• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பயணங்கள் - 1

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். நான் உங்கள் தோழி விஸ்வதேவி. இசைக்காதலி என்னைக் காதலி கதைக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி.😘😘😘😘😘

அடுத்து ஒரு குறுநாவலுடன் வந்து விட்டேன். இது என்னுடைய முதல் குறுநாவல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கதை பதிவு செய்கிறேன். படித்து விட்டு உங்கள் நிறை குறைகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழிகளே.

IMG-20210531-WA0049.jpg


பயணங்கள் - 1

கீதாஞ்சலி நெற்றியில் சிறிய கருப்பு பொட்டை ஒட்டியவள், அந்த ஆள் உயர கண்ணாடியில் தன்னை மீண்டும் சரிபார்த்துக் கொண்டாள்.

ஆம் மீண்டும் என்றால், குளித்து தயாராகி வந்த இந்த அரைமணி நேரத்தில் கீதாஞ்சலி பலமுறை, தான் சரியாகத் தயாராகி இருக்கிறோமோ என சரி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவள் செய்வதையே வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரிமா…

மதுரிமா, கீதாஞ்சலியின் செல்லத் தங்கை… கீதாவிற்கு பிறகு ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தவள்…. அருண், கீதாவிற்கு இரண்டு வயது மூத்த சகோதரன்…

இது நாள் வரை நல்ல தோழனாகவும், தாய், தந்தையுமாகவும் இருந்தவன், இப்போ சில மாதங்களாக கீதாவிடம் சரியாக பேசுவதேக் கிடையாது.

கீதாவிற்கு வருத்தமாக இருந்தாலும், வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டாள். சின்னவள் தான் குதிப்பாள், எல்லாம் இந்த அண்ணியால் தான் என்று கூறுவாள்.

நந்தினி தான் இவர்களின் அண்ணி. அவளை அண்ணியாக தேர்ந்தெடுத்ததே இவர்கள் இருவரும் தான்….

' ஆம் ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவர்களின் பெற்றோர் இறந்து விட்டார்கள்….. அவர்களோடு சேர்ந்து கீதாவின் வாழ்க்கையும் முடிந்தது….

கீதாவின் கல்லூரி காலம் முடிந்தவுடன், அவசரமாக திருமணம்…. இவள் ஜாதகத்தில் ஏதோ கிரகம் சரியில்லை… கட்டம் சரியில்லை... உடனே திருமணம் செய்ய வேண்டும், இல்லையென்றால் சன்னியாச வாழ்க்கை என்று ஜோசியர் கூற… உடனடியாக திருமணம் நடத்தப்பட்டது…. ஆனால் ஆரம்பித்த வேகத்திலே இவளது திருமண வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வந்தது….

திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சேர்ந்து செல்லும் போது, எதிரே வந்த இரண்டு சக்கர வாகனத்தில் இவர்களின் டிரைவர் மெதுவாக இடித்து விட்டார்.

எதிரே வந்தவரோ விடாமல் சண்டை போட, டிரைவரால் சமாளிக்க முடியாமல், மாமனும், மருமகனும் சமாதானம் செய்ய முயன்றார்கள்.ஆனால் எதிரே வந்தவரோ விடாமல் பிரச்சனை செய்தார்...
மணி ஆகி விட்டது என்று அவர்களை கூப்பிடுவதற்காக இறங்கிய இவர்களின் தாயும், சேர்ந்து எதிரே வந்த லாரியால் மோதப்பட்டு , அந்த இடத்திலே ஐவரும் இறந்தனர்.

காரில் இருந்ததால் இவர்கள் மூவர் மட்டும் உயிர் தப்பினர்‌.

ஒரு புறம் தன் கணவனையும், மறுபுறம் தன் தாய் தந்தையும் இழந்து பித்துப் பிடித்தாற் போல் இருந்த பெரிய தங்கையையும், கண் முன்னே நடந்த கோர விபத்தைப் பார்த்து மலங்க மலங்க விழித்த சிறிய தங்கையையும், தாயாய் நின்றுத் தாங்கி அவர்களை ஆளாக்கியவன் தான் அவர்களின் அண்ணன்.

முப்பது வயது வரை திருமணம் செய்யாமல், இவர்களுக்காகவே வாழ்ந்தவனை, மல்லுக்கட்டி சம்மதம் வாங்கி, திருமணம் ஏற்பாடுகளைச் செய்தனர். தரகர் மூலம் வந்த வரன் தான் நந்தினி. பார்த்தவுடனே இவர்கள் இருவருக்கும் பிடித்து விட்டது. '

" மதுமா…" என அவள் தோளை பிடித்து அசைத்தாள் கீதா.

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த மது திடுக்கிட்டு நிமிர கீதா அவளின் அருகில் நின்றிருந்தாள்.

" என்ன அக்கா கூப்பிட்டிங்களா?" என மது வினவ…

"அது இல்லை மதுமா… என்னையே பார்த்துட்டு இருந்தியே புடவை நல்லா இல்லையா?..."

" ஐய்யோ! அக்கா… நான் வேற ஏதோ நினைவில் இருந்துட்டேன். இந்த நீல நிற புடவையில் நீ எப்படி இருக்கிற தெரியுமா? தேவதை மாதிரி இருக்கிற கா …"

"அப்படியா… இந்த புடவை ரொம்ப ஓவரா தெரியலைல…" என்று மீண்டும் சந்தேகமாக வினவ.

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை கா. க்யூட்டா இருக்க. ஆமாம் திடீரென்று என்ன சந்தேகம்? அதுவும் இல்லாமல் இவ்வளவு நேரம் கண்ணாடி முன்னாடி நின்னுட்டே இருக்க… வாட் ஹேப்பன்ட்?"

" அது இன்னைக்கு இன்டர்வியூல... அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு டா, ட்ரஸ்ஸிங் சென்ஸ் எப்படி இருக்கு என்று வேற பார்ப்பாங்க… அது தான் நல்லாயிருக்கா என்று பார்த்தேன் டா. "

" ஆல் த பெஸ்ட் அக்கா. அப்புறம் இன்டர்வியூவை நீ நல்லா பண்ணுவ… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு… யூ டோண்ட் வொர்ரி." என்ற தங்கையின் வாழ்த்தில் முகம் மலர்ந்தாள் கீதாஞ்சலி.

"மது… நீ இன்னும் ரெடியாகலையா?"

" இதோ டென் மினிட்ஸ்ல ரெடியாகிட்டு வரேன்." என்ற மது துள்ளிக்குதித்துக் கொண்டு அவளது அறைக்கு ஓடினாள்.

வெளியே போன மது மீண்டும் திரும்பி வந்து, "ஆமாம் கா... உனக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ? " என வினவ ….

" பத்து மணிக்கு தான் மது. பொறுமையாக போனால் போதும்." என்றாள் கீதா.

" ஓ… ட்ராப் பண்ண அண்ணா வராங்களா ?" என மது வினவ…

" தெரியலை மது. அண்ணா கிட்ட கேட்கணும், இல்லை என்றால் ஆட்டோ பிடித்து போகணும் டா. சரி நீ போய் ரெடியாகிட்டு வா." என்றவள் கிச்சனை நோக்கிச் சென்றாள்.

கீதாஞ்சலி குடும்பம் நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேற்பட்டவர்கள்.
மூன்று பெரிய படுக்கையறை அட்டாச்பாத்ரூம் வசதிகளுடன் உள்ளது. கிச்சன், டைனிங் ஹால் என சகல வசதிகளுடன் கூடிய வீடுதான் இவர்களுடையது…

பணத்திற்கு என்றுமே பிரச்சனை கிடையாது .

இவர்களின் தந்தை மூவரின் பேரிலும் பேங்கில் கணிசமாக பணம் போட்டு வைத்திருந்தார். அருணுக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம்…

சமையல் மட்டும் நந்தினி செய்வாள். மேல் வேலைக்கு ஆள் உண்டு.

அதனால் இவர்கள் இருவருக்கும் பெரியதாக வேலை கிடையாது...

கீதா கிச்சனுக்குள் சென்று அண்ணி செய்து வைத்த டிஃபனை டேபிளில் அரேஞ்ச் செய்தாள்.

காலை சாப்பாடு அண்ணன் வேலைக்கு போவதற்கு முன்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடுவார்கள்.

கீதா, மதுவை இன்னும் காணவில்லையே என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அண்ணன், அண்ணி வந்து விட்டார்கள் என்றால், மது இல்லை என்றால் அதற்கு வேறு ஒரு வாக்குவாதம் வரும்….

' ஏன் தான் சின்னக்குட்டி இப்படி பண்ணுதோ.' என மனதிற்குள் நினைத்துக் கொண்டு டென்ஷனோடு இருந்தாள் கீதாஞ்சலி.

ரூமிலிருந்து வெளியே வந்த அருண் நந்தினியிடம், "நந்து… கீதா ரெடியாகி விட்டாளா? இன்னைக்கு தானே அவளுக்கு இன்டர்வியூ." என வினவ…

" ஆமாம் இன்னைக்கு தான் இன்டர்வியூ… அதெல்லாம் கீதா அண்ணி பர்ஃபெக்ட். கரெக்டா கிளம்பியிருப்பாங்க அருண். நீங்க வாங்க சாப்பிட…" என்றவள் , "ஆனால் உங்க சின்னக்குட்டி தான் ரெடியாகி இருக்க மாட்டாள்." என்று மதுவை பற்றி சரியாக கணித்தாள் நந்தினி .

அருண் வந்து சாப்பிட அமர்ந்தான்.
"கீதா… மது எங்க இன்னும் வரவில்லையா?" என வினவ…

" இதோ வந்துட்டேன் அண்ணா." என்றுக் கூறிக்கொண்டே அவளும் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

கீதாவும், நந்தினியும் அவர்கள் இருவருக்கும் பரிமாறி விட்டு அவர்களும் அமர்ந்து உணவருந்தத் தொடங்கினர்.

" கீதா... இன்டர்வியூக்கு ப்ரிப்பேரா இருக்கீயா." என்று அருண் வினவ….

" ம்… வெல் ஃப்ரிப்பேர்டு அண்ணா. இன்டர்வியூக்கு பத்துமணிக்கு போகணும்ணா. நீங்கள் ட்ராப் பண்ணுறீங்களா ?" எனத் தயங்கிக் கொண்டே கேட்டாள் கீதா.

" சரி வா… உன்னை விட்டுட்டு நான் என் ஆஃபிஸ்க்கு போறேன். இன்டர்வியூ முடிஞ்சதும் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்துடு." என்றான் அருண்.

" இந்தா அருண்... லஞ்ச் பாக்ஸ்." என நீட்டிய நந்தினி, " அப்புறம் அருண்… அண்ணிக்கு வேலை கிடைச்சவுடன், ஸ்கூட்டி வாங்கி கொடுத்துருங்க…. அவங்க யாரையும் எப்போதும் எதிர்பார்க்காமல் தனியாக போக அது தான் வசதி‌." என்றாள்.

நந்தினி கூறியதை கேட்ட கீதாவின் கண்கள் கலங்க , மெல்ல சமாளித்துக் கொண்டாள்.

மது தான்," எதுக்கு அண்ணா இன்னொரு வண்டி? நானும் அந்த பக்கம் தான் போகணும்.
இன்னைக்கு நான் சீக்கிரம் போக வேண்டும். இல்லையென்றால் நானே ட்ராப் பண்ணிவிடுவேன். " என்றாள்.

"மது… நீ சும்மா இரு. பெரியவங்க எது செய்தாலும் அது நல்லதுக்கு தான் புரியுதா? உனக்கு ஆஃபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு என்றால் நீ கிளம்பு." என்றவன், பிறகு கீதாவைப் பார்த்து, " நீ போய் ரெடியாகு கீதா ‌" என்று அவளையும் அனுப்பி வைத்து விட்டு, நந்தினியைப் பார்த்து புன்னகைத்தான் அருண்.

*********************************
காரில் போகும் போது, அருகில் அமர்ந்து இருந்த கீதாவைப் பார்த்து, " ஏன் டா ஸ்கூட்டியில் போக பயமா? இல்லை தனியா போக பயமா இருக்கா?" என வினவ ….

" அதெல்லாம் ஒன்னும் இல்லைணா. ஐ கேன் மேனேஜ்." என மெல்லிய குரலில் கூறினாள் கீதா.

" இங்கிருந்து பதினைந்து நிமிடம் தான் மா… ட்ராஃபிக்கும் அவ்வளவா இருக்காது. சோ பயப்படாதே. உனக்கு என்னைக்காவது ஆஃபிஸ்ல லேட்டானா எனக்கு ஃபோன் பண்ணு…. அண்ணா வந்து அழைச்சிட்டு போறேன். சரியா?" என சின்னக்குழந்தைக்கு சொல்வது போல் அருண் கூற..

கீதாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது, அதை அடக்கிக் கொண்டு, " முதலில் வேலை கிடைக்கட்டும் அண்ணா."என்றாள்.

"உன் திறமைக்கு கட்டாயம் வேலை கிடைக்கும் கீதா… உன் அண்ணி அதனால் தான் உன்னை கட்டாயப்படுத்தி வேலைக்கு போக சொன்னா." என அருண் கூற.

"சரி அண்ணா.‌‌.." என்றவள், அந்த நிகழ்ச்சியை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தாள்.

' அண்ணன் திருமணம் முடிந்து விருந்து, மறுவீடு சடங்கு, உறவினர்கள் வீட்டு விருந்து எல்லாம் முடிந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.

மறுநாள் காலையில் கீதா வழக்கம் போல் கிச்சனுக்குள் சென்றுப் பார்த்தால், நந்தினி எல்லா வேலைகளையும் முடித்திருந்தாள்.
"ஏன் அண்ணி … நான் வந்து செய்வேன் இல்லையா. நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க." என.

"என் வீட்டு வேலை செய்ய எனக்கென்ன கஷ்டம் இருக்கப் போது அண்ணி. நீங்க போங்க நான் பார்த்துக்கொள்கிறேன்." என நந்தினி கூறினாள்.

"எல்லா வேலைகளையும் நீங்களே செய்தா அப்புறம் நான் என்ன அண்ணி செய்யறது. சும்மாவே இருந்தால் போரடிக்குமே‌." என உரிமையுடன் கீதாஞ்சலி கூற…

" உங்களுக்கு வீட்டில் இருக்க போரடிச்சா வேலைக்கு போங்க அண்ணி… படித்த படிப்பை வீணாக்க கூடாது…. உங்களோட சின்னவள் மது வேலைக்கு போகலையா? நானும் இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு பொட்டிக் வைக்கலாம் என்று ஐடியா வைத்திருக்கிறேன்…. நீங்களும் சொந்த காலில் நில்லுங்க அண்ணி." என நந்தினி கூறினாள்.

அவளின் அம்மாவோ, " நீ சும்மா இரு நந்து. அவங்க அண்ணன் இருக்கும் போது, அவளுக்கு என்ன கவலை… நீ எதிலும் தலையிடாதே." என்றுக் கூறி மகளை கையோடு அழைத்துச் சென்று விட்டார்.

முதல் முறையாக தன் தாய், தந்தை இறந்த பிறகு அந்த வீட்டில் அன்னியமாக உணர்ந்தாள் கீதாஞ்சலி.'

"கீதா…" என அருண் அழைக்க.
பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள் கீதாஞ்சலி. "ஆஃபிஸ் வந்துடுச்சு மா. ஆல் தி பெஸ்ட்…" என…

அவள் முகத்தில் மெல்லிய புன்னகை மலர," வரேன் அண்ணா…" எனக் கூறி உற்சாகத்துடன் அலுவலகத்தில் நுழைந்தாள்.


பயணங்கள் தொடரும்…
 

பிரிய நிலா

Well-known member
Member
எதார்த்தமான ஆரம்பம்...

கீதாஞ்சலியை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது..
நந்தினி கேரக்டர் சூப்பர்...
அருண் தங்கைகளின் மேல் பாசமாக இருப்பது மகிழ்ச்சி சிஸ்...

கீதாவிற்கு வேலை கிடைத்து விடுமா...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

Rajam

Well-known member
Member
அருமையான தொடக்கம்.
கீதாவுக்கு வேலை கிடைக்கனும்.அண்ணன் தங்கை பாசம் அழகு.
 

Viswadevi

✍️
Writer
எதார்த்தமான ஆரம்பம்...

கீதாஞ்சலியை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது..
நந்தினி கேரக்டர் சூப்பர்...
அருண் தங்கைகளின் மேல் பாசமாக இருப்பது மகிழ்ச்சி சிஸ்...

கீதாவிற்கு வேலை கிடைத்து விடுமா...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
Thanks sis
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom