• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பயணங்கள் - 5

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.



பயணங்கள் - 5

தளர்ந்த நடையுடன் வெளியே வந்தவளை, அவளது அண்ணனின் அழைப்பு நிதர்சனத்திற்கு அழைத்து வர…

ஃபோனை எடுத்துக் காதிற்கு கொடுத்தவள், " இதோ ஃபைவ் மினிட்ஸ்ணா." என்று விட்டு, ரெஸ்ட் ரூமிற்கு சென்று முகத்தில் தண்ணீர் அடித்து, நன்கு முகத்தைக் கழுவி விட்டு வெளியே வந்தாள்.

அருண் டாக்ஸி பிடித்துக் கொண்டு வந்திருந்தான். தங்கையைப் பார்க்கவும், அவளருகே வந்தவன், "போகலாமா?" என புன்முறுவலுடன் வினவ.

அவளும் மலர்ச்சியுடன் சிரித்தாள்.

வீட்டிற்கு செல்ல வந்த நிரஞ்சன், கீதாஞ்சலியைப் பார்த்து வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
' சற்று முன்பு, பயத்துடன் அழுது வழிந்தது என்ன? இப்போ அதற்குள் மேக்கப் போட்டுக்கிட்டு, சிரிச்சிக்கிட்டே போறா.' என மனதிற்குள் அவளை வறுத்தெடுத்துக் கொண்டே, டிரைவர் கொண்டு வந்து நிறுத்திய காரில் ஏறி சென்றான்.

இதை எதுவும் கவனிக்காத கீதா, காரில் இருந்த நந்தினியிடம், " மது எங்கே அண்ணி? " என்று வினவியவாறே காரில் ஏறி சென்று விட்டாள்.

" நேரா, டி.வி.எஸ் ஷோரூம் வந்துடுறேன் என்று சொன்னா." என்ற நந்தினி, மாலை நேர டிராஃபிக்கை வேடிக்கைப் பார்த்தாள்.

" ஓ… " என்ற கீதாஞ்சலியும் கண்களை மூடிக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானாள். ஆனால் அவளால் ஒன்றுமே யோசிக்க முடியவில்லை.

அதற்குள் ஷோரூம் வந்து விட… எல்லோரும் இறங்கிச் சென்றனர்.

அருணும், நந்தினியும் வண்டியின் லேட்டஸ்ட் மாடல், மைலேஜ் என்று வண்டியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்க, இவள் கடனே என்று அவர்களுடன் அமர்ந்திருந்தாள்.

சற்று நேரத்தில் மதுவும் வந்து விட, இவளுக்கு பொழுது போனது. ஒரு வழியாக அவர்கள் இருவரும், நல்ல மாடலை தேர்ந்தெடுத்து விட்டு, இவளிடம் என்ன கலர் வேண்டும் என்று விசாரிக்க… " ஏன் அதையும் நீங்களே செலக்ட் பண்ண வேண்டியது தானே." என்று மது துடுக்காக வினவினாள்…

" ஷ்… சும்மா இரு மது." என்று அதட்டிய கீதா, அண்ணனிடம் திரும்பி, " எனக்கு இந்த ப்ளூ கலர் ஓகேண்ணா." என்றாள்.

ஒரு வழியாக ஷாப்பிங் முடித்து, டின்னரையும் முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.

வழக்கம் போல அக்காவின் அறைக்கு வந்த மது, " சொல்லுக்கா. என்ன பிரச்சினை? ஏன் டல்லா இருக்க."

" அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன். ஏன் கேட்குற?"

"ம்கூம். உன்னோட அதிகப்படி மேக்கப்பே சொல்லுது. சரி சீக்கிரம் வா மேட்டருக்கு. எனக்கு தூக்கம் வருது." என.

" அடிங்க… என்னைய கிண்டல் பண்றீயா. ஒழுங்கா ஓடிடு."

" அக்கா… சொல்லுக்கா என்ன பிரச்சினை? ஆஃபிஸ்ல ஏதும் பிரச்சனையா?…" என மீண்டும் வினவ.

" ஒன்னும் இல்லை மதுக்குட்டி. இது வேற ஒரு விஷயம். பட் எனக்கே சரியாத் தெரியலை. எங்க எம்டியை நாளைக்கு சீக்கிரம் போய் பார்க்கணும். நீ வர்றீயா?" என.

" சரிக்கா… " என்ற மது நிம்மதியாக அவளது அறைக்குச் சென்றாள்.

காலையில் நேரத்தோடு அலுவலகத்திற்கு சென்ற கீதா, நிரஞ்சனை சென்று சந்தித்தாள்‌. வித்தியாசமாகப் பார்த்த பியூனைக் கண்டுக் கொள்ளவில்லை.

கதவைத் தட்டிக் கொண்டு, உள்ளே நுழைந்தாள்,"ரஞ்சி." என ஆரம்பித்து விட்டு பிறகு, " சார்… உங்களிடம் ரம்யாவை பற்றி பேச வேண்டும்.ப்ளீஸ்… எனக்காக ஒரு ஐந்து நிமிடம் மட்டும் ஒதுக்குங்கள்." என கெஞ்சத் தொடங்கினாள்.

நிரஞ்சனோ, மனதிற்குள்ளே அவளை நினைத்து வருத்தப்பட்டான். ' காதலிக்கும் போது அவளை எப்படித் தாங்கினேன், என்று எங்கள் இருவருக்கும் தான் தெரியும்… அவள் மனதால் நினைத்தாலே உடனே நிறைவேற்றுவேன். இப்பொழுதோ… என்னிடமே கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இந்த நிலைமைக்கு இவள் தானே காரணம்.'என எண்ணியவன், முகம் இறுக… "சரி எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லு." என்றான்.

கீதா, நிரஞ்சனைப் பார்த்துக் கொண்டே, "எனக்கு ரம்யாவை பற்றி நல்லா தெரியும்… அவ ஓடி எல்லாம் போயிருக்க மாட்டாள்." எனக் கூற…

அவனோ, அவளை ஏளனமாகப் பார்த்து, " ஏன் நீ கேட்கவில்லை… கோவிலில் திருமணம் செய்துக் கொள்ளலாம். அப்புறமா வீட்ல சொல்லுவோம். என்றுக் கேட்ட தானே! உன் தோழியும் உன்னை மாதிரியே தானே இருப்பாள். திருட்டுத்தனமாக ஓடிப் போய் விட்டாள்.

அன்னைக்கு உனக்குரிய மரியாதையை பெற்றுத் தர வேண்டும் என்று, என் பெற்றோரிடம் நம்ம காதலைக் கூறி சம்மதம் வாங்கிட்டு வந்தால், நீ தான் குடும்பத்தோடு சேர்ந்து ஓடிப் போய் விட்ட… அது மட்டுமா… கல்யாணமும் பண்ணிக்கிட்டே . ரைட் நீ இப்போ மிசஸ். கீதாஞ்சலி குமார் தானே." எனக் கிண்டலாக வினவ.

கீதாவோ, " நம்ம விஷயம் பற்றி பேச வேண்டாம்… அது முடிந்த கதை. தொடர வேண்டாம். ரம்யாவைப் பற்றி மட்டும் பேசுவோம் என்று அழுகையை அடக்கிக் கொண்டு பேச…

நிரஞ்சனோ, அவளைப் பார்த்து, " எதுக்கு இப்ப அழற… பண்றதுலாம் ஏமாற்று வேலை. ஏதாவது சொல்லிட்டாப் போதும். கண்ணுல உடனே தண்ணி வந்துடும். சரி சொல்லு, இன்னும் என்ன தெரியனும் உன் தோழியைப் பற்றி. அதான் நீயே எல்லா தெரிஞ்சி வச்சிருக்கியே அப்புறம் என்ன. என் வாயால சொல்லணுமா? அதையும் செய்யுறேன். அவக் கிட்ட அனுமதி வாங்கி, திருமணத்திற்கு மாப்பிள்ளைப் பார்த்து, ஊரைக் கூட்டி கல்யாணம் ஏற்பாடு செய்தா… கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்ன, அவள் ஓடிப் போயிட்டா… ஊர் முன்பு என்னோட அம்மாவும், அப்பாவும் தான் அவமானப்பட்டாங்க போதுமா? " என நிரஞ்சன் கூற…

கண்களைத் துடைத்துக் கொண்டு, அவனைப் பார்த்தவள், மீண்டும் பேச்சை தொடர்ந்தாள், " ரம்யாவிடம், நீங்கள் நேரடியாக பேசி திருமணத்திற்கு சம்மதம் கேட்டீங்களா?" நிரஞ்சன் என வினவ…

நிரஞ்சனோ, அமைதியாக இருக்க… கீதா‌ மீண்டும் ஆரம்பித்தாள்,"அவள் காதலித்திருந்தால்,முதலில் உங்களிடம் தான் கூறியிருப்பாள்.சின்ன வயதில் இருந்து அவ வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கூட உங்களிடம் சொல்லாமல் இருந்தது கிடையாது தானே… என்னைப் பற்றிக் கூட அவள் சொல்லித் தானே உங்களுக்கு தெரியும்." எனக் கூறி விட்டு, பின் தலையில் தட்டிக் கொண்டு பேச்சை மாற்றினாள்.

" அப்போ உங்க கிட்ட அவள் எதுவும் சொல்லவில்லை என்றால் சந்தர்ப்பம் ஏதும் அமையவில்லை, என்றுதான் அர்த்தம் ஒழிய வேறு எதுவும் இருக்காது.
அவள், எப்பொழுதுமே எங்களிடம் சொல்லிக் கொண்டுதான் இருப்பாள் காதலித்தால்,வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்தோடு தான் திருமணம் செய்யணும், என்று பலமுறை கூறியிருக்கிறாள்‌. எனக்கு ரம்யாவை பற்றி நல்லா தெரியும் …
ஏதோ தப்பு நடந்திருக்கு, என் மனசுக்கு தோணுது.

நீங்க நல்லா யோசிச்சு சொல்லுங்க அவ கல்யாண நேரத்துல நீங்க பக்கத்துல இருந்தீங்களா? திருமணம் பொறுமையா திட்டமிட்டு ஏற்பாடு பண்ணதா? இல்ல திடீர்னு பண்ணுனதா?" என்று அவள் கேள்வி மேல் கேள்வி கேட்க…

நிரஞ்சன் யோசிக்க ஆரம்பித்தான். "நீ சொல்வதில் ஒரு விஷயம் உண்மை தான் …
நான் அப்பொழுது இங்கே இல்லை வெளிநாட்டிற்கு வேலை விஷயமாக போனேன்.

நான் வருவதற்குள் திருமணம் ஏற்பாடு நடந்தது. ஆனால் நான் எங்க அம்மாவிடம் , என்ன அவசரம் என்று கேட்டேன். "

அதற்கு அவங்க," பையன் வீட்டிலிருந்து வந்து கேட்கிறாங்க… ரொம்ப நல்ல குடும்பம்… ரம்யாவுக்கும் பையனை ரொம்ப புடிச்சி இருக்கு" என்று சொன்னாங்க...

" சரி கல்யாண வேலையெல்லாம் இருக்கும், நான் இந்தியா வந்துட்டு மறுபடியும் வெளிநாட்டுக்கு போறேன் என்று சொன்னேன்."
அப்பாவும், அம்மாவும் "நீ போன வேலைய முடிச்சிட்டு ஒருதா வாப்பா…
மத்த ஏற்பாடுகளை நாங்க பார்த்துக் கொள்கிறோம், இங்க தான் நம்ம சொந்த பந்தம் எல்லாரும் இருக்காங்களே." என்று சொன்னாங்க.

"சரி தான் என்று நானும் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் திரும்பி வந்தேன்.

பாரின்ல இருக்கும் போது ரம்யாவோட, பேச எனக்கு சந்தர்ப்பமே அமையவில்லை. நான் ஃபோன் போடும் போது, அவளோட போன் எங்கேஜ்டுவாகவே இருந்தது‌.

சரி தான் அம்மா, அப்பாவிடம் பேசும் போது ரம்யாவைப் பற்றி கேட்டாலும், அவர்கள் வெளியே சென்றிருக்கிறாள்.‌‌ தூங்கிறாள் என்று தான் சொன்னாங்க." என்று அவன் குழப்பமாகக் கூற…

" ஏதோ ஒன்னு தப்பா தெரியுதே. உங்களுக்கு எதுவும் தோணலையா.' கீதா வினவ.

குழப்பத்திலிருந்தவன், திடீரென்று நினைவு வந்தவனாக, " நான் வெளிநாட்டுக்கு செல்லும் போது… அண்ணா… நான் உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும். ஆனால் இப்போது அவசரத்தில் பேச முடியாது. நீங்கள் ஊருக்கு போயிட்டு வந்த பிறகு சொல்றேன் ணா." என்று சொன்னாள்.

"அதுக்கப்புறம் நான் அவளை பார்க்கவே இல்லை… நான் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அன்றைக்கு தான் அவள் ஓடிப் போய்விட்டாள்,என்று அம்மா தான் சொன்னாங்க.

நான் தேடிப் பார்க்கிறேன் என்று புறப்பட்ட போது… ரெண்டுபேரும் வேணாம் என்று சொல்லிட்டார்கள்." என.

கீதா கோபத்தோடு, " ஓடிட்டா என்று சொல்லாதீர்கள். எனக்கென்னவோ, உங்கள் அம்மா,அப்பாக்கு ஏதோ தெரிந்து இருக்கும், என்று தான் தோன்றுகிறது. சரி, அவள் யாரை காதலித்தாள் என்று உங்களுக்கு தெரியுமா? என கீதா,வினவ…

நிரஞ்சன், " வாட்!" என்று அதிர்ந்தான்!

" ரம்யா யாரை லவ் பண்ணா என்று உண்மையிலே உனக்கு தெரியாதா?" என சந்தேகமாகவே கேட்டான் நிரஞ்சன்.

"இல்லை…" என கீதா தலையசைக்க…

நிரஞ்சனோ, "உங்க கூடயே சுத்துவாளே, அவப் பேரு என்ன வானதியா? ஹான் அவளோட அண்ணனைத் தான் லவ் பண்ணியிருக்கா… குடும்பத்தோட எல்லோரும் ஓடி போயிட்டாங்க. யாருமே இப்ப மதுரையில் இல்லை.

அதிர்ச்சியில் சிலையென‌ நின்றிருந்த கீதாவின் முன்பு சொடக்கிட்டவன், "ஆமா உனக்கு தான் என்னையப் பிடிக்காமல், வேறறொருத்தனைப் புடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட ... சரி விடு. அது உன் விருப்பம். பட் நட்பு… அதற்குக் கூட உண்மையாக இல்லையா. ஃப்ரண்ட்ஸோட, எந்த பேச்சும் கிடையாதா?. என் தங்கையை பிடிக்கும் தானே… அப்புறம் உன்னோட உயிர் தோழி வானதி. அவளுடன் பேசுவதும் கிடையாதா? " என வினவ.

கீதாவோ, அவன் பேசப் பேச, அதிர்ச்சியில் அப்படியே கீழே அமர்ந்து விட்டாள். 'ஐயோ! வானதி. அவளுக்கும் எதுவும் பிரச்சனையா என்று தெரியலையே!' எனக் குழம்பி போய் தலையை பிடித்துக் கொண்டாள்.

கீழே தரையில் அமர்ந்தவளைப் பார்த்து பதறினான் .

தொடரும்...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom