பாரதியார் பாடல்-1🎵🎶🎵 பாயுமொளி நீ எனக்கு💫 | Ezhilanbu Novels/Nandhavanam

பாரதியார் பாடல்-1🎵🎶🎵 பாயுமொளி நீ எனக்கு💫

Nithya Mariappan

✍️
Writer
முண்டாசு கவிஞனை பிடிக்காதவங்கனு யாருமே இருக்க மாட்டோம்😍 இயற்கை, தமிழ், கண்ணன் இப்பிடி அவரோட பாடுபொருளோட லிஸ்ட் ரொம்ப பெருசு😊... இங்க என் மனசுக்குப் பிடிச்ச பாரதி பாடல்களை ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்🤗

பாடல் : பாயுமொளி நீ எனக்கு
வரிகள் : பாரதியார்


பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!

💗💗💗
இந்தப் பாடலை ஆடியோவாகவும் கேக்கலாம் மக்களே🤗 It will soothe ur soul💞

 
Last edited:

மீ.ரா

✍️
Writer
You are the apple of my eye. english la oru sentence irukum. you are my love apdingaradhu oru mean pannum. namma barathi alaga kannin mani pondravale apdinu padirupaaru. intha audio la irukra voice apdiye mei maraka vaikum.
 

Baby

Active member
Member
எத்தனை தடவை படிச்சாலும் என் மனசில பதியாது...ஆனா படிக்கும்போது மட்டும் இதுக்கடுத்து இதுனு நியாபகம் வரும்..
 

Nithya Mariappan

✍️
Writer
You are the apple of my eye. english la oru sentence irukum. you are my love apdingaradhu oru mean pannum. namma barathi alaga kannin mani pondravale apdinu padirupaaru. intha audio la irukra voice apdiye mei maraka vaikum.
பாரதியின் ரசனையும் வரிகளும் வேற லெவல்😍 இன்னும் நூறு வருசம் கழிச்சு இதே பாட்டை நம்ம படிச்சாலும் ஃப்ரெஷ்சா ஃபீல் பண்ணுவோம்🤗 Thats bharathi's magic💕
 

Nithya Mariappan

✍️
Writer
எத்தனை தடவை படிச்சாலும் என் மனசில பதியாது...ஆனா படிக்கும்போது மட்டும் இதுக்கடுத்து இதுனு நியாபகம் வரும்..
எனக்கும் மனப்பாடம் கிடையாது சிஸ்... ஆனா வாசிக்கிறப்ப அடுத்தடுத்த வரிகள் ஆட்டோமேடிக்கா வந்துடும்😊😊😊
 
எனக்கும் மனப்பாடம் கிடையாது சிஸ்... ஆனா வாசிக்கிறப்ப அடுத்தடுத்த வரிகள் ஆட்டோமேடிக்கா வந்துடும்😊😊😊
எனக்கும் அதே தான் சிஸ்..

வீணையடி நீயெனக்கு
மேவு விரல் நானுக்கு...

ரொம்பவே பிடித்த வரிகள் இது...
 

Nithya Mariappan

✍️
Writer
எனக்கும் அதே தான் சிஸ்..

வீணையடி நீயெனக்கு
மேவு விரல் நானுக்கு...

ரொம்பவே பிடித்த வரிகள் இது...
யெஸ்... அந்த வரில என்னமோ இருக்கு🙈
 

Nithya Mariappan

✍️
Writer
nalaike audio play panni ketruvom nan ippothan ippadi oru patta kelvi paduren akka. seceret namakulle irukatum akka:oops::oops:
இது ரொம்ப ஃபேமஸ் சாங்டா... இந்த பாட்டு வரிகளை வச்சு நிறைய ரைட்டர்ஸ் டைட்டில் வச்சிருக்காங்க... சாதாரணமா படிக்கிறப்பவே அழகு... இந்தப் பாட்டை கேட்டு பாரு... ரொம்ப அருமையா இருக்கும்
 

Santirathevan_Kadhali

✍️
Writer
இது ரொம்ப ஃபேமஸ் சாங்டா... இந்த பாட்டு வரிகளை வச்சு நிறைய ரைட்டர்ஸ் டைட்டில் வச்சிருக்காங்க... சாதாரணமா படிக்கிறப்பவே அழகு... இந்தப் பாட்டை கேட்டு பாரு... ரொம்ப அருமையா இருக்கும்
ok akka kekuran
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom