• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பயணங்கள் - 9

Viswadevi

✍️
Writer
IMG-20210531-WA0058.jpg



பயணங்கள் - 9

நான்கு வருடங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வானதி வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து இருக்க..‌

அங்கு கோவிலின் உள்ளே செழியன் ரம்யாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். " ப்ளீஸ்… ரம்யா புரிஞ்சுக்கோ… நம்ம காதலிக்கிற விஷயம் உங்கள் வீட்டிற்கு தெரிந்து இருக்கிறது.அதனால் தான் உனக்கு இப்படி அவசரமா திருமண ஏற்பாடு செய்யுறாங்க. புரிஞ்சுக்கோடா." என…

ரம்யாவோ,"செழியன்… ட்ரை டூ அன்டர்ஸ்டான்ட் மீ.‌.. எங்கப்பா,அம்மா,அண்ணன் எல்லோரும் என் மேல நம்பிக்கை வச்சுருக்காங்க. அவங்களை என்னால ஏமாற்ற முடியாது.
எங்க அண்ணன் வெளிநாட்டுக்கு போகவில்லை என்றால் அவரிடம் கூறியிருப்பேன். அவர் ஏற்கனவே மனசொடிந்து போயிருக்கிறார். உங்களுக்குத் தான் தெரியுமே என் தோழி கீதாவை லவ் பண்ணி , எங்க அப்பா, அம்மாகிட்டே சொல்லி பர்மிஷன் எல்லாம் வாங்கி திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணும் போது அவ குடும்பத்தோட எங்கோ போயிட்டா...என் கிட்டக் கூட சொல்லாமல் போயிட்டா… என் அண்ணன் எப்படி மனசொடிஞ்சு போயிட்டான் தெரியுமா? நானும் அதே வலியை கொடுக்க மாட்டேன்." எனக் கூறி அவள் கண்கலங்க …

" அது தான் எனக்கு இப்போ சந்தேகமாகவே இருக்கு. உங்க அண்ணனும், கீதாவும் எப்படி லவ் பண்ணாங்க. அப்புறம் ஏன் கல்யாணம்னு முடிவான உடனே, ஏன் சொல்லாமல், கொள்ளாமல் போகணும். சரி உன் கிட்ட சொல்லலைன்னாலும் பரவாயில்லை. ஆனால் வானதிக்கிட்டக் கூட சொல்லாமல் போனாள். ஏதோ தப்பா தெரியுது." என.

" செழியா… எங்க அண்ணன் மேல சந்தேகப்படுறீயா?" என கோபமாக வினவ.

" ஏய் ரம்யா… எதுக்கு கோபப்படுற. மே பி. இப்போ கூட இந்த திருமணம் உங்கண்ணனோட ஏற்பாடாக இருக்கலாம்." என.

சற்று நேரம் யோசித்த ரம்யா, " சரி வா செழியா. இப்பவே போய் எங்க அப்பா, அம்மாவிடம் நம் காதலை சொல்லுவோம். அவங்க என்ன தான் சொல்றாங்கன்னு தெரிஞ்சுப்போம். " என…

அரைகுறையாகத் தலையசைத்தான் செழியன். அவனுக்கு இரண்டு நாட்களாகவே மனதெல்லாம் பிசைந்தது. அவனுக்கு எதுவும் ஆனால் பரவாயில்லை. ரம்யாவுக்கு எதுவும் என்றால் தாங்க முடியாது. அது தான் அவங்க அண்ணன் அங்கே இல்லையே. பெத்தவங்க எப்படியும் பொண்ணை விட்டுத் தர மாட்டாங்க என்று தப்புக்கணக்கு போட்டான்.

ரம்யாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு,வெளியே வந்தான்.

வானதி , " என்ன தான் ரெண்டு பேரும் இவ்வளவு நேரமா பேசுணீங்களோ. நான் மட்டும் இப்படித் தனியாக உட்கார்ந்து இருக்கிறேன்." எனத் திட்ட …

செழியனின் மனதை மாற்றுவதற்காக ரம்யா கேலியில் இறங்கினாள்.

" ஹோய் வானு… அண்ணிக் கிட்ட இப்படி மட்டு, மரியாதை இல்லாம பேசுவாங்களா. முதல்ல மரியாதையா அண்ணின்னு கூப்பிடு. "என …

" அடியே ரம்யா… எங்க அண்ணனை கல்யாணம் பண்ணாலும் நீ எனக்கு என் தோழி ரம்யா தான்… அது தான் முதல்ல… பிறகுதான் அண்ணி." என்றுக் கூற.

அதுவும் சரி தான் என்று சிரித்து பேசிக் கொண்டே வெளியே வந்தனர். செழியன் முகத்தில் மட்டும் யோசனையில் இருந்தது.

ரம்யா, வானதியிடம் "உங்க அண்ணன் என் வீட்டிற்கு இப்பொழுது வந்து என்னை பெண் கேட்கப் போகிறார். நீ வீட்டுக்குப் போ" என்றுக் கூற…

வானதியோ, " இல்ல… நானும் கூட வரேன்... எங்க அண்ணனை தனியாக எல்லாம் விட மாட்டேன்." என்றுக் கூறி அவளும் வந்தாள்.

கீதா இந்த ஊரை விட்டே செல்லவும், இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தனர்.

அடிக்கடி ஒருவர், மற்றவர் வீட்டிற்கு செல்ல...

வானதியின் அண்ணனை பார்க்கும் வாய்ப்பும் ரம்யாவிற்கு வந்தது.

இருவரும் பழகி, விரும்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த இரண்டு வருட காலத்தில் இவர்களின் காதலும் நன்கு வளர்ந்தது.

மூவரும் அடிக்கடி வெளி இடத்தில் சந்திக்க ஆரம்பித்தார்கள்.

இந்த விஷயம் ரம்யாவின் வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் ரம்யாவிற்கு அவசரமாக திருமண ஏற்பாடு செய்தனர். அதனால் தான் செழியன், கோவிலில் திருமணம் செய்துக்கலாம் எனக் கூறினான். ரம்யா தான் ஒத்துக் கொள்ளவில்லை. வீட்டில் வந்து பேச சொல்லி அழைத்துச் சென்றாள்.

இவர்கள் மூவரும் வீட்டிற்குள் செல்ல... அங்கு இருந்த வேலையாட்கள் அனைவரையும் ரம்யாவின் அப்பா வெளியே போகுமாறு கண் ஜாடைக் காட்ட…

அங்கிருந்தவர்கள் செய்த வேலையை அப்படியப்படியே போட்டு விட்டுச் சென்றனர்.

ரம்யாவோட அப்பா, அம்மா மற்றும் அவளுடைய பெரியப்பா மகன் மட்டும் அங்கு இருந்தனர்.

"ரம்யா… என்ன உன்னோட சிநேகிதப் பசங்க, கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்றதுக்காக வந்திருக்காங்களா. ஆமாம் நீ ஏன் வெளியே போன… கல்யாணத்துக்கு இன்னும் மூன்று நாள் தான இருக்கு." என அவளது தந்தை வினவ.

"அதுப்பா… " என்று ரம்யா தயங்க…

செழியன் முன்னே வந்து, "நாங்க இரண்டு பேரும் விரும்புகிறோம். அவளை நான் நல்லா பார்த்துக் கொள்வேன். அவளை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்." என்றுக் கேட்க…

அவரோ ஓங்கி ரம்யாவை அடித்தார்.

ரம்யாவோ, தன் அப்பாவுடைய இன்னொரு முகத்தைப் பார்த்து பேச்சிழந்து நின்றாள்.

" அடிக்காதிங்க பா." என்று வானதியும், " ப்ளீஸ் அடிக்காதீங்க ." என செழியனும் கத்த…

அவரோ, " திமிரெடுத்த நாயே… கண்டவனைக் கூட்டிட்டு வந்து என் முன்னேயே நிக்குற? உனக்கு எவ்வளவு தைரியம்?" என்று கர்ஜித்தவாறே மீண்டும்,மீண்டும் அடித்தார்.

ரம்யாவின் அண்ணனோ, " எல்லாம் நம்ம தம்பிக் கொடுத்த செல்லம் தான். பன்னென்டாவதோட நிறுத்தியிருந்தா, நமக்கு அடங்கி இருப்பா. எல்லாம் பெரிய படிப்பு படிக்கவச்சம்ல அதான் அடங்காம திரியுது." என்று அவரை ஏத்தி விட.

தன்னுடைய அண்ணன் மகன் பேச்சைக் கேட்டவர், " அப்படி என் பேச்சைக் கேட்காமல் உசுரோட இருந்துருவாளா, முதல்ல வீட்டை விட்டு வெளியே போற கால முதலில் உடைக்கணும்." என்றவாறே காலை ஓங்கி ஒரு மிதிமிதிக்க…

தள்ளிச் சென்று விழுந்த ரம்யா, தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த செழியனையும், வானதியையும் தான் பார்த்துக் கொணாடிருந்தாள்.

ரம்யாவை எட்டி உதைத்தவரின் காலைப் பிடித்துக் கொண்டு, " ப்ளீஸ் ரம்யாவை விட்டுடுங்க." என.

"தெருநாயே… என் காலைத் தொடுறதுக்கெல்லாம் உனக்கு தகுதியிருக்கா. ஒழுங்கா நீங்கள் இருவரும் இப்பொழுது வெளியே செல்லவில்லை என்றால் இவளை அடித்தே கொன்று விடுவோம்."எனக் கூற…

செழியனும், " நான் விடமாட்டேன். அவளை அழைச்சிட்டு தான் போவேன். ப்ளீஸ் எங்களை விட்டுங்க‌. நாங்கள் எங்கேயாவது போய் விடுகிறோம்." எனக் கதற…

அவரோ செழியனை உதைத்துத் தள்ளிவிட்டு, " நீ இங்க இருக்க இருக்க இவளுக்கு தான் அடி விழும்." என்றுக் கூறி அந்த ஜாதி வெறி பிடித்த மிருகம் பெற்ற பெண் என்றும் பாராமல் அடித்தார்…

" நீங்கள் இருவரும் ஊர் சுத்துவது தெரிஞ்சு தான் நான் அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால் என் கிட்டேயே வந்து பொண்ணுக் கேட்டுட்டு நிக்கிற.
நீ இப்போ போகவில்லை என்றால் இவளை அடித்தே கொன்று விடுவேன்." என்று மீண்டும் அடிக்க….

வானதி, "அண்ணா நாம இங்க இருந்தா ரம்யாவை கொன்னுடுவாங்க வாங்கண்ணா போகலாம்." என செழியனை எழுப்ப முயன்றாள்.

அவனோ, " நம்ம போனாலும் இவளை கொன்னுடுவாங்க. நான் இவளை விட்டுட்டு வர மாட்டேன்." என்று கதற…

அடி வாங்கி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தாள் ரம்யா . அவளது பார்வையோ, இங்கிருந்து போயிடுங்க என்று யாசிப்பது போல இருந்தது.

" அண்ணா… நம்ம இருந்தா தான் அவளுக்கு ஆபத்து. நம்ம போயிட்டா, அவங்க பொண்ண பாத்துப்பாங்கண்ணா." என்று வற்புறுத்தி அவனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்…

அந்த பெரிய மனிதரோ, " ஏய் பொண்ணு… இங்க மட்டும் இல்லை. இந்த ஊரை விட்டே ஒரு மணிநேரத்தில் கிளம்பவில்லைன்னா இவள் உயிர் இருக்காது. " எனக் கூறி சிரித்தார்…

வானதியோ, ' நீயெல்லாம் மனுஷஜென்மமா… கிடையாது மிருகஜாதி.' என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே தன் அண்ணனை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அவரோ அவளது பார்வையெல்லாம் கண்டுகொள்ளாமல், இரண்டு பேரை அவர்களை கண்காணிக்க அனுப்பி வைத்தார். '

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட வானதி கதறி அழுதாள். " என்னோட தப்பு தான். பெத்த பொண்ண பார்த்துப்பாங்க என்று என் தோழியை விட்டுவிட்டு வந்துவிட்டேன். போலிஸ்க்கு போவோம் என்று பார்த்தால் இரண்டு பேரை எங்களை கவனிக்க, எங்கக் கூடவே அனுப்பி வைத்தார்.

அதுவும் இல்லாமல் அவர் தான் ஊரில் பெரிய ஆள்‌. நாம் எது சொன்னாலும் எடுபடாது… ரம்யாவை பார்த்துப்பாங்கனு என்று நினைத்து தான் நான் அந்த ஊர விட்டு கிளம்பினேன்.
அண்ணனோ புத்தி பேதலித்துப் போயிட்டாரு சொன்னதையே திரும்ப திரும்பக் கூறிக் கொண்டே இருக்க…
ஒரு புறம் அம்மாவும் அப்பாவும் பயந்து போய் இருந்தார்கள். நான் ஒரு ஆளாக வீட்டை காலி செய்து, ஒரு வழியாக சென்னைக்கு வந்துட்டோம்.

இங்கே எங்களோட உறவினர் வீட்டிற்கு சென்றோம். அவங்க தான் உதவி செஞ்சாங்க.

அண்ணன், சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வது என்று புரியவே இல்லை.
பிறகு அண்ணனை ஆஸ்பத்திரியில் காண்பித்து, அங்கேயே சேர்த்துட்டோம். அண்ணனை அடிக்கடி போய் பார்க்கணும்னு இந்த வீட்டிற்கு குடி வந்து நானும் வேறு வேலை தேடிக் கொண்டேன்.

எப்படியும் ரம்யா அங்கு தான் இருப்பாள் என்று நம்பினேனே! கடவுளிடம் கூட அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டே இருப்பேன். நீங்க என்னவென்றால், அவள் எங்கே என்று கேட்கிறீர்களே." என அழ…

அவள் கூறியதை கேட்டு மற்றவர்களும் கலங்கிப் போய் இருக்க… கீதாவோ மயங்கி விழுந்து விட்டாள். மது அவளை தாங்கி… தண்ணீர் தெளித்து எழுப்பி அவளை அமர செய்துவிட்டு..‌ அடுத்து என்ன செய்வது என எல்லோரும் யோசிக்க…

நிரஞ்சனோ, ' அம்மா… அப்பாவா…' இப்படி என்று வருத்தப்பட்டுக் கொண்டே, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான்.

ராகவ் தான் சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டார்." நிரஞ்சன் உங்க அண்ணனைப் போய் பார்த்து என்ன நடந்தது என்று கேட்க வேண்டும்.தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். நீங்கள் என்ன சொல்லுறீங்க." என வினவ…

நிரஞ்சன் மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு, " ரம்யாவிற்கு நியாயம் செய்ய வேண்டும். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித் தருவேன்." என்றுக் கூறி விட்டு… மதுரைக்கு அடுத்த பிளைட் எப்போது என்று விசாரிக்க ஆரம்பித்தான்.

வானதி தானும் வருவதாக கூற... மதுவும், கீதாவும் கூட வருவதாக கிளம்பினார்கள்.

பயணங்கள் தொடரும் …..
 

Rajam

Well-known member
Member
ரம்யா எங்கே போனாள்.
அவளுக்கு ஒன்றும் ஆகலையே.
பெற்றவர்களா அவர்கள்.
இப்படி அடிச்சாங்களே.
 

Viswadevi

✍️
Writer
ரம்யா எங்கே போனாள்.
அவளுக்கு ஒன்றும் ஆகலையே.
பெற்றவர்களா அவர்கள்.
இப்படி அடிச்சாங்களே.
Thank you so much sis ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom