• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நான் பேச நினைப்பதெல்லாம்

Balaji

✍️
Writer
செக்க சிவந்த வானம் படர்ந்து விரிந்த பொன் மாலை பொழுது.மழை வருமா வராத என்று இரு புறமும் யோசிக்கும் அளவுக்கு சற்றே வேகமான காற்று.

அந்த வெறிச்சோடிய ரயில் நிலையத்தில் ஒரு சிலரே ரயிலுக்காக காத்திருக்க,அவர்களுக்கு அந்த அரசமரத்து காத்தும் அதனால் எழும்பும் அழகான சத்தமும் அவர்கள் மனதிற்கு இனிமையான இதத்தை கொடுத்தது.

அங்கே இருக்கும் கல்லூரியிற்காகவே ரயில் நிலையம் இங்கே அமைத்திருந்தாலும்,இந்த ரயில் பாதையில் பல ஊர்களுக்கு செல்ல முடியாது என்பதால் சில மாணவர்களே ரயிலில் பயணிப்பார்கள்.

அங்கே காலை வைத்து தரையில் கிடக்கும் கற்களை உதைத்தவாறு நின்றிருந்த ரமேஷ்,அங்கே இவனை நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பும் அஞ்சலியின் செயல்களை பார்த்தவாறு இருந்தான்.இருவரில் யார் இந்த ஈகோவை விட்டு முதலில் பேசுவது என்று புரியாமலே,இந்த இரண்டு மாதமும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாது இவ்வாறே தங்கள் நாட்களை கடத்தினர். இருவரும் ஒரே கல்லூரியில் வெவ்வேறு துறையை எடுத்து படிக்கும் நான்காம் ஆண்டு கல்லூரி மாணவர்கள்.இல்லை இல்லை இந்த கல்லூரி சாலையில் இணைந்து தற்போது பிரிந்து வாழும் முன்னாள் காதலர்கள்.

வயதும் மனதும் இன்னும் மனங்கள் இணைய தேவையான முதிர்வை அடையாததாலோ,இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்த பொழுதும்,தங்களுக்குள் வந்த சிறு மனவருத்தத்தால் இரண்டு மாதங்களாக பேசிக்கொள்ளவே இல்லை.

இந்நிலை அவ்வாறே நீடிக்க தற்போது இன்னும் சில நாட்களில் கல்லூரியும் முடிய போகிறது.அதனால் தங்களுக்குள் நிகழ்ந்த அந்த கசப்பான நிகழ்வை எப்படியாவது மறந்து, இருவரும் இனிதாக இக்கல்லூரி வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்று நினைத்தான் ரமேஷ்.ஏனென்றால், அதன் பின் அவள் எங்கோ நான் எங்கோ செல்ல போகிறோம்,தற்போது இந்த வருத்தத்தை நீக்கவில்லை எனில் அது வாழ்நாளில் சேர முடியாதவாறு தங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தி விடும் என்று பயந்த ரமேஷ் இதை இப்பொழுதே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தான்.

வழக்கம் போல ட்ரெயின் வருவதற்கான அறிவிப்பு ஒலிக்க,அவளோ அதை எதிர்பார்த்தவளாக ரயில் தடத்தில் ரயிலின் வருகைக்காக கண் பதித்து காத்திருந்தாள்.

அவனோ இதற்கு மேல் தாமதிக்க கூடாது என்று நினைத்துக்கொண்டே அவளை நெருங்கினான்.அவளுக்கோ அவன் அருகில் வர வர அவன் என்ன கூற போகிறான்?அவன் தன்னிடம் மன்னிப்பு கோர போகிறானா?இல்லை இதோடு தன்னை மறந்து விட போகிறானா?நாமே மன்னிப்பு கேட்டிடுவோமா?அவன் கேட்பதற்கு என்ன பதில் சொல்வது?ஏற்றுக்கொள்ளவா? இல்லை இன்னும் சில காலம் கோபத்தை தூக்கி பிடிக்கவா?என்று பல எண்ணங்கள் தொடர் வண்டியாக அவள் மனதில் ஓடியது.
அவள் அருகில் வந்து நின்ற ரமேஷோ அவளின் கவனத்தை பெற எண்ணி தொண்டையை செரும,அவளோ இன்னமும் அவனை தரையை பார்த்த வாறே நின்றிருந்தாள்.

ரமேஷோ " அஞ்சுமா..அஞ்சுமா..கொஞ்சம் உன் கூட பேசணும் மா.. ப்ளீஸ் உங்க கோவத்தை மறந்து ஐந்து நிமிஷம் ஒதுக்க முடியுமா? "என்று பாவமாக கேட்டான்.

அஞ்சலிக்கோ துள்ளி குதிக்கும் அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது அவன் பேச்சு, அத்தோடு அவனிடம் இரண்டு மாதங்கள் பேசாமல் கோபம் கொண்டு இருந்தோமே தாமாவது சென்று பேசியிருக்கலாமே என்று எண்ணிய போது கண்ணீர் எட்டி பார்த்தது.அந்த அனைத்து உணர்வுகளையும் அவன் அறியாது மறைத்தாள்.

அஞ்சலி " நீ தான் நான் ரொம்ப திமிரு பிடிச்ச பொண்ணு.. உன்கூடலாம் மனுஷன் பேசுவானா என்னோட முகத்திலே முழிக்காத சொல்லிட்டு போனியே.....அப்ரோம் ஏன் கூட பேச என்ன வேண்டியிருக்கு.....கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.. "என்று வேணுமென்றே அவனை அலைய விட கூறினாள்.

ரமேஷோ ' நீ இன்னும் நிறைய அனுபவிக்கணும் போல டா.. ஹ்ம்ம் கெஞ்சறது முடிவாயிருச்சு எந்த எல்லைக்கு போனாலும் இன்னைக்கு சமாதானம் படுத்தியே ஆகணும்.. 'என்று நினைத்துக்கொண்டவன் அவளிடம் "காலேஜ்-ல நீ திடீர்னு சேர் மேன் அப்போஸ் பண்ணி தைரியமா போராட்டம் பண்ணுவ நான் நினைக்கவே இல்ல.. அதை பத்தி நான் யோசிச்சு உன்கிட்ட பேச வரதுக்குள்ள நீ என்னையும் இதுக்கு சப்போர்ட் பண்ண கூப்பிட்ட.. எனக்கு நிலைமையே புரியாம இருக்கும் போது நீ அப்படி அவங்களுக்கு எதிரா நம்ம போராடியே ஆகணும் காலேஜ் ல எதுவுமே சரி இல்லன்னு சொல்லும் போது, என்னால அது என்ன பிரச்சனை யோசிக்க முடியல,இதுக்குலாமா போராட்டம் பண்ணுவாங்க தோணுச்சு.. அதுனால நான் கொஞ்சம் கோபப்பட்டேன் ஆனா நீயும் கடைசி வரைக்கும் என்ன பிரச்சனை சொல்லாம என்னை செமையா திட்டுன..எனக்கு கோபம் வந்துச்சு அதுனால நானும் அப்படி சொல்லிட்டு அன்னைக்கு வந்துட்டேன்.. ஆனா ஸ்வாதிகிட்ட கேட்டு தான் அதுக்கு அப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன் காலேஜ் ஹாஸ்டல்ல ரொம்ப நாளா சரியான நேரத்துக்கு தண்ணி வரதில்ல போடுற சாப்பாடும் சரியில்லன்னு..இதை ஹாஸ்டல் பசங்க கேட்க பயந்ததால நீயே அவளோட சேர்ந்து இதுக்கு நிர்வாகம் காரணமா இல்ல அந்தந்த வேலை பார்க்கிறவங்க தங்கள் சுயநலத்துக்காக செய்யுற தப்பான்னு சேர் மேன் கிட்ட கேட்டு போகும் போது அவர் உங்களை இதை பத்தி எங்கேயும் பேச கூடாதுன்னு மிரட்டுனாரு சொன்னா.. அதான் நீ போராட்டம் பண்ணலாம் முடிவெடுத்து ஸ்டூடெண்ட்ஸ் கூட பேசி களத்துல இறங்கியிருக்க சொன்னாங்க..அதுக்கு அப்புறம் நானும் இது சரி தான் யோசிச்சு அந்த போராட்டத்துல உன் கூட சேர்ந்து கலந்துகிட்டேன்.. ஆனா நீ என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசல.. எனக்கு ஏற்கனவே நான் தப்பு பண்ணிட்டேங்கிற குற்றவுணர்ச்சி இருக்கும் போது நானா வந்து உன்கிட்ட பேச என்னால முடியல.. நீயா கொஞ்ச நாள்ல வந்து பேசுவ நினைச்சேன் ஆனா பேசல.. என்னால இதுக்கு மேல நீ கொடுக்கிற விலகளோட வலியையும் இந்த குற்றவுணர்ச்சியும் தாங்க முடியாது அதான் நானே எதை பத்தியும் யோசிக்காம நேரடியா உன்கிட்ட மன்னிப்பு கேற்கலாம் வந்தேன்.. என்னை மனிச்சிடு அஞ்சுமா.. "என்று அனைத்து தப்பிற்கும் தான் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டு மெய்யாக வருந்தி மன்னிப்பு கேட்டான் ரமேஷ்.

அஞ்சலி "நீ மன்னிப்பு கேட்டா நாங்க உடனே மன்னிச்சு என் காதலேன்னு உன்கிட்ட வந்து பேசனுமா போடா.. நீ என்னை எவ்வளவு ஹர்ட் பண்ணிட்ட தெரியுமா?.. நீ வந்து சாரி கேட்ப திருப்பி பேசுவ பேசுவ எத்தனை நாள் ஏக்கத்தோட காத்திருந்தேன் தெரியுமா?.. இப்போ நீ மன்னிப்பு கேட்டாலும் உன்னை நான் மன்னிக்கிற மூட் லே இல்ல போ போ.. நல்ல வேளை இன்னைக்காவது வந்து கேட்ட நான் வேற நாளையில இருந்து உன் மூஞ்சிலே முழிக்க கூடாதுன்னு இருந்தேன்.. பட் உன்னை ஏத்துக்குவேன் மட்டும் நினைக்காத உன்னை ஏத்துகவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்.. எனக்காக மேகத்தை காகிதம் ஆக்கி வானின் நீலம் கொண்டு தீட்டிய காதல் கடிதம் கொண்டு வா அப்போ மன்னிக்க முடியுமா பார்க்கிறேன் இப்போ போ போ.. "என்று கூறிவிட்டு பார்க்க ரயில் வரும் சத்தம் கேட்டது.

ரமேஷோ 'இவ என்ன மன்னிப்பு கேட்டு பேசுவன்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் சொல்லுறா.. நீ மட்டும் இன்னைக்கு பேசியிருக்கலனா உன் முகத்திலே இதுக்கு மேல முழிச்சிருக்க மாட்டேன்னும் சொல்லுறா.. ஆனா இதெல்லாம் சொல்லிட்டு மன்னிப்பு கேட்டாலும் ஏத்துக்க மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன் சொல்லுறா..இதுல ஜோடி பட பாட்டை கேட்டுட்டு என்னை கொல்லுறாளே ஐயோ இவளை எப்படி சமாளிக்கிறதுனே தெரியலையே.. இவை என்ன தான் சொல்ல வரா குழப்பமா இருக்கே.. ஓ என்ன இன்னும் சுத்தல்ல விட முடிவு பண்ணிட்டா போல.. ரமேஷ் நீ இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கு டா ' என்று நினைத்து கொண்டவன் அஞ்சலியை பார்த்து "இங்க பாரு அஞ்சுமா தும்பி பறக்குறத.. மழை வர போறத உணர்த்துற மாதிரி தும்பி பறக்குது அது எப்படி மழை வரத சரியா உணருதோ,அதே மாதிரி நானும் நீ எப்போ சமாதானம் ஆவன்னு சரியா உணர்ந்து அந்த டைம்ல தான் மா கேட்பேன் .."என்று அவன் இத்தனை நாள் பேசாமல் இருந்ததற்கு நியாயம் புகட்ட முயல அதுக்கு அவளும் பதில் கூற முயல ரயில் ஒலியின் சத்தத்தில் அது ரமேஷின் காதில் கேற்கவில்லை.

இவளும் கத்தி கத்தி ஏதோ கூற அவனோ காதை குறிப்பிட்டு எதுவும் கேட்க வில்லை என்று செய்கையில் கூறினான்.

அவளும் அதன் பின் அமைதியாக ரயில் நிற்பதற்காக காத்திருக்க அது நின்றதும் ஒரு ரயில் பெட்டியில் ஏறினாள். அவனும் அவள் பின்னே அதே பெட்டியில் ஏறியவன் அவள் அமர்ந்த ஒற்றை இருக்கையின் எதிரில் அமர்ந்தான்.

ரமேஷ்"இப்போ சொல்லு அஞ்சுமா.. என்ன சொல்ல வந்த அங்க.. என்ன மன்னிச்சுடலாம் முடிவு பண்ணிட்டியா.. "என்று புன்னகையோடு கேட்க அஞ்சலியோ "இந்த தும்பி பறக்கிற அன்னைக்கு மழை வந்து நான் பார்த்ததே இல்ல.. இந்த தும்பிக்கு மழை தெரியாது ஆனாலப்பட்ட மனித ஜீவன் நம்மலாலே அதை கணிக்க முடியல,அப்புறம் இந்த தும்பிக்கு அது எப்படி தெரியும் யோசிக்கவே மாட்டுறாங்கையா நம்ம ஊரு ஆளுங்க..இந்த மழைக்கும் தும்பிக்கும் இருக்கிற கனெக்ஷன் ஒரு மிஸ்கன்செப்ஷன் நினைக்கிறேன்.. அதே மாதிரி தான் நீ என்ன புரிஞ்சி வச்சிருக்கேன் சொல்லறதும் ரமேஷ்.. புரிஞ்சிக்கோ.. "என்று கூறிவிட்டு அங்கே படரும் இரவையும் அந்த வேகமான காற்றையும் ரசித்தவாறு சாளரத்தை பார்த்து அமர்ந்தாள்.

ரமேஷோ 'அட போங்கடா இதுக்கு மேல டயலாக் சொல்லலாம் என்கிட்ட தெம்பு இல்ல 'என்று நொந்து கொண்டவன் அவன் புறம் இருக்கும் சாளரத்தை வெறித்தவாறு அமர்ந்தான்.இதனை பார்த்த அஞ்சலியோ அவன் அறியாமல் சிரித்துக்கொண்டாள்.

அவர்கள் இருவரும் இடமும் வந்து சேர ரயிலில் இருந்து இறங்கினர்.

இவன் படும் பாடு அந்த கடவுளுக்கும் தெரிந்ததோ என்னமோ இருவரும் ரயிலை விட்டு இறங்கவும்,பெரும் மழை திடீரென பொழிய ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

மழையில் மாட்டிக்கொள்ளாது இருவரும் வேகமாக மழை சாரல் அடிக்காத இடமாக பார்த்து ஒதுங்கினர்.

அவள் மழையை ரசித்துக்கொண்டிருக்க ரமேஷோ அவளை பார்க்காது மழை பொழிவதை பார்த்தவாறே "யாரோ சொன்னாங்க மழை வரது தும்பிக்கு தெரியாதுன்னு, ஆனா இங்க இப்போ மழை பெய்யுதே.. அதே ஆள் நான் என்னோட அஞ்சுவை புரிஞ்சு வைச்சுக்குலேன்னும் சொன்னாங்க.. அவங்க கிட்ட நான் சொல்லிக்கிறது என்னென்னா தும்பிக்கு கூட மழையை பத்தி தெரியாம இருக்கலாம் ஆனா அஞ்சுவை பத்தி இந்த ரமேஷுக்கு நல்லாவே தெரியும்.. "என்று சத்தமாக கூறியவன் அஞ்சலியை பார்த்து "என்ன அஞ்சுமா நான் சொல்லறது சரி தானே? "என்று கேட்டு புன்னகைக்க அவளும் இதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் அவனை பார்த்து புன்னகைத்தவள் அவன் முதுகில் ஓர் அடி போட்டாள்.

அதை ஊதி தள்ளியவன் அவளை பார்த்தவாறே "அஞ்சுமா சிரிச்சுட்டா.. அப்போ என்ன மன்னிச்சுட்டா அர்த்தம்.. "என்று விளக்கம் கொடுக்க அவளோ "போடா டேய் போடா.. "என்று கூறினாள்.

இதை கேட்ட ரமேஷோ "ரமேஷ் ரொம்ப பாவம் அஞ்சுமா அவனை மன்னிச்சுடு.. இதுக்கு மேல அவன் இப்படிலாம் முழுசா உண்மையை தெரிஞ்சுக்காம உன் மேல இல்லல்ல யார் மேலையுமே கோபப்பட மாட்டான்.. "என்று அவனுக்கு அவனே நியாயம் கூற அவளோ "ஹ்ம்ம்.. சரி ரமேஷ மன்னிச்சிடுவோம் அவனும் பாவம் தான்.. "என்று யாரையோ கூறுவது போல் கூற அதற்கு மேல் இருவராலும் சிரிப்பை அடக்க முடியாது சிரித்து விட்டனர்.அவர்கள் காதல் மீண்டும் இனிதே மலர்ந்தது.

" நான் பேசா வார்த்தைகள் யாவும் நீயே அவளிடம் பேசிடு
நான் கூறா செய்திகள் எல்லாம் நீயே அவளிடம் சேர்த்திடு
நான் நித்தமும் செலவிடும் நொடிகள் அவளுக்காகவே என்றிடு
நான் பேச நினைப்பதெல்லாம் அவளிடம் நீயே இயம்பிடாயோ இயற்கையே"

----------------------------------------------------------
 
amirthababu

Active member
Member
ஈகோ வை களைந்து பேசினாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். நல்லா இருந்துச்சு
 
Balaji

✍️
Writer
ஈகோ வை களைந்து பேசினாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும். நல்லா இருந்துச்சு
நன்றி அக்கா😃😃😃😃😃
 
Santirathevan_Kadhali

super pa thambikutty
 
பிரிய நிலா

Well-known member
Member
ரமேஷ் பேச நினைத்ததை எல்லாம் பேசி விட்டான் போல...
சண்டை ஏற்படும் போதே அவர்களின் உறவின் வலிமையை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இதேபோல் ரமேஷ் எப்போதும் முதலில் இறங்கி வரவேண்டும் என அஞ்சலி நினைத்துவிட்டால் பிரச்சனை தான்..
அருமை...
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom