• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாரதியார் பாடல் - 2🎵🎶🎵 சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா👶

Nithya Mariappan

✍️
Writer
பாரதி கண்ணனை கண்ணம்மாவா பாவித்து எழுதுன கவிகள் நம்ம எல்லாருக்குமே தெரியும். அதுல 'சின்னஞ்சிறு கிளியே' பாடலை வாசிக்கிறப்ப கண்ணனை குழந்தையாவும் தன்னை அதோட தாயாவும் நினைச்சுப் பாடிருப்பாரோனு தோணும்😊 ஒரு குழந்தையோட ஸ்பரிசத்தை அனுபவிக்குற அழகான உணர்வை இந்தப் பாடல் வரிகளை படிக்கிறப்ப ஃபீல் பண்ணலாம்🤗

பாடல் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
எழுதியவர் : பாரதியார்


சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !

ஓடி வருகையிலே - கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !

கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !

உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?

சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,

இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?

இதை ஆடியோ வடிவில் கேட்டு பாருங்கள்! Link👇

 

Nithya Mariappan

✍️
Writer
உண்மை தான் சிஸ்... பாரதியின் வரிகளை வெறுப்பவர் யாரேனும் உண்டோ இந்த பாரினில்.
எல்லா வித உணர்வுகளையும் வரிகள் வடிக்க தெரிஞ்சவர்😍
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom