• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாரதியார் பாடல்-3 🎵🎶🎵சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா👁️🌞🌜

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

கண்ணம்மாவை காதலியாக எண்ணி வர்ணிக்கும் பாரதியின் வரிகள்😍😍இதை படிக்கிறப்ப யாருமே இதை விட அழகா தன்னோட காதலிய வர்ணிக்கவே முடியாதுனு தோணும்...


பாடல் : சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
எழுதியவர் : பாரதி

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

🌞🌜🌛🌞

இந்த பாடலை ஆடியோவாகவும் கேட்டு பாருங்க😍👇
 

பிரிய நிலா

Well-known member
Member
உண்மை தான் சிஸ்...
பாரதியின் அனைத்து கவிதைகளும் அவரின்பால் நம்மை இழுத்து விடும்..
நிறைய தடவை இதை கேட்டிருக்கிறேன் ஒலி வடிவில்..
 

Nithya Mariappan

✍️
Writer
உண்மை தான் சிஸ்...
பாரதியின் அனைத்து கவிதைகளும் அவரின்பால் நம்மை இழுத்து விடும்..
நிறைய தடவை இதை கேட்டிருக்கிறேன் ஒலி வடிவில்..
இந்தப் பாட்டு மேக்சிமம் எல்லாருக்கும் பரிச்சயமாயிருக்கும்... கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்ல வரும்😍 ஹரிஹரன் வாய்ஸ்ல கேக்குறப்போவே மெல்ட் ஆயிடுவோம்
 

பிரிய நிலா

Well-known member
Member
இந்தப் பாட்டு மேக்சிமம் எல்லாருக்கும் பரிச்சயமாயிருக்கும்... கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்ல வரும்😍 ஹரிஹரன் வாய்ஸ்ல கேக்குறப்போவே மெல்ட் ஆயிடுவோம்
ரொம்ப ரசிச்சு சொல்றீங்க சிஸ்.. சேம் பீல்....
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom