• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 7

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் -7❤

உலகில் நிகழும் அநீதியினை கண்டு வெஞ்சினம் கொண்ட செங்கதிரோன்;
தன் செங்கதிரை அனல்தெறிக்க உஷ்ணமாய் பரவவிட்டு மக்களின் அறியாமை துயிலை களைந்து நிதர்சனத்தை உணர்த்தும்படியாக காலை பொழுது அழகாய் விடிந்தது.

செங்கதிரோனில் ஆக்ரோஷத்திற்கு சற்றும் குறைவில்லாமல் காவல்துறை அதிகாரிகள் தங்களின் காவல் நிலையத்தில் வைத்து வினோத்தை ஆத்திரம் தீரும் மட்டும் அடித்து நொறுக்கினர்.

இரவு முழுவதும் அடித்த அடியால் கொஞ்சம் கொஞ்சமாய் வலியில் துவண்டிருந்தவனோ இறுதியாக கிஷோர் சுளீரென்று முதுகில் அடித்த அடியில் மொத்தமாய் சுருண்டு மயங்கி விழுந்தான்.

அப்பொழுது கிஷோர் சலிப்பாக, "என்னடா இது, இராத்திரி முழுக்க நம்ம எல்லாரும் மாறி மாறி கேப்பே விடாம அடிச்சிருக்கோம்; ஆனாலும் வாயை திறந்து உண்மையை ஒத்துக்காம கல்லுளிமங்கன் மாதிரியில இருக்கான்; இவன்கிட்டயிருந்து இப்போ நம்ம எப்படி உண்மையை வாங்கனு தெரியலையே" என கோபத்துடனும் ஆதங்கத்துடனும் கேள்வியெழுப்பியவனோ அங்கிருக்கும் நாற்காலியை காலால் எட்டி உதைத்து தள்ளிவிட்ட வேகத்தில் லாக்கப்பை விட்டு வெளியேறி தன் நாற்சாலியில் தலையை பிடித்துகொண்டு அமர்ந்தான்.

அப்பொழுது அக்காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு ஜீப் அதிரடியாய் வந்து நிற்க;
அவ்வாறு நின்ற ஜீப்பின் வேகத்திலும் அதனை லாவகமாய் கையாண்டு நிறுத்திய திறனிலுமே அவ்வாகத்தினை இயக்கி வந்திருப்பது சேகர் ஐ பி எஸ் என்பதை அங்கிருந்த அனைவரும் தெளிவாய் தெரிந்து கொண்டனர்.

அந்த ஜீப்பிலிருந்து இறங்கியவரின் கம்பீரத்திலும் ஆஜானுபாகுவான உடல்வாகோடு ஆளுமையாய் நிற்கும் தோரணையிலுமே அவருக்கு நாற்பது வயதென கற்பூரம் ஏற்றி சத்தியமளித்து கூறினாலும் நம்ப முடியாதபடி இளமை மிடுக்கோடு இருந்தார்.

அதே மிடுக்கோடு சேகர் ஐ பி எஸ் காவல் நிலையத்திற்குள் நுழைய, அவரை வரவேற்கும் விதமாக அத்துணை போலிஸாரும் சல்யூட் அடிக்க சிறுபுன்னகையோடு கடந்து சென்றவரோ கிஷோரின் முன் சென்று நின்றார்.

தலையை தாங்கிகொண்டு அமர்ந்திருந்த கிஷோர் தன்முன் நிழலோடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க அங்கு அவனின் உயரதிகாரி நிற்பதை பார்த்த உடனே விழுந்தடித்து எழுந்து நின்று மரியாதை செலுத்தினான்.

கிஷோரின் செயலை கண்டு புன்னகை பூத்தவரோ அங்கிருந்த மேசை மீது அமர்ந்து நாற்சாலியில் ஒரு காலை வைத்தபடியே அவனிடம், "என்ன கிஷோர் அவன் எவ்ளோ அடிச்சும் அவன் செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்றானா"என கேள்வியெழுப்ப,

"ஆமா சார், அவன் உண்மையை ஒத்துகிட்டாலே பாதி பிரச்சனை முடிஞ்சது ஆனா அதுக்கு சந்தர்ப்பமே தராம தனக்கும் இந்த கேஸுக்கும் சம்மந்தமே இல்லனு சாதிக்குறான் சார்" என கோபமாய் கூற,

உடனே மேஜையிருந்து எழுந்தவரோ வினோத் துவண்டு மயங்கியிருந்த லாக்கப்பை நோக்கி விரைந்தார்.

அங்கே சென்று வினோத்தின் நிலையை பார்த்தவரோ தன் பக்கத்தில் வாளியில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து அவன்மேல் ஊற்ற போலிஸ் அடியில் ரத்தத்தால் குளித்த உடலில் குளிர்த்த நீர் பட எரிச்சல் தாங்க முடியாமல் அலறி அடித்து கொண்டு எழுந்தமர்ந்தான்.

உடனே அங்கு ஒரு நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தவரோ வினோத்தின் முடியை கொத்தாய் பற்றி முகத்தினை உயர்த்தியபடி,

"ஏண்டா, எவ்ளோ அடிச்சாலும் உண்மையை சொல்லகூடாதுனு உன்னோட சித்தப்பன் டிரைனிங் குடுத்தானா;
இந்த டெக்னிக் எல்லாம் இங்க வேலைக்கு ஆகாது ஒழுங்கா செஞ்ச தப்பை ஒத்துக்கோ அதான் உனக்கு நல்லது" என கூறி அவனின் தலையிலிருந்து கையெடுக்க,

அதுவரை வலியில் முகம் சுருக்கியவனோ கோபமாகி, "சார், இப்போ நீங்க என்னைய சித்திரவதைபடுத்துறது மட்டும் என்னோட அப்பாவுக்கு தெரிஞ்சது உங்களை வேலையை விட்டே தூக்கிடுவாரு பார்த்துக்கோங்க" என மிரட்ட அதில் கோபமாகியவரோ,

"உன்னோட அப்பனுக்கே இப்போ அமைச்சர் பதவி பறிபோக போகுது இதுல, அவன் என்னைய வேலையை விட்டு தூக்குவானா; கொலைகாரன் உனக்கே இவ்ளோ தைரியமிருக்கும்போது போலிஸ்காரன் எனக்கு எவ்ளோ இருக்கும்;
எனக்கு வேலை போனாலும் பரவால டா, உன்னைய கொண்ணுட்டு தான் வேலையை விட்டே போவேன்" என கூறி தன்னருகில் இருந்த காண்ஸ்டபிளிடம் லத்தியை வாங்கி சரமாரியாக அடிக்க, அவரின் இடியென விழுந்த அடியில் வினோத் கதறி துடித்தான்.

"அய்யோ அம்மாஆஆஆஆ...
சார் வலிக்குது சார் ஆஆஆஆ...
சார் சார் அடிக்காதீங்க ஆஆஆஆ அம்மா.." என வினோத் அலறினான்.

தன் ஆத்திரம் தீரும்வரை அடித்தவரோ லத்தியை தூக்கி போட்டு லாக்அப்பை விட்டு வெளியேற அங்கிருந்த மற்ற போலிஸார் அவனை சூழ்ந்து கொண்டு அடிப்பதை தொடர்ந்தனர்.

மேஜையில் கையை பதித்து கோபமாய் இருந்த சேகருக்கு போன் கால் வர அதில் கூறிபட்ட தகவலை கேட்டு அதிர்ந்து போனவரோ போனை தூக்கியெறிந்தார்.

"ச்சே, சென்னையில அத்தனை ரவுடிகளையும் கண்டுபிடிச்சு ஒருவழி பண்றேன் ஆனா இந்த சீரியல் கில்லர் மாஸ்டர் மைண்ட்டை ஒண்ணும் பண்ண முடிய மாட்டேங்குதே; அவனை சும்மாவே விடக்கூடாது கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்குறேன்" என கோபமாய் பேசியபடி கிஷோரை அழைத்தார்.

"சொல்லுங்க சார், வினோத்தை இன்னும் நாலடி போட்டு விசாரிக்கவா இல்லை வேற ஏதாவது பண்ணவா சார்" என கேட்க,

அதற்கு சேகரோ, "அவனை முடிஞ்சளவுக்கு விசாரிச்சு உண்மையை ஒத்துக்க வை நாளைக்கு அவனை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போறோம்; அதுனால இவன் தப்பிக்காதபடி பலமா பாதுகாப்பு ஏற்பாட்டை பண்ணிடு அப்புறம் இவன்மேல போட்ட எப் ஐ ஆரோட காப்பியை எங்க எடுத்து குடு" என கேட்க,

உடனே அதனை எடுத்து வந்து தந்த கிஷோரிடமிருந்து அதனை வாங்கி பார்த்தவரோ,

"சரி எனக்கு முக்கியமான வேலை இருக்கு அதை பார்க்க போறேன் நான் சொன்னதை மறந்துராத" என எச்சரித்து விட்டு வேகமாய் அவரின் ஜீப்பை எடுத்து கொண்டு விரைய அந்த காவல் நிலையமே புயலடித்து ஓய்ந்தாற் போல காட்சியளித்தது.

💘💘💘💘💘

இங்கு நாகலிங்கத்தின் வீட்டிலோ அவரின் மனைவி மகனின் நிலையை எண்ணி கலங்கி கதறி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க; தன் மனைவியின் அழுகையை பார்த்து தன் கோபத்தை அடக்கி கொண்டிருந்தவருக்கு ஒருகட்டத்திற்கு மேல் அது முடியாமல் போக கோபத்தில் கொதித்தெழு துவங்கினார்.

"ஏய், இப்போ என்ன நடந்து போச்சுனு ஊர்ல இருந்து வந்ததும் வராததுமா அழுது ஒப்பாரி வைச்சிட்டு இருக்க; வினோத் உனக்கு மட்டும் இல்லை எனக்கும் பையன் தான் அவனை இதுலயிருந்து எப்படி காப்பாத்தணும்னு எனக்கு நல்லாவே தெரியும்; நீ இப்படி ஓப்பாரி வைக்குறதை விட்டுட்டு ஒரு ஓரமா போய் உட்கார்ந்து வேடிக்கை பாரு" என ஆங்காரமாய் கத்த,

உடனே விரிந்திருந்த தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையிட்ட பாரிஜாதமோ தன் வருத்தத்தை எல்லாம் கணவனின் மீது கோபமாக காட்ட துவங்கினார்.

"இத்தனை வருஷமா நீங்க பண்ற அநியாயத்தை எல்லாம் தட்டி கேட்காம ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது போகாதா, இனிமேலும் வேடிக்கை பார்த்து என் பையனோட வாழ்க்கையை அழிக்க சொல்லுறீங்களா; உங்களோட கெட்ட குணத்தை பார்த்து தான் என் பையனும் தவறான வழிக்கு போயிட்டான் அவனை இதுலயிருந்து எப்படியாவது காப்பாத்தணுமே நான் தவிக்கிற தவிப்பு உங்களுக்கு புலம்பலா தெரியுதுல" என கேட்ட பாரிஜாதம் தன் கணவனை உஷ்ண பார்வையால் எரித்து மேலும் தன் பேச்சினை தொடர்ந்தார்.

"நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது; எனக்கு என்னோட பையன் வேணும் அவனை இதுலயிருந்து பத்திரமா மீட்டு தர வேண்டியது உங்களோட பொறுப்பு தான்; நான் என்னோட பையனை ஒரு தப்பானவனா என்னைக்குமே வளர்க்கல; நீங்க பண்ற அடாவடிதனத்தை பார்த்து தான் இப்படி மாறிட்டான் உங்களால கெட்டு போன என் பையனோட வாழ்க்கையை நீங்கதான் சரிபண்ணி தரணும்" என கோபமாய் வாதிட்டு கொண்டிருக்க,

அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த மருதநாயகமோ, "நீங்க கவலையேபடாதீங்க அண்ணி; வினோத்தை இதுலயிருந்து காப்பாத்த வேண்டியது எங்க பொறுப்பு நீங்க தேவையில்லாம வருத்தபட்டு உடம்பை கெடுத்துகாதீங்க; ஊர்ல இருந்து இப்போதானே வந்திருக்கீங்க அதுனால கொஞ்சம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்" என வாக்களிக்க,

அதனை கேட்டு நிம்மதியான பாரிஜாதமோ, "உங்களை நம்பி தான் அமைதியா போறேன் தம்பி; எப்படியாவது என் பையனை காப்பாத்திடுங்க" என கேட்டவர் தன் கணவனையும் ஒரு பார்வை பார்த்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

தன் அண்ணி சென்றுவிட்டாரா என பார்த்த மருதநாயகமோ அண்ணனிடம் வந்து, "அண்ணே அண்ணி அவங்க அப்பா வீட்டுக்குல போனாங்க எப்போ திரும்பி வந்தாங்க" என கேட்க

"அதை ஏண்டா கேட்குற நடந்த விஷயத்தை எல்லாம் நியூஸ்ல பார்த்துட்டு வந்து தையா தக்கானு குதிச்சிட்டு இருக்கா; நல்லவேளை, நீ வந்த இல்லனா இவ பேசுன பேச்சுக்கு செவுலு கிழிஞ்சிருக்கும்; சரி அதையெல்லாம் விடு, நீ போன வேலை என்னாச்சு என்னோட அமைச்சர் பதவியையாவது காப்பாத்த ஏதாவது வழி கிடைச்சிச்சா" என கேள்வியெழுப்ப,

உடனே மருதநாயகமோ, "அதெல்லாம் வழி இருக்குதுனே ஏதோ ஒரு வீடியோவை வைச்சு தானே உன்மேல தப்பு இருக்குனு சொன்னாங்க அந்த வீடியோவையே போலினு நீருபிச்சிடலாம்; நீ கவலையைபடாத அதான் என்கிட்ட வேலையை குடுத்திட்ட உன்னோட இழந்த அமைச்சர் பதவியை மீட்டு தரவேண்டியது என்னோட பொறுப்பு, அதுமட்டும் இல்லாம நம்ம தம்பிக்காக வாதாடவும் வக்கீல் கிடைச்சாச்சு எனக்கு தெரிஞ்ச பையனோட மாமா வக்கீல் தானாம் பேரு வேதாச்சலம் நம்ம வினோத் கேஸை வாதாடி ஜெயிச்சு தரேனு சொல்லுறாரு; நானும் விசாரிச்சு பார்த்தேன் நல்ல திறமையான வக்கீல் தான் சொல்லுறாங்க அதுனால நீ எதைபத்தியும் கவலைபடாதண்ணே வினோத்தையும் மீட்டிடலாம் உன்னோட பதவியையும் காப்பாத்திடலாம்" என கூற தன் தம்பியின் பேச்சினை கேட்டு பூரித்து போனவரோ,

"இப்போதாண்டா எனக்கு நிம்மதியா இருக்கு எங்க எல்லாமே கைமீறி போச்சோனு பயந்தே போயிட்டேன்;
இனி எல்லாத்தையும் நீயே பார்த்து சரிபண்ணிடுவற நம்பிக்கை வந்திருச்சு; இனி நான் எதுக்குமே கவலைபட மாட்டேன் டா முதல்ல என்னோட பையனை கேஸுல இருந்து மீட்குறேன், அப்புறமா முதலமைச்சராகி எல்லாரையும் அடக்கி ஆளுறேன்" என கர்வமாய் பேசி சிரிக்க அண்ணனின் சிரிப்பில் தானும் கலந்து கொண்டு வில்லத்தனமாய் சிரித்தார் மருதநாயகம்.

💘💘💘💘💘

அதேசமயம் இங்கு பள்ளியில் உலகை ஆள துயிலில் ஆழ்ந்த மாணவர்களின் லட்சிய கனவை கலைக்கும்படியாக அடித்த மணியோசையிலே துயில் களைந்தவர்கள் ஓய்வு நேரத்தினை பயனுள்ளதாய் கழிக்க வகுப்பறையை விட்டு கேண்டினுக்கு சிதறி ஓடினர்.

அவர்களின் ஓட்டத்தினை கண்டு தலையில் அடித்துகொண்ட ஆசிரியர்களோ;
அடுத்த வகுப்பிற்கு பாடமெடுப்பதற்கு முன் கத்தியே தேய்ந்து போன குரலை சரி செய்ய கேண்டின் பக்கம் நடையை கட்டினர்.

இவ்வாறாக பள்ளியில் மாணவர்கள் குதூகலமாய் இருப்பதை கண்டு நூலகத்தில் இருந்த சில நண்பர்கள் வயிற்றெச்சல் அடைந்தனர்.

அதில் ஒருவனோ பசியில் பேனா மூடியினை கடித்து கொண்டிருக்க இன்னொருவனோ பக்கத்து இருக்கையில் இருந்த மாணவி எழுந்து செல்வதை ஏக்க பார்வையோடு பார்த்து கொண்டிருக்க
இதைபற்றியெல்லாம் சிறிதும் கவலைபடாமல் ஒருவன் புத்தகத்தால் முகத்தினை மூடி தூக்கத்தை தொடர்ந்தும் மற்ற இருவரோ புத்தகத்திலே ஆழ்ந்து தூக்கத்தை தொலைத்தும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மனநிலையில் இருந்தனர்.

அப்பொழுது புத்தகத்திலே முழ்கியிருந்த கார்த்திக் எதார்த்தமாக நிமிர்ந்து பார்க்க அவனின் பார்வை வட்டத்திற்குள் விழுந்த அனுவோ சுற்றும் முற்றும் பார்த்தபடியே கேண்டினை நோக்கி செல்ல அவளை பார்த்த உற்சாகத்தில் இவனும் தன் நண்பர்களிடம்,

"மச்சி, என்னோட பேக் புக் எல்லாத்தையும் நீங்க கொண்டு போங்க டா; நான் இப்போ வந்திடுறேன்" என கூறிகொண்டு அங்கிருந்து ஓடினான்.

அவன் ஓடுவதை பார்த்த ரவியும் சங்கரும் உற்சாகத்தில் கத்திகொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆட்டம் போட இவர்களின் ஆட்டத்திலே துயில் களைந்த தினேஷோ,

"டேய் லூசுங்களா, மனிசனை நிம்மதியா தூங்ககூட விட மாட்டீங்களா பீரி பீரியட்லயும் படிக்க சொல்லி உசுர வாங்குறது பத்தாதா; இப்படி தூங்கவும் விடாம கழுத்தறுக்குறீங்களே டா ஏண்டா, இப்படி பண்றீங்க; உங்களுக்கு என்னடா ஆச்சு" என கத்த,

இவர்களின் சத்தத்தால் நூலகத்தில் அமைதி கலைந்த கோபத்தில் நூலகத்தை கவனிப்பவரோ திட்ட துவங்கினார்.

"தம்பிங்களா அமைதியா படிக்கிறதா இருந்தா இங்க இருங்க, இல்லையா பேசாம வெளில போயிருங்க; தேவையில்லாம கத்தி மத்தவங்களை தொந்தரவு பண்ணாதீங்க" என கூற உடனே ரவியோ,

"இன்னைக்கு நான் சைட்டடிக்குற மூட்ல இருக்கேன் அதுனால இவரை சும்மா விடுறேன்" என கூற சங்கரோ தான் சாப்பிட்ட பேனாவோடு ரவியையும் இழுத்து கொண்டு செல்ல தினேஷோ இத்தனை கலவரத்திலும் புத்தகத்திற்கு முகத்தை புதைத்திருந்த விக்னேஷை இழுத்து கொண்டு வெளியேறினான்.

நூலகத்தை விட்டு வெளியேறிய கார்த்திக் அனுவை பின்தொடர்ந்து கேண்டினிற்குள் நுழைய அனுவோ தன் பின்னால் வரும் ஜீவனை கவனிக்காமல் கண்களை நாலாபுறமும் அலைபாய்ந்தபடியே யாரும் தன்னை கவனிக்கிறார்களா என பார்த்தபடியே கேண்டினில் ஆடர் கொடுக்க சென்றாள்.

"அண்ணா ஒரு லெமன் ஜீஸ்" என ஆடர் குடுக்க பின்னாலிருந்து ஒரு குரல் "எனக்கும் ஒரு லெமன் ஜீஸ் குடுங்க" என கேட்க,

அக்குரலினிலே அது தன் சீனியர் என்றுணர்ந்த அனுவோ, யாரின் கண்ணில் படகூடாதென பதுங்கி பதுங்கி வந்தாளோ அவனின் கண்ணிலேயே மாட்டிகொண்டதால் எழுந்த பயத்தில் எச்சிலை விழுங்கி கொண்டு திரும்பி பார்த்தாள்.

தன்னை கண்ட அனுவிற்கு சிநேக புன்னகையை பரிசளித்தவனோ; அப்பரிசினை நிராகரித்த அவளின் முகபாவனையினை நொடியில் கண்டுகொண்டு அவளை குழப்பமாக நோக்கினான்.

பிறகு தன்னை சரிசெய்துகொண்டு அனுவிடம், "உனக்கு என்னாச்சு அனு; எதுக்கு என்னை பார்த்து பயப்படுற உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா" என கூறி அவளின் நெற்றியில் கைவைக்க செல்ல அவனின் செயலில் மிரண்டவளோ தன்னிச்சையாக இரண்டடி பின்னால் சென்றாள்.

அவளின் செயலில் மேலும் குழம்பியவனை கண்டுகொள்ளாமல் லெமன் ஜீஸை எடுத்துகொண்டு அங்கிருந்து செல்ல இவனும் அவள் பின்னே சென்று கையை பிடித்து நிறுத்தினான்.

"அனு உனக்கு என்னாச்சு; என்னோட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம நீ பாட்டுக்கு மிரண்டு ஓடுற நீ இப்படி ஓடுற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்" என குழப்பமாய் கேட்க,

அதற்கு அனுவோ, "நீங்க என்ன செஞ்சீங்கனு தான் எனக்கு நல்லாவே தெரியுமே, என்னைய பார்த்த கொஞ்சநாள்லயே காதலிச்சிட்டு சுத்துறீங்க இதுல எனக்காக ஓடி ஓடி உதவி பண்ணி நல்லவன் மாதிரியே நடிச்சிருக்கீங்க; நல்லவேளை, எனக்கு உங்களோட எண்ணம் என்னனு தெரிஞ்சது இல்லனா இன்னும் கொஞ்சநாள் முட்டாளா தான் சுத்திருப்பேன்; நீங்க செஞ்ச விஷயத்தை என்னால ஏத்துக்கவே முடியல அதுலயே காய்ச்சல் வந்து இப்போதான் கொஞ்சம் சரியாகிருக்கேன் இனியும் என்னைய தொல்லை பண்ணாம தயவுசெஞ்சு இங்கிருந்து போயிருங்க" என கோபத்தோடும் ஆதங்கத்தோடும் சொல்லிவிட்டு நகர,

அவளின் பேச்சில் முற்றிலுமாக அதிர்ந்தவனோ அவளை இழுத்துகொண்டு ஒரு டேபிளில் சென்ற அமர்ந்தான்.

உடனே அனு கோபத்தில் பொங்கியபடி, "நீங்க உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க; நான்தான் பேச பிடிக்கலனு சொல்றேல அப்புறமும் ஏன் இப்படி பண்ணுறீங்க" என கோபத்தில் கத்த,

உடனே கார்த்திக்கோ, "அதையெல்லாம் விடு, இப்போ நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு; நான் உன்னை காதலிக்குறேனு உனக்கு யாரு சொன்னா எப்படி உனக்கு தெரிஞ்சது" என அழுத்தமாக பார்வையை பதித்து கேட்க,

அதில் சில நொடி பயந்தவளோ பின் தைரியத்தை வரவழைத்து கொண்டு,

"உங்களோட பிரண்ட்ஸ் தான் நீங்க என்னைய காதலிக்குறீங்கனு பேசிட்டாங்க; உங்களோட பிரண்ட்ஸே பேசிக்கும்போது அது உண்மையில்லாம இருக்குமா இதுக்கு மேல வேறென்ன வேணும்" என கோபமாய் பொறிய அதனை கேட்டு கேலியாய் சிரித்தவனோ,

"அவனுங்க பேசிட்டா, உடனே நான் உன்னைய காதலிக்குறதா அர்த்தமா நான் உன்னைய காதலிக்கவே இல்லை" என கூறி பேரதிர்ச்சியை அவள் தலையில் இறக்க,

அதனை கேட்ட அனுவோ தன் கோழிகுண்டு கண்களால் பேய் முழி முழித்தாள்

அவளின் பாவனையில் சிரித்த கார்த்திக்கோ, "இங்கபாரு அனு, எனக்கு உன்மேல காதல் இருக்கானு கேட்டா அது எனக்கே தெரியாது; எனக்கு உன்னைய பிடிக்கும் உன்னோட குழந்தைதனமான செயல்களும் பேச்சுகளும் ரொம்பவே பிடிக்கும் இவ்ளோ ஏன் முதல் நாள் உன்னோட குழந்தைதனமான செய்கையை தான் ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன் அதைதான் என்னோட பிரண்ட்ஸ் தப்பா புரிஞ்சுகிட்டாங்க போல" என கூற அதனை கேட்டு மேலும் அதிர்ந்தவளோ அவனிடம்,

"சீனியர் நீங்க உண்மையை தான் சொல்லுறீங்களா, அப்போ நீங்க என்னைய காதலிக்கலயா" என கேட்க அதற்கு கார்த்திக்கோ,

"காதல் இருக்கானு எனக்கு தெரியல அனு; ஆனா இதுவரை என்னோட வாழ்க்கையில உன்னைய மாதிரி குழந்தைதனமான பொண்ணை நான் பார்த்ததில்லை; என்னோட அக்கா கூட பக்குவமா தான் நடந்துப்பா, என்னோட வாழ்க்கையில நான் சந்திச்ச பல பெண்கள் பக்குவமானவங்க இப்படியானவங்களை பார்த்து பார்த்தே பழகிய கண்களுக்கு அதுக்கு முற்றிலும் மாறுபட்டவளா நீ பட்டதும் என்னை அறியாம ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்; எனக்கு உன்னைய ரொம்பவே பிடிக்கும் எல்லாரையும் விட நீ எனக்கு ஸபெஷல் தான்; அது ஏன் நீ மட்டும் ஸபெஷல்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை ஆனா கண்டிப்பா சொல்றேன் இது காதல் இல்ல" என கூறி முடிக்க ஏனோ அவனின் பேச்சின் தன் தவறான புரிதலின் மேல் தான் தவறு என உணர்ந்து கார்த்திக்கிடம்,

"சாரி சீனியர், தப்பெல்லாம் என்மேல தான் உங்க பிரண்ட்ஸ் பேசுறதை கேட்டு நான்தான் குழம்பிட்டேன்" என குழந்தைதனமாக உதட்டை பிதுக்கியபடியே கூற அதனை ரசித்தவனோ அவளிடம்,

"ஆமா உனக்கு காய்ச்சல் வந்துச்சு சொன்னீயே; அது இதுக்காகவா வந்துச்சு இதெல்லாம் ஒரு பிரச்சனைனு இதுக்கு போய் காய்ச்சல் வர அளவுக்கு யோசிக்குறீயே; சரி இப்போ எப்படி இருக்கு சரியாச்சா" என அக்கறையாய் கேட்க,

அதில் சிறிது புன்னகைத்தவளோ, "இப்போ சரியாச்சு சீனியர் நோ பிராப்ளம்; நேத்து இதுனால மட்டுமில்ல நீயூஸ்ல ஒரு விஷயம் பார்த்தேன் ஒருத்தன் ஒன்சைடு லவ்வுக்காக ஒரு பொண்ணை கற்பழிச்சு கொண்ணுட்டான்; அதைபார்த்ததும் எங்க நீங்களும் என்னைய இப்படி பண்ணிடுவீங்களோனு பயந்துட்டேன்" என கூற அதனை கேட்டு சத்தமாக நகைத்தவனோ,

"என்னைய பார்த்தா அப்படி செய்யுறவன் மாதிரியா தோணுது நானெல்லாம் அதுக்கு செட்டாக மாட்டேன் மா" என கூற அதனை கேட்ட அனுவும் மனமாற புன்னகைத்தாள்.

அவளின் புன்னகையை பார்த்தவனோ அவளிடம் "அனு ஒருவேளை நான் உன்னைய பியூச்சர்ல காதலிச்சேனா நீ என்ன பண்ணுவ" என கேள்வி கேட்க உடனே முகத்தை சுருக்கியவள்,

"அப்படி ஒரு எண்ணம் வந்தா, அதை குப்பையில தூக்கி போட்டுருங்க சீனியர்; எனக்கு இந்த காதல்னாலே சுத்தமா பிடிக்காது காதல்ற பேர்ல எவ்ளோ அயோக்கியதனம் பண்றாங்க அதுலயிருந்து மீளவும் சமூகம் விடாது குற்றவாளியை மறக்கிற சமூகம் பாதிக்கபட்டவங்களை மறக்காது; அவங்களை பார்க்குறப்போ எல்லாம் எதையாவது பேசி மனசை காயபடுத்தும் வாழ்க்கை முழுக்க அவங்க செத்து செத்து பிழைக்கணும்; இதெல்லாம் இந்த பாழா போன காதல்னால தானே வருது அப்படிபட்ட காதலே எனக்கு வேணாம் சீனியர்" என கோபமாய் கூறினாள்.

அதற்கு கார்த்திக்கோ, "இங்க பாரு அனு காதல்னாலே தப்புனு சொல்ற உன்னோட எண்ணம் ரொம்பவே தவறானது;
அன்பை பல பரிமாணங்கள்ல வெளிபடுத்தலாம் அதுல ஒரு பரிமாணம் தான் காதல் ஆனா இங்க அதுக்கான அர்த்தமும் புரிதலும் கம்மியா இருக்கிறது தான் நீ சொல்ற பல பிரச்சனைகளுக்கு காரணம்; நீ எப்பயாவது உன்னோட அம்மா அப்பாவுக்கு நடுவுல இருக்கிற அன்பை பார்த்திருக்கீயா அதுவும் ஒரு வகை காதல் தான்; அது தப்பான காதலா இல்லாதப்போ காதல்னாலே தவறுனு நீ எப்படி சொல்லலாம், உன்னைய சுத்தி பல நல்ல காதலும் இருக்கு அதை கொஞ்சம் தேடி பாரு அப்புறமா இந்தமாதிரி நீ பயப்படவே மாட்ட.." என கூறி முடிக்க

அதனை கேட்ட அனுவோ தன் தவறினை உணர்ந்தாலும் அவளின் இத்தனை வருட எண்ணத்தை நொடியில் விட்டுவிட மனம் வரவில்லை அவளின் நிலையை புரிந்துகொண்ட கார்த்திக்கோ,

"இட்ஸ் ஓகே அனு, இப்படி டக்குனு உன்னோட எண்ணத்தை மாத்தணும்னு சொன்னா உன்னால அது முடியாது தான்; அதுனால நீ கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கோ, ஆனா ஒண்ணு ஒருவேளை பியூச்சர்ல எனக்கு உன்மேல காதல் வந்துச்சுனா உனக்காக நான் எத்தனை வருஷம் வேணாலும் பொறுமையா காத்திருப்பேன்; அப்போ என்னோட காதலை சொல்லும்போது இன்னைக்கு மிரண்டு ஓடுன மாதிரி ஓடகூடாது ஏன்னா என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வராது ஓகே வா" என தலை சரித்து கேட்க அதில் மென்னகை புரிந்தவளோ,

"நீங்க அப்படியெல்லாம் பிரப்போஸ் பண்ண மாட்டீங்க சீனியர்; ஒருவேளை அப்படி ஏதாவது நடந்தாலும் தைரியமா பேஸ் பண்றேன் பயப்பட மாட்டேன்" என கூறினாள்.

அதை கேட்ட கார்த்திக்கோ, "ஓகே, அப்போ இனி நாம எப்பயும் போல சீனியர் ஜீனியர் தான் உனக்கு என்ன உதவினாலும் பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லு நான் உனக்கு துணையா இருப்பேன்" என நம்பிக்கையளிக்க அனுவிற்கு கார்த்திக்கின் மேலிருந்த நம்பிக்கையும் மதிப்பும் பலமடங்கு உயர்ந்தது.

உடனே அவளோ, "கண்டிப்பா சீனியர், ஓகே இப்போ எனக்கு கிளாஸுக்கு டைமாச்சு நான் போயிட்டு வரேன்" என கூறி அவனிடமிருந்து விடைபெற்று ஓடினாள்.

மான் போல துள்ளிகுதித்து ஓடும் அனுவினை கண்டு, "உன்மேல எனக்கு இருக்கிற காதலை இப்போ வேணா என்னால சொல்ல முடியாம போயிருக்கலாம்; ஆனா ஒருநாள் உன்னோட தவறான எண்ணத்தையும் மாத்தி, உன் காதலுக்கு நான் சொந்தமாவேன்; அப்போ காதல்ல நல்ல காதலும் இருக்குனு நீ புரிஞ்சிப்ப அனு" என கூறியவனின் சிந்தனை நேற்றைய நிகழ்விற்கு சென்றது.

நேற்று செய்தியில் வினோத்தின் கொலையை பார்த்தபோது கார்த்திக்கின் அம்மா சாவித்திரியோ "இப்படியெல்லாம் பசங்க இருக்கிறதால தான் காதல்னாலே பயப்பட வேண்டியதா இருக்கு" என கூற அதனை கேட்டவனோ அதைபற்றி ஆழமாக சிந்திக்க துவங்கினான்.

அந்த சிந்தனை தூங்கும் வரையிலும் தொடர,

அப்போது இவனின் காதலையும் இவன் மனம் எடுத்துரைத்தது.

அனுவினை பார்த்த முதல் நாள் அவளை அண்ணா என கூற விடாமல் தடுத்ததும் அவள் மேல தனி அக்கறை எடுத்து கொள்வதும் இவனுக்கு காதல் என்று எடுத்துரைக்க அதனை மறுத்து உறங்கியவனோ இப்பொழுது அனுவின் ஒதுக்கத்தினில் அவனின் மனதில் இருந்த காதலை மொத்தமாய் உணர்ந்த கொண்டவன்
அவளின் எண்ணத்தை மாற்றவும் தன் காதலினை நிலைநாட்டவும் முதல் முயற்சியை எடுத்திருக்கிறான்.

இதையெல்லாம் சிந்தித்தவனோ தன் மனதினிலே, 'உன்னோட மனசை மாத்தி என்னோட உண்மை காதலை உணர்த்த இதுமாதிரி பல முயற்சிகள் எடுக்க நான் தயாரா இருக்கேன் அனு' என கூறி கொண்டு சிரித்தபடியே அங்கிருந்து சென்றான்.

இவனின் காதல் முயற்சிக்கான பலன் கிட்டுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.



காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Nancy mary

✍️
Writer
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
ஆமா சகி சரியா சொன்னீங்க இந்த முயற்சிக்கான பலன் கிடைக்குமானு பொறுத்திருந்து பார்ப்போம்😍😍😂😂😂
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
அனுகிட்ட இதுதான் எனக்கு பிடிச்ச ஒண்ணு. மனசுல நினைச்சுட்டு குழம்பாம கார்த்திக்கிட்ட சொல்றா..

கார்த்திக்கிட்ட பிடிச்சது. இந்த சின்ன வயசில எவ்ளோ பக்குவமா அனு சொன்னதை எல்லாம் கேட்டுட்டு நீ எப்படி அப்படி நினைக்கலாம்னு கோபம் கொள்ளாமல் எடுத்து சொல்றான்..

வினோத் கெட்டுப்போக அவனது குடும்பம் மற்றும் பின்னணி தான் காரணம்...
 

Nancy mary

✍️
Writer
அனுகிட்ட இதுதான் எனக்கு பிடிச்ச ஒண்ணு. மனசுல நினைச்சுட்டு குழம்பாம கார்த்திக்கிட்ட சொல்றா..

கார்த்திக்கிட்ட பிடிச்சது. இந்த சின்ன வயசில எவ்ளோ பக்குவமா அனு சொன்னதை எல்லாம் கேட்டுட்டு நீ எப்படி அப்படி நினைக்கலாம்னு கோபம் கொள்ளாமல் எடுத்து சொல்றான்..

வினோத் கெட்டுப்போக அவனது குடும்பம் மற்றும் பின்னணி தான் காரணம்...
சூப்பரான புரிஞ்சுகிட்டீங்க சகி செம நமக்கு சந்தேகமா இருக்கிறதை கேட்டு தெரிஞ்சிறது எப்பயும் நல்லது தான்ல👏👏👏👏👏
ஆமா ஓவரா பாசத்தை பொழிஞ்சு வினோத்தை கெடுத்து வைச்சிருக்காங்க😑
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
வினோத்த காப்பாத்தி இந்தம்மா என்ன செய்யப்போகுதாம்.. போன உசுரு திரும்பி வராதுல்ல... அவனுக்குத் தண்டனை கிடைக்கணும்... நாகலிங்கத்துக்கு அமைச்சர் பதவியே டூ மச்... இதுல அந்தாளுகு சி.எம் போஸ்டிங் வேற வேணுமா? எப்பா கார்த்திக் நல்ல முயற்சி தான்... அதுக்கு முன்னாடி படிச்சு முன்னேறுடாப்பா
 

Nancy mary

✍️
Writer
வினோத்த காப்பாத்தி இந்தம்மா என்ன செய்யப்போகுதாம்.. போன உசுரு திரும்பி வராதுல்ல... அவனுக்குத் தண்டனை கிடைக்கணும்... நாகலிங்கத்துக்கு அமைச்சர் பதவியே டூ மச்... இதுல அந்தாளுகு சி.எம் போஸ்டிங் வேற வேணுமா? எப்பா கார்த்திக் நல்ல முயற்சி தான்... அதுக்கு முன்னாடி படிச்சு முன்னேறுடாப்பா
நாங்க படிப்போட சேர்த்து காதலும் வளர்ப்போம்ல😜😜😜
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom