• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 11

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம்-11❤

️காலைபொழுதின் விடியலை உணர்த்த பகலவன் புவிதனில் தனது ஆளுமையை செலுத்தி ரம்மியமாக விடிய,

அதே ஆளுமையோடு இன்றைக்கு தனது காதலுக்கு உறுதியான அஸ்திவாரத்தை நிலலநாட்ட நேசன் தயாராகி கொண்டிருந்தான்.

"நேசா, நேத்து நடந்த சந்திப்புலயே கவியோட மனசுல நீ இருக்கனு உறுதியா தெரிஞ்சிடுச்சு; ஆனா அதைபத்தி சொல்லாம அவ தயங்குறதுக்கான காரணமே குடும்பம் தான்.. நம்ம இரண்டு குடும்பமும் இப்படி இருக்கும்போது எப்படி அவ காதல் கல்யாணம்னு யோசிப்பா குடும்பத்தை நேசிக்கிறவ குடும்பத்தோட பிரச்சனையை தான் முதல்ல பார்ப்பா; அதுனால முதல்ல நம்ம அதை சரிபண்ணிட்டு அப்புறமா அவளோட காதலை அனுபவிப்போம்" என தனக்குதானே கண்ணாடியில் தெரியும் தனது பின்பத்தை பார்த்து பேசிகொண்டவனோ கல்லூரி பையினை எடுத்துகொண்டு ஹாலிற்கு சென்றான்.

அப்பொழுது அங்கே உணவு மேசையில் மகனுக்காக டிபன் பாக்ஸை ரெடி செய்து கொண்டிருந்த காமாட்சியோ மகனை பார்த்ததும்,

"நேசா, உனக்கு பிடிச்ச பூரி கிழங்கு செஞ்சிருக்கேன் அதை சாப்பிட்டு காலேஜுக்கு கிளம்பு" என கூறியவரோ கணவரின் புறம் திரும்பி "என்னங்க, நீங்களும் அந்த பேப்பரை ஓரமா வைச்சிட்டு வந்து சாப்பிடுங்க அப்புறமா வேலைக்கு நேரமாச்சனு பறப்பீங்க" என கூறியவரின் அன்பு கட்டளைக்கிணங்க தந்தையும் மகனும் நாற்காலியை இழுத்து போட்டு ஆளுக்கொருபுறமாய் அமர்ந்தனர்.

நேசன் தனது தந்தை சுந்தரத்தின் முகத்தினை ஒருமுறை நோக்கியபடியே தாயவளிடம் திரும்பி, "அம்மா, பூரி வாசனையே சூப்பரா இருக்கே அப்போ பூரியும் செம டேஸ்ட்டா இருக்கும்ல; ஆனா இன்னும் எவ்ளோநாள் தான் நீயே கஷ்டபட்டு சமைச்சு கஷ்டபடுவ, நீயும் கொஞ்சம் ரீலாக்ஸா ரெஸ்ட் எடுக்க வேணாமா" என அக்கறையாய் வினவுவது போல பேச,

மகனின் அக்கறையிலேயே ஏதோ பெரிதாய் விஷயமிருப்பதாய் யூகித்து கொண்ட காமாட்சியோ, "என்னடா, என்னைக்கும் இல்லாம ஓவரா பாசம் பொங்குது சரியில்லையே என்ன விஷயம்" என சிரித்துகொண்டே கேட்ட,

தாயவளின் கேள்வியில் அசடுவழிந்த நேசனோ, "அது ஒண்ணுமில்லைம்மா எவ்ளோ நாள்தான் நீயும் தனியா கஷ்டபடுவ; இதே உனக்கொரு மருமக இருந்தா உனக்கு ஒத்தாசையா துணையா இருப்பால" என சுத்தி வளைத்து சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடித்தவனோ தாயின் முகத்தினை பார்க்க,

காமாட்சியோ மகனின் பேச்சினில் அதிர்ச்சியாகியபடி தனது கணவனை நோக்க சுந்தரமோ கோபத்தில் உச்சிக்கு சென்று சாப்பாட்டு தட்டினை சுவற்றினை நோக்கி விசிறியடித்தார்.

தந்தையின் கோபத்தினை கண்டு அதிர்ந்த நேசனோ மனதினில், 'நேசா, காதல்னு சொன்னதுக்கே தட்டு பறக்குதே இதே இவரோட தங்கச்சி மக தான் காதலினு சொன்னா என்ன எல்லாம் பறக்குமோ சரி சமாளிப்போம்' என எண்ணியபடியே தைரியமாய் தந்தையை பார்க்க அவரோ கோபத்தில் கத்த துவங்கினார்.

"ஏண்டி, உன் புள்ளைக்கு என்ன புத்தி கெட்டு போச்சா; நம்ம குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்க வேண்டிய நேரத்துல காதல் கீதல்னு உளறிட்டு இருக்கான்; இதையெல்லாம் நீ என்னனு கேட்ட மாட்டீயா" என மனைவியை திட்டியவரோ மகனின்புறம் திரும்பி

"ஏண்டா, உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா; உனக்கடுத்து ஒரு தங்கச்சி இருக்காளே அவளோட வாழ்க்கையில நல்லபடியா கரை சேர்க்கணுமே அக்கறை இருக்கா; இன்னும் நீயே படிச்சு முடிக்கல உன்னோட படிப்பு முடிச்சதும் பொறுப்பா வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்தணும்; இப்படி தலைக்கு மேல பொறுப்பை சுமக்க வேண்டிய நேரத்துல காதல்னு வந்து நிக்கிறீயே டா இதெல்லாம் நியாயமா" என ஆத்திரத்தில் கத்தினார்

அதேசமயம் காமாட்சியோ கணவனையும் அடக்க இயலாமல் மகனது செயலையும் கண்டிக்க இயலாமல் விதிர்விதிர்த்து நிற்க தந்தையின் பேச்சினால் கோபம் கொண்ட நேசனோ,

"அப்பா, என்னப்பா நீங்க சும்மா சும்மா பொறுப்பில்லைனு கத்திகிட்டு இருக்கீங்க; எனக்கு பொறுப்பெல்லாம் நிறையவே இருக்கு என்னோட கடமை என்னனு எனக்கு தெளிவாவே தெரியும்; அதை நீங்க நியாபகபடுத்தணும்னு அவசியமே இல்ல; நான் என்ன இன்னைக்கு பொண்ணு பார்த்து நாளைக்கு கல்யாணம் பண்ணி வைங்கனா கேட்டேன், என்னோட காதலுக்கு சம்மதம் சொல்லுங்க நான் என்னோட பொறுப்புகளை முடிச்சிட்டு கல்யாணம் பண்றேன்னு தானே சொல்ல வரேன் அதைக்கூட முழுசா கேட்காம இப்படி கத்துனா என்னப்பா அர்த்தம்" என ஆதங்கமாய் கேட்க,

மகனின் பேச்சினில் புருவம் சுருக்கியவரோ, "இப்போவே காதலுக்கு சம்மதம் கேட்குற அளவுக்கு என்னாச்சு;
நீ காதலிக்கிற பொண்ணு யாரு" என கேட்க,

நேசனோ தனது தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டிகொண்டு தந்தையிடம், "நான் காதலிக்கிற பொண்ணு வேற யாருமில்லைப்பா; என்னோட அத்தை சாவித்திரியோட பொண்ணு கவியரசி தான்" என கூற மகனது பேச்சினை கேட்டு கொதித்து போன சுந்தரோ மகனென்றும் பார்க்காமல் கைநீட்டி அடிக்க சென்றுவிட்டார்.

கணவனின் செயலினை கண்ட காமாட்சியோ, "என்னங்க, என்ன இது தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை இப்படியா கைநீட்டி அடிப்பீங்க இதெல்லாம் தப்புங்க" என கூற அதனை கேட்டு மேலும் கோபமானவரோ,

"இவன் பண்ண காரியத்துக்கு அடிக்காம என்னடி பண்ண சொல்ற, எனக்கும் அவளோட குடும்பத்துக்கும் இருக்கிற பகையை தெரிஞ்சும் காதலிக்குறானா எவ்ளோ தைரியமிருக்கும்" என மனைவியிடம் கூறியவரோ மகனிடம் திரும்பி,

"இங்க பாருடா, நீ காதலிக்கிற பொண்ணோட குடும்பத்துல இருக்கிறவங்க ஒண்ணும் நல்லவங்க இல்ல; அவங்க எல்லாம் சரியான பேராசைகாரங்க என் அப்பாகிட்ட பாசமா நடக்குற மாதிரி நடிச்சிகிட்டு சொத்துல என்னைய விட அதிக பங்கை வாங்கிட்டு போயிட்டா அப்பாவோட முடிவுலயும் பெருசா எதுவும் பேசல எல்லாமே திட்டம் போட்டு பறிச்சிட்டாங்க,

"இப்போ அவளோட பொண்ணை வைச்சு உன்னைய மயக்குறதுக்கு காரணமே என்கிட்ட இருக்கிற மிச்ச சொத்தை பறிக்கணும்னு எண்ணத்துல தான் இப்படியெல்லாம் பண்றாங்க; இதுபுரியாம நீயும் அவங்க பேச்சுக்கு மயங்கி ஆடுற இந்த காதல் கத்திரிக்கானு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு படிக்கிற வழியை பாரு உன்னோட பொறுப்புகளை எல்லாம் முடிச்சதும் நாங்களே உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணத்தை முடிச்சு வைப்போம்; அதைவிட்டுட்டு வீண்பிடிவாதம் பிடிச்ச நடக்குறதே வேறயா இருக்கும் ஜாக்கிரதை" என மிரட்ட தந்தையின் பேச்சில் கோபமானவனோ,

"அப்பா, உங்களோட முட்டாளதனமான பேச்சை நிறுத்துறீங்களா; இதுநாள்வரைக்கும் உங்களோட கோபமே அத்தை சொத்து விஷயத்துல உங்களுக்காக பேசாம இருந்தது தான்னு நினைச்சேன் ஆனா இப்போதான் உங்களோட கீழதரமான எண்ணமே புரியுது; நீங்க சொன்னமாதிரி அவங்க ஒண்ணும் என்னைய மயக்க பார்க்கல நானே தான் கவியை விரும்புறேன் ஆனா அவ என்னோட விருப்பம் சொத்துனு எதையுமே பார்க்காம குடும்ப பகையை மட்டுமே காரணம் காட்டி விலகுறா அட்லிஸ்ட் அவளோட மனநிலையை மாத்த தான் குடும்பத்தை ஒண்ணு சேர்க்கலாம்னு உங்ககிட்ட பேச வந்தேன் ஆனா உங்க பேச்சை கேட்டதும் என்னோட முடிவு தப்புனு தெரிஞ்சிடுச்சு ஒரு விஷயத்தை மட்டும் நியாபக வைச்சிக்கோங்க எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது கவியோட தான் இதை உங்களால கூட தடுக்க முடியாது" என கூறி கொண்டு அங்கிருந்து கல்லூரிக்கு விரைந்தான்.

தன் பேச்சிற்கு செவிசாய்க்காமல் செல்லும் மகனையே பார்த்தவரோ சாப்பிடாமல் அலுவலகத்திற்கு கிளம்ப,

சிறிதுநேரத்தில் வீடே பிரளயமாகியதை கண்டு நொந்துகொண்ட காமாட்சியோ சமையலறையினை நோக்கி விரைந்தார்.

💘💘💘💘💘

இங்கு பள்ளியில் வேதியல் ஆசிரியர் மாணவர்களை வேதியல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்று வேதியல் நடைமுறைகள் பற்றிய பாடத்தினை விளக்கி கொண்டிருந்தார்.

ஆசிரியர் நடத்தும் பாடத்தினை கார்த்திக் கவனமாக கவனித்து கொண்டிருக்க அவனின் நண்பர்களோ ஆசிரியரின் கண்ணில்படாத வண்ணம் அங்கிருந்த இரசாயங்களை எடுத்து விளையாடி கொண்டிருந்தனர்.

"மச்சி, இந்த மேம் என்னடா இவ்ளோ கொடுமைபடுத்துறாங்க என்னோட டியூசன் பிரண்ட் படிக்கிற ஸ்கூல்ல எல்லாம் லேப் எந்தபக்கம் இருக்குனே காட்ட மாட்டாங்களாம்; சரியா பப்ளிக் பிராக்டிக்கல் அப்போதான் பூஜை போடுறமாதிரி காட்டுவாங்களாம்; அதேமாதிரி இவங்களும் செய்யலாம்ல மாசத்துல நாளு தடவை இங்க கூட்டிட்டு வந்து இந்த கெமிக்கலை அதுல ஊத்து அந்த கெமிக்கலை இதுல ஊத்துனு டார்சர் பண்றாங்க டா, இந்த அநியாயத்தை எல்லாம் நீ தட்டி கேட்க மாட்டீயா" என தினேஷ் தன் பாட்டிற்கு புலம்பி கொண்டிருக்க,

அவனின் பேச்சை கவனிக்காத ரவி மற்றும் சங்கரோ அங்கிருந்த ஒவ்வொரு இரசாயனமாக பார்த்துகொண்டும் அதுமூலம் வெளிபடும் வாடையை பற்றி பேசிகொண்டும் இருந்தவர்கள் விக்னேஷ் வகுப்பினை கவனிப்பதை பார்த்து அவனிடம்,

"மச்சி அழுகிய முட்டை நாத்தம் அடிக்குற இந்த கெமிக்கலோட பேர் என்னடா" என கேட்க,

அதற்கு விக்னேஷோ, "இதோட பேரா, இதோட பேரு ச்சே நல்ல பேராச்சே டக்குனு நியாபகம் வர மாட்டேங்குதே" என யோசித்து கொண்டிருக்க,

உடனே ரவியோ, "மச்சி ,எதுக்கும் இது பக்கத்துல வந்து யோசிச்சு பாரு அப்போ நியாபகம் வருதானு பார்ப்போம்" என கூறிய வேகத்தில் அவனை இரசாயனத்திற்கு அருகில் கொண்டு வர அதிலிருந்து வெளியான வாடையை தாங்க இயலாமல் விக்னேஷ் தவிக்க மாணவர்கள் மத்தியில் சலசலப்பை உணர்ந்த ஆசிரியரின் கண்ணுக்கு இவர்களின் சேட்டைகள் தெளிவாய் தெரிந்தது.

உடனே கோபத்தின் உச்சிக்கு சென்றவரோ, "ரவி குருப்ஸ் அங்க என்ன பண்றீங்க; லேப்புக்கு வந்துட்டா பொறுப்பா இருக்கணும்னு தெரியாதா இப்படியா பொறுப்பில்லாம நடந்துப்பீங்க" என சரமாரியாக திட்ட துவங்க ஆசிரியரின் திட்டுக்களை எல்லாம் காதில் வாங்காதவர்களை பார்த்து சலித்துகொண்ட ஆசிரியரோ சில வேதியியல் நடைமுறைகளை சோதனையிட மாணவர்களை அழைத்து சென்றனர்.

அங்கு ஒவ்வொரு மாணவர்களுக்கும் வேதியியல் நடைமுறையை செய்வதற்கான பொருட்களை தனிதனியாக தர மாணவர்களும் அதனை எடுத்துகொண்டு தங்களுக்கான ஒதுக்கபட்ட இடத்தில் சென்று தயாராகினர்.

மாணவர்களுக்கு இந்த செய்முறையை எவ்வாறு செய்ய வேண்டுமென விளக்கிய ஆசிரியரோ அதன்படியே எல்லோரையும் செய்ய சொல்லி வழியுறுத்தினார்.

ஆனால் ஆசிரியரின் பேச்சில் ஒன்றும் புரியாத கார்த்திக்கின் நண்பர்களோ அவனின் உதவியை நாட,

அவர்களுக்கு ஆசிரியர் கூறிய செய்முறை எவ்வாறு செய்ய வேண்டுமென எளிமையாக விளக்கினான்.

"இங்க பாருங்க டா, உங்களுக்கு புரியுறதுக்காக உங்க பாஷையிலயே பேசுறேன் தெளிவா கேட்டுக்கோங்க ஓகே வா" என கூறியவனோ தன் விளக்கத்தை துவங்கினான்.

"மச்சி, இந்த ஸடாண்ட்டுல நீளமான கண்ணாடியை மாட்டிவைச்சு அதுக்குள்ள ஒரு கெமிக்கல்ல கொட்டிருக்கோம் அதேமாதிரி இன்னொரு கண்ணாடி டப்பால வேற ஒரு கெமிக்கல்ல கொட்டிருக்கோம் இப்போ இந்த ஸடாண்ட்டுல மாட்டி வைச்சிருக்கிற நீளமான கண்ணாடில இருக்குல அதோட சைடுல ஒரு திருகாணி இருக்கும் அதை நம்ம ரொம்பவே லைட்டா திருகணும் அப்படி திருகும்போது கண்ணாடிக்கு கீழ இருக்கிற ஓட்டை வழியா கெமிக்கல் கொஞ்சம் கொஞ்சமா வெளியேறும் அப்படி வெளியேறி வர கெமிக்கல் இன்னொரு கண்ணாடி டப்பா வைச்சிருக்கோம்ல அதுல பிடிக்கணும் இப்படி சொட்டு சொட்டா கெமிக்கல் டப்பால விழும்போது திடீர்னு டப்பால இருக்கிற கெமிக்கல் லைட்டா பிங்க் கலர்ல மாறும் அப்படி மாறுன உடனே திருகுற கெமிக்கல் ஒழுகாதபடி டைட்டா முடிடணும் இப்போ நான் சொன்னதுவரைக்கும் செய்ங்க அப்புறமா எப்படி இதைவைச்சு கணக்கு போடுறதுனு சொல்லி தரேன்" என கூற நண்பர்களும் அவனின் வழிகாட்டுதல்படியே செய்தனர்.

கார்த்திக் ஜன்னல் அருகில் இருந்தாலும் வெளியில் வேடிக்கை பார்க்காமல் அவனின் கெமிக்கல் எப்பொழுது பிங்க் நிறத்தில் மாறும் என அதையே கவனித்தபடி இருந்தான்.

அப்பொழுது அவனின் மனதோ நிமிர்ந்து பார்க்க சொல்லி ஊக்க ஏதோ ஓர் உணர்வில் நிமிர்ந்து பார்த்தவனோ சிலையாகி நின்றான்.

அங்கே அவனின் தேவதை ஒரு ஆசிரியரிடம் தீவிரமாக சந்தேகம் கேட்டு கொண்டிருக்க; அவளின் பேச்சிற்கேற்ப அசைந்தாடும் தோடும் அவளின் சிப்பி இதழ் திறந்து மூடும் அழகும் கோலிகுண்டு விழியால் முழித்து முழித்து பேசியபடியே நெற்றியில் படர்ந்த ஒற்றை கூந்தலை காதோரம் ஒதுக்கிவிடும் பாங்கும் கார்த்திக்கின் மனதினை மொத்தமாய் கொள்ளையடிக்க,

அவனின் செயலால் கோபம் கொண்ட சனிபகவானோ அவனின் கெமிக்கலில் பிங்க் கலரையும் தாண்டி ஏதோ ஒரு கலரை வரவழைத்தோடு நில்லாமல் அவனின் ஆசிரியரையும் அவனருகில் வரவழைத்தார்.

கார்த்திக்கிற்கு அருகில் வந்த ஆசிரியரோ அவனின் கெமிக்கல் அளவுக்கதிமாய் கலந்து விட்டதால் பிங்க் கலராய் மாற வேண்டிய இரசாயனம் வேறு கலராய் மாறிவிட அதனை பார்த்து கோபம் கொண்டவரோ, "கார்த்திக்" என சத்தமாய் அழைத்தார்.

ஆசிரியரின் கத்தலிலே சுயம் பெற்றவனோ கெமிக்கலின் நிலையை பார்த்து அதிர்ச்சியாகி பாவமான முகத்தோடு ஆசிரியரை பார்த்தான்.

நண்பனின் காதல் லீலையை கவனிக்காமல் என்றுமில்லா திருநாளாய் லேப் பிராட்டிக்கல்லை ஒழுங்கா செய்துகொண்டிருந்த அவனின் நண்பர்களும் அக்கத்தலிலே உணர்வுபெற்று கார்த்திக்கின் நிலையை பார்க்க மறுபுறம் ஆசிரியரோ கார்த்திக்கின் செயலினை கண்டு கோபமாக கத்த துவங்கினார்

"என்ன கார்த்திக் இது, உன்னோட கவனமெல்லாம் எங்க இருக்கு; இப்படியா லேப்புல கவனகுறைவா இருப்ப உன்னோட கவனமின்மையால பாரு கெமிக்கல் வேஸ்ட்டா போச்சு இதான் நீ படிப்பு மேல காட்டுற அக்கறையா..???
இந்தமாதிரி நீ பிராட்டிக்கல்ல செஞ்சா பப்ளிக் பிராக்டிகல்ல எப்படி நல்லா பண்ணுவ" என கேட்டு கண்ணாபின்னாவென திட்டியவரோ முடிவாக,

"இன்னும் ஒரு நிமிசம் கூட நீ இங்க நிக்ககூடாது ஒழுங்கா வெளில போ; அடுத்த தடவை வரும்போது கவனமா செய்யணும் சரியா இப்போ கிளம்பு" என கூறி வாசலை நோக்கி கையை காட்ட உடனே கார்த்திக்கும் அவனின் பொருட்களோடு அங்கிருந்து ஓடினான்.

கார்த்திக்கின் செயலை பார்த்த நட்பு வட்டமும், "என்னடா இது, எப்பயுமே நம்மதான் மிஸ் வெளில போக சொன்னா ஓடுவோம் இன்னைக்கு இவன் ஓடுறான் என்னவா இருக்கும்" என தினேஷ் கேட்க உடனே சங்கரோ,

"எதுக்கு இப்படி பண்றானு தெரியலடா இதைபத்தி நம்ம லஞ்ச் டைம்ல சாப்பிட்டுகிட்டே விசாரிப்போம்" என கூற அதற்குள் ரவியோ,

"மச்சி, பிங்க் கலரா கெமிக்கல் மாறுனதுக்கு அப்புறமா என்ன பண்ணனும்னு சொல்லாம போயிட்டானே டா" குண்டை தூக்கி போட,

உடனே அதிர்ந்த நண்பர்களை பார்த்த தினேஷோ, "டேய் கவலைபடாத டா,இப்போ பாரு என்னோட ராஜதந்திரத்தை.." என கூறி நால்வரின் கெமிக்கல் பாட்டிலிருந்த திருகாணியையும் வேகமாய் திருகிவிட மொத்தமாய் கொட்டியதால் கெமிக்கல் முழுதாய் வேறு நிறத்திற்கு மாறிவிட பிறகென்ன இவர்களும் அவுட் ஸடாண்டிங் ஸடூண்ட்ஸாக கெத்தாய் வெளியேறினர்.

கார்த்திக் லேப்பிலிருந்து வெளியேறியவனோ நேராக ஆசிரியரிடம் பேசிவிட்டு சென்ற அனுவினை நோக்கி ஓடி அவளருகில் நின்றான்.

தன்னருகில் வந்து நின்ற சீனியரை பார்த்து குழம்பி போன அனுவோ, "சீனியர், இங்க என்ன பண்றீங்க; இப்போ உங்களுக்கு கிளாஸ் இல்லயா" என கேள்வி கேட்க,

அதற்கு கார்த்திக், "எனக்கு இப்போ கெமிஸ்ட்ரி லேப் தான் நடந்துட்டு இருக்கு; நான் சீக்கிரமாவே முடிச்சதால மேம் என்னைய கிளாஸுக்கு போக சொல்லிட்டாங்க; அதான் கிளாஸுக்கு போயிட்டு இருக்கேன் ஆமா நீ என்ன இங்க" என கேட்க

அதற்குள் அங்கு வந்த கார்த்திக்கின் நண்பர்களோ, "மச்சி, நாங்களும் உன்னைய மாதிரியே சீக்கிரமா முடிச்சிட்டோம் டா; அதனால மேம் எங்களையும் கிளாஸுக்கு போக சொல்லிட்டாங்களே" என கோரஸாக கூற,

அதனை கேட்ட அனுவோ புன்முறுவல் பூக்க உடனே கார்த்திக்கோ தனது நட்பினை பார்க்க அவனின் நிலையை புரிந்த நண்பர்களோ,

"சரிடா, நாங்க கேண்டின் போயிட்டு கிளாஸுக்கு வரோம் நீ கிளாஸுக்கு கிளம்பு பை மா தங்கச்சி" என அனுவிற்கும் டாட்டா காமித்து விட்டு சிரித்தபடியே செல்ல,

உடனே கார்த்திக்கோ அனுவிடம், "சரி அனு நேத்து சொன்னபடி பாட்டு கிளாஸ் பத்தி வீட்டுல பேசிட்டீயா என்ன சொல்றாங்க" என வினவ,

அதற்கு அனுவோ, "அதெல்லாம் கேட்டுட்டேன் சீனியர்; எங்க வீட்டுல பர்மிஷன் தந்துட்டாங்க ஆனா பாட்டு பாடுறேனு படிப்புல கோட்டை விடக்கூடாதுனு சொன்னாங்க அவ்ளோதான்" என கூற

அதற்கு கார்த்திக்கோ, "சரியா தான் சொல்லிருக்காங்க ஆனா நீதான் நல்ல படிக்கிற பொண்ணாச்சே பாட்டு படிப்புனு இரண்டையுமே சமாளிச்சிடுவீயே அப்புறம் ஏன் இப்படி சொல்றாங்க" என குழப்பமாய் கேட்க,

கார்த்திக்கின் கேள்வியில் முதலில் முழித்தவளோ பின்பு சுதாரித்து கொண்டு, "அதுவந்து சீனியர்; என்னதான் நல்லா படிச்சாலும் கவனம் சிதறிடுமோனு ஒரு கவலை பெத்தவங்களுக்கு இருக்கும்ல அதான் யோசிக்குறாங்க" என கூறி சமாளிக்க,

அதனை உண்மையென நம்பிய கார்த்திக்கோ, "ஆமா அனு நீ சொல்றதும் சரிதான் கவனம் சிதறிட்டா ரொம்பவே கஷ்டம்; சரி இன்னைக்கு ஈவ்னிங் 5 மணிக்கு மியூசிக் ரூம்ல வெயிட் பண்ணு இல்லனா கேண்டின்ல கூட வெயிட் பண்ணு; அங்க வந்து உன்னைய நான் பிராட்டிஸ்க்கு கூட்டிட்டு போறேன் ஏன்னா நேத்து டேவிட் குருப்போட வம்பிழுத்திருக்க அதுனால அவனுங்க வம்பிழுக்கவும் வாய்ப்பிருக்கு அதான் சொல்றேன் ஓகே வா" என கேட்க,

கார்த்திக்கின் அக்கறையில் கரைந்தவளோ, "ஓகே சீனியர், அப்போ நான் கேண்டின்லயே வெயிட் பண்றேன் நீங்க வந்திடுங்க எனக்கு கிளாஸுக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் சீனியர் பை" என கூறிகொண்டு ஓடினாள்.

மான்குட்டி போல துள்ளி ஓடுபவளையே கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கோ தனது வகுப்பினை நோக்கி சென்றான்.



காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom