• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 5

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் - 5❤

இங்கு கார்த்திக்கின் நண்பர்கள் அனுவிற்கு அணுகுண்டு வைத்த அதேசமயத்தில், மற்றொருபுறம் அமைச்சரவை கூடியது.

அங்கு, ஆளுங்கட்சியை சேர்ந்த அத்தனை எம் எல் ஏக்களும் தொண்டர்களும் அமைச்சர்களும் நிரம்பிருக்க; அத்தனை பேருக்கும் மத்தியில் முதலமைச்சரான வேங்கடசாமி சற்று கம்பீரமாய் வீற்றிருந்தார்.

அப்போது திடீரென கூடிய அமைச்சரவை கூட்டத்திற்கான காரணத்தை விளக்க, அக்கட்சியின் வயதில் மூத்தவரான ஒரு அமைச்சர் எழுந்து நின்றார்.

"எல்லாருக்கும் வணக்கம் பா, இப்போ இந்த அமைச்சரவையை எதுக்காக கூட்டிருக்கோம்ற காரணம் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கும்ல; அதை சொல்றதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான அடிப்படையான விஷயத்தை நியாபகபடுக்கிறேன்,

நம்மலோட அரசியல் வாழ்வுல முக்கியமானதே மக்களோட ஓட்டு தான்; அதை சம்பாதிக்க நம்ம மக்களோட நம்பிக்கையை சம்பாதிக்கணும்".

"ஒரு அரசியல்வாதியை மக்கள் தேர்ந்தெடுக்குறாங்கனா அது சும்மா இல்ல; அவங்களால நம்ம தொகுதிக்கும் மக்களுக்கும் நல்லது நடக்குமா, நம்மலோட பிரச்சனையை தீர்க்குற அளவுக்கு இவருக்கு பக்குவம் இருக்கா, ஒரு சரியான தலைமை பண்பு இருக்கானு பார்த்து தான் மக்கள் தேர்ந்தெடுப்பாங்க; இப்படிதான் தேர்ந்தெடுக்கணும்ற முடிவு மக்கள் மனசுல இருக்கும்;
ஆனா சில நேரங்கள்ல அந்த முடிவே ஆட்டம் காணபடுது" என நிறுத்தி அனைவரையும் பார்த்தவரோ மேலும் தொடர்ந்தார்.

"அரசியல்வாதிங்க, சிலபேர் தவறான வழிகள்ல போய் மக்களோட நம்பிக்கையை பெற பார்க்குறாங்க; இது முற்றிலும் தவறான செயல், அரசியல்னா சாக்கடை தான்னு மக்கள் நினைச்சிடகூடாது; இதுவரைக்கும் நம்ம கட்சியில சில தவறான செயல்கள் நடந்திருக்கு; ஆனா, அதெல்லாம் பெரியளவுல பேசபடல மக்கள் மத்தியில நமக்கான மதிப்பும் மரியாதையும் இன்னமும் இருக்கு" என சொல்லி பெருமூச்சு விட்டு கொண்டவரோ,

"ஆனா, இப்போ நடக்கிற அரசியல் சூழ்நிலையை வைச்சு பார்க்கும்போது மக்கள் மத்தியில நமக்கான மதிப்பு போயிடுமோனு பயமா இருக்கு; அதுனால தான் நாம அமைச்சரவையை கூட்டிருக்கோம்" என நீண்ட விளக்கம் தர, அவ்விளக்கத்தை கேட்ட நாகலிங்கமோ தன் அடியாள் காளியை பார்த்து எரிச்சலாய் கண்ணை காட்ட அதற்கு அவனோ,

"ஐயா இவரு குடுக்குற ஒவ்வொரு பில்டப்பும் உங்களுக்கு ஆதரவா தான் திரும்பும் அதுனால அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என நாகலிங்கத்தின் காதை கடிக்க அதுவும் சரிதான் என புரிந்து கொண்டவரோ முறுவலுடன் நடப்பதை பார்க்க துவங்கினார்.

மற்றொருபுறமோ, இந்த நீண்ட விளக்கத்தை கேட்ட வேங்கடசாமி, "நீங்க சொல்றது எல்லாம் சரிதான்; ஆனா இப்போ மக்கள் மத்தியில நம்ம கட்சிக்கு இருக்கிற மதிப்பு போகுற அளவுக்கு என்னாச்சு" என புரியாமல் வினவ கூட்டமும் சற்று பரபரப்பானது.

அவர்களை எல்லாம் அமைதிபடுத்திய அம்மூத்தவரோ பிரச்சனையை பற்றி கூற துவங்கினார்.

"நம்ம கட்சியில தொண்டர்களும் எம் எல் ஏக்களும் தப்பு செஞ்சாலே அதுக்கான தண்டனைகள் கடுமையா இருக்கும் ஏன், நம்ம நாகலிங்கத்தோட அப்பா செஞ்ச தப்புக்கே அவரோட நேர்மையான குணத்தையும் தாண்டி தண்டனை குடுத்தோம்; இப்போ, அதேமாதிரி ஒரு சூழ்நிலை தான் அமைஞ்சிருக்கு" என புதிர் போட வேங்கடசாமி புருவம் சுருக்கி பார்த்தார்.

மேலும் தொடர்ந்தவர், "நம்ம கட்சியோட தலைவரான முதலமைச்சரா இருக்கிற வேங்கடசாமி ஐயா மேல தான் புகாரே வந்திருக்கு" என வேகமாய் ஆரம்பித்து பவ்வியமாய் கூறி முடிக்க அதனை கேட்ட வேங்கடசாமி ஆவேசமாய் கத்த துவங்கினார்.

"என்ன சொல்லுறீங்க, என்மேல புகாரா..???
இத்தனை வருஷமா கட்சியை நல்லபடியா நடத்திட்டு வந்து, இரண்டு முறை முதலமைச்சரா ஆகிருக்கேன்; கட்சிக்காகவும் மக்களுக்காகவும் எவ்வளவோ உழைச்சிருக்கேன்; அப்படிபட்ட என்மேலயே புகாரா அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு புகார் வந்திருக்கு" என கத்த அதனை கேட்ட மூத்த அமைச்சரோ,

"நீங்க கட்சியை நல்லமுறையில வழிநடத்திட்டு போயிருக்கிறது எல்லாமே எங்களுக்கும் தெரியும் ஐயா;
ஆனா இப்போ புகாரே உங்களோட சமீபகால நடவடிக்கைகளை அடிப்படையா வைச்சு தான் வந்திருக்கு,
நீங்க கையெழுத்து போட்டு ஆரம்பிச்ச தொழில்சாலைகளால பல ஊர் அழிச்சிடுச்சு; அந்த தொழிற்சாலைக்காக சில விவசாய நிலம் தேவைனு பல விவசாயிகளோட நிலத்தை வலுகட்டாயமா மிரட்டி வாங்கிட்டீங்கனு புகார் இருக்கு; அதுப்போக நம்ம கட்சியில நேர்மையா உழைக்கிற தொண்டனுக்கு வாய்ப்பு தருவேன்னு சொல்லிட்டு கட்சியை பற்றின எந்த முன் அனுபவமும் இல்லாத உங்க மச்சானுக்கு எம் எல் ஏ சீட்டு தந்திருக்கீங்க; இப்படியான புகார்களா கிட்டதட்ட இருபதுக்கும் மேற்பட்ட புகார்களும் அதை நீங்க தான் செஞ்சீங்கனு சொல்றமாதிரி தகுந்த ஆதாரங்களும் இருக்கு,

இதையெல்லாம் நாங்க சட்டசபையில சமர்ப்பிக்கலாம்னு தான் நினைச்சோம்; ஆனா முதல்ல நம்ம கட்சிக்குள்ள பேசினா உறுப்பினர்களோட முடிவை நீங்களும் மதிக்க வாய்ப்பு இருக்குனு தான் இப்படி அமைச்சரவையை கூட்டிருக்கோம்" என கூறி முடித்தவரோ,

"இப்போ முடிவு உங்களோடது தான், நீங்க பதவி விலகுறீங்களா; இல்ல சட்டசபைக்கு போய் அதிகபட்ச வாக்கெடுப்பின் அடிப்படையில பதவி இழக்குறீங்களா; உங்களுக்கான வாக்குகளும் அங்க கிடைக்க வாய்ப்பில்லை ஏன்னா கட்சி உறுப்பினர்கள் எல்லாருமே ஒருமனதா பேசி தான் இந்த முடிவுக்கு வந்திருக்கோம்; அதுனால நீங்க விலகுறதை தவிர வேறுவழியில்லை ஐயா" என சூழ்நிலையை எடுத்து சொல்லி கேட்க,
அவரின் பேச்சின் கோபமான முதலமைச்சரின் விசுவாச அமைச்சரோ ஆத்திரத்தில் கத்த துவங்கினார்.

"டேய், உங்களுக்கெல்லாம் எவ்ளோ தைரியமிருந்தா இப்படி ஒரு முடிவை எடுப்பீங்க; இவ்ளோ வருஷமா நமக்காக வேங்கடம் ஐயா உழைச்ச உழைப்பை மறந்துட்டு பேசுறீங்களே, உங்களுக்கு வெட்கமா இல்லையா...
சரி, நீங்க சொல்றமாதிரியே ஐயா விலகுறாருனே வைச்சிப்போம்; அப்போ இவரோட இடத்துக்கு யாரு வருவா, யாரை முதலமைச்சரா நம்ம கட்சியில இருந்து தேர்ந்தெடுப்பீங்க சொல்லுங்க" என கத்த வேங்கடசாமியும் அதே கேள்வியோடு உறுப்பினர்களை நோக்க,

எல்லாருமே ஒரே நேரத்தில்,

அமைச்சர் நாகலிங்கம்..!!!
அமைச்சர் நாகலிங்கம்..!!!
அமைச்சர் நாகலிங்கம்..!!!

என கோஷங்களை எழுப்ப,
அதில் அதிர்ச்சியடைந்த வேங்கடசாமியோ நாகலிங்கத்தை பார்க்க; இதுவரை பவ்வியமாய் அமர்ந்திருந்தவர் இப்பொழுது கெத்தாய் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு முகத்தில் ஒரு இளக்கார புன்னகையை ஏந்தி கொண்டு அமர்ந்தார்.

அதில், மிரண்டு போன முதலமைச்சர் செய்தறியாது முழிக்க; அவருக்கு பரிந்து பேசிய விசுவாச அமைச்சரோ வேங்கடத்தின் காதின் அருகே குனிந்து,

"ஐயா, நீங்க கவலையேபடாதீங்க;
இப்போ பாருங்க, எல்லாத்தையும் நான் மாத்தி காட்டுறேன்" என கூறி கோஷமெழுப்பியவர்களை பார்த்து,

"டேய், கொஞ்சம் அமைதியா இருங்கடா; இப்போ என்ன ஐயா பதவி விலகணுமா அவரு பதவி விலகுறது இருக்கட்டும்; நீங்க என்னடா அவருக்கு பதிலா அவரைவிட மோசமானவரை நேர்ந்தெடுத்திருக்கீங்க; நீங்க தேர்ந்தெடுத்த அமைச்சர் நாகலிங்கத்தோட சுயரூபம் தெரியுமா இங்க பாருங்க" என கூறி தன் மொபைலில் ஒரு வீடியோவை அங்கிருந்த திரையில் ஓடவிட்டு காட்ட,

அந்த வீடியோவில் காளி சில அடியாட்களோடு ஒருவனை கொல்லும் காட்சியும், அதை தொடர்ந்து எதற்காக கொல்கிறான் என்ற அவனின் வாய்மொழி விளக்கமும் தெளிவாய் பதிவாகியிருந்தது;
அதோடு அக்கொலை நடந்த இடத்தில் நாகலிங்கத்தின் மகன் வினோத்தும் இருக்க,
அதில் கொலையை செய்த காளி வினோத்திடம் திரும்பி, "சின்னய்யா இப்போ வாங்க நம்ம உங்க வேலையை முடிக்க போகலாம்" என கூறி அழைத்து செல்வதோடு வீடியோ முடிந்தது.

அதை பார்த்த நாகலிங்கம் காளியை முறைக்க அவனோ தலைகுனிந்தான்.

அந்த வீடியோவில் கொல்லபட்டவன் வேறு யாருமல்ல;
அன்றொருநாள் வீட்டின் தனக்கெதிராய் கம்பிளைண்ட் அளித்ததாக ஒருவனை தேடினார்களே; அவனே தான்,
நாகலிங்கம் செய்த பல்வேறு குற்றங்களை ஆதாரத்தோடு புகாரளிக்க சென்றவர்களை இவர்கள் பிடித்து கொலை செய்ததோடு அதில், சுமந்தபட்ட குற்றங்களில் சிலதை தான் வேங்கடசாமி செய்ததாய் கட்சியின் உறுப்பினர்களை நம்ப வைத்தார் நாகலிங்கம்.

அதை காட்டியபிறகு "இதுமட்டும் இல்ல, இப்போ தலைப்பு செய்தியா எல்லா நியூஸ்லயும் ஒண்ணு ஓடுது;
அதையும் பாருங்க" என ஒரு நியூஸை யூடியூப்பிலிருந்து எடுத்து ஓட விட அதிலோ நாகலிங்கத்தின் மகன் வினோத் குற்றம் செய்ததாக நியூஸ் ஓடியது.

இதையெல்லாம் காட்டிய விசுவாச அமைச்சரோ, "இப்போ சொல்லுங்க, இப்படிபட்ட ஒருத்தரையா நீங்க முதலமைச்சரா தேர்ந்தெடுக்க போறீங்க; நம்ம முதலமைச்சர் செஞ்சதா சொன்ன குற்றங்களுமே இவரோடதா கூட இருக்கலாம்;
முதலமைச்சராக இவரே பொய்யான குற்றசாட்டுகளை ஜோடிச்சிருக்கலாம்; இப்படிபட்ட ஒருத்தரை நம்ம முதலமைச்சரா தேர்ந்தெடுத்து மக்கள் முன்னாடி நிறுத்துனா மக்களுக்கு நம்ம மேல இருக்கிற நம்பிக்கை போயிராத" என கேட்க அவனின் கேள்வியிலும் வீடியோ ஆதாரத்திலும் உறுப்பினர்கள் சலசலக்க நாகலிங்கம் பதற்றமாய் சுற்றுபுறத்தை பார்க்க வேங்கடசாமியோ நிமிர்வாய் கம்பீரமாக அமர்ந்து நாகலிங்கத்தை பார்த்து ஏளனமாக சிரித்தார்.

அதன்பிறகு, நாகலிங்கத்தின் குற்றசாட்டுகளினால் அவரின் மேல் நடவடிக்கை எடுக்க கட்சி உறுப்பினர்கள் முடிவெடுத்தும்; முதலமைச்சராய் இருப்பவரை தவறாய் குற்றம் சுமத்தியதற்கு மன்னிப்பினை கேட்டு கொண்டும்;
அக்கூட்டத்தினை கலைக்க உறுப்பினர்கள் எல்லாரும் கலைந்து சென்றனர்.

இப்பொழுது நாகலிங்கத்தின் மனது கொதிகனலாய் கொழுந்து விட்டு எரிந்தது.

ஒருபுறம், இத்தனை வருட கனவுகோட்டை ஒரே நிமிடத்தில் மண்ணோடு மண்ணாய் சரிந்து போன கோபமும்; மறுபுறம் பாசத்தை கொட்டி வளர்த்த மகனும் அந்நிகழ்வுக்கு ஓர் காரணமாய் அமைந்த வெறியும்; ஒருசேர கோபத்தில் காளியை ஓங்கி அறைந்த நாகலிங்கமோ நடந்ததை முழுதாய் விசாரித்தார்.

காளி உண்மைகளை ஒன்றுவிடாமல் கூற "இவ்ளோ நடந்திருக்கு, என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலேல இப்போ வினோத் எங்க" என கேட்க காளியோ

"ஐயா உங்க தம்பியோட வீட்டுல தான்யா சின்னய்யா இருக்காரு" என கூற

"ஓ, இவ்ளோ வேலையும் செஞ்சிட்டு அங்க போய் ஒளிஞ்சிருக்கானா; அவனை என்ன பண்றேனு பாரு, வண்டியை எடு டா" என ஆக்ரோஷமாய் கத்த வண்டி சீறி பாய்ந்து கொண்டு அவ்விடத்திலிருந்து சென்றது.

💘💘💘💘💘

தன் வீட்டிற்குள் சோர்வாய் நுழைந்த அனு, அதே சோர்வோடு ஷோபாவில் சரிய;
அவளின் கைபட்டு ஷோபாவிலுள்ள டிவி ரீமோட் டிவியை ஆன் செய்ய, அவளுக்கான அதிர்ச்சி காத்திருந்தது.

டிவியில் செய்தி ஓளிபரப்பாகி கொண்டிருக்க; அதனை கடமைக்கு பார்த்து கொண்டிருந்தவளின் கண்கள் திடீரென மரண பீதியால் நிறைந்தது.

அச்செய்தியில் கூறப்பட்டது என்னவென்றால்,

"சென்னை வனசரவாக்கம் பகுதியை சேர்ந்த பாண்டி அவரின் மனைவி சுந்தரி தம்பதியின் ஒரே மகள் அனிதா".

"ஆட்டோ ஓட்டுநரான பாண்டி தன் கஷ்டத்தையும் தாண்டி மகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளார்".

"நாள்தோறும், பள்ளிக்கு சென்று நேரத்தோடே திரும்பும் மகளோ, நேற்று பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை;
இதனால் கவலையடைந்த மாணவியின் பெற்றோர் பதறியடித்து கொண்டு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்".

"அப்புகாரின் அடிப்படையில் விசாரணையை நடத்திய போலிஸாருக்கு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அம்மாணவி அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல் வர, அங்கு விரைந்து சென்று விசாரித்த போலிஸாருக்கு திடுக்கிடும் வகையில் பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தனர்".

"அம்மாணவி அனிதாவை யாரோ ஐந்து பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்; அவர்களிடமிருந்து தப்பிக்க போராடியவளை இரும்பு கம்பியால் அடித்து மயக்கமுற செய்து மாறி மாறி அக்கொடூரத்தை அரங்கேற்றியதாகவும்; அருகிலிருந்த பொதுமக்கள் இவர்களின் செயலை அறிந்து, அக்காமகொடூரர்களை துரத்தியடித்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தாகவும் தெரியபடுகிறது".

"இதனிடையே, இக்கொடூரத்திற்கு முக்கிய காரணமானவன் அமைச்சர் நாகலிங்கத்தின் மகன் வினோத் எனவும்; அப்பெண்ணிற்கு அனுப்பிய காதல் தூது நிராகரிக்கபட்ட விரக்தியில் இப்படிபட்ட கொடூரத்தை அரங்கேற்றியதாகவும் வினோத் படிக்கும் பள்ளியில் விசாரித்தபோது அவனின் நண்பனான தீலிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது".

"இதன் அடிப்படையில் போலிஸார் பாதிக்கபட்ட அப்பெண்ணை விசாரிக்க மருத்துவமனைக்கு சென்றனர்.

"அப்போது, சிகிச்சை பலனின்றி அப்பெண் பரிதாபமாய் இறந்து விட்ட சம்பவம் அப்பெற்றோர்களை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது".

"போலிஸார் தலைமறைவாகிய வினோத்தை சல்லடை போட்டு தேடி கொண்டிருப்பதாகவும்; சீக்கிரமே கண்டுபிடித்து விடுவோம் என்றும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்".

இந்த செய்தியை கேட்ட அனு ஸ்தம்பித்து போனாள்.

இப்படிபட்ட, செய்திகளை இதற்குமுன் கேள்விபட்டிருந்தாலும்;
இப்போது அவளுக்கு இருக்கும் சூழ்நிலை இந்த பிரச்சனையை வேறு விதமாக சிந்திக்க வைத்தது.

'நம்ம கார்த்திக் சீனியரும் இதேபோல நம்மல ஒருதலையா காதலிக்குறாருனு அவரோட பிரண்ட்ஸ் சொன்னாங்களே, அப்போ நாளைக்கு எனக்கும் இதேமாதிரி ஒரு நிலமை வந்துட்டா' என அதிர்ச்சியாகி பேய் முழிமுழிக்க அவளின் தலையிலேயே தட்டிய ஜெயாவோ அவளை நிஜ உலகிற்கு அழைத்து வந்தார்.

"ஏண்டி உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா, பிள்ளையானா ஒழுங்கா வீட்டுக்கு வந்ததும் முகம் கழுவி டிரஸ் மாத்தாம அப்படியே டிவி பார்க்க ஆரம்பிச்சிட்ட முதல்ல போய் டிரஸ் மாத்துடி" என கத்த என்றும் தன் தாயின் கத்தலுக்கு அவரை விட பன்மடங்கு அதிகமாய் கத்தி சண்டையிடுபவளோ;
இன்று தாயின் பேச்சிற்கு எதிர்பேச்சு பேசாமல் மெளனமாக கடந்து சென்றாள்.

இவளின் இச்செயலினை பார்த்து அதிர்ச்சியான ஜெயாவோ, அவளை தன்புறம் திருப்பி அவள் நெற்றியை தொட்டு பார்த்தாள்.

"அடியே என்னடி இது, உடம்பு அனலா கொதிக்குது; இதுனால தான் அமைதியா போறீயா காய்ச்சல் கொதியா கொதிக்குதே, நீ ரூம்ல இரு நான் உனக்கு கஷாயம் செஞ்சு கொண்டு வரேன்" என கோபத்தையும் பதட்டத்தையும் ஒரே நேரத்தில் காட்டி சமையலறைக்குள் நுழைந்து கொள்ள இவளோ,

"சீனியர், நீங்களும் என்னைய இப்படி பண்ணிடுவீங்களா" என முணுமுணுத்து கொண்டே ரூமிற்குள் சென்று அடைந்தாள்.

💘💘💘💘💘

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த கார்த்திக் ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு "அக்கா காபி கொண்டு வா" என குரல் கொடுத்தான்.

அவனின் குரலினை கேட்ட சாவித்திரியோ,
மகனுக்காக காபியை கலந்து கொண்டு வந்து அவனிடம் நீட்ட,

அதற்கு அவனோ, "அம்மா நான் அக்கா கையால போட்ட காபி தான் குடிப்பேன்னு தெரியும்ல, அப்புறம் ஏன் நீ காபி போட்டு கொண்டு வர அக்காவுக்கு என்னாச்சு..???
என கேள்வி கேட்க அதற்கு சாவித்திரியோ,

"என்னனே தெரியலைடா, நேத்து காலேஜ் முடிஞ்சு வந்ததும் சோகமா ரூம்க்கு போனவ தான்; அப்புறமா அவ வெளியவே வரல சாப்பாடு காபினு எல்லாமே அவ ரூமுக்கே கொண்டு போனாலும் கொஞ்சமா தான் சாப்பிடுறா டா" என சோகமாய் கூற அதைகேட்டு குழம்பிய கார்த்திக்கோ கவியின் அறைக்கு சென்றான்.

அந்த அறையில் கவியோ எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

அதனை பார்த்த கார்த்திக் "அக்கா" என்றழைக்க தன் முகத்தினை இயல்பாய் மாற்றி வலுகட்டாயமாய் ஒரு சிரிப்பினை ஏந்தி தம்பியை வரவேற்றாள்.

"வாடா கார்த்திக், எப்போ ஸ்கூல் முடிஞ்சு வந்த கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேன்ல;
கொஞ்சம் இரு, உனக்கு நான் காபி போட்டு கொண்டு வரேன்" என படபடப்பாய் பேசி தலைமுடியை அள்ளி முடிந்து கிளம்பியவளின் கைகளை பற்றி நிறுத்தியவனோ,

"உனக்கு என்னாச்சு கா, காலையில உடம்பு முடியலையானு கேட்டப்போ நல்லா இருக்கேனு தான சொன்னா அதுனால தானே நான் ஸ்கூலுக்கு கிளம்புனேன்; இப்போ என்னனா இப்படி சோகமா இருக்க என்னக்கா ஆச்சு" என பாசமாய் கேட்க,

கவியின் கண்ணெல்லாம் கலங்கியது, அவளால் அவள் கண்முன் பார்த்த அநியாயத்தை எங்கனம் கூற முடியும் அவளின் சிந்தனைகளோ நேற்றைய சம்பவத்தை அசைபோட்டது.

வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த கவியின் பின்னால் கவிநேசன் காதல் மனுவினை ஏந்திகொண்டு சுற்றினான்.

அவனிற்கு உதவிபுரியும் வகையில் ஸகூட்டியும் மக்கர் செய்ய, கோபத்தில் ஸ்கூட்டியை ரோட்டோரமாய் நிறுத்தி சாலையில நடக்க துவங்கினாள்.

"கவி பீளிஸ், ஒருநிமிசம் நில்லு;
ஹேய் கவி பீளிஸ் நில்லு" என அவள் பின்னால் பைக்கில் கத்திகொண்டே வந்தவனோ அவளின் முன்சென்று வண்டியினை நிறுத்தினான்.

"கவி பிளிஸ், நான் சொல்றதை கொஞ்சம் கேளு, என்மேல அப்புறமா எவ்ளோ வேணாலும் கோபபட்டுக்கோ; ஆனா இப்போ வண்டியில ஏறு நீ இப்படி தனியா நடந்து போறது சேப் இல்லை" என கூறுபவனை கையுயர்த்தி தடுத்தவளோ, கோபத்தில் எண்ணெய்யில் இட்ட கடுகாய் பொறிய துவங்கினாள்

"உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா, அங்க உன்னோட அப்பா எங்க குடும்பத்து கூட உறவே வைச்சிக்ககூடாதுனு நினைக்கிறாரு;
ஆனா நீ என்னனா என் பின்னாடி சுத்திகிட்டு இருக்க இதெல்லாம் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்னையும் என் குடும்பத்தையும் தான் தப்பா பேசுவாரு; அது உனக்கு பிரச்சனையில்லைனா தாராளமா பாலோ பண்ணு" என கூறி செல்ல நினைத்தவளின் கையை பிடித்து தடுத்த நேசனோ அவளிடம்,

"இங்கபாரு கவி உன்னோட கண்ணுல நான் எனக்கான காதலை பலதடவை பார்த்திருக்கேன்; அதை ஒரே ஒரு தடவை உன்னோட வாயால கேட்கணும்னு ஆசைபட்டு தான் காலையில நீ காலேஜ் வர டைம்ல சின்னதா வம்பிலுப்பேன்; ஆனா எப்பயுமே உனக்கு துணையா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்; அப்படி எங்க அப்பா மூலமா பிரச்சனை வந்தா, கண்டிப்பா அப்போ நான் உனக்கும் நம்ம காதலுக்கும் தான் துணையா இருப்பேன்; எனக்கு என் அப்பாவோட கெளரவத்தை விட நம்மலோட காதல் தான் முக்கியம் அதுனால அவரை பத்தியெல்லாம் கவலையில்லை,

அதுமட்டும் இல்லாம ஒரு காதலனா உன்னைய பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு நிறையவே இருக்கு; அதுனால என்னைய நம்பி வா நான் உன்னைய பத்திரமா வீட்டுல கொண்டுபோய் விடுறேன், யாராவது வீட்டுல கேள்வி கேட்டா நானே பேசிக்கிறேன்" என கூறிய கவிநேசனின் பேச்சிற்கு மனமிறங்கலாமா என சிந்தித்த, அவளின் சிந்தனையை தடைசெய்யும் விதமாக ஒரு பெண்ணில் அலறல் சத்தம் கேட்டது,

அதனை கேட்டு அரண்டு போய் திகைத்து நின்ற இருவரும் அக்குரல் வந்த திசையினை நோக்கி ஓடினர்.

அக்குரல் கேட்ட திசையோ மூட்புதர்களாலும் பல மரங்களாலும் சூழ்ந்த பகுதியாகவும் மக்கள் நடமாட்டம் குறைவாய் அமைந்த பகுதியாகவும் இருந்தது.

அந்த பகுதியை பயத்தோடே நெருங்கியவர்கள் ஒரு மரத்தில் பின்நின்று எட்டி பார்க்க அங்கே,

பதினேனு வயதே ஆன ஐந்து இளைஞர்கள் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து முடித்து அவளின் முழு உடலிலும் ஆசீட்டை ஊற்றி கொண்டிருந்தனர்.

அப்பெண்ணோ கதறி துடித்து கொண்டிருக்க நேசனும் கவியும் வருவதற்குள் அப்பெண்ணிற்கு பல கொடூரங்கள் நடந்து முடிந்திருக்க இதற்குமேல் தாமதிக்ககூடாது என முடிவெடுத்த நேசனோ,

"டேய் என்னடா பண்றீங்க" என கத்த அக்கத்தலுக்கு பயந்து ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில் தெறித்து ஓடினர்.

இப்பெண்ணின் அலறல் குரல் கேட்டு அருகிலிருந்த பொதுமக்களும் கூடிவிட சிலர் இளைஞர் கூட்டத்தை துரத்தி செல்ல, சிலரோ அப்பெண்ணை காப்பாற்ற காவல் துறைக்கும் ஆம்புலன்ஸிற்கும் தகவல் தெரிவிக்க தன் கண்முன் நடந்த அக்கொடூர செயலினை பார்த்து சிறையென உறைந்து போயிருந்தாள் கவியரசி.

அந்த இளைஞர்களோ எவர் கையிலும் சிக்காமல் ஓட, நடுவில் ஒரு கார் புகுந்து இளைஞர்களை காப்பாற்றி கூட்டி செல்ல இவர்களால் அக்காமகொடூரர்களை துரத்தி பிடிக்க முடியவில்லை.

இவர்கள் தப்பித்த பிறகே நேசனுக்கு கவியின் சிந்தனை எட்டிபார்க்க; உடனே அவள் இருக்கும் இடத்தினை நோக்கி சென்றான்.

அங்கே சென்று பார்க்க தன் சுற்றம் மறந்து ஸ்தம்பித்து போன கவியே அவனின் கண்களுக்கு காட்சியளிக்க அவளை நோக்கி விரைந்தான்.

அவள் தோள் தொட்டு "கவி" என்றழைக்க அதுவரை சிலையாய் சமைந்தவள் சுயம் பெற்று அவனை கட்டிகொண்டு அழுதாள்.

"நேசன் அந்த பொண்ணு... பொண்ணுக்கு.. அவ... சின்ன பொண்ணு... என திக்கி திணறி அழுக அவளை இறுக அணைத்து கொண்டு அவளை தேற்ற வழியறியாது தவித்தான்.

அப்போது அங்கே போலிஸ் ஜீப்போடு ஆம்புலன்ஸும் வர அதை பார்த்த கவிநேசன் சிந்திக்க துவங்கினான்.

'போலிஸ் ஆம்புலன்ஸ்னு எல்லாரும் வந்துட்டாங்களே, இனிமேலும் இவ இங்க இருக்கிறது பாதுகாப்பு இல்ல மக்கள்கிட்ட கொலையை பார்த்த சாட்சி யாருனு கேட்டா நம்மல தான் கைகாட்டுவாங்க, இவ இருக்கிற நிலமைக்கு கோர்ட் கேஸ்னு போனாலும் சரியா இருக்காது; அதுனால நம்ம முதல்ல இங்கயிருந்து இவளை கூட்டிட்டு போகணும்" என ஒரு காதலனாக சிந்திக்க துவங்கிய கவிநேசன் அவளை அணைத்துகொண்டே பைக் அருகில் சென்றான்.

கவியின் அழுகை இன்னும் ஓய்ந்தபாடில்லை ஆனாலும், இங்கிருந்து செல்ல வேண்டுமென எண்ணியவனோ,

"கவி சீக்கிரம் வண்டியில ஏறு, நம்ம இங்கயிருந்து கிளம்பிடலாம்" என கூற அப்பொழுது கொஞ்சம் சுய உணர்வு பெற்ற கவியோ,

தன்னை சுற்றி நடப்பதை அறிய பாதிக்கபட்ட அப்பெண் இருக்கும் திசையினை நோக்கி திரும்பி பார்க்க, இப்பொழுது அங்கே அவளின் பெற்றோர்களும் வந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

அக்காட்சியை பார்த்து இன்னும் மனதளவில் உடைந்தவளை, மறுபடியும் அவசரபடுத்த வேறு வழியின்றி அவளும் வண்டியில் ஏறினாள்.

தன் வண்டியை மின்னல் வேகத்தின் செலுத்தி கவியின் வீட்டிற்கு வந்தவனோ சற்று தள்ளி வண்டியை நிறுத்தினான்.

பைக்கிலிருந்த இறங்கிய கவியிடம், "கவி அங்க நடந்ததை எல்லாம் ஒரு கனவா நினைச்சு மறக்க பாரு, மனசை போட்டு குழப்பிக்காத; எனக்கு நீதான் முக்கியம் குடும்பத்துல யாருகிட்டயும் சொல்லாத விஷயம் தெரிஞ்சா பயந்திட போறாங்க ஜாக்கிரதையா இரு, சரியா" என கேட்டவனிடம் ஒரு சிறு அசைப்பினை தந்துவிட்டு அவள் வீட்டை நோக்கி விரைந்தாள்.

இப்படி நேற்றைய கசப்பான நினைவுகளின் தாக்கத்தினை முழ்கியவளால் அத்துயரத்தினை வாய்விட்டு கூற முடியவில்லை.

கார்த்திக்கின் கேள்வியில் அந்நினைவிற்கு போனவளோ சுய உணர்வு பெற்று,

"அதெல்லாம் ஒண்ணும் இல்லடா, கொஞ்சம் உடம்பு சரியில்லாத மாதிரி இருந்துச்சு இப்போ பரவால" என கூற அதனை கேட்ட கார்த்திக்கோ,

"உண்மையாவே பரவாலயா அக்கா, நம்ம வேணா பக்கத்துல இருக்கிற கிளினிக்கு போயிட்டு வருவோமா" என கேள்வியெழுப்ப,

அதெல்லாம் ஒண்ணுமில்லைடா, நீ வா உனக்கு நான் காபி போட்டு தரேன்" என கார்த்திக்கை ஹாலிற்கு இழுத்து வர அங்கே டிவியில் அவள் பார்த்த அனிதாவின் கொலை செய்தி ஓடி கொண்டிருந்தது.




காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

பிரிய நிலா

Well-known member
Member
நாகலிங்கத்தின் சாயம் வெளுத்துவிட்டது...

இவ்ளோ கொடுமையான ஒரு காரியத்தையா வினோத் பண்ணிட்டான்...

அனு போயும் போயும் நியூஸ் பார்த்துட்டு கார்த்திக் அண்ட் அவங்க ப்ரண்ட்ஸ் இப்படி பண்ணிடுவாங்கனு பயப்படலாமா. இது கார்த்திக்கு தெருஞ்சா அவனோட ரியாக்சன் என்னவா இருக்கும்

கவி பாவம். ரொம்ப பயந்துட்டா..
 

Nancy mary

✍️
Writer
நாகலிங்கத்தின் சாயம் வெளுத்துவிட்டது...

இவ்ளோ கொடுமையான ஒரு காரியத்தையா வினோத் பண்ணிட்டான்...

அனு போயும் போயும் நியூஸ் பார்த்துட்டு கார்த்திக் அண்ட் அவங்க ப்ரண்ட்ஸ் இப்படி பண்ணிடுவாங்கனு பயப்படலாமா. இது கார்த்திக்கு தெருஞ்சா அவனோட ரியாக்சன் என்னவா இருக்கும்

கவி பாவம். ரொம்ப பயந்துட்டா..
ஆமா அனுவோட பயம் நியாயமற்றது தான் ஆனா கவியோட பயம் கொடுமையானது பாவம்ல😔😔😔
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
எவ்ளோ கொடூரமானவன் இந்த வினோத். சை... காதல்ங்கிற பேர்ல இவனுங்க பண்ணுற இம்சைக்கு ஒத்துக்கலனா வன்புணர்வு ஆசிட் வீச்சு தான் போல... இதுல அவங்கப்பாவுக்கு முதலமைச்சர் ஆசை வேற😏😏😏 கவி அண்ட் கவியோட லவ் என்னாகுமோ? அனுவோட பயத்த நினைச்சா சிரிப்பு வந்தாலும் அவளுக்கு கார்த்திக் பத்தி தெரியாதுல்ல
 

Nancy mary

✍️
Writer
எவ்ளோ கொடூரமானவன் இந்த வினோத். சை... காதல்ங்கிற பேர்ல இவனுங்க பண்ணுற இம்சைக்கு ஒத்துக்கலனா வன்புணர்வு ஆசிட் வீச்சு தான் போல... இதுல அவங்கப்பாவுக்கு முதலமைச்சர் ஆசை வேற😏😏😏 கவி அண்ட் கவியோட லவ் என்னாகுமோ? அனுவோட பயத்த நினைச்சா சிரிப்பு வந்தாலும் அவளுக்கு கார்த்திக் பத்தி தெரியாதுல்ல
சரியா சொல்லிட்டீங்க சகி👏👏👏
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom