• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பிரம்மகமலம் அவர்கள் எழுதிய "சலனபருவம்"

அன்புள்ள பிரம்மகமலம் பூவே,

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவரந்த விஷயங்கள், கதாபாத்திரங்கள் பற்றி உங்களுடன் பகிர்கிறேன் சகி!

இயற்கை ரீதியாக, உடலாலும் உள்ளத்தாலும் பல விசித்திரமான மாறுதல்களை கடந்து வரும் Teenage பருவத்தின் சவால்களை கதையின் மையப்பொருளாகக் கொண்டு, அதை மிக மிக நேர்த்தியாக எடுத்துச் சொன்ன உங்கள் பாங்குக்கு என் அன்பு கலந்த பாராட்டுக்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் போகலாம். (ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியராக, மாணவர் மாணவிகள் பழகும் விதத்தை தினம் தினம் பார்க்கும் அனுபவத்தில் சொல்கிறேன்.) ஆனால் 80s 90s காலக்கட்டத்தில் வளர்ந்த பிள்ளைகள்(ஆண், பெண்) இருபாலரும், குறைந்தபட்சம் ஒரு முறையாவது இதைப் போன்ற சூழலை கடந்து வந்திருப்பார்கள்.

அந்தக் காலத்தில், போதுமான விழிப்புணர்வு இல்லாததும், பெற்றவர்கள் பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசாததும் ஒரு காரணம் என்றால், திரைப்படங்கள், நண்பர்கள் வட்டாரம், அறிவியல் வகுப்பு என்று அறைகுறையாகத் தெரிந்துகொள்ளும் விஷயங்களைப் பற்றிய கற்பனை கலந்த யூகங்கங்கள் தான், பிள்ளைகள் தவறான பாதையில் செல்வதற்குக் காரணம். தவறு செய்பவர்கள் ஒருபுறம் இருக்க, இதில் பாதிக்கப்பட்டவர்கள் மௌனம் காப்பதற்குக் காரணமாக இருந்தது, பயம், வெட்கம், அவமானம் என்று சொல்லலாம்.

இரு தரப்பினரின் இந்த மன நிலையை மிக மிக அருமையாக கதையில் புகட்டிய ஆசிரியரின் பாங்கு சூப்பர்.👏👏👏

குரு-கயலுக்கு எதற்கு ஆத்தர் கதை முழுவதும் இவ்வளவு சினிமா பாடல்களை இணைத்துள்ளார் என்று யோசித்தேன். ஆனால் அதிலும் ஒரு விழிப்புணர்வு (குரு-கயலிடம் சொல்லும் விளக்கம்) ஏற்படுத்தி இருக்கிறார் என்று புரிந்தது. Simply Wow ஆத்தரே!!!!🤗🤗

(இப்போது தான் புரிகிறது! அந்தக் காலத்தில்(I mean in 90s) அம்மா எங்களை திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்ல மறுத்தது ஏன் என்றும், ஒலியும் ஒளியும் பாடல்களை பார்க்கவோ, கேட்கவோ கூடாது என்றும்…..இவ்வளவு ஏன்…lyrics மனப்பாடம் செய்து பாடினால் அடித்தார் என்றும்🤪🤪) எல்லாம் நன்மைக்கே!🤗🤗

குருவின் குறும்பும், ஜாலியான குணமும், கதையின் அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருந்தது. என்னவொன்று, ஆனாலும் அளவுக்கு மீறி அந்தக் காய்ந்து போன காதல் மன்னனை புலம்பவிட்டீர்கள். அப்படி இருந்தும், உங்கள் கண்ணிலும், கயல் வீட்டார் கண்ணிலும் மண்ணைத் தூவி அவன் செய்த அலப்பறைகள் செம்ம.:ROFLMAO::ROFLMAO:

சொல்ல முடியாத பல மனப்போராட்டத்திலும், கயல் கதாபாத்திரம் நிமிர்வாகக் காட்டியது அழகாக இருந்தது. மணந்தவனை விட, வேறு எவரிடம் மனம்விட்டு பேச முடியும் என்று அவள் உருகுவதும், அழுவதும், முரடு பிடிப்பதும், அவ்வளவு ஏன், பல சமயங்களில் கண்ணில் விரல் விட்டு ஆட்டுவதும், ரசித்து படித்தேன். 🥰🥰
சென்னை கிளை பொறுப்புகளை குரு தனியாளாக நிர்வாகம் செய்வதற்கு அவள் கேட்ட கேள்வி….அம்மாடியோ முடியல ஆத்தரே! பக்கென்று சிரித்துவிட்டேன்.:LOL::LOL:

காளிதாஸ் பிரச்சனைக்குத் தீர்வு கண்ட கணவன்-மனைவியின் விதத்தில் குறைசொல்ல ஒன்றுமே இல்லை. ஆனால் எனக்கு ஒரு விஷயம் மட்டும்தான் புரியவில்லை. காளிதாஸ் செயல்களை பெரியப்பா பெரியம்மா மட்டும்தான் முதலில் அறிந்தார்கள். காலப்போக்கில் அப்பாவும் அறிந்தார்.

மகளின் பயத்தைப் போக்க தீவிரமாகச் செயல்பட்ட அப்பா, ஏன் மகனிடம் நல்லவிதமாகப் பேசி, நல்லது கெட்டது எடுத்துச் சொல்லவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. காரணம், அவர் குருவிடம் தன்னை ஒரு நண்பனாகக் கருதும்படி கேட்டு, மகளின் மனநிலையை பக்குவமாக எடுத்துச் சொன்னார்.

இத்தனை நற்குணம் படைத்தவர்(friendly dad) ஏன் மகனின் சலனத்தை முளையிலேயே கிள்ளி விட்டு அவனை நல்வழியில் நடத்த முயற்சி எடுக்காமல், கெட்டவனாகவே பார்த்தார் என்று யோசிக்கத் தோன்றியது. ஏனென்றால் அந்த நேரம் காளிதாஸும் தானே, சரி எது தவறு எது என்று புரியாமல் நடந்துகொண்டான்.🧐🧐
(ஒரு வேளை நான் ஏதாவது சரியாகப் படிக்காமல் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் தோழி!)

காளிதாஸை குற்றவாளியாக நிறுத்தி, துன்புறுத்தாமல், அவன் திருந்திவிட்டான் என்று சொன்ன விதம் அழகு தான். அதில் குருவின் பெருந்தன்மையான குணம் உணர முடிகின்றது. ஆனால் காளிதாஸ் வருங்கால மனைவியிடம் தன் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, அவர்களுக்குள் ஒரு புரிதல் வந்தது போல ஒரு காட்சி சித்தரித்து இருந்தால், தேனின் சுவை அதிகரித்திருக்கும். என்னதான் இருந்தாலும் அவள் தானே, அவன் குறைகளை மன்னித்து, இனி காலத்துக்கும் உடன் வாழப்போகும் சரிபாதி.

இதில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் ஆனந்தி தான். என்ன ஒரு அழகான சகோதர பாசம். கயல் சில இடங்களில் “அண்ணி! என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று அலறிய விதம், படிக்க சற்று பொறாமையாகவே இருந்தது.🤗🤗

அதே போல ஆத்தருக்கு, அபார நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்பதைக் கதை முழுவதும் காண முடிந்தது. அது மட்டுமில்லாமல், கூகுல் ஆண்டவர் மேல் பழி போட்டு வாசகர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று அதன் வரலாறு பற்றி விவரிக்கும் ஒரு டூரிஸ்ட் கைட்(tourist guide)உம் ஒளிந்திருந்தார்.😎😎

திருமண வைபவங்களும் கூட மிகவும் ரசித்து படித்தேன். Size வாரியாக முறைப்பெண்கள் இருக்கும் குரு பிரசாத் அவர்கள் மீது பொழியும் அன்பையும் பாசத்தையும், படிக்கும் எங்களுக்கே ஏக்கம் வரும்போது, கயல்விழிக்கு வராதா என்ன என்று கேட்க தோன்றியது.

சலனபருவத்தைப் பற்றி நல்லவிதத்தில் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அழகிய குடும்ப கதை தந்த பிரம்மகமலம் அவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐

Moral of the Longgggggggg விமர்சனம்:
Don’t judge a book by its cover என்று உணர்ந்தேன். Special thanks to @chitra ganesan .உங்கள் ரெவ்யூ பார்த்து தான், இக்கதை படித்தேன் தோழி!

அதனால் வாசகர்களே!!! நல்ல கதை; நம்பி படியுங்கள்!🤩🤩🤩

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@பிரம்மகமலம்
 

chitra ganesan

Well-known member
Member
IMG_20220920_133616.jpg
 

Latest profile posts

முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?

New Episodes Thread

Top Bottom