• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் - 1

Umanathan

✍️
Writer
அன்பு நெஞ்சங்களே,

இந்த தளத்துல என்னோட முதல் பதிவு இது. தேடிக் கிடைத்த செல்வம் என்னோட முதல் நாவல். முதல் காதால் எப்பிடி மறக்க முடியாதோ, அது போல முதல் நாவலும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதை இன்னும் மெருகேத்தி கொண்டு வந்திருக்கேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.

அன்புடன்,
உமா நாதன்.

தேடிக் கிடைத்த செல்வம் - 1

ஷர்விகா ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் தன் மடிக்கணினியை மூடிவைத்தாள். இன்றைய மீட்டிங்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தெளிவாக தயார் செய்து, அவளுடைய மேலதிகாரி வெங்கட்டிற்கு அனுப்பி வைத்த திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது.

ஷர்விகா ஒரு மென்பொருள் பட்டதாரி. பிறை நெற்றி, படிப்பின் தீட்ஷண்யம் காட்டும் விழிகள், சிவந்த உதடுகள், செதுக்கி வைத்தது போன்று பார்க்கும் யாவரையும் ஈர்க்கும் முகம் கொண்டவள். பாரதியின் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்டவள். புதுமை பெண்ணா என்றால் பதில் இல்லை. வெளியழகு மட்டுமில்லாமல், உள்ளார்ந்த அழகும் உடைய அவளை எல்லோருக்கும் பிடிக்கும்.

அவள் ஒரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் முக்கிய ப்ரொஜெக்ட்டில், டீம் லீடராக இருக்கிறாள். இன்று அவளது குழுவில் ஒரு புதிய மேனேஜர் வர போகிறார். அதற்கான மீட்டிங் தான் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த மாற்றம் பலவித எண்ணங்களை உருவாக்கியுள்ளது. வரப்போகும் புதிய மேனேஜர் எப்படிப்பட்டவராக இருப்பார், அவரின் அணுகுமுறை எப்படி இருக்கும், ப்ரொஜெக்ட்டில் உள்ள யாரையாவது அவர் வெளியே அனுப்பி விட்டால் என்ன ஆகும் என்பது போல. அவளுடன் வேலை பார்க்கும் ரித்வியும் நேற்று அதை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தாள். புலி வருகிறது என்பது போல் அனைவரும் ஒரு விதமான பதற்றத்துடன் தான் இருந்தார்கள்.

ஆனால் ஷர்விகாவிற்கு அந்த பயமோ பதட்டமோ இல்லை. அவளின் வேலை திறன் பற்றியும், இந்த ப்ரொஜெக்டில் அவளின் பங்களிப்பு பற்றியும் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. எனவே எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது.

'அது தான் காரணம் என்று நீ நம்புகிறாயா?' என்று அவளது மனம் அவளை கேள்வி கேட்பது போல் ஓர் எண்ணம் ஷர்விகாவின் உள்ளே உள்ளோடியது. அக்கேள்வி தோன்றியதும் அவள் முகம் தீயில் விழுந்த மலரைப்போல் வாடியது.

அவளுக்குத் தெரியும், தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தை ஒப்பிட்டால், வேறு எந்த கஷ்டமும் ரோஜா மலர் தூவிய பாதை போலத்தான் என்று. எதை மறக்க இரண்டு வருடமாக அவள் முயற்சிக்கிறாளோ, அந்த நினைவுகள் மீண்டும் தலை தூக்க தொடங்கியது. ஆனால் அதே இரண்டு வருடமாக செய்வது போல அவள் அந்த எண்ணங்களை மீண்டும் ஆழ் மனதில் புதைத்து, முகத்தில் புன்னகையை வரவழைத்தாள்.

அவள் நினைவிகள் வெங்கட் அவளை இந்த ப்ராஜக்ட்டில் சேருமாறு கூறிய நாள் நினைவிற்கு வந்தது. வெங்கட் அவளை இந்த ப்ராஜக்ட்டில் சேருமாறு கூறிய போது அவள் மிகவும் தயங்கினாள்.

ப்ராஜக்ட்டின் முக்கியத்துவமும், அதில் அவளின் பொறுப்புகளும் தயங்க வைத்ததாலும், அவளின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலை கொண்டிருந்த சூறாவளி, அவளை எந்த முடிவும் எடுக்க விடாமல் தடை செய்தது. அப்போது வெங்கட் தான் அவளை வற்புறுத்தி இந்த பொறுப்பை ஏற்க வைத்தார்.

அன்று அவர் கூறிய வார்த்தைகள் பசுமரத்தாணி போல் அவளின் நினைவில் இன்னும் இருக்கிறது. "உன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ஷர்விகா? இல்லை சுய பச்சாதாபத்திலேயே மூழ்கி இருக்கப் போறியா? எல்லோரும் உன்னை பரிதாபமாக பாக்கறது சுகமாக இருக்கோ?"

அப்போது அவரின் வார்த்தைகள் அவளுக்குள் கோபத்தை உண்டு பண்ணியிருந்தாலும், இப்போது அவரின் செய்கையை நன்றியுடன் நினைத்துக்கொண்டாள்.

சொல்லப்போனால் இந்த ப்ராஜக்ட்டின் பொறுப்புகள் அவளை வேறு எதையும் யோசிக்க விடவில்லை. மிதமிஞ்சிய வேலைகளும், அதற்கேற்ற அவளின் தீவிர உழைப்பும் அவளை சோகத்திலிருந்து வெளியே வரவைத்தது. அதோடு அந்த கடின உழைப்பிற்கான பலன்களை அவள் பெறப்போகிறாள்.

ஆம், அவளுக்கு விசா கிடைத்து விட்டது. இன்னும் 2 மாதங்களில் அவள் இந்த நாட்டையும், அவளின் கடந்த காலத்தையும் விட்டு விட்டு போகப் போகிறாள். கோழைத்தனமான முடிவு தான். அனால் எல்லாவற்றையும் மறக்க அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

இதற்கு மேல் இங்கிருந்தால் பழைய நினைவுகள் அவளை திரும்ப தொல்லை பண்ணக்கூடும் என்று தோன்றியது. மீட்டிங்கிற்கு இன்னும் 30 நிமிடங்கள் இருப்பதால், ஒரு காபி குடித்து விட்டு வரலாம் என்று முடிவு செய்தவள், அதற்கு முன் எல்லா ஆவணங்களும் தயாராக இருக்கிறதா என்று மற்றொரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.

இன்றைய மீட்டிங்கில், அவளுடைய பொறுப்புகள் மற்றும் ப்ரொஜெக்ட்டில் அவளின் நிலைப்பாடு பற்றிய விவாதம் இருக்குமா அல்லது வேறு ஒரு தனிப்பட்ட மீட்டிங் ஏற்பாடு செய்யப்படுமா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் என்னென்ன கேள்விகள் கேட்கப்படலாம், அதற்கு என்ன பதில் தர வேண்டும் என்று தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள். மேற்கொண்டு வேறு ஏதேனும் கேட்டால் பதில் கூற முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

அந்த நம்பிக்கை அளித்த திருப்தியுடன், காபி இடைவேளை எடுத்துக் கொள்ள எழுந்து சென்றாள் ஷர்விகா.

காபி குடித்து விட்டு வேகமாய் தன் இருக்கைக்கு வந்தவள், மடிக்கணிணியை எடுத்துக் கொண்டு மீட்டிங் நடக்கும் தளத்திற்கு வெரைந்தாள். சோதனையாக லிப்ட் பழுது என்ற அறிவிப்பை பார்த்து திகைத்தவள், பின்னர், இரண்டு மாடி தானே என்று எண்ணி விடிவிடுவென்று படிகளில் ஏற ஆரம்பித்தாள்.


இன்று பார்த்து இந்த லிப்ட் இப்படி சதி செய்யும் என்று நினைக்கவே இல்லையே, என்று தனக்குள் நொந்தபடி, படிகளில் ஏறிச்சென்றாள். மீட்டிங் நடக்கும் அறை வாசலில், ஒரு நிமிடம் நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மணியை பார்த்தாள். பரவாயில்லை 5 நிமிடங்கள் தான் தாமதம் என்று ஆறுதல் படுத்திக்கொண்டு, சத்தமில்லாமல் கதவைத் திறந்து உள்ளே சென்று, ஏற்கனவே ஆரம்பித்து இருந்த மீட்டிங்கை தொந்தரவு செய்யாமல், ஒரு இருக்கை தேடி அமர முற்பட்டாள்.

ஆனால் உள்ளே நுழைந்த அந்த நொடி எதோ ஒரு உணர்வு அவளைத் தாக்க, தன்னையறியாமல் அவளின் கண்கள் அறையின் மையப்பகுதி நோக்கி சென்றது. அங்கே தென்பட்ட முகத்தை பார்த்ததும் அவளின் முகம் இரத்தப்பசை இழந்து வெளுத்துப்போனது.

அந்த முகத்தை அவளால் எப்படி மறக்க முடியும். இனி பார்க்க மாட்டோமோ என்ற ஏக்கத்தையும், இனி பார்க்கவே கூடாது என்ற வைரக்கியத்தையும் ஒரு சேர உண்டாக்கிய முகம் அல்லவா அது. அவளின் இதயம், மூளை, ஆத்மா என்று மொத்தததையும் வியாபித்த முகம் அல்லவா அது. ஆனால் ஒரு வித்தியாசம், அந்த முகத்தில் முன்பிருந்த கனிவும் சிரிப்பும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கண்கள். உலகில் உள்ள எல்லா வெறுப்பையும் சேர்த்து அவள் மீது கொட்டியது.

"ஓ வந்துட்டீங்களா ஷர்விகா? உங்களை பத்தித் தான் பேசிட்டு இருந்தோம்." என்றார் வெங்கட். பின்பு அவர் அப்புதியவனிடம் திரும்பி, "வித்யுத், இது தான் ஷர்விகா, இந்த ப்ரொஜெக்ட்டோட முக்கியமான டீம் லீட். ரொம்ப திறமைசாலியான பொண்ணு." என்றார்.

மேலும் ஷர்விகாவிடம் திரும்பி, "ஷர்விகா, இவர் தான் வித்யுத், நம் ப்ரொஜெக்ட்ல புதுசா சேர்ந்திருக்கும் மேனேஜர்." என்றார்.

ஆனால் வெங்கட்டின் குரல் ஏதோ கிணற்றில் இருந்து கேட்பது போல் அவளுக்கு தோன்றியது. மீட்டிங் அறையில் என்ன சொன்னாள், எப்போது வெளியே வந்தாள், பெண்களின் அறைக்கு எப்படி வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கு இன்னும் புரியவில்லை.

இரண்டு வருட பிரிவு, அவளை பக்குவப்படுத்திவிட்டது, எல்லா நினைவுகளையும் மறக்கடித்துவிட்டது என்று எண்ணியது எவ்வளவு முட்டாள் தனம். கண்களில் வழிகிற கண்ணீருடன், அவளுடைய வேதனையும், அதிர்ச்சியும் சேர்த்து கழுவிவிடும் வேகத்தில் மீண்டும் மீண்டும் தண்ணீரை முகத்தில் வாரி வாரி அடித்தாள்.

அதே நேரம் வெங்கட்டின் அறையில் வித்யுத்தும் வெங்கட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.


"இது சரியா வரும்னு நினைக்கிறீங்காளா வித்யுத்? ஷர்விகாவோட முகத்தை பாத்தீங்கதானே." என்று வெங்கட் கேட்ட கேள்விக்கு உடனடியாக பதில் கூறாமல், ஜன்னலின் அருகில் சென்று வெளியே பார்த்தபடி நின்றான் வித்யுத்.

பின்னர் ஒரு நெடிய மூச்சை விட்டவன், அவர் புறம் திரும்பினான். "இல்லை வெங்கட். எனக்கு தெரியல. ஆனா ரெண்டு வருஷமா பதில் தெரியாம குழப்பற கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சிக்கவே வந்திருக்கேன். அதை புரிஞ்சிகிட்டு என்னை இந்த ப்ரொஜெக்ட்டில் சேர்த்துகிட்டீங்களே. தாங்க்ஸ் வெங்கட்." என்றான் வித்யுத்.

வெங்கட் ஒரு சிறு புன்னகையுடன் பதில் கூறினார். "இதில என்னோட சுயநலமும் கலந்திருக்கு. ஒருத்தருக்கு ரென்டு திறமைசாலிங்க என்னோட ப்ராஜட்டுக்கு கிடைச்சிருக்காங்களே." என்றவர், ஒரு சிறு அமைதிக்கு பின் தொடர்ந்தார்.

"ஆனா ஒன்னு வித்யுத், ஷர்விகா இப்போ தான் எல்லாத்தையும் மறந்து அவங்களோட மனசை தேத்தி பழைய நிலைக்கு திரும்பியிருக்காங்க. அவங்க மனச மறுபடியும் உடைச்சிடாதீங்க. அப்புறம் நீங்க எனக்குத் தான் பதில் சொல்லனும்."

வெங்கட்டின் குரலில் இருந்த கூர்மையை கண்டு வித்யுத் வியந்து போனான். அப்படி என்ன மாயம் செய்தாய் ஷர்விகா? இப்படி எல்லோரும் உனக்காக பரிந்து பேசுகிறார்களே. இல்லை நான் தான் உன்னை தவறாக புரிந்து கொண்டேனா என்று ஒரு நிமிடம் யோசித்தான் வித்யுத்.

ஆனால் அவன் மனம் உடனே இறுகியது. இல்லை, என்னிடம் தான் உறுதியான சான்று இருக்கிறதே.

உன் மாய வலையில் நானும் விழுந்தது உண்மை தான். இல்லையன்றால், உன்னை பற்றிய உண்மையை உலகறிய கூறியிருப்பேனே. இப்படி எல்லாவற்றையும் மறைத்து உன்னை நல்லவளாக்கி, என்னை கெட்டவனாக காட்டிக்கொண்டிருக்க மாட்டேனே என்று உரைத்தது அவன் உள்ளம்.

ஆனால் உன் முகத்திறையை கிழிக்க அதிக நாள் ஆகாது. என் கேள்விகளுக்கு உன்னிடம் இருந்து சரியான பதிலை வாங்காமல் உன்னை விடமட்டேன். வெளியே பர்த்தது போல நின்றதால், பாறை போன்று இறுகி இருந்த அவன் முகத்தை வெங்கட் பார்க்கவில்லை. இல்லையென்றால் அவனை இந்த ப்ராஜக்ட்டில் சேர்த்தது தவறோ என்று நினைத்திருப்பார்.
 

Lakshmi

Well-known member
Member
மறந்து விட்டாள் என்று நினைத்தவன் வந்து விட்டான்.இனி என்ன செய்ய காத்து இருக்கிறானோ.
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom