• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி

ஓம் சாயிராம்

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


சமீபத்தில் fetna இலக்கியக்குழு நடத்திய "அமெரிக்கக் கதைகள்", போட்டிக்குச் சமர்ப்பித்த என்னுடைய சிறுகதையை உங்களுடன் பகிர்கிறேன் நண்பர்களே.

சிறுகதையின் மையக்கரு, வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் அமெரிக்க நிகழ்வுகள் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள்.

நடுநிலைப் பள்ளியில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் என் சொந்த அனுபவங்களைக் கற்பனை கதாபாத்திரங்களின் துணையோடு தந்துள்ளேன்.

மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி
மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி - புத்தக அட்டை.JPG


படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை என்னுடன் பகிருங்கள்;

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
சரஸ்வதி பூஜை அன்று
சாய் யாழினி புதல்விகள்
சந்தியா சரண்யாவின்
சந்தனம் குங்குமம் இட்டதில்
சகலமும் பெற்றது போல்
சந்தோஷத்தில் வீடு திளைக்க
சற்று கோபமாய் மனைவி
சங்கடமாய் கணவன்......

வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கிறாள் என்று புகார்
வந்த போதும்
வீட்டுக்கு வந்தும் அதே
சண்டையை தொடர
வீண் விவாதத்தை விட்டு விட்டு
விவேகமாக செயல்படு என சாந்தமாய் உரைத்தான் கணவன்..
சண்டையும் சமாதானமும்
சாதகமாக அவனுக்கு ஏற்ப
சாதித்து கொள்வான்...
சற்றே பொறுமையாய் விலக்கி சிந்தித்து செயல்பட ஊக்குவித்து
சவால் விட்டு தன் மனைவியை
சாய் வென்றது அருமை....

புது புது கண்டுபிடிப்புகள்
புதுப்புது அத்தியாவசிய பொருட்கள்
புதுமை என்ற பெயரில்
பழமையை மறந்தாலும்
புதுமையில் பழமை
புகுத்தி புத்தியை தீட்டி
பிள்ளைகளை
படிப்பதில் ஆர்வம்
புகட்டியது அருமை......

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐
 

Thani

Well-known member
Member
அழகா ஆசிரியர்களின் திண்டாட்டத்தை சொல்லியிருந்தீர்கள்......உண்மைதான்
இங்கு கற்பித்தல் முறையில் நிறைய வித்தியாசம் இருக்குதான்....அதை சாய் அவ்ளோ அழகா யாழினிக்கு புரியவைத்தார்.....❤️பரிசு என்னவோ யாழுக்குதான் ஆனால் சரிபங்கு சாயிக்கும் இருக்கு ..😀
இவள் பாடசாலையில் ஆசிரியர் என்றால் ...இவளுக்கு வீட்டில் ஆசிரியராய் இருந்து வழிகாட்டியது சாய் தானே😀
யாழ் தனது ஆசிரியர் பணியில் வெற்றி பெற்று விட்டாள்😀😀😀😀சூப்பர்👌👏💐

இருவரின் பூஞ்செண்டுகளான ❤️❤️❤️❤️சரண்யா...சந்தியா...புத்திசாலிக்குழந்தைகள்
சந்தணம் குங்குமம் வைத்த அழகு இருக்கே ...சூப்பர் 😀
அழகான குடும்பம் 😀
சூப்பர் சூப்பர் சிஸ்❤️❤️❤️❤️❤️
 
சரஸ்வதி பூஜை அன்று
சாய் யாழினி புதல்விகள்
சந்தியா சரண்யாவின்
சந்தனம் குங்குமம் இட்டதில்
சகலமும் பெற்றது போல்
சந்தோஷத்தில் வீடு திளைக்க
சற்று கோபமாய் மனைவி
சங்கடமாய் கணவன்......

வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கிறாள் என்று புகார்
வந்த போதும்
வீட்டுக்கு வந்தும் அதே
சண்டையை தொடர
வீண் விவாதத்தை விட்டு விட்டு
விவேகமாக செயல்படு என சாந்தமாய் உரைத்தான் கணவன்..
சண்டையும் சமாதானமும்
சாதகமாக அவனுக்கு ஏற்ப
சாதித்து கொள்வான்...
சற்றே பொறுமையாய் விலக்கி சிந்தித்து செயல்பட ஊக்குவித்து
சவால் விட்டு தன் மனைவியை
சாய் வென்றது அருமை....

புது புது கண்டுபிடிப்புகள்
புதுப்புது அத்தியாவசிய பொருட்கள்
புதுமை என்ற பெயரில்
பழமையை மறந்தாலும்
புதுமையில் பழமை
புகுத்தி புத்தியை தீட்டி
பிள்ளைகளை
படிப்பதில் ஆர்வம்
புகட்டியது அருமை......

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தோழி 💐💐💐💐💐
என் அன்பிற்கினிய கவிக்குயில் தோழி @Apsareezbeena loganathan alias கணித ஆசிரியை அவர்களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம் 🤗🤗🤗🤗🤗
உங்களுக்கும், உங்கள் பிரொஃபஸர் கணவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தோழி!:love::love::love:
 
அழகா ஆசிரியர்களின் திண்டாட்டத்தை சொல்லியிருந்தீர்கள்......உண்மைதான்
இங்கு கற்பித்தல் முறையில் நிறைய வித்தியாசம் இருக்குதான்....அதை சாய் அவ்ளோ அழகா யாழினிக்கு புரியவைத்தார்.....❤️பரிசு என்னவோ யாழுக்குதான் ஆனால் சரிபங்கு சாயிக்கும் இருக்கு ..😀
இவள் பாடசாலையில் ஆசிரியர் என்றால் ...இவளுக்கு வீட்டில் ஆசிரியராய் இருந்து வழிகாட்டியது சாய் தானே😀
யாழ் தனது ஆசிரியர் பணியில் வெற்றி பெற்று விட்டாள்😀😀😀😀சூப்பர்👌👏💐

இருவரின் பூஞ்செண்டுகளான ❤️❤️❤️❤️சரண்யா...சந்தியா...புத்திசாலிக்குழந்தைகள்
சந்தணம் குங்குமம் வைத்த அழகு இருக்கே ...சூப்பர் 😀
அழகான குடும்பம் 😀
சூப்பர் சூப்பர் சிஸ்❤️❤️❤️❤️❤️
நன்றிகள் பல தோழி!
உங்கள் ஊரிலும் இப்படித்தானா தோழி! ஏன் கேட்கிறேன் என்றால், கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு ஆசிரியராகப் பணிபுரிய அமெரிக்கப் பள்ளியில் அடி எடுத்துவைத்த போது, "கோமாளி" படத்தில் வரும் கதாநாயகன் போல தான் உணர்ந்தேன்.

நோட்டுப்புத்தகத்தில் மார்ஜின் எதற்கு என்று கூடத் தெரியாத மாணவர்கள்; வீட்டுப்பாடம் கொடுத்தால், பிள்ளைகளுக்கு மனவுளைச்சல் என்று கருதும் பெற்றோர்கள்; குழந்தைளின் சுட்டித்தனத்திற்கு புதுசு புதுபுதுசாக மருத்துவ ரீதியான பெயர்கள் எல்லாம் பார்த்து வியந்தேன்.

காலத்தின் வளர்ச்சியுடன் ஒன்றிப்பழக என்னை வழிநடத்திய நல்லுள்ளங்கள் பங்கை இக்கதையில் இணைத்துள்ளேன்.

முடிந்தால் உங்கள் அனுபவங்களையும் என்னுடன் பகிருங்கள் நட்பே! கேட்க ஆவலாகக் காத்திருக்கிறேன்!🤗🤗🤗🤗🤗
 
Last edited:

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom