தேடல் - 14

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம்-14❤️

மனித வாழ்வின் சுவாரஸ்யமே தனக்கடுத்து நிகழவிருக்கும் எதிர்பாரா நிகழ்வுகளை அறியாமல் பயணிப்பது தானே...

அப்படிபட்ட பயணத்தின் பலரும் நிகழவிருப்பதை முன்னறிந்திருந்தால் பல இழப்புகளை தவிர்த்திருக்கலாமென நினைப்பதுண்டு.

ஆனால் கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்து என்ன பயன்..???

தனக்கு நிகழ்ந்திலிருந்து மீள முயற்சிக்காத மனமானது மேலும் தன்னை சோர்வுற முயற்சிக்கும் முயற்சிக்கு நாம் பலியானால் இனியும் இழப்புகளை தவிர்ப்பது சாத்தியமற்றதாகுமே.

அதுப்போன்றதொரு மனநிலையில் தான் சுந்தரமும் தனது வாழ்வு நொடியில் மாறியதையும் இனி மீள முடியாதென்ற சிந்தனையிலும் உழன்று கொண்டிருக்க, அவரின் சிந்தனையை கலைத்து நடப்பிற்கு அழைத்து வந்தது கைப்பேசி.

தனது கைப்பேசியின் திரையின் தெரிந்த தந்தையின் எண்ணை கண்டு விதிர்விதிர்த்தவரோ மனதளவில் நொறுங்கி போனார்.

தன் நட்பின் மனநிலையை அன்றே தீர்க்கதரிசியாய் உரைத்தவராயிற்றே அவரின் அறிவுரைபடி நடந்திருந்தால் இன்று இந்நிலைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போயிருக்குமே,

தனது மடமையாலும் அவசரத்தினாலும் பெரும் பிழையை நிகழ்த்தி இன்று தன் மனசாட்சிக்கே குற்றவாளியாய் நிற்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறாரே.

அதனை எல்லாம் நினைத்து கவலையுற்றபடியே அழைப்புகள் பலவற்றை தவறவிட்டவரோ இறுதியாக கைப்பேசி அழைப்பினை ஏற்று அமைதி காத்தார்.

மகனின் அமைதியினிலே அவனின் மனநிலையை உணர்ந்தவரோ,

"உன் கம்பெனி நிலவரத்தை பத்தி சாயங்காலம் வர நியூஸ் பேப்பர்ல பார்த்தேன் டா; இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சது தான் நீ எதைபத்தியும் கவலைபடாத; என் பேரன் நேசன் அதைவிட பெரிய கம்பெனியை நடத்தி நீ இழந்ததை எல்லாமே மீட்டு தந்திடுவான் சரியா" என ஆறுதல் கூற தந்தையிடம் மழலையாய் மாறி வீதியென்றும் பாராமல் கதறி அழுதார்.

அதேசமயம் இங்கு தனது வீட்டிற்கு களைப்பாய் வந்த கணேசனோ,

தனது மனைவியிடம் காபி கேட்டபடியே தன் பிள்ளைகளை பற்றி விசாரிக்க,

அதற்கு சாவித்திரியோ, "கார்த்திக் இப்போ ஸ்கூல் முடிஞ்சு வர டைம் தாங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திடுவான் கவியும் இந்நேரத்திற்கு வந்திருப்பா ஆனா ஆளையே காணோம்ங்க" என கூறிகொண்டே காபியை வழங்கினார்.

தன் மனைவியின் பேச்சின் லயிக்காமல் காபியின் மணத்தில் லயித்தவரோ அதனை பருகிகொண்டே சுட சுட மாலை செய்தியையும் வாசித்து கொண்டிருந்தார் கணேசன்.

அப்பொழுது ஏதோ ஒன்றை சிந்தித்தபடியே வீட்டிற்குள் நுழைந்த கவியினை கண்ட சாவித்திரியோ அவளிடம் சென்று, "ஏண்டி, காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வர உனக்கு இவ்ளோ நேரமா சீக்கிரமா வந்தா தான் என்னவாம்" என்று தனது அர்ச்சனையினை துவங்கியவரை கணேசனின் குரல் தடுத்து நிறுத்தியது.

"சாவித்திரி, இந்த நியூஸை பாரேன் என் மச்சானோட கம்பெனியை அவருகிட்டயிருந்து ஏமாத்தி பறிச்சிட்டாங்களாம் இதை கொஞ்சம் படிச்சு பாரு" என கூறி நியூஸ் பேப்பரை காட்ட,

அதனை படித்த சாவித்திரியோ அண்ணனின் நிலையினை எண்ணி தவித்து கொண்டிருக்க,

அச்செய்திதாளை வாசித்த கவியோ இன்று கல்லூரிக்கு வராத நேசனின் நிலையினை புரிந்து கொண்டு அவனுக்காக வருந்தினாள்.

அப்பொழுது தனது கண்களை துடைத்து கொண்ட சாவித்திரியோ கணவனிடம், "என்னங்க, சீக்கிரமா கிளம்புங்க நம்ம போய் என் அண்ணனை பார்த்துட்டு வரலாம்; இப்போ அண்ணே என்ன நிலமையில இருக்கோ அதை பார்த்தா தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கும் வாங்க போகலாம்" என கூறியவரோ சிறிது நாட்களுக்கு முன் நடந்த மனகசப்புகளை மறந்து அண்ணனுக்காக உண்மை அன்போடு புறப்பட,

மனைவியின் நிலையினை உணர்ந்த கணேசனும் அப்பொழுதே வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக்கையும் கவியையும் கையோடு அழைத்துகொண்டு குடும்பமாக ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.

அவர்கள் செல்லும் வழியினிலே தனது தந்தையினை கைப்பேசியில் அழைத்து விவரம் கூறிய சாவித்திரியோ அவரை வரவேண்டாமென உரைத்து தானே அண்ணனை கவனித்து கொள்வதாக வாக்களிக்க கணேசனோ,

அங்கு மச்சானின் மனநிலையையும் தனது குடும்பத்தை வீட்டுக்குள் அனுமதிப்பாரா என்ற தவிப்பிலும் சிந்தனையில் ஆழ்ந்தார்.

இவ்வாறாக எண்ண ஓட்டத்தினிலே சுந்தரத்தின் வீடும் வந்துவிட,

அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே வீட்டுக்கு நுழைந்த சுந்தரமோ தனது குடும்பத்திடம் நண்பனின் துரோகத்தை எடுத்துரைக்க நேசனோ அடுத்து என்ன செய்து இத்துயரத்திலிருந்து மீளலாமென்ற தீவிர சிந்தனையின் ஆழ்ந்திருந்தான்.

இப்படிபட்ட சூழலினிலே தனது அண்ணனின் வீட்டிற்கு வந்த சாவித்திரியோ, "அண்ணே" என்ற கதறலோட வீட்டுக்குள் நுழைய,

அதுவரை தனது மடமையை எண்ணி குற்ற உணர்வில் இருந்த சுந்தரமோ தங்கையை கண்டு மேலும் குற்ற உணர்வில் சிக்கி தவித்தார்.

"அண்ணே, உன்னோட வேலைக்காக ராப்பகலா உழைச்சு முன்னேறுனீயே அப்படிபட்ட உன்னோட உழைப்பு எல்லாம் இப்போ வீணா போச்சே இதையெல்லாம் நீ எப்படிண்ணே தாங்கிகிட்ட.." என சுந்தரத்தின் முன் மண்டியிட்டு கதறியவரோ தனது கண்களை துடைத்துகொண்டு,

"இல்லண்ணே இல்ல, உன்னோட எந்த உழைப்பும் வீணா போகல உன்னால மறுபடியும் பிஸினஸ் பண்ண முடியும் இதைவிட பெருசா உன்னால வளர முடியும்ணே; நீ காசை பத்தியெல்லாம் கவலைபடாத அப்பா எனக்கு தந்த சொத்து எல்லாமே உன் பேருல எழுதி வைச்சிடுறேன் அதைவைச்சு முதல்ல இருந்து எல்லாத்தையும் தொடங்கு சரியா" என கூறிய சாவித்திரியின் பேச்சினிலே மொத்தமாய் நொறுங்கியவரோ,

"அய்யோ, என் வாழ்நாள் முழுக்க கரைக்கவே முடியாதளவுக்கு பெரிய பாவம் பண்ணிட்டேனே உன்னோட நல்ல மனசை புரிஞ்சிக்காம உன்னைய பத்தி தப்பு தப்பா நினைச்சு இத்தனை வருஷமா ஒதுக்கி வைச்சி யாருமே மன்னிக்க முடியாத பாவியாகிட்டேனே உன்னோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா கூட நான் செஞ்ச பாவம் கரையுமானு தெரியலயே இந்த பாவத்தை கங்கைக்கு போய் கூட கரைக்க முடியாது போலயே உன்னோட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா தான்மா என்னோட பாவமெல்லாம் கரையும் இந்த பாவி செஞ்ச தப்பை மன்னிச்சு ஏத்துப்பீயா மா" என அழுது கரைந்தபடியே தங்கையின் காலில் விழ போக,

உடனே பதறி தடுத்த சாவித்திரியோ, "அண்ணே எண்ணனே இது முட்டாள்தனமா பண்ணிட்டு இருக்க; உன்மேல எந்த தப்பும் இல்லணே ஏதோ போதாத காலம் இப்படியெல்லாம் நடந்து போச்சு இனி இதை சரிபண்ண என்ன வழியோ அதை பார்க்கலாம்ணே இப்படியெல்லாம் மன்னிப்பு கேட்டு என்ன சங்கடபடுத்தாதண்ணே" என அழுக பல வருடம் கழித்து தங்கையின் பாசத்தினை அனுபவித்தவரோ சாவித்திரியை ஆரத்தழுவி கதறி அழுக அதனை கண்ட குடும்பமே கண்ணீரால் நிரம்பியது.

அப்பொழுது நேசன் தனது அத்தையிடம் சென்று, "அத்தை, நீங்க உங்க சொத்து எதையும் அப்பா பேருக்கு மாத்த வேணாம் நான் என் பிரண்ட் மூலமா பேங்க்ல லோன் கேட்டிருக்கேன் இன்னும் கொஞ்சம் மாசத்துல என் படிப்பும் முடிஞ்சிடும் அதுனால லோன் மூலமா கிடைக்கிற காசை வைச்சு அப்பாவுக்கு பதிலா நான் பிஸினஸ் பண்ணி இழந்ததை எல்லாம் சரிபண்ணிடுறேன் நீங்க உங்க சொத்தை உங்க பசங்க படிப்புக்காகவும் எதிர்காலத்துக்காகவும் வைச்சிக்கோங்க" என கூற தன் அண்ணன் மகனை பெருமை பொங்க பார்த்த சாவித்திரியோ தனது மகளை பார்க்க அவளோ நேசனின் பேச்சில் பூரித்து போய் மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.

இந்த அழகிய நிகழ்வினை சாவித்திரியோடு சேர்ந்து சுந்தரமும் கண்ணுற்றவரோ தனது தங்கையிடம்,

"சாவித்திரி, எனக்காக ஒரு விஷயம் பண்ணுவீயா மா இதுவரை நம்ம இரண்டு குடும்பமும் சூழ்நிலையால பிரிஞ்சிருந்ததே போதும் இனிமேலும் நாம பிரியாம ஒற்றுமையா இருக்கணும் அதுக்கான அடித்தளமா என் பையன் நேசனுக்கு உன் பொண்ணு கவியை கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிப்பீயா மா" என கேட்க,

உடனே சாவித்திரியோ பல வருடங்கள் கழித்து தன்னை ஏற்றுகொண்ட அண்ணனின் ஆசைக்காக தனது சம்மதத்தை தெரிவித்தார்.

ஆனால் இதுவரை அண்ணன் தங்கையின் அன்பினை வெறும் பார்வையாளராய் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த கணேசனோ அவர்களின் பேச்சினில் துணுக்குற்றவாரே,

"சாவித்திரி, நீ என்ன பேசுற உன்னோட அண்ணன் பாசத்துக்காக என் பொண்ணோட வாழ்க்கையை முடிவு பண்ணுற அதிகாரத்தை உனக்கு யார் தந்தாங்க;

இது அவளோட வாழ்க்கை அதுக்கான முடிவை அவதான் எடுத்துக்கணும்; ஆனா நீ அவகிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம சம்மதம் சொல்ற இதெல்லாம் ரொம்ப தப்பு பார்த்துக்கோ" என கோபமாய் படபடவென பொறிந்து தள்ள,

அப்பொழுது மாமனின் பேச்சின் குறுக்கே நுழைந்த நேசனோ, "நீங்க சொல்றது சரிதான் மாமா கண்டிப்பா கவியோட முடிவு இல்லாம இங்க எதுவுமே நடக்காது; அதுமட்டும் இல்லாம கவியோட படிப்பு முடிஞ்சு நானும் கொஞ்சம் பிஸினஸ்ல முன்னேறுனதுக்கு அப்புறமா கல்யாணத்தை பத்தி எல்லாரும் யோசிக்கலாம் இப்போவே எல்லாமே நடக்க போறதில்லை மாமா கவி பொறுமையாவே சம்மதத்தை சொல்லட்டும்" என கூறி தனது மாமனின் நெஞ்சை குளிர்வித்தவனோ,

கவியிடம், "கவி நீ உன்னோட சம்மத்தை பொறுமையா சொன்னா போதும் அதுவரை நான் காத்திருப்பேன் உன்னோட சம்மதத்தை சொல்லுவ தான" என கூறி கண்ணடிக்க அவனின் பேச்சினிலும் செயலிலும் சிலிர்த்து போனவளோ கன்னம் சிவந்தபடியே தலையை குனிந்து கொண்டாள்.

அப்பொழுது சுந்தரமும் கணேசனிடம் நேசனின் சொல்படியே உரைக்க அதனை கேட்டு கணேசனின் ஒருபக்கம் தணிய மறுபக்கம் தனது அக்காளிற்காக அக்கறையாய் பேசிய நேசனின் பேச்சில் அகம்மகிழ்ந்த கார்த்திக்கோ நேசனோட நேசமாய் பழக ஆரம்பித்தான்.

தன் வாழ்வினையே நிலைகுலைய வைத்த பேரிடியிலிருந்து மீண்ட சுந்தரமோ தன்னை மறந்து குடும்பமென்னும் இன்ப வெள்ளத்தில் மிதந்தார்.

அதேசமயம் கவியோ குடும்பத்தோடு சந்தோஷமாய் இருக்காமல் வீட்டின் பின்புறம் தனித்திருக்க,

அவளை தேடிவந்த நேசனோ, "கவி என்னாச்சு, ஏன் சோகமா இருக்க கொஞ்சநேரத்து முன்னாடி வரைக்கும் சந்தோஷமா தானே இருந்த இப்போ திடீர்னு என்னாச்சு" என கேட்க,

அதற்கு கவியோ, "நம்ம குடும்பம பல வருஷம் கழிச்சு ஒண்ணு சேர்ந்ததை பார்க்க ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும் நம்ம கண்ணு முன்னாடியே ஒரு பொண்ணோட உயிர் போனதை பார்த்தும் நம்மலால ஒண்ணுமே பண்ண முடியலையேனு வருத்தமாவும் இருக்குடா,

இப்போ அவளுக்கு நீதி கிடைக்கிறதே கேள்விக்குறி தான்னு எல்லாருமே பேசிக்கிறாங்க; அதையெல்லாம் கேட்கும்போது நம்மலால ஒண்ணும் பண்ண முடியலையேனு குற்ற உணர்ச்சியா இருக்குடா" என கூறியவாரே தனது தோளில் சாய்ந்து ஆறுதல் தேடியவளை ஒற்றை கையால் அரவணைத்தப்படியே ஆறுதல் கூறினான் நேசன்.

"கவி, இந்த விஷயத்தை நம்மலால சுலபமாவே சரிபண்ண முடியும் ஆனா அப்படி நாம செய்யுற முயற்சியினால உன்னோட உயிருக்கு ஆபத்து வந்திடுமோனு பயந்திட்டு தான் இத்தனை நாளா அமைதியா இருந்தேன்; ஆனா நீ இந்தளவுக்கு கஷ்டபடுறதை பார்த்துட்டு இனிமேலும் என்னால சும்மா இருக்க முடியாது; நம்ம இப்போவே இந்த கேஸுல அனிதாவுக்காக வாதாடுற சத்யமூர்த்தி சாரை பார்த்து ஏதாவது செய்ய முடியுமானு கேட்கலாம்" என கூற அவனின் பேச்சை கேட்டு குழம்பியவளோ,

"அதெப்படி டா, நம்ம சும்மா இதை சொன்னா யாராவது நம்புவாங்களா கோர்ட்டுக்கு போனாலே ஆதாரம் கேட்பாங்களே ஆனா நம்மகிட்ட தான் அப்படி எந்த ஆதாரமுமே இல்லையே அப்போ எப்படி நம்மலால இதை சரிபண்ண முடியும்" என கேட்க அதற்கு மெலிதாய் சிரித்தவனோ வீட்டுக்குள் சென்று தனது பெண்டிரைவ்வை எடுத்துகொண்டு வந்தான்.

தனது பெண்டிரைவோடு கவியின் முன் நின்றவனோ, "கவி நீ கேட்ட ஆதாரம் இதுக்குள்ள இருக்கு அன்னைக்கு நம்ம பார்த்த எல்லாமே இதுல ரெக்கார்ட்டாகிருக்கு" என கூற அது எவ்வாறு சாத்தியமென விழிவிரித்து பார்த்தவளின் பார்வையில் ஒருநொடி மயங்கியவனோ பின்பு சுதாரித்து கொண்டு,

"கவி, உன்னோட நான் இருக்கிற பெஸ்ட் மூமண்ட்ஸை மெமரீஸா கேச் பண்ணணுறதுக்காகவே அப்பாவோட பட்டன் கேமராவை எடுத்து என்னோட சட்டை பட்டன்ல மாட்டிருப்பேன் அதை கண்ட்ரோல் பண்ணவும் தனியா ரீமோட் இருக்கும், அதுமூலமா பல பெஸ்ட் மெமரீஸை பதிவு பண்ணிருக்கேன்,

அதேமாதிரி அன்னைக்கு உனக்கும் எனக்கும் நடந்த சண்டையில கேமரா தெரியாம ஆன் ஆகி அங்க நடந்த எல்லாத்தையுமே ரெக்கார்ட் பண்ணிகிச்சு; நான் இதை வீட்டுக்கு வந்ததும் தான் கவனிச்சேன் உடனே அந்த கொலை பதிவை மட்டும் தனியா எடிட் பண்ணி பென்டிரைவ்வுல ஏத்திகிட்டேன்; இப்போ என்னோட ஸ்வீட் மெமரீஸ் கேமரா தான் நமக்கு நியாயத்தையும் வாங்கி தர போற பெஸ்ட் ஆதாரமா இருக்க போகுது சூப்பர்ல" என கூறி சிரிக்க,

நேசனின் பேச்சின் அகம்மகிழ்ந்தவளோ தனது சுற்றத்தையும் தன்னையும் மறந்த நிலையில் அவனின் கன்னத்தில் தனது முதல் காதல் முத்திரையினை பதிக்க அதில் திகைத்த நேசனை கண்டு வெட்கி தலைகுனிந்தவாறே வீட்டுக்குள் ஓடினாள்.

தன் காதலியின் செயலினை கண்டு சிரித்து கொண்டிருந்த நேசனின் கன்னம் சுளீரென வலியெடுக்க தன்னிலை உணர்ந்து சுற்றிபார்த்தவனின் கண்ணில் அவனின் காதல் பைங்கிளி பத்ரகாளியாய் காட்சி தருவதை கண்டு குழப்பி போக,

கவியோ அவனின் குழப்பத்தை சிறிதும் சட்டை செய்யாமல் அவனின் சட்டையை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாய் கத்த துவங்கினாள்.

"ஏண்டா உனக்கு எவ்ளோ தைரியமிருந்தா எனக்கே தெரியாம என்னைய கேமரா வைச்சு ரெக்கார்ட் பண்ணீவ இதுல சாருக்கு அதெல்லாம் ஸ்வீட் மெமரீஸோ மவனே உன்னைய நான் சும்மா விட மாட்டேன் டா" என கூறியவளோ கோபத்தில் ஆயுதத்தை தேட அப்பொழுதே தன் கனவையும் உண்மையையும் புரிந்து கொண்டவனோ அவளின் காலில் சரணாகதியாகியபடியே,

"கவி நீ நினைக்கிற மாதிரி நான் தப்பா எதையுமே எடுக்கல மா உண்மையா அதை யாரு பார்த்தாலும் ஸ்வீட் மெமரீஸா தான் இருக்கும் நீ வேணா கொஞ்சம் இதை பாரேன்" என கூறியபடியே அவனின் போனில் பதிவேற்றியிருந்த பட்டன் கேமரா வீடியோவினை காட்டிட,

அதனை கண்ட பிறகே சாந்தமான கவியோ, "நீ லூசுதனமா செஞ்ச விஷயத்தால பெரிய நல்லது நடந்திருக்கு அதுனால உன்னைய சும்மா விடுறேன் இனி இப்படி ஏதாவது சேட்டை பண்ண வாலை ஒட்ட நறுக்கிடுவேன் ஜாக்கிரதை" என மிரட்டிவிட்டு செல்ல அவளையே மிரட்சியோடு பார்த்தவனோ,

"இந்த ஜென்மத்துல உனக்கு ரொமான்ஸ் சீன்ஸ் இல்ல போலடா வாழ்நாள் முழுக்க ஆக்ஷன் சீன்ஸ் தானா" என நொந்து கொண்டாலும் கடமையில் சிறந்தவனாக ஆதாரத்தோடு கவியையும் அழைத்து கொண்டு சத்யமூர்த்தியை காண சென்றான் நேசன்.

💘💘💘💘💘

அடுத்த நாள் காலை பொழுது ரம்மியமாய் மலர இந்நாளிற்காகவே காத்திருந்து கண்கள் பூத்திருந்த மாணவர்களோ உற்சாகமாக பள்ளியை நோக்கி விரைந்தனர்.

அங்கு பள்ளியே திருவிழா போல காட்சியளிக்க மாணவிகளின் கை வண்ணத்தினால் அழகிய ரங்கோலி கோலமும் அழகாய் வரவேற்க பல பள்ளிகளிலிருந்தும் இன்டர் ஸ்கூல் காம்படிசனுக்காக வருகை புரிந்த மாணவர்களும் தங்களின் பெயர்களை தந்துவிட்டு பள்ளியினுள் சென்றனர்.

அப்பொழுது அங்கே கார்த்திக்கின் கேங்கும் சரியாக ஆஜராக மாணவர்களுக்காகவே பல்வேறு ஸ்டால்கள் அமைக்கபட்டிருக்க அதற்குள் நுழைந்தவர்களோ தனது சேட்டைகளை சிறப்பாய் அரங்கேற்றினர்.

சங்கரின் பார்வை வட்டத்திற்கு உணவு ஸடால்களே முதலில் விழ ரவியின் பார்வையாவும் அங்கு வேறு பள்ளியிலிருந்து வருகை புரிந்த மாணவிகளிடமே அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அப்பொழுது தினேஷோ கார்த்திக்கிடம், "கார்த்திக் இந்த காம்படிசனுக்கு முன்னாடி டிரையல் மாதிரி ஒண்ணு வைச்சு சில பேரை மட்டுமே ஒவ்வொரு போட்டிக்கு செலக்ட் பண்ணுவோம்னு சொன்னாங்களே அப்படி ஏதாவது பண்ணாங்களா டா" என கேட்க,

அதற்கு கார்த்திக்கோ, "நம்ம ஸ்கூல்ல முதல்ல அப்படிதாண்டா சொன்னாங்க; ஏன்னா நிறைய பேர் கலந்துக்கும்போது அதுல திறமையானவங்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்கணும்னு அப்படி சொன்னாங்க ஆனா எல்லா போட்டியிலயுமே நிறைய பேர் கலந்துக்கல அதுனால இருக்கிறவங்களை அப்படியே போட்டிக்கு செலக்ட் பண்ணிட்டாங்க" என கூற,

அதற்கு விக்னேஷோ, "ஓ இதுனால தான் டேவிட் குருப் இவ்ளோதூரம் வந்திருக்காங்களா கார்த்திக் அவனுங்க பாடுறதை நீ கேட்டிருக்கணுமே அந்தபக்கமா தண்ணீ குடிக்க போயிருந்தேனா அப்போ அவனுங்க பாட்டை கேட்டு இங்கயிருந்து தப்பிச்சா போதும்னு ஓடி வந்துட்டேன் டா இந்த லட்சணத்துல அவனுங்க எல்லா காம்படிசன்லயுமே கலந்திருக்காங்க இதுவே போதுமே இந்த வருஷம் நம்ம ஸகூல் ஜெயிச்சா மாதிரி தான்" என கூற அவனின் பேச்சை கேட்டு நண்பர்களும் சிரித்தனர்.

அப்பொழுது திடீரென ஏதோ புரிந்தது போல கத்திய தினேஷோ, "மச்சி, ஒருபக்கம் அவனுங்க எல்லா காம்படிசன்லயுமே கலந்திருக்காங்க அதேமாதிரி இன்னொருபக்கம் மத்த ஸடூடண்ஸும் நிறைய காம்படிசன்ல கலந்துக்கல சோ இது இரண்டையும் கணெக்ட் பண்ணி பார்க்கும்போது ஒருவேளை இவனுங்க ஏதாவது மிரட்டி இப்படி பண்ணிருப்பாங்களோ" என கூறி கேட்க,

அப்பொழுது அவனின் சந்தேகம் உண்மையென உரைப்பது போல நன்றாக டிராயின் வரைந்த ஒரு மாணவனின் டிராயிங்கை கிழித்து போட்டு அவனின் பெயரையும் அவனை வைத்தே போட்டியிருந்து தூக்கி கொண்டிருந்தனர்.

அந்த மாணவனின் பெயரை நீக்கியபடியே, "இங்க பாருடா, நீ இந்த டிராயிங் காம்படிசன்ல கலந்துக்ககூடாது அதையும் மீறி கலந்துகிட்ட அப்புறம் நடக்குறதே வேற பார்த்துக்கோ" என மிரட்டிவிட்டு போக தன் திறமையை நிருபிக்க முடியா நிலையை எண்ணி அம்மாணவன் தவித்து போனான்.

இதனை பார்த்து கோபமுற்ற கார்த்திக்கோ தன் நண்பர்களிடம், "மச்சி, காம்படிசனுக்கு புதுசா கலந்துக்க ஆசைபடுறங்களும் கடைசி நேரத்துல கலந்துக்கலாம்னு ரூல்ஸ் இப்போ புதுசா கொண்டு வந்திருக்காங்கல டா" என கேட்க,

அதற்கு விக்னேஷோ, "ஆமா மச்சி, இந்த கடைசி நேர சூழலை பார்த்து மாணவர்களுக்கு ஆர்வம் வர வாய்ப்பிருக்குனு இப்படி ஒரு ரூல்ஸ் இந்த வருஷம் கொண்டு வந்திருக்காங்க; ஆமா
இப்போ அதை ஏண்டா கேக்குற.." என குழம்பமாய் கேள்வியெழுப்ப கார்த்திக்கோ அர்த்தமாய் சிரித்து கொண்டான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கார்த்திக்கின் மொத்த குருப்பும் அனைத்து போட்டிக்கும் மாறி மாறி பெயரினை தர தனது ஒவிய கனவு தகர்க்கபட்ட மாணவனின் பெயரையும் பதிவு செய்து கொண்டு கம்பீரமாக போட்டியில் கலந்துகொள்ள சென்றனர்.

இனி இந்த போட்டியில் டேவிட் கேங் வெல்லுமா இல்லையேல் கார்த்திக் கேங் அவர்களை வீழ்த்தி தள்ளுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.


காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 
சூப்பர் சிஸ் குடும்பத்தை ஒண்ணு சேர்த்துட்டீங்க...
நேசன் க்ரேட் தான். எப்படியோ கவியும் அவன் காதலை அக்சப்ட் பண்ணிட்டா..
இவங்க வீடியோ ஆதாரம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருமா...?
 

Rajam

Well-known member
Member
நேசன் செய்த நல்ல விஷயம் பெனட்ரைவ்ல
ரிகாரட் பண்ணியது தான்.
நேசன்,கவி இணந்தாச்சு.
ஆதாரம் கிடைத்ததால் வழக்கில்
சத்யமூர்த்தி வெல்லவும்
வினோத் தண்டனை பெறுவதும் உறுதி.
 

Nancy mary

✍️
Writer
நேசன் செய்த நல்ல விஷயம் பெனட்ரைவ்ல
ரிகாரட் பண்ணியது தான்.
நேசன்,கவி இணந்தாச்சு.
ஆதாரம் கிடைத்ததால் வழக்கில்
சத்யமூர்த்தி வெல்லவும்
வினோத் தண்டனை பெறுவதும் உறுதி.
ஆமா சகி நேசன் ரொம்பவே சரியான வேலை பண்ணிட்டான்👏👏👏
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
சூப்பர் சிஸ் குடும்பத்தை ஒண்ணு சேர்த்துட்டீங்க...
நேசன் க்ரேட் தான். எப்படியோ கவியும் அவன் காதலை அக்சப்ட் பண்ணிட்டா..
இவங்க வீடியோ ஆதாரம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருமா...?
எல்லா கேள்விகளுக்காக பதிலை பொறுத்திருந்து பார்க்கலாம் சகி😍😍❤️❤️❤️❤️
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
ஐயோ என்ன சிஸ்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
உங்க சப்போர்ட்டுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது ஒரே நாள்ல எல்லா எபியும் படிச்சு பாராட்டுன உங்களோட சப்போர்ட் உண்மையாவே வேற லெவல் ரொம்ப நன்றி சகி தொடர்ந்து உங்க ஆதரவு குடுங்க😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அடுத்த எபி இன்னைக்கு வந்திரும் சகி வெயிட் பண்ணி படிங்க😅😅😍😍😍😍❤️
 

Nithya Mariappan

✍️
Writer
டேவிட் கேங்குக்கு என்ன பேரு? ஜூமாஞ்சி கேங்க் தானே😜😜😜 அவனுங்க ஜெயிக்கிறதுக்குள்ள ஸ்கூல்ல இருக்குற எல்லாரோட காதும் தீய்ஞ்சு போயிடும்😂😂 சாவித்திரி அம்மாவோட பெரிய மனசு இப்போவாச்சும் சுந்தரத்துக்கு புரியட்டும்
 

Nancy mary

✍️
Writer
டேவிட் கேங்குக்கு என்ன பேரு? ஜூமாஞ்சி கேங்க் தானே😜😜😜 அவனுங்க ஜெயிக்கிறதுக்குள்ள ஸ்கூல்ல இருக்குற எல்லாரோட காதும் தீய்ஞ்சு போயிடும்😂😂 சாவித்திரி அம்மாவோட பெரிய மனசு இப்போவாச்சும் சுந்தரத்துக்கு புரியட்டும்
ஆமா அவனுங்க பாட ஸ்கூல்ல எல்லாரும் தெறிச்சு ஓட ஓரே கூத்தா இருக்கும்😂😂😂
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom