பயணங்கள் - 6 | Ezhilanbu Novels/Nandhavanam

பயணங்கள் - 6

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.
பயணங்கள் - 6

கீதா கீழே அமரவும், பதறிய நிரஞ்சன், அவளை சேரில் அமர செய்து, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து, " குடி." என்றான்.

அவள் அதை வாங்காமல் நிரஞ்சனை நிமிர்ந்து பார்த்து, " நிச்சயமா ரம்யாவை, வானதியை ஒன்னும் செய்யலை தானே?." என கேட்க…

அவள் கேட்ட கேள்வி புரியாமல் குழம்பிப் போய், "நான் என்ன பண்ணப் போறேன் அவங்களை… முதலில் அவங்க எங்க இருக்கிறாங்க என்றுக் கூட எனக்கு தெரியாது. நான் வெளிநாட்டில் இருந்து வரும் போது அவர்கள் மதுரையில் இல்லை. தேடி போகிறேன் என்ற போது அம்மாவும், அப்பாவும் தடுத்து விட்டார்கள். அதற்குப் பிறகு நான் இங்கு வந்துவிட்டேன். சென்னையில் பிஸினஸ் ஆரம்பித்தேன். எனக்கு ஊருக்கு போகவே பிடிக்காது.அதனால் எனக்கு வேற எந்த தகவலும் தெரியாது‌." என்று எரிச்சலுடன் கூறியவன், மனதிற்குள்ளோ, ' என்னைப் பார்த்தா இவளுக்கு எப்படி தெரியுது.' என பொருமிக் கொண்டிருந்தான்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட கீதா, "
தேங்க்ஸ் பார் த இன்ஃபர்மேஷன்." என்று கூறிவிட்டு ரூமை விட்டு வெளியேறினாள். வெளியேறியவள், மீண்டும் திரும்பி வந்து, " ஒன் மோர் திங்க்... ரம்யாவைப் பற்றி எனக்கு நல்லா தெரியும் . ரம்யாவோட எந்த தவறையும் சேர்த்து என்னால் பார்க்க எப்பொழுதுமே முடியாது. அது அவ கூட பழகிய பழக்கத்தில் எனக்கே தெரியும்.
கூட பிறந்த உங்களுக்கு தெரியாதா? அவளைப் பற்றி… இத்தனை வருடங்களாக எங்க? எப்படி இருக்கா? என்றுக் கூட விசாரிக்காமல்‍, விட்டது தொல்லை என்று இருக்கிறீங்க..
அதான் எப்பவும் உங்களுக்கு பழக்கம் என்று எனக்கே தெரியுமே, எனக்கு இன்னைக்கு லீவ் வேண்டும் என்று விட்டு வெளியே சென்று விட்டாள்.

நிரஞ்சனோ,அவளது பேச்சில் அதிர்ந்து நின்றான். 'அவள் சொல்லுவதும் சரி தானோ, ' என்று நினைத்தவனின்
மனமோ பின்னோக்கி சென்றது.

முதன் முதலாக கீதாஞ்சலியிடம் காதல் சொன்ன தருணத்தை நினைத்துப் பார்த்தான்.

' மதுரையில் அந்த இன்ஜினியரிங் காலேஜ் களை கட்டியது. அன்று தான் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ்க்கு காலேஜ் ஆரம்பம்.

பொதுவாக ராக்கிங் எல்லாம் கிடையாது. ஆனால் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் அங்க, அங்க உட்கார்ந்து கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டும், கலாட்டா பண்ணிக் கொண்டும் இருப்பார்கள்.

நிரஞ்சன் மற்றும் அவனது நண்பர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது தான், கீதா மருண்ட விழிகளுடன் உள்ளே நுழைந்தாள்.

அவளைப் பார்த்தவுடன், " ஏய் ப்ளூ சுடி… இங்க வா. " என அசோக் அழைத்தான். பயத்துடன் வந்த கீதா, அருகில் அமர்ந்து இருந்த நிரஞ்சனைப் பார்த்து சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவளின் உயிர் தோழியின் அண்ணண் என்று தெரியும்.

மனதிற்குள்ளே, ' ரம்யாவையும், வானதியையும் திட்டிக் கொண்டே வந்தாள். டைம் சொல்லி ஒரே நேரத்திற்கு காலேஜிக்கு வாங்கடி என்று பிளான் பண்ணா, ரெண்டு பேரையும் காணோம். இருக்கட்டும் இரண்டு பேரோடையும், கொஞ்ச நேரம் பேசக் கூடாது.' என முடிவெடுத்துக் கொண்டு, அவர்கள் அருகே சென்றாள்.

அசோக் அருகே சென்று," என்னணா.. " என பயந்துக் கொண்டே கீதா வினவ.

" ஓய்… என்ன எங்கக் கிட்டேயே லந்தா… ஒழுங்கா சீனியர் என்றுக் கூப்பிடு." எனக் கூற..

" சரி." என தலையசைத்தாள்.

அசோக்கின் அருகே அமர்ந்து இருந்த மற்றொரு நண்பன், கீதாவைப் பார்த்து, " பரவால்ல. என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுற… நல்ல பொண்ணா இருக்க… அதனால் உன்னை ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் செய்ய சொல்லவில்லை. சின்ன விஷயம் தான் உனக்கு… எங்கள்ள ஸ்மார்ட்டா இருக்கிற, ஒருவருக்கு ஐ லவ் யூ என்று சொல்லி விட்டு நீ போய்ட்டே இருக்கலாம்." எனக் கூற…

" ஐயோ! " என நெஞ்சில் கை வைத்தவள், " சொல்ல மாட்டேன்." என கண்கள் கலங்க தலையசைத்தாள்.

"டேய் யாரு ஸ்மார்ட் என்று சொல்லமாட்டாங்க போல…" என்று ஒருத்தன் கிண்டல் செய்ய…

இன்னொருவனோ, "சரி உன் ட்ரஸ் கலர்ல வந்திருக்க, எங்க தலைக்கு வேணா சொல்லு. " என்று அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த நிரஞ்சனை நோக்கி கையை நீட்ட…

பாவமாக, அவனைப் பார்த்த கீதாவின் பார்வையில், " டேய் விடுங்கடா… டைம் ஆச்சு கிளாஸ்க்கு போகட்டும்‌." என..‌.

அசோக், நிரஞ்சனைப் பார்த்து, "இருங்க பாஸ்... என்ன அவசரம்… எவ்வளவு நேரம் ஆனாலும் சொல்லிட்டு கிளாஸ்க்கு போகட்டும்." என்றுக் கூற…

கீதாவோ, கண்கள் கலங்க அழுகையை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.

" கீதா இங்க பாரு. சும்மா ஜாலிக்கு தான் சொல்லிட்டு போ." என நிரஞ்சன் கூற…

கீதாவோ, அவனை முறைத்துக் கொண்டே, "என்னால் சொல்ல முடியாது. உண்மையான நேசத்தின் வெளிப்பாடாகக் கூறும் வார்த்தையை, உங்க விளையாட்டுக்காக எல்லாம் என்னால் கூற முடியாது‌." என கோபமாகக் கூறினாள்.

" ஓ ." என எல்லோரும் கத்தியவாறே நிரஞ்சனைப் பார்த்து, " அப்போ நம்ம தலைக்கு தெரிஞ்சவங்களா. சரி ரைட்டு. அப்போ நம்ம தலைப் போய் ஐ லவ் யூ என்று சொல்லட்டும்." என்றார்கள் ‌

எல்லோருக்கும் நன்குத் தெரியும். நிரஞ்சன் சொல்ல மாட்டான் என்று தெரிந்துக் கொண்டே, வேண்டும் என்று வம்பு வளர்க்க…

நிரஞ்சனோ, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அவள் கண்களை பாத்துக் கொண்டே, " ஐ லவ் யூ." எனக் கூற.

கீதாவோ அதிர்ச்சியில் மயங்கி விட்டாள்.

அதே நேரத்தில் காலேஜிற்கு வந்த ரம்யா, அண்ணன் பதற்றத்துடன் இருப்பதை, பார்த்து அவர்களை நோக்கி செல்ல….

அங்கோ கீதா, மயக்கத்தில் இருப்பதைப் பார்த்து தன் மடி தாங்கினாள்.

அண்ணனிடம், " என்னாச்சுண்ணா?" என வினவ.

நிரஞ்சன தயக்கத்துடன் நடந்ததைக் கூற… ரம்யா, அவளது அண்ணனையும், அவனின் நண்பர்களையும் கடிந்துக் கொண்டாள் .

பிறகும் நிரஞ்சனை சந்தேகமாகவே பார்த்து, " நீ இப்படி எல்லாம் செய்பவன் இல்லையே சொல்லு... நீ என்ன இவள லவ் பண்றியா " எனக் கேட்க...

" ஆமாம்." என தலையசைத்தான் நிரஞ்சன்.

பிறகு அவனிடம் அதற்கும் ஒரு லெக்சர் அடித்தாள்."படிக்கும் வயதில் காதலிப்பது தவறு முதல்ல நீ, ஸ்டெடி ஆயிட்டு வா.. அப்புறமா அவக் கிட்ட உன் காதலை சொல்லு. " என்று கண்டிப்புடன் கூறி விட்டு, மயக்கத்தில் இருந்த கீதாவை தண்ணீர் தெளித்து எழுப்பி அழைத்துச் சென்று விட்டாள்.'

அதை நினைத்துப் பார்த்த நிரஞ்சன் முகத்தில் எப்போதும் போல இப்போதும் புன்னகை வந்தது.

அதற்கப்புறம் அவளிடம் நன்கு பழகி, இரண்டு வருடம் கழித்து காதல் செல்லும் போது, " மயக்கம் போட்டு விடாதே கீது." என்று கிண்டல் செய்து கொண்டே தான் காதலை சொன்னான்.

அவளோ, நாண புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள்.

பெருமூச்சு விட்டுக் கொண்டே, தலையை குலுக்கியவன் நிகழ்காலத்திற்கு வந்தான். ' இப்பொழுது யோசித்துப் பார்த்தால் ரம்யா, பொறுப்பில்லாமல் இருக்க மாட்டாள். நமக்கே அந்த சின்ன வயதில், அட்வைஸ் செய்து பொறுப்புடன் இருந்தவளா, வீட்டுக்கு தெரியாமல் ஓடிப் போயிருப்பாள் இருக்காது‌‌. ரம்யாவிற்கு நான் அநியாயம் செய்து விட்டேன்… ' என மனதிற்குள் தங்கைக்காக வருத்தப்பட்டவன், முதலில் ரம்யாவை தேட வேண்டும் என நினைத்துக் கொண்டவன், சற்று நேரம் யோசித்தான்.

அவனுடைய நண்பன் அசோக்கின் அண்ணன்,சைபர் கிரைமில் வேலை செய்கிறார். அவரிடம் உதவி கேட்போம் , என்று முடிவு எடுத்துக் கொண்டு செயல்படுத்த தொடங்கினான்.

அவனுக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் அவரிடம் சொல்ல… " ஓகே நிரஞ்சன். நான் சீக்கிரம் விசாரித்து சொல்றேன்… நீ கவலைப்படாதே." என்றுக் கூறி விட்டு ஃபோனை வைத்தார் அந்த காவல் அதிகாரி.

அதன் பிறகு தான் நிரஞ்சனுக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது‌. கண் முன்னே இருக்கும் அலுவலக வேலை, அவனை அழைக்க, அதில் கவனத்தைச் செலுத்தினான்

*****************

வெளியே சென்ற கீதாவோ, அங்கு ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த பியூனைக் கூட கவனிக்காமல், தன்னுடைய ஹேண்ட்பேகை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டே நடந்தவளுக்கு தங்கையின் ஞாபகம் வந்தது.

ஃபோனை எடுத்து தங்கைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே, அவளது அலுவலகத்தை நோக்கிச் சென்றாள்.

அக்காவின் அழைப்பில் பதறிய மது, " அக்கா… என்னாச்சு… ஏதாவது ப்ராப்ளமா? நான் வரட்டா ஆஃபிஸ்க்கு…" என்று படபடவென வினவ.

" அதெல்லாம் ஒன்னும் இல்லை மது. உன் கிட்ட பேசணும். நான் இன்னைக்கு லீவ் போட்டுட்டேன்.உன் ஆஃபிஸ்க்கு தான் வந்துட்டுருக்கேன்.

" ஓகே கா… நானும் லீவ் சொல்லிட்டு வரேன்." என்றவள், அவளது டீம் லீடருக்கு மெயில் அனுப்பி விட்டு, கிளம்பி விட்டாள். இன்னும் அவ்வளவாக ஆட்கள் வரவில்லை. 'அக்கா அவசியமில்லாமல் தொந்தரவு செய்ய மாட்டாள். ஏதோ பெரிய பிரச்சினை போல.'என்று நினைத்தவள் வெளியே வந்து காத்திருக்கலானாள்.

சற்று நேரத்தில் வந்த கீதா, "'எங்கேயாவது போகலாமா?" என.

மது அருகிலிருந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்தவள், இருவருக்கும் காஃபி ஆர்டர் செய்தாள்.
" இப்போ சொல்லுக்கா… என்ன ப்ராப்ளம்?"

ரம்யாவைப் பற்றிய அனைத்தையும் கூறியவள், " ரம்யா ஓடிப் போயிருக்க மாட்டாள். எனக்கு நிரஞ்சன் அம்மா, அப்பா மேல் நம்பிக்கை இல்லை. ரம்யாக்கு என்னாச்சோ என்று மனசு பதறுது… வானதி, அவங்க குடும்பத்துக்கு என்னாச்சு என்று தெரியலயே… " என்றுக் கூற.

"ஆமாம் கா. அவங்க மோசமானவங்க தானே. நம்ம குடும்பத்தையே எவ்வளவு படுத்துனாங்க… அப்பாவோட வேலையை போக வச்சு… அண்ணன,அடியாள வச்சு அடிச்சு… எப்படி மிரட்டுனாங்க"

" அது தான் மது… எதுக்கும் நான் மசியலை என்றவுடன், ரம்யாவை வைத்து ப்ளாக் மெயில் பண்ணாங்கத் தெரியுமா? ரம்யாட்ட என்னைக் கூட்டிட்டு வரச் சொல்லி, ரம்யாவுக்கு முன்னாடி பிரியமா பேசுற மாதிரி நடிச்சிட்டு, அவளை ஏதோ வேலையா, வெளியே அனுப்பி வச்சிட்டு, என்னை மிரட்டுனாங்கத் தெரியுமா?

ஜுஸ்ல விஷத்தை கலந்து வச்சிட்டு … நான் இந்த ஊர விட்டு போகவில்லை என்றால் அவளிடம் குடுத்துட்டு, நாங்களும் தற்கொலைப் பண்ணிப்போம் என்று சொன்னாங்க.

பெத்த பொண்ணு என்றுக் கூட பார்க்கவில்லை… ஐயோ! இன்னைக்கு நினைச்சாலும் நரக வேதனை… அவங்க எல்லாம் ஜாதிவெறி பிடித்த மிருகங்கள்… நிரஞ்சனிடம் சம்மதம் சொல்லி விட்டு, நிரஞ்சன் ஊருல இல்லாத சமயம், என்னை என்ன பாடு படுத்தினார்கள்.

நான் வந்து கூறிய கதறலில் அப்பாவும், அண்ணாவும் சென்னைக்கு ஷிப்ட் ஆகலாம் என முடிவெடுத்து உடனே கிளம்பினோமே உனக்கும் ஞாபகம் இருக்கு தானே. அப்பவே அப்படி இருந்தவங்க, பொண்ணு லவ் பண்ணா ஒத்துப்பாங்களா?" என புலம்ப…

" அக்கா ரிலாக்ஸ்… இந்தா தண்ணி குடி… இப்போ அடுத்து என்ன பண்றது என்று யோசிப்போம்…
முதல்ல வானதி கா, எங்க என்று கண்டுபிடிப்போம். நீ வேற எந்த ஃப்ரெண்ட்ஸ்ஸோடையும் காண்டாக்ட்ல இல்லை. ஃபேஸ்புக்ல உனக்கு முதல்ல ஐடி கிரியேட் பணாணுவோம். உன்னோட டிடெயில்ஸ், நீ படிச்ச ஸ்கூல், காலேஜ் பத்தி சொல்லுவோம்… எப்படியும் உங்க மத்த ஃபிரண்ட்ஸ் டீடையில்ஸ் கிடைக்கும் … அதுக்கு பிறகு அவங்க கிட்ட விசாரிப்போம், " என்றாள் மது.

மது பேசியதைக் கேட்டு கொஞ்சம் நம்பிக்கை வர… ஏதாவது தோழியைப் பற்றிய தகவல் கிடைக்குமா என காத்திருக்கத் தொடங்கினாள்.


பயணங்கள் தொடரும்…
 

Attachments

  • IMG-20210531-WA0058.jpg
    IMG-20210531-WA0058.jpg
    76.4 KB · Views: 0

Rajam

Well-known member
Member
அடுத்த எபியில் கொஞ்சம் முனகதை சுருக்கமா போட்டுட்டு கதைய தொடர முடியுமா.
 
இதுதான் நடந்ததா... நிரஞ்சனுக்கு இன்னும் பெற்றோரை பற்றி தெரியவில்லையா...
ரம்யாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது..
கீதாவிற்கு ரம்யா பற்றி விவரம் கிடைக்குமா..
நிரஞ்சன் இவர்களைப் புரிந்து கொள்வானா..
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 

Viswadevi

✍️
Writer
இதுதான் நடந்ததா... நிரஞ்சனுக்கு இன்னும் பெற்றோரை பற்றி தெரியவில்லையா...
ரம்யாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது..
கீதாவிற்கு ரம்யா பற்றி விவரம் கிடைக்குமா..
நிரஞ்சன் இவர்களைப் புரிந்து கொள்வானா..
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
Thank you so much sis ❤️
 

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom