• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய "என் இனிய இன்பனே"

ஓம் ஸ்ரீ சாயிராம்

நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய “என் இனிய இன்பனே”

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை (அதாவது எனக்கு இன்பாவை ஏன் ரொம்பப் பிடித்தது என்பதைப் பற்றி) உங்களிடம் பகிர்கிறேன் நர்மதா.

‘அழகிய அன்னமே’ கதையில் நீங்கள் எழுதிய இரண்டு காட்சிகளைப் படித்தப் பின்தான், இன்பாவிற்குத் தனிக்கதை எழுதச்சொல்லி உங்களிடம் கேட்கவேண்டும் என்று தோன்றியது.

என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, நீங்கள் எடுத்த ஆத்மார்த்தமான முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் நர்மதா.

1. மனைவியிடம் தன் முன்னாள் காதலைப் பற்றி சொல்லாமல், மூடி மறைத்ததோடு மட்டுமில்லாமல், நங்கையிடம் பேச, அவன் எடுத்த முயற்சிகள் யாவற்றையும் கண்டு “இன்பாமேல் கோபம்” வந்தது.

2. பிறர் மனத்தை நோகடித்துப் பேசத் தெரியாத ராஜன், இன்பாவிடம் கர்மா, பாவம், புண்ணியம் என்றெல்லாம், சாபம் விடாத குறையாகப் பேசியபோது, எங்கள் ராஜனை ஏன் அப்படிப் பேசவைத்தீர்கள் என்று “உங்கள்மேல் கோபம்” வந்தது.

ஆக, கோக்கிமா! இன்பாவுக்குத் தனிக்கதை கேட்ட என் நோக்கம், “கள்ளம் கபடமில்லாத சிந்து” மற்றும் “பொறுமையின் சிகரம் ராஜனு”க்காகத் தான்.
இன்னும் சொல்லப்போனால், எனக்கும் இன்பாவை வச்சு செய்யணும்னு தான் ஆசை. உண்மைகளை அறிந்த சிந்து பத்திரகாளியா மாறுவான்னு ரொம்ப ஆசையா காத்திருந்தேன்.

ஆனால், இந்த ஆத்தர் தன் கற்பனை வளத்தாலும், உணர்வுப்பூர்வமான சொல்லாடலாலும், சிந்துவையும் சரி, என்னையும் சரி இன்பா பக்கம் ஈர்த்துட்டாங்கன்னு தான் சொல்லணும்.

என் மனத்தை நெருடிய இரண்டு விஷயங்களையும், எங்கேயும் எதற்காகவும் நியாயப்படுத்தாமல், இயல்பாகக் கதையை நகர்த்திய உங்கள் திறனுக்கு சல்யூட் நர்மதா.

படிப்பறிவு இல்லாத சிந்துவை இன்பா தன் ஆதாயத்துக்காக(காதல் தோல்வி) மணந்துகொண்டிருப்பானோ என்ற பிம்பம் தான் அவனைப் பற்றி, ‘அழகிய அன்னமே’ கதையில் இருந்தது.

ஆனால் சிந்துவின் அறிமுகம், அவர்கள் முதல் சந்திப்பு, இருவருக்குள்ளும் துளிர்த்த நட்பு, அது காதலாய் மாறிய தருணம் என்று ஒவ்வொன்றும் சற்றும் எதிர்பார்க்காத கோணத்தில், வித்தியாசமாகவும் ரசனையாகவும் இருந்தது.
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, தன் மனைவியின் படிப்பறிவையோ, வளர்ந்த சூழலையோ கனவிலும் குறையாக நினைக்காத இன்பாவின் நற்குணம் அசத்தல் என்றால், அவள் திறமைகளை ஊக்குவித்து, தன்னம்பிக்கை நிறைந்தவளாக மாற்றிய அவன் செயல் அதற்கும் ஒருபடி மேல். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.1)

சுரேன் அப்பா தன் முன்னாள் காதலியின் தந்தை என்று அறிந்தபோதும், அவர் அறிவிப்பே இல்லாமல் வீட்டிற்கு வந்து குற்றம் சுமத்தியபோதும், நிதானம் கடைப்பிடித்தும், தன் சூழ்நிலையை எடுத்துச் சொல்லியும், சிறிதும் தயக்கமின்றி மன்னிப்பு கேட்ட இன்பாவின் பொறுமையை என்ன நான் சொல்ல. (இன்பாவை ஹீரோவாக ஏற்க Point No. 2)

அவனுக்கு இணையாக, சுரேன் அப்பாவும் நிதானமாகச் செயல்பட்ட போதுதான் மனம் கனத்தது ஆத்தரே.

அவர்கள் முதல் கைபேசி உரையாடலும் இதே மாதிரி சுமூகமாக இருந்திருந்தால் பிரச்சனைகளே வந்திருக்காது அல்லவா என்று தோன்றியது. (ஆனால் வரதராஜ பெருமாளின் உண்மை பக்தனின் வேண்டுதல் நினைவில் வர, எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி மனத்தைத் தேற்றிக்கொண்டேன்.)

யாரிடம் பேசத்தெரியாமல் பேசி தன் காதலில் மண் அள்ளிப்போட்டுக் கொண்டானோ, அவராலேயே அவன் திருமண வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஜீன்ஸ் டிஷர்டில் வந்த சுரேன் அப்பாவின் காட்சிகள் மனத்தைக் கொள்ளைக்கொண்டது.

தோளுக்கு மேல் வளர்ந்தாலும், தந்தையைக் கண்டதும் குழந்தையாக மாறி, செய்த தவறுகளுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டும், அவர் சொல்லே வேதமென்று அவர் அறிவுரைகள் படி நடந்த இன்பாவின் செயல்கள் அத்தனையும் அருமை. (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.3)

மகனின் கோணத்தில் சிந்தித்து, அவனுக்குத் தார்மீக ஆதரவு தந்ததோடு மட்டுமில்லாமல், பனிப்போர் கொண்ட குடும்பத்தினரை இழுத்துப் பிடித்து குடும்ப உறவுகளின் மகத்துவத்தை எடுத்துச்சொன்ன கந்துப்பாவும் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டார்.

குறிப்பாக, கட்டியவள் எப்பேர்ப்பட்டவளாயினும், அவளிடம் ஒளிவுமறைவுகள் இருக்கவே கூடாது என்று அவர் மகனுக்குப் போதித்த இல்லற தர்மம், மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. பூர்ணம்! You are truly blessed.

சுரேன் அப்பாவும், கந்துப்பாவும் தான் இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள்.

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதை மறுபடியும் செய்யக்கூடாது என்று ஆத்மார்த்தமாக எண்ணும் ஒருவனின் முயற்சிகளைப் பாராட்டத் தானே வேண்டும்.

நங்கை விஷயத்தில் சுயமாக முடிவெடுக்கத் தெரியாமலும், கோழையாகப் பின்வாங்கி பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருந்த அதே இன்பா தான், சிந்துவிற்காக, சுயநலம் படைத்த அவள் மாமனிடமும், காரியவாதிகளான தன் அண்ணன் குடும்பத்தினரிடமும், பழிச் சுமத்திய தன் அன்னையிடமும் நிமிர்வாகப் பேசினான்;

கணவன், “நான் இருக்கிறேன்!!!” என்ற நம்பிக்கையை அளித்தான். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.4)

(For Nangai Fans: இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நங்கை விஷயத்தில் அவன் செயல்களை மன்னிக்க முடியாதுதான். ஆனால் அதே சமயத்தில், இன்பா விலகிப்போனது முற்றிலும் தவறு என்றால், அவனை அந்த நிலைமைக்குத் தள்ளிய நங்கைக்கும்(Pressurizing him for marriage)அதில் சிறிய பங்கு உண்டு. மேலும் அந்த நேரத்தில் அவர்கள் வயது, Maturity Level, முக்கியமாக இருவரின் அம்மாக்களும் தந்த அழுத்தம் என்ற அனைத்தும் அவர்கள் பிரிய காரணமாக இருந்தது என்று சொல்லவேண்டும்.)

அனுபவம் தந்த கசப்பான பாடத்தில், அன்னம் விஷயத்தில் Team Leader என்பதைத் தாண்டி, பாதுகாவலராக நடந்துகொண்டு இன்பாவின் ஒவ்வொரு செயலும் உயர்ந்தது. இன்னும் சொல்லப்போனால், Team Leader என்று வரும்போது, எங்கள் ராஜனை விட சிறப்பாகச் செயலாற்றினான் என்று தான் சொல்லவேண்டும். (இன்பாவை ஹீரோவாக ஏற்க, Point No.5)

ராஜன் இன்பாவைக் கடிந்து பேசிய அந்த நெருடலான காட்சிக்குப் பின்னால், இரு குடும்பங்களிலும் நடந்த நிகழ்வுகளை நீங்கள் சித்தரித்த இடம் சூப்பரோ சூப்பர்.
அதுவும், சிந்துவும், சுரேன் அப்பாவும் பேசிய வசனங்கள் அதிரடி சரவெடிதான்.
மனஸ்தாபங்கள் மறந்து உறவாடும் ஜோடிகளின் காட்சியில் உச்சிகுளிர்ந்து போனேன். அந்த குரூப் ஃபோட்டோவை பருகிய என் விழிகளும், மனமும் நிறைந்துவிட்டது. Thank you soooooooo much.

இன்னார்க்கு இன்னார் என்று சொல்லும்விதமாக, காதலின் வெற்றி தோல்விகளையும், திருமண பந்தத்தின் சண்டை சமாதானங்களையும், குடும்ப உறவுகளின் நிறைகுறைகளையும் எடுத்துச் சொல்லும் விதமாக நேர்த்தியான குடும்பக் கதை தந்த தோழி நர்மதாவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

கதைக்கான லிங்க்:

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்

@Narmadha Subramaniyam
 
Awesome Review Vidya.. kathai pattriya ungal paarvaiyum athai neengal pagirnthu kollum vithamum vera level. Thank you so much for this lovely analysis and review of the story :love:
 
இன்னார்க்கு இன்னார் என்று சொல்லும்விதமாக, காதலின் வெற்றி தோல்விகளையும், திருமண பந்தத்தின் சண்டை சமாதானங்களையும், குடும்ப உறவுகளின் நிறைகுறைகளையும் எடுத்துச் சொல்லும் விதமாக நேர்த்தியான குடும்பக் கதை தந்த தோழி நர்மதாவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும்💜💜💜💜💜 பாராட்டுகளும்.

கதைக்கான லிங்க்:

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்

@Narmadha Subramaniyam
மிக்க நன்றி 💜 💜 💜 💜
 
Latest profile posts

#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 28
உமா அங்கே கழற்றிப்போடப்பட்டிருந்த செருப்பைக் கண்டதும் கோபம் தாளாமல் அதைக் கையில் எடுத்தார்.
ஆவேசமாக மூர்த்தியை நெருங்கியவர் மாறி மாறி அவரது கன்னத்தில் மொத்த கோபத்தையும் காட்டி செருப்பால் அடிக்கத் துவங்கினார்.
‘ஷப் ஷப்’பென செருப்பால் அடித்தவரின் கை தனியே கழண்டுவிடுவது போல வலித்தது என்றால் அடி வாங்கிய மூர்த்திக்கு எப்படி வலித்திருக்கும்?
அடித்து கை ஓய்ந்த பிறகு செருப்பைத் தரையில் வீசிய உமா “இனிமே உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லய்யா… நீ எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்ல” என்று கத்த
“வாயை மூடுடி… என் தயவுல தான இத்தனை நாள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த… அப்பிடி என்ன நான் பண்ணிட்டேன்? ஏதோ சபலத்துல கொஞ்சம் தடுமாறிட்டேன்… நான் ஆம்பளைடி… அப்பிடி இப்பிடி தான் இருப்பேன்… என்னை நம்பி வந்த நீ இதை அட்ஜஸ்ட் பண்ணணும்… இல்லனா நீயும் உன் பிள்ளையும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நடுத்தெருவுல தான் நிக்கணும்” என்றார் மூர்த்தி கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல்.
உமாவுக்கு வந்த ஆத்திரத்தை மறைக்காமல் வார்த்தையில் காட்டினார்.
“சீ! உன்னை மாதிரி பொண்டாட்டிக்கு உண்மையா இருக்க முடியாதவன் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நான் இருப்பேன்னு நினைச்சியா? எந்தக் காலத்துல நீ வாழுற? இந்தக் காலத்துல எந்தப் பொண்ணும் ஆடம்பர வாழ்க்கைக்காக புருசனோட ஒழுக்கக்கேட்டை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகமாட்டா… நான் ஏன்யா உன் கேவலமான குணத்தை அட்ஜஸ்ட் பண்ணணும்? நீ வக்கிரம் பிடிச்சவன் மட்டுமில்ல, மனோவியாதி உள்ளவன்… உன்னைச் சட்டம் சும்மாவிடாது… நீயாச்சு உன் பணமும் பவுசுமாச்சு… இதை நீயே வச்சு அழு… இத்தனை நாள் என் புருசனோட அன்பு உண்மையானதுனு கண்மூடித்தனமா நம்புனதால இங்க இருந்தேன்… எப்ப நீ இவ்ளோ கேவலமானவன்னு தெரிஞ்சுதோ அப்பவே உனக்கும் எனக்குமான உறவை மானசீகமா முறிச்சிட்டேன்”
மூர்த்தியிடம் ஆவேசமாகப் பேசிவிட்டு ஆனந்தின் கையைப் பிடித்துக்கொண்டு சமாதானபுர வீட்டிலிருந்து கிளம்பியவர் தந்தையிடம் அனைத்தையும் கூறிவிட்டு அறையில் வந்து அமர்ந்ததோடு சரி, பின்னர் யாரிடமும் பேசவில்லை.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-28.5469/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 27
சரபேஸ்வரன் அலுவலக உடையை மாற்றிவிட்டு வந்தவன் “நைட் டின்னருக்கு என்ன கவி?” என்று கேட்டபடி அவளருகே அமர்ந்தான்.
“உப்புமா”
அந்தப் பதிலில் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.
“சேமியா உப்புமாவா? ரவா உப்புமாவா?”
சங்கவி அவனது கேள்விக்குப் பதில் சொல்லாது புருவத்தை உயர்த்தவும் காரணத்தைக் கூறினான் சரபேஸ்வரன்.
“எனக்கு உப்புமா சுத்தமா பிடிக்காது... கல்யாணத்துக்கு முன்னாடி எங்கம்மா எனக்குப் பிடிக்காதுனு உப்புமா செய்யவே மாட்டாங்க தெரியுமா? சேமியா உப்புமா கூடப் பரவால்ல... ரவா உப்புமா இஸ் ஈக்வல் டு ஆலகால விசம்”
“குடும்பஸ்தன் ஆனதுக்குக் கிடைக்குற முதல் ரிவார்ட் இந்த உப்புமா தான்... இனிமே நான் வெண்ணி போட்டுக் குடுத்தாலும் அதைப் பாயாசம்னு நினைச்சுக் கண்ணை மூடிக் குடிச்சுட்டுப் பாராட்டப் பழகிக்கோங்க”
சங்கவிக்கு இருந்த அலுப்பில் அவள் பொறுமையாகப் பதில் சொன்னதே பெரிது!
சரபேஸ்வரனுக்கும் வேலைப்பளு அதிகமே! என்ன செய்யலாமென யோசித்தவன் திடுதிடுப்பென “கிளம்பு கவி” என்கவும் சங்கவி திகைத்தாள்.
“எங்க?”
“லாங் ட்ரைவ் போயிட்டு வருவோம்”
“இப்பவா? இப்பிடியேவா?”
சங்கவி தன்னையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டாள்.
டீசர்ட்டும் பளாசோவும் அணிந்து க்ளட்சில் அடக்கிய கூந்தல் அலங்காரம் அவளுடையது. முட்டி வரை ஷார்ட்சும் டீசர்ட்டும் சரபேஸ்வரனின் உடை. இதோடா ‘லாங் ட்ரைவ்’ போக முடியும் என்பது அவளது கேள்வி.
ஆனால் சரபேஸ்வரனோ அவளைக் கையோடு இழுத்துச் சென்று பைக்கில் அமரச் சொல்லிவிட்டான்.
“நாம எங்க தான் போறோம்?”
“போரூர் டோல்கேட் வரைக்கும் போயிட்டு வருவோம்”
“எதே? இதைத் தான் லாங் ட்ரைனு சொன்னிங்களா?”
கடுப்போடு பைக்கின் சைலன்சரை உதைத்தாள் சங்கவி. அது சற்று சூடாக இருக்கவும் “ஐயோம்மா” எனக் காலை உதறியவளைப் பார்த்துப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டான் சரபேஸ்வரன்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-27.5463/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 26
மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றங்களை மூர்த்தி கவனிக்காமல் இல்லை. அவர் அவ்வபோது பிறந்தகத்துக்குச் சென்று வருவது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும்.
தன்னிடம் பொய் சொல்லிவிட்டுச் செல்லும் மனைவியிடம் கண்டிப்பு காட்டப்போய், அவள் தனது நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?
எனவே எதுவும் தெரியாதவரைப் போல காட்டிக்கொண்டார் மூர்த்தி.
இருப்பினும் அவ்வபோது கண்டிப்பான கணவன் போல நடந்து கொள்ள தவறமாட்டார்.
இப்போது மனைவி அவளது தம்பியின் எண்ணுக்கு அழைத்ததையும் ஏமாற்றத்துடன் நிற்பதையும் ஓரக்கண்ணால் கவனித்தபடி பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் அந்த மனிதர்.
“ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க உமா?”
கணவரின் கேள்வியில் சுயம் தெளிந்து “என்ன கேட்டிங்க?” என்றார் உமா.
“நான் கேட்டது கூட உன் காதுல விழாதளவுக்கு என்ன சிந்தனை? உன் பிறந்தவீட்டை பத்தி யோசிக்கிறியா?”
“ஐயோ இல்லங்க”
உமாவின் பதற்றத்தைக் கண்டு கர்வம் கொண்டவர் “அவங்களைப் பத்தி யோசிக்காம இருக்குறது உனக்கும் உன் மகனுக்கும் நல்லது… உன் தம்பி பொண்டாட்டி என் டியூசன் சென்டர்ல சேர வந்த பொண்ணு ஃபேமிலி கிட்ட என்னைப் பத்தி கண்டதையும் சொல்லி என் பேரை எப்ப ரிப்பேர் ஆக்குனாளோ அப்பவே அவங்களுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லனு ஆகிடுச்சு… அவளால என் கிட்ட படிக்கிற பசங்க என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நைட் ஸ்டடிக்கு டியூசன் சென்டர்ல இருக்குறதுக்கு சின்னப்பொண்ணுங்களோட ஃபேமிலி யோசிக்கிறாங்க… சொத்து பத்து, ஸ்கூல் வருமானத்தை விட டியூசன் சென்டர் வருமானம் தான் நம்மளை சொசைட்டில கௌரவமா வாழ வச்சிட்டிருக்குங்கிறதை மறந்துடாத… அதுக்குக் கொள்ளி வைக்கப் பாத்தவ இருக்குற வீட்டை பத்தி இனிமே நீ யோசிக்கக்கூடாது… இந்த வாரம் என் டியூசன் சென்டர் பிள்ளைங்களை மாமல்லபுரம் டூர் கூட்டிட்டுப் போறேன்… உன் மகனும் வருவேன்னு அடம்பிடிப்பான்… அவனைக் கண்ட்ரோல் பண்ணி வீட்டுல உக்காந்து படிக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் உமாவின் மனம் சோர்ந்து போனது.
சோர்ந்த மனம் சங்கவி என்ற ஒருத்தியைத் தம்பி காதலிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென யோசித்தது.

http://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-26.5454/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 25
"அவசரப்படாத ப்ளீஸ்... கொஞ்சநாள் தான... நம்ம வீட்டுலயே இரு"
சரபேஸ்வரன் அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான்.
உடனே சத்தமாக நகைத்தாள் அவள்.
"நம்ம வீடா? இது உங்க வீடு... இதை நான் எப்பவும் என் வீடா ஃபீல் பண்ணுனதில்ல... உங்கம்மாவும் அக்காவும் என்னை இந்த வீட்டு மனுசியா நடத்தியிருந்தா அப்பிடி தோணிருக்குமோ என்னமோ... அவங்க என்னை வேண்டாத ஒருத்தியா தான நடத்துனாங்க... இன்னொரு தடவை இதை நம்ம வீடுனு சொல்லாதிங்க"
“கவி…”
“நீங்க என்னை லவ் பண்ணுறது உண்மைனா என்னைப் போகவிடுங்க… சென்னைல வேலை, வீடு அரேஞ்ச் பண்ணிட்டு ட்ரெயின் ஏறுறப்ப இன்ஃபார்ம் பண்ணுங்க… இப்பவும் இவங்க தான் முக்கியம்னு நினைச்சிங்கனா என்னை விட்டுடுங்க சரபன்… இப்பிடி ஒரு கையாலாகாத மனுசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதை விட காலம் முழுக்க எங்கம்மாக்கு மகளா நான் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்”
மனக்குமுறல்களைச் சொல்லிவிட்டுச் சரபேஸ்வரனின் பதிலை எதிர்பாராதவளாக கிளம்பிப் போய்விட்டாள் சங்கவி.
சரபேஸ்வரனின் கண்கள் பனித்தன. ஆண்கள் அழக்கூடாதா என்ன? உண்மையான அன்பு விலகும் போது அவர்களும் அழுவார்கள், அந்த அன்பை மதிப்பவர்களாக இருந்தால்!
உமாவும் குழலியும் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. இப்போது சரபேஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு வருந்துவதா அல்லது அவன் சென்னைக்குப் புலம்பெயர்வதை நினைத்து மனம் பொருமுவதா என புரியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தார்கள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-25.5444/

#நித்யாமாரியப்பன்
ஹாய் ப்ரண்ட்ஸ்...
Ezhilanbu Tamil Novels வெப்சைட்க்கு Google Play Store App இருப்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். சமீபமாக ஆப் சரியாக வொர்க் ஆகவில்லை என புகார் வந்தது. அதை இப்போது சரி செய்து அப்டேட் செய்திருக்கிறோம்.

ஏற்கெனவே ஆப் வைத்திருப்பவர்கள் ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்‌.

இதுவரை ஆப் பயன்படுத்தாதவர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

ஆப் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். சைட்டில் உள்ள அனைத்துக் கதைகளையும் இலவசமாகப் படிக்கலாம். நம் தளத்தில் வரும் கதைகளின் லிங்க் மிஸ் ஆகிவிட்டது என்ற கவலை இல்லாமல் ஆப்பில் நீங்கள் சுலபமாக படித்துக் கொள்ளலாம்.

உபயோகித்துப் பாருங்கள்.
நன்றி🙂

New Episodes Thread

Top Bottom