• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நந்தவனம் குறுநாவல் போட்டி - முடிவுகள்!

Apsareezbeena loganathan

Well-known member
Member
வெற்றி பெற்ற பூக்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐🍫🍫🍫🎉🎉🎉🎊🎊🎊.....
Oh my god..... நானும் இருக்கேனா????
எனக்கும் பரிசா????
🤔🤔🤔🤔🤔🤔
எனக்கு யாரும் வாழ்த்து சொல்லல?????
😭😭😭😭😭
இப்ப தான் பாக்குறேன்.....
Me happy அண்ணாச்சி......
Thank u so much ezhil sis🙏🙏🙏🙏🙏🙏💐💐
 
குறுநாவல் போட்டி ஆரம்பம் முதல் முடிவு வரை மிகச்சிறப்பாக நடத்திட்டீங்க எழில். போட்டியாளராக சில நாட்களும், வாசகியாக பல நாட்களும், எழுத்தாளர்களுடன் சில நேரங்களும், பூக்களுக்குள் ஒளிந்திருந்ததும் அதே எழுத்தாளர் தான் என்று தெரியாமல் பல நேரங்களிலும் பேசிப்பழகி, கதைக்குக் கருத்து, விமர்சனம் தருகிறேன் என்ற பெயரில் மொக்கை போட்டு இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

போட்டியின் காலவகாசம் நீடிக்க முடியாது என்று நீங்கள் அறிவித்த போது, ஒரு போட்டியாளராக வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், சொன்ன தேதிக்குள் கதை எழுதி முடித்த எழுத்தாளர்களின் உழைப்பிற்கு நியாயம் செய்யவேண்டும் என்று நீங்கள் அதில் குறிப்பிட்டிருந்த காரணம் அருமை எழில். எல்லாவிதத்திலும் கண்ணியமான முறையில் நீங்கள் போட்டி நடத்தியவிதம் அற்புதம்.

வாசகியாக என்னை அடையாளம் கண்டுகொண்டும், இந்தியாவில் அம்மா வீட்டிற்குப் புத்தகம் அனுப்புவீர்களா என்று கேட்டதும், உடனே சம்மதம் தெரிவித்த உங்கள் நல்லுள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் மா.
 
அன்புள்ள பூக்களே!

வாசகர் மனதில் இடம்பிடித்து, ஓட்டிங்க் முறையில் வென்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டிக்கதைகள் அனைத்தையும் படித்தேன். நேரமின்மை காரணத்தால் ஒரு சில கதைகளுக்கு மட்டும்தான் விமர்சனம் எழுத முடிந்தது. ஆனால் நிறைவுற்ற அத்தனைப் போட்டிக்கதைகளும் பிரமாதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தது. மிகவும் ரசித்து படித்தேன். இறையருளுடன், தங்குதடையின்றி இனிதே தொடரட்டும் உங்களின் இந்த அழகிய எழுத்துப்பயணம்.
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom