நிறம் மாறும் வானம்-15

மீ.ரா

✍️
Writer
நிறம் -15

சில விடியல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். சில விடியல்கள் அதிர்ச்சிகளை வாரி வழங்கும். அப்படிப்பட்ட விடியல்தான் இன்று அந்த கிராம மக்களுக்கு. மதுபாலனின் குலதெய்வக் கோயிலுக்கு பக்கத்து கிராமம். அவ்வூர் பாறைவளம் கொண்டது. அங்குள்ள மக்களில் பலபேர் குவாரிகளின் சொந்தக்காரர்கள். அவற்றில் ஒருவரின் குவாரி மட்டும் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும். இருவர் சேர்ந்து நடத்திய அந்த குவாரி மனஸ்தாபத்தின் காரணமாக விற்பனைக்கு வந்தது.

அதனால் குவாரி தற்காலிகமாக செயல்படாமல் இருந்தது. அதன் பணியாளர்கள் அவரவர் ஊருக்குச் சென்றுவிட்டனர். குவாரியை வேறொருவர் வாங்கிவிட்டார். நிர்வாகம் மாறினாலும் அதன் பணியாளர்களை புதிய நிர்வாகி மாற்ற விரும்பவில்லை. ஒரு நல்ல நாளில் குவாரி மீண்டும் திறக்க முடிவானது.

பூசை, கிடாவெட்டு என்று அமர்த்தலாக ஆரம்பித்தது தொடக்கவிழா. குவாரிகளில் பாறைகளை வெடிவைத்து பெயர்த்து எடுப்பர். அதனால் குழிகள் உருவாகும். வெடிக்க வைத்து எடுக்கப்படும் கற்கள் பிரேக்கரின் உதவியுடன் துண்டாக்கப்படும். பிறகு தேவைக்கு ஏற்றவாறு கிரஷரில் அரைக்கப்படும். கிரஷரில் இறுதியாக கற்கள் அரைக்கப்பட்டு எம் சேண்ட் , பி சேண்ட் மற்றும் சிலஜ் என்ற கழிவுப்பொருளும் கிடைக்கும்.

இந்த சிலஜ் சகதி போன்ற கூழ்மம். இது வெளியேறுகையில் அதிகபட்சமாக உள்ள நீரைப்பிரிக்க ஒரு வேதிப்பொருள் கலக்கப்படும். அதற்குப்பிறகு சிலஜ்ஜை ஹிட்டாச்சியின் மூலம் அள்ளி வெளியில் கொட்டி வைப்பர். சிலஜ் வெட்மிக்சில் கலக்கப்படும். சிலஜ்ஜை பாறைக்குழியில் ஓரிடத்தில் கொட்டிவைத்திருந்தனர்.
வெட்மிக்ஸ் கேட்டு ஆர்டர் வரவும் தொழிலின் தொடக்கமாக சிலஜ் கலக்க அது ஹிட்டாச்சியுடன் உதவியுடன் எடுக்கப்பட்டு லாரியில் போடப்படும். நாலு பக்கெட் போட்டதும் பக்கெட்டின் கூர்பற்களில் ஒரு மனித உடல் தொங்கியது.

ஹிட்டாச்சி ஆப்ரேட்டர் அதிர்ந்து அப்படியே கத்திவிட்டான். ஹிட்டாச்சியின் பக்கெட்டில் அந்தரத்தில் சில்ஜ் மற்றும் சிவப்பு நிறம் கலந்து பார்ப்பதற்கு கோரமாக இருந்ததது அந்த உடல்.

குவாரியில் இருந்த அனைவரும் அதிர்ந்தனர். விரைவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊர்மக்களுக்கும் தகவலை அறிய விஷயம் காட்டுத்தீயாகப் பரவி அது மீடியாவின் காதுகளையும் சென்றடைந்தது.

கிடைத்த உடலில் முகம் சேதமடையாமல் இருக்க அதை துணிகொண்டு துடைத்தனர். முகம் துடைத்ததும் அவன் முகத்தைப் பார்த்த குவாரிப்பணியாளர்கள் அதிர்ந்தனர். பணியாளர்களும் ஊர்க்காரர்களும் அந்த உடலில் பக்கத்து ஊர்க்கோயிலின் தலமைக் குருக்கள் கார்த்திகேய பூபதியின் உடல் என்று உறுதி செய்தனர்.

கோயிலில் விசாரித்ததில் அவர் இருநாட்களாக கோயிலுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. அங்கிருந்த சிசிடிவியில் பார்த்தபின் அவர் ஆற்றுக்குச் செல்லும் வழியில் கடைசியில் இறங்கியது தெரிந்தது. அவருக்குப்பின்னே கேதரீனும் , மதுவும் இறங்கியது தெரிந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் இவர்கள் இருவர் மட்டும் வர, குருக்கள் வரவில்லை. அதனால் போலிஸ் காலையில் மதுவின் வீட்டு அழைப்பு மணியை அழைத்தது.

மது இரவு அறுவைச்சிகிச்சை ஒன்றை முடித்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்கு வந்து சோபாவில் சாய்ந்திருந்தான். கேதரீன் உறங்கிக் கொண்டிருந்தாள்.

வீட்டு வாயிலில் மணியடித்ததும் சலுப்புடன் மதுபாலன் வெளிப்புறக் கேட்டில் உள்ள கேமராவில் போலீசைப் பார்த்ததும் யோசித்தவாறே கதவைத் திறந்தான். அவர்கள் நடந்த விஷயத்தை எடுத்துரைத்தனர்.

மதுபாலனுக்கு அதிர்ச்சி. அவன் நடந்த விஷயங்களைக் கூறினான். காவல் துறையினரும் இருவரும் பிரசாதம் தின்றபடி வந்ததால் இருவரையும் தற்போதைக்கு சந்தேக லிஸ்டில் வைத்திருக்கவில்லை. மதுபாலனுக்கும் கேதரீனுக்கும் ஏதாவது தெரியுமா என்று கேட்கவே வந்தனர்.

கேதரீனைப் பற்றி விசாரித்தனர். அவள் தன் நண்பனின் தங்கை எனவும் அடுத்தநாளே ஊருக்குச் சென்றுவிட்டாள் என்று பதில் கூறிவிட்டான்.

“பூபதியை யார் கொன்னுருப்பா? அவன் மேல யாருக்கு என்ன பகை இருந்திருக்க முடியும்?”

மதுவும் யோசித்துக் களைத்து உறங்கியே விட்டான்.


தமிழ்நாடு ஊட்டி. மலையில் அமைந்துள்ள பங்களாவின் கண்ணாடி கதவுகள் வழியே ஊட்டியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் அவள். அவள் காயத்தை உறுத்தாதவாறு ஸ்வெட்டரை உடுத்தியிருந்தாள். கையில் சிவப்பு நிற பீங்கான் கோப்பையில் சூடான காஃபியிலிருந்து எழும் மணத்தை நுகர்ந்தவாறி துளித்துளியாய் பருகிக் கொண்டிருந்தாள்.

“மதிமா..? என்ன பன்னிட்டு இருக்க?” என்று கேட்டவாறு வயது மூப்பினால் கொஞ்சம் தள்ளாடியபடியே நடந்த பெரியவர் உள்ளே நுழைந்தார்.

அவர் குரல் கேட்டதும் முக மலர்ச்சியுடன் நிமிர்ந்தாள்.

“தாத்தா..வாங்க. நீங்க கூப்பிட்டா நானே கீழே வந்திருப்பேன். “

“ உடம்பு சரியில்லாம இருக்கறது நீ. நான் இந்த வயசிலும் எப்படி தெம்பா இருக்கேன். பார்த்தியா?”

“என் தாத்தா எப்பவும் சக்திமேன் தான்.”

தாத்தாவும் பேத்தியும் இப்படி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பேசிக்கொண்டனர்.

“இப்ப என்னாடா தங்கம் பன்னிட்டு வந்த? உன் பிதாஜி நைட்டோட நைட்டா இங்க கொண்டு வந்து விட்டுட்டு போறான்.”

“ஆங்.. உங்க மருமகனு சொல்லுங்க.”

“ம்ம்ம்ம்..” தான் ஆசையாய் வளர்த்த ஒற்றைச் செல்வ மகளை காதல் என்ற பெயரில் கவர்ந்தது நாட்டைப் காக்கும் பணியில் இருந்தவன் என்பதால் தான் அவர் சம்மதம் கொடுத்தது. விளைவு அவரது மகளை அடிக்கடி பார்க்க முடியவில்லை.

“நீங்களாச்சு.. அவராச்சு. சரி தாத்தா இன்னிக்கு என்ன செய்யலாம். எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்கு நான் எங்கேயும் போக மாட்டேன். பிளான் பன்னி என்ஜாய் செய்யலாம். ஓகேவா?”

“சரி மதிக்குட்டி..”மாறும்....:
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom