• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பிச்சிப்பூ அவர்கள் எழுதிய "சொக்கனின் மீனாள்"

அன்புள்ள பிச்சிப் பூவே,

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கேன்.

போட்டி முடிவுகள் அறிவித்த பின், அதுவும், வாசகர்கள் மனதைக் கொள்ளை கொண்டு முதல் பரிசு பெற்ற கதை என்று ஊரே அறிந்த கதைக்கு, 'எவ்வளவு சுறுசுறுப்பாக ரெவ்யூ பதிவிடுகிறாள்?' என்ற உங்கள் Mind Voice எனக்குப் புரிகிறது.🤣

என்ன செய்ய நண்பர்களே! அத்தனை அருமையான கதை; பொதுவாகவே அருமையான கதைகள் மட்டுமே எழுதும் எழுத்தாளர்*. வாய்விட்டு பாராட்டாமல் போனால் நியாயமா?🤗🤗

*இவர் எழுத்தில் சொக்கனின் மீனாள் மட்டுமே படித்திருக்கிறேன். பிச்சிப்பூவில் ஒளிந்திருக்கும் எழுத்தாளர், நர்மதா சுப்ரமணியம் என்று தெரியும் முன்னரே, Reader Modeல், My Sweet Partner in Crime ApsareezBeena Loganathan,🥰🥰ஆத்தரின் மற்ற கதைகளை படிக்கும் படி எப்போதோ பரிந்துரை செய்துவிட்டார்.

குறுநாவலுக்கு ஏற்ப, அளவான கதைக்கரு தேர்ந்தெடுத்து எழுதிய ஆத்தருக்கு என் முதற்கண் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைக் குறிப்பிடுவதற்கு காரணம், போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களில் பலர்(என்னையும் உட்பட) கதைக்கருவில் கதாபாத்திரங்களும், பிரச்சனைகளும் அளவுக்கு மீறி இணைத்து, கடைசி நிமிடத்தில், Word Limitக்குள் கதை முடிக்க திண்டாட வேண்டியதாயிற்று. அவ்வகையில் இவர் தெளிவாகத் திட்டமிட்டு எழுதிய விதம் Simply Superb!👏👏

பறவைகளுக்கும் துடிதுடிக்கும் வெள்ளந்தியான குணம் படைத்த கதாநாயகி ஒருபுறம், தன்மானத்தை உரசினால் சுள்ளென்று கொந்தளிக்கும் சுந்தரம் பொருந்திய இரண்டு கதாநாயகர்கள் மறுபுறம் என்று விறுவிறுப்பாகத் தொடங்கும் கதையில், என்னாகுமோ, ஏதாகுமோ என்ற பதற்றத்துடன் தான் கடைசி வரை படித்தேன். Pre-Final என்று சொல்லிவிட்டு, அதிலும் ருத்ரன், ருத்ர தாண்டவம் ஆட தயாராக இருக்கிறார் என்று “க்கு” வைத்து B.P ஏத்த உங்களால் மட்டும் தான் முடியும் ஆத்தரே.🤭🤭🤭

பத்து பொருத்தம் பார்த்து நிச்சயம் செய்த பின்னும், மருமகனை முழுமனதாக ஏற்க மனமில்லாத பெண்ணின் தந்தை ருத்ரன்; வீட்டில் பார்த்த வரன் என்று துணிந்து, நாயகன் மேல் ஆசை வளர்த்துக் கொள்ளும் மகள் மீனு. என் மனைவி! என் வாழ்க்கை! என் ஆசாபாசங்கள்! என்று தன்னிலை மாறாமல் இருக்கும் மருமகன் ஈஸ்வரன். அனைவரின் குணங்களும் மிக மிக இயல்பாக இருந்தது.

Arranged Marriageல் இத்தனை தொல்லைகளா என்று வெறுத்து போகும் மீனாட்சிக்கு, ஆச்சி சொல்லும் அறிவுரை பிரமாதம். அதீதமாக உரிமை கொண்டாடும் தந்தைக்கும்-கணவருக்கும் இடையே சிக்கி தவிக்கும் பல பெண்களின் பிரச்சனை இதுதான்.

அன்னம், கல்-ஆணி பாசமும், குறும்பும் அழகோ அழகு.

ராஜன் வந்த இடங்கள் எல்லாம் மிக சுவாரசியமாக இருந்தது. வயதுக்கு மீறிய அவன் பக்குவம் ரசிக்க கூடியதாக இருந்தது. அலுவலகத்தில் அட்டகாசம் செய்தாலும், “அண்ணி” என்ற அழைப்பில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு விட்டான்.

உங்கள் எழுத்து நடை பிரமாதம் ஆத்தரே! சில இடங்களை மீண்டும் மீண்டும் வாசித்தேன்!

“நாளொரு சண்டையும் பொழுதொரு சமாதானமும்!” என்று ஈஸ்வரன் Propose செய்த விதம். வாவ்! எத்தனை முறை படித்தாலும் மெய்சிலிர்த்தது.🤗🤗🤗

அதே போல, மீனு “ஈசுப்பா!” என்று அழைப்பதும் அவள் அதற்குத் தந்த விளக்கமும் செம்ம ஆத்தரே!👌👌

ஏணி படிகளில் அமர வைத்து ஈஸ்வரன் அவள் பயத்தைப் போக்க வைத்த காட்சி அற்புதத்திலும் அற்புதம்.💞💞

ஆசிரியருக்கு சினிமா பாடல்கள் மேல் தீரா காதல் என்பதை கதை முழுக்க கவனிக்கலாம். அன்னம் & ஈஸ்வரனை வைத்து ஆங்காங்கே, கதைக்கு ஏற்ற பொருத்தமான பாடல்கள் இணைத்துள்ளார்.

Happy Ending கொடுக்க வேண்டும் என்பதற்காக அனைவரையும் நல்லவர் வல்லவராக மாற்றாமல், அவரவர் இயல்பு மாறாமல் கதை முடித்த விதம் பிரமாதம்.

சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் இடையில் மறப்போம், மன்னிப்போம், மலையளவு நேசிப்போம் என்று உணர்த்தும் அழகிய குடும்ப கதை தந்த ஆத்தருக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.💐💐💐

இதுவரை கதை படிக்காதவர்களுக்கும், மீண்டும் படிக்க நினைக்கும் வாசகர்களுக்கும், லிங்க் இதோ!

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/22-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82.270/

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@பிச்சிப்பூ @Narmadha Subramaniyam @Apsareezbeena loganathan
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom