• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நிஜமா ???

நீண்ட நாட்களுக்குப் பின் ஊருக்குத் திரும்பியிருந்தாள் மீனு. சென்னையில் புகழ்பெற்ற ஒரு அலுவலகத்தில் அவள்
வேலை பார்க்கிறாள். தான் சிறுவயதில் படித்த பள்ளி சீரமைப்பு பணிக்காக
ஒரு தொகையை இவளும் வழங்கியிருந்தாள். கட்டிடப் பணிகள் நிறைவுற்று திறப்புவிழாவிற்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். இவளும்
கனிசமான தொகையை வழங்கியதால் மீனுவுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு
இருந்ததது.

காலையில் விழாவிற்குச் செல்வதற்காகத் தயாராகிவிட்டாள்.
" அம்மா..அம்மா..கிளம்பீட்டியா மா..சீக்கீரம் மா."

" இருடி..இவ ஒருத்தி. கிளம்பிட்டேன். சாப்ட உடனே போயிரலாம்."

" சரி மா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்."

டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருந்த
பாத்திரங்களை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள்.
"ம்ம்ம்..நம்ம அம்மா வைக்கற சப்பாத்தியும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு கலந்து செய்யற குருமா
எப்பவும் தனி டேஸ்ட் தான் "

அவள் அம்மாவும் வந்துவிட உணவை உண்டுவிட்டு இருவரும் கிளம்பினர்.

பள்ளியின் புதிய கட்டிடம் புத்தம் புதிய
வெள்ளை வேட்டி போன்று வெள்ளையடிக்கப்பட்டு நிமிர்வாக நின்றது.
விழாபந்தல் மேடை எல்லாம் அமைக்கப்பட்டு காணுமிடம் எல்லாம்
தோரணங்கள் தொங்கி வண்ணமயமாக
இருந்தது.

பள்ளி ஆசிரியர்களிடம் பேசிவிட்டு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தனர்.

"அம்மா..வாம்மா ரெஸ்ட் ரூம் போய்ட்டு
வந்திடலாம்".

"சரி மீனு வா"

" அம்மா.. இங்க பாரு..இதுதான் நாங்க
படிச்ச பழைய பில்டிங். என்ன சேட்டை பன்னுவோம் தெரியுமா!!. வாமா உள்ள
போய்ட்டு வரலாம்".

" மீனு கட்டிடம் பழசா இருக்கே. உள்ள
போகனுமாடி"

" மா..பீளிஸ்..பிளீஸ்."

"சரி வா. சொன்னா கேட்கவா போற"
இருவரும் கட்டிடத்துக்குள் நுழைந்தனர்.

" என்ன மீனு ஒரே இருட்டா இருக்கு. வா மா..போன் டார்ச் யூஸ் பன்னலாம்".

" மீனு எனக்கு ஏதோ சரியில்லாத மாதிரி
இருக்கு. வா திரும்பிப் போயிரலாம்"

" அம்மா..என்ன மா? நான் படிச்ச கிளாஸ்
ரூம் பார்த்துட்டு வர்லாமா".

இருவரும் படிக்கட்டில் ஏறி இரண்டாவது
மாடிக்கு வந்தனர்.

" அம்மா..இங்க பாரு இதுதான் நான்
படிச்ச கிளாஸ்ரூம். நானும் சௌமியும்
என்ன லூட்டி பன்னுவோம் தெரியுமா! பின்னாடி உட்காரந்துட்டு தூங்கற ஸ்டண்ட்ஸ் பேப்பர் பால உருட்டி அடிச்சுருவோம். அவங்க பேந்த பேந்த முழிப்பாங்க"

" சரி மா..வா போலாம் "

" பாத்து இறங்கு மா. மீனு இங்க என்ன
இப்படி ஸ்மெல் வருது"

" நாம ஏறும் போது வரல. இப்ப மட்டும்
என்ன இப்படி ஸ்மெல்??"

" சரி வா. பங்சனுக்கு டைம் ஆச்சு"
படிகளில் இறங்கத் தொடங்கியிருந்தனர்.

" என்ன மீனு ..நாம நடக்கற பக்கமெல்லாம் ஸ்மெல் வருது"

மூக்கைப் பிடித்தபடி இறங்கிக் கொண்டிருந்தனர். அவள் அம்மாவின் தோளை யாரோ தொடுவது போல் இருக்க
திரும்பினர். சிதைந்த முகத்துடன் இரத்தம்
திட்டுத்திட்டாக ஒரு உருவம் நின்று
கொண்டிருந்தது. அதைப் பார்த்த அவள் அம்மா அப்படியே உறைந்து நின்றுவிட்டார். பேச நா எழவில்லை.

அம்மாவின் காலடி சத்தம் கேட்காததால்
இருபடி முன் இறங்கியிருந்த மீனுவும்
திரும்பினாள். அவள் அம்மா அப்படியே
நிற்பதைப் பார்த்தவள்,
" மா..என்னமா அப்படியே நின்னுட்ட?
டைம் ஆச்சு வா"
அப்படியும் பதில் வராததால் அம்மாவின்
அருகினில் வந்தாள். அங்கு நின்ற
உருவத்தைப் பார்த்த மீனுவுக்கும்
முதுகுத்தண்டு சில்லிட்டது.
வாய்..தானாக ஓம்சக்தி என்று
முனுமுனுக்கத் தொடங்கியது.

"அம்மா..
வா மா போலாம்..ஓம் சக்தி சொல்லிட்டே வா மா"
அவள் அம்மாவைக் கைப்பிடித்து இழுத்துச் செல்லத் தொடங்கினாள்.

"ஓம்
சக்தி. ஓம் சக்தி. ஓம் சக்தி."

தடதட வென படிகளில் ஓடத் தொடங்கியிருந்தனர். மீனு அவள் அம்மாவை இழுத்தபடி ஓடக் கொண்டிருந்தாள்.

முதல் தளத்திற்கு செல்லும் வழியில்
அவள் அம்மா நகராமல் நின்றுவிட்டிருந்தார்.
"அம்மா..அம்மா..வா..நிக்காத..வாமா."
அம்மாவிடம் அசைவில்லை. அவர் கண்களின் கருவிழி மேற்புறம் நோக்கி
நின்றது.

அந்த உருவம் அவள் அம்மாவை
ஒரே அடி.

"ஓடு மீனு நிக்கா...."அதற்குள்
அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
மீனு கண்களில் நீர் வழியத்தொடங்கி
குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

அந்த உருவம் மீனுவைப் பார்த்து
கோரமாகத் சிரித்தது.

"உன்னையும் இப்படித்தான் கொல்லப் போறேன்"

மீனுவுக்கு தன் நிலமை புரிந்தது. மூளை அதிவேகமாக இயங்கத் தொடங்கியது.

" ஓம் சக்தி " என்ற நாமத்தைக் கூறிக்கொண்டே ஓடத் தொடங்கினாள்.
இறைவியின் நாமம் பலனில்லை.
அந்த உருவம் அவள் கையைப் பிடித்திருந்தது.
" நீ சொல்றது எல்லாம் என்ன ஒன்னும்
செய்யாது" அவளை நோக்கி தனது
கையை ஓங்கியது.

" அம்மாமாமா..."என வீறிட்டபடி தூக்கத்திலிருந்து விழித்தாள் மீனு.
அவள் உடல் முழுக்க வியர்வை.

"என்ன கனவு இது எனக்கு எதுவும் ஞாபகம்
இல்லை."
மீண்டும் படுத்தாள் உறக்கம் வரவில்லை.

அடுத்தநாள் காலை மீனுவின் அலைபேசி ஒலித்தது. காதில் வைத்து
ஹலோ என்றாள்.

" மீனு..நான் உங்க ஊரு ஸ்கூல் டீச்சர்
பேசறேன். திறப்புவிழாவுக்கு பத்திரிக்கை
உன் அட்ரஸுக்கு வரும். வந்துருமா."

" கண்டீப்பா..டீச்சர்.. வரேன்" தேவையானவற்றைப் பேசி அழைப்பைத்
துண்டித்துவிட்டாள்.

திறப்புவிழா நாள். பள்ளிக்கு அவளும்
அம்மாவும் சென்றிருந்தனர். மீனுவுக்கும்
காலையில் இருந்தே ஒரே குழப்பம்.

அம்மாவை அழைத்துக் கொண்டு ரெஸ்ட் ரூம் செல்லும் வழியில் அந்த பழைய கட்டிடத்தைப் பார்த்தாள்.

" அம்மா இந்தக் கட்டிடத்தை டெமாலிஷ் பன்னலயா? இத இடிக்கறத டீச்சர்
சொல்லியிருந்தாங்க.. இடிக்கலயா.."
எனக் கூறி முடிப்பதற்குள்..பழைய கட்டிடத்தின் சன்னல் வழியே இரு கைகள் நீண்டு அவளையும் அம்மாவையும் உள்ளே
இழுத்திருந்தன.

முற்றும்..
 
Attachments

  • ei9J9EP95691.jpg
    ei9J9EP95691.jpg
    458.7 KB · Views: 94

Nithya Mariappan

✍️
Writer
பேய் இருக்கா இல்லயா? வந்துச்சா வரலயா? கனவா நிஜமா? அதான் கனவு வந்துச்சுல்ல. அப்ப எதுக்குமா மீனு அங்க போற☹️☹️🤕🤕 நல்லா இருக்கும்மா கதை... சூப்பரா பயம் காட்டிட்டீங்க... அப்பிடியே பெரிய பேய் கதை ஒன்னு எழுதலாம்லா
 
Santirathevan_Kadhali

2.17 am ku padika nalla tigil kathai kidachatu super akka innum niraiya yeluthunga
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom