• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 3

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் - 3❤

இங்கு பள்ளியில் அனுவோ,
அக்குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சி வழியனுப்பிய பிறகு, தனது வகுப்பினை நோக்கி செல்வதற்காக அங்கிருந்த கார்த்திக்கின் குருப்பை கடந்து இரண்டடி எடுத்து வைத்தாள்.

அதேநேரம், அவள் செல்வதையும் கார்த்திக் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதையும் கவனித்த ரவியோ அனுவை நோக்கி,
"ஹலோ மேடம், இங்க சீனியர்ஸ் நாங்க உட்கார்த்திட்டு இருக்கிறது உன்னோட கண்ணுக்கு தெரியலையா நீ பாட்டுக்கு பார்க்காத மாதிரி போற ஒழுங்கா எங்களுக்கு விஷ் பண்ணிட்டு போ" என சொல்ல,

ரவியின் குரலிலே திரும்பி அக்கூட்டத்தினை பார்த்தவள்;
சிறிது தயங்கிய பின்னர் தைரியத்தை வரவழைத்து கொண்டு, "குட் மார்னிங் அண்ணா" என்று கூற அவளின் பேச்சை கேட்ட அந்த குருப்பிலிருந்த நண்பர்கள் அனைவரும் "எது அண்ணாவா" என கத்தியபடி மிரண்டு பார்க்க கார்த்திக் மட்டும் புருவ முடிச்சுடன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.

உடனே அனுவோ, "ஆமா அண்ணா தான், ஏன் நான் உங்களை அப்படி கூப்பிட கூடாதா" என கேட்க உடனே ரவியோ மனதிற்குள்,

'சரி, எப்படி இருந்தாலும் நண்பனின் காதலி நமக்கு தங்கச்சி தான அதுனால அண்ணானு கூப்பிடுறதுல தப்பே இல்ல' என எண்ணி தன் மனதினை தேற்றி கொண்டு,

"நீ சொல்றதும் சரிதாண்மா நீ என்னைய அண்ணானே கூப்பிடு" என கூற அதற்கு அவளோ மகிழ்ச்சியாய் சரி என்று தலையசைத்தவள் உடனே,

"சரியண்ணா அப்போ நான் உங்க ஐஞ்சு பேரையுமே அண்ணானு கூப்பிடுறேன்" என்றுரைக்க அவளின் கூற்றில் அதிர்த்து அனைவரும் ஒன்றுபோல் "இல்லஅஅஅஅஅஅஅ" என கத்த அவர்களின் கத்தலில் பயந்து முழித்தவளை கண்டு முதலில் சுதாரித்து கொண்ட தினேஷோ,

"இங்க பாருமா நீ இங்க எல்லாரையும் அண்ணானு கூப்பிடகூடாது அது இங்க சில பேருக்கு நல்லதில்லை மா" என மறைமுகமாய் கார்த்திக்கை நினைத்து கூற உடனே கார்த்திக் அனுவிடம்,

"நீ எங்களை கூப்பிடுறது இருக்கட்டும், முதல்ல நாங்க உன்னைய என்னனு சொல்லி கூப்பிட உன் பேர் என்ன" என அவளின் பெயரை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்க,

அதற்கு அவளோ "என் பேர் அனுபிரியா அ...." என பேசியவளின் பேச்சு கார்த்திக்கின் திடீர் கத்தலால் பாதியிலேயே தடைபட்டு போனது.

"ஸடாப் இட் அனு, ஜஸ்ட் ஸடாப் இட் ஐ சே" என கார்த்திக் கத்த அவனின் கத்தலை கேட்ட அனுவோ,

'இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கத்துறான் சரியான காட்டானா இருப்பானோ' என எண்ணி குழம்பி நிற்க,

கார்த்திக்கோ "இப்போ நீ என் பிரண்ட் ரவியை கூப்பிட்ட மாதிரி என்னையும் அண்ணானு கூப்பிட நினைச்ச கரெட்டா, அப்படி ஒரு நினைப்பு உன் மனசுல இருந்துச்சுனா அதை இப்போவே அழிச்சிடு" என கோபமாய் பேச

அதனை கேட்ட அனுவிற்கு பயங்கரமாய் கோபம் வர, அவளும் அவள் பங்கிற்கு கோபமாய் கத்த துவங்கினாள்.

"ஹலோ மிஸ்டர், என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க ஹான்;
நான் என்ன பண்ணனும் பண்ணகூடாதுனு நீங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நான் யாரை வேணாலும் அண்ணானு கூப்பிடுவேன் அது என்னோட தனிபட்ட விருப்பம்; அதைபத்தி நீ கேள்வி கேட்ககூடாது புரிஞ்சதா" என அவனிடம் விரல் நீட்டி பேச,

அதனை கேட்ட கார்த்திக்கோ அவன் உட்கார்ந்த இடத்திலிருந்து இறங்கி அவளின் பக்கம் வந்து,

"இங்க பாரு, நீ அண்ணானு கூப்பிடுறதுல எந்த பிரச்சனையும் இல்லை; ஆனா அதை நீ பாசமா தான் கூப்பிடுறீயா இல்ல, ஏதோ ஒரு சேப்டிக்காக கூப்பிடுறீயானு தான் பிரச்சனையே அதுக்கு மட்டும் நீ விளக்கம் குடுத்திட்டு யாரை வேணாலும் அண்ணானு கூப்பிட்டுக்கோ, எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல" என கூறி தன் தோள்களை குலுக்கியவன் கைகளை கட்டி கொண்டு அவளை பார்க்க,

அவனின் கேள்வியில் உறைந்தவளோ,
'ஆத்தி நம்மலோட டீரிக் எப்படி இவங்களுக்கு தெரிஞ்சது, கரெட்டா சொல்லுறாங்களே, சரி சமாளிப்போம்' என நினைத்து கொண்டு அவனை பார்த்தவள் "நான் யாரை அண்ணானு கூப்பிட்டாலும் பாசமா தான் கூப்பிடுவேன்" என அழுத்தமாக கூற அவளின் பதிலில் கேலியாய் சிரித்தவனோ

"ஓ அப்படியா மேடம், அப்பிடினா உனக்கு ஒருத்தனை பார்த்ததுமே பாசம் வந்திடுமா, இந்தா இப்போ கொஞ்சநேரத்துக்கு முன்னாடி தான் என் பிரண்ட் ரவியை அண்ணானு கூப்பிட்ட அதெல்லாம் பாசத்தாலயா கூப்பிட்ட" என கேட்க அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என திணறி முழித்தவளின் கண்முன் சொடுக்கிட்டவன்,

"என்ன மேடம் அமைதியாகிட்டீங்க சொல்லுங்க, நீ இவனை பாசமா கூப்பிடலனு எனக்கு நல்லாவே தெரியும்; எப்படினு யோசிக்குறீயா இவனை நீ அண்ணானு கூப்பிட்டப்போ உன் கண்ணுல பயமும் மிரட்சியும் தான் தெரிஞ்சது, அதுல அன்பு சுத்தமா தெரியல அன்பில்லாம வெறும் பெயரளவுல கூப்பிடுற உறவுமுறைகளுக்கு அர்த்தமே இல்ல; அதுனால நீ ஏதோ ஒரு தற்காப்புக்காக தான் இப்படி கூப்பிடுறனு நல்லாவே தெரியுது, ஒருவேளை நீ வயசுக்கு மரியாதை தரணும்னு நினைச்சேனா 'சீனியர்' அப்படினு கூப்பிட்டா போதும் அது உறவுமுறையா வராம மரியாதை குடுக்கிற மாதிரி தான் வரும் ஓகே வா" என பாடமெடுக்க அவனின் பேச்சில் தெளிந்தவளோ, சரி என்று தலையசைக்க இவனின் விளக்கத்தையும் அவளின் செயலையும் பார்த்த நண்பர்கள் கூட்டம் மகிழ்ந்தனர்.

மேலும் கார்த்திக் "உன்னோட மனசுக்குள்ள இருக்கிற உண்மையை கொண்டு வர தான் இப்படி பேசுனேன் இதை நீ தப்பா எடுத்துக்காத, அப்புறம் நீ இந்த ஸ்கூலுக்கு புதுசுல அதுனால உனக்கு என்ன உதவி தேவைபட்டாலும் இந்த சினியர்கிட்ட நீ தயங்காம கேட்கலாம்; ஒரு பிரண்ட் மாதிரி நான் உனக்கு எப்பயுமே துணையா நிற்பேன் ஓகே வா ஜீனியர்" என கேட்டு கை நீட்ட,

தன் மனதினை புரிந்து பேசிய கார்த்திக்கின் பேச்சில், இவனை போன்ற நல்லவர்களும் ஆண்களின் மத்தியில் உண்டென சிறு நம்பிக்கை மொட்டு அவளின் மனதினில் பூக்க அதன் பிரதிபலிப்பாக அவளும் அவனின் பேச்சிற்கு சம்மதமாய் தலையாட்டி
சிரித்து கொண்டே அவனுடன் கைகுழுக்கி கொண்டாள்.

"ஓகே சீனியர், எனக்கு எந்த உதவி தேவைபட்டாலும் உங்ககிட்ட தயங்காம கேட்குறேன், நீங்கதான் ஒரு பிரண்ட்டா எனக்கு துணை நிற்கணும்" என்றுரைக்க அவளின் அழைப்பில் அகம் மகிழ்ந்து போனவன் அவளின் கூற்றில் புன்னகை பூத்தான்.

அப்பொழுது காலை பிரேயருக்காக மாணவர்கள் விரைய இவளும் தன் வகுப்பினை தேட வேண்டுமே என ஓட அப்போது அவளை அழைத்த கார்த்திக்,

"ஓய் ஜீனியர் உன்னோட கிளாஸ் அந்தபக்கம் இருக்கு பாரு; பி பிளாக்ல கிரவுண்ட் புளோர்ல இரண்டாவது கிளாஸ் அதான் உன்னோட கிளாஸ் பத்திரமா போ" என கூறி வழியனுப்பி வைக்க,

அவன் உதவியாய் இருப்பேன் என வாக்களித்தபடியே இப்பொழுது நடந்து கொள்வதை கண்டு சந்தோஷபட்டவளோ,

"தேங்க்ஸ் சீனியர்" என கூறி கிளாஸிற்கு ஓட செல்லும் அவளையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு இவனும் நண்பர்களுடன் அங்கிருந்து சென்றான்.

அண்ணனாய் ஆரம்பிக்க வேண்டிய உறவு, கார்த்திக்கின் செயலால் சீனியராய் ஆரம்பித்தது;
இனி இந்த துவக்கம் அழகிய காதலாய் மலருமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

💘💘💘💘💘💘💘💘

தன் பிரம்மாண்டதிற்கு சிறிதும் குறைவில்லாது கம்பீரமாய் காட்சியளித்த அந்த மாளிகையின் முன், மக்கள் கூட்டம் கூட்டமாய் அலைமோதியபடி யாருக்காகவோ, வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்.

இந்த மாளிகையின் வெளிபுற சூழல் இவ்வாறிருக்க, அதனின் உட்புறம் கலைநயத்திற்கு சிறிதும் குறையில்லாது அழகாக கட்டிடக்கலை வடிவமைப்புடன் இருக்க, அவற்றையெல்லாம் நிதானமாய் ரசிக்க முடியாதபடி அவ்வீடே மரண ஓலத்தால் நிரம்பியது.

"அய்யோ...!!
அம்மாஆஆஆஆ...!!
வலிக்குதே ஐயா
என்னைய அடிக்காதீங்கங்கய்யா..!!
நான் ஒண்ணும் இதை தெரிஞ்சே பண்ணலயா என்னோட சூழ்நிலை அப்படி புரிஞ்சுக்கோங்கய்யா
ஆஆஆ..." என சாட்டையால் அடித்து கொண்டிருக்கும் தன் முதலாளியிடம் தன்னிலையை விளக்க முயல அதற்கு அவரோ,

"என்னடா பொல்லாத சூழ்நிலை என்கிட்ட கைகட்டி சம்பளம் வாங்குற பிச்சைகார நாய் நீ, எனக்கு எதிரா போலிஸ்ல கம்பிளைண்ட் பண்ணுவீயா உனக்கு எவ்ளோ தைரியமிருக்கணும்; உன்னைய எல்லாம் சும்மாவே விடக்கூடாது டா, இந்த சாட்டையாலயே அடிச்சே உன்னைய சாவடிக்கிறேனா இல்லையானு பாரு " என கூறி பலமாய் அடித்து துவைத்தெடுக்க அடிவாங்குபவரோ,

"ஆஆஆஆ அம்மா ஐயா என்னோட பொண்ணை காப்பாத்தணும்ற தவிப்புல தான்ய்யா அப்படி பண்ணிட்டேன் என்னைய விட்டுருங்கய்யா ஆஆஆ அம்மா.." என உயிர் போகும் வலியில் துடிப்பது போல் துடித்தார்.

தன் கை வலிக்கும்வரை அடித்து நொறுக்கியவர் சோர்ந்து போய் சாட்டையை தூக்கி ஓரமாய் வீசிவிட்டு தன் அடியாளை நோக்கி சப்தமிட்டார்.

"டேய் காளி" என ஆக்ரோஷமாய் கத்த அவனோ,

"சொல்லுங்கய்யா என்னய்யா பண்ணனும்" என பவ்யமாய் வந்து நின்றான்.

உடனே தன் மற்ற அடியாட்கள் புறம் திரும்பியவர் "டேய், நீங்க எல்லாம் என்ன பண்ணுறீங்கனா நம்ம ரைகர் இருக்குற கூண்டுக்குள்ள இவனை தூக்கி போட்டிருங்க இவன் எவ்ளோ கத்துனாலும் கதறுனாலும் கதவை திறக்ககூடாது; அந்த நாய்க்கிட்ட கடிவாங்குனா தான் இந்த பிச்சைகார நாய்க்கு புத்தி வரும்; அப்புறமும் இவன் உயிரோட இருந்தானா இவனை கண்ட துண்டமா வெட்டி யாருக்குமே தெரியாம புதைச்சிருங்க" என பேசிகொண்டே சென்றவரையே மிரட்டுயோடு பார்த்த அடியாட்களை நோக்கி,

"என்னடா, என்னோட மூஞ்சியை பார்த்துட்டு இருக்கீங்க, தூக்கிட்டு போங்கடா இவனை" என கோபமாய் கர்ஜிக்க அவரின் கோபத்தினை கண்டு மிரண்ட அடியாட்களோ அடிவாங்கியவனை தரதரவென இழுத்து கொண்டு செல்ல அதைகூட உணர முடியா நிலையில் அடிவாங்கியவரோ மூர்ச்சையாகி வீழ்ந்திருந்தார் அவர்கள் சென்றதும் காளியின் புறம் திரும்பி,

"காளி இவனோட சேர்ந்து இன்னொருதனும் கம்பிளைண்ட் குடுத்தானே, அவனை கண்டுபிடிச்சாச்சா" என கேட்க

"அவனை இன்னும் தேடிட்டு இருக்கோம்ய்யா கூடிய சீக்கிரமே அவனை கண்டுபிடிச்சு உங்க காலடியில போடுறோம்; அவனுக்கு இதைவிட பெரிய தண்டனை குடுங்க ஏன்னா, இவனை தூண்டிவிட்டு இப்படி ஒரு வேலை செய்ய வைச்சவனே அவன்தானே" என கோபமாய் மொழிய,

"ஆமா டா, அவனை சும்மாவே விடக்கூடாது என்கூடவே இருந்துட்டு எனகெதிரா சதி செஞ்சி; என்னோட முதலமைச்சர் கனவுலயே மண்ணள்ளி போடுற மாதிரி இவனை, அவனோட பொண்ணை வைச்சு மிரட்டி எனகெதிராவே கம்பிளைண்ட் குடுக்க தூண்டிவிட்டு எல்லாத்துக்குமே மூலகாரணமா இருந்தது அவன்தான் அப்படிபட்ட அவனை சும்மாவே விடக்கூடாது டா" என சினத்தில் உச்சியில் கத்தினார்.

அப்பொழுது காளி, "நீங்க கவலைபடாதீங்கய்யா அவனை சீக்கிரமாவே கண்டுபிடிச்சிடலாம், ஆனா எனக்கொரு சந்தேகம் ஐயா கேட்கலாமா" என கேட்க அவரும் சம்மதமாய் தலையசைத்தார்.

"அது வந்துங்கய்யா இப்போ நீங்க அடிச்சவன் மேல தான் தப்பே இல்லையே; ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால தானே தப்பு பண்ணான், அவனை சும்மா இரண்டு அடி அடிச்சிட்டு விடாம எதுக்குய்யா அவனோட உயிரை எடுக்குற அளவுக்கு போனீங்க" என கேட்க
அவனின் கேள்வியில் ஆணவமாய் சிரித்தவரோ,

"அது ஒண்ணும் இல்லடா, இன்னைக்கு சந்தர்ப்ப சூழ்நிலையால தப்பு பண்ணவன் நாளைக்கு அதே சூழ்நிலையால என் உயிரையே பறிக்க துணிய மாட்டானு என்ன நிச்சயம்;
எனக்கு அடியாளா இருந்தா எனக்கு மட்டும் தான் விசுவாசமா இருக்கணும்; இப்படிபட்ட சந்தர்ப்ப சூழ்நிலையால கூட மாறகூடாது இனி யாராவது அப்படி மாறணும்னு நினைச்சாலும் இவனோட முடிவு அவங்களுக்கு ஒரு பாடமா இருக்கணும்; அதான் எல்லார் முன்னாடியும் இப்படிபட்ட தண்டனை தந்தேன் இனி யாராவது என்னைய எதிர்த்து நிப்பாங்களா" என கேட்டு காளியை பார்க்க அவனோ இவரின் விளக்கத்தை கேட்டு ஆடி போனவன் இல்லையென்று தலையசைக்க அதனை கேட்டு வில்லத்தனமாய் புன்னகைத்தார் அமைச்சர் நாகலிங்கம்.

அப்போது நாகலிங்கத்தினை அழைக்க அவரின் உயிர் தோழனும் அவருக்கு கீழ் பணியாற்றுபவருமான மருதநாயகம் வந்தார்.

"லிங்கா உன்னைய பார்க்க நம்ம கட்சி தொண்டர்கள் எல்லாரும் வெளில காத்திருக்காங்க டா; நீ ஒரு தடவை வெளில வந்து அவங்களுக்கு உன்னோட தரிசனத்தை தந்துட்டு போ" என கூற "ஓ அப்படியா, சரி வா போகலாம்" என கூறி அவரோடு சென்றார் நாகலிங்கம்.

தன் நெஞ்சில் துளியளவும் இரக்கமில்லா கொடூரனான இவரே,
"அமைச்சர் நாகலிங்கம்"
கட்சியில் அமைச்சராய் இருந்த தன் தந்தையின் சிபாரிசின் பேரில் அரசியலில் இறங்கியவரோ, காலபோக்கில் பல கெட்ட வழிகளில் பயணித்து தன் தந்தை சம்பாதித்து வைத்த ஒட்டுமொத்த நற்பெயருக்கும் களங்கம் விளைவித்தார்; அதனை தட்டி கேட்ட தந்தையின் மீதும் பொய்யான பழியினை சுமத்திட நியாயவானான அவரோ அப்பழியை தாங்கி கொள்ள இயலாது தற்கொலை செய்து கொண்டார்; அதன்பிறகு இவர் வாழ்வில் செய்யாத குற்றங்கள் இல்லை ஒருபுறம் தன் வாழ்வில் ஊழல், கட்டபஞ்சாயத்து என பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தினாலும் மற்றொருபுறம் மக்களிடம் நடித்து நற்பெயர் வாங்கிடவும் தவறுவதில்லை; இப்படிபட்ட கொடூரனான இவரின் அடுத்த இலக்கு முதலமைச்சராய் உயர வேண்டும் என்பதேயாகும்;
அதற்கான முயற்சியாய் தன்னை கட்சியில் இணைத்து கொண்ட முதலமைச்சர் வேங்கடசாமிக்கே அவபழியை சுமத்தி பணபலத்தாலயும் மிரட்டலாலயும் கட்சியை சேர்ந்த அனைவரையும் தன்பக்கம் இவர் இழுத்து கொள்ள அவருக்காக துணையாய் நிற்க போகும் கூட்டமே இப்பொழுது இவரை காண வந்துள்ளது;
இவரின் சூழ்ச்சிக்கான பலன் கிடைக்குமா முதலமைச்சர் கனவு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

மருதநாயகத்துடன் தன் வீட்டு பால்கனி பக்கம் சென்றவர் அங்கிருந்தே, எல்லாரையும் பார்த்து கையசைக்க இவருக்காகவே காத்திருந்த பக்திமயமா தொண்டர்கள் கூட்டமும் இவரின் தரிசணத்தை பார்த்து கோஷங்கள் எழுப்பி ஆர்பரிக்க ஆரம்பித்தது.

அமைச்சர் நாகலிங்கம் வாழ்க!!!
அமைச்சர் நாகலிங்கம் வாழ்க!!!
அஞ்சா நெஞ்சே வாழ்க!!! வாழ்க!!!
வருங்கால முதலமைச்சரே வாழ்க!!!
வாழ்க வாழ்க!!!
என கோஷங்கள் எழுப்ப,

அதேநேரம் காளியின் போன் அடிக்க அதை எடுத்து பேசியவனோ அதில் கூறபட்ட தகவலை கேட்டு ஆனந்த கூத்தாடியவன் நாகலிங்கத்திடம் சென்று,

"ஐயா நம்ம தேடிட்டு இருந்தவனை நம்மாளுங்க கண்டுபிடிச்சிட்டாங்கய்யா" என கூறினார்.

அதனை கேட்டவரின் முகத்தில் திமிரும் ஆணவமும் கலந்த ஒரு விஷமபுன்னகை பரவியது.

💘💘💘💘💘💘💘💘

அந்த பங்களா வீட்டின் கேட்டை தன் காலாலே எட்டி உதைத்து திறந்த வினோத் வேகமாக உள்நுழைய, அங்கே காவலில் இருந்த வாட்ச்மேன் அவனின் செயலில் விதிர்விதிர்த்து போய் நின்றார்.

அவருக்கு ஒரு மன்னிப்பினை சொல்லி கொண்டு வினோத்தின் பின்னோடே வந்த அவனின் நண்பன் தீலிப்போ "மச்சி நில்லுடா, நான் சொல்றதை கேளுடா கோபபடாத" என கத்தி கொண்டே செல்ல,

அது எதுவுமே அவன் காதில் விழாமல் அவனின் எண்ணங்கள் முழுவதும் அவளின் பேச்சை சுற்றியே வட்டமடித்தது.

"வினோத் நீங்க இப்படி சொல்லுவீங்கனு நான் சத்தியமா எதிர்பார்க்கல, ஏதோ எதார்த்தமா நாலு தடவை பேசிருப்போமா அதுக்கே காதல்னு வந்து நின்னா என்ன அர்த்தம்; இனி இப்படி ஒரு எண்ணத்துல என் பின்னாடி வராதீங்க, எனக்கு இப்போதைக்கு படிப்பு மட்டும் தான் முக்கியம்; அதேமாதிரி நீங்களும் படிக்கிற வழியை பாருங்க இனி இப்படி டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என கூறிய அனிதா +1 வகுப்பிற்குள் சென்று விட, அவள் தன்னை நிராகரித்து சென்றதை தாங்க முடியாமல் அவள்மேல் தீரா வன்மத்தை மனதின் விதைத்து கொண்டான் வினோத்.

இதையெல்லாம் யோசித்து கொண்டே சென்ற வினோத்தை அழைத்த தீலிப்போ,

"மச்சி கோபபடாத டா" என அவன் கைகளை பற்றி நிப்பாட்ட உடனே தன் மனதின் எழுந்த சினத்தை நண்பனின் மேல் கொட்டினான்.

வினோத்"எப்படிடா, கோபபடாம இருக்க சொல்ற நீயே பார்த்தேல என்னோட காதலை அவ ஏத்துக்கவே இல்லை; இதுவரைக்கும் என்னோட வாழ்க்கையில நான் கேட்டு எதுவுமே கிடைக்காம இருந்தது இல்லை; என்னோட கண்ணசைவிலே நான் என்ன வேணும்னு கேட்குறேனோ அதை என்னோட அப்பா எனக்கு வாங்கி தந்திடுவாரு,
சொடக்கு போடுற நிமிசத்துல என் முன்னாடி எல்லாமே இருக்கும் இப்படி ராஜா மாதிரி வளர்ந்தவனை வேணாம்னு சொல்லிட்டா; என்னோட காதலை வேணாம்னு சொல்லிட்டா;
அவளை நான் சும்மா விட மாட்டேன் டா, எனக்கு வர ஆத்திரத்துக்கு அவளை உருத்தெறியாம அழிக்க போறேன் டா" என ஆவேசமாய் பேசிய நண்பனை பார்த்து மிரண்ட தீலிப்போ,

"டேய் நீ பிடிவாதம் பிடிச்சா கிடைக்குறதுக்கு இது பொருள் இல்லடா; ஒரு பொண்ணோட இதயம், அவளுக்கு கொஞ்சம் டைம் குடுத்து வெயிட் பண்ணு; இல்லையா உனக்காக ஒருத்தி எங்கயாவது இருப்பா அவளுக்காக இந்த காதலை மறந்துட்டு வெயிட் பண்ணு; அதை விட்டுட்டு இப்படி தப்பு தப்பா பேசுற, இத்தனைக்கும் அந்த பொண்ணு நல்ல முறையில தான் சொல்லிட்டு போனா; ஆனா நீதான் இப்படி காட்டான் மாதிரி நடந்துக்கிற" என தன் நண்பனின் செயலில் கோபமானவனுக்கு தெரியவில்லை இவன் அதனினும் மோசமானவன் என்று..!!!

தீலிப் வினோத்திற்கு நண்பனாய் இருந்தாலும் நல்லவன்;
தன் நண்பன் தீலிப்பிடம் தன் சுயரூபத்தை காட்டும் சூழ்நிலை இதுவரை வினோத்திற்கு அமையவில்லை; பதினோராம் வகுப்பிற்காக இப்போது படிக்கின்ற தனியார் பள்ளியில் வினோத் சேர, அங்கு அறிமுகமாகி நட்பானவனே தீலிப்; அதற்கு முன் படித்த பள்ளியில் இவன் செய்த அட்டூழியங்களை தாக்கிக்க முடியாத பள்ளி நிர்வாகம் இவனின் தந்தையான நாகலிங்கத்தின் காலில் விழுந்து கதறுவதற்கு சமமாக கெஞ்சி வேறு பள்ளிக்கு மாற்ற சொல்லிவிட்டனர்; அப்படி மாறி வந்தவன் இங்கு அடக்க ஒழுக்கமாய் ஒரு வருடம் இருந்தான் இப்போது பண்ணிரெண்டாம் வகுப்பிற்கு சென்ற சில நாளிலே காதலில் பெயரால் தன் மொத்த சுயரூபத்தையும் வெளிபடுத்துகின்றான்.

தீலிப்பின் பேச்சில் கோபமாகிய வினோத் பேசவர அதற்குள் அங்கே வந்த காளியோ,

"சின்னய்யா, எப்போ ஸகூல் முடிஞ்சு வந்தீங்க; ஏன் வெளியவே நின்னு கத்துறீங்க ஏதாவது பிரச்சனையா" என கேட்க காளியிடம் பதில் கூறும்முன்; தீலிப்பின் பக்கம் திரும்பிய வினோத்தோ,

"நீ போடா, நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம்" என வழியனுப்பி வைக்க காளியின் அடியாள் தோற்றத்தினை பார்த்த தீலிப்பிற்கு இவனோடு நண்பனை விட மனம் வரவில்லை;
ஆனாலும் வேறு வழியில்லாமல் செல்ல தயாரானவன் வினோத்திடம்,

"சரிடா, நீ தேவையில்லாததை யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத;
நாளைக்கு ஸகூல்ல பேசிக்கலாம் கோபத்தை குறைச்சுக்கோ" என கூறி அங்கிருந்து சென்றான்.

அதன்பிறகு வினோத்தோ, பள்ளியில் நடந்ததை காளியிடம் சொல்லியவன்,

"அவளை ஏதாவது பண்ணனும்னே; என்னையே அசிங்கபடுத்திட்டா பதிலுக்கு ஏதாவது செய்யணும்னே" என கோபமாய் கூற காளியோ அவனின் எண்ணத்திற்கு தூபமிடும் விடமாய் ஒரு ஆலோசனை கூற அதனை கேட்ட வினோத்தின் முகம் பிரகாசமானது.

வீட்டை விட்டு வெளியே வந்த நாகலிங்கமோ தன் மகனோட பேசிகொண்டிருந்த காளியை பார்த்து,

"டேய் காளி, அங்க தம்பிகிட்ட என்னடா பேசிட்டு இருக்க" என கேட்க அதற்கு அவனோ,

"அது ஒண்ணும் இல்லைங்கய்யா; சின்னய்யா என்கிட்ட ஒரு விஷயம் செய்ய முடியுமானு கேட்டாரு; அதுக்கு நான் அதுக்கென்னங்கய்யா, தாராளமா பண்ணிடலாம்னு சொன்னேன் இப்போ அதைபத்தி தான் பேசிட்டு இருந்தோம்ய்யா வேற ஒண்ணும் இல்ல" என கூற அதனை கேட்ட நாகலிங்கமோ,

"சரிடா தம்பிக்கு என்ன உதவி வேணுமோ பண்ணு இப்போ தம்பியை சாப்பிட கூப்பிட்டு வா களைச்சு போயிருக்கும்ல" என கூறி வீட்டினுள் செல்ல வினோத்தை பார்த்த காளியோ கண்ணசைவினிலே 'எதைபற்றியும் கவலை வேண்டாம் நானிருக்கிறேன்' என்னும் விதமாய் நம்பிக்கையளிக்க அதில் மனம் மகிழ்ந்து அவனுடன் வீட்டிற்குள் சென்றவன்;
அடுத்த நாள் பள்ளியில் தீலிப்பே ஆச்சர்யபடுமளவிற்கு நல்லவிதமாய் நடந்து கொண்டு அப்பெண்ணிடமே நட்புகரம் நீட்டினான்;
இதனை பார்த்து ஆறுதலான தீலிப்பிற்கு தெரியவில்லை அவனின் இச்செயலிலும் சூழ்ச்சியே நிறைந்திருக்கிறது என்று..!!!


காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Nancy mary

✍️
Writer
என்ன வன்மம் மறைந்திருக்கோ அவனிடம்.
அதை நாம பொறுத்திருந்து பார்க்கலாம்🤗🤗🤗

ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
பரவாயில்லையே கார்த்திக் புத்திசாலி தான்.. சூப்பர்...
இந்த வினோத் என்ன பண்ணப் போறான்னு தெரியலயே..
 

Nancy mary

✍️
Writer
பரவாயில்லையே கார்த்திக் புத்திசாலி தான்.. சூப்பர்...
இந்த வினோத் என்ன பண்ணப் போறான்னு தெரியலயே..
பொறுத்திருந்து பார்க்கலாம் சகி😍😍😍❤️
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
அடேய் வினோத் இது காதலிக்கிற வயசாடா😠 கார்த்திக்க பாத்து கத்துக்க எருமை😠 அப்பனை போலவே பிள்ளையும் கொடூரனா வளந்திருக்கான்... இவனை காதலிக்கவா அந்தப் பொண்ணு பிறந்திருக்கு? சரியான சைகோ
 

Nancy mary

✍️
Writer
அடேய் வினோத் இது காதலிக்கிற வயசாடா😠 கார்த்திக்க பாத்து கத்துக்க எருமை😠 அப்பனை போலவே பிள்ளையும் கொடூரனா வளந்திருக்கான்... இவனை காதலிக்கவா அந்தப் பொண்ணு பிறந்திருக்கு? சரியான சைகோ
ஆமா ஆமா சரியான சைக்கோ பையன்😂🙌
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom