• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 6

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் -6❤

அந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆட்டோ ஒன்று வந்து நிற்க;
அதில், ஓட்டுனர் இருக்கையிலிருந்து பாண்டி தன் மனைவி சுந்தரியுடன் இறங்கினார்.

அப்பொழுது சுந்தரி தன் கணவரிடம், "என்னங்க நம்ம பொண்ணுக்கு இங்க நியாயம் கிடைக்குமாங்க" என பரிதவிப்புடன் கேட்க,

அதை கேட்ட பாண்டியோ தன் மனைவியை தோளோடு அணைத்துகொண்டு, "கண்டிப்பா நியாயம் கிடைக்கும் புள்ள; என்கிட்ட வாடிக்கையா சவாரி வர ஒருத்தருக்கு தெரிஞ்ச வக்கீல் இங்க இருக்காராம்;
அவரை போய் பார்த்தா நமக்கு உதவுவாங்கனு சொன்னாரு;
அவங்ககிட்ட நம்ம நிலைமையை சொல்லி பார்க்கலாம்" என கூறியவரோ,
அகத்தில் ஆயிரம் கவலைகளை சுமந்தாலும் தன் மனைவிக்காக அக்கவலையை முகத்தில் காட்டாது கோர்ட்டிற்குள் நுழைந்தார்.

மாலை நேரத்திற்குரிய சூழலில் கோர்ட் பரபரப்பாய் காணபட்டது,

ஒருபுறம் சீனியர் வக்கீல்கள் சிலர் கேஸில் வாதாடி தோற்ற ஜீனியர் வக்கீல்களை விலாசி கொண்டிருக்க, மறுபுறமோ தன் கோபத்தில் கொதித்திருந்த சீனியர் வக்கீல்களை ஆசுவாசபடுத்தும் விதமாக டீக்கடைகாரன் தேனீரை தந்துவிட்டு செல்ல,
மேலும் அங்கிருந்த சில மக்களோ இவர்களை போல் தங்களுக்கும் நியாயம் கிடைக்காதா என வேதனையோடு அமர்ந்திருந்தனர்.

இவ்வாறு அமைந்த சுற்றுசூழலை ரசிக்காமல் ஒருவித பரிதவிப்புடனேயே அவர்களை எல்லாம் கடந்து வக்கீல் இருக்கும் இடத்தினை விசாரித்து சென்றனர்.

இவர்கள் தேடி வந்த வக்கீலின் அறையை கண்டறிந்து செல்ல அறைக்கு வெளியில் இருந்த ஜீனியர் லாயரோ இவர்களை விசாரித்தபின்பே உள்ளே அழைத்து சென்றான்.

தன்னறைக்குள் இருந்த வக்கீல் வேதாச்சலமோ இவர்களை பார்த்ததும் முகத்தில் சிறு கடுமையை படரவிட்டு நொடியில் அதனை மாற்றிகொண்டு சகஜமாக உரையாட துவங்கினார்

"என்னோட நெருங்கிய சிநேகிதன், உங்க பிரச்சனையை பத்தி போன்லயே சொல்லிருந்தாலும் சம்பந்தபட்ட நீங்க கொஞ்சம் விவரமா சொன்னா கேஸை நல்லபடியா கொண்டு போக சரியா இருக்கும்; அதுனால என்னாச்சுனு தெளிவா சொல்லுறீங்களா" என வேதாச்சலம் கேட்க,

அதற்கு பாண்டியோ, "ஐயா என்னோட பொண்ணு பேரு அனிதாய்யா;
நல்லா படிக்குற பிள்ளைங்க பத்தாவதுல நல்லா மார்க் எடுத்தா அதுனாலயே அவளை அவ்ளோ பெரிய ஸ்கூல்ல படிக்க இலவசமா வாய்ப்பு எல்லாம் தந்தாங்கய்யா;
படிப்புல அம்பூட்டு ஆர்வம்ங்க சாப்பாடு தூக்கம் எல்லாத்தையும் மறந்துட்டு கூட படிப்பா அவளோட கனவே டாக்டர் ஆகணும்றது தான் டாக்டராகி பெரிய ஆஸ்பத்திரி கட்டி நிறைய பேருக்கு இலவச டீரிட்மெண்ட் பார்த்து எங்களையும் நல்லபடியா பார்த்துக்கணும்னு என் பொண்ணு ஆசைபட்டாய்யா"

"அப்படி அவ உண்டு அவ படிப்பு உண்டுனு இருந்த நேரத்துல தான் நேத்து அவ ரொம்ப நேரமாகியும் பள்ளிகூடம் முடிஞ்சு வரலனு என் பொண்சாதி போன் போட்டு சொன்னாய்யா நானும் எங்கெல்லாமோ தேடி பார்த்து போலிஸ்கிட்ட போனா என் பொண்ணை எனக்கு பொணமா தான்ய்யா தந்தாங்க; என்னால அதை ஜீரணிக்கவே முடியலங்கய்யா இதுல வேற ஏதேதோ பேசிருக்குறாங்க கண்டிப்பா, என் பொண்ணு மேல தப்பே இல்ல அந்த தெரு பொறுக்கி நாய் தான் இப்பிடி பண்ணிட்டான்ய்யா நீங்கதான் என் பொண்ணுக்கு எப்படியாவது நியாயம் வாங்கி தரணுங்கய்யா" என ஆற்றாமையோடும் கண்ணோரம் சிறு கண்ணீர் துளியை ஏந்தியபடி கூறி முடிக்க சுந்தரியோ வாயை பொத்திகொண்டு அழுதார்.

பாண்டி கூறியது அனைத்தையும் கேட்டு முடித்த வேதாச்சலமோ அவரிடம், "ஒரு பெற்றோர்களா உங்களோட ஆதங்கம் எனக்கு புரியுது; ஆனா இந்த காலத்து பிள்ளைங்க நம்ம நினைக்கிற மாதிரியா இருக்காங்க பெத்தவங்க முன்னாடி ஒரு வேஷம் நட்பு வட்டாரத்துல ஒரு வேஷம்ல சுத்துறாங்க; அதேமாதிரி உங்க பொண்ணும் அவனை விரும்பி அதுனால கூட இப்படி ஒரு நிலை வந்திருக்கலாம் இல்லையா" என கேட்க உடனே பதறிய பெற்றோரோ,

"அய்யோ ஐயா, அப்படியெல்லாம் இல்லங்க, என்னோட பொண்ணு அப்படி எதுவும் தப்பான வழிக்கு போகாதுங்க; எங்களுக்கு நல்லா தெரியும் நம்புங்கய்யா" என கெஞ்ச,

அதனை கேட்ட வக்கீலோ "சரி, ஏதோ சொல்லுறீங்க அப்புறம்" என மேலும் அவர்களை வார்த்தைகளால் வதைக்க முயல,

இங்கு வெளியில் இருந்த அவரின் ஜீனியர்களோ சீனியர் வக்கீலை பற்றி புறம்பேசி கொண்டிருந்தனர்.

"ஏண்டா, நம்ம சார் எப்பயுமே இப்படி ஏழை மக்களுக்காக கேஸ் எடுக்க மாட்டாரே; இந்த கேஸ் மட்டும் எப்படி எடுக்குறாரு" என ஒருவன் கேட்க அதற்கு மற்றொருவனோ,

"அட நீ வேறடா, இவரோட பிரண்ட் சொன்னதால தான் வேற வழியில்லாம கேஸை எடுக்க சம்மதிச்சாரு; ஆனா, இவங்களை பார்த்ததும் காசை கறக்க முடியாதுனு புரிஞ்சுகிட்டு அவங்க பொண்ணையே தப்பு தப்பா பேசி ஓட வைக்க பார்க்குறாரு நீ வேணா பாரு; இவரு பேசுற பேச்சுல அவங்க என் பொண்ணுக்கு நீதியும் வேணா ஒண்ணும் வேணானு ஓடுவாங்க பாரு" என்று கூற உடனே முதலாமவனோ,

"அதுசரி டா, இவரு கேஸ் எடுக்கலனா என்ன இங்க வேற வக்கீலா இல்ல; இவங்க வேற யாருகிட்டயாவது போய் கேஸை நடத்த மாட்டாங்களா..???
என கேள்வியெழுப்ப,

"அதுக்கு வாய்ப்பே இல்லடா, இவங்க மோதுறது சாதாரண ஆளா அமைச்சர் நாகலிங்கத்தோட பையன்டா அவரோட குணம் இங்க எல்லாருக்குமே தெரியும் அவரை எதிர்த்து இங்க யாருமே கேஸ் எடுக்க மாட்டாங்க; இவ்ளோ ஏன், நம்ம சார் கூட நாகலிங்கத்தோட பையனுக்காக வாதாடலாம்னு பிளான் பண்ணிருப்பாரு; அதான் இப்படியெல்லாம் பேசுறாரு போலடா" என தன் சீனியர் வக்கீலை மிக சரியாக புரிந்து வைத்துகொண்டு பேச,

அதேநேரத்தில் வக்கீலின் அறையிலோ வேதாச்சலம் சாவிலும் நிம்மதியில்லாமல் செத்தவளை தன் சுடு சொற்களால் கூறுபோட்டு கொண்டிருந்தார்.

இதையெல்லாம் கேட்டு ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பாண்டியோ, "நிறுத்துங்கய்யா, இதுக்கு மேல என் பொண்ணை பத்தி தப்பா பேசுனீங்களா நான் மனிசனா இருக்க மாட்டேன்;
என் பொண்ணுக்கு நியாயம் கேட்டு வந்தது ஒரு குற்றமா; இப்படியா, வார்த்தையால கொல்லுவீங்க" என ஆதங்கமாய் கத்த அதனை கேட்டு கோபமடைந்த வக்கீலோ,

"என்ன தைரியமிருந்தா, என் முன்னாடியே குரலை உயர்த்தி பேசுவ; ஏதோ உன்னோட பொண்ணு சைடு தப்பே இல்லாத மாதிரி பேசிட்டு இருக்க ஊசி இடம் குடுக்காம நூல் எப்படியா நுழைய முடியும் உன்னோட பொண்ணு தான் அவனை காதலிச்சு ஏமாத்திருப்பா; அந்த விரக்தியில தான் அவன் இப்படி பண்ணிருப்பான்; உன் பொண்ணு மேல தான் முழு தப்புமே இருக்கு பொண்ணை ஒழுங்கா வளர்க்க துப்பில்லாம எங்கிட்ட வந்து கத்திகிட்டு இருக்கீயா" என சகட்டுமேனிக்கு வார்த்தைகளை அள்ளி தெளிக்க,

அதனை கேட்ட பெற்ற மனம் தனலாய் தகித்தது.

அதேசமயம் கோர்டிற்கு வெளியே ஒரு கார் சீறி பாய்ந்து கொண்டு வந்து நிற்க; அதிலிருந்து கோபமாய் இறங்கிய வக்கீல் சத்யமூர்த்தியோ ருத்ரமூர்த்தியாய் மாறி யாருடனோ போனில் உரையாடியபடி வந்தார்.

"நீங்க என்னதான் சொன்னாலும் என்னால இதை ஜீரணிக்க முடியல சார்; அதெப்படி சார், இந்தளவுக்கு கொடூரமா இருப்பாங்க" என கோபமாய் கேள்வி எழுப்ப மறுமுனையில் இருந்தவரோ,

"இங்க பாருங்க சார், நீங்க ஒரு வக்கீல் தானா; உங்களோட அனுபவத்துல இதுபோல எத்தனையோ கேஸை பார்த்திருப்பீங்க தானே; அப்படி இருக்கும்போது நீங்களே இவ்ளோ எமோஷனல் ஆகலாமா" என வினவ அதற்கு சத்யமூர்த்தியோ,

"கண்டிப்பா, ஒரு வக்கீலா நான் இதுப்போல நிறைய கேஸை டீல் பண்ணிருக்கேன் ஆனா, இந்த கேஸை அதேபோல என்னால எடுத்துக்க முடியல சார்; அந்த பொண்ணு அனிதாவுக்கு என் பொண்ணு வயசு தான் இருக்கும் அவளுக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்ததை பார்க்கும்போது நாளைக்கு இதே அநியாயம் என்னோட பொண்ணுக்கும் நடந்திடுமோனு பதட்டமா இருக்கு சார்; எனக்கு என்ன ஆனாலும் பரவாலயில்லை சார் இந்த கேஸை நான் எடுத்து நடத்த தான் போறேன்; அந்த பொண்ணு சார்பா நான் ஆஜராகி அவளுக்கு நியாயம் வாங்கி தர தான் போறேன்; இந்த நியாயம் அனிதாவுக்கு மட்டும் இல்லை இனி ஒரு பொண்ணு அனிதா மாதிரி பாதிக்கபடகூடாது சார்" என ஆதங்கத்துடன் பேசி முடிக்க அவரின் பேச்சை கேட்டு மெலிதாய் புன்னகைத்தவரோ,

"உங்க முடிவை நினைச்சா சந்தோஷமா இருக்கு சார்; நீங்க கவலையேபடாதீங்க, அனிதாவுக்கு நம்ம நியாயம் வாங்கி தரலாம்; இனி இந்த கேஸ்ல உங்களோட நானும் சேர்ந்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தர போறேன்" என கூற அதனை கேட்டு சட்டென்று நின்ற சத்யமூர்த்தியோ,

"சேகர் சார், என்ன சார் சொல்லுறீங்க நீங்க இந்த கேஸை டீல் பண்ண போறீங்களா நீங்க ஒரு ஐ பி எஸ் ஆபிசர் உங்களுக்காக எத்தனையோ கேஸ் காத்திருக்கு ஏன் மாஸ்டர் மைண்ட்ற ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க வேண்டிய முக்கிய கேஸ்ல ஓட்டுமொத்த சென்னையையும் பரப்பரப்பா வைச்சிருக்கீங்க அப்படிபட்ட நீங்க இந்த கேஸை டீல் பண்ணுவீங்களா" என ஆச்சர்யமாய் கேட்க மறுமுனையிலிருந்த சேகர் ஐ பி எஸ்ஸோ,

"ஆமா சார், நானும் உங்களுக்கு உதவ போறேன் உங்களுக்கு மட்டும் இல்லை என்னோட பசங்களுக்கும் உங்க மகளோட வயசு தான் இருக்கும் நானும் ஒரு அப்பாவா யோசிக்க வேணாமா; இவனை மாதிரி பொறுக்கி பசங்களால என்னோட பையனுங்க மாதிரியான நல்ல பசங்ககளுக்கும் கெட்ட பேரு; இந்த கலங்கத்தை போக்க நானும் இந்த கேஸ்ல ஜாயின் பண்றேன்; அதுமட்டும் இல்லாம என்னோட பிரண்ட் பாலாவுக்கு வேண்டபட்டவர் நீங்க, உங்களுக்கு உதவாம வேற யாருக்கு உதவ போறேன்" என கூற அவரின் கூற்றில் அகம்மகிழ்ந்து போனார் சத்யமூர்த்தி.

அப்போது அனிதாவின் பெற்றோர்களை கழுத்தை பிடித்த தள்ளாத குறையாக வெளியில் தள்ள அதனை பார்த்த சத்யமூர்த்தியோ போனை அவசரமாக கட் செய்து விட்டு அவர்களை ஓடி போய் காப்பாற்றினார்.

அவர்களை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டவர் சூழ்நிலையையும் நொடியில் யூகித்து கொண்டு அந்த வக்கீலை பார்த்து,

"இவங்க பொண்ணு கேஸை நான் டீல் பண்ணி நியாயம் வாங்கி தரேன்; நீங்க ஓரமா உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பாருங்க" என கண்கள் சிவக்க கோபமாய் உரைத்து தன் ஜீனியர்களிடம் அனிதாவின் பெற்றோர்களை ஒப்படைத்து தன்னறைக்குள் செல்ல; அங்கு நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த அத்துணை வக்கீல்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

சத்யமூர்த்தியிடன் வந்த அனிதாவின் பெற்றோர்களோ, "எங்க பொண்ணோட கேஸை எடுக்குறேனு சொன்னதுக்கு நன்றிங்கய்யா" என கைகூப்பிட அதனை பார்த்த வேதாச்சலத்தின் ஜீனியர்களுள் ஒருவனோ,

"சார் இதுவரைக்கும் தோல்வியே பார்க்காதவரை நீங்க, எப்படி சார் தோற்கடிக்க போறீங்க" என கேட்ட அவனை முறைத்தவரோ,

"இதுவரைக்கும் பார்க்கலேனா என்ன, இனி பார்க்க வைச்சிடுவோம்" என கோபமாய் கூறி அங்கிருந்து சென்றார்.

💘💘💘💘💘

அந்த பங்களா வீட்டிற்குள் ஆடி கார் ஒன்று சீறி பாய்ந்து கொண்டு வந்து நிற்க;
அது நிற்பதற்குள் பொறுக்காமல் வேகமாக கதவினை திறந்த நாகலிங்கம் வீட்டிற்கு நுழைந்தார்.

இவர் உள்ளே சென்றபோது, அங்கே இவருக்காகவே காத்திருந்ததை போல அவரின் தம்பி மருதநாயகமோ ஷோபாவில் அமர்ந்திருந்தார்.

அவரை பார்த்து கோபமான நாகலிங்கம் தன் தம்பியிடம் சென்று, "உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா டா என்னோட அரசியல் வாழ்க்கையே நாசமாகுற வேலையை பண்ணிட்டு வந்திருக்கான்; அவனை நாலடி அடிச்சு தோலை உரிக்குறதை விட்டுட்டு பத்திரமா கூட்டிட்டு வந்திருக்க, இப்போ அவன் எங்க இருக்கான்னு சொல்லு எனக்கு வர ஆத்திரத்துக்கு நானே அவனை கண்ட துண்டமா வெட்டி போடுறேனா இல்லயானு பாரு" என ஆவேசமாய் கத்த,

தன் அண்ணனின் கோபத்தை உணர்ந்த மருதநாயகமோ பொறுமையாக, "அண்ணே எதுக்குணே கோபபடுற நீயே இப்படி பேசலாமா, என்னதான் தப்பு பண்ணிருந்தாலும் அவன் நம்ம பையன்னே ஏதோ அறியா பையன் தெரியாம பண்ணிட்டான்; அதுலயிருந்து அவனை காப்பாத்துறதை விட்டுட்டு இப்படியா கோபபடுவ நீ கோபபடுறதை பார்த்தா செத்து போன பொண்ணுக்காக நீயே இவனை கொண்ணுவ போலயே" என கேட்க அதில் மேலும் கோபமானவரோ,

"இவன் செஞ்ச வேலைக்கு இவனை கொண்ணு போட்டாலும் தப்பில்லைடா அவ்ளோ கோபம் வருது; இப்படி ஒரு வேலை பண்ணனும்னு என்கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா கொஞ்சநாள் பொறுத்து போக சொல்லிருப்பேன் ஆனா, நான் அரசியல்ல அடுத்த கட்டத்துக்கு போற நேரத்துல இப்படி பண்ணிட்டானே இதுனால என்னோட கனவே அழிஞ்சு போச்சு டா இதையெல்லாம் நினைக்க நினைக்க அவன்மேல கோபம் தாண்டா அதிகமாகுது" என ஆத்திரத்தில் கத்த,

அப்போது அங்கு மாடிபடியிலிருந்து ஒரு கையில் ஆப்பிளோடும் மறுகையில் போனோடும் ஓய்யாரமாக இறங்கி வந்தான் வினோத்.

ஏற்கெனவே கோபத்தில் உச்சியில் இருந்தவர் இப்பொழுது அவன் நடந்து வந்த தோரணையில் மேலும் கடுப்பாகிய நாகலிங்கமோ, "உனக்கு எவ்ளோ தைரியமிருந்தா இப்படி ஒரு வேலையை பண்ணிருப்ப" என கத்தியபடி அவனிடம் செல்ல முயல,

அதற்குள் நாகலிங்கத்தை தடுத்த மருதநாயகமோ அவரிடம், "அண்ணே, உன்னோட கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ; உன்னோட இழப்பு பெரிசு தான் ஆனா, அதை கண்டிப்பா சரிபண்ணிடலாம் நீ கவலையேபடாத; இப்போதைக்கு நம்ம இந்த கேஸ்ல இருந்து தம்பியை எப்படி மீட்குறதுனு தான் யோசிக்கணும்; அதைபத்தி கொஞ்சம் யோசிண்ணே" என கூற,

அதனை கேட்ட நாகலிங்கமோ சூழ்நிலையை புரிந்துகொண்டு அதைபற்றி சிந்திக்க துவங்கினார்.

மறுபுறம் வினோத்தோ இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் சிறிதும் கவலை கொள்ளாமல் வீடியோ கேம் விளையாட சென்றான்.

அதனை பார்த்து மேலும் ஆத்திரமடைந்த நாகலிங்கமோ, "இவன் எப்படி டா, இந்தளவுக்கு தைரியமா இருக்கான் இவனோட தப்பு மட்டும் நிருபணமாச்சுனா ஜெயில்ல போய் கழி தான் திங்கணும்; அதைபத்தியெல்லாம் கொஞ்சமாவது கவலைபடுறானானு பாரேன்" என கூற அதற்கு மருதநாயகமோ,

"அண்ணே, வினோத்தை நான் கூட்டிட்டு வந்தப்போ நீ சொல்றமாதிரி அவன் பயந்து நடுங்கிட்டு தான் இருந்தான்; ஏன், போலிஸ்ல சரண்டர் ஆகலாமானு கூட யோசிச்சான் தெரியுமா, அவ்ளோதூரம் பயந்து போயிட்டான் ஆனா நான்தான் உன்னோட செல்வாக்கு என்னோட பணபலம்னு எல்லாத்தையும் வைச்சு காப்பாத்திடுறோம் நீ கவலைபடாதனு அவனை தேத்தி வைச்சிருக்கேன்; அதுனால இனி அவன் பயபடவே மாட்டான் தப்பு செய்றவனோட பெரிய எதிரியே பயம் தானே நம்ம பயந்தோம்னா எல்லாமே சொதப்பிடும் அதுனால ஜாக்கிரதையா தான் எல்லாத்தையும் பண்ணனும்" என அரசியல் ஓநாய் நாகலிங்கத்திற்கே தனது நரி தந்திரத்தால் ஆலோசனை தந்த தம்பியோ இதிலிருந்து தப்பிக்க யோசிக்க அப்போது வீட்டு வாசலில் போலிஸ் ஜீப் வந்து நின்றது.

அந்த போலிஸ் ஜீப்பிலிருந்து இன்ஸ்பெக்டர் கிஷோர் சில காண்டபிள்களுடன் இறங்கி வீட்டிற்குள் வர இவர்களின் வரவை கண்டு சிறிதும் பயபடாமல் அண்ணனும் தம்பியும் அமர்ந்திருந்தனர்.

வீட்டிற்குள் வந்த இன்ஸ்பெக்டர் கிஷோரோ நாகலிங்கத்திடம், "உங்களோட பையனை அரெஸ்ட் பண்ண அரஸ்ட் வாரண்ட்டோட வந்திருக்கோம்; நீங்க எங்களுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு தந்து அவனை அனுப்பி வைச்சா நல்லா இருக்கும்" என கொஞ்சம் தன்மையாக கேட்க,

அதற்கு மருதநாயகமோ, "என்ன சார், ஏதோ ஸ்கூல்ல பிக்னிக் போறதுக்கு அனுப்பி வைங்க சொல்ற மாதிரில கேக்குறீங்க,
எங்க பையன் தப்பே பண்ணாதப்போ நாங்க ஏன் அனுப்பணும் முதல்ல நீங்க வினோத்தை அரெஸ்ட் பண்ண என்னோட அண்ணே வீட்டுக்குல போகணும்; இங்க எதுக்காக வந்தீங்க" என கேள்வியெழுப்ப,

அவரின் கேள்வியின் கேலியாய் சிரித்த கிஷோரோ, "சார், உங்க அண்ணன் அமைச்சர் நாகலிங்கத்தோட அத்தனை தப்புக்கும் உடந்தையா இருந்து தவறுகளை மறைச்சு காப்பாத்துறதே நீங்கதான்னு எல்லாருக்குமே நல்லா தெரியும்; அவரோட மத்த குற்றத்துக்கு உதவுற மாதிரி இதுலயும் நீங்க உதவிருக்கலாம்ல; அதுனால தான் நாங்க நேரா வினோத்தை பிடிக்க இங்கயே வந்துட்டோம்"

"அதுமட்டும் இல்லாம அமைச்சரோட வீட்டுலயும் சில போலிஸை தேடுறதுக்காக அனுப்பி வைச்சோம்; அங்க யாருமே இல்ல அதான் தாமதிக்காம இங்க வந்துட்டோம்; இப்போயாவது வினோத்தை அனுப்புவீங்களா இல்ல" என சிறிது மிரட்டும் தொணியில் கேட்க,

அதற்கு அஞ்சாத மருதநாயகமோ, "இன்ஸ்பெக்டர் சார், நானும் அப்போ இருந்து பார்க்குறேன் நீங்க வினோத்தை அரெஸ்ட் பண்ணுறதுலயே குறியா இருக்கீங்களே; முதல்ல அவன் என்ன தப்பு பண்ணான் யாரோ ஏதோ சொல்றாங்கனு நீங்க இப்படியெல்லாம் ஆதாரமில்லாம வந்து பேசகூடாது; யாரு சார் வினோத் தான் இப்படி பண்ணான்னு சொன்னா" என கேள்வி கேட்க அதற்கு கிஷோரோ,

"ஹான் வினோத்தோட உயிர் நண்பன் தான் சொன்னான்; இதைவிட வேற என்ன வேணும்" என கேலி போல் கூற அதனை கேட்டு சத்தமாய் நகைத்த மருதநாயகமோ,

"சார், நீங்க யாரை சொல்றீங்க அந்த தீலிப்பையா அவன் சொல்றதெல்லாம் பொய் சார்; அது ஒண்ணுமில்லை கொஞ்ச நாளுக்கு முன்னாடி வினோத்துக்கும் அவனுக்கும் ஒரு சின்ன தகராறு அதுக்கு பழிவாங்குற விதமா தான் இப்படியெல்லாம் பொய் சொல்றான்; அதுமட்டும் இல்லாம அந்த பொண்ணு அனிதாவும் வினோத்தும் நல்ல பிரண்ட்ஸ் சார் வினோத்தே தன்னோட உயிர் தோழி இறந்துட்டாளேனு பீல் பண்றான்; இதுல நீங்க வேற வந்து டார்சர் பண்ணிகிட்டு போய் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிங்க போங்க சார்" என நீலிக்கண்ணீர் வடித்து கோபம் கொண்டு கூற,

அதனை கேட்ட கிஷோரோ, "வாவ் வாவ் சூப்பர் சார், என்னமா ஆக்ட் பண்றீங்க, உங்களுக்கெல்லாம் சினிமால சிறப்பான எதிர்காலம் இருக்கு சார்; நீங்க வேணா அங்க போய் நடிங்களேன் ஆனா, என்கிட்ட நடிக்காதீங்க ஒழுங்கு மரியாதையா வினோத்தை அனுப்புறீங்களா இல்ல நாங்களே இழுத்துகிட்டு போகட்டுமா" என கோபமாய் மிரட்டி கேட்க,

அப்பொழுதும் ஆதாரமில்லை என்ற மிதப்பிலே, "எங்க வினோத் தான் குற்றவாளினு சொல்றதுக்கு ஆதாரம் ஏதாவது இருந்தா காட்டிட்டு கூட்டிட்டு போங்க" என கேட்க,

அதற்கு கிஷோரோ ஒரு வீடியோவை காட்டினார்.

அதில் வினோத் தன் நண்பர்களுடன் ஓடுவதும் மக்கள் அவனை துரத்துவதுமான காட்சி ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவின் மூலம் பதிவாகியிருந்தது

அதனை காட்டிய கிஷோரோ, "இவங்க ஓடுன இடத்துக்கு பக்கத்துல தான் அனிதா கற்பழிக்கபட்டா; அதுமட்டும் இல்லாம வினோத்தோட ஓடிய மத்த நாளு பேர்ல இரண்டு பேரை பிடிச்சிட்டோம்" என கூறி அவர்களை நாகலிங்கத்தின் முன்னால் அழைத்து வந்து காட்ட அவர்களும் செய்த தவறை ஏற்றுகொண்டு வினோத்தின் தவறை எடுத்துரைக்க உடனே கிஷோர் மருதநாயகத்திடம்,

"இன்னும் நிறைய ஆதாரம் இருக்கு; அதையெல்லாம் நான் கோர்ட்ல காட்டிகிறேன், இப்போதைக்கு எங்களோட கடமையை செய்யவிடுறீங்களா இல்லனா கடமையை செய்யவிடாத குற்றத்துக்காக உங்களையும் அரெஸ்ட் பண்ணட்டுமா" என திமிராய் கூற அதன்பிறகு வேறு வழியில்லாமல் வினோத்தை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

போலிஸ் ஜீப்பில் சென்ற வினோத் தனது சித்தப்பாவையே பயத்துடன் பார்க்க அவரோ நான் காப்பாத்திடுவேண்டா என நம்பிக்கை அளிக்கும் விதமாய் கண்ணசைக்க உடனே தந்தையும் "உன்னைய காப்பாத்த என்ன வேணாலும் பண்ணுவேன்டா" என கத்தி கூற அதனை கேட்ட வினோத்தோ திமிராய் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

போலிஸ் ஜீப்பில் முன்னால் அமர்ந்திருந்த கிஷோரோ சேகர் ஐ பி எஸ்ஸிற்கு போன் செய்து, "சார் நீங்க சொன்னமாதிரியே அவனை அரெஸ்ட் பண்ணியாச்சு சார்" என சந்தோஷமாய் கூற அதனை கேட்ட சேகரோ வெற்றி புன்னகையை இதழில் பரவ விட்டார்.

நீதிக்கான யுத்தம் ஆரம்பமாகியது இனி, இந்த போரில் நீதி வென்று நன்மைகள் பிறக்குமா இல்லையெனில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குமா என்பதனை பொறுத்திருந்து காண்போம்..!!!


காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
அருமையான நகர்வு.
வினோத் தண்டிக்கப்பட வேண்டும்.
 

Nancy mary

✍️
Writer
அருமையான நகர்வு.
வினோத் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆமா சகி கண்டிப்பா தண்டனை தந்திடுவோம் ரொம்ப நன்றி சகி😃😃😍😍😍😍🤗🤗🤗🤗❤️❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
பார்க்கலாம் என்ன நடக்குதுனு..
பொண்ணை பறி கொடுத்தவங்க கஷ்டம் வேதனை புரியாமல் ஏன் இப்படி ஒரு சிலர் இருக்கிறார்களோ
 

Nancy mary

✍️
Writer
பார்க்கலாம் என்ன நடக்குதுனு..
பொண்ணை பறி கொடுத்தவங்க கஷ்டம் வேதனை புரியாமல் ஏன் இப்படி ஒரு சிலர் இருக்கிறார்களோ
ஆமா ஆமா சகி அவங்க உணர்வை மதிக்காம பணத்தை மதிக்குறாங்க😑😑😑
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
உண்மையா கோர்ட்ல நடக்குற சீனை காமிச்சிருக்கீங்க சகி... இங்க பாலியல் வன்புணர்வு கேஸ் குடுத்தா பாதிக்கப்பட்ட பொண்ணை அசிங்கப்படுத்துவாங்கனு தான் நிறைய பெண்கள் வாய் மூடி மௌனியாகுறாங்க... இது தான் வினோத் மாதிரி ஆளுங்களுக்கு தொக்கா போகுது... வினோத் அரெஸ்ட் தான் மெயின் டர்னிங்னு நினைக்கேன்,,, பாப்போம் இனி என்ன நடக்குது? நாகலிங்கம் எப்படி மகனை காப்பாத்துறார்னு
 

Nancy mary

✍️
Writer
உண்மையா கோர்ட்ல நடக்குற சீனை காமிச்சிருக்கீங்க சகி... இங்க பாலியல் வன்புணர்வு கேஸ் குடுத்தா பாதிக்கப்பட்ட பொண்ணை அசிங்கப்படுத்துவாங்கனு தான் நிறைய பெண்கள் வாய் மூடி மௌனியாகுறாங்க... இது தான் வினோத் மாதிரி ஆளுங்களுக்கு தொக்கா போகுது... வினோத் அரெஸ்ட் தான் மெயின் டர்னிங்னு நினைக்கேன்,,, பாப்போம் இனி என்ன நடக்குது? நாகலிங்கம் எப்படி மகனை காப்பாத்துறார்னு
ஆமா சகி உண்மையாவே இப்படிதான் நடக்குதுல😑😑😑
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

ezhil mam yennachu ud kanom r u ok?
தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,

New Episodes Thread

Top Bottom