• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய "ஆழகிய அன்னமே"

ஓம் சாயிராம்

💞
நர்மதா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய அழகிய அன்னமே.
💞

கதைக்கான விமர்சனம் எழுதுறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்றேன். அது என்னம்மோ தெரியல…இவங்க கதைகளை ரொம்ப ரொம்ப ரசிச்சு படிப்பேன். ஆனால் ரெவ்யூ போடுறதுக்கு மட்டும் அத்தனை காலதாமதம்….எவ்வளவு காலதாமதம் என்றால், அந்தக் கதைக்கு பரிசுகள் பாராட்டுகள் எல்லாம் வந்த பிறகு தான் ரெவ்யூ எழுதுறா மாதிரி ஆகுது.

இந்தக் கதையும் அதற்கு விதிவிலக்கில்லை. சமீபத்தில் பிரதிபலி தளத்தில் பரிசு வென்ற கதைகளில் இதுவும் ஒன்று.

இக்கதையை ஆசிரியர், “சுந்தர நேசங்கள்” நெடு நாவலின் மூன்றாவது பாகமாக எழுதிருக்காங்க. ஒவ்வொரு கதையும் தனியாகப் படித்தாலும் புரியும் அளவிற்கு திட்டமிட்டு எழுதியிருப்பது தான், நர்மதாவின் தனித்துவம் என்று சொல்லலாம்.

சுட்டிப் பெண்ணாக, வாயாடியாக, வெள்ளந்தி மனம் படைத்தவளாக, மதுரையில் அம்மா அப்பா ஆச்சி என அன்பின் கூட்டில் செல்லப் பெண்ணாக வளர்ந்து வரும் அன்னம் உண்மையிலேயே கொள்ளை அழகி தான். அந்த அன்னப்பறவை தன் அன்புக் கூட்டை விட்டு சென்னையின் நாகரீக வாழ்க்கையில் வானம்பாடியாக வலம்வர விரும்புவதும், அதில் அவள் பெறும் அனுபவங்களுமே கதையின் நகர்வு.

கள்ளம் கபடமில்லாத குணம் படைத்த அன்னம் வெளுத்தது எல்லாம் பால் என்பது போல அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகும் சுபாவம் கொண்டவள். அவளின் இந்தக் குணத்தை அவளைச் சுற்றியுள்ள மனிதர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள், அதனால் அவளுக்கு வந்த நன்மைகளும் தீமைகளும் என ஆத்தர் ஒரு தீஸிஸ்ஸே எழுதிவிட்டார் என்று சொல்லலாம்.

முக்கோண காதலே தலையைச் சுற்றவைக்கும் என்றால், இந்த ஆத்தர் நர்மதா, கதையில் மூன்று ஆடவர்களை அறிமுகம் செய்து, கதையின் முடிவு வரை இந்தப் பெண் யாரை திருமணம் செய்துகொள்வாள் என்று தெரியாத அளவிற்குப் பல நெளிவு சுளிவுகளுடன் மிக மிக விறுவிறுப்பாகக் கொண்டு சென்றுள்ளார். (அந்தச் “சுந்தரன்” யாரென்று நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் தோழமைகளே!)

ஒரு ஆணைப்பற்றி மனத்தில் எழும் உணர்வு காதலா, கரிசனமா என்று தெரியாமல் குழம்பும் இளம்பெண்களின் மனநிலையை அன்னம் மூலம் அழகாக எடுத்துரைத்திருக்கிறார். அத்தகைய குழப்பத்தில் தத்தளிக்கும் பெண்களுக்கு வீட்டின் உறவுகளும் நண்பர்களும் அளிக்கும் ஆறுதலும் தார்மீக ஆதரவும் எத்தனை இன்றியமையாதது என்று நங்கை & ராஜன் மூலம் மிக மிக நேர்த்தியாகச் சொல்லிவிட்டார்.

நங்கையின் அறிவுரைகளும் அணுகுமுறையும் ஒரு விதத்தில் அழகு என்றால் பிரச்சனைகளை கையாளும் ராஜனின் எண்ணமும் செயலும் கொள்ளை அழகு.
(இது “அன்னம்” கதை என்றாலும், ராஜனுக்குத் தான் முதலிடம் ஆத்தரே.)

ராஜன் வந்த எபிசோடுகள் எல்லாம் பற்கள் மின்ன படித்தேன். நங்கை வேலையைவிடுவதைப் பற்றி சொன்ன இடத்தில் அவன் பதிலும், மனையாள் மனவுளைச்சலில் இருந்தபோது அவன் தந்த நம்பிக்கையும் சான்சே இல்ல. பயப்புள்ள மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டான்.

ஒரே ஒரு இடத்தில்தான் மனத்திற்கு நெருடலாக இருந்தது. செய்த தவறுக்காக இன்பா மனம் வருந்தி மன்னிப்பு கேட்டதற்கு, ராஜன் பேசியதைப் படிக்கும்போது கனமாக இருந்தது. சில ரணங்கள் நெஞ்சைவிட்டு நீங்குவதே இல்லை என்று ராஜன் மூலம் நீங்கள் சொல்ல வரீங்கன்னு புரியுது. இருந்தாலும், அது ராஜன் மேல் இருக்கும் அதீத பாசமா, இல்லை இன்பா மேல் அந்த நொடி முளைத்த பரிதாபமா என்று எனக்குத் தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும், இன்பாவிற்கு ஒரு தனிக் கதை எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டாவது இடம் என்றால் அது, நங்கையின் தந்தை சுரேந்தருக்குத் தான். மாப்பிள்ளைக்கு இணையாகக் கதையில் ஸ்கோர் செய்து, மனத்தைக் கொள்ளை கொண்ட மற்றொரு கதாபாத்திரம். மாப்பிள்ளைக்கு ஏற்ற மாமனார் என்று சொன்னால் அது மிகையாகாது.

மீனுவின் அப்பாவும் அன்னம் விஷயத்தில் செயல்பட்ட விதங்கள் அத்தனையும், உங்கள் நற்சிந்தனையின் பக்குவத்தை உணர்த்துகிறது. அவர் கடைசியில் கொடுத்த ட்விஸ்ட் செம்ம.

இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு கதாபாத்திரம் ஆச்சி கேரக்டர். ஆச்சியின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்தாலே, ஆத்தர் வைத்திருக்கும் பல சஸ்பென்ஸ் எளிதில் புரிந்துவிடும் வாசகர்களே. அதனால், இக்கதை படிக்கும்போது, ஆச்சி வரும் இடங்கள் அனைத்தையும் கவனத்துடன் படிங்க.

எப்போதும் போல, கதையின் கதாபாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் தொழில் சார்ந்த விஷயங்களை உங்கள் சொல்லாடல் மூலம் கண்முன் நிறுத்திட்டீங்க ஆத்தரே.

IT துறையில் இரவு பணியாகட்டும், பிராஜக்ட், சக ஊழியர்கள் அன்னம், மோகன், பாலாஜி இன்பாவின் கலகலப்பான பேச்சாகட்டும், அனைத்தும் தத்ரூபமாக இருந்தது. கணவன் மனைவி இருவரும் IT துறையில் வேலை செய்வதிலுள்ள நல்லது கெட்டதும் ராஜன் நங்கை வாழ்க்கையில் சூப்பரா சொல்லிட்டீங்க. அதிலும் ‘பொங்க….’பொங்க’ என மழலையில் மொழியும் மகளிடம் கொஞ்சிப் பேசியபடி, டீம் மீட்டிங்கில் இருக்கும் மனைவிக்கு காபி போட்டு தரும் ராஜனின் காதல்…வாரே வாவ்…அங்க நிக்குறான் எங்க ராஜன்.

சிவா மூலம் சின்னத்திறை பிரபலங்களின் வாழ்க்கைப் பற்றி கூறிய அனைத்தும் அழகோ அழகு. ஈசப்பாவின் பாத்திரக்கடையும் களைக்கட்டியது என்று சொல்லத் தேவையிருக்கவில்லை.

இந்தக் கதையில் மற்றொரு விஷயம் மிகவும் ரசனையாக இருந்தது. பச்சை கிளி, வெள்ளை புறா என்று ஆண்கள் தங்கள் மனத்திற்கு இனியாளை அழைத்தது அசத்தல். இருந்தாலும் பப்ளிமாஸுக்குத் தான் முதலிடம் ஆத்தரே.

இருபது அத்தியாயங்கள் கடந்தாலே, கதையில் சுவாரசியம் இருக்குமா என்று யோசித்து படிக்கும் இந்தக் காலக்கட்டத்தில், நூறு அத்தியாயங்கள்( மூன்று சுந்தர நேசங்களும் சேர்த்து) படித்த பின்னும் இதற்கு அடுத்த பாகம்( ஐ மீன்….இன்பாவிற்குத் தனிக்கதை) வராதா என்று எதிர்பார்க்கும் அளவிற்குச் படிக்க படிக்க தித்தித்த, மனத்திற்கு இதமான கதையும், கதை மாந்தர்களும் தந்த எழுத்தாளர் நர்மதா சுப்ரமணியம் அவர்களும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம் என்றென்றும்.

கதைக்கான லிங்க்:
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.333/

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@Narmadha Subramaniyam
 
Thani

Well-known member
Member
யப்பா ..!எவ்ளோ பெரிய ரீவெயூ😍
கதையில் வந்த அத்தனை பேரையும் பற்றி சொல்லியாச்சா 😀👌....அதுவும் இன்பாவைப்பற்றி சொன்னது சரி ,நாமும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஆத்தர் ஜீ😀
வாங்க வந்து இதற்கான பதிலை சொல்லிட்டு போறது 😀
 
ஹா ஹா ஹா.. அவங்க இன்பாக்கு தனிக்கதை வேணும்னு என்கிட்ட ஆர்டரே போட்டிருக்காங்க. அவனை மன்னியுங்க போதும் கஷ்டபடுத்தினதுனு ஆதங்கம் அவங்களுக்கு 😄😄😄 கண்டிப்பாக இந்த வருஷத்துக்குள்ள எழுத பார்க்கிறேன் சிஸ் ❤️🤩
 
பேரன்புகளும் பிரியங்களும் வித்யா ❤️❤️
ரசித்து ரசித்து வாசிக்கிறேன் ஒவ்வொரு முறையும் ❤️🤩😍😍 நன்றிகள் பல 🙏❤️
 
ஹா ஹா ஹா.. அவங்க இன்பாக்கு தனிக்கதை வேணும்னு என்கிட்ட ஆர்டரே போட்டிருக்காங்க. அவனை மன்னியுங்க போதும் கஷ்டபடுத்தினதுனு ஆதங்கம் அவங்களுக்கு 😄😄😄 கண்டிப்பாக இந்த வருஷத்துக்குள்ள எழுத பார்க்கிறேன் சிஸ் ❤️🤩
இப்போதான் இந்த ரிப்ளை பார்க்கிறேன் நர்மதா. இந்த வருஷம்னு சொல்லிட்டு, மூன்றே மாதங்களில் விறுவிறுப்பான கதையுடன் வந்த உங்கள் அன்பை என்ன நான் சொல்ல!

Thank you so much dear! 😘 😘 😘
 
அதான் பாருங்களேன். எனக்கே ஆச்சரியம் தான் 😄😄😄 இந்த வருஷத்துல முடிச்சிடுவோம் 😄😄😄
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom