தேடல் - 12

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம்-12❤️

அந்த கோர்ட் வளாகமே பரபரப்பாக காட்சியளிக்க இன்று வினோத்தின் தவறினை உறுதியாக்கும்படி கூடுதல் சாட்சிகளோடும் இவ்வழக்கிற்கு தீர்ப்பும் கிடைத்து விடுமென்ற எதிர்பார்ப்போடும் நீதி மன்றத்திற்கு வெளியே பத்திரிக்கை துறையினர் ஆவலோட காத்திருக்க,

அதே ஆவலோடு நீதிமன்றத்திற்குள் சத்யமூர்த்தியும் அவரின் இருக்கையின் அமர்த்திருந்தார்.

அப்பொழுது அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் வீற்றிருந்த வேதாச்சலமோ கேஸில் ஜெயித்து விடுவோமென்ற மிதப்பில் தைரியமாய் இருக்க,

அவரின் உடல்மொழியில் குழம்பி யோசித்தவரின் சித்தனையை தடை செய்யும் விதமாக நீதிபதி வருகை புரிய சத்யமூர்த்தியும் தற்காலிகமாக அவரின் சிந்தனைக்கு விடுப்பு விடுத்து நீதிபதிக்கு மரியாதை செலுத்த துவங்கினார்.

பிறகு கேஸ் ஆரம்பமாக சத்யமூர்த்தி நீதிபதியிடம் காளியை விசாரிக்க அனுமதி கேட்க அடுத்த நொடியே காளி குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டான்.

காளியிடம் சென்ற சத்யமூர்த்தி அவனிடம், "சொல்லுங்க காளி, சம்பவம் நடந்தப்போ நீங்க எதுக்காக வினோத்தும் அவனோட நண்பர்களும் இருந்த இடத்துக்கு போனீங்க" என கேட்க,

அதற்கு காளியோ, "சார், வினோத் தம்பியை எப்பவும் ஸகூல்ல இருந்து பத்திரமா கூட்டிட்டு வர பொறுப்பை அமைச்சர் ஐயா என்கிட்ட தான் குடுத்திருக்காரு; ஐயாவோட நற்செயல்களாலயே அவருக்கு எதிரிங்க அதிகமா இருக்காங்க,

அவங்க வினோத் தம்பியை ஏதாவது பண்ணிடுவாங்களோனு பயந்துட்டு தான் என்னைய அனுப்பி வைப்பாரு; அதேமாதிரி தான் அன்னைக்கும் நான் ஸகூலுக்கு போயிட்டு இருந்தேன்; அப்போதான் வழியிலயே வினோத் தம்பியும் அவரோட நண்பர்களும் ஓடி வரதை பார்த்து வண்டியை நிறுத்தி விசாரிச்சேன் ஆனா தம்பியோட நண்பர்கள் தான் சீக்கிரமா வண்டியை எடுக்க சொன்னாங்க அதுனால அவங்களை ஏத்திகிட்டு வேகமா கிளம்பிட்டேன்;

அப்புறமா தான் தெரிஞ்சது தம்பியோட நண்பர்கள் ஏதோ திருட்டிட்டதால மக்கள் துரத்திருக்காங்கனு அது தெரிஞ்சதும் இனி இப்படி பண்ணாதீங்க ப்பானு புத்திமதி சொல்லி அனுப்பிட்டோம் சார் இதான் நடந்துச்சு" என சரளமாய் பொய்யுரைக்க அதனை கேட்ட சத்யமூர்த்தி கொதித்து போனார்.

சத்யமூர்த்தி கோபமானாலும் இப்பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டுமென நினைத்து கோபத்தை கட்டுபடுத்தியவர் காளியிடம்,

"அப்போ, நீங்க அங்க எப்பயும் போல எதார்த்தமா தான் போயிருக்கீங்கனு சொல்றீங்களா" என கேட்க அதனை காளி சிறிதும் பயமின்றி ஆமோதித்தான்.

உடனே சத்யமூர்த்தி நீதிபதியிடம் திரும்பி,"யுவர் ஹானர், இந்த கேஸுக்கு முக்கிய வலு சேர்க்கிற விஷயமே போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் தான் அதை நாங்க இப்போ கொண்டு வந்திருக்கோம் அதோட போஸ்ட் மார்டம் செஞ்ச டாக்டர் கேசவனும் வந்திருக்காரு இப்போ அந்த ரிப்போர்ட்டை உங்க பார்வைக்கு சமர்பிக்கவும் டாக்டரிடம் அதைபத்தி விசாரிக்கவும் அனுமதிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்" என கேட்க அதற்கு நீதிபதியும்,

"எஸ் புரோசிட்" என கூற

காளி கூண்டிலிருந்து இறங்கி சென்ற அதேசமயம் எதிரே விசாரணை கூண்டில் ஏற வந்த டாக்டரோ காளியை பார்த்து பயந்து மிரள காளியோ ஒரு மிரட்டல் பார்வையோடு அவரை கடந்து சென்றான்.

டாக்டர் கேசவன் விசாரணை கூண்டில் ஏற போஸ்ட் மார்டம் ரிப்போட்டை நீதிபதியிடம் சமர்பித்தார் சத்யமூர்த்தி.

நீதிபதி அதை படித்து பார்த்துவிட்டு டாக்டரை விசாரிக்க அனுமதியளிக்க சத்யமூர்த்தியும் இதன்மூலமே அனிதாவின் மரணத்திற்கு நீதியை நிலைநாட்ட முடியுமென எண்ணி டாக்டரை விசாரிக்க துவங்கினார்.

"டாக்டர், அனிதாவோட மரணம் கற்பழிப்பால நிகழ்ந்தது தான்னு அவளை கடைசியா போலிஸ் மீட்ட இடத்துல இருந்த பொதுமக்கள் வாக்குமூலம் தந்திருக்காங்க அதோட அவளோட பெற்றோர்களும் தன் பொண்ணோட நிலையை பார்த்து அப்படிதான் இருக்கும்னு நம்புறாங்க இதையே தான் போஸ்ட் மார்டம் ரிப்போர்டும் சொல்லுதா அதைபத்தி கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா" என கேட்க,

அதற்கு கேசவனோ, "சார், போலிஸ் அனிதாவை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு வர வழியிலேயே அவளோட உயிர் பிரிஞ்சிடுச்சு; அதுனால நாங்க போஸ்ட் மார்டம் பண்ண நினைச்சோம் ஆனா மக்களும் அனிதாவோட பெற்றோர்களும் சொல்ற மாதிரி அவளை பார்க்க கற்பழிக்கபட்ட மாதிரி தெரியல சார்,

ஆனாலும் என் கடமையை செய்ய போஸ்ட் மார்டத்தை பண்ணேன் அப்போ நான் நினைச்ச மாதிரிதான் சார் முடிவும் வந்துச்சு; ஆமா அனிதா கற்பழிக்கபடல அவளோட தலை ஏதோ ஒரு பாறையில பலமா மோதபட்டிருக்கு; அதுனால தான் அவளோட உயிரும் பிரிஞ்சிருக்கு இதைதான் சார் நான் என் ரிப்போர்ட்லயும் எழுதிருக்கேன்" என கூற,

அதனை கேட்டு அதிர்ந்த சத்யமூர்த்தி நீதிபதியை பார்க்க அவரின் அதிர்ந்த முகத்தில் குழம்பிய நீதிபதியோ,

"ஆமா ரிப்போட்லயும் அதான் எழுதிருக்கு" என கூறி ரிப்போர்ட் சத்யமூர்த்தியிடம் தர சொல்ல,

அதனை வாங்கி பார்த்த சத்யமூர்த்தி மொத்தமாய் அதிர்ந்தாரென்றால் அனிதாவின் பெற்றோர்கள் மொத்தமாய் நிலைகுலைந்து போயினர்.

தனது கையிலிருந்த ரிப்போர்ட்டை பார்த்த சத்யமூர்த்திக்கு கோர்ட் துவங்கும் முன் டாக்டரிடம் பேசியதே நினைவிற்கு ஓடியது.

"நீங்க கவலையேபடாதீங்க சார், ரிப்போர்ட்ல வினோத்தும் அவனோட நண்பர்களும் அனிதாவை எப்படியெல்லாம் கெடுத்திருக்காங்கனு தெளிவா இருக்கு; இதுவே போதும் அவனுக்கு சரியான தண்டனையை நீங்க வாங்கி தந்திடலாம்" என கூற அதற்கு சத்யமூர்த்தியோ,

"ஆமா சார், இவனுக்கு தண்டனை வாங்கி தரது மட்டும் தான் என்னோட ஒரே குறிக்கோள்; சரி சார் அந்த ரிப்போர்ட்டை கொஞ்சம் காட்டுங்க எல்லாம் சரியா இருக்கானு செக் பண்றேன்" என கேட்ட

அவருக்கு மறுப்பு தெரிவித்த டாக்டரோ, "பீளிஸ் சார், தயவு செய்து நீங்க இதை படிக்காதீங்க அப்புறம் உங்களால சரியா வாதாட கூட முடியாது அவ்ளோ கொடுமைபடுத்திருக்காங்க சார்" என கூற அவரின் கூற்றினை நம்பிய சத்யமூர்த்தியும் சேகர் ஐ பி எஸ்ஸூம் ரிப்போர்ட்டை பார்க்கவே இல்லை.

இப்பொழுது தன்னுடைய மடமையை எண்ணி நொந்து கொண்டவரோ அனிதாவின் பெற்றோர்களை அடிபட்ட பார்வை பார்க்க அவர்களோ தன் பெண்ணிற்கு நியாயம் கிடைக்காதா என்ற வேதனை முகத்தோடு அமர்ந்திருந்தனர்.

அந்த ஏழை பெற்றோருக்கென்ன இப்படியெல்லாம் சதி நடக்குமென தெரியுமா என்ன‌‌..???
தனது மகளின் இறப்பிற்கு பின்பும் விதியின் ஆட்டம் தொடர்வதை எண்ணி கவலையோடு இருந்தனர்
ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை அவ்விதியே இம்மனிதர்களின் சதியினை கண்டு வியந்து போகிறதென்று..!!!

சத்யமூர்த்தி செய்வதறியாது நிற்க வக்கீல் வேதாச்சலம் எழுந்து நின்று,

"யுவர் ஹானர், எதிர்தரப்பு வக்கீல் சொன்னது போல டாக்டர் சமர்பிக்குற ரிப்போர்ட்டுல தான் கேஸோட முடிவே இருக்கு அதன்படி பார்க்கும்போது இப்போ அனிதாவும் கற்பழிக்கபட்டு இறக்கலனு தெளிவா தெரிஞ்சிடுச்சு; இதன்மூலம் எனது கட்சிகாரர் நிரபராதி என்றும் தெளிவாய் புரிந்து விட்டது,

மேலும் வினோத்தின் நண்பர்களையும் இதற்கு உடந்தையாக்கிய போலிஸாரின் கூற்றினை மறுக்கும்படியான ஒரு ஆதாரத்தையும் தங்களின் பார்வைக்கு சமர்பிக்க விரும்புகிறேன்" என கூறி நீதிபதியிடம் ஆதாரத்தை சமர்பித்தவரோ மேலும் தன் பேச்சினை தொடர்ந்தார்.

"நீதிபதி அவர்களே, இப்பொழுது நான் சமர்பித்த ஆதாரங்களின்படி வினோத்தின் நண்பர்கள் சம்பவம் நடந்த அன்று திருடியதாக அந்த பகுதியிலுள்ள போலிஸ் ஸடேஷனின் வழக்கு பதிவு செய்யபட்டிக்கிறது,

அதனால் தான் மக்களும் இவர்களை துரத்தியிருக்கிறார்கள்; அமைச்சரின் வேலையாள் காளியும் எதார்த்தமாய் இவர்களை காத்திருக்கிறார்; இதுதான் நடந்த உண்மை" என கூறி முடிக்க,

உடனே சத்யமூர்த்தியோ, "இல்ல நீதிபதி அவர்களே, இதுல ஏதோ தவறு இருக்கு எனக்கு தெரிஞ்சு ரிப்போர்ட் மாறிருக்கும்னு நினைக்கிறேன்" என கூற

அதற்கு வேதாச்சலமோ, "அதெப்படி சார் இவ்ளோ உறுதியா சொல்றீங்க" என நக்கலாய் கேட்க,

உடனே சத்யமூர்த்தி நீதிபதியிடம், "யுவர் ஹானர், அன்னைக்கு கோர்ட் ஹியரிங்ல திருடிட்டோம்னு சொன்ன வினோத்தோட நண்பர்களை போலிஸ் ஸடேஷன்ல வைச்சு விசாரிச்சப்போ கற்பழிச்சதா ஒத்துகிட்டாங்க அதை சேகர் ஐ பி எஸ்ஸும் வாக்குமூலமா பதிவு பண்ணிட்டாங்க அதை தங்களுடைய பார்வைக்கு சமர்பிக்கிறேன்" என கூறி ஓப்படைக்க நீதிபதி வாக்குமூலத்தை கேட்டு குழப்பி போனார்.

அப்பொழுது வேதாவோ, "யுவர் ஹானர், போலிஸாரோட விசாரணை எப்படி இருக்கும்னு நமக்கு நல்லாவே தெரியுமே ஒருவேளை அவங்க அடிச்சு மிரட்டி இந்த மாதிரி வாக்குமூலம் வாங்கிருந்தாங்கனா என்ன பண்றது சட்டத்தின் முன்னாடி ஆயிரம் குற்றவாளிகள் தப்பிச்சாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கபடகூடாது" என கூறி முடிக்க,

அதற்கு சத்யமூர்த்தியோ, "ஆமா சார், நாங்களும் அந்த ஆயிரம் குற்றவாளி லிஸ்ட்ல வினோத்தும் தப்பிச்சிட கூடாதுனு தான் போராடுறோம்; இப்போ நம்ம என்ன பண்ணலாம் எனக்கு ரிப்போர்ட்ல சந்தேகம் இருக்கு உங்களுக்கு வாக்குமூலத்துல சந்தேகம் இருக்கு இத்தனை சந்தேகத்தோட எப்படி நம்ம தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்; நம்ம வேணா ஒண்ணு பண்ணலாமா இப்போ வினோத் படிக்கிற ஸகூல்ல அவனுக்கு தீலிப்னு ஒரு பிரண்ட் இருக்கான், அவன்தான் வினோத்தோட காதலையும் அனிதாவோட நிலைக்கு வினோத் காரணமா இருக்கலாம்னு சொன்னா நாம ஏன் அவனை கூப்பிட்டு வரகூடாது அட நீங்க கவலையேபடாதீங்க அவனை போலிஸ் அடிக்காம கூட்டிட்டு வருவாங்க அப்போ உண்மையை தெரிஞ்சிக்கலாம்" என நக்கலாய் கூறியவரோ நீதிபதியிடம் திரும்பி,

"யுவர் ஹானர், அடுத்த ஹியரிங்குக்கு வினோத்தின் நண்பன் தீலிப்பை அழைத்து வர அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்" என கூற

உடனே நீதிபதியோ "தீலிப்பின் வாக்குமூலத்தை தெரிந்து கொண்டபிறகே பல குழப்பங்கள் தீர்ந்து சரியான தீர்ப்பினை வழங்க முடியும் என்பதால் அடுத்த ஹியரிங்கு தீலிப்பினை அழைத்து வரும்படி உத்தரவிடுகின்றேன் அதுவரை இவ்வழக்கு ஒத்தி வைக்கபடுகிறது" என கூறி செல்ல,

இங்கு நாகலிங்கமோ மருதநாயகத்திடம், "இனி போலிஸ்லயும் சில பேரை நம்ம விலைக்கு வாங்கிகணும் டா; அப்போதான் இப்படிபட்ட குடைச்சல்ல எல்லாம் நம்மலால சமாளிக்க முடியும், சரி தீலிப் சாட்சி சொல்ல வருவானா" என கேட்க,

இங்கு கிஷோரும் சேகர் ஐ பி எஸ்ஸிடம் அதனையே கேட்க பெருமூச்சொன்றை விட்டு கொண்டவரோ, "அவன் குடும்பத்தோட பயத்தை தாண்டி நாம தான் கூட்டிட்டு வரணும் பாக்கலாம்" என கூற அனிதாவின் பெற்றோர்களோடு கோர்ட்டும் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையோடு கலைந்து சென்றது.

💘💘💘💘💘

அந்தி சாயும் மாலை வேளைதனில் தனது பள்ளியில் சிறப்பு வகுப்புகளை முடித்த கார்த்திக் மியூசிக் ரூமை நோக்கி விரைந்து வர,

அதேசமயம் வகுப்புகள் முடிந்து முன்னதாகவே அங்கு வந்து சேர்ந்த அனுவோ அங்கிருக்கும் மற்ற மாணவர்களையும் அவர்களின் திறமையினையும் பார்த்து ரசித்தபடியே வியந்து கொண்டாள்.

அப்பொழுது அனைவரின் பயிற்சியையும் தடைசெய்யும்படியும் அனுவின் ரசிப்பிற்கு அறுவை சிகிச்சை செய்யும்விதமாகவும் கர்ண கொடூரமாய் குழுவாக மாணவர்கள் பாடி கொண்டிருந்தனர்.

அக்குழு வேறு யாருமல்ல கார்த்திக்கை எதிரியாய் நினைக்கும் டேவிட்டின் குழுவே தான்

இதனை பார்த்து பலர் இன்று பயிற்சி எடுத்தது போதுமென சிதறி ஓட அனுவோ இவர்களின் சங்கீத இடியில் திக்குமுக்காடாமல் சிரித்து கொண்டிருந்தாள்.

உடனே தனது கைபேசியை எடுத்து வீடியோவாக இவர்களை படம் பிடித்தவளோ மனதிற்குள், 'அப்பா, நீங்க டோரேமான் கார்டூன்ல வர ஜீயான் மாதிரி யாருமே இருக்க மாட்டாங்கனு சொன்னீங்களே இப்போ பாருங்க ஒரு குருப்பே அப்படிதான் சுத்துது இதை பார்த்தா என்ன சொல்லுவீங்களோ' என சிரித்தபடியே வீடியோ எடுக்க டேவிட் குழுவோ இசை பேரிடியை முடிவே இல்லாமல் இசைத்து கொண்டிருந்தனர்.

இவர்களின் பேரிடியையும் தாண்டி கார்த்திக் புயலென மியூசிக் ரூம்மிற்குள் வந்தவனோ மாணவர்கள் ஓடுவதை பார்த்து அனுவிற்கு ஆபத்து வந்திருக்குமோ என பதறி வர,

ஆனால் அவளோ சிறுபிள்ளையாய் மனம் விட்டு சிரித்து கொண்டிருக்க அவளின் சிரிப்பினில் தன்னை மறந்து லயித்த கார்த்திக்கின் காதல் தருணத்திலும் ஜீயான் குருப்ஸ் என்ற டேவிட் குருப்ஸ் மண்ணள்ளி போட்டது.

அவர்களின் சங்கீத கூத்தை பார்த்து சிரித்து கொண்டே அனுவிடம் சென்றவனோ, "ஓய் ஜீனியர், இன்னும் எவ்ளோ நேரம் இந்த காமெடியை பார்த்து சிரிப்ப வா நம்ம பிராஸ்டிஸ் பண்ணலாம்" என கூறிகொண்டு,

அவளின் கைபிடித்து கொண்டு மியூசிக் ரூம்மின் மற்றொரு பக்கம் இவர்களின் இசை பேரிடி சிறிதாய் கேட்கும் இடத்திற்கு அழைத்து செல்ல அனுவோ அவனையே வைத்த கண் வாங்காமல் வியந்து பார்த்து கொண்டிருந்தாள்.

"ஹப்பாடி, ஒருவழியா இங்க வந்துட்டோம் இங்க அவனுங்களோட சத்தம் அதிகமா கேட்காது" என கூறிகொண்டே திரும்பி அனுவினை பார்க்க,

அவளின் முகபாவத்தில் தெரிந்த ஆச்சர்யரேகைகளை கண்டு குழப்பியவனோ பிறகே அவளின் கையை பற்றியிருப்பதை உணர்த்து பதறியபடியே கையை விட்டு திரும்பி கொண்டான்.

பிறகு தனது மனதிற்குள் 'டேய் கார்த்திக், ஆல்ரெடி அவளுக்கு லவ் பிடிக்காது இதுல நீ ஏதோ உரிமையிருக்கிற மாதிரி கையை வேற பிடிச்சிட்டீயே இப்போ என்ன சொல்ல போறாளோ' என யோசிக்க,

அப்பொழுது அவனின் சிந்தனையை கலைக்கும் விதமாக அவனை அழைத்த அனுவோ, "சீனியர், நீங்க என்னைய ஜீனியர்னா கூப்பிட்டீங்க எப்பயும் அனுனு தானே கூப்பிடுவீங்க இப்போ என்ன புதுசா இப்படி கூப்பிடுறீங்க ஆனா இதுகூட நல்லா தான் இருக்கு இனி இதேமாதிரி கூப்பிடுங்க" என கூற அதில் தனது கண்கள் பிதுங்கி விடுமளவிற்கு முழித்தவனோ 'அப்போ நம்ம கையை பிடிச்சதை அவ நோட் பண்ணவே இல்லையா' என நினைத்தபடியே அவளிடம்,

"அனு உனக்கு என்மேல கோபமில்லையா" என அவள் கவனித்தக்காததை உறுதிபடுத்த கேட்க,

அதற்கு சிறிதுநேரம் குழம்பியவளோ கார்த்திக்கிடம், "நான் ஏன் சீனியர் கோபப்படணும்; இதுக்கெல்லாம் யாராவது கோபபடுவாங்களா நீங்க ஜீனியர்னு கூப்பிடுறது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு இனி அப்படியே கூப்பிடுங்க" என குறும்பாய் பேசி கண்ணடிக்க,

அவளின் செயலில் சொக்கி போனவனோ உடனே தன்னிலையை சரிபடுத்தி கொண்டு,

"ஓகே ஜீனியர், நம்ம பாட்டு கிளாஸை இப்பவே ஆரம்பிக்கலாம் இல்லனா போட்டியில சிறப்பா பாட முடியாது" என கூறி தனது
மனதினை திசை திருப்பியவனின் சிந்தனையின் திடீரென ஒரு விஷயம் தோன்ற உடனே அவளிடம்,

"ஆமா எனக்கொரு டவுட்டூ, உனக்கு சங்கீதத்தை பத்தி கொஞ்சமாவது தெரியுமா இல்லனா ஆ ஆ இ ஈ னு முதல்ல இருந்து சொல்லி தரமாதிரி ஏழு ஸவரத்துல இருந்து ஆரம்பிக்கணுமா" என மிரண்டு போய் கேட்க,

அவனின் கேள்வியில் தீயாய் முறைத்த அனுவோ, "என்னைய பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது; எனக்கு ஒண்ணுமே தெரியாமலா பாட்டு போட்டியில கலந்துப்பேன்; எனக்கும் சங்கீதம் எல்லாம் நல்லா தெரியும் 8 ஸடாண்டட் படிக்கிறவரை கத்துகிட்டேன் அப்புறமா அம்மா படிப்புல கவனம் சிதறிடும்னு நிறுத்திட்டாங்க; அப்பயும் டச் விட்டு போகாம இருக்கிறதுக்காக ஏதாவது பாட்டு பாடிட்டே இருப்பேன் என் அப்பா கூட என் வாய்ஸ் கிளி மாதிரி இருக்குனு சொல்லுவாங்க தெரியுமா, அப்படிபட்ட என்கிட்ட எப்படி உங்களால இப்படி ஒரு கேள்வி கேட்க முடிஞ்சது" என கோபத்தில் ஆரம்பித்து சோகமாய் முடிக்க,

அவளின் சிறு சோகத்தையும் தாங்கி கொள்ளாத அவனுள்ளம் அவளை சமாதானபடுத்த துவங்க எதற்கும் அசராதபடியே சோக கீதம் வாசித்தவளோ இறுதியில் கார்த்திக் கூறிய ஐஸ்கீரிம் என்ற சொல்லை கேட்டு ஐஸ்கட்டியாய் சோகத்தை கரைத்து கொண்டாள்.

"வாவ் உண்மையாவா, எனக்கு நீங்க ஐஸ்கீரிம் வாங்கி தருவீங்களா சீனியர் அப்படினா எனக்கு மூணு ஐஸ்கீரிம் வேணும் டீலா" என கேட்க,

அவளின் குழந்தைதனத்தில் சிரித்தவனோ, "ஓகே ஜீனியர், கண்டிப்பா வாங்கி தரேன் இப்போ வா பாட்டு கத்துக்கலாம்" என கூறி அவளின் குரல் வளத்தை அறிய ஒரு சினிமா பாடலை பாட சொல்ல,

அவளோ தனது தேன் குரலில் அழகாய் பாட அவளின் குரலிலே தனது மனதினை மொத்தமாய் தொலைத்தவனோ மனதிற்குள், 'உங்க அப்பா தப்பா சொல்லிட்டாரு டி செல்லகுட்டி; நீ கிளி மாதிரி பாடல கிளியை விட கியூட்டா பாடுற சூப்பர் டி செல்லம்' என தனது மனதிற்குள் கொஞ்சி கொண்டவனோ அவள் பாடி முடித்ததும் அவளிடம்,

"பரவால அனு, நான் நினைச்சளவுக்கு நீ மோசம் கிடையாது ஏதோ ஒரளவுக்கு நல்லா பாடுற இன்னும் கொஞ்சம் டிரைன் பண்ணா பெஸ்ட்டா பாடிடுவ அதுக்கு நான் பயிற்சி தரேன்" என கூற,

கார்த்திக்கின் பாராட்டில் மகிழ்ந்தவளோ அங்கிருக்கும் கீ போர்ட்டை பார்த்துவிட்டு, "சீனியர் அது கீ போர்ட் தான எனக்கு பாட்டோட சேர்த்து இப்படிபட்ட மியூசிக் இன்ஸ்ரூமன்ஸையும் வாசிக்க கத்து தரீங்களா" என கண்கள் மின்ன கேட்க,

அவளின் ஆசைக்கு சம்மதித்த கார்த்திக்கோ சரியென தலையசைக்க,

உடனே துள்ளிகுதித்து கீ போர்டின் அருகே சென்றவளோ அதனை வாசிக்க துவங்கினாள்.

ஆனால் இதற்குமுன் வாசித்து அனுபவமில்லாததால் அவள் அதை கொடூரமாக வாசிக்க,

இப்பொழுது ஊரையே ஓட விட்ட ஜீயான் குருப்ஸ் என்ற டேவிட் குருப்ஸ் இவ்விசையை கேட்டு தெறித்து ஓடினர்.

அனுவின் இசை வாத்தியத்தின் மீதான புலமையை கண்டு சிரித்த கார்த்திக்கோ,

அவளின் பின்னால் வந்து அவள் கையோடு கை சேர்ந்து கீ போர்ட்டை இருவரின் விரல்கொண்டு அழகாய் வாசிக்க துவங்க,

ஏனோ அவனின் இந்த திடீர் அருகாமையிலும் முதல் ஸபரிசத்திலும் திக்குமுக்காடிய அனுவோ இன்ப அவஸ்தையில் நெளிந்து கொண்டிருக்க,

அவளின் அவஸ்தையை உணராமல் இசையில் லயித்த கார்த்திக்கோ தனது இசையினை சிறப்பாய் தொடர்ந்து கொண்டிருந்தான்.

தனது இசை புலமைக்கு அனுவின் விரல் வழியே உயிர் தந்த கார்த்திக்கோ சிறிதே இடைவெளியிலிருந்த அனுவின் முகத்தை பார்த்து,

"இப்படிதான் வாசிக்கணும் அனு இப்போ புரிஞ்சதா" என கேட்க,

அப்பொழுது அவனின் கண்களை பார்த்த அனுவின் கண்களின் தெரிந்த வித்தியாசமான உணர்வினில் சற்று யோசித்தவனோ,

பிறகே சூழலை கிரகித்து கொண்டு உடனே அவளை விட்டு சில அடிகள் நகர்ந்து நிற்க,

அனுவோ தனது தலையினை குனிந்து கொண்டு வெட்க புன்னகையோடு கன்னகதுப்புகள் சிவப்பேற இன்பத்தில் திளைத்திருந்தாள்.

கார்த்திக்கின் உள்மனமோ அவனிடம், 'டேய் கார்த்திக், இன்னைக்கு எல்லாமே உனக்கு ராங்காவே போகுது டா; இப்படியே போனா அவகிட்ட அடிவாங்குறது கண்பாராம் அதுனால முதல்ல இங்கயிருந்து நடையை கட்டு' என எச்சரிக்கை விடுக்க,

தனது மனதின் குரலுக்கு செவிசாய்த்த கார்த்திக்கோ அனுவிடம், "ஓகே அனு இன்னைக்கு டைமாச்சு நம்ம நம்மலோட பிராட்டிஸை நாளைக்கு வைச்சிப்போம்" என கூறி தனது உடமைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து ஓட அனுவோ கார்த்திக்கின் செயலை தனது மனது மறுக்காமல் ஏற்ற விந்தையென்ன என்ற கேள்வியோடு தனது வீட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்தாள்.

💘💘💘💘💘

இங்கு சுந்தரமோ தனது அனுவலக பணியை முடித்துகொண்டு வீட்டிற்கு களைப்பாய் வந்திருந்தாலும் அவரின் மனமோ மகனது காதலை கேள்விபட்டதிலிருந்து உலை கணலாய் கொதித்து கொண்டிருந்தது.

"அவனோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்; அவளோட சுயநலபுத்தி தெரிஞ்சு தானே அவளை விட்டு விலகி வந்தேன் ஆனா இவன் என்னனா அவளோட மகளையே காதலிக்குறேனு வந்து நிக்குறானே இவனை என்ன பண்ணலாம் இதை நம்ம முதல்லயே கிள்ளி போடணும் அதான் நமக்கு நல்லது" என அவரின் அறையில் தன்னிடமே பேசி கொண்டு கோபமாய் இருந்தவரின் சிந்தனை தனது கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.

தனது சிறுவயதிலிருந்தே தங்கையின் மேல் அளபறிய பாசத்தில் இருந்து கண்ணுக்குள் பொத்தி வைத்து பார்த்து கொண்டவர் தான் சுந்தரம்.

தங்கைக்காக பெற்றோரிடமே சண்டையிட்டு தங்கையின் ஆசைக்களை நினைவாக்க அவரின் மனைவி காமாட்சியும் இப்பாசத்தில் பூரித்து போவார்.

இவ்வாறு சுந்தரம் தனது தங்கையை பாசத்தால் தாங்க அண்ணனின் பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை சாவித்திரியும் தந்து அவரின் அன்பினிலே வளர்ந்து அண்ணன் காட்டிய வரனையே திருமணமும் முடித்தார்.

இவ்வாறு தங்களுக்கென்ற குடும்பம் இருந்தும் பாசமாய் ஒற்றுமையாய் வாழ்ந்த இவர்களின் ஒற்றுமையை குலைக்கவே சுத்தரத்தின் நண்பன் பிஸினஸ் துவங்க ஆலோசனை தர நண்பனின் ஆலோசனையினால் மனதில் பேராசை எழ,

அதன் விளைவாக தந்தையிடம் சொத்தை பிரித்து தர சொல்லி கேட்டார்.

மகனது அனுபவமில்லா புது தொழில் முயற்சியில் இழப்புகள் அதிகம் நேர வாய்பிருப்பதால் மகனிற்கு சிறிது பங்கை மட்டும் பிரிந்து தந்து விட்டு மகளிடமே முக்கால்வாசி சொத்துக்களை எழுதி வைத்தார்.

அவர் இவர்களின் அண்ணன் தங்கை பாசத்தை அறிந்ததாலும் மருமகனின் குணம் தெரிந்ததாலும் நாளை மகனின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் அவனிற்கு அனைவரும் தோள் கொடுப்பர் என எண்ணி சொத்தை பிரிந்தார்.

ஆனால் பேராசை எனும் நஞ்சை விதைத்த சுந்தரத்தின் நண்பனோட பொறாமை எனும் விதையையும் சேர்ந்து விதைத்து பாரபட்சம் காட்டபடுவதாக சுட்டிகாட்டி தூண்டிவிட நண்பனின் தவறான வழிகாட்டுதலால் தனது தங்கையின் உறவையே துறந்து விட்டு சென்றார்.

இங்கு பெரியவங்களின் நிலை இதுவென்றால் முன்று வயது பிஞ்சு குழந்தையாய் இருந்த நேசனின் மனமோ தனது பொம்மை போல பார்த்து கொண்ட கவியை பிரிய மனமே இல்லாமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.

குழந்தையின் நிலைக்கும் மனமிறங்காத சுந்தரமோ அவனை தூக்கிகொண்டு போக அவரை தடுத்த தங்கையையும் தள்ளிவிட்டு சென்றார்.

தனது உயிரான கவியை விட்டு பிரிந்து செல்ல முடியாமல் தவித்த நேசனின் மனதில் அப்பொழுதே அன்பென்னும் விதை ஆழமாய் தூவபட்டு இருக்க, அதுவே பின்னாளில் இரு குடும்பத்தையும் இணைக்கும் காதல் பாலமாய் வளர்ந்து நிற்கிறது.

இவையனைத்தையும் தெளிவாய் புரிந்து கொள்ளாமல் கோபத்தை வளர்த்து கொண்ட சுந்தரமோ இன்றும் அக்கோபத்தினை விடாமல் சுற்றி கொண்டிருக்கிறார்.

தனது கடந்த காலச் சுவடுகளை நினைத்து பார்த்தவரோ தனது தங்கையின் நம்பரை மனைவியிடமிருந்து வாங்கி போன் செய்தார்.

சுந்தரம் தங்கையின் பாசமாய் பேசிட மாட்டாரா என ஏங்கிய காமாட்சியின் எண்ணத்தில் இடி விழும்படியாகவே அவரின் வார்த்தைகள் அமைந்தது.

"ஏய், நீ உன் மனசுல என்னடி நினைச்சுகிட்டு இருக்க நம்ம அப்பாவை ஏமாத்தி சொத்தை வளைச்சு போட்ட மாதிரி உன் பொண்ணை வைச்சு என் மகனையும் காதலால வளைச்சு போட்டு மிச்ச சொத்தையும் பிடுங்கலாம்னு நினைக்குறீயா" என ஆத்திரத்தில் கத்த,

அண்ணனின் திடீர் அழைப்பில் பாசத்தில் மிதந்த மனதில் அவரின் அமிலம் சுரந்த வார்த்தைகள் தீயாய் சுட அவரும் பதிலுக்கு கத்த துவங்கினார்.

"இங்க பாருங்கண்ணே, நீ தேவையில்லாம வார்த்தையை விடாத நான் என் பொண்ணை படிச்சு வாழ்க்கையில முன்னேறுனு தான் சொல்லுவேனே ஒழிய இப்படி அடுத்தவங்களோட சொத்தை அபகரிக்க கத்து தரவே மாட்டேன்,

உன் பையன் விரும்புனானா அவனை கண்டிச்சு வை; அதைவிட்டுட்டு என்னையும் என் பொண்ணையும் தப்பா பேசுன நடக்குறதே வேற பார்த்துக்கோ" என கோபமாய் பேசிவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டார்.

"................."

சாவித்திரியின் செயலில் கடுப்பான சுந்தரமோ தனது கோபத்தில் தாம் தூமென்று குதிக்க இவரின் பிடிவாதத்திற்கும் கோபத்திற்கும் முடிவில்லையா என பெருமூச்சை விட்டு கொண்டே கணவனை சரிசெய்ய வழி தேடினார் காமாட்சி.காதலில் தேடல் தொடரும்🏃🏃🏃
 
Rajam

Well-known member
Member
தனித்தனியாக வரும் மூன்று பகுதிகளும்
ஒரே புள்ளியில் இணையுமா.
செமயா இருக்கு கதை.
 
Nancy mary

✍️
Writer
தனித்தனியாக வரும் மூன்று பகுதிகளும்
ஒரே புள்ளியில் இணையுமா.
செமயா இருக்கு கதை.
ஆமா சகி அதை நாம பொறுத்திருந்து பார்க்கலாம்🤗🤗🤗
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 
சூப்பர் சிஸ்...
சத்தியமூர்த்தி நியாயம் வாங்கி கொடுப்பாரா...
கார்த்திக் சொல்லாமலே அனு அவனோட லவ்வை புருஞ்சுப்பா போலயே...
சுந்தரம் ஏன் இப்படி பண்றார்..
 
Nancy mary

✍️
Writer
சூப்பர் சிஸ்...
சத்தியமூர்த்தி நியாயம் வாங்கி கொடுப்பாரா...
கார்த்திக் சொல்லாமலே அனு அவனோட லவ்வை புருஞ்சுப்பா போலயே...
சுந்தரம் ஏன் இப்படி பண்றார்..
எல்லா கேள்விகளுக்கும் விடைகளை சீக்கிரமே பார்க்கலாம்😍😍❤️❤️❤️❤️
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 
Nithya Mariappan

சகி எப்பிடி இவ்ளோ க்ளியர் கட்டா மூனு ஆங்கிளையும் எழுதுறீங்க? ஜஸ்ட் ஆசம்யா... கார்த்திக் அனு கியூட் லவ் ஒரு பக்கம்... கவி அண்ட் நேசன் மெச்சூர்ட் லவ் இன்னொரு பக்கம்... வீணா போன வினோத்தோட கிரிமினல்தனம் அண்ட் அவன் அப்பாவோட அரசியல் களம் ஒரு பக்கம்... சான்சே இல்ல... ரொம்ப அருமையா கதைய கையாளுறிங்க👏👏
 
ரொம்ப ரொம்ப நன்றி சகி சந்தோஷமா இருக்கு😍😍😍😍❤️❤️❤️❤️
 
Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom