தேடல் - 13

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம்-13❤️

கார்த்திக்கின் காதலையும் சுந்தரத்தின் கோபத்தையும் கண்ட காலமோ இவர்களின் எதிர்கால நிலையினை எண்ணி நமட்டு சிரிப்பு சிரித்துகொண்டே தன் இயல்பினிலே யாருக்கும் நிற்காமல் வேகமாய் ஓட அனிதாவின் வழக்கும் தேங்கிய குட்டையென மாறி தீலிப்பின் வருகைக்காக பல வாய்த்தாக்களை கடந்து விட நேசனின் காதல் முயற்சிகளும் தோல்வியையே தழுவி கொண்டிருந்தது.

இந்நிலையின் அரையாண்டு விடுமுறை முடிந்து அடுத்த புது வருடத்தில் பள்ளிக்கு நுழைந்த மாணவர்களின் தலையில் இடிவிழும்படியாக அரையாண்டு தேர்வின் விடைத்தாள்கள் வழங்கபட,

அதோடு துன்பத்திலும் இன்பமென்பது போல பள்ளியின் கல்சூரல்ஸும் அம்மாதமான ஜனவரியிலேயே வைக்க திட்டமிடபட்டிருக்க மாணவர்கள் அனைவரும் மதிப்பெண்களை கடந்து தங்களது சந்தோஷ தருணத்திற்காக தயாராகினர்.

ஆனால் அனைத்து மாணவர்களும் ஒரே மனநிலையில் இல்லையென்பது போல சில மாணவர்கள் தங்களது குறைந்து போன மதிப்பெண்ணுக்காக கவலை கொண்டிருக்க அக்கவலை கூட்டத்திற்கு தலைவியென அழைக்கும்விதமாக ஓட்டு மொத்த சோகத்தையும் ஒன்றாய் குத்தகைக்கு எடுத்து கொண்டு கேண்டினில் அமர்ந்திருந்தாள் அனு.

அப்பொழுது அங்கு கார்த்திக்கும் அவனின் நட்பு பட்டாளமும் வர இனி அங்கு அரட்டைக்கு பஞ்சம் இருக்குமா என்ன..???

அவர்கள் வந்ததும் வராததுமாக கேண்டின் ஊழியர்களை ஆடர் கொடுத்தே களைப்படைய செய்தனர்.

"அண்ணே, நம்ம கேண்டின் சாப்பாட்டை சாப்பிடாம பத்து நாள் லீவ்ல வயிறே காய்ஞ்சு போச்சுனே அதுனால நீ என்ன பண்ற பப்ஸ்ல இருந்து பிரியாணி வரை எல்லாத்துலயும் ஒரு பிளேட்டை எடுத்துட்டு வந்திடு அப்புறம் என் பிரண்ட்ஸுக்கும் என்னென்ன வேணும்னு கேட்டுக்கோ சரியா,
டேய் என் மூஞ்சை வேடிக்கை பார்க்காம சீக்கிரம் உங்களுக்கு வேண்டியதை ஆடர் பண்ணுங்கடா" என சங்கர் கூற,

அவனின் கழுத்தை சுற்றி வளைத்து பிடித்த தினேஷோ, "ஏண்டா, நம்ம எல்லாருக்கும் சேர்த்து ஆடர் பண்ணவேண்டிய சாப்பாட்டை நீ ஒருத்தனே ஆடர் பண்ணுற இதுல நாங்க வேற தனியா ஆடர் பண்ணனுமா" என கேட்டுகொண்டே அவனின் குட்டி தொப்பையில் நாலடி போட,

உடனே அவனை தடுத்த சங்கரோ, "டேய், நீ என்னைய எங்க வேணா அடி ஆனா வயித்துல மட்டும் அடிக்காத அப்படி அடிச்சா என்னால எப்படி சாப்பிட முடியும் அதுமட்டும் இல்லாம நானே ஸ்கூல் கல்சூரல்ஸ் வரதால கம்மியா தான் சாப்பிடுறேன்; இதையும் நீங்க கண்ணு வைச்சா என்னடா அர்த்தம் நம்ம சாப்பிடுறதுக்கு கார்த்திக் தானே காசு தரான் அவனே ஒண்ணும் சொல்லல ஆனா நீ என்னனா ஓவரா பேசுற.." என கோபமாய் கூற நட்பு பட்டாளம் அனைத்தும் இவனின் பேச்சை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தது‌.

தனது சிரிப்பினை முதலில் கட்டுபடுத்திய ரவியோ, "டேய், நீ கம்மியா சாப்பிடும்போதே இவ்ளோ வருதுனா அப்போ அதிகமா சாப்பிட்டா கார்த்திக்கோட சொத்தையே நீ காலி பண்ணிடுவ போலயே; கார்த்திக் இவனுக்கு நீ ஓசியில வாங்கி தரதால தான் இவ்ளோ திண்ணுறான் நீ அவனுக்கு செலவு பண்ணாத அவனோட காசுலயே சாப்பிடட்டும் அப்போதான் கம்மியா சாப்பிடுவான்" என கூறி சங்கரை வெறுபேற்றி பார்க்க,

அதில் கோபமான சங்கரோ, "அண்ணே, நீங்க நான் ஆடர் பண்ணதுக்கெல்லாம் காசை அக்கவுண்ட்ல வைச்சுக்கோங்கண்ணே உங்களுக்கு நான் மூட்டை தூக்கியாவது நான் சாப்பிட்டதுக்கு காசு தந்திடுறேன்" என கெத்தாய் கூற,

உடனே விக்னேஷா, "அப்போ கூட நீ சாப்பாட்டை விட மாட்டீயா டா" என கூறி காலை வார தினோஷும் ரவியும் அவனுக்கு ஹைபை தந்தனர்.

அப்பொழுது கார்த்திக், "டேய், அவனை பத்தி தான் நமக்கு தெரியும்ல அப்போ ஏண்டா கலாய்க்கிறீங்க சங்கர் உனக்கு என்ன வேணுமோ சாப்பிடு டா எப்பயும் போல நானே செலவு பண்றேன்" என கூற,

உடனே தன் கெத்தை விட்டுகொடுக்காதபடி, "இவனுங்க இவ்ளோ பேசுனதுக்கு அப்புறம் சாப்பிட விருப்பமில்ல தான் ஆனா என் நண்பன் நீ இவ்ளோ கெஞ்சுற அதுக்காக சாப்பிடுறேன்" என கூற உடனே தினேஷோ,

"இங்க யாரும் உங்ககிட்ட கெஞ்சல சார், நீங்க பட்டினியாவே இருக்கலாம்" என காலை வார,

அதற்கு கார்த்திக்கோ, "டேய், விடுங்கடா சங்கர் நீ ஆடர் பண்ண எல்லாத்தையும் வாங்கிக்கோ நீங்களும் என்ன வேணுமோ வாங்கிக்கோங்க டா" என கூறியவனோ எதேர்ச்சையாக திரும்பி பார்க்க,

அங்கே அனுவோ சோகமாய் அமர்ந்திருக்க உடனே கார்த்திக்கோ, "அண்ணே இரண்டு லெமன் ஜீஸ் குடுங்க" என ஆடர் செய்து அதை வாங்கிய கையோடு அவளை நோக்கி செல்ல நட்பு பட்டாளமோ இனி காதல் சாரல் வீசும் அறிகுறியை உணர்ந்துகொண்டு சாரலிருந்து தப்பிக்கும் விதமாக பாதுகாப்பாக வேறொரு திசையில் சென்றமர்ந்து கொண்டனர்.

அனு அமர்ந்திருக்கும் டேபிளிற்கு சென்ற கார்த்திக் அவள்முன் லெமனை ஜீஸினை நகர்த்திவிட,

அதனை பார்த்த அனுவோ 'நமக்கு பிடிச்ச லெமன் ஜீஸை யாரு கொண்டு வந்திருக்கா' என மனதில் நினைத்துகொண்டே விழியுயர்த்தி பார்க்க,

அங்கே கார்த்திக் அவனின் கையில் ஒரு லெமன் ஜீஸோடு நின்று கொண்டிருந்தபடி அவளை பார்த்து புன்னகைக்க,

அவனின் சந்தோஷம் இவளுக்கும் தொற்றி கொண்டது போல அனுவும் சந்தோஷமாய் அவனை அமர சொன்னாள்.

அனுவின் எதிரே அமர்ந்த கார்த்திக்கோ அனுவிடம், "என்னாச்சு அனு, எதுக்கு சோகமா இருக்க உனக்கு ஏதாவது பிரச்சனையா" என நேரடியாய் விஷயத்துக்கு வர,

அதற்கு அவளோ, "ஆமா சீனியர், ரொம்ப பெரிய பிரச்சனை அதை சொன்ன டைம் பத்தாது அதுனால முதல்ல ஜீஸை குடிச்சிட்டு பிரச்சனையை சொல்றேன் நாம ஜீஸுக்காக வெயிட் பண்ணலாம் ஆனா ஜீஸ் நமக்காக வெயிட் பண்ண கூடாதுல" என தத்துவத்தை கூறி கொண்டே ஜீஸை குடிக்க அவளின் பேச்சிலும் செயலிலும் மெலிதாய் புன்னகைத்து கொண்டவனோ அவளை ரசித்து கொண்டே தனது ஜீஸை பருக துவங்கினான்.

லெமன் ஜீஸை வெகு சிரத்தையாய் காலி செய்த மறுநொடியே தனது முகத்தில் சோகத்தின் சாயலை படியவிட்டபடியே அவளது பிரச்சனையினை கூற துவங்கினாள்.

"சீனியர், எனக்கு இப்போ மட்டும் இல்லை எப்பயுமே இருக்கிற பெரும் பிரச்சனையே கணக்கு தான்; எனக்கும் கணக்குக்கும் முன் ஜென்ம பகை போல எவ்ளோ தடவை செஞ்சு பார்த்தாலும் வரவே வராது ஏதோ பத்தாவதுல என் கணக்கு வாத்தியார் எனக்கு டியூசன் சொல்லி தந்து நல்ல மார்க்கோட ஸடேட் ரேங்க் வாங்க வைச்சிட்டாரு,

ஆனா இந்த புது ஸ்கூல்ல அவரோட உதவியும் கிடைக்கலயா; ஏதோ கண்ணை கட்டி காட்டுல விட்டமாதிரியே இருக்கு சீனியர் ஒண்ணுமே புரியல,

அன்னைக்கு நீங்க கெமிக்கல் லேப்லயிருந்து வந்தீங்கல அப்போ நான் மேக்ஸ் மிஸ்கிட்ட டவுட்டூ கேட்டனா அவங்க வாயிலயே கணக்கை ஒப்பிச்சிட்டு போயிட்டாங்க சரி மனப்பாடம் செஞ்சாவது எழுதலாம்னு பார்த்தா கணக்குல டெப் மார்க் இருக்குல அதுல டெப்ஸை மறந்து போய் மார்க்கே வரல சீனியர்" என உதட்டை பிதுக்கி கூற அவளின் நிலையை கேட்ட கார்த்திக்கோ விழுந்து விழுந்து சிரித்தான்.

அதில் கோபமான அனுவோ, "சீனியர், என்னோட கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா நானே நொந்து போயிருக்கேன் இதுல நீங்க வேற கிண்டல் பண்றீங்களே" என கோபத்தில் ஆரம்பித்து இயலாமையோடு முடிக்க,

அவளின் நிலையை எண்ணி அனுவின் கையை ஆறுதலாய் பிடித்த கார்த்திக்கோ, "சாரி அனு, நான் சும்மா விளையாட்டுக்கு தான் சிரிச்சேன் சரி உனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குனா முன்னாடியே என்கிட்ட சொல்லலாம்ல; நான் தான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல உனக்கு எந்த உதவி தேவைபட்டாலும் என்கிட்ட கேளுனு அப்புறமும் ஏன் இதைபத்தி என்கிட்ட சொல்லல; இப்போ பாரு உனக்கு தான் தேவையில்லாத கஷ்டம் இனி இதைபத்தி கவலைபடாத உனக்கு நான் கணக்கு சொல்லி தரேன்" என கூற,

அவளோ தனது கண்களை அகல விரித்து, "உண்மையாவா சீனியர்" என ஆச்சர்யபட கார்த்திக்கோ ஆமென்று தலையசைத்து புன்னகை பூத்தான்.

உடனே மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அனுவை நிதானபடுத்தி, "ஓகே அனு, இப்போவே ஓவரா சந்தோஷபடாத நான் என்னால முடிஞ்சளவுக்கு சொல்லி தரேன் உனக்கு புரியலனா கேளு; இப்போ நீ படிக்க போற கணக்கு தான் அடுத்த வருஷம் காலேஜ்னு எல்லாத்துக்குமே அடித்தளமா இருக்கும் சோ கவனமா கத்துக்கோ" என கூறியவனோ அவனது பையிலிருந்து நோட்டையும் பேனாவையும் எடுக்க,

அதனை தூரமாய் அமர்ந்து பார்த்த நண்பர்களோ, "கார்த்திக் அங்க என்னடா பண்றான், முதல்ல கையை பிடிச்சு ஏதோ பேசுனான் இப்போ லவ் லெட்டர் எழுத போறானோ" என ரவி தனது முக்கிய சந்தேகத்தை முன்வைக்க,

அதற்கு தினேஷும், "டேய் அறிவிகெட்டவனே, அவன் லவ் லெட்டரை எழுதுறதா இருந்தா அவ முன்னாடியா எழுதுவான் இது என்னமோ பாடமெடுக்கிறான் போலடா" என கூற,

தினேஷின் அப்பதிலில் அதிர்ந்த மற்றவர்களோ, "எது பாடமா, அப்போ அவன் இப்போதைக்கு கிளம்ப மாட்டான் போலயே சரி அவன் வரலனா என்ன நம்ம சாப்பிட்டு கிளம்புவோம்" என கூறி வேக வேகமாய் சாப்பிட்டனர்.

இங்கு கார்த்திக்கோ பேனாவினை எடுத்து நோட்டில் ஒவ்வொரு விதமாக கணக்குகளை எவ்வாறு செய்வது என பொறுமையாக சொல்லி தந்தான்.

அவன் நடத்தியதிலேயே சிறப்பானதாய் இருந்த விஷயம் என்னவென்றால் ஒரே விதமான கணக்கினை பல்வேறு ஸடெப்ஸின் அடிப்படையில் சொல்லி தருவது தான் அதன்மூலம் அக்கணக்கு 1 மதிப்பெண் வினாவிலிருந்து 10 மதிப்பெண் வினா வரை எதில் வந்தாலும் அதற்கேற்றவாறு எவ்வாறு செய்யவேண்டுமென கூறியவனோ கடினமான கணக்கை அவன் செய்து காட்டி சுலபமான கணக்கை அனுவினை செய்ய சொல்ல கார்த்திக்கின் திறன்பட கற்றலினால் அவள் சுலபமாகவே அனைத்தையும் செய்தாள்.

அதுப்போல சில கணக்குகளின் அடிப்படை விஷயத்தையும் சொல்லி தர இவர்களின் ஆர்வத்தினை குறைக்கும்விதமாக இடைவேளை முடிந்து வகுப்பிற்கு செல்வதற்காக மணியடிக்க அனுவிற்கு இன்றே அனைத்தையும் கற்றுவிட மாட்டோமா என்ற ஆர்வம் தலைதூக்கியது.

ஆனால் கார்த்திக்கோ தினமும் இடைவேளையில் கணக்கும் பள்ளி முடிந்ததும் பாட்டும் கற்று தருகிறேன் என வாக்களிக்க அதே நம்பிக்கையோடே தனது வகுப்பினை நோக்கி விரைந்தாள் அனு.

💘💘💘💘💘

இங்கு நேசனோ கவியின் மனதிலிருக்கும் காதலை எவ்வாறு வெளிகொண்டு வருவது என்ற தீவிர சிந்தனையில் ஈடுபட அதனுடைய முடிவு என்னவோ குடும்பம் இணைவதிலேயே இருந்தது.

ஆனால் அதற்கான நேசனின் முயற்சிகள் தான் விரலுக்கு இறைத்த நீராய் ஆனது இவனின் காதல் தெரிந்ததிலிருத்து மகனிடம் முகம் கொடுத்து பேசாத தந்தை தனது தங்கையின் கோப பேச்சிலும் மேலும் கோபமாய் இக்காதலுக்கு சமாதி கட்டாத குறையாக மறுத்துவிட,

நேசனோ இறுதி ஆயுதமாக பள்ளி விடுதியில் தங்கி படித்த தங்கை ஊருக்கு வந்தபோது அவள் மூலம் பேச சொல்ல மகளின் மேல் அளவுகடந்த பாசம் வைத்த சுந்தரமோ அவளின் காதிலிருந்து ரத்தம் வராத குறையாக அட்வைஸ் மழை பொழிந்து இனி படிப்பில் மட்டும் கவனமாய் இரு, என பாசமாய் வழியனுப்பி வைக்க அவளும் விட்டால் போதுமென பள்ளிக்கே ஓடி விட்டாள்.

இவ்வாறு நேசனின் பிரம்மாஸ்திரமே செயலிழந்து விட இனி விதியாலும் தனது காதலை வெல்ல முடியாதா என ஏக்கத்தினிலே ஏங்கி தவித்து கொண்டிருந்தான்.

நேசனின் சிறு வயதிலிருந்த மேற்கொண்ட தவ வாழ்விற்கு இப்பொழுதுள்ள அவனின் சோக கீதத்திற்கும் முடிவு கட்ட முயன்ற விதியோ அவனிற்கு பெரும் வரத்தினை வழங்கிட ஆனால் அவ்வரமே நேசனுக்கு சாபமாய் கசந்தது.

சுந்தரத்தின் மேனேஜர் அழைப்பேசியில் சுந்தரத்திற்கு அழைப்பு விடுக்க அதனை எடுத்து பேசியவரின் கண்களின் தவிப்பும் கைகளில் நடுக்கமும் வர,

தனது கையிலிருந்த போன் நழுவி சென்று கீழே விழுந்ததுகூட தெரியாமல் சிலையென நின்றவரோ சில நிமிடங்களில் இடிந்து போய் நாற்காலியில் சரிந்தார்.

தந்தையின் நிலையினை கண்டு குழம்பிய நேசனோ அவரை நோக்கி வர மகனின் சத்தத்தினிலே வெளியில் வந்த காமாட்சியோ கணவனின் நிலைகண்டு கண்ணீர் விட்டு கதறினார்.

"அய்யயோ, உங்களுக்கென்ன ஆச்சுங்க திடீர்னு இப்படி பிரமை பிடிச்ச மாதிரி உட்கார்ந்திட்டு இருக்கீங்க என்னாச்சுனு சொன்னா தானே தெரியும்" என கேட்டவரோ மகனிடம் திரும்பி,

"டேய் நேசா, உன்னோட அப்பாவுக்கு என்னாச்சு டா எதுக்கு இப்படி திக் பிரமை பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்காரு; நீ ஏதாவது எடாகூடமா பேசுனீயா" என கேட்க,

அதற்கு நேசனோ கலங்கியபடி, "இல்லமா, நான் எதுவுமே பேசல இப்போ அப்பாவுக்கு ஒரு போன் வந்துச்சு; அதை எடுத்து பேசுனதும் தான்மா அப்பா இப்படி மாறிட்டாரு" என கூறிய நேசனொருபுறமும் காமாட்சி மறுபுறமும் சுந்தரத்தினை சூழ்ந்து கொண்டு கதறி அழுக தனக்கே சமாதானம் சொல்ல இயலா நிலையில் தன்னிலையை இவர்களுக்கு எவ்வாறு விளக்க என மெளனமாய் கண்ணீர் வடித்தார்.

தனது தந்தையின் கண்ணீரை கண்ட நேசனின் உள்ளமும் வேதனையில் உழன்றது

தன் வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் கலங்காது தைரியமாய் எதிர்கொண்டு தனக்கு முன்னுதாரணமாக திகழ்பவரே இன்று கண்ணீரில் கரைய அதனை போக்கும் வழியறியாது மழலையாய் தவித்தான் நேசன்.

தனக்காக தன் குடும்பமும் கண்ணீர் வடிப்பது பொறுக்காதவரோ தனது தவறினை எடுத்துரைக்க துவங்கினார்.

"காமாட்சி, நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் மா; இத்தனை நாளா பாம்புக்கு பாலை வார்த்திட்டு எனக்கு நானே குழியை தோண்டிருக்கேன்மா நான் தப்பு பண்ணிட்டேன் மா" என தலையில் அடித்துகொண்டு அழுக அவரை சமாதானபடுத்தும் வழியறியாது மகனும் மனைவியும் திணற தனது துயர நிலையினை வாய்விட்டே புலம்பினார்.

தனது நண்பனின் பேச்சை கேட்டு குடும்பத்தை எதிர்த்து பிஸினஸ் துவங்கி இன்று அக்குடும்பத்தையும் பிரிந்து வாழ காரணமானவனே சுந்தரத்திற்கு பெரும் துரோகம் இழைத்து விட்டான்.
ஆம்!
சுந்தரமும் அவரின் நண்பரும் இணைந்து பாட்னர்ஷிப் முறையில் பிஸினஸை துவங்கினர்.

தன்னுடைய பிஸினஸிற்காக சுந்தரம் ராப்பகலாய் உழைத்து தனது வாகன நிறுவனத்தை மக்கள் மத்தியில் பிரசித்து பெற செய்ய வாகனங்கள் வாங்கிடவே இவரின் கம்பெனி தயாரிப்புகளை மட்டுமே மக்கள் நாடினர்.

மக்கள் மத்தியிலும் புகழடைந்து நிறுவனமும் பல வருட உழைப்பில் லாபத்தில் அசுர வளர்ச்சியடைய சரியான தருணத்திற்காக காத்திருந்த நண்பனும் சுந்தரத்திடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவதை போல சுந்தரத்தின் பெயரிலிருந்த ஷேரையும் தன் பெயரில் மாற்றிவிட முயற்சிக்க நண்பனின் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தவரோ படித்து பார்க்காமலே கையெழுத்திட்டு தனது தலையெழுத்தையே மாற்றி விட்டார்.

இதையெல்லாம் கூறி கண்ணீர்விட்டு புலம்பியவரோ, "நேசா, நான் என்னோட பிஸினஸை நம்பி தான்டா எல்லாமே யோசிச்சிருந்தேன்; உன்னோட படிப்பு செலவுல இருந்து உன் தங்கச்சியோட கல்யாண செலவு வரைக்கும் எல்லாத்தையுமே பிஸினஸ்ல இருந்து வர பணத்துல தாண்டா பண்ணலாம்னு இருந்தேன் இனி என்ன பண்ண போறேனோ" என கதறியவரின் வங்கி கணக்கு முதற்கொண்டு நண்பனின் கைவசமே இருந்திருக்க இப்பொழுது கையில் ஒரு பைசா இல்லாமல் நடுதெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளபட்டார்.

தன்னுடைய இத்துயர நிலைக்கு காரணமான நண்பனிடம் கேள்வி கேட்க வேண்டுமென நினைத்து குடும்பத்தாரின் பேச்சையும் மீறி கிளம்பி செல்ல அதற்குள் இந்நிறுவனத்தில் செய்தி ஊரெங்கும் காட்டு தீயாய் பரவியது.

தனது நிறுவனத்திற்குள் கோபமாக நுழைய முயன்றவரை கேட்டில் நின்ற வாட்ச்மேன்னே வெளியில் தள்ளிவிட,

ஒரு காலத்தில் தனக்கு விசுவாசமாய் இருந்தவரா இப்படி என இடிந்து போனார்.

அப்பொழுது அவரின் நண்பர் பந்தாவாக காரில் வந்தவரோ கார் கண்ணாடி இறங்கிவிட்டபடியே சுந்தரத்தினை பார்த்து வாட்ச்மேனிடம், "டேய், வாட்ச்மேன் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா டா பிச்சைகாரங்களை எல்லாம் ஆபிஸுக்கு வெளியில நிக்க வைச்சிருக்க கழுத்தை பிடிச்சு வெளியில தள்ளுடா; இனி இப்படிபட்ட பிச்சைகாரனை இங்க பார்த்தேனா உன்னைய வேலையை விட்டே தூக்கிடுவேன் பார்த்துக்கோ" என மிரட்டியவரோ கார் கண்ணாடி ஏற்றிவிட்டு நிறுவனத்திற்குள் நுழைய நண்பனின் உண்மை முகத்தினை கண்டு சிலையென நின்றவரை இழுத்து கொண்டு வெளியில் தள்ளினான் விசுவாசி வாட்ச்மேன்.

தனது நிலையினை எண்ணி நொந்தபடியே வீதியில் நடந்து வந்தவரின் அழைப்பேசி அழைக்க தனது நிலையினை கேலி பேச வந்த அழைப்பென அலட்சியபடுத்தியவருக்கு அழைப்புகள் திரும்ப திரும்ப வர அதனை எடுத்து பார்த்தவரோ அதிர்ச்சியில் உறைந்து போனார்.


காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
எதிர்பாராத திருப்பங்களோடும்
விறுவிறுப்பாகவும் கதை நகர்கிறது.
 

Nancy mary

✍️
Writer
எதிர்பாராத திருப்பங்களோடும்
விறுவிறுப்பாகவும் கதை நகர்கிறது.
ரொம்ப‌ நன்றி சகி😍😍❤️❤️❤️
 
ஏன்டா கார்த்திக் முதல்ல ம்யூசிக் க்ளாஸ் இப்போ மேக்ஸ் க்ளாசா நடத்துடா..

பாவம் சுந்தரம். இனியாவது மனம் மாறுவாரா...

யார் அவரிற்கு இப்போது அழைத்தது.
 

Nancy mary

✍️
Writer
ஏன்டா கார்த்திக் முதல்ல ம்யூசிக் க்ளாஸ் இப்போ மேக்ஸ் க்ளாசா நடத்துடா..

பாவம் சுந்தரம். இனியாவது மனம் மாறுவாரா...

யார் அவரிற்கு இப்போது அழைத்தது.
கார்த்திக் ஆல் ஏரியாலயும் கில்லி😂😂😂
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
எப்பா கார்த்திக் நல்லா படிக்கிற, பாட்டு பாடுற, பாடம் சொல்லிக் குடுக்குற... செம ஹீரோப்பா நீ... சுந்தரத்துக்கு இதுவும் வேணும்,,, இன்னமும் வேணும்... சாவித்திரி கிட்ட என்ன பேச்சு பேசுனாரு இந்தாளு
 

Nancy mary

✍️
Writer
எப்பா கார்த்திக் நல்லா படிக்கிற, பாட்டு பாடுற, பாடம் சொல்லிக் குடுக்குற... செம ஹீரோப்பா நீ... சுந்தரத்துக்கு இதுவும் வேணும்,,, இன்னமும் வேணும்... சாவித்திரி கிட்ட என்ன பேச்சு பேசுனாரு இந்தாளு
ஆமா ஹீரோ கலக்குறான்ல😎😎😎
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 🤩
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 7 😎👇

New Episodes Thread

Top Bottom