• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பயணங்கள் - 4

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் போட்டாச்சு. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.

IMG-20210531-WA0058.jpg


பயணங்கள் - 4

" வாங்க கீதா..
இது தான் உங்க ப்ளேஸ்‌. டேக் யுவர் சீட்‌‌." என்றுக் கூறிய சுபத்ரா, கம்ப்யூட்டரை ஆன் செய்து வேலையை பற்றிக் கூறினாள்.

" கீதா இதை சால்வ் பண்ணுங்க… ஏதாவது டவுட் இருந்தா எப்ப வேணும்னாலும் கேளுங்க… ஆல் தி பெஸ்ட் ." என்றுக் கூறி தனது கட்டை விரலை காண்பித்து விட்டு சுபத்திரா தன் கேபினுக்குள் சென்று விட்டாள்‌.

கீதா எவ்வளவோ சமாளித்தும் ரம்யாவின் நினைவே வந்து, வந்து தொந்தரவு செய்தது…

' நிரஞ்சனின் பெற்றோர் இறந்ததைக் கூட அவள், பெரிதாக எண்ணவில்லை…

அதற்கு அவர்கள் தகுதியானவர்களும் கிடையாது... ஆனால் ரம்யா… அவள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து இருக்க மாட்டாள்…. அது சர்வ நிச்சயம்..

நிரஞ்சனிடம், கட்டாயம் ரம்யாவைப் பற்றி பேச வேண்டும். 'என முடிவெடுத்துக் கொண்டு வேலையில் கவனத்தை செலுத்த முயற்சித்தாள்.

நிரஞ்சனிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலே நடுக்கமாகத் தான் இருக்கிறது….

ஆனால் ரம்யாவிற்காக, பேசித் தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்து கொண்ட பிறகு தான் வேலையில் கவனம் செலுத்த முடிந்தது.

அதற்கு பிறகு இவளது கை விரல்கள் மட்டுமே அங்கு ஆட்சி செய்தது.

பிஸ்னஸ் லஞ்ச் மீட்டிங்கிற்கு செல்வதற்காக, வெளியே வந்த நிரஞ்சன்….. கீதாவின் கேபின் வரவும் பார்வையை செலுத்த…. அவளோ சாப்பிடக் கூட செல்லாமல் கம்ப்யூட்டரிலே கவனமாக இருப்பதைப் பார்த்து நின்றான். அவளது கை விரல்கள் நர்த்தனமாடும் அழகை ரசித்தவன், பிறகு அது தவறு என உணர்ந்து தலையை உலுக்கிக் கொண்டான்.

லஞ்ச் சாப்பிடுவதற்காக புறப்பட்ட சுபத்ரா, அங்கு நின்ற நிரஞ்சனைப் பார்த்து…. " சார் எனி ப்ராப்ளம்" என வினவ….

" நத்திங் சீரியஸ்… பட்… அந்தப் பொண்ணு நியு எம்பிளாயி தானே…" எனக் கீதாவைப் பார்த்துக் கொண்டே சுபத்ராவிடம் வினவ.

"ஆமாம் சார்…" எனக் கூறினாள் சுபத்ரா.

" ஓ… ஆனால் அவங்க ரொம்ப நேரமா கீ போர்ட தட்டிக் கிட்டே இருக்காங்களே! சாப்பிடக் கூட போகாமல் வேற இருக்காங்க…. அவங்க செய்யுற வொர்க் கரெக்ட் தானா என்று செக் பண்ணீங்களா?" என வேகமாக நடந்துக் கொண்டே கேட்க…

சுபத்ராவோ, அவன் வேக நடைக்கு ஈடுக் கொடுத்தப் படியே வந்தவள், அவனின் கேள்வியில் முதலில் அதிர்ந்தாள்‌பிறகு பயத்தில் வேர்வை சுரக்க… நாக்கு தந்தியடிக்க, " நோ சார். ஐ வில் செக் நவ்." என்றவள், மேலும் ஏதோ கூற முயற்சிக்க …

அவனோ, அவளைப் பார்த்து கண்டிப்புடன், " சுபத்ரா… உங்களிடம் இப்படி ஒரு இர்ரெஸ்பான்ஸ்பிலிட்டியை எதிர்பார்க்கவில்லை. முதலில் அவங்களை சாப்பிட சொல்லுங்க… நீங்களும் லஞ்ச் முடிச்சிட்டு, அவங்க செய்த வொர்க் கரெக்டா எனப் பாருங்கள்… இல்லை என்றால் கைட் பண்ணுங்க…" என்றவன், ஒரு தலையசைப்புடன் வெளியேச் சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு, 'அம்மாடி… நிரஞ்சன் சாரா? இவர்? ஒரு பொண்ணை, பற்றி கவனித்து கேட்கிறார்… சம்திங் ஈஸ் ராங்க்.' என தனக்குள் எண்ணிக் கொண்டவள், கீதாவின் கேபினுக்குள் நுழைந்தாள்.

" கீதா… சாப்பிட போகாமல் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க… லஞ்ச் ப்ரேக் விட்டாச்சே … சாப்பிட என்னோட வாங்க." என...

கீதாவோ, " இதோ வொர்க் இன்னும் ஃப்யூ மினிட்ஸ்ல முடிஞ்சிடும் மேம்…. அதற்குப் பிறகு நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன், யூ கேரி யான் மேம்." என்றுக் கூற..

" கீதா… டோன்ட் கால் மீ மேம். பெயர் சொல்லியேக் கூப்பிடலாம்." என்றவள், அருகில் இருந்த சேரை நகர்த்தி உட்கார்ந்தாள் சுபத்ரா.

" எங்க காட்டுங்க கீதா." என‌ப் பார்க்க ‌… ஆச்சரியப்பட்டுத்தான் போனாள் சுபத்ரா.
" வாவ் ! கிரேட் கீதா… நீங்க பயங்கர டேலன்ட் தான் ... ஆனால் இவ்வளவு நாள் வேலைக்கு போகாமல், உங்கள் திறமையை வீணாக்கி விட்டீர்கள். எனிவே இப்பவாது நல்ல முடிவு எடுத்து இருக்கிறீங்க. ஆல் தி பெஸ்ட் டூ கெட் ப்ரோமோஷன்… "

" தேங்க்ஸ் மேம்." என சொல்ல வந்தவள்… சுபத்ராவின் பொய்யான கோபப் பார்வையில், "ஒகே... ஒகே… நோ மேடம். ஐ அக்ஸெப்டட் அன்ட் தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்பிளிமெண்ட் சுபத்ரா… " என்றவள், கம்யூட்டரை ஷெட்டவுன் செய்து விட்டு, வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு, " இப்போ வாங்க சாப்பிடலாம்." என்று சுபத்ராவிடம் கூற‌…

புன்னகையுடன் கேண்டீனுக்கு அழைத்துச் சென்றாள் சுபத்ரா.

அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர்களின் மற்ற டீம்மேட்ஸிடம் இவளை அறிமுகம் செய்தாள்.

அப்புறமென்ன ஒவ்வொருக்கொருவர் அறிமுகமானப் பின்பு, கேலி, கலாட்டாவுக்கு குறைவேது. எல்லோரும் ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டு, கேலி செய்தவர்கள் கீதாவையும் அவர்கள் பேச்சில் இழுத்துக் கொண்டனர்…

அவளோ, ஒரு இரு வார்த்தைகள் பேசினாலும், வெகு நாட்களுக்குப் பிறகு முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

சுபத்ரா, கீதாவிடம் " நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க இப்படியே சிரித்துக் கொண்டே இரு" என்றாள்.

கீதாவோ அதற்கும் மெல்லிய புன்னகையை சிந்தினாள்.

" ஒகே கைஸ்… அப்புறம் பார்க்கலாம்." எனக் கூறிக் கொண்டு சுபத்ரா கிளம்ப….

கீதாவும் அவளோடு கிளம்பினாள்.

அதற்கு பிறகு கீதா, தன் வேலையில் கவனம் செலுத்தியவள், தன்னுடைய முதல் நாள் அச்சீவ்மெண்டை முடித்து இருந்தாள். இனி வீட்டிற்கு கிளம்ப வேண்டும். ஆனால் அவளுக்கு ரம்யாவைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிரஞ்சனிடம் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

நிரஞ்சன் இங்கு இல்லை. பிசினஸ் லஞ்சிற்காக வெளியே சென்றவன், இன்னும் வரவில்ல.ஆனால் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான் என்ற தகவல் அவளுக்கு கிடைத்தது. உபயம் பியூன். ஆனால் என்ன இவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சொன்னான். அவளுக்கு இதைப் பற்றிக் கவலையெல்லாம் இல்லை.

நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவராக வேலை முடிந்து கிளம்ப, கீதாவோ அவனுக்காக காத்திருந்தாள்.

வீட்டிற்கு கிளம்பிய சுபத்ரா," கீதா இன்னும் கிளம்பவில்லையா?" என ஆச்சரியமாக வினவ….

கீதாவோ, " அண்ணா வரேன் என்று கால் பண்ணாங்க. அவங்க வந்ததும் கிளம்பிடுவேன். இன்னைக்கு அவுட்டிங் ப்ளான் பண்ணிருக்கோம்."என்றாள்.

" என்ஜாய்." என்றுக் கூறி விட்டு சுபத்திராவும் கிளம்பி விட்டாள்.

சற்று நேரத்தில் அலுவலகத்திற்கு வந்த நிரஞ்சன், கீதா இன்னும் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்து புருவச் சுளிப்புடன் உள்ளே சென்றான்.

பியூனை அழைப்பதற்காக இன்டர்காமில் கை வைத்தவன், கதவு தட்டும் சத்தத்தில் யாராக இருக்கும் என்ற யோசனையுடன், " யெஸ் கமின்." என…

கீதா தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.

நிரஞ்சனோ இறுக்கமான முகத்துடன், " என்ன விஷயம் மிசஸ். கீதாஞ்சலி…. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், உங்கள் டீம் லீடர்க்கிட்ட கேட்கலாம்.. இல்லையென்றால் மேனேஜரிடம் கேட்கலாம், அல்லது என்னுடைய பி.ஏ விடம் தெரிவிக்கலாம்… என் வரைக்கும் வர வேண்டிய அவசியம் இல்லை." என எரிச்சலுடன் கூற.

கீதாவோ, அவனது பேச்சில் முகம் வாடி நின்றவள், மெல்ல சமாளித்துக் கொண்டு அச்சத்துடன் ஆரம்பித்தாள். " ஆஃபிஸ் விஷயம் இல்லை. பர்சனலா கொஞ்சம் பேசணும் ரஞ்சி." எனப் பழக்க தோஷத்தில் கூறி விட..

அவனோ, அவளை தீப்பார்வைப் பார்த்துக் கொண்டே, " நமக்குள் எந்தவொரு பர்சனலும் கிடையாது மிசஸ்.கீதாஞ்சலிக்குமார். ஐ டோண்ட் ரீமம்பர் யூ. நீ இங்கே ஒரு எம்பிளாயி. நான் உன் முதலாளி. தட்ஸ் இட்."என்றவன், நாற்காலியில் சுழற்றிக் கொண்டே அவளை அலட்சியமாகப் பார்த்தான்.

கீதாவிற்கோ அழுகை வர… கட்டுப் படுத்திக் கொண்டு… 'ரம்யாவிற்காகத் தான் எல்லாம்.' என்று மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டே, மீண்டும் முயற்சி எடுத்தாள்.

" சார்… ப்ளீஸ் கிவ் மீ ஏ ஃபைவ் மினிட்ஸ்." என…

" ஓகே ஐந்து நிமிடம் தான் உனக்கு டைம். சொல்ல வந்ததை சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணு." என்றுக் கூறி விட்டு எங்கோ பார்வையை செலுத்தினான்.

" நான்… அது…" என்று இழுத்தவள், பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, " உங்களிடம் ரம்யாவைப் பற்றி பேச வேண்டும்."என…

அவனோ ருத்ர மூர்த்தியாக மாறி, தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து, அவள் அருகே வந்தவன், " அவளைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்." என.

" ப்ளீஸ்… ரஞ்சி… அவ…" என்று ஆரம்பிக்க..‌.

"ஏய் ஒரு தடவை சொன்னா தெரியாது. அவளைப் பத்தி பேசாதே…" என்று வார்த்தையை கடித்து துப்பிக் கொண்டே அவளது கழுத்தை நெறித்தான்.

அவள் பயந்து நடுங்க. அவளது விழிகளில் தெரிந்த பயத்தில், அவன் சுதாரித்து அவளிடம் இருந்து துள்ளிக் குதித்து விலகினான்.

அவளோ இருமிக் கொண்டே பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

நிரஞ்சன் தான் செய்ய இருந்த மடத்தனத்தை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டிருந்தான்.
பிறகு கீதாவைப் பார்க்க, அவள் இன்னமும் திணறிக் கொண்டிருந்தாள்.

ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி அவளிடம் நீட்டினான்.

கீதா இன்னமும் பயந்துக் கொண்டே பார்க்க… " ப்ச்… சீக்கிரம் வாங்கிக் குடி." என அதட்டினார்.

அவனது அதட்டலில், அவன் கையிலிருந்த க்ளாஸை வேகமாக வாங்கி மடக் மடக்கென அருந்தினாள்.

அவனோ, அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்… முகமெல்லாம் பயத்தில் வெளிறி களையிழந்து, வாடிய கொடியாக நின்றாள். பிறகு தலையை உலுக்கிக் கொண்டு, 'இதுக்குத் தான் ஒதுங்கி போகப் பார்த்தால் விட மாட்டேங்கறா.' என நினைத்தான்.

தண்ணீர் அருந்தி முடித்ததும், க்ளாஸை நீட்டினாள் கீதா.

அதை வாங்கி டேபிளில் வைத்தவன், " இங்கே பார்… எனக்கு யாரும் கிடையாது… ரம்யா அது,இதுவென்று, எந்த பேச்சும் என்னிடம் வரக் கூடாது… அவ ஒரு செல்ஃபிஷ்… நீ ஒரு துரோகி… உங்களை மாதிரி ஆளுங்களால் தான், பெண் இனத்தையே அடியோடு வெறுக்கிறேன். அதெப்படி ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து பேசுற. அதுவும் ரஞ்சி, என்று கொஞ்சிக் கிட்டு வந்து பேசுறீயே வெக்கமாயில்லை. கெட்லாஸ்ட். ஐ டோண்ட் வாண்ட் டூ சீ யூ." என்று வார்த்தைகளால் அவளை வதைத்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்…

அவளோ, எப்படியாவது ரம்யாவை பற்றிய விவரத்தைக் கேட்க வேண்டும் என்று அவனையேப் பார்த்திருக்க, அதற்குள் அவளது செல்ஃபோன் அழைத்தது.

அந்த சத்தத்தில் கண் திறந்த நிரஞ்சன், இன்னும் போகவில்லையா என்பதைப் போல பார்க்க… தோல்வியுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள் கீதா.

தொடரும்...
 

பிரிய நிலா

Well-known member
Member
சஸ்பென்ஸ் ஆ இருக்கு சிஸ்.. கீதாவை நினைச்சா வருத்தமா இருக்கு. நிரஞ்சனும் பாவம் தான்..

ரம்யாவிற்காக தான் கீதா தனது காதலை விட்டுக் கொடுத்துட்டா. ஆனா ரம்யா நிரஞ்சனை கல்யாணம் பண்ணலயா. எதனால...

கீதா நிலை இன்னும் நிரஞ்சனுக்கு தெரியவில்லை. அதோடு அவள் ஏன் பிரிந்தாள் என்ற காரணமும்..
இரண்டும் தெரிந்தால்...?

நைஸ் சிஸ்.. வெயிட்டிங் பார் நெகஸ்ட் எபி..
 

Viswadevi

✍️
Writer
சஸ்பென்ஸ் ஆ இருக்கு சிஸ்.. கீதாவை நினைச்சா வருத்தமா இருக்கு. நிரஞ்சனும் பாவம் தான்..

ரம்யாவிற்காக தான் கீதா தனது காதலை விட்டுக் கொடுத்துட்டா. ஆனா ரம்யா நிரஞ்சனை கல்யாணம் பண்ணலயா. எதனால...

கீதா நிலை இன்னும் நிரஞ்சனுக்கு தெரியவில்லை. அதோடு அவள் ஏன் பிரிந்தாள் என்ற காரணமும்..
இரண்டும் தெரிந்தால்...?

நைஸ் சிஸ்.. வெயிட்டிங் பார் நெகஸ்ட் எபி..
Thank you so much sis ❤️. ரம்யா நிரஞ்சனின் தங்கை.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom