• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பயணங்கள் - 2

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்.

IMG-20210531-WA0058.jpg


பயணங்கள் -2

கீதாஞ்சலி, அந்த வானுயர்ந்த கட்டிடத்தை நிமிர்ந்துப் பார்த்து, ஒரு நிமிடம் திகைத்து, பின் தன்னை சமாளித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

'இவ்வளவு பெரிய நிறுவனத்தில் தனக்கு வேலைக் கிடைக்குமா? ' என்று அஞ்சியவளின் மனதில் எப்போதும் போல,'கீத் செல்லம்… உன்னால் முடியும்… முதலில் நீயே உன்னை அன்டர்எஸ்டிமேட் பண்ணாதே.' என்று உத்வேகம் அளிக்கும் கம்பீரமான குரல் ஒலித்தது.

இன்னும் சற்று நேரத்தில் அந்தக் குரலுக்குரியவனை சந்திக்கப் போவதை அறியவில்லை அந்த பேதை.

இவள் இன்டர்வியூக்கு வந்த நிறுவனமான ஈஸி சொல்யூஷன் ஐந்தாவது தளத்தில் இயங்கி வருகிறது.

கீதா முன்பே விசாரித்துத் தெரிந்துக் கொண்டதால், நேரே லிப்டில் ஏறி ஐந்தாவது தளத்திற்கு சென்றாள்.

மெல்லிய புன்னகையுடன், ரிஷப்ஷனில், இன்டர்வியூக்கு வந்திருப்பதாக தெரிவித்தாள்.

ரிஷப்ஷனில் நின்றிருந்தவள், அழகாக புன்னகைத்து," வெல்கம் மேம், ப்ளீஸ் வெயிட் ஹியர் " என்று அங்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்த இடத்தைக் காட்டினாள்.

அவள் காட்டிய இடத்தைப் பார்த்து திகைத்து தான் போனாள் கீதா. இன்டர்வியூ நடப்பதோ நான்கு கேண்டிடேட் தேர்வு செய்ய தான்… வந்திருப்பதோ முப்பது பேருக்கு மேலாவது இருப்பார்கள்.

கடவுளே! எப்படியாவது இன்டர்வியூல செலக்ட் ஆக வேண்டும் என்று அவசர வேண்டுதலை, வைத்து விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அங்கே ஒருபுறம் அப்பொழுது தான் கல்லூரி முடித்து விட்டு வந்த இளைஞர், இளைஞிகள் பயமோ, பதட்டமோ இன்றி இலகுவாக அமர்ந்திருந்தனர்.

இன்னொரு புறமோ, அனுபவம் பெற்றவர்கள் தன்னம்பிக்கையோடு அமர்ந்திருந்தனர்.

இவள் ஒருத்தி தான் டென்ஷனோடு இருந்தாள். கீதா மெல்ல தன்னை ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு சுற்றிப் பார்த்தாள்.

அவளுக்கு பின்புறம், ஓரமாக அமர்ந்து இருந்த நால்வரையும் பார்த்தவுடன், அவளுக்கு தன்னுடைய, கல்லூரி கால வாழ்க்கை ஞாபகம் வந்து விட்டது.

'அது அவளது வசந்தக்காலம்… அதற்குப் பிறகு அவளது வாழ்வில் விதியின் கோரத்தாண்டவம் தான் விளையாடியது.'
பெருமூச்சு விட்டுக் கொண்டே, அந்த நினைவுகளில் இருந்து வெளியே வருவதற்காக, கவனத்தை திசை திருப்பினாள்.

அங்கிருந்த மேசையின் மேல் இருந்த கம்பெனி புக்லெட்டை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

கம்பெனி பற்றிய நிறைய தகவல்கள் இருந்தது. அது அவளுக்கு இன்டர்வூயு நல்லபடியாக அட்டண்ட் செய்ய உதவியது.கம்பெனியின் வளர்ச்சி பற்றி எழுதி இருப்பதைப் பார்த்து பிரம்மித்து தான் போனாள் கீதா.

' கடந்த நான்கு ஆண்டுகளில் கம்பெனி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இங்கு நமக்கு வேலை கிடைத்தால், நல்ல எதிர்காலம் உண்டு. 'என எண்ணிய கீதா, மேலும் படிப்பதற்குள் இன்டர்வியூ ஆரம்பித்து விட்டதாகக் கூறி, ஒவ்வொருவராக அழைக்க….

கீதாவோ தனது ஃபைலை எடுத்து வைத்து தயாராக இருந்தாள்.

கீதாவின் பெயரை அழைக்கவும், தைரியமாக எழுந்துச் சென்றாள்.

இன்டர்வியூ நடக்கும் அறையின் கதவைத் தட்டி விட்டு, அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் உள்ளே சென்றாள்.

அங்கிருந்த மூவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, அவர்கள் அனுமதி அளித்தப் பின்பு நாற்காலியில் அமர்ந்தாள்.

அவர்களில் யார் எம். டி என தெரியாமல், மூவரையும் பொதுவாகப் பார்த்து தன்னைப் பற்றிய விவரங்களை கூறி விட்டு ஃபைலை நீட்டினாள்.

மூவரில் நடுவில் அமர்ந்திருந்தவர், தன்னை ஹெச்ஆர் மேனேஜர் என்று அறிமுகம் செய்துக் கொண்டவர்,
மற்ற இருவரையும் டீம் லீடர்ஸ் என்று அறிமுகம் செய்தார்.

பிறகு மூவரும் கேள்விக் கனைகளைத் தொடுத்தனர்.

எல்லாக் கேள்விகளுக்கும், தெளிவாக பதில் கூறினாள்.

" இதற்கு முன்பு வேலை செய்த அனுபவம் இருக்கா?" என மேனேஜர் வினவ…

"இல்லை சார். ஆனால் பிராஜெக்ட் செய்த அனுபவம் இருக்கு …
எனக்கு வேலை கிடைத்தால், என் திறமையை நிரூபிப்பேன் சார்." என்று தன்னம்பிக்கையோடு கூற….

மூவரும், ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்து விட்டு, "எங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் சூப்பர்.வெரி குட்...
உங்களுடைய மார்க், சர்டிபிகேட் அன்ட் உங்களுடைய ப்ராஜெக்ட் எல்லாமே திருப்தியா இருக்கு. பட் நீங்கள் ஸ்டடிஸ் கம்ப்ளீட் பண்ணி சிக்ஸ் இயர்ஸ் ஆச்சு, ஆனால் இவ்வளவு நாள் வேலைக்கு செல்லாதது தான் யோசனையாக இருக்கிறது. பட் உங்க திறமை கம்பெனிக்கு அவசியம் தேவை. அடுத்த கட்ட இன்டர்வியூக்கு மீட்டிங் ஹாலில் வெயிட் பண்ணுங்க மிஸஸ். கீதாஞ்சலி குமார்.

அடுத்த கட்ட இன்டர்வியூ எம்‌. டி யுடன் உங்களுடைய கலந்துரையாடல் ஆல் தி பெஸ்ட்." என்றார் ஹெச்.ஆர்.

வெளியே வந்த கீதாவிற்கு,ஏனோ தனக்கு வேண்டியவர் இங்கு இருப்பதாகவே தோன்றியது.

ரிஷப்ஷனில் விசாரித்து, மீட்டிங் ஹாலிற்கு சென்றாள்.

அங்கு இவளோடு சேர்த்து மொத்தம் பத்து பேர் இருந்தனர்.

அங்கிருந்த பத்து பேரில், இரண்டு பேர் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்து கீதாவும் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

மற்றவர்களோ இவ்வளவு நேரம் ஏன் தான் தாமதம் செய்கிறார்களோ,என்று தங்களுக்குள்ளே சலசலத்துக் கொண்டிருந்தனர்.

பிறகு ஒவ்வொருவராக அழைக்க, உள்ளே சென்றனர். சில பேர் குழப்பத்துடன் வெளியே சென்று விட்டனர். மூன்று பேர் மட்டும் வெளியே வந்து அமர்ந்திருந்தனர் .பிறகு கீதாவை, அழைக்க உள்ளே சென்றாள்.

உள்ளே சென்ற கீதா, அங்கு அமர்ந்திருந்த நிரஞ்சனைப் பார்த்து அதிர்ந்து தான் போனாள்.

நிரஞ்சனோ, அப்பொழுது தான் புதிதாக பார்ப்பது போல் அவளைப் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தி, "உட்காருங்க மிசஸ். கீதாஞ்சலிகுமார்." என்றான். பிறகு " வெல்கம் டூ அவர் ஃபேமிலி " என…

கீதாவோ, அவனைப் பார்த்த திகைப்பிலிருந்து இன்னமும் மீளாமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள்.

நிரஞ்சன் எழுந்து போய் அவள் முன்னே கைகளை அசைத்து, " ஹலோ மேடம் யு ஆர் அப்பாயிண்டெட்.
உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. அதைத்தான் வெல்கம் டூ அவர் ஃபேமிலி என்று சொன்னேன்.வேறு ஒன்றும் இல்லை,நீங்கள் பயப்படவேண்டாம் மிஸஸ் கீதாஞ்சலிகுமார்." என்றான்.

அப்போது தான் அவன் கூறியதே மண்டைக்குள் ஏற, " அப்போ இன்டர்வியூ… இல்லை ஃபைனல் இன்டர்வியூ." என்று உளறிக் கொட்டினாள் கீதாஞ்சலி.

நிரஞ்சனோ, அவள் முகத்தைப் பார்த்து " நீங்கள் வெளியே வெயிட் பண்ணும் போதே, அல்ரெடி இன்டர்வியூ ஸ்டார்ட் ஆகிடுச்சு. எங்கள் கம்பெனிக்கு, திறமையோட பொறுமையும் தேவை. அதில் நீங்கள் செலக்ட் ஆகிட்டீங்க.
இப்போதிலிருந்து நீங்கள் எங்கள் கம்பெனியில் ஒருவர். எங்கள் கம்பெனிக்கு என்றும் நம்பிக்கையுடன் இருப்பீங்க என்று நினைக்கிறேன்." என்றவாறே அவளைப் பார்க்க…

" ஸ்யூர் சார்…" என்ற கீதாஞ்சலியின் மனமோ வேகமாகத் துடித்தது.

கண்கள் கலங்க, 'நம்மை குத்திக் காண்பிக்கிறானோ.' என மனதுக்குள் மறுக.

அவனோ அதையெல்லாம் பார்த்தும், அலட்சியமாக ஒதுக்கி விட்டு, "இப்பொழுது நீங்கள், வெளியே செல்லலாம் மிஸஸ்.கீதாஞ்சலிகுமார்.

சிறிது நேரத்தில் உங்கள் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கையில் வந்து விடும். மற்ற விவரங்களை மேனேஜர் கூறுவார்." என்றான்.

அவளோ அசையாமல் அவனைப் பார்த்து, ஏதோ கேட்கத் தவித்துக் கொண்டிருந்தாள்.

அவனோ, இன்டர்காமை எடுத்து யாருக்கோ அழைத்துக் கொண்டே, சைகையால் வெளியே செல்லுமாறு கூறினான்.

கீதாவோ, அவனின் செய்கையால் காயப்பட்ட மனதுடன் வெளியேறினாள்.

அவள் வெளியேறியதும் பெருமூச்சு விட்டுக் கொண்டு, தன்னை சமாளித்தவன், இன்டர்காமில் அவனது பி.ஏவை அழைத்தான்.

"வெளியே இருக்கும் நால்வருக்கும் அப்பாயின்ட்மெண்டர் ஆர்டர் ரெடி பண்ண சொல்லி மேனேஜரிடம் சொல்லிடுங்க.

ஹெச். ஆரோட டிஸ்கஸ் பண்ணிட்டு, அவங்களோட திறமைக்குரிய போஸ்ட் கொடுக்க சொல்லிடுங்க. மத்த டீடெயில்ஸ் எல்லாம் அவர்களையே பார்த்துக்க சொல்லிடுங்க. நவ் ஐ வாண்ட் ரெஸ்ட். சோ டோண்ட் டிஸ்டர்ப் மீ. நானா கால் பண்ணும் வரை யாரையும் உள்ளே அலோவ் பண்ண வேண்டாம்." என்று கூறி வைத்தவன், அந்த ரோலிங் சேரில் நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

மூடிய இமைக்குள், ' ரொம்ப டென்ஷனா இருக்கீயா செல்லம். நான் வேண்டும்னா உன் டென்ஷனைக் குறைக்கவா என்று மெல்லியக் குரலில் கூறி தன் மடி சாய்த்து தலைகோதியவளின் பரிசத்தை இப்போதும் கூட உணர்ந்தான்.' ஆனால் அடுத்த நொடியே, பெண்ணவளின் துரோகம் கண் முன்னே வந்து நிழலாட…
இறுகிப் போனான் நிரஞ்சன்.


வெளியே சென்ற கீதாஞ்சலியோ, நிரஞ்சனைத் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்‌.

ஒரு காலத்தில் அவளின் விழி அசைவுக்கே எல்லாவற்றையும் நிறைவேற்றுபவன்,இன்று விழிகளிலாலே அலட்சியம் செய்கிறான்.

' நடத்தட்டும் … நடத்தட்டும்… அவன் வெறுக்க வேண்டும் என்று தானே நினைத்தோம். அது அப்படியே இருக்கட்டும்.மீண்டும் புதுக் கதை எழுத வேண்டாம். அது தான் அவனுக்கு நல்லது.அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமோ? இருக்கும்… குழந்தைகள் கூட இருக்கலாம். இனி "அவன் " என சொல்லக் கூடாது. ஏன் மனதிற்குள் கூட நினைக்க கூடாது. அதற்கான உரிமையும் இல்லை.தகுதியும் இல்லை.' என எண்ணினாள்...

சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவள், ரம்யா எங்கும் தென்படுகிறளா? என கவனிக்க.

' அவள் இங்கு இருப்பது மாதிரி தெரியவில்லை. இன்னேரம் அவள் இங்கிருந்தால், தான் வந்திருப்பது தெரிந்த நொடியே கண் முன்னே வந்திருப்பாள். அவளைப் பற்றி பிறகு தெரிந்துக் கொள்வோம். இங்கு தானே வேலை செய்யப் போகிறோம்.' என நினைத்துக் கொண்டே வெளியேச் சென்று அமர்ந்தாள்.

ரம்யாவை பற்றி நினைத்தவுடன் அவள் முகத்தில் புன்னகை வந்து அமர்ந்தது.

அவள், ரம்யா மற்றும் வானதி மூவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.

கீதா மதுரையில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு மாறினாள். இப்பொழுது போலவே அப்பொழுதும் கீதா ரொம்ப அமைதி.

அவள் அருகில் அமர்ந்திருந்த வானதியோ படுசுட்டி... அவளுக்கு கீதாவை வம்பு இழுப்பது ரொம்பவேப் பிடிக்கும்.

கீதாவோ, அழுதுக் கொண்டே இருப்பாள்.

ரம்யா,தான் கீதாவை சமாதானம் செய்து வானதியைக் கண்டிப்பாள்.

இதே ஒரு விளையாட்டாக வானதி, கீதாவை வம்பு இழுத்து விட்டு ஓட…. ரம்யா, அவளைத் துரத்த என விளையாட்டாக ஆரம்பித்த இவர்களது நட்பு, பிறகு இறுகிய நட்பானது.

இந்த நட்பு பள்ளியில் இருந்து கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது …. பிறகு சூழ்நிலையால் பிரிய நேரிட்டது.

தனது தோழி ரம்யாவின், நட்புக்காக நிரஞ்சனோடு ஏற்பட்ட காதலை,கீதா விட்டுக் கொடுத்தாள். ஆம் நிரஞ்சனும், அவளும் இரண்டு வருடங்களாக காதலித்தனர்.

அன்று அவர்களை விதி பிரித்தது…. இன்றோ அவர்களை மீண்டும் இணைக்கக் காத்திருக்கிறதோ! யார் அறிவார். அவர்களைப் படைத்த அந்த ஆண்டவனைத் தவிர, வேறு ஒருவர் அறிவாரோ!

தொடரும்…...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom