நட்பென்னும் முடிவிலியில்!-17 | Ezhilanbu Novels/Nandhavanam

நட்பென்னும் முடிவிலியில்!-17

praveenraj sivaji

✍️
Writer
இதைக் கேட்ட ஹேமா விவி இருவரும் பயங்கர கோவத்தில் இருக்க, விவியனுக்கும் கோவம் வந்து துவாராவை அடிக்க கையை ஓங்க ஹேமா தான் அவனையும் தடுத்து, உடனே தியாவை அழைக்க அவன் வந்து விவான், விவியன் இருவரையும் கூட்டிச் சென்றான்.

ஏனோ எல்லோரும் தங்களையே ஒருமாதிரி பார்ப்பதை உணர்ந்த ஹேமா எல்லோரிடமும் சாரி என்று சொல்லிவிட்டு துவாராவை நெருங்கினான்,

"சத்தியமா சொல்றேன் துவா, இதுவரை உன் மேல எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது. இப்போ இல்ல. அவ்வளவு தான்" என்று அவனும் சென்று விட்டான்.

இதையெல்லாம் அப்போது ரெஸ்ட் ரூம் செல்ல வந்த சரித்திரா பார்த்து விட்டாள். அவளுக்கும் முழுதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் என்ன இருந்தாலும் இப்படி இத்தனை பேர் முன்னிலையில் அப்படி இவனை அடித்திருக்கக் கூடாது என்று மட்டும் நினைத்தாள். அவனோ உடலெல்லாம் ஒரு மாதிரி ஆக வேகமாய் ரெஸ்ட் ரூமில் நுழைந்தான்.

சரித்திராவும் ரெஸ்ட் ரூம் சென்று வர அவனை இன்னமும் வெளியே காணாததால் அவனுக்காகக் கொஞ்சம் வெளியே காத்திருந்தாள். அவளுக்கும் கொஞ்சம் பயம் தொற்றிக்கொண்டது.

நேரம் ஆக ஆக இன்னமும் துவாரகேஷ் வெளியே வரவில்லை. சரித்திராவுக்குத் தான் என்னவோ தவறாகபட சென்று அவன் கதவைத் தட்டினாள்.,

அப்போதும் எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை.

............................................

இன்னும் கொஞ்சம் பேக்வேர்ட், அதாவது விவான் நித்யா கம்பார்ட்மெண்ட் சென்றதும், துவாரா தனியாக வந்துவிட விவியன் சித்தாராவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"சோ ஸ்வீட் இல்ல?"

"ஆமாங்க ரெட் வெல்வெட் கேக் சோ ஸ்வீட்"

அவள் திருதிருவென விழித்து,"நான் கேக்கை சொல்லல அந்த கப்பிளை சொன்னேன்"

அசடு வழிந்தபடியே அவளைப் பார்த்தான் விவியன்... அந்த உரையாடலுக்குப் பிறகு நீண்ட மௌனம் ஏற்படவும் அதை சித்தாராவே உடைத்தாள்.

"அப்பறோம் சொல்லுங்க நீங்க என்ன பண்றீங்க?

"நான் காலேஜ்ல ப்ரொபெஸரா இருக்கேன். நீங்க?" என்று சித்தாராவைக் கேட்டான்,

"ஆக்சுவல்லி நான் இன்டீரியர் டிசைனர்"

"வாவ் சூப்பருங்க"

"தேங் யூ"

"அப்பறோம் என்ன தனியா இப்படி?" என்று விவியன் இழுக்க,

"நான் ஹனி மூன் போறேங்க" என்று அவள் சொல்ல எங்கே அவள் சொன்னது தவறாக விழுந்ததோ என்று விவியன் அவளைப் பார்க்க,

"யூ ஹியர்ட் ரைட்" என்று அவள் சிரிக்க,

இப்போது அவளை நன்கு கவனித்தான். திருமண ஆகிவிட்டதற்கான எவ்வித அறிகுறியும் அவளிடம் இல்லாததால் அவன் பார்க்க,

"என்ன பார்க்கறீங்க?"

முழித்தவன் ஒருவேளை இவளோடு யாராவது வந்திருப்பார்களோ என்றும் சுற்றிப் பார்க்க யாரும் இல்லாததால் குழம்பியபடியே இருக்க,

"ஹனி மூன் தான். ஆனா சிங்கிளா போறேன்" என்று அவள் கண்ணடிக்க, விவியன் சுத்தமாகப் புரியாமல் விழித்தான்.

அவனின் முகத்தையே கூர்ந்து கவனித்தவள் அதில் தெரியும் குழப்பங்களைக் கண்டு ரசித்து சிரித்தாள்.

சுதாரித்தவன்,"பிராங்க் பண்றீங்க ரைட்?"

"நோப்பா சீரியஸா நான் ஹனி மூன் டிக்கெட்டுல தான் போறேன்"

கடுப்பானவன் எழப் போக அவனின் கையைப் பிடித்தவள்,"ஹே சில் சில்"

அவன் கையை உதற,

"சாரி சாரி"

அவன் அங்கேயே அமர,"இப்போ சொல்லுங்க எங்க போறீங்க?"

அவளோ "ஹனி மூன் தான்"

அவன் கோவமாய் எழ,

"இந்த உலகத்துலயே தனியா ஹனி மூன் போற ஒரே ஆள் நானா தான் இருப்பேன்"

அவள் சொல்லில் நின்றவன் திரும்பி அவளைப் பார்க்க,

"உட்கார்ந்தா நான் எல்லாமும் சொல்லுவேன். இல்லனா போங்க"

அவனுக்கு இப்போது இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் அங்கேயே அமர்ந்தான்.

......................................................................

அங்கே ஜிட்டனுடன் பேசிவிட்டு அவன் கொடுத்த கேக்கை வாங்கிக்கொண்டு பெண்கள் மூவரும் சாப்பிட ஜிட்டு தான் அங்கே பசங்க யாருமில்லாததால் நித்யாவின் கம்பார்ட்மெண்ட் நோக்கி வந்துவிட, அப்போது தான் அவனிடம் எல்லோரும் நித்யா விவான் திருமணம் பற்றிக் கேட்டததும் அங்கேயே உட்கார்ந்து கதையைச் சொல்ல ஆரமித்தான்.

ஏனோ ஜிட்டுவிடம் பேசிய பிறகு தான் பெனாசிருக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது. பின்னே தன் தோழியின் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ (ஜெசிந்தா) என்று பயந்தவள் ஜிட்டு வந்து,"இந்த மாதிரி செபாவும் எங்களோடு தான் பயணிக்கிறான் சோ எப்படியும் இவர்களை ஒன்று சேர்த்துவிடலாம்" என்று சொன்னவுடன் தான் ஆசுவாசமடைந்தாள்.

ஜெசிந்தாவும் கொஞ்சம் நிம்மதி கொண்டாள். அது ஏனென்று தான் அவளுக்கும் புரியவில்லை. மனம் சற்று லேசாக இருந்தது.

ரேஷா தான் இப்போது இவர்களைப் பார்த்து,"இதுக்கு தான் நான் சொல்றது கல்யாணம்னு ஒன்னு பண்ணா அது லவ் பண்ணித் தான் பண்ணனும். லவ்வே பண்ணாம மேரேஜ் நடந்தா இப்படித் தான் ஆகும்"

"நீ கொஞ்சம் வாயை மூடு ரேஷு பேபி" என்று பெனாசிர் அவளை அடக்கினாள்.

"ஆமா பெனாசிர் உன்கிட்ட ஒன்னு கேட்கணும், நம்ம இஸ்மாயில் உன் பின்னாடியே சுத்துறாரு இது தங்களுக்குத் தெரியுமோ?" என்று நக்கலாய் அவள் கேட்க ஏனோ ஜெஸியும் கூடச் சேர்ந்து பெனாசிரை வார,

"இப்போ உங்களுக்கு டைம் பாஸ் ஆகணும். அதுக்கு நான் தான் கிடைச்சேன் இல்ல? என்னைய ஆளை விடுங்க" என்று அவள் எஸ் ஆகினாள்.

........................................................

காலையில் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்த இஸ்மாயில் லோகேஷ் இருவருக்கும் கேக் கொண்டுவந்து கொடுத்தான் ஹேமா. அவர்கள் தயங்க ,"எங்க ஃப்ரண்ட் பர்த் டே சோ ப்ளீஸ் ஹேவ் இட்"

ஹேமாவிடம் இப்போது இருவரும் பரஸ்பரம் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர். கூடவே தங்கள் பயணம் பற்றி இருவரும் பரிமாறிக் கொள்ள இவர்களும் ஜெஸ்ஸியின் டீமை சேர்ந்தவர்கள் என்று ஹேமாவிற்குப் புரிந்தது. பிறகு எதுவும் பேசிக் கொள்ள வில்லை.

இந்தச் சமயத்தில் தான் பெண்கள் மூவரும் (ரேஷா, பெனாசிர், ஜெசி) லோகேஷ் இஸ்மாயிலை நோக்கி வந்து லன்ச் பற்றிப் பேச, அப்போது தான் அனேஷியாவைத் தவிர்த்து எல்லோருக்கும் அவன் ஆர்டர் செய்து விட்டதைச் சொல்ல, லோகேஷின் பிடிவாதமும் தெரிந்ததால் அவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தனர்.

மெதுவாக இஸ்மாயில் ஆரமித்தான்,"லோக்கு அப்படி என்னடா நடந்துச்சு உங்களுக்குள்ள? ஏன் அனேஷியாவை இப்படி வெறுக்குற?"

அவளைப் பற்றிச் சொன்னதும் லோகேஷுக்கு கோவம் வர,"சரிடா எப்பா கேட்கல கொஞ்சம் அமைதியா இங்கேயே இரு. உடனே கோவிச்சுக்காத"

இப்போது ஐவரும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

..........................................................

இதுவரை வந்ததெல்லாம் பேக்வேர்ட். இனிமேல் பார்வேர்ட். அதாவது விவான் துவாராவை அடித்து விட்டு செல்ல, அவன் கோவமாய் நித்யா இருந்த கம்பார்ட்மென்டுக்குள் போனான்.

முகம் கடுக்கடுக்க உள்ளே வந்த விவான் எல்லோருக்கும் வித்தியாசமாய்த் தெரிந்தான். பின்னே இவ்வளவு கோவமாய் அவனை யாருமே பார்த்ததில்லையே? என்னவென்று யாரும் புரியாமல் இருந்தனர்.

அங்கே நித்யாவின் அருகில் மிரு மௌனி அமர்ந்திருக்க வந்தவன் அவர்களை மாறி உட்காரச் சொல்லிவிட்டு நித்யாவின் மடியில் அப்படியே தலை வைத்து காலை நீட்டிப் படுத்தான்.

நித்யாவிற்கும் கொஞ்சம் எம்பேரெசிங்காக தான் இருந்தது. இருந்தும் விவான் இப்படிப் பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொள்பவன் கிடையாது என்று உணர்ந்த அவள் அவனைப் படுக்கவைத்து அவனின் தலை கோதினாள்.

பின்னாலே விவியனும் ஹேமாவும் வந்தனர். வந்து இவன் இப்படிப் படுத்திருப்பதைப் பார்த்து என்ன சொல்வதென்று புரியாமல் இருக்க, மிரு தான் ஹேமாவிடம் என்னவென்று சைகையில் கேட்டாள்.

அவன் வாயில் கையை வைத்து அமைதியாக இருக்கும்படி சொல்ல கொஞ்சம் நிசப்தம் அங்கு நீடித்தது.

அதற்குள் விவான் நித்யாவின் மடியில் படுத்திருப்பதைக் கண்ட இளவேனில் வழக்கம் போல் அவனிடம் பொசெசிவ் சண்டை போட வந்து அவனைத் தள்ளிவிட்டு அவளும் நித்யா மடியில் படுக்க, விவான் தான் அவளைத் தூக்கி தன் மேல் படுக்க வைத்துக் கொண்டான்.

வண்டி வைசாக் வந்தடைந்தது. தியா உணவை வாங்க ரெடியாக இருந்தான்.

நேரம் காலை மணி 11 .40. வண்டி வைசாக் ரயில் நிலையம் வந்தடைந்தது. எப்படியும் 12 மணிக்குத் தான் திரும்ப எடுப்பார்கள். சோ அந்த கேப்பில் சாப்பிட்டு விடலாம் என்று எல்லோரும் தயாராக இருந்தனர்.

தியா இறங்கி ஆர்டர் செய்யப்பட்ட உணவை வாங்கினான். வாங்கி அவன் உள்ளே வர எல்லோருக்கும் கொலை பசி என்பதால் எல்லோரும் சாப்பிடுவதிலே தீவிரமாக இருந்தனர். இங்கேயே நித்யாவின் கம்பார்ட்மண்ட்டில் எல்லோரும் அமர்ந்து சாப்பிட ரெடி ஆக அதே போல் அங்கே லோகேஷும் தன் சகாக்களுடன் சாப்பிடத் தயாரானான்.

........................................................

சரித்திரா தான் அங்கே ரெஸ்ட் ரூமிற்கு வெளியே காத்திருந்தாள். அவன் வரவில்லை என்று தெரிந்ததும் இவள் சென்று கதவைத் தட்டினாள். எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை. அவளுக்கு ஏனோ உள்ளுணர்வு தவறாகவே சொல்ல மனம் படபடத்தது.

சரி அவனோடு வந்தவர்களில் விவியனை அவள் பார்த்திருந்தாள். கூடவே அடித்த விவான், ஹேமா, தியா நால்வரையும் பார்த்திருந்ததால் அவர்களைத் தேடிச் செல்ல அடியெடுக்க கதவு திறந்தது. வெளியே வந்தவன் அங்கே தன்னை ஒருமாதிரி வித்தியாசமாய்ப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த சரித்திராவைப் பார்த்ததும் அவனுக்குள் ஏனோ தாழ்வு மனப்பான்மை குடிகொண்டது. எங்கே எல்லோரும் தான் அடிவாங்கியத்தைப் பார்த்திருப்பார்களோ என்று ஒரு வித எண்ணம் தோன்ற யாரையும் நிமிர்ந்து பார்க்கக் கூட அவனுக்கு மனமில்லை. வேகவேகமாய் வந்தவன் தன் இருக்கையில் படுத்து ஒரு போர்வையைக் கொண்டு தன்னை மூடிக்கொண்டான்.

சரித்திராவிற்கும் அவனின் நிலை புரிந்தது. என்ன இருந்தாலும் இது ஒரு பெரிய அவமானம் தானே? அவனின் நிலையை நினைக்கையில் அவளுக்குகே அவன் மீது பரிதாபம் வந்தது. கூடவே அவனை அடித்தவர்கள் மீது கோவமும் வந்தது. அதும் இப்போது யாருமே இங்கே இல்லையே என்று அவள் நினைக்க தன் தாத்தா ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என்றதும் அவரை அழைத்துச் சென்று வந்தாள்.

முகம் முழுக்க மூடப்பட்டிருக்க அவன் முகம் இருந்த இடத்தில் பெட்ஷீட் நனைந்திருந்தது. அவன் அழுகிறான் என்று அவளுக்குப் புரிந்தது. என்ன செய்ய? அவளோ அமைதியாக அமர்ந்தாள். அப்போது தான் வண்டி வைசாக் வந்தடைந்தது.

இவள் உணவைப் பற்றித் தெரியாமல் பேன்ட்ரியிலே வாங்கியிருந்தாள்.

..........................................................

அதே பெட்டியில் தான் சித்தாராவும் இருந்தாள். அவளோ விவியனுடனான நடந்த உரையாடலும் அவன் கோவமாய்ச் சென்றதும் பின்பு இவள் அவன் கையைப் பற்றியதையும் நினைத்துக் கொண்டிருந்தாள்

அவள் என்னவென்று சொல்லலாம் என்று இருக்க அப்போது தான் துவாரா கோவமாய் போன் பேசியப்படியே போக விவி ஒரு நிமிடம் என்று சொல்லி விடைபெற்றான். பிறகு விவான் வந்து சண்டையாகி அவன் அவனோடே சென்று விட்டான்.

அவள் நினைத்துப் பார்த்தாள். எல்லாம் நன்றாக நடந்திருந்தால் இந்நேரம் இது அவளின் ஹனி மூன் பயணமாகி இருக்கும். நார்த் ஈஸ்ட் மீது அவளுக்கு ஒரு காதல். கூடவே தன்னோடு ஒரு மிசோரம் பொண்ணு வேறு படித்ததால் அவளுடன் உரையாடியதிலிருந்தே எப்படியாவது நார்த் ஈஸ்ட் டூர் சென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

லவ் கம் அர்ரேஞ்ட் மேரேஜ் தான். நல்ல பையன் நல்ல வேலை தான். தானும் ஒன்னும் சளைத்தவள் இல்லை தான். தானொரு இன்டீரியர் டிசைனர். விரும்பி தான் படித்தாள். தன்னோடு படித்த சக மாணவிகளோடு சேர்ந்து ஒரு ஸ்டார்ட்அப் (startup - புதிய தொழில் நிறுவனம்) ஆரமித்தார்கள். முதலில் ஒன்றும் பெரியதாக சோபிக்க முடியவில்லை. இருந்தும் கிடைத்த வேலையைத் திறம்படச் செய்தனர். எனினும் இன்னும் தங்கள் திறமைக்கு சவால் விடுமளவுக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைக்கவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் தான் வந்தான் அவன்.

வேலை நிமித்தமாய் வந்தவன் பிறகு காதல் நிமித்தமாய் நிரந்தரம் ஆனான். ஏனோ அவனுடன் பேசும் போதும் பழகும் போதும் அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. கூடவே தன் வேலையையும் ரசித்தான். அங்கீகரித்தான்.

........................................................................

"கொலைப் பசிடா லோக்கு. எப்பா எப்போடா வைசாக் வரும்னு காத்திட்டு இருந்தேன். நாளைக்கு எல்லாம் என்னால இப்படி பசி தாங்க முடியாது. வேற ஆப்சன் ரெடி பண்ணு டா" என்று திட்டிக்கொண்டே சாப்பிட்டாள் ரேஷா.

"மெதுவா சாப்பிடு ரேஷு பேபி தொண்டையில் சிக்கிக்கப் போகுது, அப்பறோம் உன்னையெல்லாம் யாரும் மெர்சல் விஜய் மாதிரி காப்பாத்த முடியாது" என்று அவளை வாரினாள் பெனாசிர்.

"நானெல்லாம் இந்நேரத்துக்கு பிரேக் பாஸ்ட் முடிச்சு ஒரு டீ பிரேக் முடிச்சு 2 சமோசா சாப்பிட்டு, எப்போடா 12 .30 ஆகும் லன்ச் போலாம்னு காத்திட்டு இருப்பேன். என்னையைப் போய் இப்படிக் கொடுமைப் படுத்திடீங்களே பாவிங்களா? உங்களுக்கெல்லாம் நரகம் தான் கிடைக்கும்" என்றவள் சாப்பாட்டிலே கண்ணாக இருந்தாள்.

ஜெசி தான் சாப்பிடாமல் யோசிக்க,

"சாப்பிடு ஜெசி. ஏன் வெயிட்டிங்? ஓ கணவர் சாப்பிட்ட பின்னாடி தான் சாப்பிடுவியோ? அவ்வளவு லவ்வோ?" என்று வாரினாள் பெனாசிர்.

முறைத்தாள். இருந்தும் அவளின் எண்ணம் இது தான், என்ன அவனும் இங்கே தான் இருக்கிறான் என்று தெரிந்தாலும் பார்க்காமல் இருப்பது அவளுக்கு உறுத்த, கூடவே ஜிட்டு சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள். 'கல்யாணத்திற்கு அவ்வளவு ஆசைப்பட்டவன்' என்று சொன்னாரே, 'ஆனால் ஒரு முறைக்கூட என்னிடம் அந்த மாதிரி பழகியதே இல்லையே. என்னவாக இருக்கும்? ஒருவேளை என்னைப் பிடிக்கவில்லையோ?' என்று தான் நேற்றிலிருந்து நூறாவது முறையாக யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து கொண்ட பெனாசிர் தான், "ஜெசி, இப்போ சாப்பிடு எப்படியும் அவங்களும் அசாம் தான் வரார். பார்த்துப் பேசிக்கலாம். அதுதான் சொன்னாரே அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் ஹெல்ப் பண்றோம்னு, சோ ஸ்டே காம்"

ஏனோ இப்போது தான் கொஞ்சம் சாப்பிட்டாள். இதையெல்லாம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் இஸ்மாயில் இருவருக்கும் சொல்றேன் இருங்க என்று சைகை செய்தாள்.

...........................................................

தியா சாப்பாடு வாங்கி வர உடனே செபாவும் அவனுடன் சென்று வர எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர்.

"துவாரா?" - மிரு

ஏனோ இது விவானைக் காட்டிலும் தியாவை எரிச்சல் படுத்தியது. அதைப் பார்த்த செபா பின்னாலிருந்து தியாவுக்குத் தெரியாத மாதிரி நின்று அவளுக்கு காற்றிலே சில திட்டுகளை பார்சல் செய்தான். மிரு திருதிருவென விழிக்க, விவான் இன்னமும் நித்யாவின் மடியிலே தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தான்.

விவியன் தான் மாறி மாறி விவானையும் மற்றவர்களையும் பார்க்க, விவான் தான் கோவமாய்ச் சொன்னான்,

"எரும மாடு மாதிரி வளர்ந்திருக்கான். பசிச்சா அவனா வருவான். சாப்பிடுங்க" என்று சொல்ல எப்படியும் அவன் இப்போது இங்கு வர மாட்டான் என்று விவியனுக்குத் தெரிந்தது. அவன் கொஞ்சம் சென்சிடிவ். சும்மாவே அப்படி, இப்போது எப்படியும் எல்லோருக்கும் அவன் செய்த செயல் தெரிந்திருக்கும் என்று தெரிந்தவன் கண்டிப்பாக இங்கே வர மாட்டான் என்று தோன்ற அவன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அவர்கள் கம்பார்ட்மெண்ட் போக விவான் எதையும் சொல்லாமல் இருந்தான்.

சாப்பாடு வாசம் வேற நாசியைத் துளைக்க, எல்லோரும் எப்படி சாப்பிடுவது என்று புரியாமல் தவிக்க, எவ்வித கவலையும் இல்லாமல் சாப்பாட்டை எடுத்தவன் சாப்பிடுவதைப் பார்த்து சிலர் முறைக்க சிலர் சிரித்தனர். வேறு யாரு ஜிட்டு தான்!

"முறைக்காதீங்க டா. ரொம்ப பசிக்குது" என்று சொல்ல எல்லோரும் சிரித்து சாப்பிட்டனர். விவான் தானும் சாப்பிடாமல் எழவும் செய்யாமல் இருக்க,"டேய் விவா நீ சாப்பிடலைனா பரவாயில்லை நித்யாவைச் சாப்பிட விடு" என்று ஹேமா குரல் கொடுக்க அப்போது தான் புரிந்தவன் எழுந்து,"சாரி நித்யா. நீ சாப்பிடு" என்று அவன் செல்ல அவனின் கையைப் பிடித்தவள்,"உட்காரு" என்றதும்

"இல்ல எனக்கு வேணாம். நீங்க" என்பதற்குள் அவனை உட்கார வைத்தவள் அவனுக்கு உணவை எடுத்து வைக்க, இளா குட்டிக்கு ஊட்டினாள். அருகிலே அவனும் வாயைத் திறக்க, அவ ஊட்டவும்

"ஓ இது தான் சண்டைக்குப் பின் சமாதானமா?" - மௌனி

நித்யா உட்பட எல்லோரும் சிரித்தனர். கொஞ்சம் சூழ்நிலை இலகுவானது.

ஏனோ எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் அனேஷியா. அவளுக்குள் 'ஏன் தானும் இவர்களைப் போல் இல்லையே?' என்று அதிக ஏக்கம்.

எல்லோரும் சாப்பிட, ஹேமா மௌனியைப் பார்த்து பார்த்து கவனிக்க,"எப்பா எப்பா என்ன லவ்?" என்று எல்லோரும் கிண்டல் செய்ய,

"ஹேமா நீ நிறைய மாறிட்ட. சாரி மாத்திட்டாங்க. என்ன மௌனி?"

அவள் சிரிக்க,

"சரி சரி போர் அடிக்குது உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க. கொஞ்சம் என்டர்டெய்ன்மெண்டா இருக்கும்" - ஜிட்டு

"ஏன்டா இப்போ உங்க சாப்பாட்டுக்கு நாங்க தான் ஊறுகாயா? ஆளைவிடுங்க" ஹேமா

"அதெப்படி விட முடியும்? எங்க லவ் ஸ்டோரி கேட்கும் போது மட்டும் இனிச்சதோ?" -நித்யா

"நித்து உங்களுது போல இருக்காது எங்களுது..."

"என்ன பெரிய வித்யாசம் இருக்க போகுது? ஒன்னு மோதல்ல ஆரமிச்சு காதல் இல்ல, ஃப்ரண்ட்ஸ்சா ஆரமித்து லவ். ரெண்டு டைப் தானே?"

"முதல்ல சொன்னது தான்"

"நெனச்சேன்"

ஏனோ ஹேமா ஒரு வித அசௌகரியத்தை உணர்ந்தான். அவனின் எண்ண ஓட்டங்கள் மௌனிக்கும் புரிந்தது.

"என்ன ஆச்சு பா? ஏன் இவ்வளவு சோகம்?"

"நான் அவளைக் கொஞ்சம் அதிகமா ஹர்ட் பண்ணிட்டேன். அதுதான்" அவன் குற்றயுணர்ச்சியில் இருக்க,

"காதல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்று விவான் சொல்ல எல்லோரும் சிரித்தனர். நித்யா தான் முறைத்தாள்,

"சரி சரி சொல்லுங்க"

"காலேஜ் முடிஞ்சு எல்லோரும் ஒவ்வொரு வேலைக்கு இல்ல அடுத்தடுத்து படிக்க போயிட்டிங்க. நானும் மெக்கானிக்கல் எதுக்கு படிச்சோமேனு மறந்து ஐடி செக்ட்டார்ல சேர்ந்தேன். ஊர்லையே ஒரு லோக்கல் கம்பெனி தான். கொஞ்ச நாள் ஒர்க் பண்ணேன். தங்கை வேற அப்போ தான் காலேஜ் செகண்ட் இயர் பண்ணா...

நானும் கொஞ்சம் ஜிம்மெல்லாம் போய் வேலைக்கும் போயிட்டு அப்படியே இருந்தேன். வீட்டுல தான் என்னைப் பற்றி ரொம்ப கவலைப் பட்டாங்க"

"யாரு உன்னைப் பற்றி?"

ஹேமா முறைக்க ஜிட்டு அமைதியானான்,

"அப்போ..."

............................................................


சாப்பாட்டை எடுத்துக்கொண்டு விவியன் அவர்கள் கம்பார்ட்மெண்ட் போக, அங்கே முகத்தை முழுவதுமாய் மூடி படுத்திருந்தான் துவாரா. அருகில் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சரித்திரா.

விவியன் சென்று துவாராவை எழுப்ப, அவன் அவனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் "எனக்கு சாப்பாடு வேணாம் நீ போய் சாப்பிடு"

"டேய் காலையில இருந்து சாப்பிடல. நைட் சாப்பிட்டது தான். சொன்னாக் கேளு அடம் பிடிக்காத..."

கோவமாய் பெட் ஷீட்டை விலக்கியவன்,"ரெண்டு வேளை சாப்பிடலன்னா ஒன்னும் செத்துட மாட்டேன்" என்று கோவமாய்ச் சொல்லி மீண்டும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டான்.

விவியனுக்குத் தான் என்ன செய்வதென்றே புரியாமல் விழிக்க, அப்போது அந்தச் சப்தத்தில் கொஞ்சம் கண் அயர்ந்த அந்தப் பெரியவரும் (ஜீவானந்தன்) விழித்துப் பார்க்க விவியனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை,

அந்த சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு அமைதியாகச் சென்று அங்கே இருந்த இருக்கையில் அமர, யாரோ தன்னைத் தொடுவதைப் போல் உணர்ந்த விவி நிமிர அங்கே சித்தாரா தான் இருந்தாள். அவளும் இப்போது நடந்ததைப் பார்க்க என்னவோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.

கண்களால் அவனுக்குச் சமாதானம் சொல்வதைப் போல அவள் செய்ய அங்கே இருக்க மனம் விரும்பாமல் எழுந்தவன், என்ன நினைத்தானோ அங்கிருந்த சரித்திராவிடம்,"கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் வரேன், ஏதாவதுனா ப்ளீஸ் சொல்லுங்க"

அவளுக்கும் நிலைமை புரிந்தது,"சொன்னாத் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"

"சொல்லுங்க"

"கொஞ்சம் தனியாப் பேசலாமா?"

அவர்கள் தனியாக வர,"நீங்க யாரு என்னனு எல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க ஃப்ரண்ட்ஸ் உங்களுக்குள்ள சண்டை வரது சாதாரணம் தான். ஆனால் அதை இப்படித் தான் பப்லிக்கா செய்வீர்களா?"

"எனக்கென்னாமோ அவரு ரொம்ப ஹூமிலேட் (humilate - அவமானம்) ஆகிட்டாருனு நினைக்கிறேன். ரொம்ப நேரம் ரெஸ்ட் ரூமுக்குள்ள இருந்தாரு"

"சாரிங்க"

"அதை அவருகிட்டச் சொல்லி புரியவைங்க"

அவன் தலையை ஆட்டினான்.

"சரி அவரு தூங்கறாரு. ஒரு வேளை முழிச்சா நான் சொல்றேன். நம்பர் கொடுங்க"

விவியனும் நம்பர் கொடுத்துவிட்டு நித்யா கம்பார்ட்மென்டுக்கு சென்றான்.

................................................................................

"அப்போ தான் என் ஃப்ரண்ட் பெங்களூருல ஒரு சாப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்ணான் "


"அது யாருடா எனக்குத் தெரியாத ஃபிரண்ட்?" - ஜிட்டு

"ஸ்கூல் மேட் டா"

"சரி யூ கண்டினு"

"நானும் வீட்டுல சொல்லிட்டு அங்க போய் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணேன்"

"வேலை கிடைச்சு இருக்கணுமே?"- ஜிட்டு

"டேய் இவனை அமைதியா இருக்க சொல்லுங்க டா. ப்ளோவ கெடுக்கறான்"

எல்லோரும் ஜிட்டுவை முறைக்க,"சரி சரி மன்னிச்சு"

ஒரு வாரம் கழித்து வேலைக்குப் போனேன்,

ஒரு ரெண்டு வருஷம் அப்படியே ஓடிடுச்சு,

"ஐயோ அப்போ ஹீரோயின் அங்க இல்லையா?" என்று மௌனியைப் பார்க்க,

எல்லோரும் ஜிட்டுவை முறைக்க,"இனி ஒரு தடவை பேசுனா செருப்பைக் கொண்டு அடிங்க"

"அப்போ தான் அடுத்த வருஷத்துக்கு ப்ரெஷேர்ஸ் எல்லாம் இன்டெர்வியூ முடிச்சி அன்னிக்கு நியூ கம்மெர்ஸ் எல்லோரும் வந்தாங்க"


"அங்க தான் நம்ம ஹீரோயின் இன்றோ எப்பூடி கண்டு
பிடிச்சோமில்ல?"- ஜிட்டு

"மிரு உன் செருப்பைக் கொடு" - நித்யா

"எம்மா தாயே தெரியாம பேசிட்டேன். அதென்ன ஒரு பேச்சுக்குச் சொன்னா உண்மையிலே செருப்பாலேயே அடிச்சிடுவீங்க போல"

"நாங்க எல்லாம் சொல்றதை அப்படியே செய்யுறவங்க"

"அவ தான் கேட்குறானா நீயும் செருப்பை தர? எப்போடா இவனை செருப்பால அடிக்கலாமான்னு காத்துட்டு இருக்கீங்க இல்ல? ஏன் நேத்து கையில அடிச்சதெல்லாம் போதாதா?"

"அப்படியே அவன் மண்டையில, ரெண்டு வைங்க யாராவது"- தியா

"நீ கண்டினு பண்ணுடா"

"அப்போதான் அந்த
கம்பெனில இன்டெர்வியூ முடிச்சு ஒரு ட்ரைனியா வந்து சேர்ந்தா மௌனி"

மௌனி சிரித்தாள்,

“ஆனாலும் அப்போ எங்களுக்குள்ள ஒண்ணுமில்ல. ஏன்னா நான் வேற டீம் அவ வேற டீம்”

"அப்படியே ஒரு ஆறு
மாசம் போச்சு, எல்லோரையும் டீம் மாத்த சொன்னாங்க. நானும் வந்து மூணு வருஷம் ஆனதுனால என்னைய என் பர்பார்மென்ஸ் வெச்சு டீம் லீட் ஆக்குனாங்க"

"அப்போ தான் இவளை ஒழுங்காவே பார்த்தேன்"

"ஏன் மச்சான் அதுவரை உனக்கு கண்ணுல கோளாறா?" - ஜிட்டு

"புது செருப்புனு கூடப் பார்க்க மாட்டேன். அடிச்சிடுவேன்"

என்று ஹேமா சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

"அவ வேற டீம்ல இருந்தா நான் வேற டீம் ல இருந்தேன். சோ பார்த்திருக்கேன் ஆனா பேசுனதெல்லாம் இல்ல. என் டைம் வேற அவ டைம் வேற. அப்படியே போச்சு..."

"அந்த வருஷம் வேற பெஸ்ட் எம்ப்லாய் அவார்ட் வாங்குனேனா சோ டீம் மாத்தி என்னையும் ப்ரொமோட் பண்ணாங்க"

"உன் டீம்ல வந்து சேர்ந்திருக்கணுமே அவ" மறுபடியும் ஜிட்டு தான்

"டேய் முறைக்காதீங்க டா நான் சும்மா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்க மாட்டேங்குது என் வாய் சும்மா இருந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேங்குறேன். மோரெவர் இப்படி ஒரே ஆளே பேசுனா ரொம்ப போரா இருக்கும் டா"

"சரி சரி பேசித்தொலை"

"அப்படி மரியாதையா பேசுவியா. அதை விட்டுட்டு"

"போடா @#$%" – செபா.

"டேய் பாப்பா இருக்காடா" - மிரு

"ஏய்"
என்று குரல் உயர்த்தி ஜிட்டு கத்த,

"அது சரத் குமார் படம்"

"மரியாதை... மரியாதை..."

"அது விஜயகாந்த் படம்"

"என்னைய பார்த்தா என்ன கேனப் பையன் மாதிரி இருக்கா?"

"இது எதாவது தெலுங்கு டப்பிங் படமா இருக்கும்"

எல்லோரும் சிரிக்க,

"அசிங்கப் பட்டான் இன்சுரன்ஸ் ஆபிசர்"

"என்னைய ஓட்டுறதுனா மட்டும் ஊரே திரண்டுவீங்களே? நான் இனிமேல் பேசவே மாட்டேன். ஏன் நிறுத்திவிட்டாய் ஹேமா? கூறும் கூறித் தொலையும்"

அவன் முறைக்க,

"எப்பா கதையைச் சொல்லுடா. இல்லைனா இன்னைக்கு பூரா என்னைய ஓட்டிட்டே இருப்பாங்க ப்ளீஸ் ஹெல்ப் மீ "

"அப்போ என் டீம்ல தான் வந்து சேர்ந்தா மௌனி, அந்நேரம் பார்த்து என் கம்பெனிக்கு திடீர்னு ஒரு பெரிய ஆர்டர். சோ அது எங்க டீமுக்கு தான் வந்தது..." (பயணங்கள் முடிவதில்லை)
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom