• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாடல் வரிகள்

Ezhil

Moderator
எனக்குப் பிடித்த பாடல் வரிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே!

நீங்களும் உங்களுக்குப் பிடித்த பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
 

Ezhil

Moderator
படம் :- தூங்காதே தம்பி தூங்காதே

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்

கண்ணாரக் கண்டான் உன்சேயே

(நானாக)

கீழ் வானிலே ஒளி வந்தது

கூட்டை விட்டு கிளி வந்தது

நான் பார்க்கும் ஆகாயம்

எங்கும் நீ பாடும் பூபாளம்

வாடும் பயிர்வாழ

நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

(நானாக)

மணி மாளிகை மாடங்களும்

மலர் தூவிய மஞ்சங்களும்

தாய் வீடு போலில்லை

அங்கு தாலாட்ட ஆளில்லை

கோயில் தொழும் தெய்வம்

நீயின்றி நான் காண வேறில்லை

(நானாக)
 

Ezhil

Moderator
படம் :- தளபதி

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ

நம் சொந்தங்கள் யாராரோ

உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

தாயழுதாளே நீ வர

நீ அழுதாயே தாய் வர

தேய்பிறை காணும் வெண்ணிலா

தேய்வது உண்டோ என் நிலா

உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட

மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட

விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
 

Ezhil

Moderator
படம் :- வேலையில்லா பட்டதாரி

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
தேடி பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணா மூச்சி ஏன்? வா நீ வெளில

தாயே உயிர் பிரிந்தாயே
தனியே தவிக்க விட்டாயே.
நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேண்டும்.
நான் பாடும் பாட்டுக்கு
தாயே உன் கண்கள்
நீ திறந்தாலே போதும்.

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என் மேல்
உன்னக்கென்ன கோவம்.
கண்ணனை கன்னே
என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊதவேண்டும் .

ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம்
என்றோ நான் செய்த பாவம்.

பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கும் துணை இன்றி இருளானதே.
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே.

நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு.
வானெங்கும் வண்ணம், பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு.

நீ என் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை.
ஊரும் பெரிதில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே.

காலம் கரைந்தோடும்
உன் வாழ்வில் கரை சேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை.

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்காரு அம்மா
எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்.

தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என்னுயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேண்டும்.

நான் பாடும் தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றேண்டும் கேட்க்கும்.
 

Ezhil

Moderator
படம் :- வைதேகி காத்திருந்தாள்


காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதடி
பூத்திருந்தது பூத்திருந்தது
பூவிழி நோகுதடி

நேத்து வர சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதியாகுமடி

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதடி
பூத்திருந்தது பூத்திருந்தது
பூவிழி நோகுதடி

முக்குளிச்சி நானெடுத்த
முத்து சிற்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள
பத்திரமா வெச்சேனே

வசதிப்போ காணாம
நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம
ராகம் பாடுறேன்

நான் படிக்கும் மோகனமே
நான் படைச்ச சீதனமே
தன் வடிச்ச பாத்திரமே
தென்மதுரை பூச்சரமே

கண்டது என்னாச்சு
கண்ணீரில் நின்னாச்சு

காத்திருந்து...

நீறு நிலம் நாலு பக்கம்
நான் திரும்பி பார்த்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம்
அத்தனையும் நீயாகும்

நெஞ்சுக்குள்ள நீங்காம
நீதான் வாழுற
நாடியில சூடேத்தி
நீதான் வாட்டுற

மாலையிட்ட செங்கரும்பு
ஆட்டுகிற எம்மனச
யாரை விட்டு தூதுச்சொல்லி
நானறிவேன் உன் மனச

உள்ளமும் புன்னாச்சு
காரணம் கண்ணாச்சு

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதடி
பூத்திருந்தது பூத்திருந்தது
பூவிழி நோகுதடி

நேத்து வர சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதியாகுமடி

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதடி
பூத்திருந்தது பூத்திருந்தது
பூவிழி நோகுதடி
 

Ezhil

Moderator
படம் :- அவதாரம்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணம் அம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறும் அம்மா

உண்மையம்மா உள்ளதை நானும்
சொன்னேன் பொன்னம்மா
சின்ன கண்னே..
தென்றல் வந்து.

யாவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது.
உறவும் இல்லாமலே
இரு மனம் ஏதோ பேசுது.

எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது.
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்காது

ஓடை நீரோடை
இந்த அழகம் அதுபோல
ஓடம் அது ஓடும்
இந்த காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நேரங்களே

தென்றல் வந்து
தீண்டும் போது ..

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆழம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போல
அழகெல்லாம் கோலம் போடுது.

குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா
கிளியே கிளி இனமே
அது கதையாய் பேசுதம்மா

கதையா விடுகதையா
ஆவதில்லையே அன்புதான்.

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணம் அம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறும் அம்மா

உண்மையிலே உள்ளது என்ன
என்ன வண்ணங்கள்
என்ன என்ன..

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனப்புல
 

பிரிய நிலா

Well-known member
Member
படம் : சொல்லத் துடிக்குது மனசு
பாடல் : பூவே செம்பூவே உன் வாசம் வரும்.....



பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்....

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே..

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாற கூடும்
நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காக தானே

நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே

மலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளை தானே

உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை

விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை

நான் செய்த பாவம் என்னோடு போகும்

நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்

இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom