• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடிக் கிடைத்த செல்வம் – 4

Umanathan

✍️
Writer
தேடிக் கிடைத்த செல்வம் – 4

சரியாக ஆறு மணிக்கு ஷர்விகாவின் விடுதி வாசலில் வந்து நின்றான் வித்யுத். காரிலிருந்து இறங்கி ஷர்விகாவின் எண்ணை அழைக்க எத்தனித்த போது, அவனது கண்கள் அவனையும் மீறி திரும்பி பார்த்தது. உள்ளே பிங்க் நிற சேலையில், பொருத்தமான மெல்லிய நகைகளுடன், மிதமான ஒப்பனையுடன் ஒரு தேவதை போல் அவள் வருவதை கண்டான்.

ஒரு நொடி எல்லாவற்றையும் மறந்து, மின்னல் அடித்த மாதிரி திகைத்தவனின் கால்கள் அவளை நோக்கி தானாக நகர்ந்தது.

விடுதி வரவேற்பு அறைக்குள் வந்த ஷர்விகா அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த வித்யுத்தை பார்த்து மெய்மறந்து நின்றாள். எந்த வித அலங்காரமும் இன்றி கம்பீரத்துடன் ஒரு ஆணழகன் போல் அவளை நோக்கி வருபவனை கண் கொட்டாமல் நோக்கினாள்.

"என்ன ஷர்விகா? வெளியே போறியா? ஆச்சரியம் தான் போ. மழை கிழை வந்துடப் போகுது." என்ற குரலில் இருவரின் மயக்கமும் தெளிந்தது.

"அது.. அது வந்து மேடம்…" இன்னமும் தெளியமல் தடுமாறிய ஷர்விகாவை மறித்து பதில் கூறினான் வித்யுத்.

"வணக்கம். நான் ஷர்விகாவோட கொலீக். இன்னைக்கு எங்கள் ஃப்ரெண்ட் வீட்டில ஒரு பர்த்டே ஃபங்ஷன். அதுக்கு ஷர்விகாவ கூட்டிட்டு போக வந்தேன். இங்க வெளியே போக ஈதவது சரியான விவரம் சொல்லிட்டு போகனுமா?" என்று புன்னகையுடன் கேட்டான்.

அவர் தான் விடுதி மேலாளர் என்று நான் கூறவே இல்லையே. பிறகு எப்படி கனித்தான்? என்று யோசித்தவள், நல்ல வேளை அவர் என்னை அழைத்தார். இல்லையென்றால் வித்யுத்திடம் ஏதாவது உளறி இருப்பேன் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அப்பொழுது தான் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தாள்.

"இங்க ரெகார்ட்ல அத எழுதிட்டு போனா போதும் அது பொதுவான விதி தான் சார். ஆனால் ஷர்விகா பொறுத்தவரை நான் கவலைப் பட வேண்டாம். எனக்கு தெரிஞ்சு ஷர்விகா எங்கயும் போனதே இல்லை. ஹாஸ்டல் விட்டா ஆபீஸ் மட்டுமே. இங்க வந்த இரண்டு வருஷத்தில் ஷர்விகாவை தேடி ஒருத்தர் வர்றது இது தான் முதல் முறை."

பேச்சு அபாயகரமான பதையை நோக்கி செல்வதை உணர்ந்த ஷர்விகா மேலும் தாமதிக்காமல் மேலாளரிடம் சொல்லிவிட்டு வித்யுத்தை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

செல்லும் வழி எங்கும் அவன் அமைதியாகவே இருப்பதை ஒரு வித சலனத்தோடே பார்த்துக் கொண்டு வந்தாள். மேலாளர் கூறியதை வைத்து அவன் என்ன நினைக்கிறான் என்பதை புரிந்துக் கொள்ள இயலாமல் தவித்தாள். அவன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்று மனம் நிம்மதியானது. அதே சமயம் அவன் எதுவும் கேட்கவில்லையே என்றும் ஏங்கியது. இவனால் வாழ்வில் நிம்மதி இல்லாமல் போய்விட்டதே என்று நொந்துகொண்டே வந்தாள்.

ஸ்வேதா அவளை கண்டு ஆச்சரியம் அடைந்தாலானாள் அதை வெளிக்காட்டவில்லை. ஷர்விகாவை ஆவலுடன் வரவேற்று கட்டி அணைத்தாள். ஸ்வேதாவின் மனதில் எத்தனை கேள்விகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பேசியது ஷார்விகாவிற்கு ஆறுதலாய் இருந்தது. இத்தனை நல்ல தோழியிடம் இவ்வளவு நாள் பேசாமல் இருந்து விட்டோமே என்று மனம் வருந்தினாள்.

கேக் வெட்டிய பின், புகைப்படம் எடுத்து முடித்தவுடன் ஸ்வேதாவின் கணவரும், வித்யுத்தும் வந்தவர்களை உணவருந்த அழைத்து சென்றார்கள். ஸ்வேதாவுடன் இருந்த ரோஜா மொட்டுகள் போன்ற குழந்தைகளை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷர்விகா.

பவ்யா, காவ்யா என்ற பெயருடன் இரண்டு பற்கள் மட்டம் கொண்டு அவளை பார்த்து சிரித்த போது, இரு போன்றதொரு தாய்மை கிடைக்குமா? ஆனால் அது அவளுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாகி விட்டதே என்று மனம் கொய்தது.

ஷர்விகாவின் முகத்தை பார்த்த ஸ்வேதா ஒரு புன்னகையுடன், "பவ்யாவை தூக்கிக்கிறியா ஷர்வி. முன்னயாவது பரவால்லை. இப்போது இரண்டு பேரும் செய்யற சேட்டைக்கு அளவே இல்லை. அதோட பங்ஷனால இரண்டும் டயர்ட் ஆகிட்டாங்க" என்றாள்.

அதற்கேற்றார் போல் இரண்டு பிஞ்சுகளும் கண்களை மூடி மூடி திறக்க, இதற்கு மேலும் நீ கேட்க வேண்டுமா என்பது போல் ஒரு குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டாள் ஷர்விகா. புதியதாக ஒருவர் தன்னை தூக்குகிறாரே என்று சற்று சிணுங்கி மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தது அந்த பிஞ்சு.

பவ்யாவை தூக்கி கொண்ட பின் ஷர்விகாவின் உள்ளத்தில் தான் என்னென்ன உணர்ச்சிகள்? இனம் தெரியாத ஏதோ ஒன்று அவளின் உள்ளே ஊடுருவி சென்று சிலிர்க்க வைத்தது. உள்ளிருந்த ஆவலையும் ஆசையையும் தன் கண்கள் காட்டுவதை அறியாமல், மெல்ல தலையை திருப்பி வித்யுத்தை பார்த்தாள்.

வித்யுத்தும் ஷர்விகவை பார்த்து ஒரு நொடி சிலை போல நின்றான். கேள்வியாக பார்த்த அவன் முகம் ஏதோ புரிபட்டது போல் திகைத்து நின்றது. அவனது விரிந்த விழிகளும், புன்னகை ததும்பிய உதடுகளும் அவளுக்கு ஏதோ சொன்னது. என்ன என்று அவள் கேட்க எத்தனிக்கும் போதே அவன் சரேலென திரும்பி ஸ்வேதாவின் கணவருடன் பேச ஆரம்பித்தான். இவனை எப்படி புரிந்து கொள்வது என்று உள்ளூர பெருமூச்சு விட்டபடி ஸ்வேதா பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தாள்.

விழா முடிந்தவுடன் ஷர்விகாவும் வித்யுத்தும் கிளம்ப எத்தனித்த போது ஸ்வேதா ஷர்விகாவை இறுக அணைத்து தொடர்பில் இருக்கும்படி கூறினாள். ஷர்விகா ஒரு வருத்தமான முறுவலுடன் தலையாட்டினாள்.

அவ்வப்பொழுது வீட்டிற்க்கு வரவேண்டும் என்ற அன்பு கட்டளையுடன் இருவரும் கிளம்பினர். செல்லும் வழியில் வித்யுத் அவள் ஏன் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று கேட்டான். பதில் வராமல் போகவே அவளை திரும்பி பார்த்த போது, ஷர்விகா அமைதியாக அமர்ந்திருப்பதை கண்டான்.

காரை ஓரமாக நிறுத்திவிட்டு, மீண்டும் அவளை பார்த்துக் கேட்டான். பின்னிய தன் விரல்களை பார்த்துக் கொண்டே மெல்ல வாய் திறந்தாள் அவள்.

"எனக்கு யாருடனும் பேசற தைரியம் வரலை."

"ஆனால் நீ என்னோட அம்மா அப்பாட்ட இன்னமும் பேசிட்டு தானே இருக்க?"

"அவங்களோட கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணமோன்னு எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி. அதனால் தான்..."

வித்யுத்திடம் சற்று நேரம் எந்த பதிலும் இல்லை. முகம் இறுக கோபத்துடன் காரை எடுத்தவன் வேகமாக அவள் விடுதி வாசலில் நின்றான். அவள் இறங்கிய அடுத்த நொடி, திரும்பி கூட பார்க்காமல் விருட்டென்று அவ்விடத்திலிருந்து விலகி
சென்றான்.

***

அடுத்த நாள் பிரசன்டேஷன் நன்றாக முடிந்தது. வாடிக்கையாளர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் திருப்தியாக அமைந்து விட்டது.

திட்டமிட்ட நேரத்தையும் தாண்டி மீட்டிங் நடைபெற்றதால், வெற்றிகரமாக முடிந்தாலும், ஷர்விகாவிற்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. ரித்வியை அழைத்துக் கொண்டு காபி குடிக்க வெளியே வந்தாள்.

ரித்வியுடன் காபி குடித்து கொண்டிருக்கும் போது "ஷர்வி? ஷர்விகா? நீ தான?" என்ற குரல் கேட்டு திரும்பியவள் முகம் உடனே மலர்ந்தது.

"சூசன், எப்படி இருக்க? நீ பங்களூரில தானே இருந்தே. எப்போ இங்கே வந்த?" என்று கேட்டாள்.

சூசன் சிரித்துக் கொண்டே "இல்லை இன்னும் பங்களுரில் தான் இருக்கேன். என்னோட புராஜக்ட் விஷயமா இங்க ஒரு மீட்டிங். அதுக்காக வந்தேன். இன்னைக்கு நைட்டே நான் திரும்பி போகனும். நீ எப்போ இந்த ஆபீஸ்க்கு வந்தே? எத்தனை முறை உனக்கு ஈமெயில் அனுப்பினேன். ஏன் பதிலே அனுப்பலை?" என்று கேட்டாள்.

"அது... என் நிலைமை தான் உனக்கு தெரியுமே. யாராச்சும் பரிதாபமாக என்னை பார்த்தா என்ன செய்யறதுனு எல்லோருடனும் தொடர்பை விட்டுட்டேன்."

சூசன் பதில் கூறும் முன் "ஷர்விகா பாதி ப்ரேக்ல உன்னை கூப்பிட வேண்டியிருக்கு.வெங்கட் ரூம்க்கு கொஞ்சம் வர முடியுமா? இன்னைக்கு மீட்டிங் பொறுத்து அடுத்து என்ன செய்யனும்னு முடிவு எடுக்கனும்" என வித்யுத் கூற சரி என்று தலை அசைத்தாள் ஷர்விகா.

வித்யுத்தின் தலை மறைந்தவுடன் சூசன் ஷர்விகாவை தன்பக்கம் திருப்பினாள். "அது வித்யுத் தானே? அவர் எப்படி இங்க? நீ? நீங்கள் ரெண்டு பேரும்?" சூசனின் திகைப்பை பார்த்து ஷர்விகா ஒரு முறுவலோடு இல்லை என்பது போல தலை அசைத்தாள்.

"நீ நினைக்கறா மாதிரி ஒன்னும் இல்லை. வித்யுத் என்னோட புராஜக்ட் மேனேஜர். அவ்வளவே." என்றாள்.

அதுவரை நடப்பதை எல்லாம் ஒரு திரைப்படம் போல் பார்த்துக் கொண்டிருந்த ரித்வி இடை மறித்தாள்.

"என்ன நடக்குது ஷர்விகா? ஏதோ நக்குதுன்னு புரியுது. ஆனா என்னன்னுதான் தெரியல."

"அது ஒரு பெரிய கதை ரித்வி. இப்போ சொல்ல நேரமில்லை." என்றவள் சூசனிடம் மதியஉணவிற்கு பார்க்கலாமா என்று கேட்டாள்.

சூசன் சரி என்று கூறவும் இருவரிடமும், 1 மணிக்கு பார்க்கலாம். அப்போது பேசிக்கொள்ளலாம் என்று கூறி விட்டு சூசனின் வருத்தமான முகத்தையும் ரித்வியின் குழப்பமான பார்வையையும் கவனிக்காமல் வெங்கட்டின் அறையை நோக்கி நகர்ந்தாள்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom