• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் – 5

Umanathan

✍️
Writer
ஹோட்டலில் நுழைந்து, அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்த உடனே பேச ஆரம்பித்தாள் ரித்வி. "என்ன தான் நடந்தது ஷர்விகா? காலைல இருந்து என் தலை வெடிக்காம நான் பார்த்துகிட்டது எனக்குத் தான் தெரியும்."

ரீத்வியின் பரபரப்பான குரலை கேட்டு மெல்லிய புன்னகை சிந்திய ஷர்விகா, பொறு என்று கை ஜாடை செய்தாள். மூவரும் என்ன வேண்டும் என்று வெய்ட்டரிடம் கூறி விட்டு அவர் அங்கிருந்து அகலும் வரை காத்திருந்தனர்.

பின்னர் ஒரு பெரும் மூச்சை வெளியே விட்டு ஷர்விகா ரித்வியின் பக்கம் திரும்பினாள். "இன்னைக்கு காலைல நாங்க பேசினத கேட்டதுக்கு அப்புறம் எனக்கும் வித்யுதிற்கும் என்ன சம்பந்தம்னு நீ யோசிக்கறது தெரியும்."

"இன்னைக்கில்ல, வித்யுத் இந்த புராஜக்ட்ல சேர்ந்ததுல இருந்தே நீ நடந்துகிட்ட விதத்தில இருந்தே எனக்கு ஒரு சந்தேகம்." என்றாள் ரித்வி.

ஆம் என்று தலை ஆட்டிய ஷர்விகா சூசன் பக்கம் திரும்பி "எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு இங்க யாருக்கும் வெங்கட்டை தவிர தெரியாது. ஆனா ரித்வி என்ன விஷயம்னு ஒரு தரம் கூட கேட்காம, நான் எப்போல்லாம் மனசு வருத்தப்படும் போது என்னோட இருந்து என்னை தேத்தி இருக்கா. எனக்கு கிடைத்த ஒரு நல்ல பிரண்ட் ரித்வி." என்று ரித்வியின் கையை பிடித்துக் கொண்டு கூறினாள்.

"ரித்வி, நீ நினைச்சது சரி தான். புராஜக்ட் தாண்டி எனக்கும் வித்யுத்திற்கும் சம்பந்தம் உண்டு. வித்யுத் என்னோட கணவர்."

ரித்வியின் அதிர்ந்த பார்வையை கண்ட ஷர்விகா "பொறு ரித்வி, நான் முழுசும் சொல்லி முடிச்சடறேன்" என்று கூறினாள்.

"வித்யுத்திற்க்கும் எனக்கும் நடந்தது, பெத்தவங்களால நிச்யாயிக்கபட்ட திருமணம். ஆனால் அவரை முதல் முதல் பார்த்த போதே இவர் தான் எனக்கானவர் அப்பிடிங்கற எண்ணம் எனக்கு வந்திடிச்சி. எங்க ரெண்டு பேரோட சம்மதத்தோட கல்யாண நாளையும் குறிச்சாங்க."

"அதுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். எங்களுக்குள்ள சின்ன சின்ன சண்டைகள் அதுக்கு அப்புறம் சமாதானம், அதுக்கு நடுவே வாழ்கையை பற்றிய பேச்சு, திட்டம்னு நாட்கள் அழகா போனது."

"நீங்கள் ஒருத்தருக்கொருத்தர் காதலிக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு புரியுது. அப்புறம் என்ன?" என்று கேட்டாள் ரித்வி.

ஷர்விகா ஆம் என்று தலை ஆட்டி விட்டு, "எங்களுக்குள்ள எல்லாமே நல்லா அமைஞ்சிருக்க, ஒன்னே ஒன்று மட்டும் தான் பிரச்சினையா இருந்தது. அது வித்யுத்தோட சின்ன வயசு தோழி வினு. வினுவிற்கு ஆரம்பத்தில் இருந்தே என்னை பிடிக்கலை. ஆனால் பிரச்சினையே அதை அவ காட்ற விதம் தான். வித்யுத் விஷயத்தில அவளுக்குக் தான் அதிக உரிமை இருக்கு, நான் வஅவங்களுக்குள்ள தேவையில்லாம வந்துட்டது போலவும் அவள் பேச்சு இருக்கும்."

"ஆனால் எதுவும் நேரடியா இருக்காது. மறைமுகமான குத்தல்களாத்தான் இருக்கும். வித்யுத் கிட்ட சொன்னா, அவர் அதை ஒத்துக் கொள்ள மாட்டார். நான்தான் புரிஞ்சிக்காம பேசறதா நினைச்சி என்னை தான் சமாதானம் செய்வார். எங்களுக்குள் வர்ற சண்டை பெரும்பாலும் வினு சம்பந்தமா தான் இருக்கும்."

பழைய நினைவுகளின் தாக்கத்தில் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் ஷர்விகா. ரித்வி அவள் கைகளை பிடித்து மெல்ல அழுத்தினாள். அவளின் செய்கை ஏனோ ஷர்விகாவை தேற்றியது.

"எங்களோட கல்யாணத்துக்கு ஒரு மாசம் இருக்கும் போது, வித்யுத் என்னோட பேசறது கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சிடிச்சி. நானா கூப்பிட்டாலும் அதிகமா பேசலை. ஒரு வேளை என்னைப் போலவே திருமண நாள் நெருங்க நெருங்க அவரும் அந்த பதட்டத்தில் இருக்கிறாரோன்னு விட்டுட்டேன். கல்யாணத்தப்பவும் அவர் பக்கத்துல ஒரு கற்சிலை போல தான் இருந்தார். ஏதோ ஒரு இயந்திரம் போல தான் என் கழுத்தில் தாலி கட்டினார். ஒரு நொடி கூட என் முகத்தை பார்க்கலை."

"அன்னைக்கு இராத்திரி தனிமைல என்னை பார்த்து, அவரை பொருத்த வரைக்கும் நடந்த கல்யாணம் ஒரு பெரிய தப்புன்னு சொன்னார். நானும் முதலில் அவர் விளையாடுறார்ன்னு நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவரோட நடவடிக்கை எனக்கு கவலையை கொடுத்தது. ஏன்னு கேட்டா, அந்த கேள்விக்கும் பதில் இல்லை. ஒரு மாசத்துக்கு அப்புறம் ஒரு நாள் வித்யுத்தே எங்கிட்ட வந்து, அவருக்கு டெல்லியில் வேலை கிடைச்சிட்டதாகவும், அந்த வாரமே போகபோவதாவும் சொன்னார். அதோட நான் அதே வீட்டில் இருக்கறதா இல்லை வேறு இடம் போறதான்னு அதுக்குள்ள முடிவு செஞ்சிக்க சொன்னார்."

"எனக்கு ஒன்னும் புரியலை. அந்த ஒரு மாசத்துல நாங்கள் கணவன் மனைவியா இல்லை, சாதாரண நண்பர்களா கூட நடந்துக்கலை. பொறுக்க முடியாம அவர்கிட்ட நான் காரணம் கேட்டு வற்புறுத்தும் போது, என்னைப் மாதிரி ஒரு பெண்ணை அவர் கல்யாணம் செஞ்சது தப்புன்னும், எனக்கு பாடம் கத்து கொடுக்கறதுக்காக தான் என்னை கல்யாணம் செஞ்சிகிட்டதாவும் சொன்னார். அதுக்கு என்ன அர்த்தம்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியலை."

"ஒருவேளை இந்த கல்யாணத்துல அவருக்கு விருப்பம் இல்லையோ தோண, என்னை விவாகரத்து செய்ய பாக்கராறோன்னு சந்தேகம் வந்தது. சந்தேகமாக இருந்தாலும் அந்த நினைப்பே என்னை கொன்னுடுச்சி. இருந்தாலும் மனசை தேத்திகிட்டு அந்த கேள்வியையும் கேட்டேன். அப்பா, அதைக் கேட்டு மாறிய அவரோட முகத்த இன்னும் என்னால மறக்க முடியலை. எந்த காலத்திலும் எனக்கு விடுதலை தரபோவதில்லைன்னும், நான் நினைச்சது எப்போதும் நடக்காதுன்னும் சொல்லிட்டு வெளியே போயிட்டார்."

"அதுக்கப்புறம் அவர் நான் அந்த வீட்டை விட்டு வெளியே போக முடிவு செஞ்சபோதும் என்னை தடுக்கலை. அதுதான் அவரை கடைசியா பார்த்தது. அவர் டெல்லியில் இருந்து இங்கு திரும்ப வந்துட்டாருங்கறதே அன்னைக்கு அவர் பிராஜக்ட்டல சேர்ந்த அன்னைக்கு தான் தெரியும்."

ஒரு மூச்சில் தன் கதையை சொல்லி விட்டு ஓய்ந்து இருந்த ஷர்விகாவை அணைத்து கொண்டாள் ரித்வி.

பின் ரித்வி ஒரு யோசனையோடு கேட்டாள் "உங்கள் ரெண்டு பேரோட பெத்தவங்களும் எதுவும் கேட்கலையா?"

"வித்யுத்தோட பெத்தவங்க எங்க கல்யாணம் முடிஞ்சதும் அவங்க பொண்ணு கூட இருக்க ஆஸ்திரேலியா போயிட்டாங்க. அவங்க கிட்ட வித்யுத் என்ன சொன்னார்ன்னு தெரியலை. அவங்க எங்களால் ஒன்றும் செய்ய முடியலையேன்னு இப்பவும் தவிச்சிட்டு இருக்காங்க. இன்னும் ஆன்ட்டியால அழாம எங்கிட்ட பேச முடியாது. என் அப்பா அம்மாவுக்கும் இது பெரிய அதிர்ச்சி தான். முதல்ல அப்பா வித்யுத்கிட்ட பேசி பார்த்தார். ஆனா அவர் பிடி கொடுக்காமல் பேசவும் அப்பாவுக்கு கோபம் தான் வந்தது. நான் தான் அப்பாவை மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்னு நிறுத்திட்டேன். தேவையில்லாம அவரும் அவமானப் படுவானேன். அம்மாவால ரொம்ப நாள் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவே முடியலை."

ஷர்விகாவின் முகம் தீயில் விழுந்த பூ போல வாடியது.

"அதுக்கு அப்புறம் நான் ஊருக்கு போறதையே விட்டுட்டேன். கணவன் இல்லாம அவர் பொண்ணு மட்டும் ஊருக்கு வர்றதுக்கு எங்கப்பாவால என்ன காரணம் சொல்ல முடியும். சொல்லப்போனா என் தங்கை ஷாரிகாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சி. ஒரு அக்காவாக அவள் பக்கத்துல இருந்து என்னால எதுவும் செய்ய முடியலை."

ஷர்விகாவின் கண்களில் வழியும் கண்ணீருக்கு பதில் கூற முடியாமல் ரித்வியும் சூசனும் தவித்தனர். தன்னை ஆறுதலாக அணைத்துக் கொண்ட ரித்வியின் தோளில் சாய்ந்து விசும்பினாள் ஷர்விகா.

ஒரு சிறிய அமைதிக்கு பின் சூசனின் குரல் அவளை மீண்டும் இவ்வுலகத்திற்கு கொண்டு வந்தது.

"எல்லாம் சரி ஷர்விகா. வித்யுத்தும் நீயும் ஒன்னா என்ன செய்றீங்க?"

ஷர்விகா எந்த உணர்வும் இல்லாத குரலில் பதில் கூறினாள். "நான் இன்னும் 2 மாசத்துல ஆன் சைட் போறேன், அதனால இந்த புராஜக்ட்டை பார்த்துக்க தான் வித்யுத் இங்கு வந்திருக்கார். வேற ஒன்னும் இல்லை."

ரித்வி அப்பொழுது கேட்டாள் "இனிமே என்ன செய்யப் போற ஷர்வி?"

தலையை அசைத்த ஷர்விகா கூறினாள் "தெரியலை ரித்வி. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் வித்யுத் ஏன் இங்க வரணும். அவர் ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்யறார். நான் வேண்டாம்ன்னா என்னை விவாகரத்தாவது செஞ்சிட்டு போலாமே." சலிப்புடன் வந்தது அவள் குரல்.

"நீ ஏன் அதுக்கு முயற்சி செய்யலை. நீ விவாகரத்து தர தயாரா இருக்கியா?" சூசனின் கேள்விக்கு ஷர்விகாவால் பதில் கூற முடியவில்லை. அதை தவிர்க்க உணவு உட்கொள்ள தொடங்கினாள். இந்த கேள்விக்கு அவளால் என்றுமே பதில் கூற முடியவில்லை என்பது அவளுக்கு தெரியும்.
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom