தேடல் - 16

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம் -16❤️

சூர்யன் தனது ஓட்டுமொத்த சக்தியையும் செலுத்தி மதிய வேளையில் மக்களை களைப்படைய செய்ய அயராது உழைத்த உழைப்பில் தானே களைபடைந்து மாலை நேர மஞ்சள் நிறத்தை மேகத்தில் படரவிட்டு அரைதூக்க நிலைக்கு செல்ல,

அப்பொழுது தீடீரென விண்ணை மூட்டும் அளவுக்கு எழுந்த கரகோசத்தால் சுயமறிந்து துயில் களைந்த சூர்யனோ மாலை நேரமானதை உணர்ந்து தனது பணியினை முடிந்துகொண்டு அரக்கபறக்க அங்கிருந்து கிளம்பி கொண்டிருந்தது.

சூர்யனின் அவசர நிலையினை போலவே கார்த்திக்கின் மனமும் வேகமாய் அடித்துகொள்ள ஏனோ அனு அவனை விட்டு தூரமாய் செல்வது போன்ற உணர்வும் சேர்ந்து தாக்க அதனை ஏற்றுகொள்ள இயலாதவனோ, ஆரவாரம் செய்யும் கூட்டத்தினை பார்த்தபடியே அனுவின் கையை அழுத்தமாய் பற்றிகொண்டான்.

அதேபோல அனுவும் அவளின் மனதின் நிலையினை உணர இயலா வகையில் குழம்பிருக்க அப்பொழுது சுற்றிலும் எழுந்த மாணவர்களின் கரசோசமும் அவளை திகைப்பிற்குள் தள்ளியது.

இந்நிலையில் இன்டர் ஸ்கூல் காம்படிசனின் சிறப்பாய் பங்களித்த பள்ளியை தேர்ந்தெடுக்கும் விதமாய் நடுவர்கள் குழு கலந்துரையாட, அவர்களின் முடிவுகளை தெரிந்து கொள்ள அனைவரும் அரைமணி நேரம் தவமிருக்கும் நிலைக்கு தள்ளபட்டனர்.

ஆனால் மாணவர்கள் அத்தவத்தினை கண்டுகொள்ளாது மிச்சம் மீதியிருந்த ஸ்டால்களில் புகுந்து விளையாடி கொண்டிருந்தனர்.

இதனையெல்லாம் கண்டுகொள்ளாத கார்த்திக்கோ தன் மனதின் பின்பத்தினை எடுத்துரைக்கும் விதமாக சூரியனை பிரிய இயலாமல் தவிக்கும் வானத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவனோ ஒரு தெளிவான முடிவோடு அனுவினை தேடி சென்றான்.

இங்கு அனு அவளின் தோழிகளை சூழ நின்றுகொண்டிருந்தாலும் அவளது மனமோ குழப்பத்திலேயே சூழ்ந்திருக்க, அத்தோழிகளோ பள்ளி முழுக்க பல மாணவிகள் பேசுவதை அடிப்படையாக வைத்து தன்னையும் சீனியரையும் காதலர்களாய் இணைத்து பேசுவது கூட உணராமல் குழம்பத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது அனுவை நோக்கி வந்த கார்த்திக்கோ அனுவிடம், "அனு, உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என கூற தோழிகள் நமட்டு சிரிப்போடு அங்கிருந்து நழுவி செல்ல அனுவோ கார்த்திக்கின் பேச்சில் மேலும் குழம்பியபடி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவளின் குழப்பமான முகபாவத்தினை கண்டு தனது மனதினை ஒருநிலைபடுத்திய கார்த்திக்கோ, "அனு, இப்போ நான் சொல்ல போற விஷயத்தை கேட்டு நீ கோபபடவோ திட்டவோ கூடாது என்னைய விட்டு விலக கூடாது; இந்நாள்வரை நம்ம எப்படி சீனியர் ஜீனியரா பழகினோமோ அதேமாதிரி தான் பழகணும் ஓகே வா" என கேள்வியெழுப்ப கார்த்திக்கின் பேச்சினை கேட்ட அனுவோ தனது தலையினை தன்னிச்சையாக சரியென அசைத்தாள்.

அனுவின் செயலை பார்த்து மெலிதாய் புன்னகைத்த கார்த்திக்கோ தனது மனதினை திறந்த புத்தகமாக காட்டும் முயற்சியில் ஈடுபட துவங்கினான்.

"அனு, இப்போ நான் சொல்ற விஷயம் கண்டிப்பா உனக்கு பிடிக்காததா ஏன் கோபத்தை ஏற்படுத்த கூடிய விஷயமா கூட இருக்கலாம் ஆனாலும் இதை நான் உன்கிட்ட சொல்லணும்னு முடிவெடுத்திருக்கேனா அதுக்கு காரணம் என் மனசுல இருக்கிற குழப்பமும் பயமும் தான்; எங்க உன்னைய இழந்திடுவேனோனு பயம் எங்க உன் வெறுப்பிற்கு ஆளாகிடுவேனோற குழப்பம் அதுனால தான் இப்போ என்னோட உணர்வை வெளிபடுத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்; இதுவரைக்கு சொல்லாததுக்கு காரணமே உன்னோட மனநிலை தான் இப்போ அந்த மனநிலை கொஞ்சம் மாறிடுச்சுனு நம்புறேன் அதான் தைரியமா சொல்ல போறேன்" என கூறியவனோ சற்று தன்னை ஆசுவாசபடுத்திகொண்டு அனுவினை பார்க்க,

அவளின் துள்ளிதிரியும் மீன் கண்களோ மருண்டபடி மேலும் துள்ளிகுதிக்க அதனை பார்த்து சுவாரஸ்யமான கார்த்திக்கோ அதனின் துள்ளலை ரசித்தபடியே தனது துள்ளும் மனதினை அடக்கிகொண்டு கூற துவங்கினான்.

அனுவின் கண்ணோடு கண் சேர்த்து கொண்டவனோ தனது அரும்பு மீசையால் அலங்கரிக்கபட்ட வெவ்விதழை திறந்து, "இப்போ எனக்கு நீ துணையா சந்தோஷமா நட்பா அரவணைப்பா இருந்து அன்பு செலுத்துற மாதிரி காலம் முழுக்க காதலால அன்பு செலுத்தி துணையிருக்க முடியுமா அனு; நான் உனக்கு துணையான அன்பை எப்பவுமே தந்து காதலிக்க முடியும் அதுபோல உன்னால என்னை காதலிக்க முடியுமா" என கேட்டவனோ மேலும்,

அவளை நெருங்கி, "நான் உன்னைய உயிருக்குயிரா காதலிக்குறேன் அனு; உன் காதலுக்காக காலம் முழுக்க காத்திருந்து என் காதல் தேடலை தொடர்ந்துகிட்டே இருக்க தயாரா இருக்கேன் ஆனா அதுக்கு முற்றுபுள்ளி வைச்சு நிறைவளிக்க நீ தயாரா இருக்கீயா அனு" என காதலாய் கேள்வியெழுப்ப,

கார்த்திக்கின் காதலை பற்றி அறிந்துகொண்ட அனுவோ பேரதிர்ச்சியோடு தன் சீனியரை காண அவனின் கண்களில் நிரம்பி வழிந்த காதலை கண்ட நொடியில் அவனின் கூற்று உண்மையென உணர்ந்தவளோ அவனை விட்டு சட்டென பிரிந்து செல்ல கார்த்திக்கின் மனமோ சொல்லென வேதனையில் ஆழ்ந்தது.

ஆனாலும் தன் மனதினை நிலைபடுத்தி கொண்டவனோ தன்னவளுக்கு தன் காதலினை உணர்த்தும் அக்னி பரிட்சையினை எழுத துவங்கினான்.

"அனு, நீ என்னைய விட்டு ஏன் விலகி போறனு எனக்கு நல்லாவே புரியுது காதலே பிடிக்காம காதல் தூது தூக்கிட்டு வலம் வர பசங்களையும் வெறுத்திட்டு சுத்துற உன்கிட்ட காதலிக்கிறேன்னு சொன்னா உன் மனநிலை இப்படிதான் இருக்கும்னு நல்லாவே தெரியும்; ஆனா இத்தனை நாளா நம்ம பழகுன பழக்கம் உன்னோட மனநிலையை அசைச்சு பார்த்திருக்கும்னு நினைச்சு தான் நான் தைரியமா என் மனசை சொன்னேன் ஆனா இன்னமும் ஏதோ ஒரு மூலையில உன் மனசுல அந்த வெறுப்பு நிரந்தரமா தங்கியிருக்குனு தெளிவா புரியுது.." என கூறியவனோ பெருமூச்சு விட்டுகொண்டு மேலும் தன் பேச்சை தொடர்ந்தான்.

"அனு நான் ஒண்ணும் உன்னைய நேத்து காதலிச்சு இன்னைக்கு வந்து காதலை சொல்லல உன்னைய பார்த்த நொடியில இருந்து அனுஅனுவா காதலிச்ச காதலுக்கு உயிரளிக்க தான் இப்போ நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்" என கூறிய கார்த்திக்கை அனு குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்க,

கார்த்திக்கோ தனது காதல் பக்கத்தை புரட்ட துவங்கினான்.

"அனு, உன்னைய நான் முதல் தடவை பார்த்தப்போ என் கண்ணுக்கு நீ வளர்ந்த குழந்தையா குழந்தை மனசுகாரியா தான் தெரிஞ்ச அதை உண்மைனு நிருபிக்கிற விதமா என்னைய பார்த்ததுமே மிரண்டு துள்ளுன உன் கண்களை பார்த்தப்போ என்னை அறியாம என் மனசும் அக்கண்களுக்குள் துள்ளி குதிச்சிருச்சு; அதுனால தான் உன்னைய அண்ணானு கூப்பிட விடாம தடுக்க ஏதேதோ பேசிட்டேன்.." என கூறியவனோ அன்றைய நினைவினை நினைத்து புன்னகைத்தபடியே மேலும்
தனது பேச்சினை தொடர்ந்தான்.

"அனு நான் இதெல்லாம் ஏன் செஞ்சேன் எதுக்காக செஞ்சேன்னு எனக்கு அப்போ சுத்தமா புரியல; ஆனா ஒருநாள் என் பிரண்ட்ஸ் நம்மளை லவ்வர்ஸா சொல்றாங்க நீங்களும் அப்படிதான் நினைக்குறீங்களானு கேட்டேல அப்போதான் நானும் என் மனசை உணர்ந்தேன்; அதை உணர்ந்த அடுத்த நொடியே உன்னோட மனநிலையையும் தெரிஞ்சுகிட்டேன் அதுனால முதல்ல உன்னோட கண்ணோட்டத்தை மாத்தி அப்புறமா என் காதலை உணர்த்தலாம்னு நினைச்சேன்.."

"என்னோட இயல்புலயே நான் இருக்கிறதால நீயும் என்னைய மத்த பசங்களை போல பார்க்காம இயல்பா பேச ஆரம்பிச்ச, உன்னோட நான் செலவழிக்கிற ஒவ்வொரு நொடியையும் அனுஅனுவா ரசிச்சு கடத்துறதுக்காகவே பல வழிகள்ல துணையா இருந்தேன்; அதெல்லாம் இப்போ மட்டுமில்ல எப்பயுமே என் மனசுல பொக்கிஷ தருணமா நிலைச்சிருக்கும்; நீ உன்னோட முடிவை உடனே சொல்லணும்னு அவசியமில்ல நல்லா யோசிச்சு உன்னோட படிப்பை முடிச்சு நல்ல வேலையில செட்டிலாகி பக்குவமான பிறகு கூட உன்னோட முடிவை சொல்லலாம்; அப்போகூட உன் முடிவு என்னை நீ காதலிக்கலனு சொல்றதா இருந்தா அதையும் நான் முழுமனசா ஏத்துப்பேன் ஆனா காலம் முழுக்க உன்னைய நினைச்சுகிட்டே வாழ்ந்திடுவேன்.." என தன் மன எண்ணத்தின் நிரம்பிய காதலை கூறியவனோ பின்பு அனுவிடம்,

"அனு, இப்போ நீ எதைபத்தியும் யோசிச்சு குழப்பிக்காத; இது என்னோட நம்பர், இப்போ நான் உனக்கு எப்படி துணையா இருக்கிறனோ அதேமாதிரி எப்பயுமே உனக்கு உதவியா துணையிருப்பேன் என் உதவி தேவைபட்டா உடனே போன் பண்ணு; அதுபோல என் காதலை ஏத்துகிறதா இருந்தாலும் சொல்லிடு என் உயிர் காதலை உன்கிட்ட தேடிட்டே நான் காலம் முழுக்க காத்திருப்பேன் அனு" என கூறி முழுக்க,

கார்த்திக்கின் பேச்சை பிரமித்து கேட்டவளோ ஒரு முடிவோடு அவனை ஏறிட்டு பார்த்தபடியே தனது எண்ணத்தினை வெளிபடுத்த துவங்கினாள்.

"சீனியர், நீங்க என்னைய காதலிப்பீங்கனு நான் சத்தியமா எதிர்பார்க்கல ஆனா இப்போ மட்டும் இல்ல பக்குவமானவளா மாறுனா கூட என்னோட முடிவு ஒண்ணு தான், நீங்க இப்ப மட்டுமில்ல எப்பயுமே என்னோட சீனியர் தான்; உங்க நம்பரை நான் தூக்கி போட மாட்டேன் ஏன்னா, எனக்கு என் சீனியரோட அன்பான வழிகாட்டல் எப்பயுமே வேணும் ஆனா காதலான வழிகாட்டல் தான் கொஞ்சம் கேள்விக்குறியா இருக்கும்; அதுனால நீங்க இந்த காதலை ஓரம் கட்டிட்டு என் சீனியரா காலம் முழுக்க துணையிருந்தாலே போதும் எனக்காக துணையா வருவீங்கல" என கேள்வியெழுப்ப,

கார்த்திக்கோ இத்தனை நேரமும் குழம்பி தவித்தவளா இந்தளவுக்கு தெளிவாக பேசுகிறாள் என நினைத்து ஆச்சர்யபட அதற்குள் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்க போவதாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர கார்த்திக்கின் கையை பிடித்த அனுவோ,

"சீனியர், காம்படிசனோட வின்னர் யாருனு சொல்ல போறாங்களாம் வாங்க போகலாம்" என உற்சாகமாக அவனை இழுத்துகொண்டு செல்ல கார்த்திக்கோ என்றும் அவளிடமே சரணடையும் தனது மனதினை போல இப்பொழுதும் அவளிடமே முழுதாய் சரணடைந்தபடி
அவளை பின்தொடர்ந்து சென்றான்.

இங்கு காம்படிசன் முடிவுகள் கூறபடுவதற்கு முன் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாய் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசளிக்க கார்த்திக்கின் குழுவும் ஆண்கள் பள்ளியும் போட்டி போட்டு தனிதனியா மெடல்ஸ் சர்ட்டிபிகேட் வாங்கிட அனுவும் அவள் போட்டியிட்ட போட்டிகளுக்கு பரிசுகளை வாங்கிட மற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை தந்து முடிந்த பிறகு போட்டியின் முடிவாக எந்த பள்ளிக்கு வெற்றி பெற்றது
என கூற தயாராக,

ஆண்கள் பள்ளியோ தாங்கள் ஜெயிக்க வாய்பிருக்கும் என நம்பி காத்திருக்க அவர்களின் நம்பிக்கை எனும் ஜோதி நமத்து போன பட்டாசாக மாறும்படியே அறிவிப்பும் வந்தது.

"இன்டர் ஸ்கூல் காம்படிசனில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளியாக கவிதை நடையில் பாடல் பாடி மகிழ்வித்த பள்ளியே வெற்றி பெற்றதாக அறிவிக்கிறோம்" என கார்த்திக்கின் பள்ளியின் பெயரை கூறி அறிவிக்க கார்த்திக்கின் நட்பு பட்டாளமும் அனுவும் சந்தோஷமாக மேடையேற இவர்களுடன் தொற்றிகொள்ள பார்த்த டேவிட் கேங்கை பீட்டி சார் பிடித்து வைத்து கொண்டார்.

கார்த்திக் குழுவிடம் மிக பெரிய தங்க பதக்கம் தரபட அதனை தன் நண்பர்களுடனும் அனுவுடனும் வாங்கியவனோ பதக்கத்தை கையில் பிடித்தபடியே அனுவோடு இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டான்.

பள்ளியின் கொண்டாடங்கள் முடிந்து மாணவர்கள் விடைபெற கார்த்திக் அனுவிடம், "அனு, எனக்கு பிளஸ் டூ எக்ஸாம் இருக்கிறதால நாளையில இருந்து ஸ்டடி ஹாலிடேஸ் விடுறாங்க, அதுனால நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன் அடுத்து பப்ளிக் எக்ஸாம் அப்போ வந்தாலும் பரிட்சை எழுத ஸ்கூல் பஸ்ல போறதுக்காக தான் வருவேன்; அதுனால இனி நம்ம அடிக்கடி பார்த்துக்க முடியாது என்னோட காதல் தொல்லைகளும் உனக்கு இருக்காது கவலைபடாத" என கூறி சிரிக்க அச்சிரிப்பில் உயிர்பில்லாமல் இருந்ததென்பது தெள்ள தெளிவாய் தெரிய அதனையெல்லாம் மறைத்துகொண்டு தனது பேச்சினை மேலும் தொடர்ந்தான்.

"அனு, உனக்கு படிப்பு சம்மந்தமா எந்த உதவி வேணும்னாலும் இல்ல ஏதாவது தனிப்பட்ட விதத்துல உதவி வேணும்னாலும் என்கிட்ட கண்டிப்பா கேட்கலாம்; உனக்கு உதவி பண்ண உன் சீனியரா எப்பயுமே நான் துணையிருப்பேன் சரியா" என கூற உடனே அனு சந்தோஷமாய் தலையசைத்தாள்.

தனது காதலை கண்ணுக்குள் நிரப்பிகொண்ட கார்த்திக்கோ அனுவை பார்த்தபடியே அங்கிருந்து செல்ல அனுவோ தனது கண்ணோரம் துளிர்த்த ஒன்றை கண்ணீர் துளியை உள்ளிழுத்து கொண்டு கார்த்திக்கை வழியனுப்பி வைத்தாள்.

இவர்களின் இப்பிரிவினை பிரம்மாண்ட பிரிவாய் மாற்ற விதி தனது சதியால் ஆரம்பபுள்ளி வைத்ததை பாவம் இவர்கள் அறிந்திருக்கவில்லை அச்சதி செயல் தெரிந்திருந்தால் சிந்தித்திருப்பார்களோ..???

💘💘💘💘💘

விதியின் திருவிளையாடல் சிறப்பாய் ஆரம்பமாகிட இவர்களின் வாழ்க்கை பயணத்தை காலபயணத்திலே விரைவாய் கண்டுவிட முடிவெடுத்த விதியோ முக்கிய நிகழ்வினை மட்டும் அசைபோட்டு கொண்டது.

அனுவினை காம்படிசனிலிருந்து சந்தித்து சென்ற கார்த்திக்கிற்கு அதன்பிறகு அனுவின் தரிசனமென்பதே குதிரை கொம்பாய் மாறிட, அதனை எண்ணி சோர்ந்து போகாமல் தனது கவனத்தை படிப்பினை நோக்கி திருப்பினான்.

நேசனோ பேங்கில் லோன் வாங்கி சிறிதாய் கம்பெனியை துவங்கி பூமி பூஜை நடத்த, ஒருகாலத்தில் தனது தங்கையையும் மதிக்காமல் தனது தங்கை கணவனையும் மதிக்காமல் சுற்றிய சுந்தரமோ இப்பொழுது அவர்களையும் தனது குடும்பத்தின் முக்கிய அங்கமாய் மதித்து நடந்திட அதனை கண்ட காமாட்சியின் கண்களோ கணவனின் மாற்றத்தை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தது.

கார்த்திக் தனது விடாமுயற்சியால் பொது தேர்வுக்கு தயாராகி அக்காவிடம் சென்றவனோ, "அக்கா, நான் நல்லா எழுதி ஸடேட் பர்ஸ்ட் வாங்கணும்னு ஆசீர்வாதம் பண்ணு" என கூற,

தனது தம்பிக்கு விபூதியை எடுத்து வைத்த கவியோ, "நானே உன்னைய ஆல் தி பெஸ்ட் சொல்லி வழியனுப்பலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட, சரி இப்போ நீ படிச்சவரைக்கும் போதும்; பஸ்ல போகும்போது எதைபத்தியும் ரிவைஸ் பண்ணாம ரீலாக்ஸா இரு; கேள்வி தாள்ல கேள்விகள் கஷ்டமா வந்துச்சுனா பதறாத நிதானமா யோசிச்சு எழுது ஓகே" என பொதுவான அறிவுரையை கூறி வழியனுப்ப கார்த்திக்கும் அக்காவின் அறிவுரையை கேட்டு பள்ளிக்கு கிளம்பினான்.

அங்கு இவர்கள் பள்ளி பேருந்து செல்வதை அனைவரும் பார்த்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வழியனுப்பி வைக்க ஆனால் கார்த்திக்கிற்கு தரிசனம் தர வேண்டியவளோ, தரிசனம் தராமல் போகவே அவனின் பயணமும் சோகமாய் தொடங்கிட இதுவே தொடர்கதையாய் பொது தேர்வு முடியும்வரை நிகழ்ந்தது.

இங்கு நேசனோ தன்னுடைய படிப்பை முடித்து பிஸினஸின் முழு மூச்சாக இறங்கிட முதலில் இவனை அனுபவமில்லா பொடியன் என எண்ணிய பெரிய தலைகட்டுகளின் தலைகளை உருட்டிடும் அளவிற்கு வேகமாக வளர அவனின் அசுர வளர்ச்சியை கண்டு சுந்தரத்திற்கு துரோகம் செய்த நட்பும் பதறியது.

அதன் பயனாக நேசனை மிரட்ட அனுவலகத்திற்கே வந்துவிட நேசனோ தைரியமாய் அவரை எதிர்கொண்டான்.

"இங்க பாருங்க தம்பி, நீங்கலாம் நேத்து பெய்ஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான்; உங்க அப்பாவையே ஓட விட்ட எனக்கு உன்னைய ஓட வைக்க ரொம்ப நேரமாகாது; அதுனால ஒழுங்கா என்வழியில இருந்து விலகிடு அதான் உனக்கு நல்லது இல்லனா என்னோட சுயரூபத்தை பார்க்க வேண்டியது வரும்" என மிரட்டியவரை நக்கல் பார்வை பார்த்து நேசன் சிரிக்க,

அதில் தலைகால் புரியாமல் கோபப்பட்டவரோ தனது சாணக்கியதனத்தை கூறுவதாக எண்ணி அவர் செய்த அயோக்கியதனத்தை பட்டியலிட அப்பொழுதும் நேசனின் கண்ணில் தெரிந்த நக்கல் தொணி மாறிடவே இல்லை.

அதில் குழப்பியவரை சுற்றி வளைத்து வசமாய் பிடித்தது காவல் துறை.

இப்பொழுது தன்னை மிரட்டிய குள்ளநரியை பார்த்த நேசனோ, "என்ன அங்கிள், இங்க என்ன நடக்குதுனு உங்களுக்கு சுத்தமா புரியலையா அது ஒண்ணுமில்ல அங்கிள்; நீங்க என்னைய மிரட்ட ஆரம்பிக்கும்போதே உங்களோட மிரட்டலை முகநூல்ல லைவ்வா ஓட விட்டுட்டேன் அதுமூலமா உங்களோட அயோக்கியதனத்தை அது சாணக்கியதனமில்லை அயோக்கியதனம் தான் அதை ஊரே பார்த்திருச்சு; அப்படியே போலிஸும் பார்த்திருச்சா அதான் வந்துட்டாங்க; இனி உங்களோட குள்ளநரிதனத்தை ஜெயில்ல போய் கழி திண்ணு வளர்த்துக்கோங்க டாட்டா" என கூறியவனோ காவல் துறையை நன்றி கலந்த பார்வை பார்க்க அவர்களோ அதற்கு பதில் புன்னகை அளித்தபடியே குள்ளநரியை இழுத்து சென்றனர்.

அவர்கள் சென்றதும் நேசன் தன் மனதினிலே, 'நமக்கு இந்த வீடியோ எடுக்கிற பழக்கம் மட்டும் எப்பவும் நம்மை விட்டு போகவே மாட்டேங்குதே, எல்லாத்துக்குமே என் செல்ல குட்டி கவிதான் காரணம் காதலிக்காக பழகுனது இப்போ சரியா உதவுது; அச்சசோ எனக்கு இப்போவே என் செல்லத்தை பார்க்கணும் போல இருக்கே கவி செல்லம் மாமா இட்ஸ் கம்மிங் பார் யூ டா' என எண்ணிக்கொண்டே காதலோடு ஓட அங்கே வழக்கம் போல செல்ல அடிகளே காத்திருந்தது.

சில மாதத்திற்கு பிறகு கார்த்திக் எழுதிய பொதுதேர்வுகளின் முடிவுகளும் அறிவிக்கபட அதனை காண பள்ளிக்கு வந்தபோது நண்பர்கள் அனைவரும் ஆர்வமாய் மார்க்கை பார்க்க கார்த்திக்கோ ஸ்பெஷல் கிளாஸ் நடக்கும் +2 வகுப்பையே ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தான்.

அப்பொழுது தினேஷ் சந்தோஷமாக ஓடிவந்து கார்த்திக்கை கட்டிகொண்டபடி, "மச்சி, வாழ்த்துக்கள் டா நீ நினைச்ச மாதிரியே ஸ்டேட் பர்ஸ்ட் வந்துட்ட.." என வாழ்த்த கார்த்திக்கோ அதனை கேட்டும் சோகமாக இருக்க,

உடனே அங்கு வந்த ரவியோ "கார்த்திக், என்னடா ஆச்சு ஏன் சோகமா இருக்க" என கேட்க,

"அது ஒண்ணுமில்லடா, அனுவை பார்க்கணும் போல இருக்கு; ஆனா அவளை இப்போலாம் பார்க்கவே முடியல போன் நம்பர் தந்திருக்கேன் ஆனாலும் அவ பேச மாட்றா டா" என தனது காதலை கூறியதை பற்றி மறைத்து பொதுவாய் வருந்துவது போல வருத்தபட்டான்.

அவனின் கவலையை போக்க முயன்ற தினேஷோ, "டேய், இதுலாம் ஒரு விஷயமா இதுக்கு போய் பெருசா பீல் பண்ணிட்டு இருக்க அவளுக்கு இப்போ படிக்கிற வேலை நிறைய இருக்கும்டா; அதுனால கூட அவ பேசாம இருக்கலாம்ல நீ வேணா பாரு டவுட்டூனா அவ உடனே அவளோட சீனியரை தேடி தான் வருவா பாரு" என ஆறுதல் கூறி சமாதானபடுத்த,

கார்த்திக்கோ அவனின் ஆறுதலை கேட்டு மனதினை தேற்றிகொள்ள அதற்குள் ஊடகத்துறை கார்த்திக்கை சூழ்ந்துகொண்டு பாராட்டு மழையில் நனைக்க ஆரம்பித்தனர்.

இங்கு நேசனின் மதிநுட்பத்தால் சுந்தரத்தின் தொழில்கள் அவருக்கே கிடைத்துவிட தனது தொழில்களை கவனித்து கொள்ள கூறிய தந்தையிடம், "அப்பா, இது நீங்க கஷ்டபட்டு உருவாக்குன தொழில்; இதுக்கு நான் எந்த விதமாத உழைப்பையும் போடாம உங்க இடத்துக்கு வந்து உட்காருறது நல்லா இருக்காது; நான் உருவாக்குன பிஸினஸ்ல ஜெயிச்சு இதையே என்னோட தொழிலா பார்த்துக்கிறேன்; உங்க தொழிலை உங்களால முடியாதப்போ பார்த்துக்கிறேன் இப்போ அதை நீங்களே பார்த்துக்கோங்க ப்பா" என கூற தனது வளர்ப்பை கண்டு நெகிழ்ந்தவரோ ஆரத்தழுவி கொண்டார்.

நேசனும் தனது தந்தையிடம் சொன்னதை போலவே பிஸினஸில் உயர்ந்து அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் உயரத்திற்கு ஒரே வருடத்தில் சென்று விட அதேசமயம் கார்த்திக்கும் பள்ளிபடிப்பு முடித்து காலேஜிற்கு படிக்க செல்ல அனுவின் நினைவுகளோடும் அவ்வபொழுது அவளின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வாய்ப்பாக அமைந்த அனுவின் அழைப்புகளோடும் தனது ஒரு வருட கல்லூரி படிப்பினை முடித்து அடுத்த வருடத்தில் பயணித்து கொண்டிருந்தான்.காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 
என்ன சிஸ்... இனிமேல் அனுவை கார்த்திக் பார்க்கவே மாட்டானா...
விதி செய்த சதியா...?

நேசன் செம க்ரேட் தான்... சூப்பர்...
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

Rajam

Well-known member
Member
காரத்திக் அனுவ திரும்ப எப்போது சந்திப்பான்.நேசன் வளர்ச்சி சூப்பர்.
 

Nancy mary

✍️
Writer
என்ன சிஸ்... இனிமேல் அனுவை கார்த்திக் பார்க்கவே மாட்டானா...
விதி செய்த சதியா...?

நேசன் செம க்ரேட் தான்... சூப்பர்...
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
இவங்களோட காதலின் நிலை என்னனு அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல பார்க்கலாம் சகி🤗🤗🤗
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
காரத்திக் அனுவ திரும்ப எப்போது சந்திப்பான்.நேசன் வளர்ச்சி சூப்பர்.
அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல தெரிஞ்சிக்கலாம் சகி🤗🤗🤗
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
மிஸ்டர் நேசன் நீங்க ஒரு மூளைக்கார செகண்ட் ஹீரோனு ப்ரூவ் பண்ணிட்டீங்க... அதுக்கு என்ன பரிசு குடுக்கலாம்🤔🤔 கார்த்திக் என்ன தான் காதலிச்சாலும் படிப்புல கில்லியா இருந்திருக்கான்... அனுவோட தெளிவு எனக்குப் பிடிச்சிருக்கு... இப்பிடியே இரு தாயே🤗🤗
 

Nancy mary

✍️
Writer
மிஸ்டர் நேசன் நீங்க ஒரு மூளைக்கார செகண்ட் ஹீரோனு ப்ரூவ் பண்ணிட்டீங்க... அதுக்கு என்ன பரிசு குடுக்கலாம்🤔🤔 கார்த்திக் என்ன தான் காதலிச்சாலும் படிப்புல கில்லியா இருந்திருக்கான்... அனுவோட தெளிவு எனக்குப் பிடிச்சிருக்கு... இப்பிடியே இரு தாயே🤗🤗
ஏதாவது நல்ல பரிசா குடுங்க சகி அவனுக்கும் ஒரு ஊக்கமா இருக்கட்டுமே😌😌😌
ஆமா ஆமா மாறிடாதம்மா😂😂😂
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom