களை மறைத்தான்.அவன் போக்கிலும் சற்று மாற்றங்கள் இருந்தன.

தந்தரன் இறைவனை வழிப்படுவதை முற்றிலும் நிறுத்தினான்.பலத் தீயச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தான்.நரபலி உண்பவர்களோடு தொடர்பு கொண்டான். தன் மந்திர சக்திகளைக் கொண்டு அவன் தீயச் சக்திகளை உயிர்பெறச் செய்து தனக்கு உதவுவதற்காக வைத்துக் கொண்டான்.தன் வம்சாவளியினருக்கு எதிராகச் செயல்பட்டான்.

தந்தரன் தனது குலவிதிமுறைகளை மீறி நடக்க ஆரம்பித்தான். இத்தனைக் காலம் அவனைப் போற்றி வந்த அனைவரும் அவனைத் தூற்ற ஆரம்பித்தனர்.தந்தரன் காரணமின்றி தன் வம்சாவளிச் சேர்ந்தவர்களை வெறுத்தான். அவர்கள் ஏதாவது உதவி கேட்டு வந்தால் அவர்களை விரட்டிவிட்டான். தன் மகனின் தீயச் செயல்களை அறிந்த காசிமிர் அவனுக்கு அறிவுரைக் கூறினார். ஆனால், தந்தரன் அதனைக் கேட்டப்பாடில்லை.


தன் தந்தையையே எதிர்த்து நின்றான். தனக்கு மாயாவி என்றப் பட்டத்தினைப் பாதாள தேவி வழங்கியதாகவும் மாய ஓலை தன் கையில் கிடைத்தால் தீயச் சக்திகளைக் கொண்டு தான் பூமியை ஆக்கிரமித்துவிடுவதாகவும் அப்பொழுது தந்தரனுக்கு இவ்வுலகில் உள்ள அனைத்துமே அடிமையாகிவிடும் என்று ஆணவத்தோடு பேசினான். இதனைக் காசிமிர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை தேவதை தனக்கு அழித்தச் சாபம் பலித்துவிடுமோ என்று அஞ்சினார்.


காசிமிர் மாயாவியை எச்சரித்தார். ஆனால்,அவன் அவரை மதிக்கவே இல்லை.காசிமிர் தன் பதவியைத் தனக்கு வழங்கினால் தான் இத்தீயச்செயல்களிலிருந்து விடுப்பட்டுவிடுவதாகக் கூறினான். காசிமிர்க்கு மாயாவியின் மீது துளியும் நம்பிக்கை இல்லை. அவன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றமாட்டான் என்பதனை அவர் நன்கு அறி்ந்து வைத்திருந்தார்.

அரையாண்டு கழிந்தது......

தந்தரன் தன் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக போடக்பூர் நாட்டை நோக்கிச் செல்ல ஆயத்தமானான். மகாராஜா சத்திய சீலன் தன் போடாக்பூர் நாட்டை மிகவும் சிறப்பாக ஆண்டு வந்தார். அவரை வெறுத்தவர்கள் எவருமே இல்லை என்பதுதான் ஆணித்தரமான உண்மை. அவர் தன் நாட்டை தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆட்சி செய்து வந்தார்.அவரின் நாட்டில் நுழைவது அவ்வளவு எளிதானக் காரியம் அல்ல என்பதனை தந்தரன் முன்னே நன்கு அறிந்து வைத்திருந்தான். ஏனெனில், அவ்வூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தந்தரன் மந்திரத்தில் கைத்தேர்ந்தவன் போன்று வேடம் தரித்துக் கொண்டு காவலர்களை நோக்கிச் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். முதலில் தந்தரனைப் பார்த்து அவர்களுக்குச் சந்தேகம் வந்தாலும் பின்னர் அவர்கள் தந்தரனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டனர். ஏனெனில்,காவலர்கள் தன் பேச்சைக் கேட்கும்படி தந்தரன் அவர்களை மந்திரச் சக்தியைக் கொண்டு வசியம் செய்தான்.


மாயாவி தந்தரன் ஒரு சாமார்த்தியசாலிப் போல் அரசவைக்குள் நுழைந்தான். அவனின் வருகையை அரசர் இன்முகத்துடன் வரவேற்றார். தந்தரன் தன் மந்திர வித்தைகளைக் காட்டி அரசரை மகிழ்வித்தான். அவன் அரசரை மயக்கிவிட்டான் என்றும் கூறலாம். அரசருடன் சேர்ந்து மந்திர வித்தைகளை கண்டு இரசித்துக் கொண்டிருந்த அரச குமாரர்கள் இருவரும் தந்தரனின் மந்திர வித்தையைக் கண்டு பிரம்மித்துப் போயினர்.


தந்தரன் தன் மந்திர சக்திகளின் மூலம் அரண்மனையைத் தங்கமாக மாற்றிக் காட்டினான்.மேலும், அரண்மனையைச் சுற்றி அழகியப் பூந்தோட்டங்களையும் உருவாக்கினான். அதைக் கண்ட அரசர் ஆனந்தமடைந்தார்.

மாயாவி தந்தரன் தனது மந்திரத்தின் மூலம் முதலில் இரண்டு அரசக்குமாரர்களையும் வசியம் செய்தான். மாயாவியின் சூழ்ச்சியில் சிக்கிய அவர்கள் தங்களின் தந்தையிடம் அவ்வித்தைகளைக் கற்றுக் கொள்ளத் தாங்கள் விரும்புவதாகக் கூறினர்.அரசரும் தனது புதல்வர்களின் வேண்டுதல்களுக்கினங்க தந்தரனிடம் அந்த மந்திர வித்தைகளைத் தம் புதல்வர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படி கூறினார். அரசர் தந்தரன் இரண்டு இளவரசர்களுக்கும் மந்திர வித்தைகளைச் சொல்லிக் கொடுத்து முடிக்கும் வரையில் தன் அரண்மனையிலே தங்கியிருக்கும்படி
உத்தரவிட்டார்.தந்தரனும் தன் இலட்சியத்தை நிறைவேற்ற இதுதான்
சரியான வாய்ப்பு என்பதனை உணர்ந்தான்.அவ்வாறே தந்தரன் அரச குமாரர்களுக்கு மந்திர வித்தைகளைச் சொல்லிக் கொடுத்து வந்தான். உண்மையில் அவன் அவர்களுக்கு நல்ல வித்தைகளைச் சொல்லிக் கொடுக்கவில்லை மாறாக அவன் அவர்களை மந்திர சக்தியின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். இதனை அரசக் குமாரர்களும் அரசரும் முன்பே அறிந்திருக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல தந்தரன் போடாக்பூர் மக்களையும் வசியம் செய்துவிட்டான். தந்தரன் அனைவரையும் வசியம் செய்திருப்பதனை அரசர் சற்றும் உணரவில்லை.


அவ்வாறே நாட்கள் கடந்து போக திடீரென்று ஒரு நாள் மாயாவி தந்தரன் தான் வசியம் செய்து வைத்திருந்த மக்களையும் இரண்டு இளவரசர்களையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் பிரவேசித்தான். மக்களுடன் தந்தரனும்
சேர்ந்து வருவதைப் பார்த்த அரசருக்கு நாட்டில் ஏதோவொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதை மட்டும் கணிக்க முடிந்தது.
அவர் உடனே "மாயாவியே தாங்கள் இங்கு வந்ததன் காரணம்?"என்று வினவினார். தந்தரனோ"உன் அரியணையை மரியாதையாக என்னிடம் கொடுத்துவிடு" என்று மிரட்டும் தோனியில் கூறினான். அரசரோ"தீட்டின மரத்திலேயே கூர் பார்க்கிறாயா? காவலர்களே தந்தரனைச் சிறைப்பிடியுங்கள்" என்று ஆணையிட்டார். ஆனால்,மாயாவியோ தன்னிடம் இருந்த மந்திர சக்தியால் அந்த காவலர்களையும் வசியம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.


நிலமை மோசமடைவதை உணர்ந்த அரசர் தன்னிடம் இருந்த மிகச் சக்தி வாய்ந்த மந்திர புத்தகத்தைத் தேடி அரண்மனைக்குள் இருந்த ஒர் அறைக்குச் சென்றார்.அந்த புத்தகம் தான் மாய ஓலை.தந்தரன் தேடி வந்த புத்தகம்.

மாய ஓலை எப்பொழுதுமே ஒரு மந்திரச் சக்தியின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கும். அந்த மாயக் கட்டைத் திறக்க நாட்டை ஆளும் அரசராலும் அவரின் குடும்பத்தினரால் மட்டுமே முடியும். மாய ஓலையை ஆபத்து அவசர வேளைகளில் நாட்டைப் பாதுகாக்கும் நோகத்திற்காக மட்டுமே பயன்படுத்த இயலும். தவறுதலாகப் பயன்படுத்தினால் அந்த மாய ஓலையே அதனைத் தவறானக் காரியத்திற்குப் பயன்படுத்தியவர்களைத் தண்டித்து விடும் என்பதுதான் அந்நாட்டு மக்களின் நம்பிக்கை. அவ்வாறே அரசரும் அந்த மாய ஓலையை எடுக்கத் தன் அறைக்குச் சென்றபோது அந்த மாய ஓலை அங்கு இல்லாததை எண்ணி அதிர்ச்சியுற்றார்.

நாட்டை ஆளும் அரசரின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாத மாய ஓலையை யார் எடுத்திருப்பார் என்பதுதான் அரசரின் கேள்வி.அவ்வாறே அரசர் சிந்தித்துக் கொண்டிருந்தபோது தந்தரன் அரசரின் இரண்டு புதல்வர்களோடு அங்கே தோன்றினான். தன் புதல்வர்கள் தந்தரனோடு அரசரின் அறையில் பிரவேசித்தப் போது அரசர் தன் புதல்வர்களிடம் உதவி கோரினார். ஆனால், அரசரின் இரண்டு
புதல்வர்களும் தந்தரனின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்துமே தந்தரனின் ஆணைப்படியே இருந்தது. அந்த மாய ஓலையையும் தந்தரன் அரசரின் புதல்வர்களின் மூலம் கைப்பற்றியிருந்தான்.

இதனை அறிந்த அரசர் கடும் கோபம் அடைந்தார். அவனுக்கு நன்மை செய்தும் தனக்குத் தீமை செய்துவிட்டானே என்றெண்ணி மனமுடைந்தார். தந்தரனும் அவருக்கு ஈவிரக்கம் காட்ட முற்படவில்லை.


காவலர்களை அழைத்து அரசரைப் பாதாளச் சிறையில் வைத்து அடைக்கும்படி உத்தரவிட்டான். அன்றைய தினம் முதல் தந்தரன் போடாக்பூர் நாட்டின் அரியணையில் அமர்ந்தான். அனைத்து மக்களையும் வசியம் செய்து தனக்கு அடிமையாக்கி வைத்திருந்தான். அவன் நாட்டைக் கொடுங்கோல் ஆட்சிப் புரிந்து நாட்டின் சுபிட்சத்தையே கெடுத்து வந்தான்.


மனிதர்களை நரபலி கொடுத்துச் சக்திகளைப் பெற்றான். கொள்ளை, திருட்டு, கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் அனைத்தும் அவன் நாட்டில் கோரத் தாண்டவம் ஆடின. நல்ல மனிதர்களையெல்லாம் அவன் துன்புறுத்தி வந்தான்.உழைப்பவர்களின் பணத்தைச் சூறையாடித் தனக்கு வேண்டியவற்றினைப் பெற்றுக் கொள்வான். அத்துடன் அவனின் கொடியச் செயல்கள் நின்றுவிடவில்லை.அரசரின் இரண்டு புதல்வர்களும் அவனுக்குப் பக்கப் பலமாக இருந்தனர்.


அதுமட்டுமல்லாமல், அவன் மந்திரப்பூருக்குச் சென்று அவனின் வம்சாவளி மக்களுக்குத் தலைவனாகி அவர்களையும் கட்டுக்குள் கொண்டு வந்து மந்திர சக்திகளையெல்லாம் அபகரித்துவிட்டு தான் மட்டும் உலகிலேயே மரணம் இல்லாத ஒருவனாக மாற வேண்டும் என்று பேராசைக் கொண்டான்.


அதே சமயம் மந்திரப்பூருக்கு தந்தரன் வெகுநாளாகியும் திரும்பாததால் காசிமிர் தன் தம்பியின் மகனான பிட்டுவை (இப்பொழுது பவனிடம் கதையைக் கூறிக் கொண்டிருப்பவர்) மந்திரப்பூரின் தலைவனாக நியமித்தார். அவனுக்கு உதவியாக சுந்தர் (தந்தரனின் இளைய சகோதரன்)நியமித்தார்.

"அப்படினா நீங்க மந்திரப்பூரோட தலைவரா? பின்ன ஏன் இவனக்கு அடிமையா இருக்கீங்க? அதான் தந்தரனும் சுந்தரும் அவ்ளோ ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்காங்களா?எப்படி இது சாத்தியமாச்சு?"

"அட ஏம்பா நீ இப்படிப் பண்ற கதைய மோத கேளு குறுக்கக் குறுக்க டிஸ்துர்ப் பண்ணிக்கிட்டு"

"அடடா......பரவாலயே ஆதிகால வாசியா இருந்தாலும் இங்கிலிஸ்லாம் பறக்குது.இங்கிலீஸ் கத்துக்கிட்டேனு தமாஸ் லாம் பன்னாதீங்க என்ன!"


"உனக்கு வாய் ரொம்ப தான்டா. கதைய சொல்லுட்டா இல்ல..."


"அட எனக்குப் பசிக்கிது தாத்தா சாப்பிட ஏதும் குடு.........""என்ன தாத்தாவா டேய் என்னாடா நீ?


1000 வருசத்துக்கு முன்ன பொறந்துருக்க உன்னத் தாத்தானு கூப்பிடாம தம்பினா கூப்பிடறது. இப்படி இருக்கியே நீ அப்போ தந்தரன் உன்கிட்டருந்து ஒரு நொடியில மந்திரப்பூர அபகரிச்சிட்டான்னு சொல்லு" என்று கூறிக் கொண்டே பிட்டு கொடுத்த வாழைப் பழத்தினை பவன் பெற்றுக் கொண்டான்.


தந்தரன் தன்னுடன் இரண்டு அரசப் புதல்வர்களையும் அழைத்துக் கொண்டு மந்திரபுரத்திற்கு விஜயம் புரிந்தான். அவன் தீய நோகத்துடன்தான் அங்கே ப்ரவேசித்துள்ளான் என்பதனை அனைவருமே அறிவர். " என் பெரியப்பா காசிமிருக்கு உடல் நலம் சரியில்லாததால் நானே அவர்களுக்குத் தலைவனாக இருந்தேன். இதனை அறிந்த தந்தரன் கடும் கோபத்திற்குள்ளானான். ஏனெனில், அது அவனுக்குக் கிடைக்க வேண்டியப் பதவி. இதனால் தந்தரன் என்னையும் மந்திரப்புரத்தின் மக்களையும் தனது தீயச் சக்திகளுக்குச் சரணடைந்துவிடும்படி கூறினான். ஆனால், நானோ அதற்கு தலைவணங்கவில்லை", பிட்டு

புளிய மர வேட்டைத் தொடரும்.......
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom