• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பயணங்கள் - 3

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.
IMG-20210531-WA0058.jpg


பயணங்கள் - 3

கீதாஞ்சலியின் கையில் வேலைக்கான அப்பாயிண்மென்ட் ஆர்டர் படபடத்தது. ஆனால் அதற்குரிய மகிழ்ச்சி இல்லை. ஏனோ மனது ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமாகவும், மறுபக்கம் சஞ்சலமாகவும் இருந்தது ….

அவள் யோசனையில் இருக்கும் போதே, கைப்பையில் இருந்த ஃபோன் அடித்தது….

யாரா இருக்கும் என்று யோசனையுடன் எடுத்து பார்த்தாள் கீதா. "அண்ணா காலிங்" என்று மினுமினுத்தது.

தன்னை சரி செய்துக் கொண்டு, வரவழைத்த உற்சாகத்துடன், "ஹலோ அண்ணா." என…

அருணோ " ஏன் டா வேலைக் கிடைக்கவில்லையா? குரல் டல்லா இருக்கு… " என்று விட்டு, " சரி டா நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கொள்ளலாம்" என ஆறுதலாகப் பேச...

" அதெல்லாம் ஒன்னும் இல்லைணா… வேலைக் கிடைச்சிடுச்சு.
நாளையிலிருந்து ஜாயின் பண்ணிக்க சொல்லியிருக்காங்க. இப்பதான் வந்து சொன்னாங்க…"

" சரிடா… வீட்டுக்கு கிளம்பிட்டியா? இல்லையென்றால் வெயிட் பண்ணு. எனக்கு வேலை முடிஞ்சிருச்சு. நானே வந்து, அழைச்சிட்டு போறேன்‌."

" ஓகே ணா… நான் வெயிட் பண்றேன்‌. " என்றவள் ரிசப்ஷனில் காத்திருந்தாள்.

ரிசப்ஷனிஸ்ட் ஸ்நேகத்துடன் பேச, கீதாவோ குழப்பமான மனநிலையில் இருந்ததால், மெல்லிய புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டிருந்தாள் .

அவளுக்கோ, ' ரம்யாவைப் பார்க்க வேண்டும். அப்போது தான் நிரஞ்சனைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.' என்று மனதிற்குள் துடித்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அருண் வந்து அழைக்க…

தன்னோடு பேசிக் கொண்டிருந்த ரிசப்ஷனிஸிடம், இருந்து விடைபெற்றுக் கொண்டு, தப்பித்தால் போதுமென்று வேகமாக வெளியே வந்தாள் கீதா.

அங்கே புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த அருணைப் பார்த்தவள், " அண்ணா…" என்று அழைத்தபடியே அருகே சென்றாள்…

அருணோ, " வாழ்த்துக்கள் டா…"என்று அவளை அணைத்து செல்லம் கொஞ்சினான். "சூப்பர் டா...எனக்கு தெரியும். உனக்கு வேலை கிடைக்கும் என்று…. இனி உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும்." என்றவன்,கையில் உள்ள ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பழங்களை அவள் கையில் கொடுத்தான்.

" எதுக்கு அண்ணா ? இவ்வளவு?" என.

" உனக்கு வேலை கிடைச்சிருல்ல… அதுக்காக உனக்கு புடிச்சதா அண்ணன் வாங்கிட்டு வந்தேன். வீட்ல போய் சாப்பிடலாம். சின்னக் குட்டி வேற வேலை கிடைச்சிருச்சு, ட்ரீட் எங்க என்று உன்னை கேட்கும் அதுக்காகத் தான்.
சரி வா நாம வீட்டுக்கு போகலாம். அண்ணி, சின்னக் குட்டி, கிட்டயும் சொல்லலாம். வாடா… வண்டியில் ஏறு."எனக் கூறி அழைத்துச் சென்றான்.

அண்ணனின் உற்சாகத்தைப் பார்த்து அவளும் மகிழ்வுடன் சென்றாள்.

இதை கடின முகத்துடன் நிரஞ்சன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

**********************
" நந்து… நந்து…" என உற்சாகமாக அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அருண்.

அவனது சத்தத்தைக் கேட்டு வெளியே வந்தவள், என்ன என்பது போல அருணைப் பார்க்க.

" கீதாவுக்கு வேலை கிடைத்துவிட்டது." என்றான்.

கீதாவைப் பார்த்து புன்னகைத்தாள் நந்தினி, " கங்கிராட்ஸ் அண்ணி.
எனக்கு தெரியும் உங்களுக்கு வேலை கிடைக்குமென்று… அதான் ஸ்வீட் செஞ்சிருக்கேன்… இருங்க… எடுத்துட்டு வரேன். " என்றவள், உள்ளே சென்று சிறிய கிண்ணத்தில் கேசரி எடுத்து வந்து,அவளுக்கு ஊட்டி விட்டாள்‌.

" தேங்க்ஸ் அண்ணி." என்றாள் கீதா.

மதுவும் வர வீடு ஒரே கோலாகலமாக இருந்தது.

ரொம்ப நாளைக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டது.

அருண் கீதாவிடம், "நாளைக்கு நீ, மதுவோடு ஆஃபிஸுக்கு போ….

ஈவினிங் நாம எல்லாரும் போய் உனக்கு வண்டி பார்ப்போம். அப்படியே ஹோட்டலுக்குப் போய் டின்னரை முடிச்சிட்டு வருவோம்." என…

கீதா, " சரி." என தலையாட்ட… மதுவோ, " ஐ ஜாலி…" என கத்தினாள்.

**********************
கீதா, காலையில் பரபரப்பாக ஆஃபீஸ் கிளம்ப…

மதுவோ, இன்னும் எழுந்திருக்கவே இல்லை.

கீதா எழுந்ததிலிருந்து, அவளது அறையிலிருந்து, மதுவின் அறைக்கு ரோடு போட்டுக் கொண்டிருந்தாள்.

மதுவோ அசைவதாக இல்லை.

மீண்டும், மீண்டும் விக்ரமாதித்யன் போல, மதுவிடம் சென்று, " மது… சீக்கிரம் டா… எனக்கு தாமதமா போனால் பிடிக்காது தெரியுமில்லையா…" என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல், " கா… ஃபைவ் மினிட்ஸ்…" என்று விட்டு மீண்டும் உறங்க….

"எந்த ஃபைவ் மினிட்ஸ் மது? சரி நீ பொறுமையாக கிளம்பு…. நான் ஆட்டோவிலே போறேன்." என்று கோபத்துடன் கூற…

படக்கென்று எழுந்த மது, " சாரிக்கா.. கோபப்படாதே கா... இதோ ஐந்து நிமிடத்தில் தயாராகி விடுவேன்." என்றவள், வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள்.

தங்கையின் செயலில் புன்னகை மலர்ந்தது. ' இருந்தாலும் இந்த சின்னக் குட்டியை நம்ப முடியாது. அண்ணி சொல்வது தான் சரி. முதலில் வண்டி வாங்கிடணும். தனியாக செல்வது தான் சரி வரும்.' என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

காலை உணவு முடியவும், கீதா தயாரா இருக்க… மது எப்போதும் போல, அப்போது தான் அவசரமாக அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

எப்படியாவது நேரத்திற்கு அலுவலகத்துக்குச் சென்று விட்டால் பரவாயில்லை என்று கீதா நினைக்க…..

அவளுக்கு அன்று சோதனை காலம் போல… ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டது.

மது வண்டியை நிறுத்தியவுடன், தாமதமானதால் அவளிடம் கூட, சொல்லாமல் வேகமாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அரக்கபரக்க செல்லும் அக்காவைப் பார்த்தவள், ' ஐந்து நிமிடம் தாமதம் ஆனால் என்னவாகிடப் போகுது. இவ்வளவு அவசரமாக சொல்லாமல் கொள்ளாமல் போகுது இந்த அக்கா.' என்று எண்ணியவள், வண்டியை ஸ்டார்ட் செய்துக் கிளம்பி விட்டாள். அவளுக்கு தெரியவில்லை, இந்த ஐந்து நிமிட தாமதத்திற்கு, அரைமணி நேரம் அவளது எம்டியிடம் பாட்டு வாங்கப் போகிறாள் என்று…

அங்கு மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த நிரஞ்சனோ, கீதாவைப் பார்த்ததும் குற்றம் சாட்டும் பார்வை பார்த்து விட்டு, பிறகு கடிகாரத்தையும் பார்த்தான். பிறகு உள்ளே சென்றவன், பியூனை விட்டு அவளை அழைத்தான்.

மேனேஜரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே பியூன் வந்து, "கீதா மேடம். எம்.டி கூப்பிடுறாங்க." என்றுக் கூற…

கீதாவோ, பயந்துக் கொண்டே எம்.டியின் அறைக் கதவைத் தட்டி விட்டு கீதாஞ்சலி உள்ளே நுழைந்தாள்.

அங்கு நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு,அவளை கூர்மையாகப் பார்த்தவன், " நீங்க நியூ ஜாயினியில்லையா அதான் என்னைப் பற்றி இன்னும் தெரியவில்லை." என்றான்.

கீதா, " ஸார்…" என்று அதிர்ந்து விழிக்க…

" ஓ… சாரி… ஐ மீன் ஆஃபிஸ் ரூல்ஸ் தெரியவில்லை என்று சொன்னேன்.
எனக்கு நேரம் தவறினால் பிடிக்காது. அதனால் ஃபைவ் மினிட்ஸ், டென் மினிட்ஸ் என்று எக்ஸ்கியூஸ் கேட்க கூடாது. இது தான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்‌ மிசஸ் கீதாஞ்சலி குமார். நெக்ஸ்ட் டைம் இப்படி தாமதமானால், நீங்கள் வேறு வேலை தேடும் படி இருக்கும்…. இப்பொழுது நீங்கள் போய், உங்கள் வேலையை பாருங்கள்." எனக் கடுமையாகக் கூற.

விட்டால் போதும் என்று வேகமாக வெளியே வந்த கீதா, பெரிய பெரிய மூச்சுகளை இழுத்து விட்டு, தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவள் வெளியேறியதும் கண்களை மூடிய நிரஞ்சன், பழைய கீதாஞ்சலியை நினைத்துப் பார்த்தான். ' அப்பொழுதும் அமைதியாக தான் இருப்பாள். ஆனால்,அவள் முகத்தில் இருக்கும் மலர்ச்சி இப்பொழுது இல்லையே!'என யோசித்துக் கொண்டிருந்தான்.

'ஒரு வேளை அவளும் மகிழ்ச்சியாக இல்லையோ,'என அவளுக்காக வருத்தப்பட்டவன், பின் தன் தலையை உலுக்கி கொண்டு, இவர்களை எல்லாம் நம்பவேக் கூடாது. பெண்கள் எல்லோருமே சுயநலவாதிகள். இவளும் அப்படித்தானே… ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி வந்து நிற்கிறாள்‌‌. தாமதமாக வருவது எனக்கு பிடிக்காது என்பது இவளுக்கு நன்கு தெரியும் தானே. உங்களோட பழக்கவழக்கம் எல்லாம் எனக்கும் வந்துடுச்சு ரஞ்சன் என்று காதலிக்கும் போது கூறுவாளே… அப்பவே நல்லா நடிச்சு என்னை ஏமாத்திருக்கா… இத்தனை வருஷத்துல இப்போ நடிப்புல ஆஸ்கார் விருது வாங்குற அளவுக்கு எக்ஸ்பெர்ட் ஆகிருப்பா. ப்ச் அவளைப் பத்தி நினைக்கிறது வேஸ்ட் ஆஃப் டைம்' என்று எண்ணியவன், மீண்டும் தலையை உலுக்கிக் கொண்டு வேலையை பார்க்கத் தொடங்கினான்.

வெளியே வந்த கீதாஞ்சலியை, மேனேஜர் மற்றும் டீம் லீடர் பிடித்துக் கொண்டனர். " ஏன் மா? ரொம்ப கோபமாக பேசி விட்டாரா? நீ வருத்தப்படாதே."என்றார் மேனஜர்.

" கீதா...அவருக்கு பெண்களைக் கண்டாலே ஆகவே ஆகாது.
காரணமே இல்லாமல் கடித்துக் குதறுவார்... நீ வேறு தாமதமாக வந்துருக்க… சும்மாவா விடுவார்… அதான் திட்டிட்டார் போல விட்டுத் தள்ளு." என டீம் லீடர் கிண்டலாகக் கூற…

கீதாவோ, அவர்களிடம் ஒன்றும் கூறாமல், ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்காக, தன்னையே நொந்துக் கொண்டாள்‌.

"முதல் கோணல். முற்றும் கோணல்... "
இனி தான் என்ன சொன்னாலும் நிரஞ்சனுக்கு புரியாது… ' நேரத்தோடு வந்து என்னுடைய பொறுப்பை, திறமையை செயலில் தான் காட்ட வேண்டும் .' என நினைத்துக் கொண்டாள்.

மேனேஜரோ, டீம் லீடர் கூறியதற்கு, கீதா ஒன்றும் பதில் கூறாததால், அவள் கவலையாக இருக்கிறாள் என்று நினைத்து, அவளை ஆறுதல் படுத்த, மீண்டும் நிரஞ்சனைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.

" நான் கம்பெனியில் சேர்ந்ததில் இருந்து, இவர் இப்படி தான் இருக்கிறார். ஒருவேளை குடும்பமாக இருந்திருந்தால் பொறுமை வந்திருக்குமோ, என்னமோ … இவர் தான் தனிக்காட்டு ராஜாவாச்சே." என…

கீதாவோ, "என்ன சார் சொல்றீங்க! அவருடைய ஃபேமிலி…." என இழுக்க…

" அம்மா, அப்பா, ஒரு தங்கை. இது தான் அவரது குடும்பம். சாரோட தங்கச்சி யார் கூடவோ ஓடிப் போயிட்டதா, ஊரிலிருந்து வேலைக்கு வந்த சமையல் செய்யும் அம்மா சொன்னாங்க… அவங்களைப் பத்தி வேற எதுவும் தெரியாது. சாரோட அப்பா, அம்மா எப்பயாவது ஊரிலிருந்து வருவாங்க.. அப்படி ஒரு முறை ஊரில் இருந்து வரும் போது லாரி மோதி, அவங்க வந்த கார் நசுங்கி இறந்துட்டாங்க. அதிலிருந்தே அவர் ரொம்ப இறுகி போய் விட்டார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். சரி விடு மா. நமக்கு எதுக்கு ஊர் வம்பு…
இவங்க தான் உன்னோட டீம் லீடர் சுபத்ரா. மத்த டீடெயில்ஸ் எல்லாம் அவங்க சொல்லுவாங்க..
சரி நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள்." என்று இருவரையும் அனுப்பினார்.

கீதாவோ, அவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.

' நிரஞ்சனின் பெற்றோர்கள் இறந்ததற்காக ஒன்றும் அவள் அதிர்ச்சியாகவில்லை. அவர்கள் இருவரிடமும் பெரிதாக அபிப்பிராயம் அவளுக்கு கிடையாது. அவளது நினைவெல்லாம், உயிர் தோழி ரம்யாவைத் தான் சுற்றி வந்தது. அவளது குணத்திற்கு நிச்சயமாக ஓடிப் போயிருக்க மாட்டாள்..
ஏதோ தவறு நடந்து இருக்கிறது, 'என்று உள் மனசுக் கூற அப்படியே திகைத்து நின்றாள்.

சுபத்ரா தான் அவளை உலுக்கி, " வாங்க கீதா…" என அவர்களது கேபினுக்கு அழைத்து வந்தாள்.

பயணங்கள் தொடரும்…...
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom