• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 2

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் - 2❤


கவியரசி தன் ஸகூட்டியில் பயணித்து கொண்டு அவள் பயிலும் கலை கல்லூரிக்கு வந்து சேர,


அப்போது அவளின் அருகிலேயே மிக வேகமாக வந்த பைக் அவளை உரசிடும்படி வந்து உரசாமல் சிறிதுதூரம் தள்ளி நின்றது.


இந்த திடீர் செயலில் சற்று நிலைதடுமாறியவள், பின்னர் தன்னை சுதாரித்து கொண்டு; தன் வண்டியை பிரேக் போட்டு ஓரமாய் நிறுத்தினாள்.


தனது வண்டியினை நிறுத்தியபடி தன்னை தானே ஆசுவாசபடுத்தி கொண்டவள்; ஹெல்மெட்டை கழற்றி கொண்டு தன்னெதிரே இருந்தவனை அனல் தெறிக்கும் பார்வை வீசி பஷ்பமாக்க பார்க்க அவனோ, அது எதைபற்றியும் கவலைகொள்ளாமல் அவளை பார்த்து கண்ணடித்து கொண்டு பைக்கை விட்டு இறங்கி அவளிடம் வந்தான்.


கவியின் முன் வந்து நின்றவனை பார்த்து, "உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா, இப்படியா ரோட்ல தாறுமாறா வண்டி ஓட்டிட்டு போவ; நல்லவேளை நான் சுதாரிச்சேன் இல்லனா என்ன ஆகிருக்கும்" என பேசியவளின் பேச்சிற்கு நடுவில் பேசியவனோ,


"என்ன ஆகிருக்கும், அடுத்த நிமிசமே நீ கீழ விழாதபடி இந்த மாமன் உன்னைய என் கையில தாங்கிருப்பேன் சே!
ஜஸ்ட் மிஸ் எனக்கு அந்த சான்ஸ் கிடைக்காம போச்சே" என நொந்து கொண்டவனை பார்த்த கவியின் முகம் கோபத்தில் ரத்தமென சிவந்தது.


அவளின் கோபத்தை கண்டு மனதிற்குள் ரசித்தவன் வெளியே அவளிடம் "சரி, இந்த டாபிக்க விடு நம்ம டாபிக்குக்கு வருவோம் எப்போ என்னோட காதலுக்கு ஓகே சொல்லுவ" என கேட்க அதற்கு கவியோ,


"இங்க பாரு நீ என்னோட முறைபையனா இருக்கலாம், அதுனால எல்லாம் என்னால உன்னைய காதலிக்க முடியாது உன்னைய காதலிக்கணும்னா, முதல்ல என்னோட பேரண்ட்ஸ் உன்னைய எனக்கு கட்டிவைக்க சம்மதிக்கணும்; அவங்களே சம்மதிச்சாலும், எனக்கு உன்மேல துளியளவாவது விருப்பம் இருக்கணும்; இது எல்லாத்துக்கும் மேல முக்கியமா என்னோட தம்பிக்கு உன்னைய பிடிக்கணும்; அவனே நீ எனக்கு பொருத்தமானவன்னு முடிவு பண்ணனும் அவனுக்கு பிடிக்கலனா நீ என்னைய எவ்ளோ காதலிச்சிருந்தாலும் ரீஜக்டட் தான்" என கோபத்தில் படபடவென பொறிய அவளின் கூற்றை கேட்டு பெருமூச்சு விட்டவனோ,


"அப்போ காலம் முழுக்க நான் பிரம்மசாரி தானா" என நொந்துகொண்டான்.


அவனின் புலம்பலை கண்டுகொள்ளாமல் கவி வண்டியை ஸ்டாட் செய்து பக்கத்தில் இருப்பவனை இடிப்பது போல் நகர்த்த அவனோ அவளின் செயலில் சிரித்துகொண்டு நகர்ந்து நிற்க, அவனை முறைத்துகொண்டே இவள் பார்க்கிங் ஏரியாவிற்குள் நுழைந்தாள்.


கவி செல்வதையே வைத்த கண்வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் கவிநேசன்.


கவிநேசன், இவன் கவியின் சொந்த தாய்மாமன் மகன்.
இவனுக்கு இப்பெயர் விதியில் செயலால் அமைந்ததோ என்னவோ; கவி பிறந்ததிலிருந்தே இவன் அவளின் மேல் அளவற்ற நேசத்தோடு தான் சுற்றி கொண்டிருக்கிறான்; சிறுவயதில் சொத்து தகராறினால் பிரிந்த இக்குடும்பத்தை சேர்த்து வைக்கும் முயற்சியில் இவன் இறங்க; விதியோ இவனின் காதலுக்கான முயற்சியில் இறங்கியது; இவனும் இக்காதலால் இரு குடும்பத்தையும் இணைக்கும் ஒரு பாலத்தை உருவாக்க முயற்சிக்க; அப்பாலத்திற்காக இதுவரை ஒரு சிறு கல் கூட எழுப்பபடவில்லை கவியின் காதலை பெற இதே கலை கல்லூரியில் இவன் எம் எஸ் சி வேதியல் இரண்டாம் ஆண்டு பயில கவியோ பி எஸ் சி வேதியல் இரண்டாம் ஆண்டு பயில்கிறாள்.


இவனின் இக்காதலால், பிரிந்த குடும்பங்கள் இணையுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.


(இவங்க துணை கதாபாத்திரங்கள் தான் மக்களே அதுனால யாரும் குழம்பாதீங்கோ😜)


💘💘💘💘💘💘💘


இங்கு நமது கதாநாயகனான கார்த்திக்கோ, பறவைகளின் குரலோசையிலிருந்து மலர்களின் நாசி தழுவும் நறுமணம் வரை அனைத்தையும் ரசித்து இயற்கையின் அழகின் முழ்கி, அத்தருணத்தை அனுபவித்து கொண்டாடி கொண்டிருக்க; அதனை ரசிக்கமுடியா மனநிலையில் தன்னை சுற்றி பரப்பரபாய் ஓடும் மனிதர்களை எண்ணி வியந்துபடி பள்ளியை நோக்கிய தன் பயணத்தை தொடர்ந்தான்.


கார்த்திக் சைக்கிளை தனது வலதுபுறமிருக்கும் தெருவினை நோக்கி திருப்ப அங்கே, அவனின் பக்கத்து வீட்டு அங்கிள் ஜாக்கிங் செல்வதை கண்டவன் அவரிடம்,


"ஹாய் அங்கிள், என்ன இன்னும் ஜாக்கிங் பண்ணிட்டு இருக்கீங்க ஆபிஸுக்கு போகலயா" என கேட்க அதற்கு அவரோ,


"இனிதான் ஆபிஸ்க்கு போகணும் தம்பி" என மூச்சிரைத்தவாறு கூறியவர் அவனிடம்,


"ஆமா தம்பி நீயென்ன இவ்ளோ பொறுமையா ஆடி அசைஞ்சு ஸகூலுக்கு போயிட்டு இருக்க கிளாஸுக்கு லேட்டாகாதா" என்ன கேட்க,


அதற்கு கார்த்திக்கோ "இல்ல அங்கிள் நான் சீக்கிரமாவே கிளம்பிட்டதால எவ்ளோ பொறுமையா போனாலும் கரெக்ட் டைமுக்கு போயிடுவேன், அதுசரி அங்கிள் நானும் பாக்குறேன் கடந்த மூணு மாசமா தினமும் ஜாக்கிங் பண்றேன்னு ஓடுறீங்களே இன்னுமா அந்த தொப்பை குறையல" என சிறிது கிண்டலோடு கேட்க,


அதற்கு அவரோ"அட நீ வேறப்பா நானும் தினமும் ஓடிட்டு தான் இருக்கேன் எங்க குறைய மாட்டேங்குதே" என சலித்து கொண்டே பதிலளித்தார்.


உடனே கார்த்திக்கோ "அங்கிள் உங்களுக்கு நான் ஒரு ஐடியா சொல்லவா, எதுக்கும் நீங்க சாப்பிடுற சாப்பாட்டோட அளவை குறைஞ்சு பாருங்களேன் அப்போ ஆட்டோமேடிக்கா தொப்பை குறைய வாய்ப்பு இருக்குல" என கூறி சிரித்து கொண்டே அங்கிருந்து வேகமாய் சைக்கிளில் பறந்திட, முதலில் அவனது பேச்சில் ஏதோ கருத்து இருக்குமோ என கேட்க தொடங்கியவர் முடிவில் அவன் செய்த கேலியை புரிந்துகொண்டு கோபமாகிட,


"அடப்பாவி என்னய்யா கிண்டல் பண்ணிட்டு போற நீ வேணா பாரு எண்ணி ஒரே மாசத்துல என்னோட தொப்பையை குறைச்சு காட்டுறேன்" என சவால் விட பாவம்,
அவரின் சவால் எல்லாம் காற்றுக்கு மட்டும் தான் கேட்டது கார்த்திக் தான் எப்போதோ அங்கிருந்து சென்று விட்டானே.


கார்த்திக் சிரித்து கொண்டே செல்ல அவனின் சிரிப்பை தடை செய்யும் விதமாய் கைப்பேசி ஒலித்தது.


சைக்கிளை ஓரமாய் நிறுத்தி அதனை காதில் வைத்தவனோ, "சொல்லு டா ஸகூலுக்கு தான வரேன் அதுக்குள்ள ஏன் போன் பண்ணிட்டு இருக்க" என கேட்க மறுமுனையில் இவனின் நண்பன் ரவியோ,


"அதேதான் மச்சி நானும் கேட்குறேன் ஸகூலுக்கு தான் வர அப்படியே கொஞ்சம் சீக்கிரமா வந்தா தான் என்னவாம்; இன்னைக்கு ஸ்கூல் தொடங்குற முதல் நாள் டா அழகு அழகான பொண்ணுங்க எல்லாம் புதுசா +1க்கு ஜாயின் பண்ணிருக்குங்க அதுல ஒருத்தியை பிக்கப் பண்ணி கமிட் ஆகலாம்னு பார்த்தா எவளும் எங்களை திரும்பி கூட பார்க்க மாட்றாளுங்க, நீ வந்தா உன்னைய பார்க்குற சாக்குலயாவது எங்களை பார்ப்பாங்கல அதான் கூப்பிட்டேன் சீக்கிரம் வாடா" என படபடவென பேசிட அவனின் கூற்றில் சிரித்தவனோ,


"சரிடா, நான் இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுவேன் ஆனா நீ ஸகூல்க்குள்ள போன் யூஸ் பண்ணாத பீட்டி சார் பார்த்தா திட்டுவாரு" என கண்டிப்பாய் மொழிய,


"அட நீ வேற டா, அவரு அந்தபக்கமா இருக்காரு; அதான் யூஸ் பண்ணேன் அவரு திட்டாட்டினா கூட நீ மாட்டிவிட்டுருவ போலயே ஸகூலுக்குள்ள ஏதாவது எமர்ஜென்சிக்காக போன் யூஸ் பண்ணிக்கலாம் தப்பில்ல கிளாஸ்ல தான் யூஸ் பண்ணகூடாது இப்போ எனக்கும் எமர்ஜென்சி தாண்டா சீக்கிரம் வா" என பறக்க அதற்கு மெலிதாய் சிரித்தவனோ "இதோ வாசல் பக்கம் தாண்டா நின்னுட்டு இருக்கேன் இரு வரேன்" என உள்ளே செல்ல போனவன் மறக்காமல் போனை ஸவிட்ச் ஆப் செய்து பேக்கில் வைத்து கொண்டு உள்ளே நுழைந்தான்.


கார்த்திக்கை பார்த்ததும் அவனின் நட்புபட்டாளம் அவனை சூழ்ந்து கொள்ள அந்த இடமே, சிறிது நேரத்தில் கலகலப்பாய் மாறியது.


💘💘💘💘💘💘💘💘


இங்கு தன் தந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்த அனு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டே அப்பயணத்தினை அனுபவித்து கொண்டிருந்தாள்.


அப்போது சத்யமூர்த்தியின் போன் ரீங்காக காரை ஓரமாய் நிறுத்தி போனை எடுத்து பேசினார்.


"ஹலோ சொல்லுப்பா நான் இப்போ கோர்ட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் இன்னைக்கு கேஸ் சம்மதப்பட்ட பைல்ஸை எடுத்திட்டு வந்துட்டீயா" என கேட்க மறுமுனையில் என்ன சொல்லபட்டதோ அதை கேட்டு பதட்டமான இவரோ,


"அச்சசோ என்னப்பா சொல்ற இப்போ பரவாலயில்லயா, ஓ சரிப்பா சரி; அதை நான் பார்த்துக்கிறேன் நீ நல்லா ரெஸ்ட் எடு; அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லப்பா நான் பார்த்துக்கிறேன் சரிப்பா, நான் அவனை பார்த்துட்டேன் இங்கதான் வரான் நான் பேசிக்கிறேன் சரியா, நீ ரெஸ்ட் எடு ஓகே பா வைச்சிடுறேன்" என போனை வைத்தவர் அனுவிடம்,


"நீ காருக்குள்ளயே இருமா அப்பா இதோ வந்திடுறேன்" என காரை விட்டிறங்கி காரை நோக்கி வந்தவனிடம் செல்ல அவன் பைலை குடுத்து கொண்டு சத்யமூர்த்தியிடம் பேசி கொண்டிருந்தான்.


"இது உங்க கேஸ் சம்மதப்பட்ட பைல் சார்; அண்ணனுக்கு உடம்பு சரியில்லை, ஆனா இன்னைக்கு நடக்க போற கேஸுக்கு இந்த பைல் தேவைபடுமாமே அதான் என்னைய குடுத்திட்டு வர சொன்னான்" என கூறி பைலை தந்தவனோ எதார்த்தமாக காருக்குள் இருந்த அனுவை பார்த்தான்.


அவன் குடுத்த பைலை வாங்கிய சத்யாவோ "தெரியும்பா இப்போதான் போன் பண்ணி சொன்னான் இதை கொண்டு வந்து குடுத்ததுக்கு நன்றிப்பா " என பேசிகொண்டே அவற்றை சரிபார்க்க ஆனால் அவனோ சத்யாவின் பேச்சை கவனிக்காமல் அனுவை சைட்டடித்து கொண்டிருந்தான்.


திடீரென அனுவிற்கு பெண்களுக்கே உண்டான எச்சரிக்கை உணர்வு மேலோங்க; அவள் சுற்றிலும் தன் பார்வையே ஓட விட, அவளின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தான் அந்த இளைஞன்.


அவனின் இச்செயலை பார்த்து அனு மிரண்டு தான் போனாள் ஆம்!
அனைவரையும் தன் குறும்பால் மிரளவைக்கும் அனுவே மிரண்டு ஓடும் விஷயமென்றால் அது காதல் தான்.


காதல் என்ற பெயரில் பல கொலைகளும், ஆசிட் வீச்சுகளும், கற்பழிப்புகளும், நடப்பதை பார்த்து பார்த்தே வளர்ந்தவள் மனதில் 'காதல்' என்ற வார்த்தையே ஏதோ பேய், பூதம், பிசாசுகளை போன்றது தான் அதற்கு கூட நடுங்காதவள் இதனை கேட்டால் நடுநடுங்கி போய் விடுவாள்


அனுவின் நினைப்பிற்கு காரணகர்த்தா வேறு யாருமல்ல அவளின் பாட்டியும் தந்தையும் தான்;
அனு யாரையும் காதலிக்ககூடாது எனபதற்காகவே பாட்டி செய்திகளை பார்க்கும்போது காதலால் திசை மாறியவர்களின் செய்திகளை மட்டும் அவளிடம் எடுத்து சொல்லி அவளின் மனதில் காதல் என்ற வார்த்தையையே வெறுக்க வைத்தார் அதற்கு மேல் தந்தையும் காதலால் திசைமாறிய பலரின் கேஸினை எடுத்து வாதாட முடிவில் காதல் என்றாலே பாவச்செயல் என்ற மனநிலைக்கு வந்து விட்டாள்.


இவளுக்கு காதல் பிடிக்காது ஆனால் பெண்களிடம் பழகும் ஆண்கள் காதலால் பேசுகிறார்களா இல்லை நட்பால் பேசுகிறார்களா என்ற வேறுபாடு தெரிய வேண்டுமல்லவா!
அது தெரிந்தால் தானே அதைவிட்டு விலகி இருக்க முடியும் இவளால் அந்த வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியாதபடியால் இவள் மனதில் ஒரு விபரீத முடிவெடுத்தாள்.


அது என்னவென்றால் இவளிடம் எந்த ஆணாவது பேச நெருங்கினால் அவர்களிடம் இவள் பேசும் முதல் வார்த்தையே 'அண்ணா' என்பது தான் 'ஹாய் அண்ணா' என்று சொல்லியே அந்த ஆணின் மனதினில் பாறாங்கல்லை இறக்கி விடுவாள்.


அதன்பிறகு இவளிடம் பேச வந்த ஆண் காதலாலே பேச வந்திருந்தாலும் அவனின் காதல் அங்கு புஸ்வானமாகிருக்கும் இதான் இவளின் விபரீத முடிவு இந்த முடிவால் இதுவரை கணக்கில் அடங்காத ஆண்களை தனக்கு உடன்பிறவா சகோதரனாய் மாற்றிருக்கிறாள்.


அதேபோல இப்போது சைட்டடிப்பவனும் பின்னாளில் பிரச்சனையாக வந்தால் இதே வழிமுறையை கையாளலாம் என ஒரு எண்ணத்தை மனதில் விதைத்து கொண்டு தைரியமாய் இருந்தாள்.


அதேநேரம் பைலோடு காரில் ஏறிய தந்தையோ அவளிடம்,


"சாரி மா, அப்பா ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டேனோ" என கேட்க அவளோ,


"சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லப்பா" என கூற மகளை பார்த்து சிரித்து கொண்டே காரினை இயக்கியபடி பள்ளியை நோக்கி விரைந்தார்.


அவளோ அந்த பையன் பாலோ பண்ணுவானோ என திரும்பி பார்க்க;
அவன் அங்கிருந்து இவளையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு முறைத்து கொண்டே முகத்தை திருப்பி கொண்டாள்.


💘💘💘💘💘💘💘


பள்ளியில் கார்த்திக் அவனின் நண்பர்களோடு ஒரு பிளாக்கிற்கு கீழே இருக்கும் மரத்தடி கல்பெஞ்சில் அமர்ந்து கொண்டிருக்க அவனின் நண்பர்களோ அங்கு புதிதாக சேர்ந்த மாணவர்களின் சில பேரை கூப்பிட்டு ராகிங் என்ற பெயரில் கலாய்த்து கொண்டிருந்தனர்.


"மச்சி இவனோட மண்டையே கொஞ்சம் தொட்டு பாரேன் எண்ணெய் பாட்டில்ல இருக்கிற மொத்த எண்ணெய்யும் இவனோட தலையில தாண்டா இருக்கு" என சொல்லி ரவி சிரிக்க அதற்கு தினேஷோ,


"ஆமா மச்சி நம்ம பீட்டி சாரோட பேச்சுக்கு ஏத்த மாதிரியே இருக்கான்ல, ஏண்டா நீங்களாம் இப்படி நல்லபசங்களா இருந்தா அப்போ எங்க நிலமை என்னாகுறது உங்களை பார்த்து பீட்டி எங்களையும் இப்படி இருக்க சொல்லுவாரே இனி இந்தமாதிரி ஓவர் நல்லவனா இருக்ககூடாது சரியா" என கூறி கொண்டே அவனின் கெட்டப்பையே மாற்ற இவர்களின் சேட்டையை பார்த்த கார்த்திக் விக்னேஷின் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருந்தான்.


(பின் குறிப்பு : கார்த்திக் படிக்கிற காலகட்டம் எப்போனா பத்தாவது பண்ணிரெண்டாவதுக்கு மட்டுமே பப்ளிக் எக்ஸாம்னு இருந்துச்சே அந்த காலகட்டம் அப்போ பப்ளிக் எக்ஸாம் இருக்கிறதால இந்த இரண்டு வகுப்புக்கு சீக்கிரமாவே வகுப்புகள் தொடங்கிடும் அதுனால இப்போதைக்கு இவங்களுக்கு ஆல்ரெடி கிளாஸ் தொடங்கிருச்சு ஆனா மத்த கிளாஸ் பசங்களுக்கு இதான் முதல் நாள் அதேமாதிரி பதினோராவது படிக்கும் மாணவர்களுக்கும் இன்றுதான் முதல் நாள் வகுப்புகள் ஆரம்பமாகுது இப்போ இருக்கிற கல்வி சூழலோட இதை போட்டு குழப்பகூடாதுனு தான் முன்னாடியே சொல்லிட்டேன் மக்களே 😄)


அப்போது அங்கு இவர்களின் மற்றொரு நண்பனான சங்கர் நான்கு மாணவர்களோடு வந்து சேர்ந்தான்,


"மச்சி இவனுங்க நாளு பேர் தான்டா +1 கிளாஸுக்கு புதுசா சேர்ந்த பசங்க நல்லவேளை, இவனுங்க அந்த டேவிட் குருப் கண்ணுல மாட்டுறதுக்குள்ள நான் கூட்டிட்டு வந்துட்டேன்" என சங்கர் ரவியிடம் கூற அந்நால்வரும் இவர்கள் தங்களை என்ன செய்வார்களோ என எண்ணி பயந்து நடுங்கி கொண்டிருந்தனர்.


உடனே கார்த்திக்கோ "மச்சி பாவம் டா எப்படி பயப்படுறாங்கனு பாரு ராகிங் எல்லாம் ஒண்ணும் வேணாம் கிளாஸுக்கு போகட்டும் விடுங்கடா" என கூற அதற்கு தினேஷோ,


"அட என்னடா நீ இவனுங்க தான் பயபடுறாங்கனா நீயும் சீரியஸா நினைக்கிற எங்களை பத்தி தான் உனக்கு தெரியும்ல அப்புறம் என்னடா ரீலாக்ஸா இரு" என பேசி கொண்டிருக்க அப்போது அந்நால்வரின் ஒருவன் அங்கிருந்து தெறித்து ஓடினான்,


"மச்சி அவன் ஓடுறான் பாரு விடாத டா, பிடி பிடி" என ரவி கத்த விக்னேஷோ ஓடியவனை துரத்தி பிடித்தான் உடனே ரவியோ "மாட்டிடுனீயா, வாடா வாடா" என தன் அருகில் அழைத்து நிறுத்தி கொண்டவன்,


"ஏன்டா தம்பி நாங்க சும்மா தாண்டா பேசிகிட்டு இருந்தோம் அதுக்குள்ள ஏன் இப்படி பயந்து ஓடுன; இன்னும் நாங்க உன்னைய ராகிங் பண்ணவே ஆரம்பிக்கலயே டா, அதுக்குள்ள பயமா" என சிரித்து கொண்டே கேட்டு அவனின் தலையை கலைத்து விட அவனோ நடுங்கி கொண்டிருந்தான்.


அதனை பார்த்த தினேஷோ "மச்சி யாருடா இவன் நம்மல பார்த்தே இப்படி பயப்படுறான் நம்ம என்ன அவ்ளோ டெரராவா இருக்கோம்" என கூற அவனை பார்த்து ரவி முறைக்க உடனே அம்மாணவனோ,


"அண்ணே அண்ணே, என்னை விட்டுருங்கண்ணே, எனக்கு இந்த ராகிங்னாலே பயம்னே; இதுக்கு முன்னாடி இருந்த ஸ்கூல்ல ராகிங் பண்ணியே டார்சர் பண்ணதால தானே இந்த ஸகூலுக்கு மாறுனே என்னைய விட்ருகண்ணே" என அவன் பயத்தில் அழுக துவங்கினான்.


அவனின் பேச்சையும் செயலையும் கேட்டு முழித்த நண்பர்களை பார்த்து முறைத்த கார்த்திக் அந்த பையனை தன்னருகில் அழைத்து கொண்டு,


"இங்க பாரு தம்பி நீ இங்க எதை நினைச்சும் பயப்பட வேணாம்;
இந்த ஸகூல்ல நீ நினைக்கிற மாதிரி ராகிங் எல்லாம் நடக்காது, நாங்க சும்மா சின்ன கிளாஸ் பசங்களோடயும் பிரண்ட்ஸாகணும்னு தான் இப்படி முதல் நாள் கூப்பிட்டு ராகிங் பண்ற மாதிரி பேசுவோம் மத்தபடி நாமலாம் பிரண்ட்ஸ் தான் சரியா" என கூற கார்த்திக்கின் பேச்சை நம்பியும் நம்பாமலும் அம்மாணவன் பார்க்க அப்போது அங்கு வந்த இன்னொருவனோ,


"குட் மார்னிங் கார்த்திக் அண்ணே இன்னைக்கு முதல் நாள்ன்றதால கோயிலுக்கு போயிருந்தேன் அப்படியே உனக்காகவும் வேண்டிகிட்டேனே இந்தா விபூதி" என பேசிகொண்டே அவன் நெற்றில் விபூதி வைத்து விட்டவன் கார்த்திக்கின் அருகிலே அமர்ந்து கொண்டு அவனிடம், "ஆமாண்ணே இவனுங்க எல்லாம் புதுசா சேர்ந்த பசங்களா" என கேட்டு அந்த பயந்த மாணவனிடம் பேச்சு கொடுக்க, சிறிது நேரத்தில் அவனும் பயத்தை விடுத்து சகஜமாகி அம்மாணவனுடன் பழக ஆரம்பித்தான்.


அப்போது கார்த்தி அவனிடம், உனக்கு இங்க எந்த ஒரு பிரச்சனையும் வராது நீ நிம்மதியா படிக்கலாம் உனக்கு ஏதாவது உதவி தேவைபட்டா என்கிட்ட தயங்காம கேளு ஓகே வா" என கேட்க அவனும் கார்த்திக்கை பார்த்து சிநேகமாய் சிரித்து கொண்டே தலையாட்டினான்.


இந்நிகழ்வை அதிசயமாய் பார்த்து கொண்டிருந்த மற்ற மூவரையும் கண்ட கார்த்திக்கின் நண்பர்களோ "டேய் உங்களுக்கு என்ன தனியா சொல்லணுமா அவன் மட்டும் இல்ல நாங்களும் அப்படிதான் பயப்படாம வாங்கடா" என சொல்ல இவர்களும் புன்னகையோடு இந்த கூட்டத்தில் இணைந்து கொள்ள அங்கு ஒரு அழகிய நட்புறவு மலர்ந்தது.


கார்த்திக்கிற்கு மொத்தம் நான்கு நண்பர்கள் ரவி, சங்கர், தினேஷ், விக்னேஷ் நால்வருமே வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டுமென நினைத்து சிறு சிறு சேட்டைகளை செய்து கொண்டிருக்க இவர்களின் சேட்டையால் உண்டாகும் பிரச்சனையை கார்த்திக் தான் சமாளிப்பான் இவர்கள் ஐவரும் எப்போழுது ஒன்றாகவே சுற்றுவதால் இந்த நட்பு அணிக்கு 'பஞ்ச பாண்வர்கள்' அணி என்ற பெயரும் உண்டு மேலும் இவர்கள் தோற்றத்திலும் குணத்திலும் ஐவரும் அப்படியே பொருந்துவதாலும் இப்பெயர் இவர்களுக்கு நிலைத்தது.


அதேசமயம் அப்பள்ளிக்கு வெளியில் சத்யமூர்த்தியின் கார் வந்து நிற்க அதிலிருந்து அனு இறங்கினாள்.


"அனுக்குட்டி பார்த்து போ மா ஏதாவது உனக்கு பிரச்சனைனா அப்பாகிட்ட சொல்லு; அப்பா உனக்கு எப்பயுமே துணையா இருப்பேன் சரியா பை டா" என கூறி வழியனுப்பி வைக்க அவளும் "கண்டிப்பா சொல்றேன் ப்பா பை" என சொல்லி விடைப்பெற்றாள்.


அப்பள்ளியில் நுழையும்முன் பிள்ளையாரிடம் ஒரு சின்ன வேண்டுதலை வைத்து கொண்டு பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தவள்.


அப்பள்ளியினுள் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து கொண்டே நடந்து சென்றாள்.


எல் கே ஜி முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் அத்தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு இலகுவான மனநிலையை உருவாக்கும் பொருட்டு அதிகபடியான விதிமுறைகள் இல்லாது அதேசமயம் சிறிது கட்டுபாடுகளை மாணவர்களின் நன்மைக்காக விதித்து கொண்டு செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கபடாமல் ஏழை முதல் பணக்காரர் வரை பேதமில்லாதபடி படிக்கும் வண்ணமும் கல்வி சூழல் அமைக்கபட்டிருக்கிறது இதில் படிக்கும் பல மாணவர்கள் அதிகபடியான மதிப்பெண்களை குவிப்பதால் இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் போட்டி போட்டு அலைமோதுவர் அப்படிபட்ட பள்ளியில் தான் இனி நமது நாயகியான அனுபிரியாவும் படிக்க போகிறாள்.


வகுப்புகள் ஆரம்பிக்க நேரமிருப்பதால் வழியெங்கும் மாணவர்கள் அரட்டையடித்தபடியும்; நட்பு பாராட்டியபடியும்; சேட்டைகள் செய்தபடியும்; அப்படி சேட்டை செய்து மாட்டி கொண்டவர்கள் பீட்டி சாரிடம் திட்டுவாங்கியபடியும் இருக்க, இன்னும் சில மாணவர்களோ முதல்நாள் என்றபடியால் பள்ளியில் காலையில் நடை பெறவிருக்கும் பிரேயருக்காக வரிசையாய் லைனில் நின்றுகொண்டு காத்திருந்தனர்.
அப்பள்ளியின் சூழலோ கட்டிங்களுக்கு இணையாய் பல்வேறு மரங்களோடு இயற்கையால் சூழ்ந்த அழகிலோடு நிரம்பியிருக்க அப்பள்ளியின் அழகையும் சூழலையும் கண்டு மனமகிழ்ந்து போனாள் அனுபிரியா.


இவ்வாறே அச்சூழலை ரசித்தபடி வந்தவளுக்கு முன் ஒரு குட்டி குழந்தை தன் தோழியை பிடிக்க ஓடிகொண்டிருக்க அனுவின் முன் வரும்போது ஒரு சிறு கல் தடுக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தது.


அனுவோ அக்குழந்தையின் நிலையினை பார்த்து பதறி அவளிடம் போக அதற்குள் வலியால் அப்பிஞ்சு குழந்தை அழுக ஆரம்பித்தது.


இந்த இடத்திற்கு சிறிது தொலைவு தள்ளியே கார்த்திக் அவனின் நட்பு பட்டாளத்தோடு இருந்ததால் குழந்தையின் அழுகுரல் அவன் செவியை எட்டியது கூடவே ஒரு அழகிய குரல் இன்னிசையாய் அவன் மனதில் ஸ்வரம் மீட்டியது.


அக்குரல் வந்த திசைநோக்கி திரும்பி பார்க்க, அங்கே அழகிய சிலை போல் இருந்தவள்; தனது வில் போன்ற புருவத்தினை உயர்த்தி எழில் கொஞ்சும் வதனத்தில் குழந்தைதனமான பாவனைகளை காட்டி அக்குழந்தையின் அழுகையை கட்டுபடுத்த முயற்சித்து கொண்டிருந்தாள்.


அவளின் செயல் சரியாய் வேலை செய்தது போல அந்த குழந்தையும் அழுகையை நிறுத்தி அவளை கண்டு சிரித்தது, அக்குழந்தையின் சிரிப்பினை கண்டவள் அதோடு கொஞ்சி கொஞ்சி விளையாட இதனை பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கின் முகத்தில் கீற்று புன்னகை மலர்ந்தது.


இவனின் ரசிப்பினை பக்கத்திலேயே இருந்த நண்பர் பட்டாளமும் பார்த்து கொண்டிருக்க பாவம்! கார்த்திக் தான் அது எதுவும் தெரியாமல் அவனின் ரசனையை தொடர்ந்து கொண்டிருந்தான்.


ரவி "மச்சி நம்ம கேங் லீடர், பொண்ணை பார்த்தா மண்ணை பார்க்குற சங்கத்தை சேர்ந்தவன் அவனே இப்போ ஒரு பொண்ணை வைச்ச கண்ணு வாங்காம பார்க்குறானே டா; இது தப்பாச்சே சம்திங் ராங்" என கேலியாய் மொழிய அதனை கேட்ட தினேஷோ,


"மச்சி எதுவுமே ராங் இல்லடா இப்போதான் நம்ம பய ரைட்டான பாதையில போறான் இனி இவனுக்கு என்னெல்லாம் ஆக போகுதோ" என கூற கார்த்திக்கின் நட்பு பட்டாளம் முழுவதும் அவனை கேலி செய்து சிரிக்க ஆரம்பித்தது.


ஆனால் கார்த்திக்கோ அனுவின் தரிசனத்தில் லயிக்க துவங்கியிருந்தான் பாவம், அவளின் பயத்தை இவன் அறியவில்லை; ஒருவேளை அறிந்தால் விலகிருப்பானோ..???
இனி இந்த காதல் ரைட்டான பாதையில் செல்லுமா இல்லை ராங்கான பாதைக்கு தள்ளுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.




காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Kani Mozhi

✍️
Writer
Hahaha lovely akka... Kavi arasi kavi nesan nu story ye kavi ah iruku ka❣❤❤.... apdiye school days ku poitu vantha mari iruku... frst day atrocities😂😂😂...Senior junior alaparaigal elame superb akka... Karthik pakka hero character ku etha mari porupa irukan... ada anu ponne 😂🤣🤣... Pavam pa saami ini karthik nilamai enna aga poguthooo.... Right ana path ah wrong ana path ah ngrathellam writer jii kai la than 😂😂😂... eagerly waiting for next epi akka ❤❣❤❣❤😍😍😍
 

Nancy mary

✍️
Writer
Hahaha lovely akka... Kavi arasi kavi nesan nu story ye kavi ah iruku ka❣❤❤.... apdiye school days ku poitu vantha mari iruku... frst day atrocities😂😂😂...Senior junior alaparaigal elame superb akka... Karthik pakka hero character ku etha mari porupa irukan... ada anu ponne 😂🤣🤣... Pavam pa saami ini karthik nilamai enna aga poguthooo.... Right ana path ah wrong ana path ah ngrathellam writer jii kai la than 😂😂😂... eagerly waiting for next epi akka ❤❣❤❣❤😍😍😍
ரொம்ப சந்தோஷமா இருக்குமா அந்த வசந்த கால நினைவுகளை மறக்கவே முடியாதுல😍😍😍😍😍
கண்டிப்பா ஏதாவது ஒரு வழி கிட்டுறேன்😜😜😜
ரொம்ப நன்றி மா😍😍😍💗💗💗💗
 

பிரிய நிலா

Well-known member
Member
ஓஓஓஓ.... ஸ்கூல் லவ்.... கார்த்திக் அண்ட் அனு தான் ஹீரோ அண்ட் ஹீரோயினா.. சூப்பர்...

அனு பயம் தெரியாமல் கார்த்திக் ஏதாச்சும் சொல்லிடப் போறான்.. பார்க்கலாம் என்ன நடக்கும்னு..
 

Nancy mary

✍️
Writer
ஓஓஓஓ.... ஸ்கூல் லவ்.... கார்த்திக் அண்ட் அனு தான் ஹீரோ அண்ட் ஹீரோயினா.. சூப்பர்...

அனு பயம் தெரியாமல் கார்த்திக் ஏதாச்சும் சொல்லிடப் போறான்.. பார்க்கலாம் என்ன நடக்கும்னு..
ஆமா சகி பள்ளி பருவ காதலை அதை எப்படி கையாளுவாங்கனு பார்க்கலாம்😍😍❤️
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
ஆமா சகி பள்ளி பருவ காதலை அதை எப்படி கையாளுவாங்கனு பார்க்கலாம்😍😍❤️
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
இரண்டு பக்கத்தை அழகா சொல்லிட்டீங்க...

கார்த்திக் அண்ட் கேங் எப்படி இருக்கனும்னு உதாரணம்..
வினோத் அண்ட் கேங் எப்படி இருக்கக்கூடாதுனு உதாரணம்...
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom