• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 19

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம் -19❤️

கார்த்திக் தனது துறை தலைவரை பார்க்க அவரின் அலுவலக அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தவனோ அங்கு அவரிடம் பேசி கொண்டிருப்பவரை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனான்.

அங்கு துறை தலைவரின்‌ முன் அமர்ந்திருந்த சத்யமூர்த்தியோ மற்ற மாணவர்களின் பெற்றோரை போலவே முதல் செமஸ்டர் மார்க் ஷிட்டை வாங்கியபடியும் மகளின் கல்விநிலையை விசாரித்தபடியும் இருந்தவரோ அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,

அப்பொழுது அவ்வறைக்குள் நுழைந்து அதிர்ந்து நின்ற கார்த்திக்கை கண்டு இளநகை பூத்தபடியே வெளியேறினார்.

தன்னை கடந்து செல்பவரையே ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கை அழைத்த துறை தலைவரோ டூர் செல்வதற்கான சர்குலரை தந்துவிட்டு, "இது எல்லா ஸ்டூடண்ட்க்கும் ஓகே வானு கேட்டுக்கோ கார்த்திக்; அப்படியே யார் யாரு வராங்கனு லிஸ்ட்ல எடுத்துட்டு காசும் வாங்கிடு இது எல்லாத்தையுமே நீதான் பொறுப்பா செய்யணும் சரியா ப்பா" என கேட்டு புன்னகைக்க

அதற்கு கார்த்திக்கும் பதிலுக்கு புன்னகைத்தபடியே வெளியேறியவனின் கண்களோ சத்யமூர்த்தியை தேடி அலைபாய அவனின் தேடுதல் வட்டத்திற்குள் விழுந்தார் சத்யமூர்த்தி.

கார்த்திக் சத்யமூர்த்தியை நோக்கி சென்றவனோ அவரிடம், "சார் நீங்க எப்படி சார் இங்க; உங்களை இங்க பார்ப்பேனு நினைச்சு கூட பார்க்கலயே; எப்படி சார் இருக்கீங்க நீங்க ஜாக்கிங் வந்தே பல மாசம் ஆச்சே வேலை அதிகமா இருக்கா அதுனால தான் வர முடியலையா; ஆமா இப்போ இங்க என்ன வேலையா வந்தீங்க சார்" என சரமாரியாக கேள்விகளை தொடுக்க,

அதனை கேட்டு திகைத்த சத்யமூர்த்தியோ, "அட கொஞ்சமாச்சு மூச்சு விட்டுக்கோப்பா, இப்போ எதுக்கு நீ நான்ஸடாப்பா கேள்வி மேல கேள்வி கேக்குற நீ அதிர்ச்சியாகுற அளவுக்கு இங்க ஒண்ணுமே நடக்கல சரியா; நான் இங்க வந்ததே என் பொண்ணோட மார்க் ஷிட்டை வாங்க தான் அவ பேரு அனுபிரியா இங்கதான் முதல் வருஷம் படிக்கிறா" என கூற அதை கேட்டு கார்த்திக்கோ இப்பொழுது நிஜமாகவே அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.

தான் காதலிக்கும் பெண்ணின் தந்தையென அறியாமலே உரிமையாய் பழகியிருக்கிறோமே என நினைத்து கார்த்திக் அதிர்ச்சியாக அவனின் உணர்வை முன்கூட்டியே யூகித்த சத்யமூர்த்தி மர்மபுன்னகை சிந்தினார்.

தனது மகளின் காதலையும் அதிலுள்ள உறுதியையும் அவளின் பேச்சினிலேயே முழுதாய் அறிந்துகொண்டவரோ கார்த்திக்கை பற்றி விசாரிக்க,

அவன் வார இறுதியில் தவறாமல் ஜாக்கிங் செல்வதை தெரிந்து கொண்டவரோ கார்த்திக் ஜாக்கிங் செல்லும் அதே பூங்காவிற்கு எதார்த்தமாய் செல்வது போல சென்று பேசி பழகியவாறே அவனை பற்றி ஆழமாய் தெரிந்து கொண்டார்.

அதிலும், கார்த்திக் அவரிடம் உரிமையாய் பழகுவதால் அவனின் காதல் தேடலையும் சொல்லி வைக்க; அதன்மூலம் அவன் காதலின் உண்மை தன்மையையும் ஆழத்தையும் அறிந்து கொண்டவரோ தன் மகளின் காதலுக்கு முழுமனதாய் சம்மதித்தது மட்டுமல்லாது கார்த்திக் பயிலும் அதே கல்லூரியில் சேர்த்துவிட்டபிறகு கார்த்திக் செல்லும் பூங்காவிற்கு ஜாக்கிங் செல்வதை நிறுத்தி கொண்டார்.

இதனையெல்லாம் அறியாத கார்த்திக்கோ அஞ்சி நடுங்க தனக்கு எதுவும் தெரியாதது போலவே நடித்தவரோ கார்த்திக்கிடம், "சரிப்பா, அப்போ நான் கிளம்புறேன் முடிஞ்சா என்னோட பொண்ணையும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ" என கூறியவரோ அவனின் தோளை தட்டிகுடுத்து விடைபெற கார்த்திக்கோ அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

அப்பொழுது வகுப்பு முடிந்து வெளியே வந்த கார்த்திக்கின் நண்பர்களோ கார்த்திக்கிடம் பேசிவிட்டு செல்லும் அனுவின் அப்பாவை பார்த்தபடியே வந்தவர்களோ,

கார்த்திக்கை நெருங்கி அவனின் தோளை தொட்டு உலுக்கிவாறே, "மச்சி, அனுவோட அப்பா உன்கிட்ட என்னடா பேசிட்டு போறாரு ஏதாவது முக்கியமான விஷயமா" என தினேஷ் கேட்க அதற்கு கார்த்திக்கோ,

"ஹேய் இவருதான் அனுவோட அப்பானு உனக்கு எப்படிடா தெரியும்" என குழப்பமாய் வினவ,

அதற்கு தினேஷோ, "அட என்னடா நீ; நம்ம கவி அக்காவோட நிச்சயத்துக்கு அனு அவளோட அப்பா அம்மாவோட தானே வந்திருந்தா; அதுனால அடையாளம் தெரிஞ்சு கேட்டேன்; ஏண்டா உனக்கு அவரை நியாபகமில்லையா" என வினவ,

அதற்கு கார்த்திக்கோ, "இல்லடா, அன்னைக்கு நான் அக்காவோட நிச்சயத்துல பிஸியா இருந்தததால யாரையுமே அவ்ளோவா கவனிக்கல டா; இதுல ஷாலினி வேற என்னைய மாமானு சொல்லி வம்பிழுத்துகிட்டே இருந்ததால அவகிட்டயிருந்து தப்பிக்கிறதை பத்தியே யோசிச்சேனா அதுல கவனிக்கல போலடா" என கூறி வருந்தியவனோ மேலும்,

"எனக்கு இப்போ ரொம்பவே பயமா இருக்குடா, அனு இவரோட பொண்ணுனு தெரியாம அவருகிட்ட என் காதலை பத்தி பயங்கரமா சொல்லிருக்கேன்; நாளைக்கு உண்மை தெரிஞ்சா அவரை நான் எப்படி பேஸ் பண்ணுவேனோ ஒண்ணுமே புரியலடா" என கூறி கலங்க,

அவனை தேற்றிய ரவியோ, "டேய், நீ தேவையில்லாம கவலைபடாத டா; உன்கூட நல்லா பேசி பழகியவருனு சொல்ற அப்போ கண்டிப்பா உன்னையபத்தி புரிஞ்சிப்பாரு நீ எதைபத்தியும் யோசிக்காத; ஆமா இதென்ன டா பேப்பரு" என கார்த்திக்கின் கையிலிருந்த சர்குலரை வாங்கி பார்த்தவனோ அதிலுள்ள செய்தியை படித்து மகிழ்ந்தபடி,

"மச்சி நமக்கு டூருக்கான சர்குலர் வந்திருக்கு டா; நம்ம மூணு நாள் ஜாலியா மூணார் டூர் போக போறோம் டா" என குதூகலிக்க

அதனை வாங்கி படித்து பார்த்த தினேஷோ, "டேய் கார்த்திக், இவ்ளோ பெரிய சந்தோஷமாக விஷயத்தை கொண்டாடாம இப்படியா தேவையில்லாம வருத்தபடுவ; எல்லாமே சரியாகிடும் நீ வா நம்ம போய் டூருக்கான ஏற்பாட்டை பண்ணலாம்" என கூறி அழைத்து செல்ல கார்த்திக்கோ நண்பர்களின் கூற்றிற்கிணங்க தனது குழப்பத்தை ஒதுக்கிவைத்து சுற்றுலாவிற்காக ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமானான்.

இங்கு மாணவர்கள் சுற்றுலாவை பற்றி கேள்விபட்டவுடன் ஆர்வமாக போட்டி போட்டு டூருக்கான பணத்தை கட்டி தங்களின் பெயரை பதிவு செய்தவர்களோ சுற்றுலா செல்லும் நாளுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்க அந்நாளும் இனிதாய் பிறந்தது.

💘💘💘💘💘

அனு கல்லூரி சுற்றுலா செல்வதற்கு தேவையானதை எடுத்து வைத்துகொண்டிருக்க அவளின் பாட்டியோ புலம்பி கொண்டிருந்தார்.

"இந்த குடும்பத்துக்கு மூத்தவளா இருக்கிற என் பேச்சுக்கு என்னைக்காவது மதிப்பு இருக்கா; நம்ம வீட்டு வயசு பொண்ணை பசங்களோட ஊர் சுத்த அனுப்புறீங்க இதெல்லாம் நல்லாவா இருக்கு; நாளைக்கு ஒண்ணு கிடக்க ஓண்ணு ஆச்சுனா யாரு பார்த்துப்பா" என தனது மனகுமுறலை கொட்டிகொண்டிருக்க,

அவரின் புலம்பலை அசட்டை செய்த அனுவோ தனது தந்தையை தேடி அலுவலக அறைக்குள் நுழைய,

அங்கே கலங்கிய விழிகளோடு அமர்ந்திருக்கும் தந்தையை கண்டு ஆறுதலாய் பேச துவங்கினாள்.

"அப்பா, நான் டூர்க்கு கிளம்பிட்டேன் ப்பா நீங்க எதைபத்தியும் கவலைபடாதீங்க; சீனியரும் எனக்கு துணையா வராரு அதுனால எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது" என கூற,

அவளின் தலையை வாஞ்சையாய் தடவியவரோ, "கார்த்திக் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு மா; ஆனா அப்பா உன்னை பிரிஞ்சு மூணு நாளு எப்படி இருப்பேனோ தெரியலடா அதான் சோகமா இருக்கேன்" என கூற,

அதுவரை அனுவும் அதே உணர்வில் இருந்தவளோ தந்தையை கட்டிகொண்டு அழ துவங்கினாள்.

அப்பொழுது அங்கு வந்த ஜெயாவோ, "அனு, என்ன நீ வெளியில போகும்போது இப்படியா அழுது வடிஞ்சிட்டு போவாங்க; அட என்னங்க நீங்க அவதான் சின்ன பொண்ணுனா நீங்களும் அழுதிட்டு முதல்ல இரண்டு பேரும் கண்ணை துடைங்க; அனு நீ டூர் போற இடத்துல பத்திரமா இருக்கணும் தனியா எங்கயும் போகாத; தண்ணீல இருந்து சாப்பாடு வரை எல்லாமே தரமா சுத்தமானதா இருக்கானு பார்த்துக்கோ பத்திரமா போயிட்டு வா சரியா" என அறிவுரை வழங்கிய தாயை கட்டிகொண்டவளோ,

"மிஸ் யூ மா" என கூறி அழுக அதற்கு ஜெயாவோ,

"நீ என்னைய மிஸ் பண்ணிக்கோ டி ஆனா நான் நீ இல்லாம ரொம்பவே சந்தோஷமா இருப்பேன்" என அவளை இயல்பாக்குவதற்காக கூற அதனை கேட்டு முறைத்த அனுவின் தலையில் செல்லமாய் கொட்டியவாறு வழியனுப்பி வைத்தார்.

கல்லூரி பேருந்திலே டூருக்கு செல்வதால் அனுவை வழியனுப்புவதற்காக கல்லூரிக்கு கிளம்ப சத்யமூர்த்தி காரில் ஏற அனுவும் தன்னை முறைத்த பாட்டியிடம் நாக்கை துருத்தி அழகுகாட்டியபடியே காரில் அமர்ந்தவளோ, மாலை நேர சூழலை ரசித்தபடி பயணிக்க அவளின் ரசிப்பினை தடை செய்தார் சத்யமூர்த்தி.

"என்ன அனுமா, இப்போயாவது உன் சீனியர்கிட்ட காதலை சொல்லிடுவீயா இல்ல இன்னும் டைமாகுமா" என கேட்டு சிரிக்க,

அதற்கு அனுவோ, "அப்பா, நீங்க என்னோட காதலுக்கு சம்மதிச்சதே பெருசுப்பா இதுல அதை சீனியர்கிட்ட சொல்லிட்டீயானு வேற கேக்குறீங்களே; கொஞ்சமாவது ஸரீட்டான அப்பாவை இருங்கப்பா" என சிணுங்கலோடு மொழிய,

அதற்கு சத்யமுர்த்தியோ, "அனு மா, அப்பா எப்பயுமே உனக்கொரு பிரண்ட் மாதிரி தானே நடந்துப்பேன் அதேபோல தான் இப்பயும் கேக்குறேன்; இதுல தப்பே இல்லையே டா நீயும் அப்பாவோட வழிகாட்டுதல் இல்லாம ஒண்ணுமே பண்ண மாட்ட; அப்போ எதுக்காக நான் கண்டிப்பான அப்பா வா இருக்கணும் சொல்லு" என வினவ தனது தந்தை கட்டிகொண்ட அனுவோ,

"லவ் யூ சோ மச் அப்பா" என கூற "இதை சீனியர்கிட்ட சொல்லுவீயா மா" என மீண்டும் கலாய்த்ததில் கடுப்பானவளோ,

"போங்கப்பா, என்னை நீங்க ஓவரா தான் கலாய்க்கிறீங்க; இதுக்காகவே இந்த டூர் முடிஞ்சு வரதுக்குள்ள காதல்ல சொல்லிடுறேன் பாருங்க" என செல்லமாய் மிரட்ட அதனை கேட்டு சிரித்துகொண்டே காரினை செலுத்தினார் சத்யமூர்த்தி.

அங்கு கல்லூரிக்குள் சத்யமூர்த்தி அனுவை அழைத்துகொண்டு விரைய கல்லூரி பேருந்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த கார்த்திக்கையும் நட்பு பட்டாளத்தையும் கண்டு அவனை நோக்கி சென்றார்.

கார்த்திக்கிற்கோ சத்யமூர்த்தியை கண்டு வயிற்றுக்குள் பயபந்துகள் உருள நிற்க சத்யமூர்த்தியோ அனுவை பஸ்ஸில் ஏற சொல்லியவாறு பேருந்து கிளம்ப நேரமிருப்பதால் கார்த்திக்கிடம் பேச வேண்டுமென தனியே அழைத்து சென்றார்.

"சார், நீங்க என்கிட்ட என்ன சார் பேசணும்; ஏதாவது பிரச்சனையா" என பயத்துடன் மிரண்டபடி கேட்க,

அதற்கு சதயமூர்த்தியோ, "அது வந்துப்பா, நான் அன்னைக்கு உன்னைய காலேஜ்ல பார்க்கும்போதே சொல்லாம்னு நினைச்சேன்; ஆனா நீ ஏதோ யோசனையா இருந்ததால அப்புறமா சொல்லலாம்னு வந்துட்டேன்; அது என்னனா எனக்கு உன்னோட அக்காவையும் மாமாவையும் முன்னாடியே தெரியும்பா; என்னோட முக்கியமான கேஸ்ல அவங்களோட ஆதாரம் தான் பெருசா உதவிச்சு ஆனா அவங்களை பார்த்து பல மாசமானதால டக்குனு நியாபகம் வரல; அவங்களோட நிச்சயத்துக்கு வந்தும் பேசாம போயிருக்கேன் அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் ப்பா" என கூறியவரை தடுத்த கார்த்திக்கோ,

"அய்யோ, இதுக்கு எதுக்கு அங்கிள் சாரி கேக்குறீங்க" என கூற அதற்கு சிரிப்பையே பதிலாய் அளித்தவரோ மேலும் தொடர்ந்தார்.

"எனக்கு உன்னைய பத்தியும் உன் காதலை பத்தியும் நல்லாவே தெரியும் ப்பா, என் பொண்ணு என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா அதுனால தான் உன்கிட்ட நட்பா பழகி உன்னைய பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டேன்; ஒருதலை காதல்னாலே மிரண்ட எனக்குள்ள மாற்றத்தை நிகழ்த்துனது உன்னோட காதலும் அதை நீ அணுகின அணுகுமுறையும் தான் ஆனாலும் ஒரு விஷயத்துல நீ கவனமா இருக்கணும்" என கூறியவரோ சிறிது இடைவெளிவிட்டு தனது பேச்சை தொடர்ந்தார்.

"அது ஒண்ணுமில்லப்பா, நீ மெச்சூர்டான பையன்னு நல்லாவே தெரியும் ஆனாலும் இப்போதைக்கு இரண்டு பேருமே வாழ்க்கையில செட்டிலாகுற மட்டுமே கவனம் செலுத்துங்க; உங்களோட காதலை யாராலயும் தடுக்க முடியாது தான் ஆனா அதேசமயம் அது உங்க லட்சியத்தை தடுத்திடகூடாது சரியா" என கூறியவரோ,

அவனின் கையை தனது கைகளால் பிடித்துகொண்டபடி, "அனுவை பத்திரமா பார்த்துக்கோ ப்பா" என இருபொருள்பட கூறியபடியே அங்கிருந்து சென்றார்.

அவரின பேச்சினை கேட்ட கார்த்திக்கோ தன்மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காக்க வேண்டுமென்ற உறுதியோடு பேருந்தில் ஏறிட இனிமையான பயணத்தை நோக்கி பேருந்து பயணிக்க துவங்கியது.

💘💘💘💘💘

சுற்றுலாவிற்கு செல்லும் மாணவர்கள் வழக்கம் போல தங்களின் ஆட்டம் பாட்டத்திற்கு குறைவில்லாமல் சத்தமிட்டு ஆடி பாடி செல்ல அவர்களின் ஆர்ப்பாட்டத்தினால் இரவின் நிசப்தமும் கலைந்து ஆட்டம் கண்டது.

மாணவர்களை அடக்க முயற்சித்து களைத்து போன ஆசிரியர்கள் சோர்வாய் கண்ணயர்ந்த நேரத்தில் பேருந்து மூணாரை சென்றடைந்தது.

தென்னகத்து காஷ்மீர் என அழைக்கபடும் இடுக்கி மாவட்டத்தில் அமைந்த மூணாரோ தனது கண்கவர் இயற்கை அழகை மாணவர்களின் கண்களுக்கு விருந்தாக்கி அழகாய் வரவேற்க,

அதனை கண்ட மாணவர்களோ உற்சாகமாக பேருந்திலிருந்து இறங்கி ஓட முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய முன்றாறுகள் சங்கமிக்கும் இடமான மூணாறுக்கும் அவர்களின் மகிழ்ச்சி தொற்றிகொள்ள அனைவரின் மனதிற்கும் இதமளிக்கும் தேயிலையில் தயாராக தேனீரை அன்பளிப்பாய் அளித்து மாணவர்களின் புத்துணர்வை குறையாமல் பார்த்து கொண்டது.

அப்பொழுது அனுவிற்கு தேயிலையை பரிசளித்த கார்த்திக்கோ என்னவளுக்கு பரிசளிக்கும் உரிமை எனக்கு மட்டுமானது என உரைக்கும் விதமாக இயற்கையோடே பொறாமைபட்டு போட்டி போட்டான்.

மாணவர்கள் அனைவரும் அந்த இயற்கை அழகை ரசித்தபடியே அங்குள்ள விடுதியில் அறையெடுத்து தங்கிகொண்டு புத்துணர்வாகியபடி சுற்றிபார்க்க கிளம்பினர்.

மாணவர்கள் முதலில் இரவிகுளம் தேசியபூங்காவிற்கு நுழைய 97 சதுர கிமீ பரப்பளவிலுள்ள அப்பூங்காவின் பட்டாம்பூச்சிகளையும் பறவைகளையும் ரசித்தபடி செல்ல அவர்களின் கண்களுக்கு விருந்தாகும்படி பண்ணிரெண்டு ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் நீலகுறிஞ்சி மலர்களை ரசித்தனர்.

அப்பொழுது அனுவோ கார்த்திக்கிடம், "சீனியர், நம்ம சரியான நேரத்துல வந்திருக்கோம்ல இந்த பூவை எல்லாம் பார்க்குறதே அபூர்வம்; அதை நம்ம வந்தப்போ பார்க்குறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு" என கூறி குதூகளிக்க அவளின் மகிழ்ச்சி இவனையும் தொற்றிகொண்டது.

அப்பொழுது கார்த்திக்கின் நண்பர்களோ இங்கு வந்தபிறகும் தங்களது சேட்டைகளை குறைக்காமல் நீலகிரி வரையாடுகளை துரத்தியபடி ஓடினர்.

இரவிகுளத்திலிருந்து ஆனைமுடி சிகரத்திற்கு சென்றவர்களோ அதனை கண்டு மலைத்து நிற்க கார்த்திக்கோ அனுவிடம், "அனு, இந்த ஆனைமுடி சிகரம் தான் தென்னிந்தியாவிலேயே உயரமான சிகரம் தெரியுமா" என கூற,

அதனை கேட்ட ரவியோ அட என்னடா இது, இதுக்கு தான்டா படிப்பாளிங்களோட எல்லாம் வரகூடாதுனு சொல்றது இப்போ பாரு இங்க வந்தும் கிளாஸ் எடுத்து டார்சர் பண்றான்" என கூற அதனை கேட்டு சிரித்த அனுவை முறைத்தவாறே கார்த்திக் அங்கிருந்து செல்ல அன்றைய பயணமும் இனிதாய் முடிந்தது.

இவ்வாறான அடுத்தடுத்த நாட்களின் மற்ற சுற்றுலா தளங்களான ராஜமலை, கள்ளன் குகை, பெரியகானல் அருவி என வரிசையாய் சுற்றியவர்களோ இறுதியில் வாகுவறை தேயிலை தோட்டத்தை சுற்றிப்பார்த்து தேயிலையை ரசித்தபடியே தங்களின் பயணத்தை முடித்து கொண்டனர்.

மூணாரை சுற்றிபார்க்கும் இம்மூன்று நாட்களில் அனு தனது காதலை கார்த்திக்கிற்கு உணர்த்த நினைக்க அதற்குள் அவனோ சுற்றுலா தளத்தினை சுற்றிகாட்டும் வழிகாட்டியாய் மாறுவதும் அக்கறை என்ற பெயரில் அவளின் மனதினை கரைப்பதுமாக இருக்க அனுவிற்கான காதல் வாய்ப்புகள் பூஜ்ஜியத்தில் வந்து நின்றிட கல்லூரி பேருந்தும் மூணாரிலிருந்து கிளம்பி கல்லூரிக்குள் வந்திறங்கியது.

அப்பொழுது பேருந்திலிருந்து இறங்கிய அனுவோ கார்த்திக்கிடம் தனது காதலை சொல்ல முடியாதா என ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்க,

அவளின் பார்வையை சோர்வு என புரிந்து கொண்டவனோ, "அனு, உனக்கு ஒன்னுமில்லையே ஏன் டல்லா இருக்க இவ்ளோதூரம் டிராவல் பண்ணதுல டயர்ட்டா இருக்கா மா" என மிக மென்மையாக கேட்டு அவளின் கன்னத்தை தனது கைகளில் தாங்க,

இதற்கு மேல் தன்னால் தாங்க முடியாதென நினைத்த அனுவோ கார்த்திக்கை இறுக்கமாக கட்டிகொண்டபடி,

"ஐ லவ் யூ சீனியர்"

என்றுரைக்க அதனை கேட்ட கார்த்திக்கோ உறைந்து போக அவனின் நண்பர்களோ கார்த்திக்கின் காதல் இணைந்த மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து குத்தாட்டம் போட்டனர்.



காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

பிரிய நிலா

Well-known member
Member
பார்றா... சூப்பர் சிஸ்... எம்மா அனு உனக்கு ஓவர் தைரியம் தான். இந்தத் திறமை எல்லாம் கார்த்திக்கு இல்ல...
 

Rajam

Well-known member
Member
சொல்லிட்டா.
அனு தன் காதலை கார்த்திக்கிடம்
சொல்லிட்டா. காரத்திக்க முந்திட்டா.
 

Nancy mary

✍️
Writer
பார்றா... சூப்பர் சிஸ்... எம்மா அனு உனக்கு ஓவர் தைரியம் தான். இந்தத் திறமை எல்லாம் கார்த்திக்கு இல்ல...
ஆமா ஆமா சகி😂😂😂
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
சொல்லிட்டா.
அனு தன் காதலை கார்த்திக்கிடம்
சொல்லிட்டா. காரத்திக்க முந்திட்டா.
ஆமா அனு சூப்பர்ல😉😉😉
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
சுற்றுலாவில் உதயமான காதல்... அடடே ஆச்சரியக்குறி😜😜 ஆனா ஒன்னு காதலே பிடிக்காதுனு சொன்னவ தான் செம ப்ளேஸ்ல வச்சு ப்ரபோஸ் பண்ணிருக்கா😜😜 வாழ்க வளமுடன்🤗🤗
 

Nancy mary

✍️
Writer
சுற்றுலாவில் உதயமான காதல்... அடடே ஆச்சரியக்குறி😜😜 ஆனா ஒன்னு காதலே பிடிக்காதுனு சொன்னவ தான் செம ப்ளேஸ்ல வச்சு ப்ரபோஸ் பண்ணிருக்கா😜😜 வாழ்க வளமுடன்🤗🤗
ஆமா நம்ம ஹீரோ எல்லாத்தையும் மாத்திட்டான்ல😍😍😍
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom