• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 4

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் - 4❤

அனுபிரியா அவளின் வகுப்பில் தன் குறும்புதனத்தாலயே பல தோழிகளின் நட்பிற்கு சொந்தகாரியானாள்; அவள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் வாங்கியதன் பயனாகவும் பலபேர் அவளிடம் நட்பு பாராட்ட ஆசை கொண்டனர்.

இப்பள்ளியில் அவளிற்கு எல்லாமே பழக்கமாகிவிட, அவளிற்கு வேண்டிய உதவிகளையும் கார்த்திக் சிறப்பாக செய்து தந்தான்;
அதன்மூலம் இருவருக்குமிடையே ஒரு அழகிய நட்புறவு மலர்ந்தது.

இவ்வாறே இவள் பள்ளியில் சேர்ந்து ஒரு வாரமாகிய நிலையில் அன்று பள்ளிக்கு தாமதமாய் கிளம்பியதால் சாப்பிடாமலே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டாள்.

தாயின் பேச்சை நிராகரித்து உணவை மறுத்து சென்றவளால் வெளியூரிலிருந்து பேசிய தந்தையின் பேச்சினை நிராகரிக்க முடியவில்லை;
அதனின் பயனாக ஸகூல் கேண்டினில் சாப்பிட சென்றவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அனுபிரியா கேண்டினிற்குள் நுழைந்து அவள் சாப்பிட தோசையை வாங்கியபின் ஒரு டேபிளில் அமர்ந்து அதை போட்டோ எடுத்து கொண்டிருந்தாள்.

அவள் இவ்வாறு செய்து கொண்டிருக்க அவளிற்கு பின்னால் இன்னொரு டேபிளில் கார்த்திக்கின் நண்பர்கள் அமர்ந்து அரட்டையடித்தபடியே சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

"டேய் சங்கரு இது உனக்கே நியாயமா இருக்கா மூணு தோசை, நாளு இட்லி, இது பத்தாதுனு பூரி வடைனு எல்லாத்தையும் உள்ள தள்ளிட்டு இப்போ பொங்கலுக்கு ஆடர் குடுக்குறீயே டா;
மகாபாரத பீமனுக்கே தம்பியா இருப்ப போலயே;
இந்த கேண்டின்காரங்க போடுற மொக்கை சாப்பாட்டுக்காக கேண்டினுக்கு பூட்டு போடுறோமோ இல்லையோ;
இதையும் ஒரு சாப்பாடா நினைச்சு கொட்டிக்கிற உன்னோட வாய்க்கு பெரிய சைஸ் திண்டுக்கல் பூட்டா போட்டு பூட்டணும் டா" என விக்னேஷ் பல்லை கடித்து கொண்டு கத்தி கொண்டிருக்க,

அவனின் கத்தலை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாதவன்;
கடைசியாக கேசரிக்கு ஆடர் குடுத்துவிட்டு பொங்கலை சுவைக்க துவங்கினான்.

இவனின் செயலை பார்த்து தலையில் அடித்து கொண்ட விக்னேஷை அழைத்த தினேஷோ ரவியை நோக்கி கைகாட்ட,

அவனோ ஒரு கூல்டீரிங்ஸை ரசித்து ருசித்து குடித்து கொண்டிருந்தான்.

அதை பார்த்த விக்னேஷ் சங்கரிடம், "இங்க பாருடா என்னோட தளபதியை கேண்டினுக்கு வந்ததுல இருந்து அவனுக்கு வாங்குன சமோசாவை கூட தொடாம ஒரு கூல்டீரிங்ஸை மட்டுமே ஒருமணிநேரமா குடிச்சிட்டு இருக்கான்;
இவனை மாதிரி இருக்க கத்துக்கோ இப்படி நிமிசத்துக்கு நிமிசம் அரைச்சுகிட்டே இருக்காத" என ரவியை பற்றி பெருமையாய் கூற அதனை கேட்ட தினேஷ் தலையில் அடித்து கொள்ள, சங்கரோ அவனை பார்த்து நக்கலாய் சிரித்தான்.

உடனே தினேஷோ, "டேய் பக்கி அவன் சாப்பிடுறதை காட்டல டா, சாப்பிட்டுட்டே சைட் அடிச்சிட்டு இருக்கான் அதைதான் உனக்கு காட்டுனேன் அங்கபாரு" என கைகாட்ட,

அப்பொழுது தான் விக்னேஷ் ரவியை தெளிவாய் கவனித்தான்

தன் கூல்டீரிங்ஸை குடித்துகொண்டே எதிரே இருந்த மாணவியை பார்த்து கண்ணடிக்க அவளோ வெட்கபட்டு தலையை தாழ்த்தி கொண்டாள்; அதேநேரம் அவனுக்கு பக்கத்து டேபிளில் இருந்த மாணவியோ ரவியை பார்த்து சைட்டடிக்க அவளை பார்த்து கேள்வியாய் புருவம் உயர்த்தியவன் பின்பு அவளையும் பார்த்து கண்ணடித்தாள்.

இவனின் காதல் லீலைகளை பார்த்து காண்டான விக்னேஷோ,

"அடப்பாவி உனக்காக நான் இவன் கூட சண்டை போட்டா, நீ ஜாலியா சைட்டடிச்சிட்டு இருக்கீயா மவனே நீ காலிடா" என சமோசாவை தூக்கி கொண்டு சண்டைக்கு போக அவனை தடுக்கும் வேலையை தினேஷ் பார்க்க சங்கரோ அடுத்து வந்த கேசரியை ஒருகை பார்த்து கொண்டிருந்தான்.

இவ்வாறு ஒருபுறம் நட்பு பட்டாளம் கூத்தடிக்க மறுபுறம் அனுபிரியா தோசை ஆறுவதற்குள் அதை நல்ல புகைப்படமாய் எடுத்து முடித்தாள்.

"ஹப்பாடி ஒருவழியா போட்டோ எடுத்தாச்சு; இப்போ இந்த போட்டோவை மம்மிக்கு அனுப்பிடலாம், இல்லனா நம்ம சொன்னமாதிரி சாப்பிடலனு அதுக்கும் அப்பாகிட்ட கம்பிளைண்ட் குடுத்திடும்" என கூறிகொண்டே போட்டோவை அம்மாவிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு தோசையில் கைவைக்க செல்ல உடனே அவளின் கைப்பேசிக்கு அவள் அம்மாவிடமிருந்து வீடியோ கால் அழைப்பு வந்தது.

அதனை அட்டண்ட் செய்து திரையில் தெரிந்த அம்மாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"ஹாய் மம்மி, என்ன இப்போ கால் பண்ணிருக்க;
அதான் நீ சந்தேகபடகூடாதுனு போட்டோ அனுப்பிட்டேனே, அப்புறமும் எதுக்கு போன் பண்ணிருக்க" என கேட்க அவளின் பேச்சை கேட்ட ஜெயாவோ,

"நீ பாட்டுக்கு கேண்டின் போய் யாரோ சாப்பிட வைச்ச தோசையை போட்டோ எடுத்து அனுப்பிட்டு சாப்பிடாம போயிட்டா என்ன பண்ணுறதாம்;
உன்னைய எல்லாம் நம்ம முடியாது ஒழுங்கா வீடியோ கால்ல நீ சாப்பிடுறதை எனக்கு காட்டிட்டே சாப்பிடு, ஆமா எத்தனை தோசை வாங்கிருக்க ஒன்னு உனக்கு பத்துமாடி அதுவும் இவ்ளோ சின்னதா வாங்கிருக்க இன்னும் இரண்டு வாங்கிகலாம்ல" என போனிலேயே மகளை திட்ட அதனை கேட்டு கடுப்பானவளோ,

"ஏது, இது உனக்கு சின்ன தோசையா நீ பிச்சுபோட்டு சுட்டு தர தோசைக்கு இது எவ்ளோவோ பரவால்ல; ஆனா இவ்ளோ பெரிய தோசையை சின்ன தோசைனு சொன்ன பாரேன் அதைதான் என்னால தாங்கிக்க முடியல" என நொந்து கொண்டவளை பார்த்து சிறிதும் அலட்டிகொள்ளாமல்,

"சரி வழ வழனு பேசாம சீக்கிரம் சாப்பிடுற வழியை பாரு அப்புறம் இங்கயும் லேட்டாச்சுனு சாப்பிடாம ஓடிடுவ" என பேசிகொண்டே போக அவரின் பேச்சில் கடுப்பாகியவளோ தாயை முறைத்து கொண்டே தோசையை சாப்பிட துவங்கினாள்.

ஒருவழியாக தன்
தாயின் கண்காணிப்பில் தோசையை சாப்பிட்டு முடித்தவள் கைபேசியிலிருக்கும் அன்னையை பார்த்து,

"இப்போ சந்தோஷமா தோசையை சாப்பிட்டாச்சு இனி அப்பாகிட்ட கம்பிளைண்ட் குடுத்த அவ்ளோதான்" என தாயை மிரட்ட அதனை கண்டு அஞ்சாதவரோ,

"நீ உங்கப்பாகிட்ட கம்பிளைண்ட் குடுக்கிறது இருக்கட்டும்;
இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருக்கிறவங்க யாராவது பிரிண்ஸிபல்கிட்ட கம்பிளைண்ட் தந்திடுவாங்க போலயே" என கேட்க தாயின் கேள்வியில் புரியாது விழித்தவளோ,

"என்னமா உளறுற" என வினவ அதற்கு ஜெயாவோ பின்னால் பார்க்குமாறு கண்ணை காமித்தார்.

அங்கே தான் நம் கார்த்திக்கின் நட்பு பட்டாளம் அடிதடியில் இறங்கியிருந்ததே அதைபார்த்து சிரித்த அனுவோ அம்மாவிடம்,

"மம்மி அவங்க எல்லாருமே பிரண்ட்ஸ் சும்மா ஜாலியா சண்டை போடுறாங்க" என கூற

"என்னமோ போ இப்படி சண்டை நடக்குற இடத்துல நீ இருக்காத; அப்புறம் உனக்கு தான் பிரச்சனையாகும் சரி அது இருக்கட்டும் அதென்ன மம்மினு கூப்பிடுற அழகா அம்மானு கூப்பிட்டா என்னவாம்" என கூறி முறைக்க அதற்கு அனுவோ,

"பாசமா செல்லம் கொஞ்சி பார்த்துக்கிற அம்மாவை அம்மானு கூப்பிடலாம்; ஆனா உன்னைய மாதிரி டார்சர் பண்ற அம்மாவை மம்மினு தான் கூப்பிடணும் அதான் சரியா இருக்கும்" என கூறி நாக்கை துறுத்தி அழகு காட்டியவளை பார்த்து ஜெயா ஏதோ கூற வர அதற்குள் வீடியோ காலை கட் செய்து விட்டாள்.

இங்கோ நட்பு கூட்டம் சண்டையிட்டு ஓய்ந்து போய் அமர்ந்திருக்க கேசரியை சாப்பிட்டு ஏப்பம் விட்ட சங்கரோ,

"மச்சி என்னடா இன்னும் கார்த்திக்கை காணோம் நம்மல கேண்டினுக்கு அனுப்பிட்டு டீச்சரை பார்க்க ஸடோப் ரூமுக்கு போனவன் இன்னுமா வரல" என இவ்வளவு நேரம் சாப்பாட்டின் ருசியில் தனி உலகில் இருந்தவன்;
இப்போதே நடப்பிற்கு வந்து இக்கேள்வியினை கேட்டான்.

அவனின் கேள்விக்கு பதிலளித்த தினேஷோ,
"ஏண்டா அவனைபத்தி தெரிஞ்சும் இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா,
மிஸ்கிட்ட டவுட் கேட்க போனா மணிகணக்கா டவுட்டை கேட்டு டீச்சரையே டார்சர் பண்ணிட்டு தான் வருவான்; இது தெரிஞ்சும் இப்படி கேட்கலாமா" என கிண்டல் பண்ண அதனை கேட்டு சிரித்த நண்பர்களை பார்த்த ரவியோ,

"தினேஷா கார்த்தியோட டவுட் இருக்கட்டும் இப்போ எனக்கு ஒரு டவுட்டு வந்திருச்சு டா" என கேட்க,

அதற்கு தினேஷோ, "உனக்கு டவுட்டா, இதன்ன உலக அதிசயமா இருக்கு சரி உன்னோட டவுட்டு சிலபஸ்ல இருந்ததுனா இந்தா நம்ம விக்கிகிட்ட கேளு என்கிட்டலாம் கேட்காத எனக்கும் படிப்பும் ஆகவே ஆகாது பார்த்துக்கோ" என கூற அதனை கேட்டு அவனை முறைத்தவனோ,

"டேய் லூசுபயலே டவுட்டு பாடத்தை பத்தி இல்லை டா நம்ம கார்த்திக்கை பத்தி தான்" என கத்தி சொல்ல கிளாஸிற்கு கிளம்ப சென்ற அனுவோ இவர்களின் பேச்சை கேட்டு அப்படியே அமர்ந்து விட்டாள்; இவள் அவர்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பதால் அங்கே அமர்ந்திருப்பது அனு என்று தெரியாமல் இவர்களும் தங்களின் பேச்சை தொடர்ந்தனர்.

ரவியின் பேச்சை கேட்ட சங்கரோ, "அவனை பத்தி உனக்கென்னடா டவுட்டு வருது" என கேட்க அதற்கு ரவியோ,

"அது ஒண்ணும் இல்லை மச்சி எனகென்னமோ நம்ம கார்த்திக் அனுவை காதலிக்குறானோனு தோணுது டா; நீங்களே பார்த்தீங்கல யாருக்குமே அவன் இந்தளவுக்கு ஓடி ஓடி உதவ மாட்டான் ஆனா இவளுக்கு மட்டும் இவ்ளோ உதவி செய்றான், எல்லாருக்குமே உதவுறவன் தான் ஆனா அதுல ஒரு லிமிட் இருக்கும்டா;
ஆனா அனுவுக்கு மட்டும் அப்படி எந்த ஒரு லிமிட்டும் வைக்க மாட்றான் அதுமட்டும் இல்லாம அவகூட பேசும்போது அவன் ரொம்பவே சந்தோஷமா இருக்கான்; இதையெல்லாம் வைச்சு பார்த்தா எனகென்னமா அவன் அனுவை விரும்புறானோனு தோணுது" என கூறி முடிக்க மற்ற நண்பர்களும் "நீ சொல்றதும் சரிதாண்டா" என கூறி அவனின் பேச்சை ஆமோதித்தனர்.

ஆனால் இவர்களின் பேச்சினை கேட்டு கொண்டிருந்த அனுவின் தலையில் தான் யாரோ இடியை இறக்கியது போலானது.

'காதல்' என்ற வார்த்தையே பிடிக்காமல் தானே ஆண் சமூகத்தினை விட்டே விலகி ஓடி கொண்டிருக்கிறாள்

இப்பொழுது சிறிதுநாட்களாக தான் அந்த கட்டமைப்புகளை எல்லாம் தாண்டி கார்த்திக்கிடம் சகஜமாக பழகினாள்; ஆனால் இப்படி ஒரு பேச்சை கேட்டபிறகு இவளின் மனமோ வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மாறியது.

கார்த்திக்கின் செயலால் மாறிய மனம் அவன் நண்பர்களின் பேச்சினால் மறுபடியும் மாறியது;
இப்படி ஒரு விஷயம் தெரிந்தபிறகு இனி கார்த்திக்கை விட்டும் விலகியிருக்க வேணடுமென முடிவெடுத்தாள்.

இதே முடிவோடு அவர்களின் கண்ணில்படாமல் கேண்டினை விட்டு வகுப்பிற்கு சென்றவள்; அன்றைய நாள் முழுவதும் சோகமே உருவாய் சுற்றி கொண்டிருந்தாள்.

அவளின் நிலையை பார்த்து கேள்வி கேட்ட தோழிகளிடமும் வாய்க்கு வந்த பதிலை சொல்லி கொண்டு மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்ல,
அங்கே இவளை மொத்தமாய் நிலைகுலைய வைக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருத்தது.




காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
இங்கேயும் அதிர்ச்சியா.
வீட்டில என்ன நடந்தது.
 

Nancy mary

✍️
Writer
இங்கேயும் அதிர்ச்சியா.
வீட்டில என்ன நடந்தது.
ஆமா சகி அது என்னனு காத்திருந்து தெரிஞ்சிக்கோங்க🤗

ரொம்ப நன்றி சகி😍😍😍😍❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
அடடா அனுப்பிள்ளையை குழப்பி விட்டுடீங்களே டே.. கேண்டீன் வந்தா சாப்பிடறீங்களோ இல்லையோ இத நல்ல பண்றீங்க டா..
அடுத்து அனுவுக்கு என்ன அதிர்ச்சி...
 

Nancy mary

✍️
Writer
அடடா அனுப்பிள்ளையை குழப்பி விட்டுடீங்களே டே.. கேண்டீன் வந்தா சாப்பிடறீங்களோ இல்லையோ இத நல்ல பண்றீங்க டா..
அடுத்து அனுவுக்கு என்ன அதிர்ச்சி...
அதானே சாப்பிடுறதை விட்டுட்டு ஆப்பு வைச்சிட்டாங்களே😂😂😂
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
அதானே சாப்பிடுறதை விட்டுட்டு ஆப்பு வைச்சிட்டாங்களே😂😂😂
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
கார்த்திக் சும்மா விடல பாருங்க... ஒரே பாலை சிக்சரா மாத்திட்டான்...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom