பிரியசகி - 6

அத்தியாயம் - 6

வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டதும் வந்துட்டான் மா உன் மகன். நான் உள்ளே போரேன் என்றவாறு உள்ளே போய் விட்டாள் சந்தியா...

எனக்கே அதான் பயமா இருக்கு. இவ வேற போற போக்குல வெடியை போட்டுட்டு போறாளே என தனது மகளை திட்டியவாறு அமர்ந்திருந்தார் மாதவி..

இந்த நேரத்தில் எதுக்கு இப்படி சும்மா உட்கார்ந்துட்டு இருக்கீங்க. ஏன் வேலை எதுவும் இல்லையா..

உள்ளே வந்ததும் தனது தாயை காய்ச்சத் தொடங்கி விட்டான் சந்தோஷ்...

இல்ல தம்பி. இப்போ தான் வேலை எல்லாம் முடிச்சேனுங்க. இனி மதிய சமையல் தான் கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கனும் என்றார் சற்று பயத்துடன்.

ஓஓஓ... வேற எதாச்சும் வேலை இருந்தால் போய் பாருங்க. இந்த வாரத்தில் நாம ஊருக்குப் போறோம். அப்பத்தா பார்க்கனும்னு சொல்லுச்சு..

சரிப்பா போலாம் என்றார். அதைக் கேட்டவன் ம்ம்ம்... என்றவாறு மாடிக்குப் போய் விட்டான்...

அதற்கு பின்பே உள்ளே இருந்து மூச்சையே வெளியிட்டார். அப்படியே அவங்க அப்பத்தா குணம் என மகனை திட்டியவர் இல்லாத வேலையை பார்க்க எழுந்து போனார்...

சந்தோஷின் அப்பா வேதாச்சலம் ஈரோட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். நிலபுலன்கள் ஏராளமாய் இருக்க அவரோ படிப்பில் ஆர்வமாய் இருந்தார்...அவரின் பெற்றோர் தர்மதுரை காமாட்சி இருவரும் பழமைவாதிகள்..

வேதாச்சலமோ படித்து முடித்து பேங்க்கில் வேலை கிடைத்து கோவைக்கு போக வேண்டுமென கூறியபோது காமாட்சி முடியவே முடியாதென மறுத்தார்..

பிடிவாதமாக நின்று வேலைக்கு வந்துவிட்டார். வேலைக்கு வந்த இடத்தில் உடன் வேலை புரிந்த மாலதியை பார்த்ததும் பிடித்துப் போனது அவரிற்கு..

பெற்றோர் இல்லாமல் சொந்தங்களின் ஆதரவில் வளர்ந்த மாலதிக்கு வேதாச்சலத்தின் அன்பும் அக்கறையும் அவரின்பால் காதலை வரவைத்தது..

வேலைக்கே அனுப்பாத தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாரா என்ற தயக்கத்துடன் தனது காதலை வீட்டில் சொன்னார் வேதாச்சலம்...

முடிந்த அளவு மறுப்பைக் காட்டி பார்த்தார் காமாட்சி. ஆனால் வேதாச்சலம் உறுதியாக மறுத்து விடவும் இரண்டு நிபந்தனைகளுடன் திருமணத்திற்கு சம்மதித்தார் காமாட்சி...

முதலாவது மாலதி வேலையை விடவேண்டும். இரண்டாவது திருமணத்திற்கு பின்பு கோவையில் தங்கிக் கொள்ள வேண்டும் தானே அழைக்காமல் இருவரும் இங்கே வரக்கூடாது என்பதுதான்..

வேதாச்சலம் இதைக் கேட்டதும் மாலதியிடம் சொல்லி கருத்துக் கேட்டார். தன்னிடம் வந்து கேட்கும் அவரின் குணத்தில் நெகிழ்ந்து போனவர் சரியென சம்மதித்தார். அதிக ஆர்ப்பாட்டம் இன்றி இவர்கள் திருமணமும் நடந்து முடிந்திருந்தது..

அதற்கு பின்பு வேதாச்சலம் பிறந்தகத்திற்கு போவதை விரும்புவது இல்லை. மாலதியும் புகுந்த வீட்டின் குணமறிந்து அதற்கேற்ப நடக்கப் பழகிக் கொண்டார்..

சந்தோஷ் அப்படியே அப்பத்தாவின் குணத்துடன் இருக்கவும் அவனிற்கு மட்டும் அதிக செல்லம் இருக்கும் காமாட்சியிடம். அவனும் அப்பத்தாவை போலவே தாயை மதிக்காமல் இருக்கிறான்.

உள்ளே வந்தவன் அலமாரியில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவனது ரூமில் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தான்...

அனைத்தும் விவசாயம் பற்றிய புத்தகங்கள். அக்ரி எடுத்துப் படிக்கும் போதே அதன்மேல் அவனிற்கு அளவில்லாத பற்று வந்திருந்தது...

படித்து முடித்துவிட்டு நவீனமயமாக விவசாயத்தை செய்வதற்கு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறான்..

அதற்காகவே சேலத்திற்கு அடிக்கடி போய்விட்டு வருவான். அவனது அப்பத்தாவும் தாத்தாவும் இவன் போனாலே அகமகிழ்ந்து போவார்கள்..

மகனின் மேலிருந்த நம்பிக்கை பொய்த்துப் போனதில் வருத்தமாக இருந்தவர்கள் பேரனிற்கு விவசாயத்தில் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து உள்ளம் நிறைந்து போனார்கள்...

பாதி நாட்கள் இவன் அங்கே தான் குடியிருப்பான். இங்கு தங்கும் நாட்களில் தாய்க்கும் தங்கைக்கும் தான் விழி பிதுங்கிப் போகும்..

சந்தியா அப்படியே தாயின் பிரதிபலிப்பு. அண்ணனின் குணத்தைக் கண்டால் அறவே பிடிக்காது. தாயை மதிக்காதவர்களிடம் இவளும் ஒதுங்கியே இருந்து விடுவாள்..

புத்தகம் திறந்திருந்தாலும் அதில் மனம் ஒன்றாமல் போக அதை மூடிவிட்டான் சந்தோஷ்...

சஞ்சய் வீ்ட்டில் நடந்தது நினைத்துப் பார்த்தவன் சற்று நிதானமாய் யோசித்தான்..

நமக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை. நம்ம கேரக்டர்க்கு ஒரு பொண்ணை போய் மிரட்டனுமா என யோசித்தவாறு அமர்ந்திருந்தான்..

தன்னை நினைத்து அவள் பயந்து நடுங்கியதை நினைத்து இப்போது வருத்தமாக இருந்தது..

சஞ்சுகிட்ட இருந்து உன்னை தள்ளி வச்சா போதும்னு தான் நினச்சேன் வேறு எதையும் நினைக்கலயே என்றவாறு கண்களை மூடி அமர்ந்து விட்டான்...

.....................................

அழுதவாறு அப்படியே தூங்கிப் போயிருந்த பிரியா வெகு நேரம் கழித்தே கண்களைத் திறந்தாள்...

கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள் ச்சே.. இவ்வளவு நேரமா தூங்கிட்டோம் என நினைத்தவாறு எழுந்து போய் முகத்தைக் கழுவி விட்டு வந்து அமர்ந்தாள்..

சந்தோஷ் பேசியது எல்லாம் யோசித்துப் பார்க்க அவளிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை..

இப்போ ஊரிற்கு போய் விடலாமா. இங்க எல்லார்கிட்டயும் என்ன சொல்றது என யோசிக்கத் தொடங்கினாள்..

அதற்கு பின்பே சஞ்சய் தன்னிடம் காதலைச் சொன்னது நினைவிற்கு வரவும் என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பித் தான் போனாள்..

என்னோட வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் எல்லாம் திசை திருப்பி விடறதையே வழக்கமா வச்சிட்டு இருக்கான். அப்போ என்னோட வேலை. இப்போ என்னோட காதல்...

காதல் என யோசித்ததும் பிரியாவிற்கு குப்பென வியர்த்து விட்டது. காலையில் சஞ்சு பேசியபோது அவனின் பேச்சில் வெட்கம் கொண்டது. அவனை இரசித்துப் பார்த்தது எல்லாம் புரிந்ததும் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்..

தனது காதலிற்கு ஆயுள் வெறும் சில நிமிடங்கள் தான் போல. இது எப்போதும் நடக்கவே போவதில்லை என நினைத்தபோது இதயத்தை யாரோ பிடுங்கியதைப் போல துடித்துப் போனாள்..

வேறு வழியே இல்லையா என யோசித்தும் அதெல்லாம் சரியாக வருமா என்றுதான் யோசித்தாள்.. வெகு நேரம் யோசித்து ஒரு முடிவுடன் புவனாவைத் தேடிப் போனாள்..

புவனா அவரது ரூமில் இருக்கவும் அங்கேயே போனாள். பிரியாவை பார்த்ததும் வாடா என அழைத்தார்..

அவரின் அருகில் போய் அமர்ந்து கொண்டவள் ஆன்ட்டி நான் ஊரிற்கு கிளம்பலாம்னு இருக்கேன் என்றாள்..

என்னடா திடீர்னு சொல்றே. இங்க ஒரு மாசம் இருக்கறதா தானே வந்தே என பதறினார் புவனா..

ஆமா ஆன்ட்டி. பட் இங்க தான் எந்தப் பிரச்சனையும் இல்லையே. ஊரில் நிறைய வேலை இருக்கு அதனால தான்.

சரிதான் டா. அவங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வரட்டும் அப்புறமா பேசிக்கலாம் என அந்த பேச்சை முடிக்கப் பார்த்தார்...

இல்ல ஆன்ட்டி அவங்க வந்ததும் போறேன்னு சொன்னால் விட மாட்டாங்க. நான் இன்னைக்கே கிளம்பறேன் என தன் முடிவில் உறுதியாக நின்றாள்..

இரு நான் அவருக்கு கால் பண்றேன் என போனை எடுக்கவும் வேணாம் ஆன்ட்டி என்ற பிரியாவின் குரல் அவரைத் தடுத்தது..

இப்போ சொன்னா அவங்க வேலையை விட்டுட்டு வருவாங்க. அவங்களுக்கு நானே அப்புறமா சொல்லிடறேன் என்றாள்..

புவனாவிற்கு அவளின் செய்கைகள் எதுவும் புரியவில்லை. மனதே இல்லாமல் போனாலும் அவளைத் தடுக்க முடியவில்லை..

பிரியாவும் சொன்னவாறே அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பிருந்தாள்...

ஊரிற்கு போகும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் பிரியா ரொம்பவே தளர்ந்து போயிருந்தாள்..

இருக்கையில் ஏறி அமர்ந்ததும் அவளது இருதயம் தாறுமாறாக துடிப்பதைப் போல இருக்க தன் கைகளால் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள்..

பேருந்து கிளம்பவும் ஜன்னலில் வழியே கோவையை ஏக்கமாகப் பார்த்தவாறு இருந்தாள்...

இனிமேல் வாழ்க்கை பெரும் போராட்டங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது எனப் தெரியாத பேதையவளோ அவளது ஊரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாள்..

திடுமென வீட்டில் வந்து நின்றவளைப் பார்த்து அவளது வீட்டினரே திகைத்துப் போய் பார்த்தார்கள்..

என்னடா கண்ணு போன வேகத்தில் வந்துட்டே என கேட்டவாறு அவளின் அருகில் வந்தார் அப்பத்தா..

சஞ்சீவ்க்கு வேலையில் சின்ன ப்ராப்ளம் அதனால தான் வருத்தமா இருந்தான். இப்போ நார்மல் ஆயிட்டான். இங்கேயும் வேலை இருக்கே அதனால கிளம்பி வந்துட்டேன்.. பொய்யை கோர்வையாக சொல்லவும் சரியென்று விட்டு அவரவர் வேலையை பார்க்கப் போய் விட்டார்கள்..

அவளது அறைக்குள் போனவள் பேக்கை வைத்துவிட்டு வேறு உடைக்கு மாறிவிட்டு வீட்டின் பின்புறம் போனாள்..

விதவிதமான பூச்செடிகள் அந்த இரவின் நிலா வெளிச்சத்தில் பூக்களால் நிறைந்திருந்தது. அதனைப் பார்த்தவாறு அங்கே இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்..

கையோடு வைத்திருந்த போன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தாள். சாந்தமூர்த்தி தான் அழைத்தார்..

போனை அட்டண்ட் செய்ததும் சாரி் அங்கிள் என்றுதான் தொடங்கினாள்.

பரவாயில்ல மா. ஆனால் நாங்க வந்ததும் சொல்லிட்டு போயிருக்கலாம். அந்த வருத்தம் மட்டும் தான் என்று பேசியவரின் குரலில் அவளிற்கும் வருத்தமாக இருந்தது...

சில சூழ்நிலைகள் அங்கிள். நாம ஒண்ணு நினைக்க கடவுள் வேற விதமா நினைக்கிறார் என்றாள்..

சஞ்சு மேல உனக்கு எதுவும் வருத்தமில்லையே என கேட்டதும் அங்கிள்... என திணறினாள்..

எனக்கு தெரியும் மா என்றதும் இவளிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

நீ ஊரிற்கு கிளம்பியது தெரிந்ததும் சஞ்சு உன்னோட முடிவை புருஞ்சுட்டான். அவன் இனிமேல் நல்ல நண்பனா இருப்பான். அதுக்கு கொஞ்ச நாள் ஆகும். அவன் உன்னை மறந்ததும் உன்கிட்ட பேசறதா சொல்ல சொன்னான் மா..

பிரியாவிற்கு சஞ்சுவை நினைத்து பெருமையாக இருந்தது. அவனின் நல்ல மனதிற்கு சீக்கிரமே ஒரு நல்ல பெண் கிடைக்க வேண்டும் என கடவுளிடம் ஒரு கோரிக்கை வைத்தாள்..

நீ மனசுல எதுவும் நினைச்சுக்காத மா. எப்பவும் போல சஞ்சுவும் நாங்களும் உனக்கு பக்கபலமா இருப்போம் என்றவரின் பேச்சில் பிரியா நெகிழ்ந்து போனாள்..

ஓ.கே அங்கிள் என்றுமட்டும் சொன்னாள். சரிடா உடம்பை பார்த்துக்கோ வேலை வேலைனு சாப்பிடாமல் இருக்காதே. எதாச்சும்னா கால் பண்ணு என்றவர் அழைப்பைத் துண்டித்தார்..

அவர் பேசியதை எல்லாம் நினைத்தவாறு அங்கேயே அமர்ந்திருந்தவள் தாயின் அழைப்பில் உள்ளே போனாள்...

மறுநாள் வழக்கம் போல வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தோட்டத்திற்கு போனாள்...

அவளது தந்தை வாழைக்காட்டிற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.... அப்பா என்றவாறு வந்தவளைப் பார்த்து என்னம்மா வேலை எல்லாம் முடிஞ்சுதா என கேட்டவாறு அடுத்த பாத்திக்கு மடையை மாற்றியவாறு கேட்டார்...

அதெல்லாம் முடிச்சுட்டு வந்துட்டேன். நான் பார்த்துக்கறேன் நீங்க வந்து சாப்பிடுங்க என அழைத்தாள்...

சரிமா என்றவர் வாய்க்கால் நீரில் கைகளை கழுவியவாறு அவளின் அருகில் வந்தார்..

தூக்கு வாளியில் இருந்த உணவை அவரிடம் கொடுத்து விட்டு மண்வெட்டியை கையில் எடுத்துக் கொண்டவள் வாய்க்காலில் இறங்கினாள்..

மாணிக்கவேலும் அங்கேயே ஒரு இலையை அறுத்து போட்டு அமர்ந்தவர் தூக்குவாளியைத் திறந்தார்..

பாசிப்பயறுக் குழம்பும் வாழைக்காய் கூட்டும் இருந்தது. சோற்றின் மேலே இருந்த கூட்டை எடுத்து இலையின் ஒரு ஓரம் வைத்தவர் சாப்பாட்டை இலையில் போட்டுக் கொண்டார்..

நீ சாப்பிட்டியா டா என கேட்டவரிடம் சாப்பிட்டேன் பா. நீங்க சாப்பிடுங்க என்றவள் அடுத்து பாத்திக்கு மாற்றிவிட்டு வந்தாள்...

அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா உணவருந்தியவாறு கேட்டார்..

நல்லா இருக்காங்க பா. நான் போனதுக்கு ரொம்ப சந்தோசப்பட்டாங்க என்றவள் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்..

மாணிக்கவேல் உணவருந்தி விட்டு அந்த நிழலிலேயே அப்படியே அமர்ந்து விட்டார்...

பிரியா வேலை செய்வதைப் பார்த்தவாறு இருந்தவருக்கு அவளை நினைத்து மனம் கனிந்தது..

சீக்கிரமா இந்த பிள்ளைக்கு ஒரு பையனைக் கொண்டு வா தெய்வமே என கடவுளை வேண்டிக் கொண்டார்..

சிறிது நேரத்தில் மாணிக்கவேல் எழுந்து தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லவும் அவரிடம் விட்டுவிட்டு தேங்காய் தோப்பிற்கு போனாள்..

மட்டைகள் தேங்களாய்களை எல்லாம் ஒரு ஓரமாகப் பொறுக்கிப் போட்டவள் அங்கிருந்த தக்காளி கத்திரிக்காய் மிளகாய் என சிறுசிறு பாத்திகளாக இருந்தவற்றில் களைகளை எடுக்கத் தொடங்கி் விட்டாள்...

.......................

அந்த வார இறுதியில் சொன்னபடியே தனது குடும்பத்துடன் ஊரிற்கு வந்து சேர்ந்தான் சந்தோஷ்..

அடிக்கடி அவன் வந்தாலும் காமாட்சி அவனையே வா வா சாமி என வரவேற்றார். மாலதிக்கும் வேதாசலத்திற்கும் முகம் சற்று சுருங்கியது. சந்தியா அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை...

வீட்டிற்குள் போனதும் ஒரு பெரிய டம்ளரில் குளுகுளுவென மோரைக் கொண்டு வந்து கொடுத்தார் காமாட்சி..

பயணக் கலைப்பிற்கு மோர் தொண்டையில் இதமாக இறங்கியது. சந்தியா போனைக் பார்த்தவாறு மோரைக் குடிக்காமல் வைத்திருந்தாள்.

காலேசுக்கு போறியா... நல்லா படிக்கறியா. இல்ல அங்க போய்ட்டும் இப்படித்தான் அந்த பொட்டியை தட்டிட்டு இருப்பியா என்றார் காமாட்சி.

சந்தியாவிற்கு கோபம் சுறுசுறுவென வந்துவிட்டது. ஏதோ சொல்ல வாயெடுக்க அருகில் அமர்ந்திருந்த மாலதி கையை பிடித்தார்.

சந்தியாவும் தாயின் குறிப்பை உணர்ந்து கொண்டு நல்லாத் தான் படிக்கறேனுங்க அப்பத்..தா.. என நீட்டி முழக்கினாள்..

என்னத்த படிக்கறியோ.. என் ராசா மாதிரி விவசாயத்தைப் பத்தி படிக்கலாம்ல. அத விட்டுட்டு உன்னோட கையில் இருக்கறதை மாதிரி இன்னும் பெருசா இருக்கற பொட்டியைத்தானே தட்டப் போறே என நொடித்தார்.

வேதாச்சலத்திற்கு இதையெல்லாம் கேட்க முடியாமல் போய் ரெஸ்ட் எடுடா என்றவர் மாதவியிடமும் நீயும் போமா என்றார்..

கம்யூட்டரைப் பொட்டினு சொல்லுது என திட்டியவாறு சந்தியா உள்ளே போய் விட்டாள்..

நான் அத்தைக்கு கொஞ்சம் உதவியா இருக்கேனுங்க என்ற மாதவி காலியான டம்ளர்களை வாங்கிக் கொண்டு எழுந்தார்..

காமாட்சிக்கு அதை கேட்டதும் மனம் நிறைய மகிழ்ச்சியாக வா தாயி என அடுக்களைக்கு அழைத்துக் கொண்டு போனார்..

போகும் முன்பு சாப்பாட்டு நேரத்தில ஒரு முக்கியமான விசயம் பேசனும் என்று மகனிடம் அறிவிப்பாய் சொல்லிவிட்டு போனார்..

தொடரும்
 

Rajam

Well-known member
Member
சஞ்சய்ய மறுத்துட்டா.
சந்தோஷ் தானா அப்போ.
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom