• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பயணங்கள் - 10

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். பயணங்கள் தொடரும் கதையின் இறுதி அத்தியாயம் போட்டாச்சு. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே.
IMG-20210531-WA0058.jpg


பயணங்கள்- 10

கீதா தன் அண்ணனுக்கு ஃபோன் செய்து நிரஞ்சனைப் பார்த்ததிலிருந்து அனைத்தையும் கூறியவள், இப்பொழுது மதுவும்,அவளும் மதுரைக்குச் செல்வதற்கு அனுமதி வாங்க …

அந்தப் பக்கம் அருணோ, " உங்க அண்ணி அப்பவே சொன்னாடா. ரெண்டு நாளாவே ரொம்ப டிஸ்டர்பா இருந்தேன்னு. நான் தான் வொர்க் டென்ஷன்ல அலட்சியமா இருந்துட்டேன்.
உன் ஃப்ரெண்டுக்கு எதுவும் ஆகியிருக்காது. கவலைப்படாதே. ஜாக்கிரதையா போயிட்டு வாங்க."என்று விட்டு ஃபோனை வைத்தான்.

மனதிற்குள்ளோ, ' இனியாவது உனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் டா. நிரஞ்சன் நல்லவன். உன்னை புரிஞ்சுப்பான்.' என்று எண்ணியவன் பெருமூச்சு விட்டுக் கொண்டே அவனது வேலையை கவனித்தான்.


இவள் அருணிடம் அனுமதி வாங்குவதைக் கேட்ட நிரஞ்சன், மதுவிடம் " ஏன் மது மா… அவ கணவரிடம் அனுமதி வாங்காமல், உங்கள் அண்ணனிடம் ஏன் கேட்கிறா?"

மதுவோ, " அவர் இப்பொழுது உயிரோடு இல்லை." என…

அவனோ அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

அவனதுப் பார்வையைப் பார்த்தே புரிந்துக் கொண்ட கீதா தங்கையைப் பார்த்து முறைத்தாள்.
" கீதா…" என நிரஞ்சன் கூற வர…

"சார்… இப்ப எதுவும் பேச வேண்டாம். நமக்கு ரம்யாவைப் பத்தி தெரிஞ்சுக்கணும்." என்று கண்டிப்புடன் கூற…

அதற்குப் பிறகு நிரஞ்சன் ஒன்றும் சொல்லவில்லை. அனைவரும் ஏர்போர்ட்டுக்கு கிளம்பி சென்று, ஒரு வழியாக மதுரைக்கு வந்து இறங்கினார்கள் ..

அங்கு நிரஞ்சனின்அண்ணன், மருதுவை பிடித்து விசாரிக்க….

அவன் அனைத்து உண்மையையும் கூறத் தொடங்கினான். " சித்தப்பா தான் அவளை அடித்ததார். அந்த பையனை வீட்டை விட்டு தொரத்திட்டு, உள்ளப் போய் பார்த்தா, ரம்யா பேச்சு மூச்சில்லாமல் இருந்தாள். சித்தப்பா, சித்திக்கு என்ன பண்றதுனு தெரியலை." என்றவன் வார்த்தைகளை மென்று முழுங்க…

" ம்… அப்புறம் என்ன பண்ணீங்க." என்று கேட்டவாறே ராகவ் எட்டி உதைக்க…

" அது எங்க சித்தப்பா வீட்டோட பின்புறம் தோட்டத்தில் புதைத்து விட்டோம் . அப்புறம் ரம்யா அவ காதலனோட ஓடிப் போயிட்டா என்று எல்லோரிடமும் கூறி நம்ப வைத்தோம்.

இதில் எனக்கு எந்த பங்கும் கிடையாது. நான் அவர்களுடன் இருந்தேனே தவிர நான் எந்த தவறும் செய்யவில்லை." என அவன் கதற…

இப்போது நிரஞ்சன் அவனை புரட்டிப் போட்டு விட்டான்.

" டேய்… அண்ணா, அண்ணா என்று உன்னையும் தானே சுற்றினாள். அவங்கதான் படிப்பறிவில்லாத ஜாதி வெறி புடிச்சவங்க.. உனக்கு எங்கேடா போச்சு அறிவு." என்று கூறியவன், ராகவிடம் திரும்பி, " அண்ணா… இவனுக்கு என்ன தண்டனையோ அதை வாங்கிக் கொடுங்க… இவன் என் கண்ணு முன்னாடி இருந்தான்னா அடிச்சே கொன்னுடுவேன். முதல்ல இவனை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்க. இவன் சாவு உடனே வரக் கூடாது. சாவற வரைக்கும் நரக வேதனையை அனுபவிக்கணும். அப்ப தான் என் தங்கை ஆத்மா சாந்தி அடையும். " எனக் கூற…

அவனது ரௌத்திரத்தைப் பார்த்து அரண்டான் மருது.

அங்கு தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருந்த வானதியிடம் திரும்பினான்.

வானதியோ அழுதுக் கொண்டே மெல்லிய குரலில் கீதாவிடம், " கீது… நீ அப்பவே ரம்யாவோட அம்மா, அப்பாவைப் பத்தி சொல்லிருந்தின்னா, இன்னைக்கு நம்ம ரம்யா உயிரோட இருந்திருப்பா தானே." என.

" வானு… அந்த சூழ்நிலையில் என்னால என்னப் பண்ணியிருக்க முடியும். நான் உங்க யார் கூடவாவது காண்டாக் வச்சி, அது அவங்களுக்கு தெரிஞ்சு, ரம்யாவுக்கு எதுவும் ஆச்சுன்னா என்ன பண்றதுன்னு தான் யோசிச்சேன். எப்படியாவது ரஞ்சன் என்னைத் தேடி வருவாருன்னு நினைச்சேன். இப்படி விட்டது தொல்லைன்னு இருப்பாருன்னு நினைக்கலை." என்ற கீதா, அங்கு வந்து நின்ற நிரஞ்சனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள்.

" தப்பு தான் கீத்து. எனக்கு அதுக்கு மன்னிப்பே கிடையாதா?" என தவிப்புடன் வினவ.

" எப்படி மன்னிக்கிறது. நான் அப்படிப்பட்டவளா. என்னைப் பத்தி தெரியாதா? ரெண்டு வருஷமா காதலிச்சமே என் மேல நம்பிக்கை இல்லையா? அப்புறம் எந்த நம்பிக்கையில் கல்யாணம் வரைக்கும் கொண்டு போனீங்க." என்று அவள் பேச , பேச நிரஞ்சன் ஒன்றும் கூறாமல் இறுகிப் போய் நின்றான்.

வானதி தான், " விடுடி… நாங்களும்தான் சந்தேகப்பட்டோம். சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சு." என்று சமாதானம் செய்ய.

" ப்ச் வானு. உனக்கு புரியலையா? வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்த அவருக்கு என் மேல நம்பிக்கை இருக்க வேண்டாமா? இப்ப எதுக்கு தேவையில்லாதப் பேச்சு. விட்டுடு வானு.

இவர் எப்படியாவது வருவார்,வருவார் என்று காத்திருந்தேன் தெரியுமா? எங்க வீட்ல உள்ளவங்க, இங்கே நடந்த பிரச்சனைல பயந்து போய் அவசர, அவசரமாக எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணாங்க.

அவர் மட்டும் கெட்டவரா இருந்திருந்தால் என் வாழ்க்கை என்னவாயிருக்கும். எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை.கொஞ்சம் டைம் கொடுங்க என்று சொல்லவும், என்ன ஏதுன்னு விசாரிக்காமல் பொறுத்துக்கிட்டார் அந்த நல்ல மனசுக்காரர்.

அவர் இல்லாம வேற யாராவது இருந்திருந்தால், என் வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்கும்‌ இப்ப மட்டும் என்ன? நல்லவர கடவுள் விட்டு வைப்பாரா? ஒரே வாரத்துல என்கிட்ட இருந்து பிரிச்சிட்டார். " என்றவள் கண் கலங்க.

யாராலும் ஒன்னும் சொல்ல முடியவில்லை.

ராகவ் தான் அங்கிருந்த மௌனத்தைக் களைத்தார். " நிரஞ்சன்… கிளம்பலாமா? இங்கு உள்ள ஃபார்மலிட்டிஸ மிஸ்டர். அஜய் பாத்துப்பாரு. அப்புறம் இது வரைக்கும் உங்க ப்ராப்பர்டிஸை மருது தான் பார்த்துக்கிட்டார். இனி என்ன ஏற்பாடு செய்யப் போறீங்க." என.

"எனக்கு அந்த கொலைகாரவங்களோட சொத்து எதுவும் வேண்டாம். அவங்க செய்த பாவத்துக்கு நடு ரோட்டில் அடிப்பட்டு, யார் என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் மார்ச்சுவரில் ஒரு வாரம் கிடந்தாங்க. இருந்தாலும், எனக்கு இவங்க சொத்து எதுவும் வேண்டாம். எல்லாவற்றையும் ஒரு டிரஸ்ட் அமைத்து இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போகிறேன்.

இந்த கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளின் படிப்பிற்கும் உதவ போகிறேன். கல்வியறிவாவது மாற்றத்தை தரும் என்று நம்புறேன்." என்றவன் கீதாவைப் பார்த்து, " கீதா என்னுடைய இந்த பயணத்திலாவது நீயும் என்னுடன் வருவாயா! " என கேட்க‌

" சரி…" என்பது போலத் தலையாட்டினாள்.
" ம்கூம்… நான் எதிர்பார்த்த சீன் இது கிடையாது. எப்படியாவது எங்க அக்காவை கல்யாணம் பண்ணிப்பீங்க. நல்ல கல்யாணம் சாப்பாடு சாப்பிடலாம் என்று பார்த்தால், ப்ளேட்டையே மாத்திட்டீங்களே மாம்ஸ்." என மது கலகலக்க…

அங்கு இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து,எல்லோர் முகங்களிலும் புன்னகை எட்டிப் பார்த்தது.

" எங்கே போயிடப் போறா உங்க அக்கா. சீக்கிரமே கன்வின்ஸ் பண்ணிடுவேன்." என்று மதுவின் காதில் கிசுகிசுத்தான்.

அந்த சீக்கிரம் என்பது கிட்டத்தட்ட இரண்டு வருஷம் ஆனது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு.

மதுரையில் உள்ள பெரிய மண்டபத்தில் திருமணம் ஏற்பாடு பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

என்ன மதுவால், அவளது அக்காவின் திருமணத்தில் ஆசைப்பட்ட மாதிரி சாப்பிட முடியவில்லை.

ஏனென்றால் அவளுக்கும் அன்று தான் திருமணம். அவளால் இந்த திருமணப் பரபரப்பில் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை.

மாப்பிள்ளை மதுரைக்காரர் தான். இவர்கள் ரம்யாவின் கேஸ் விசாரணைக்காக மதுரை வந்த போது இவர்களுக்கு உதவிய போலீஸ் ஆஃபிஸர் அஜய் தான் மாப்பிள்ளை.

அவருக்கு மதுவைப் பார்த்ததுமே பிடித்து விட்டது. அதுவுமில்லாமல் அந்த கடினமான சூழ்நிலையில் சிரித்து, கலகலவென மாற்றிய மதுவை ரொம்ப பிடித்து விட்டது.

ராகவ் மூலம் மதுவை பெண் கேட்க… மதுவோ அக்கா திருமணம் செய்தால் தான், நானும் செய்து கொள்வேன் என்று தள்ளிப் போட்டாள்.

மது எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். கீதா கேட்கவில்லை.

பிறகு நிரஞ்சன் காலில் விழாக் குறையாகக் கெஞ்சி, அவளை ஒரு வழியாக மலையிறக்கினான்.

இதோ இன்று இருவருக்கும் திருமணம்.

அருண் நல்ல அண்ணன். நந்தினியோ கணவனுக்கு ஏத்த மனைவி. அவள் எது செய்தாலும் இவர்களுடைய நலனுக்காகத் தான் இருக்கும்.
படபடவென பேசினாலும், மனதில் எதுவும் இருக்காது.

இன்றும் தன் ஒரு வயது குழந்தையைக் கூட பாராமல், கல்யாணத்தில் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவியாக வானதியும் நின்றிருந்தாள்.

அவளோ நிறைமாதம். அசோக் தான் அவளை திருமணம் செய்து தாங்கு தாங்கென்று தாங்கிக் கொண்டிருக்கிறான். அவர்களுடனே அவளது குடும்பத்தையும் அழைத்துக் கொண்டான்.

செழியனை இப்போது வீட்ல வைத்துப் பார்த்துக் கொள்கின்றனர். இப்போது அவனது மனநலனில் கொஞ்சம் முன்னேற்றம்.

பொண்ணு, மாப்பிள்ளையை விதவிதமாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் போடாடோஃக்ராபர்…
அங்கு திருமணம் முடிந்து, மதிய உணவும் முடிந்திருந்ததால், வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே இருந்தனர்.

ஃபோட்டோவிற்காக கீதாவின் கையைப் பிடித்த நிரஞ்சன், அதற்குப் பிறகு விடவேயில்லை.

" மாம்ஸ் போதும். உங்க ரொமான்ஸை வீட்டில் போய் வச்சுக்கோங்க." என்று கலாய்க்க.

" ஏது… இது உனக்கு ரொமான்ஸா. நான் இன்னைக்கு பிடிச்ச உங்க அக்கா கையை, என்னைக்கும் விடுறதா இல்லை." என்று நிரஞ்சன் கூற.

அங்கிருந்த எல்லோரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

இனி இவர்கள் இருவரின் பயணமும் இனிமையாக தொடரும். நாமும் விடைப் பெறுவோம்.


முற்றும்.
 

GayuR

Member
Member
Super story @Viswadevi sis.. Isaikathali story was awesome and this was also too good.. 10 episodes la neenga solla vanthathai romba azhaga solli irukeenga... Too good.. Unga adutha kathaikaaga aavaludan waiting sis :):love::love::love::love:
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom