• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 8

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் - 8❤

இரவு நேர இனிமையில் தன் தலைவனின் தரிசனத்தை பெற்ற மகிழ்வோடும் மற்றொருமுறை தரிசிக்க ஆவல்கொண்டும் ஏங்கி கிடந்த நிலவு பெண்ணின் இருதலைகொள்ளி நிலையினை போல,

தன் வீட்டு சமையலறையில் இரவு நேர உணவை சமைத்து கொண்டும் மனமோ கொலையான பெண்ணின் நிலையினை எண்ணி வருந்தி கொண்டுமென இருதலைகொள்ளி எறும்பாய் கவியரசி தவித்து கொண்டிருந்தாள்.

தமக்கையின் தவிப்பு புரியாது தோசைக்காக தவித்திருந்த கார்த்திக்கோ; கிச்சனை நோக்கி சப்தமிட அவனின் சப்தத்தை பொறுக்க இயலாத சாவித்திரியோ கோபமாய் ஹாலிற்கு விரைந்தார்.

அன்னையின் கோப முகத்தை பார்த்த கார்த்திக்கோ, கணநேரத்தில் சுதாரித்து கொண்டு தந்தையில் தட்டிலிருந்து தோசையை எடுத்து தன்னுடைய தட்டில் வைத்துகொண்டு அன்னை தன்னருகில் வந்ததும்,

"அப்பா தோசை எங்கனு கேட்டு என்னை சாப்பிட விடாம பண்ணீங்கல; இப்போ பாருங்க அம்மாவே தோசையோட வந்துட்டாங்க மா, சீக்கிரமா அப்பாவுக்கு தோசையை வை மா பாவம் பசியா இருக்காரு" என கூறி தன் தந்தையை வசமாய் மாட்டிவிட்டவனோ டிவியில் கவனமாகிட,

மகனின் ஆஸ்கார் நடிப்பினை பார்த்து வியந்து போன கணேசனோ தன் மனதில், 'அடப்பாவி நான் ஆசை ஆசையா தோசையில கை வைக்குறதுக்குள்ள பெரிய சைஸ் ஆப்பா பார்சல் பண்ணிட்டீயே டா; இது உனக்கே நியாயமா இருக்கா ஆத்தி, திரிசூலம் ஏந்தின அம்மன் மாதிரி கரண்டியை ஏந்திகிட்டு முறைக்குறாளே;
இன்னைக்கு எனக்கு சிறப்பான கவனிப்பு இருக்கோ சரி சமாளிப்போம்' என மனதில் நினைத்து கொண்டு மனைவியை சமாதானபடுத்த பார்க்க அதற்கு சிறிதும் வாய்ப்பளிக்காது தன் கணவனை வார்த்தையால் விலாச ஆரம்பித்தார்.

"ஏங்க, உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா சின்ன பையன் அவனுக்கு இருக்குற பக்குவம் கூட உங்களுக்கு இல்ல இப்படியா சின்னபுள்ளதனமா நடந்துப்பீங்க" என தன் அர்ச்சனையை ஆரம்பித்து கத்தி கொண்டே போக,

அதைபற்றியெல்லாம் கவலை கொள்ளாது தோசை போகும் திசையிலேயே கவனத்தை பதித்தவரோ தன் மனதினில்,

'அய்யோ, தோசையை தட்டுல வைக்காம அங்கயும் இங்கயும் ஆட்டிகிட்டு இருக்காளே நீ எவ்ளோ வேணாலும் திட்டிக்கோ; ஆனா தோசையை வைச்சிட்டு திட்டலாம்ல அச்சசோ லெப்ட் ரைட்டூனு மாத்தி மாத்தி போகுதே; இதை எப்படி தட்டை வைச்சு கேச் பிடிக்க போறேனோ' என அதி தீவிரமாய் தோசைக்கான முயற்சியில் ஈடுபட,

அப்பொழுது சாப்பிட்டு முடித்து கை கழுவ கிச்சன் சென்ற கார்த்திக்கோ கவியின் சோக நிலையினை பார்த்து குழம்பி போனான்.

அதே சமயம், இங்கு அனுவின் வீட்டிலோ இரவு உணவிற்காக அனைவரும் டைனிங் டேபிளில் ஆஜராகியிருக்க அனு சப்பாத்தியோடு குருமாவை தன் வாய்க்குள் தள்ளுவதையே கண்ணிமைக்காமல் குழப்பத்தோடு பார்த்து கொண்டிருந்தார் ஜெயா.

அப்பொழுது எதேர்ச்சையாக திரும்பியவரோ சப்பாத்தியையே வெறித்து கொண்டிருந்த கணவனை பார்த்து உச்சகட்ட அதிர்ச்சிக்கு சென்று விட்டார்.

தந்தை மகளின் எதிரெதிரான நிலையை வைத்தே ஏதோ சிக்கல் என்றுணர்ந்த ஜெயாவோ அனுவிடம்,

"ஏண்டி, காலையில ஸகூலுக்கு போகும்போது காய்ச்சல்னால போக மாட்டேனு அடம்பிடிச்ச; ஆனா சாயங்காலம் வீட்டுக்கு வந்ததுல இருந்து ஜாலியா சுத்துகிட்டு இருக்க இப்போ காய்ச்சல் எல்லாம் எங்க போச்சாம்" என கேள்வியெழுப்பியபடியே கணவனின் புறம் திரும்பியவரோ,

"ஏங்க, உங்களுக்கு என்ன ஆச்சுங்க எப்பயுமே சாப்பிடும்போது எதைபத்தியுமே யோசிக்க மாட்டீங்க; இன்னைக்கு சாப்பாட்டை வைச்சுகிட்டு தீவிரமா யோசிக்குறீங்க ஏதாவது பிரச்சனையா" என கேட்க,

அப்போது தான் தன் தந்தையின் முகவாட்டத்தை கண்ட அனுவோ, "ஆமா ப்பா, உங்களுக்கு என்னாச்சு ஏன் சோகமா இருக்கீங்க என் கேள்வியெழுப்ப,

அதே நேரத்திலே கார்த்திக் தன் அக்கா கவியின் தோளை பிடித்து உலுக்கி கேள்வியெழுப்பினான்.

"அக்கா உனக்கு என்னாச்சுக்கா ஏன் இப்படி சோகமாவும் குழப்பமாவும் இருக்க" என கேட்க

அப்பொழுதே தன் சுய உணர்விற்கு வந்த கவியோ தன் மனதினுள், 'அதைபத்தி நான் உன்கிட்ட எப்படிடா சொல்லுவேன்; என் கண்ணு முன்னாடி நடந்த கொலைக்கு சாட்சி சொல்ல முடியாம தவிக்குறேன் ஒரு பொண்ணா இருந்துட்டே இன்னொரு பொண்ணுக்கு நியாயம் வாங்கி தராம ஓடி ஒளியுறேன்; இதெல்லாம் உனக்கு தெரிஞ்சா என்னையபத்தி என்ன நினைப்பீயோ' என எண்ணி மனதிலேயே புழுங்கிபடி வெளியில் கார்த்திக்கிடம் இயல்பாய் பேசி சமாளித்தாள்.

இங்கு சத்தியமூர்த்தியோ தன் மனதில், 'வினோத் கேஸை எடுத்ததுல இருந்து மனசே பாரமா இருக்கே; இவன் செஞ்ச தப்புக்கு என்னால தண்டனை வாங்கி தர முடியுமா ஒருவேளை நாளைக்கு அனுகிட்டயும் யாராவது இவனை மாதிரி நடந்துகிட்டா என்ன பண்ணுவேன்; என்னோட பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது வினோத்துக்கு எதிரா ஸ்ராங்கான ஆதாரத்தை வைச்சு அவனுக்கு தண்டனை வாங்கி தரணுமே' என்று ஒரே நேரத்தில் தந்தையாகவும் வக்கீலாவும் இருதலைகொள்ளி எழும்பாய் தவித்து கொண்டிருந்தார்.

இதனை நினைத்து பார்த்தவரோ மனைவியையும் மகளையும் சமாதபடுத்தியபடி மகளின் சந்தோஷத்தை பற்றி வினவி பேச்சை மாற்ற,

அதற்கு அனுவோ, "அது ஒண்ணும் இல்லப்பா; காய்ச்சல் சரியானதால சந்தோஷமா இருக்கேன் வேற எதுவும் இல்ல" என கூறி கொண்டு சாப்பிட மகளிற்கு ஒரு வாய் ஊட்டி விட்டவரோ,

"உனக்கு எந்தவொரு ஆபத்துமே வராதபடி அப்பா எப்பயுமே துணையா இருப்பேன் டா" என மனதில் எண்ணி கொண்டார்.

💘💘💘💘💘

மனிதர்களின் கவலைகளுக்கு காலமே மருந்து என உணர்த்துவதை போல, இரவு பொழுது முடிந்து காலை பொழுது அழகாய் மலர; தலைவனின் வருகைக்காக ஏங்கிய நிலவுபெண்ணின் முகமும் அழகாய் மலர்ந்து அம்மலர்ச்சியோடே வெட்கபட்டு ஓடினாள்.

காலை பொழுதில் பள்ளியில் அனைவரும் சுறுசுறுப்பாய் பாடத்தினை கவனித்து கொண்டிருக்க அனுவும் அவளின் தோழியோடு சில அரட்டைகளுடன் ஆசிரியர் நடத்தும் பாடத்தினை கவனித்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது வகுப்பறைக்கு வெளியே கார்த்திக்கை சூழ்ந்து கொண்ட நட்பு பட்டாளம் அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தனர்.

"மச்சி மச்சி பீளிஸ் டா, புரிஞ்சிக்கோ டா இந்த தடவை இன்டர் ஸ்கூல் காம்படிசன்ல நம்மலும் கலந்துக்கலாம் டா; நம்ம கேங் தான் சூப்பரா பாட்டு பாடுவோமே அதுலயும் நீ பாடுனா அரங்கமே ஆரவாரத்துல அதிரும்; அப்படி இருக்கும்போது நம்ம கலந்துக்கலனா நல்லா இருக்காது டா பீளிஸ், மச்சி நம்ம இந்த தடவை கலந்துக்கலாமே" என ரவி கெஞ்சி கொண்டிருக்க உடனே தினேஷோ,

"ஆமா மச்சி, நம்ம கலந்துகிட்டா நிச்சயமா கப் ஜெயிக்கலாம் டா; நம்மலோட எதிரி ஸ்கூல் பசங்களும் கலந்துகிறாய்ங்க; அவங்க கலந்துகிட்டு நம்ம கலந்துக்கலனா அது அவமானமா போயிடும் டா; ஏதோ அவங்களுக்கு பயந்து ஓடி ஒளியுற மாதிரி பேசுவாங்க அதுனால பீளிஸ் மச்சி கலந்துக்கலாமே" என கெஞ்ச இவர்களை தொடர்ந்து சங்கரும்,

"ஆமா மச்சி, அவங்களுக்கு முகத்துல கரியை பூசுறதுக்கு மட்டும் இல்லாம பிரியாணியில இருக்கிற கறியை கடிக்கவும் நம்ம கலந்துகணும் டா" என வீரமாய் பேச ஓட்டு மொத்த நட்பு பட்டாளமும் அவனை முறைத்து தள்ளினர்.

அதனை பார்த்த சங்கரோ, "அது ஒண்ணுமில்லை மச்சி, அங்க போனா நிறைய ஸடால்ஸ் இருக்கும்ல அங்க சாப்பாடும் இருக்கும் அதைதான் சொன்னேன் டா" என அசடு வழிந்தபடியே சொல்ல அதனை கேட்டு தலையில் அடித்து கொண்ட கார்த்திக்கோ,

"இங்க பாருங்க டா, இந்த தடவை நமக்கு பப்ளிக் எக்ஸாம் இருக்கு அதுல நல்லா படிச்சு மார்க் எடுத்தா தான் நமக்கும் நம்ம பியூச்சருக்கும் நல்லது; காம்படிசனை காலேஜ் போய் கூட கலந்துகலாம் ஆனா இதுல கோட்டை விட்டோம்னா எல்லாமே போச்சு; அதுனால ஒழுங்கா படிக்கிற வேலையை பாருங்க அப்புறம் சங்கர் உனக்கு பிரியாணி தானே வேணும் நம்ம பாய் கடையில பிரியாணி வாங்கி தரேன் ஓகே வா" என கேட்க,

அப்பொழுதும் மறுத்த நண்பர்களோ, "மச்சி, நம்ம இந்த வருஷத்தோட ஸ்கூல் முடிஞ்சு போக போறோம் டா அதுக்காகவாவது ஒரு நல்ல நினைவோட போற மாதிரி இதுல கலந்துக்கலாம் டா பீளிஸ் டா" என கெஞ்ச,

உடனே விக்னேஷோ, "ஆமா மச்சி, இந்த பாயிண்ட் ரொம்பவே சரிதான் ஸ்கூலோட கடைசி வருஷம் நல்ல நினைவுகளோட இருந்தா நல்லா இருக்கும் டா" என கூற அவனை தோளோடு அணைத்து கொண்ட தினேஷோ,

"பார்த்தீயா, உன்னோட ஸடேடி பாட்னரே சொல்லிட்டான் இதுக்காவாவது கொஞ்சம் யோசி டா" என கெஞ்ச,

அதற்கு கார்த்திக்கோ, "சரிடா பார்ப்போம்" என கிளம்ப நட்பு கூட்டம் மொத்தமாக அதிர்ச்சியாகி,

"எது பார்ப்போமா, இவனோட டிக்னரில பார்ப்போம்ற வார்த்தைக்கு அர்த்தமே முடியாது தானே அப்போ காம்படிசனுக்கு நோ வா இல்லைஆஆஆஆஆஆ" என அனைவரும் ஒன்றுபோல் கத்திகொண்டு அவன் பின்னே செல்ல அதற்குள் கார்த்திக்கோ அனுவின் வகுப்பிற்குள் நுழைந்து விட்டான்.

"எஸ்கியூஸ் மீ மேம்" என அனுமதி கேட்டு உள்நுழைய,

"என்ன கார்த்திக், ஏதாவது முக்கியமான விஷயமா கையில என்ன பேப்பர்" என கேட்க அதற்கு கார்த்திக்கோ,

"மேம், நம்ம ஸ்கூலுக்கு இன்டர் ஸ்கூல் காம்படிசன் பத்தி சொல்லிருக்காங்க; அது சம்மதமான நோட்டீஸ் தான் இது இதை பாருங்க" என ஆசிரியரிடம் அந்த பேப்பரை நீட்டியவனோ மாணவர்கள் புறம் திரும்பி,

"ஓகே ஸ்டூடண்ட்ஸ், இன்டர் ஸ்கூல் காம்படிசன் நடக்க போகுது அது உடனே இல்ல டிசம்பர் இல்ல ஐனவரி டைம்ல தான் நடக்கும்; அதுக்கான நிறைய காம்படிசன் சொல்லிருக்காங்க டிராயின்ல இருந்து சிங்கிங் வரைக்கும் எல்லாமே இருக்கு; இதுல யாருக்கு எந்தெந்த போட்டியில கலந்துக்க ஆசைபடுறீங்களோ அவங்க என்கிட்ட பேர் குடுக்கலாம்,

"ஸ்கூல் சார்ப்பா என்னைய தான் இன்சார்ஜ்ஜா போட்டிருக்காங்க; இப்போ நேம் குடுத்ததும் பிராடிஸ் ஆரம்பிச்சிடுங்க, அக்டோபர் டைம்ல உங்களுக்கு ஒரு டரையல் மாதிரி நம்ம ஸ்கூல்க்குள்ளயே போட்டியை வைப்பாங்க; அதுல யாரு செலக்ட் ஆகுறீங்களோ அவங்க தான் காம்படிசன்ல கலந்துப்பீங்க சோ, இன்ட்ரஸ்ட் இருக்கிறவங்க நேம் குடுங்க" என சொல்லி முடிக்க மாணவர்கள் மத்தியில் சலசலப்பு ஆரம்பமானது

உடனே, நோட்டீஸை வாசித்து முடித்த ஆசிரியரோ கார்த்திக்கிடம், "கார்த்திக், இந்த டைம் நீ பாட்டு போட்டியில கலந்துக்க போறீயா" என கேள்வியெழுப்ப,

அதற்கு கார்த்திக்கோ, "இல்லை மேம், நான் கலந்துக்கல பப்ளிக் எக்ஸாம் முக்கியம்ல" என கூறி சிரிக்க,

அதற்கு ஆசிரியரும் சிரித்துகொண்டு, "நல்ல முடிவெடுத்திருக்க கார்த்திக்; இப்போ உனக்கு படிப்பு தான் முக்கியம் ஆனா ஸ்கூல் ஜெயிக்குறதும் அவசியம் தான் அதுனால நீயே யாராவது பெஸ்ட்டா பாடுறவங்களுக்கு பாட்டு சொல்லி குடு" என அறிவுரை கூற அதனை ஆமோதித்த கார்த்திக்கோ மாணவர்களின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தான்.

மாணவர்கள் அனைவரும் யாரேனும் எழுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தனரே ஒழிய தாமாக எழுந்து நின்று பெயர் தரவில்லை.

மாணவர்களின் நிலை இவ்வாறென்றால் கார்த்திக் நட்புக்களோ புதிதாய் கிடைத்த தகவலில் சற்று அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருத்தர் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது, தன்னிருக்கையிருந்து எழுந்த அனுவோ கார்த்திக்கை பார்த்து, "எனக்கு பாட்டு போட்டியில கலந்துகணும்னு ஆர்வமிருக்கு சீனியர்" என கூற இதனை கேட்ட கார்த்திக்கின் நண்பர்களுக்கோ இது இருமடங்கு அதிர்ச்சியாய் இருந்தது.

கார்த்திக் அளவிற்கு பாடுவாளா என நண்பர்கள் கலக்கம் கொள்ள அனுவின் ஆர்வத்தை கண்டு கார்த்திக் குறும்பு புன்னகையோடு அவளின் பெயரினை பாட்டு போட்டிக்கு எழுதி கொள்ள,

அப்பொழுது வெளியில் குதித்த கார்த்திக்கின் மனசாட்சியோ,
"ஏண்டா நீ அவளுக்கு சொல்லி தர நேரத்துக்கு நீயே பாடிட்டு போகலாமே டா; இப்படி கத்து தரதால உன்னோட படிப்புக்கு பிரச்சனை வராதா" என கேள்வியெழுப்பி கேலியாய் வினவ,

அதற்கு கார்த்திக், "இவ்ளோ நேரம் உள்ள தானே தூங்குனே இனியும் அதேபோல நிம்மதியா தூங்கு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்" என கூறி மனசாட்சியினை உள்ளே அனுப்பியவனோ மற்ற மாணவர்களிடமும் போட்டியில் கலந்துகொள்ள பெயரினை குறித்து கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினர்.

அப்பொழுது, கார்த்திக்கின் நண்பனான தினேஷோ, "மச்சி, நம்ம எதிரி கேங்கு பாட்டு போட்டியில கலந்துக்க போறாங்கனு நியூஸ் வருது டா; நம்ம கலந்துக்காததால அவங்க கலந்துகிட்டு பேரு வாங்க போறாங்க டா; இதை நம்ம சும்மாவே விடக்கூடாது அதுமட்டும் இல்லாம அனு எந்தளவுக்கு பாடுவாளோனு தெரியாதே டா அதைபத்தியும் யோசிக்கணுமே" என ஆதங்கமாய் கேட்க,

அதற்கு கார்த்திக்கோ, "மச்சி, அவனுங்க தாராளமா கலந்துகட்டும் டா திறமையிருக்க யாரு வேணாலும் ஜெயிக்க தகுதியிருக்கு அவங்ககிட்ட திறமையிருந்தா அதை வெளிபடுத்தி ஜெயிக்கட்டும்; நமக்கு இப்போதைக்கு படிப்பு தான் முக்கியம் அதுனால இப்போ அதை கவனிக்கலாம்,

"அப்புறம், அனுவுக்கு நான் பாட்டு சொல்லி தரணும் டா; அதுனால ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சதும் அவளுக்கு கிளாஸ் எடுத்துட்டு வீட்டுக்கு போறேன்; நீங்க சாயங்காலம் எனக்காக காத்திருக்காதீங்க அவளை நல்லா பாட வைக்குறது என்னோட பொறுப்பு ஓகே வா" என கேட்க இவனின் எதிரியை ஆதரித்த பேச்சை கேட்டு ஒருபுறம் கோபபட்டாலும் மறுபுறம் அனுவிற்கு பாட்டு சொல்லி தருவதை கேட்டு கேலியாய் பார்த்தவர்களோ,

"ஓ அப்படியா மச்சி, நீ நடத்து டா" என கிண்டல் செய்ய அவர்களின் கேலியினை உணர்ந்த கார்த்திக்கோ தன் நட்பினை அடிப்பதற்காக துரத்தி ஓட,

அப்பொழுது, யார் மீதோ மோதியதில் சாரி சொல்ல திரும்பிய பிறகே,

அது இவனின் எதிரி கேங் என தெரிந்து கொண்டவனோ மேலும், அக்கூட்டத்தின் தலைவனான டேவிட்டோ இவனை பார்த்து நக்கலாய் சிரித்ததில் இவனும் ஒரு அலட்சிய பார்வை வீசிவிட்டு நட்பினை துரத்தி சென்றான்.

காதலுக்கான பாலமும் மோதலுக்கான பாலமும் எழுப்பபட்டது இதில் எது உறுதியாய் நிற்கும் எது காலபோக்கில் தகர்த்தெறியபடும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

💘💘💘💘💘

முதலமைச்சர் வேங்கடசாமியின் வீட்டில் அவர் கோபமாய் அமர்ந்திருக்க அவருக்கு முன் நாகலிங்கமும் மருதநாயகமும் பவ்வியமாய் கைகளை கட்டிகொண்டு நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்த வேங்கடமோ, "அப்போ, என்னோட வீழ்ச்சிக்கு நீ காரணமில்லனு சொல்லுறீயா லிங்கம்" என கேள்வியெழுப்ப,

உடனே அவரின் காலடியில் அமர்ந்த நாகலிங்கமோ, "அதே தான்ய்யா, நானும் சொல்றேன் எங்க அப்பால இருந்து இப்போ நான் வரை எல்லாருமே நம்ம கட்சிக்காக தாய்யா உழைச்சிருக்கோம்; என்னோட அப்பா தப்பான வழியில போனாலும் நான், இதுவரை எந்தவொரு தப்பா வழிக்கும் போகாம நேர்மையா தான்யா இருந்தேன்; அப்படிபட்ட நேர்மைக்கு பரிசா உங்களையே எதிர்த்து நிக்க நம்ம கட்சி ஆளுங்களே செயல்படுவாங்கனு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கலயா" என கூறி நீலிகண்ணீர் வடிக்க அதனை பார்த்தும் மனமிறங்காத வேங்கடமோ,

"அப்போ, உனக்கு கட்சி உறுப்பினர்களோட அந்த முடிவுல விருப்பம் இல்லனு சொல்ல வரீயா; ஆனா அன்னைக்கு நீ என் முன்னாடி கெத்தா உட்கார்ந்ததை பார்த்தா அப்படி தெரியலையே" என சந்தேகமாய் வினவ,

அதனை கேட்டு பதறியதை போல நடித்த நாகலிங்கமோ, "ஐயா, என்னைய பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே அன்னைக்கு எல்லாரோட முடிவுலயும் அதிர்ச்சியாகி உங்களோட முகத்தை பார்க்க முடியாம கூனிகுறுகி உட்கார்ந்திருந்தேன்; ஆனா, என்னோட நிலை உங்களுக்கு இப்படி தெரிஞ்சிருக்குனா அது கண்டிப்பா உங்களோட பிரமை தான்யா; நம்மகிட்ட இருக்கிற எல்லாத்தையுமே இழக்குறப்போ நம்ம மூளையும் யோசிக்கிற திறனை ஒருநிமிசம் இழக்கும்; அப்போ, இப்படிதான்யா ஏதாவது தோணும் இதெல்லாம் பிரமை தான்யா நானெல்லாம் உங்களை எதிர்த்து நிப்பேனா" என கண்ணீர் சிந்தயபடியே காலை பிடித்து விட அதில் குழம்பிய வேங்கடமோ,

"சரி, நீ எனக்கெதிரா செயல்படலனு நம்புறேன்; ஆனா அன்னைக்கு எனக்கு துணையா இருந்த அமைச்சர் ஒரு வீடியோ ஆதாரத்தை காட்டுனாரே; உன்னோட அடியாள் காளி கொலை பண்ற மாதிரியும் தவறை பட்டியல் போட்ட மாதிரியும் அதுக்கு என்ன பதில் சொல்ல போற.." என கேள்வி கேட்க,

அதற்கு நாகலிங்கமோ, "அதை ஏன்யா கேக்குறீங்க, இத்தனை நாளா நான் யாருமில்லாத அப்பாவிக்கு ஆதரவு தரேன்னு தான் நினைச்சேன்ய்யா ஆனா இப்போதான் புரிஞ்சது நான் பாம்புக்கு பாலை வார்த்திருக்கேன்"

அட அமாங்கய்யா, அவன் என்கூட இருந்து எனக்கே துரோகம் பண்ணிட்டான்ய்யா எல்லா அயோக்கியதனமும் அவன் பண்ணிட்டு என்மேல பழியை போட்டு என்னோட இடத்துக்கே வர பார்த்தான்; இவ்ளோவும் தெரிஞ்சும் அவனை என்னால தண்டிக்க முடியலையா என்ன பண்ண நல்லவனாவே வாழ்ந்திட்டேன்; அதுனால சும்மா விட்டுட்டேன்யா அப்புறம், அந்த வீடியோ பத்தி என்னோட தம்பி ஏதோ சொல்லணும்னு சொன்னான்யா அதான் கூட்டிட்டு வந்தேன் தம்பி என்ன சொல்லணுமோ சொல்லுப்பா" என தம்பியின் புறம் திரும்பி கண்ஜாடை காட்ட,

உடனே மருதநாயகமோ சோகமே உருவாய் முகத்தை வைத்துகொண்டு, "ஐயா, உங்களுக்கு சாதகமா பேசுன அமைச்சரும் எங்களோட அடியாள் காளியும் கூட்டாளிங்கய்யா; இரண்டு பேரும் கூட்டா சேர்ந்து தான் இந்த வேலையை பண்ணாங்க வேணும்னா நீங்களே அவன்கிட்ட கேளுங்களேன்" என நடிக்க அவனின் நடிப்பை அறியாத முதலமைச்சரோ விசுவாச அமைச்சருக்கு போன் செய்ய,

உடனே நாகலிங்கம் தனது தம்பியை பார்க்க அவனோ வில்லதனமாய் சிரித்தபடியே முதலமைச்சரை பார்த்தான்.

அந்தபக்கம் போன் அட்டண்ட் செய்யபட அதில் பேசிய அமைச்சரிடம் வேங்கடம் விசாரிக்க அவனோ, "ஆமாங்கய்யா, நானும் காளியும் கூட்டா சேர்ந்து தான்ய்யா இப்படி ஒரு வேலை பண்ணோம்; என்னோட குடும்பத்தை வைச்சு மிரட்டி என்னைய இப்படி பண்ண வைச்சிட்டான்யா" என கதறிபடி பொய் கூற அவனின் கழுத்தின் கத்தியை வைத்த காளியோ வில்லங்கமாய் புன்னகைத்து கொண்டே கழுத்திலிருந்து கத்தியை எடுத்தான்.

தன் முன் நடந்தை அனைத்துமே நாடகம் என நம்பிய வேங்கடமோ நாகலிங்கத்திடம், "என்னைய மன்னிச்சிருப்பா, இவ்ளோ வருஷமா விசுவாசமா இருந்த உன்னைய போய் நான் சந்தேகபட்டுட்டேனே" என மன்னிப்பு கோர உடனே பதறிய நாகலிங்கமோ,

"ஐயா என்னங்கய்யா, நீங்க எவ்ளோ பெரிய மனிசன்; நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்கலாமா; விடுங்கய்யா, ஏதோ போதாத காலம் இப்படியெல்லாம் நடந்திருச்சு விட்டு தள்ளுங்க" என பேசிகொண்டு போக

அப்பொழுது மருதநாயகத்தின் போன் அடிக்க அதை அட்டண்ட் செய்து பேசியபிறகு நாகலிங்கத்தை பார்த்து சோகமாக,

"அண்ணே, நம்ம பையன் வினோத்தோட கேஸ் கோர்ட்டுக்கு வந்துச்சுனே இன்னைக்கு போகணும்னு சொல்லிருந்தாங்கல அதுக்கு தான் வக்கீல் போன் பண்றாரு" என கூற அதனை கேட்ட நாகலிங்கமோ தன் வாழ்வில் தவறே செய்யாதது போலவும் மகனால் இந்நிலைமைக்கு ஆளானது போலவும் முகபாவத்தினை வைத்துகொண்டு முகத்தை தொங்க போட்டார்.

அதனை பார்த்த வேங்கடமோ, "நாகலிங்கம், நீ எதைபத்தியும் கவலைபடாத டா; வினோத் உன்னோட வளர்ப்பு டா; உன் வளர்ப்பு தப்பா போகுமா நீ கவலையேபடாத; உனக்கு என்ன உதவினாலும் என்கிட்ட கேளு; நான் உதவி பண்றேன் நீ எப்பயும் எனக்கு பிடிச்ச அமைச்சர் நாகலிங்கம் தாண்டா" என கூறி தோளில் தட்டி குடுத்து உன்னுடைய பதவி பறிபோகவில்லை என கூறும்படியாய் ஆறுதலளிக்க அதை பார்த்து மகிழ்வாய் புன்னகைத்து தன் தம்பியை பார்த்து வெற்றி புன்னகையை சூடி கொண்டார்.

💘💘💘💘💘

சத்யமூர்த்தி தன் காரில் வினோத் கேஸில் அனிதாவுக்காக வாதாட சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது டிராபிக் சிக்னல் போடபட்டதால வண்டியை நிறுத்த அவரின் போன் ஒலித்தது.

அதனை அட்டண்ட் செய்து பேசியவரோ, "ஹலோ சேகர் சார், நீங்க எங்க இருக்கீங்க கோர்ட்டுக்கு வந்துட்டீங்களா வினோத் சேப்பா இருக்கானா" என கேள்வி கேட்க,

"சார், கோர்ட்டுக்கு வந்தாச்சானு நான்தான் உங்கிட்ட கேட்கணும் நான் இப்போ கோர்ட்டுல தான் இருக்கேன் வினோத்துக்கு பலத்த பாதுகாப்பு இருக்கு; அவனால அவ்ளோ சீக்கிரம் தப்பிக்க முடியாது இப்போ நான் போன் பண்ணதே நீங்க எப்போ கோர்ட்டுக்கு வருவீங்கனு கேட்குறதுக்கு தான்" என கூற,

அதனை கேட்டவரோ "இதோ பக்கத்துல வந்துட்டேன் சார், பத்து நிமிசத்துல வந்திடுவேன் இன்னும் கேஸ் ஆரம்பிக்க டைம் இருக்குல சார்; ஆமா அங்க என்னோட ஜீனியர் செல்வா இருக்கானானு பார்க்குறீங்களா அவன்கிட்ட ஒரு வேலை சொல்லிருந்தேன் செஞ்சானானு கேட்கணும்" என கேட்க,

அதற்கு சேகரோ, "சார், உங்களோட ஜீனியர் இப்போதான் என்கிட்ட வந்தான்; எல்லாமே ரெடியா இருக்காம் நீங்க வேணா அவன்கிட்ட பேசுங்க" என கூறி அவனிடம் போனை தர முதலில் தயங்கியவனோ பின்னர் சத்யமூர்த்தியிடம் விவரத்தினை கூற

அதனை கேட்டு சிறிது ஆசுவாசமானவரோ வினோத்தின் கேஸில் நிச்சயம் ஜெய்க்கலாம் என மனதின் நினைக்க அதன்மூலம் சிறிது நம்பிக்கை பிறந்தது.

அப்பொழுது டிராபிக் சிக்னலும் பச்சை விளக்கு காட்ட புன்னகைத்தபடியே வண்டியை கிளப்பினார்.

இங்கு கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்த அனிதாவின் பெற்றோர்களோ தன் அன்னையுடன் பேசிகொண்டிருந்த வினோத்தினை கண்டு ஆவேசமாகிட அதுவும் பாண்டி தன் மகளின் நிலைக்கு காரணமானவனை கொல்லும் ஆத்திரம் வர உடனே அவனிடம் ஓடி சென்று சரமாரியாக அடித்து தாக்கினார்.

பாண்டியிடமிருந்து தன் மகனை காக்க வினோத்தின் தாயார் பாரிஜாதமோ ஒருபுறம் செஞ்ச மறுபுறமோ அப்பொழுதே காரிலிருந்து இறங்கிய நாகலிங்கமும் மருதநாயகமும் வினோத்தை நோக்கி ஓடினர்.

திடீரென்று, கலவரமாகிய சூழலை சரிசெய்ய போலிஸார் அந்த இடத்தினை சூழ; வினோத் தப்பிக்காமல் காக்க சேகர் ஐ பி எஸ்ஸும் அவ்விடம் நோக்கி ஓட, இதற்கு நடுவில் அனிதாவின் தாயோ தன் செருப்பினை கலட்டி வினோத்தை அடிக்க சிறிது நேரத்தில் அனிதாவின் பெற்றோர்களிடமிருந்து வினோத்தை பாதுகாத்தனர்.

வினோத்தை அங்கிருந்து அழைத்து செல்ல அவனோ இவர்களை முறைத்து கொண்டே போக அவனை பரிவோடு பார்த்து தவித்தபடி வினோத்தின் தாய் பாரிஜாதம் செல்ல; அவனோடு சேர்த்து நாகலிங்கமும் மருதநாயகமும் இவர்களை முறைத்து கொண்டே சென்றனர்.



காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
முதல்வரையே நம்ப வச்சிட்டாங்க.
அப்போ கேஸ்ல ஜெயிப்பாங்களா.
சத்தியம் ஜெயிக்குமா பார்க்கலாம்.
 

Nancy mary

✍️
Writer
முதல்வரையே நம்ப வச்சிட்டாங்க.
அப்போ கேஸ்ல ஜெயிப்பாங்களா.
சத்தியம் ஜெயிக்குமா பார்க்கலாம்.
ஆமா சகி பொறுத்திருந்து பார்ப்போம்😔
 

பிரிய நிலா

Well-known member
Member
என்னடா இது இப்படி பம்முறானுங்க. முதல்வரும் நம்பராரு..

அனு நல்லா பாடி வின் பண்ணுவாளா பார்க்கலாம்..
 

Nancy mary

✍️
Writer
என்னடா இது இப்படி பம்முறானுங்க. முதல்வரும் நம்பராரு..

அனு நல்லா பாடி வின் பண்ணுவாளா பார்க்கலாம்..
ஆமா பசு தோல் போர்த்திய புலியை நம்பி ஏமாந்துட்டாரு😑😑😑
ஆமா அதை காத்திருந்து பாராக்கலாம் சகி😍😍😍
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
முதல்வர் இப்பிடி முட்டாபீசா இருந்தா எப்பிடி?நாகலிங்கம் விஷம்... கார்த்திக்கோட எதிரி கேங்க் யாருயா? எது எப்பிடியோ அனுவோட அப்பா கண்டிப்பா அனிதாக்கு நீதி வாங்கு குடுப்பாரு
 

Nancy mary

✍️
Writer
முதல்வர் இப்பிடி முட்டாபீசா இருந்தா எப்பிடி?நாகலிங்கம் விஷம்... கார்த்திக்கோட எதிரி கேங்க் யாருயா? எது எப்பிடியோ அனுவோட அப்பா கண்டிப்பா அனிதாக்கு நீதி வாங்கு குடுப்பாரு
ஆமா இப்படி ஒரு டம்மியா இருந்தா மக்களோட நிலமை அவ்ளோதான்😌
ஆமா சகி பார்க்கலாம்🤗🤗🤗
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom