மணாளனின் மனம் 5

முத்தமிழ் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டில் பெண்கள் மூவரின் சிரிப்பு சத்தமும் ஒன்றையொன்று போட்டியிட்டபடி இருந்தன.

"இல்ல அத்தை.. அவளோட மூணாவது புருசனுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை இது. நான் இந்த சீரியலை அஞ்சி வருசமா பார்த்துட்டு இருக்கேன்.."

"ஆனா அவளோட குழந்தையா இது.. அவனோட இரண்டாவது பொண்டாட்டிக்கு பிறந்த குழந்தைன்னு இல்ல நான் நினைச்சிட்டு இருந்தேன்.."

வீட்டுக்குள் நுழையாமல் இப்படியே திரும்பி விடலாமா என்று யோசித்தான் முத்தமிழ்.

அவன் எதிர்பார்த்த லட்சணங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று எண்ணியவன் அவன். இப்போது அவன் வெறுக்கும் குணநலன்கள் அத்தனையையும் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மனைவியாக்கி வைத்திருந்தான்.

"இந்த சீரியல் நல்லா இருக்கு.. சீக்கிரம் முடிச்சிடுவானோ என்னவோ பாவி பையன்.. இன்னும் நாலஞ்சி வருசத்துக்கு ஓடினா நல்லா இருக்கும்.." என்றாள் பாட்டி.

"இந்த சீரியல் மொக்கை பாட்டி.. நைன்டி எய்ட் நம்பர்ல இருக்கும் சேனலை பாருங்க.. அந்த சேனல்ல போடும் எல்லா சீரியலுமே சூப்பரா இருக்கும்.." என்ற புவனா ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றினாள்.

முத்தமிழ் கதவை படீரென்று தட்டியபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

பெண்கள் மூவரும் திரும்பி பார்த்தார்கள்.

"மாமா.. வந்துட்டிங்களா.?" என கேட்டபடி எழுந்து வந்தாள் புவனா.

"ம்.." என்றவன் தனது அறைக்குள் சென்று நுழைந்தான்.

"மாமா.. சாப்பிடலையா.?" புவனா அறைக்குள் நுழைந்தபடி கேட்டாள்.

"நான் எப்படி செத்தா உனக்கென்ன.? போய் அந்த சீரியல்களை கட்டிக்கிட்டு அழு.." திரும்பி பார்த்து குரைத்தான். புவனா துள்ளி விழுந்தாள். ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள். கொஞ்சம் பயந்து விட்டாள்.

"நான் சீரியல் பார்க்க கூடாதுன்னு சொன்னா.. அதை கேட்டுக்க போறேன்.. அதுக்கு ஏன் கத்துறிங்க.?" என கேட்டவளின் அருகே வந்து தோளை பற்றினான்.

"நான் சொன்னா கேட்கறவளா நீ.?" என்றான் கோபத்தோடு.

"தோள் வலிக்குது.." சிணுங்கலாக அவனின் கையை தள்ளி விட்டாள்.

"நான் கேட்பேன். இப்படி கத்தாம நல்ல முறையா சொன்னா.!"

"எப்படி கேட்ப.? என்னை விடுன்னு நான் சொன்னதும் விஷம் குடிச்சியே, அப்படியா.?" வெறுப்பாக கேட்டான்.

"அதையே சொல்லித் திட்டாதிங்க.. இனி உங்க பேச்சை கேட்கறேன்.!" என்றவள் அவசரமாக "ஆனா டைவர்ஸ் கேட்காதிங்க. செத்தாலும் தர மாட்டேன்.!" என்றாள்.

என்ன நடந்தாலும் தன் பிடிவாதத்தில் மட்டும் ஒற்றைக்காலில் நின்றாள் புவனா.

"நீ ஒரு சோம்பேறி கழுதை.. உனக்கு எந்த எழவும் வராது.. தயவுசெஞ்சி போய் அந்த சீரியலையே பார்த்துத் தொலை.." எரிச்சலாக சொன்னவன் அவளை விட்டுவிட்டு நடந்தான்.

"மாமா.." சிணுங்கியபடி வந்து அவனின் குறுக்காக நின்றாள்.

'எதுக்கெடுத்தாலும் சிணுங்குறா.. கடவுளே! எங்கிருந்துதான் இவளை பிடிச்சாங்களோ.?' வெறுப்போடு நினைத்தான்.

"நான் இனி சீரியல் பார்க்கல.. ப்ராமிஸ்.‌." என்றாள் ஒரு கை மேல் ஒரு கையை வைத்து அடித்து.

"சரி போ.." கண்களை மூடியபடி சொன்னான்.

"தலைவலியா மாமா.? நான் மருந்து பூசி விடட்டா.? சுக்கு காப்பி போட்டு கொண்டு வரட்டா‌.?"

அவளை கேலியாக பார்த்தவன் "சுக்கு காப்பின்னா என்னன்னு தெரியுமா.? சோம்பேறி.." என்றவன் சென்று சட்டையை கழட்டி பழைய துணிகள் இருந்த பிளாஸ்டிக் கூடையில் வீசினான்.

மாற்றுடையோடு கட்டிலில் படுத்திருந்தவன் கொலுசொலி கேட்டு கண் விழித்தான்.

"தலைவலி புவனா.. கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம இரு.." என்றான்.

"காப்பி மாமா.. சுக்கு காப்பி.. நானே போட்டு வந்தேன்.!"

தலையை பிடித்தபடி எழுந்து அமர்ந்தவன் "என் தலைவலிக்கு காரணம் யார் தெரியுமா, நீதான்.!" என்றான்.

"சாரி மாமா.." என்றவள் அவனருகே அமர்ந்தபடி காப்பியை நீட்டினாள்.

சுக்கு வாசனை வந்தது. ஆனால் ருசிக்க வேண்டுமே.!?

காப்பியை குடிக்கா விட்டால் விட மாட்டாளோ என்று கவலைப்பட்டவன் காப்பியை சுவைக்க ஆரம்பித்தான். நன்றாகதான் இருந்தது. ஆனால் ஒத்துக் கொள்ளதான் மனம் வரவில்லை.

பாதியை மட்டும் குடித்துவிட்டு திருப்பி தந்தான்‌.

"நல்லாவே இல்ல.. தூக்கிட்டு போ.."

அவன் தந்த மீதி காப்பியை அவளே குடித்தாள். ருசியாக தெரிய காரணம் அவன் சுவைத்து மிஞ்சியதால்தானோ என்று குழம்பினாள்.

கவிழ்ந்து படுத்தான் முத்தமிழ். அவள் சீரியல் பார்த்த ஒரு விசயமே தலைவலியை தந்துவிட்டது அவனுக்கு.

இந்த மாமா, சிணுங்கல், சீரியல், திட்டினாலும் திருப்பி கொஞ்சுதல்.. எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் ஸ்டைலிஸ் தமிழச்சியேதான் வேண்டுமென்று கேட்கவில்லை. ஆனாலும் பழங்காலமாக இல்லாமல் திட்டியவனிடம் முறைத்துக் கொண்டு இருக்கும் ஒரு பெண்ணை எதிர்ப்பார்த்தான். இவளோ பதி விரதையில் பட்டம் வாங்க முயல்வது போல, கணவனுக்கு சேவகம் செய்ய பிறவி எடுத்தது போல சிணுங்கிக் கொண்டிருந்தாள். நினைக்கும்போதே எரிச்சலாக இருந்தது அவனுக்கு‌‌.

அவனின் கணுக்காலில் பதிந்தது அவளின் கரங்கள் இரண்டும். அவளின் தீண்டலில் திடுக்கிட்டு போனவன் எழுந்து அமர்ந்தான்.

"என் காலை ஏன் பிடிக்கற.?" கேட்டவனுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

"வயல்ல வேலை செஞ்சிங்களே, அதுதான் கால் வலிக்குதோன்னு.!"

மறுப்பாக தலையசைத்தபடி காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

"காலை தொடுற வேலையெல்லாம் வேணாம்.. போய் உன் வேலையை பாரு.!" என்றான்.

"ஆனா எனக்கு வேற வேலை இல்லையே.!" உதட்டை பிதுக்கியபடி சொன்னவளின் மூக்கில் குத்த வேண்டும் போல இருந்தது.

"வேலை இல்லன்னா போய் தூங்கு.. என்னை விடு.!"

புவனா தரை பார்த்தாள்.

"ஏன் மாமா என்னை வெறுக்கறிங்க.?" அதே சிணுங்கல் குரல். இப்போது சோகம் சேர்ந்திருந்தது.

"வெறுக்கல ராசாத்தி.. கொஞ்சம் தள்ளி போறியா.?"

"எவ்வளவு வேணாலும் வெறுத்துக்கங்க மாமா.. ஆனா விலக்கி வச்சிடாதிங்க.." என்றவள் கட்டிலை விட்டு எழுந்தாள்.

முத்தமிழ் நெற்றியை தேய்த்தான்.

அபிராமி, மதுமிதா, அம்மா பாட்டியை தவிர அதிகம் பெண்களோடு பழகாதவன். அபிராமியை தவிர வேறு யாரையும் கொஞ்சியது இல்லை. மற்றவர்களும் இவனின் கோப முகத்தை பார்த்து விட்டாலே தூரம் சென்று விடுபவர்கள். புவனாவோ அவனின் வட்டத்துக்குள் வந்ததும் இல்லாமல் அவனின் வட்டத்தையே ஆக்கிரமிக்க முயன்றாள். அவள் முயன்றாளோ இல்லையோ அவனுக்கு அப்படிதான் தோன்றியது.

உறங்கி எழுந்தான். மணி அதற்குள் மணி நான்கை தாண்டி விட்டிருந்தது.

எழுந்தவனின் கண்கள் புவனாவை தேடியது. அவளை காணவில்லை.

மதுமிதாவுக்கு போன் செய்து பேசிவிட்டு வெளியே வந்தான். பெண்கள் மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். புவனா தரையில் அமர்ந்திருந்தாள். தலையை விரித்து போட்டபடி.

"உனக்கு பூ பிடிக்காதா.?" ஆச்சரியமாக கேட்டாள் யசோதா பூக்களை தொடுத்தபடியே.

இல்லையென தலையசைத்தாள் புவனா.

"ஆனா ஏன்.?" பாட்டி அவளின் தலையை வாரி விட்டபடி கேட்டாள்.

"உண்மையா சொல்லணும்ன்னா.. எனக்கு கொஞ்சம் வருசம் முன்னாடி வரை பூ பிடிக்கும். ஆனா என் எதிரிக்கு பூ பிடிக்கும், அதனால எனக்கு பிடிக்காம போயிடுச்சி.."

எதிரி சொல்லாமலே தெரிந்தது, அது அபிராமி என்று! பாட்டியின் முன்னால் இருந்த கண்ணாடி டீப்பாயை தூக்கி புவனாவின் தலையில் அடிக்க சொன்னது சகோதர பாசம்.

'என் தங்கச்சி எதிரியாம்.. மண்ணாங்கட்டி.! என் தங்கச்சியை வெறுக்கறவளையே நான் கட்டிக்கணும்ன்னு விதி போல.!' நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"இது தப்புடா கண்ணு.! உனக்கு பிடிச்சா நீ உனக்கு பிடிச்சதை மட்டும்தான் நினைக்கணும். அடுத்தவங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு பார்க்க கூடாது. இப்படி செஞ்சா நீ உன் எதிரியை வெல்ல முடியாது. உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தா மட்டும்தான் அது முடியும்.!" என்ற யசோதா தொடுத்த பூவை அளந்து துண்டித்தாள். பாட்டியிடம் நீட்டினாள். பேரன் மனைவிக்கு தலையை வாரி முடித்த பாட்டி பூவை தலையில் சூட்டி விட்டாள்.

"புரிஞ்சது அத்தை.. தேங்க்ஸ்.." என்றவள் திரும்பி மாமியாரை அணைத்துக் கொண்டாள்.

புவனாவின் தாடையை பற்றினாள் அவள். "செல்லம்.. உன்னை மாதிரி பொண்ணு எனக்கு இல்லாம போயிட்டா.." என்றாள்.

புவனாவின் முகத்தில் வெற்றிக் களிப்பு தெரிந்தது. முத்தமிழின் கண்கள் வெறுப்பை கக்கியது.

அம்மா பாட்டியின் மனதில் இருக்கும் அபிராமியின் மீதான பாசத்தை விரைவில் இவள் செல்லா காசாக்கி விடுவாள் என்பது தெளிவாக புரிந்தது அவனுக்கு.

என்ன நடந்தாலும், இவள் என்ன செய்தாலும் தன் மனதை மட்டும் மாற்றவே முடியாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மாலையில் தாத்தாவும் அவனும் அமர்ந்து வீட்டு விசயங்களையும், வயல் பற்றியும் பேசிக் கொண்டிருந்தபோது தேனீரை கொண்டு வந்து வைத்து விட்டு சென்றாள் புவனா.

"பொண்ணு பரவால்ல.. அமைதி.. உன் பாட்டியும்தான் இருக்காளே, காது வரை வாயை வச்சிக்கிட்டு!" தாத்தா இதுதான் சாக்கென்று பாட்டியை திட்டினார்.

"சீறும் பாம்பையும் சீறும் பெண்ணையும் நம்பலாம். ஆனா அமைதியா சிரிக்கும் பெண்ணை மட்டும் நம்பவே கூடாது. முழுசா விஷமாதான் இருக்கும்.." என்றவனை குழப்பத்தோடு பார்த்தார் தாத்தா.

"ஏன் என்னை நம்பல நீங்க.?" இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தவனிடம் கேட்டாள் புவனா.

"ஒட்டுக் கேட்டியா.?" லேப்டாப்பை திறந்து மடியில் வைத்தபடி கேட்டான்.

"இல்ல.. ஆனா அதுவா காதுல விழுந்துச்சி.. நான் ரொம்ப நல்ல பொண்ணு மாமா.. என்னை மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நீங்க தவம் பண்ணி இருக்கணும்.."

வாய் விட்டு சிரித்தான். ஆனால் அவளுக்கு பதில் சொல்லவில்லை.

அவன் எதிரில் வந்து நின்றவள் அவனின் லேப்டாப்பை மூடினாள்.

"பதில் சொல்லுங்க.." என்றாள்.

"உன்னை என்னன்னு நம்புவது.?" என்றான் நிமிர்ந்து. அவனின் கண்கள் நொடியில் சிவந்து விட்டிருந்தது.

"படிப்பை முடிக்காதவ நீ.. உன்னால.." அவனை முடிக்க விடவில்லை அவள்.

"போதும்.. இது ஒன்னையே சொல்லி சாகடிக்காதிங்க.. நான்தான் பாஸ் பண்ணிடுறேன்னு சொன்னேன் இல்ல.?" சிணுங்கலாக கேட்டாள்.

லேப்டாப்பை கட்டிலில் வைத்துவிட்டு எழுந்தவன் சென்று அலமாரியை திறந்தான். பத்திரம் ஒன்றை கொண்டு வந்து அவளின் கையில் திணித்தான்.

"நீ பண்ணி வச்ச காரியத்துக்கு நான் வாங்கிய கடன் இது.. வயல் மேல.!" என்றான்.

அதிலிருந்த தொகையை பார்த்தவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள்.

"ஆனா இதை எந்த வீட்டுல இருப்பவங்களே கட்டி இருப்பாங்களே! உங்ககிட்டயும் காசு இருக்குமே. இதுக்கு ஏன் நிலத்தை அடமானம் வைக்கணும்.? நான் நாளைக்கே எங்க வீட்டுல கேட்டு பணம் வாங்கி வரேன்.." என்றவளின் முகத்தை பற்றி உயர்த்தினான்.

"உங்க அப்பா காசு, இல்லன்னா எங்க அப்பா காசு.. ஆனா உனக்கு ஏன் மத்தவங்க காசை செலவு செய்யணும்.? எருமை வயசுல இருக்கதானே.? நியாயப்படி உன் காசைதான் உன் பிரச்சனைக்கு செலவு செஞ்சிருக்கணும்.."

"எட்டு லட்சம்!? நான் உங்க தங்கச்சி போஸ்டிங்க்ல இருந்திருந்தா வேணா நடக்கலாம்.." சிரிப்போடு சொன்னவளை முறைத்தவன் "சோம்பேறி நீ.! நீ பண்ண காரியத்தாலதான் எட்டு லட்சம் செலவாச்சி.. உன்னால சம்பாதிக்க முடியலன்னா செலவாவது வைக்காம இருக்கணும்.. ஒரு ரூபா சம்பாதிக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு தெரிஞ்சிருக்கணும். இல்லன்னா உழைப்புன்னா என்னன்னாவது தெரிஞ்சிருக்கணும். இதுல என் தங்கச்சி உனக்கு எதிரியா.?" என்றான் சீறியபடி.

'தங்கச்சியை எதிரின்னு சொன்னதை கேட்டுட்டுதான் எகிறிட்டு இருக்காரா.?'

"நீயே சம்பாதிச்சி இந்த நிலத்தை மீட்டு வா.. அப்ப வேணா உன்னை நம்புறேன் நான்.." அவளை முறைத்துவிட்டு நகர்ந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom