• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மகாபாரத போரில் வியூகங்கள்

amirthababu

Active member
Member
மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்களின் பெயர்கள்.

வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான‌ சிறப்பு தோற்றத்தில் அவரவர் ப‌டைகளைக் கொண்டு போரில் வெற்றி பெற பலவிதமான வியூகங்கள் அமைத்துப் போரிட்டனர்.

வியூகம் என்பது படைகளின் அமைப்புக்களை குறிக்கும்.

அந்த வியூகங்களின் பெயர்களை கீழே பட்டியலிடப்ட்டுபள்ளன.

மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்கள்

1) நாரை வியூகம் (Heron Formation)

2)முதலை வியூகம் (Crocodile Formation)

3)ஆமை வியூகம் (Tortoise or Turtle Formation)

4)திரிசூலம் வியூகம் (Trident Formation)

5)சக்கர வியூகம் (Wheel or Discus Formation)

6)பூத்த தாமரைமலர் வியூகம் (Lotus Formation)

7)கருட வியூகம் (Eagle Formation)

8)கடல் அலைகள் போன்ற வியூகம் (Ocean Formation)

9)வான் மண்டல வியூகம் (Galaxy Formation)

10)வைரம் / வஜ்ராயுத (இடிமுழக்க)போன்ற வியூகம் (Diamond or Thunderbolt Formation)

11)பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம் (Box or Cart Formation)

12)அசுர வியூகம் (Demon Formation)

13)தேவ வியூகம் (Divine Formation)

14)ஊசி போன்ற வியூகம் (Needle Formation)

15)வளைந்த கொம்புகள் போன்ற வியூகம் (Horned Formation)

16)பிறை சந்திர வடிவ வியூகம் (Crescent or Curved Blade Formation)

17)பூ மாலை போன்ற வியூகம் (Garland Formation)
 

Nithya Mariappan

✍️
Writer
மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்களின் பெயர்கள்.

வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான‌ சிறப்பு தோற்றத்தில் அவரவர் ப‌டைகளைக் கொண்டு போரில் வெற்றி பெற பலவிதமான வியூகங்கள் அமைத்துப் போரிட்டனர்.

வியூகம் என்பது படைகளின் அமைப்புக்களை குறிக்கும்.

அந்த வியூகங்களின் பெயர்களை கீழே பட்டியலிடப்ட்டுபள்ளன.

மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்கள்

1) நாரை வியூகம் (Heron Formation)

2)முதலை வியூகம் (Crocodile Formation)

3)ஆமை வியூகம் (Tortoise or Turtle Formation)

4)திரிசூலம் வியூகம் (Trident Formation)

5)சக்கர வியூகம் (Wheel or Discus Formation)

6)பூத்த தாமரைமலர் வியூகம் (Lotus Formation)

7)கருட வியூகம் (Eagle Formation)

8)கடல் அலைகள் போன்ற வியூகம் (Ocean Formation)

9)வான் மண்டல வியூகம் (Galaxy Formation)

10)வைரம் / வஜ்ராயுத (இடிமுழக்க)போன்ற வியூகம் (Diamond or Thunderbolt Formation)

11)பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம் (Box or Cart Formation)

12)அசுர வியூகம் (Demon Formation)

13)தேவ வியூகம் (Divine Formation)

14)ஊசி போன்ற வியூகம் (Needle Formation)

15)வளைந்த கொம்புகள் போன்ற வியூகம் (Horned Formation)

16)பிறை சந்திர வடிவ வியூகம் (Crescent or Curved Blade Formation)

17)பூ மாலை போன்ற வியூகம் (Garland Formation)
இதுல சக்கரவியூகம் மட்டும் தான் கேள்விப்பட்டிருக்கேன்🧐 உபயம் மகாபாரதம் சீரியல்🤗
 

பிரிய நிலா

Well-known member
Member
இதுல சக்கரவியூகம் மட்டும் தான் கேள்விப்பட்டிருக்கேன்🧐 உபயம் மகாபாரதம் சீரியல்🤗
ஹாஹாஹா...
நானும் மகாபாரதம் படிச்சிருக்கேன்.. ரொம்ப சின்ன வயசில்..
சோ கதை இப்பவும் நியாபகம் இருக்கு. ஆனால் வியூகம்னு கேட்டால் சக்கரவியூகம் மட்டும் தான் எனக்கும் நியாபகம் இருக்கு..
 

Nithya Mariappan

✍️
Writer
ஹாஹாஹா...
நானும் மகாபாரதம் படிச்சிருக்கேன்.. ரொம்ப சின்ன வயசில்..
சோ கதை இப்பவும் நியாபகம் இருக்கு. ஆனால் வியூகம்னு கேட்டால் சக்கரவியூகம் மட்டும் தான் எனக்கும் நியாபகம் இருக்கு..
எனக்கு மகாபாரதம் சீரியல் மட்டும் தான் நியாபகம் இருக்கு சிஸ்... அபிமன்யூ கேரக்டர் ரொம்ப பிடிக்கும்... அவனோட இறப்புக்கு காரணமான வியூகம்ல... அதனால சக்கரவியூகம் மட்டும் தான் மனசுல பதிஞ்சது
 

பிரிய நிலா

Well-known member
Member
நான் முதலிலேயே மகாபாரதமும் இராமாயணமும் புத்தகமாய் படித்துவிட்டேன் சிஸ்..
அதற்கு பின்பு தான் பெரிய கதைகளாய் படிக்க வேண்டும் என்று ஆசையே வந்தது.
 

Latest profile posts

#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 26
மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றங்களை மூர்த்தி கவனிக்காமல் இல்லை. அவர் அவ்வபோது பிறந்தகத்துக்குச் சென்று வருவது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும்.
தன்னிடம் பொய் சொல்லிவிட்டுச் செல்லும் மனைவியிடம் கண்டிப்பு காட்டப்போய், அவள் தனது நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?
எனவே எதுவும் தெரியாதவரைப் போல காட்டிக்கொண்டார் மூர்த்தி.
இருப்பினும் அவ்வபோது கண்டிப்பான கணவன் போல நடந்து கொள்ள தவறமாட்டார்.
இப்போது மனைவி அவளது தம்பியின் எண்ணுக்கு அழைத்ததையும் ஏமாற்றத்துடன் நிற்பதையும் ஓரக்கண்ணால் கவனித்தபடி பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் அந்த மனிதர்.
“ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க உமா?”
கணவரின் கேள்வியில் சுயம் தெளிந்து “என்ன கேட்டிங்க?” என்றார் உமா.
“நான் கேட்டது கூட உன் காதுல விழாதளவுக்கு என்ன சிந்தனை? உன் பிறந்தவீட்டை பத்தி யோசிக்கிறியா?”
“ஐயோ இல்லங்க”
உமாவின் பதற்றத்தைக் கண்டு கர்வம் கொண்டவர் “அவங்களைப் பத்தி யோசிக்காம இருக்குறது உனக்கும் உன் மகனுக்கும் நல்லது… உன் தம்பி பொண்டாட்டி என் டியூசன் சென்டர்ல சேர வந்த பொண்ணு ஃபேமிலி கிட்ட என்னைப் பத்தி கண்டதையும் சொல்லி என் பேரை எப்ப ரிப்பேர் ஆக்குனாளோ அப்பவே அவங்களுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லனு ஆகிடுச்சு… அவளால என் கிட்ட படிக்கிற பசங்க என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நைட் ஸ்டடிக்கு டியூசன் சென்டர்ல இருக்குறதுக்கு சின்னப்பொண்ணுங்களோட ஃபேமிலி யோசிக்கிறாங்க… சொத்து பத்து, ஸ்கூல் வருமானத்தை விட டியூசன் சென்டர் வருமானம் தான் நம்மளை சொசைட்டில கௌரவமா வாழ வச்சிட்டிருக்குங்கிறதை மறந்துடாத… அதுக்குக் கொள்ளி வைக்கப் பாத்தவ இருக்குற வீட்டை பத்தி இனிமே நீ யோசிக்கக்கூடாது… இந்த வாரம் என் டியூசன் சென்டர் பிள்ளைங்களை மாமல்லபுரம் டூர் கூட்டிட்டுப் போறேன்… உன் மகனும் வருவேன்னு அடம்பிடிப்பான்… அவனைக் கண்ட்ரோல் பண்ணி வீட்டுல உக்காந்து படிக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் உமாவின் மனம் சோர்ந்து போனது.
சோர்ந்த மனம் சங்கவி என்ற ஒருத்தியைத் தம்பி காதலிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென யோசித்தது.

http://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-26.5454/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 25
"அவசரப்படாத ப்ளீஸ்... கொஞ்சநாள் தான... நம்ம வீட்டுலயே இரு"
சரபேஸ்வரன் அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான்.
உடனே சத்தமாக நகைத்தாள் அவள்.
"நம்ம வீடா? இது உங்க வீடு... இதை நான் எப்பவும் என் வீடா ஃபீல் பண்ணுனதில்ல... உங்கம்மாவும் அக்காவும் என்னை இந்த வீட்டு மனுசியா நடத்தியிருந்தா அப்பிடி தோணிருக்குமோ என்னமோ... அவங்க என்னை வேண்டாத ஒருத்தியா தான நடத்துனாங்க... இன்னொரு தடவை இதை நம்ம வீடுனு சொல்லாதிங்க"
“கவி…”
“நீங்க என்னை லவ் பண்ணுறது உண்மைனா என்னைப் போகவிடுங்க… சென்னைல வேலை, வீடு அரேஞ்ச் பண்ணிட்டு ட்ரெயின் ஏறுறப்ப இன்ஃபார்ம் பண்ணுங்க… இப்பவும் இவங்க தான் முக்கியம்னு நினைச்சிங்கனா என்னை விட்டுடுங்க சரபன்… இப்பிடி ஒரு கையாலாகாத மனுசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதை விட காலம் முழுக்க எங்கம்மாக்கு மகளா நான் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்”
மனக்குமுறல்களைச் சொல்லிவிட்டுச் சரபேஸ்வரனின் பதிலை எதிர்பாராதவளாக கிளம்பிப் போய்விட்டாள் சங்கவி.
சரபேஸ்வரனின் கண்கள் பனித்தன. ஆண்கள் அழக்கூடாதா என்ன? உண்மையான அன்பு விலகும் போது அவர்களும் அழுவார்கள், அந்த அன்பை மதிப்பவர்களாக இருந்தால்!
உமாவும் குழலியும் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. இப்போது சரபேஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு வருந்துவதா அல்லது அவன் சென்னைக்குப் புலம்பெயர்வதை நினைத்து மனம் பொருமுவதா என புரியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தார்கள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-25.5444/

#நித்யாமாரியப்பன்
ஹாய் ப்ரண்ட்ஸ்...
Ezhilanbu Tamil Novels வெப்சைட்க்கு Google Play Store App இருப்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். சமீபமாக ஆப் சரியாக வொர்க் ஆகவில்லை என புகார் வந்தது. அதை இப்போது சரி செய்து அப்டேட் செய்திருக்கிறோம்.

ஏற்கெனவே ஆப் வைத்திருப்பவர்கள் ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்‌.

இதுவரை ஆப் பயன்படுத்தாதவர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

ஆப் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். சைட்டில் உள்ள அனைத்துக் கதைகளையும் இலவசமாகப் படிக்கலாம். நம் தளத்தில் வரும் கதைகளின் லிங்க் மிஸ் ஆகிவிட்டது என்ற கவலை இல்லாமல் ஆப்பில் நீங்கள் சுலபமாக படித்துக் கொள்ளலாம்.

உபயோகித்துப் பாருங்கள்.
நன்றி🙂

#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 24
“இன்னைக்கு வளைகாப்புல கோமதிக்கு வளையல் போடுறப்ப அடுத்து எனக்குத் தான் வளைகாப்புனு எல்லாரும் கிண்டல் பண்ணுனாங்க”
“எதே? ஜீபூம்பானதும் வளைகாப்பு வச்சிட முடியுமா? அதுக்கு இன்னும் ஃபர்ஸ்ட் ஸ்டெப்பே எடுத்து வைக்கலயே”
நொந்து போய் பேசியவனைக் குறுஞ்சிரிப்போடு பார்த்தாள் சங்கவி.
“யார் உங்களை ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுக்கவிடாம தடுத்தாங்களாம்?”
சீண்டினாள் அவள். சரபேஸ்வரன் அவளது சீண்டலில் திகைத்துப்போனான்.
“ஏய் கவி! நீ என் கிட்ட விளையாடுறியா? டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் ஞாபகம் இருக்கா?”
பொறுப்பான கணவனாக நினைவூட்டினான் மனைவிக்கு. அவன் மனைவியோ அசட்டையாக தோளைக் குலுக்கினாள்
“டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை டெலிட் பண்ணிட்டேன்… இன்னுமா உங்களுக்குப் புரியல?”
“உன்னோட இந்த வார்த்தைய நான் ‘நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட்னு’ எடுத்துக்கலாமா?”
“நான் எவ்ளோ ஆசையா பேசுறேன்… இப்ப கூட புரொபஷ்னல் வேர்ட்ஸ் தான் யூஸ் பண்ணுவிங்களா? உண்மைய சொல்லுங்க, அந்த எகனாமிக்ஸ் நோட்ல இருக்குற கவிதைய நீங்க தான் எழுதுனிங்களா?”
“ப்ராமிஷா நான் தான் எழுதுனேன் கவி... இப்ப எனக்குக் கவிதை சொல்லுற மூட் இல்ல… இல்லனா அழகா ஒரு கவிதைய எடுத்து விட்டிருப்பேன்”
“நம்பிட்டேன்”
அவள் இழுத்த விதத்தில் சிரித்தவன் “சில கவிதைய சொல்லுறதை விட செயல்ல காட்டுனா நல்லா இருக்குமாம்” என்றான் விசமமாக.
சங்கவி மீண்டும் நாணத்தில் பிடியில் சிக்கிக்கொண்டாள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-24.5442/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 23
சங்கவி வியப்பில் விழிகளை விரித்தாள்.
“ஏன் இப்பிடி பாக்குற?” என்றவனிடம்
“நீங்க எனக்காக யோசிக்கிறது புதுசில்ல… பட் உங்க அம்மா அக்காவ தாண்டி எனக்காக யோசிக்கிறிங்கல்ல, அது எனக்குப் புதுசு தான்” என்றாள் அவள்.
“அம்மாக்கு அப்பா இருக்குறார்… அக்காக்கு அவ பையன் இருக்குறான்… எனக்கு நீ மட்டும் தான இருக்குற? உனக்காக யோசிக்காம வேற யாருக்காக நான் யோசிக்கப்போறேன் சொல்லு”
சங்கவியின் மனம் சிலிர்த்து அடங்கியது. ஆனால் எல்லாம் ஒரு நொடி தான். இவன் உணர்ச்சிப்பூர்வமாக எதையாவது சொல்வதும், அதற்கு அவள் சிலிர்த்து மானசீகமாகச் சில்லறையைச் சிதறவிடுவதும், அடுத்த நாளே இவனது செய்கைகளில் மாற்றமில்லையென அவள் ஏமாறுவதும் வாடிக்கையாகிவிட்டதே இந்த இரு வாரங்களில்!
இன்று இப்படி சொல்பவன் நாளையே மாற்றிப் பேசினால்?
“இந்தத் தடவை உனக்கு ஏமாற்றம் இருக்காது கவி”
“பாக்கலாம் சரபன்”
தோளில் இருந்த அவனது கரத்தை விலக்கிவிட்டுச் செல்ல முயன்றவளை சீண்டும் எண்ணம் எழுந்தது அவனுக்குள்.
“சந்தானம் சார் வீட்டுல இப்பவும் அவங்க ஒய்ப் தான் அவருக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைப்பாங்களாம்… உனக்கு வேலை இல்லனா நீயும்…”
சரபேஸ்வரன் இழுக்கவும் கண்களில் அனலோடு திரும்பினாள் சங்கவி.
“நானும்…” கண்களை உருட்டிக் கேட்டாள் அவள்.
“குளிக்கக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமேனு சொல்ல வந்தேன்மா… அதுக்கு ஏன் கோவப்படுற? புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி ஒரு நாளாச்சும் நடந்துக்குறியா? எப்பவும் எதிரி மாதிரியே பாக்குற”
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-23.5437/

#நித்யாமாரியப்பன்

New Episodes Thread

Top Bottom