• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 10

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் -10❤

பள்ளி வளாகத்தில் சிறப்பு வகுப்புகள் முடிந்த நிலையில் ஒரிரு மாணவர்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சியளித்தனர்.

அங்கே அனுவின் கோபத்தினை தணித்து அனுப்பிவைத்த கார்த்திக்கோ தன் நண்பர்களுடன் அமர்ந்திருக்க,

அப்பொழுது அங்கு வந்த வாட்ச்மேனோ, "தம்பிங்களா, ஸ்கூல் மூடுற டைம் வந்திருச்சுப்பா; இன்னும் கிளம்பாம என்ன பண்றீங்க" என கேட்க,

அதற்கு ரவியோ, "தாத்தா, இங்க கார்த்திக்கு எவ்ளோ பெரிய பிரச்சனை ஓடிட்டு இருக்கு நீங்க என்னனா ஸ்கூல் கேட்டை மூட பறக்குறீங்களே; முதல்ல எங்க கார்த்திக் பிரச்சனையை மூடி சரிபண்ணிக்கிறோம் அப்புறமா நீங்க கேட்டை மூடுங்க" என சீரியஸாக பேச,

அதனை கேட்டு பதறிய வாட்ச்மேனோ, "கார்த்திக் தம்பி, உங்களுக்கு என்னப்பா பிரச்சனை இவங்க சொல்றதை பார்த்தா எதுவும் பெரிய பிரச்சனையா இருக்கும் போலயே என்னாச்சு பா" என அக்கறையாய் வினவ,

அதனை கேட்டு கார்த்திக் ரவியை முறைத்து தள்ளியபடி வாட்ச்மேனை சமாளித்து அனுப்ப பார்க்க,

அவன் பேசுவதற்குள் தினேஷ் முந்திக்கொண்டு, "ஆமா தாத்தா, எவ்ளோ பெரிய பிரச்சனைனு தெரியுமா எங்க கார்த்திக்கோட இதயமே டேமேஜ் ஆச்சு" என கூற அதனே கேட்டவரோ குழம்பி பதற

உடனே அவனின் கழுத்தை பிடித்து நெறித்த கார்த்திக்கோ வாட்ச்மேனின், "தாத்தா, இவனுங்க சும்மா கலாய்க்கிறாங்க நீங்க டென்சன் ஆகாதீங்க; இன்னும் கொஞ்சம் நேரத்துல நாங்க கிளம்பிடுறோம்" என கூற

அதை கேட்ட பிறகே நிம்மதியடைந்த வாட்ச்மேன் தாத்தாவோ, "ஓ அப்படியாப்பா, நான்கூட என்னமோ ஏதோனு நினைச்சிட்டேன் சரிப்பா, பத்திரமா வீட்டுக்கு போற வழியை பாருங்க" என கூறி சென்றான்.

அவர் சென்றபிறகு தன் நண்பர்கள் புறம் திரும்பிய கார்த்திக்கோ, "ஏண்டா, உங்க வாயை வைச்சுகிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா; ஏற்கனவே உங்க பேச்சால தான் என்னோட காதல் தத்தளிச்சிட்டு இருக்கு; இதுல மேலும் மேலும் எதையாவது பேசி வம்புல மாட்டிவிட பார்க்குறீங்களா" என ஆதங்கமாய் கத்த,

அவனை அமைதிபடுத்திய சங்கரோ, "மச்சி ரீலாக்ஸ் டா, எதுக்கு இவ்ளோ கோபபடுற ஏதோ நாங்க அவகிட்ட நேரடியா பேசி உன் காதலுக்கு ஆப்பு வைச்ச மாதிரில பேசுற; அவளுக்கு காதல் பிடிக்காததுக்கு நாங்க எப்படிடா காரணமாவோம்" என வினவ,

அவனை பாராட்டிய தினேஷோ, "மச்சி, வாழ்க்கையில முதல் தடவை புத்திசாலிதனமா பேசிருக்க டா; இதுக்கே உனக்கு இரண்டு சமோசா எஸ்ராவா வாங்கி தரேன்" என கூறியவனோ கார்த்திக்கின்புறம் திரும்பி,

"மச்சி, சங்கர் சொல்றதும் சரிதாண்டா; அனுவோட இந்த குணத்தை பத்தி நமக்கு ஒண்ணுமே தெரியாது அவ அங்க இருந்தது தெரிஞ்சிருந்தா இப்படியெல்லாம் பேசிருக்கவே மாட்டோம்; ஆனா இப்போ அதுகூட நன்மைக்கு தான் தோணுது இதுனால தான அவளோட மனசு முழுசா புரிஞ்சது; இனி அவளோட மனசை மாத்த என்ன பண்ணலாம்னு யோசிப்போம்" என கூற

அதனை கேட்ட கார்த்திக்கோ, "ஆமா டா, அன்னைக்கு முதல் தடவை காதலை பத்தி தப்பா பேசி நீங்க பேசுனதை பத்தி சொல்லும்போது கூட இந்தளவுக்கு அவ காதலை வெறுக்குறானு எதிர்பார்க்கல டிவியில வந்த நீயூஸோட தாக்கம்னு நினைச்சிட்டேன்; ஆனா இன்னைக்கு டேவிட் எங்க இரண்டு பேரையும் காதலை சொல்லி இணைச்சு பேசுனதுல ரொம்பவே கோபபட்டுட்டா அவளோட மனசு காதலை எந்தளவுக்கு வெறுத்திருந்தா இப்படியெல்லாம் ரியாக்ட் பண்ணிருப்பா இப்போ அவளோட எண்ணத்தை எப்படி மாத்த போறேனோ தெரியலை டா" என கூறி புலம்ப

உடனே விக்னேஷோ, "மச்சி இந்த பிரச்சனையை சரிபண்ணறது அவ்ளோ பெரிய கஷ்டமான விஷயம் இல்லடா அதை சரி பண்றதுக்கான வழியை தான் நீ உருவாக்கணும் அதெப்படினு நான் சொல்றேன்,

"முதல்ல நீ அனுவோட மனசுல யாரோவா இருந்திருந்தா கண்டிப்பா இப்படி ஒரு பிரச்சனை வரும்போது உன்னைய சீனியர்னு சொல்லி உரிமை கொண்டாடிருக்க மாட்டா; அவ அப்படி உரிமையா சொல்றானா அப்போ அவளோட மனசுல உன்மேல ஒரு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்குனு தானே அர்த்தம் அப்போ அதை நீ எப்பயுமே உடையாம பார்த்துக்கணும்; அதுமட்டுமில்லாம சான்ஸ் கிடைக்குறப்போ எல்லாம் காதல்னா தவறில்லனு புரியவைக்கவும் முயற்சி பண்ணுனும்; இப்படி ஒருபக்கம் காதலை பத்தி நல்ல எண்ணத்தையும் வளர்த்துகிட்டு இன்னொருபக்கம் உன்னைய பத்தி நல்ல எண்ணம் உடையாமலும் பார்த்துகிட்டேனா, உன்னோட காதல் ரூட் கொஞ்சமா கிளியர் ஆகிடும் அடுத்து நீ அவகிட்ட காதலை சொன்னா சரியான முடிவை சொல்லுவா எப்படி என்னோட ஐடியா ஓகே வா" என கேட்க,

விக்னேஷின் ஐடியாவை கேட்ட கார்த்திக்கோ அளவில்லாத சந்தோஷத்தில் திளைக்க அதனை வெளிபடுத்தும் விதமாக அவனின் கன்னத்தில் முத்தமிட்டான்

கார்த்திக்கின் செயலை பார்த்து பதறிய ரவியோ அவனை தடுத்து, "அடலூசு பயலே, இவனோட ஐடியாவை கேட்டு சந்தோஷபட்டதோட போவீயோ; இப்படியா பச்சைபுள்ளயை பயமுறுத்துற மாதிரி முத்தத்தை தருவ இதெல்லாம் அநியாயம் டா" என கூறயவனோ விக்னேஷை பாராட்டும்விதமான,

"விக்னேஷு சும்மா சொல்லகூடாது டா, உண்மையாவே செம ஐடியா குடுத்திட்ட இது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும் சூப்பர் போ" என கூற

உடனே தினேஷும் "ஆமா கார்த்திக், ரவி சொல்றதும் சரிதான் விக்னேஷ் ஐடியாவையே நீ பாலோ பண்ணு; ஆனா ஒண்ணுடா இப்படிபட்ட லவ் பைட் எல்லாம் உன்னோட ஆளுக்கே குடு எங்களுக்கு காப்பி பைட் மட்டும் போதும்; இனி இப்படியெல்லாம் ஏடாகூடமா பண்ணி எங்களை பயமுறுத்தாத டா சின்னபசங்க நாங்க பாவம்ல" என கூறி உதட்டை பிதுக்க,

அவனின் பேச்சில் அசடுவழிந்த கார்த்திக்கோ "ஹிஹி சாரி மச்சி, ஒரு ஆர்வத்துல பண்ணிட்டேன்; உங்களோட ஐடியாவுக்காக உங்களுக்கு காப்பி பைட் என்ன மிளகா பஜ்ஜியே வாங்கி தரேன் டா வாங்க போகலாம்" என கூற கார்த்திக்கின் பேச்சை கேட்டு முதல் ஆளாய் ஓடிய சங்கரை துரத்திகொண்டே நண்பர்களும் பள்ளியை விட்டு வெளியேறினர்.

💘💘💘💘💘

அக்காவல் நிலைய லாக்கப்பில் சேகர் ஐ பி எஸ் லத்தியோடு நாற்காலியில் அமர்ந்திருக்க அவர் எதிரிலே வினோத்தின் நண்பர்களோ மிரட்சியோடு அமர்ந்திருந்தனர்.

சிறிது நேரத்திற்கு முன் காவலர்களின் சிறப்பான கவனிப்பில் அவர்களுடன் குற்றத்தில் ஈடுபட்ட மற்ற இரண்டு நண்பர்களையும் மாட்டிவிட அவர்கள் மறைந்திருந்த இடமான நாகலிங்கத்தின் கெஸ்ட் ஹவுஸிற்கு படையெடுத்து அவர்களையும் சிறைபிடித்து அழைத்து வர கிஷோர் சென்றிருந்தான்.

இப்பொழுது காவல் நிலையத்திற்கு வெளியே ஜீப்பின் சத்தம் கேட்க கூடவே இவர்கள் நண்பர்களின் அலறல் சத்தமும் கேட்டது.

அதனை கேட்டு மேலும் மிரண்டவர்களிடம் சென்ற சேகர் ஐ பி எஸ்ஸோ, "அன்னைக்கு என்ன நடந்துச்சு; எதுக்காக அனிதாவை வினோத் இப்படிபட்ட நிலைமைக்கு ஆளாக்குனான்னு ஒழுங்கு மரியாதையா வாக்குமூலம் தந்திடுங்க; இல்லனா என்னோட லத்தியோட அடி என்னனு முழுசா உணர்வீங்க சொல்லுங்கடா" என ஆவேசமாக கத்த,

அதனை கேட்டு ஒருபுறம் மிரண்டாலும் மறுபுறம் உண்மை கூறாமல் தப்பிக்க வழி கிடைக்குமா என சிந்திக்க துவங்கினர்.

அதனை உணர்த்த சேகரோ தனது லத்தியை உயர்த்தி தன் ஆத்திரம் குறையும் வரை அடித்து நொறுக்கினார்.

"சொல்லுங்கடா, சொல்லுங்க அன்னைக்கு என்ன நடந்துச்சுனு சொல்ல போறீங்களா இல்லையா" என அடிக்க அவரின் அடியினை தாங்க இயலாமல்,

"ஆஆஆ அய்யோ சார், எங்களை விட்டுருங்க சார் நாங்க உண்மையை சொல்லிடுறோம் விட்டுருங்க" என அழுது கொண்டே கதற,

அதன்பிறகு அடிப்பதை நிறுத்திய சேகரோ உண்மையை கேட்க தயாராகி டேப்பினை ஆன் செய்ய அதேசமயம் கிஷோர் மற்ற இரண்டு நண்பர்களையும் லாக்கப்பிற்குள் தள்ளினான்.

லாக்கப்பிற்குள் தள்ளபட்ட நண்பர்களின் அவல நிலையினை பார்த்து மிரண்டவர்களோ உடனே உண்மையை கூற துவங்கினர்.

"சார், கோர்ட்ல சொன்ன நாங்க சொன்ன மாதிரி வினோத்தோட நண்பர்களா பல தப்பு பண்ணிட்டோம் அதுனாலயே அவனோட நட்பையும் இழக்கிற மாதிரி ஆச்சு ஆனாலும் நாங்க திருந்தாம அதே தப்புக்களை தான் செஞ்சிட்டு இருந்தோம்,

"இதேமாதிரியே ஒரு வருஷம் போச்சு சார்; அப்போதான் ஒருநாள் வினோத் எங்களை தேடி வந்தான்" என கூறி வினோத்தை சந்தித்ததை விவரிக்க துவங்கினர்.

தனது நண்பர்களை வெகுநாட்கள் கழித்து சந்திக்க வந்த வினோத்தினை பார்த்தவர்களுக்கு நண்பனின் எண்ணம் தெளிவாய் புரிந்தது.

வினோத்திற்கு தங்களால் ஏதேனும் காரியமாக வேண்டுமென உணர்ந்து கொண்டவர்களோ அவனிடம், "என்ன மச்சி, எங்க சகவாசமே வேணாம்னு கிளம்பி போன; இப்போ ஏன் திரும்பி வந்திருக்க என்ன விஷயம்" என்று நண்பன் ஒருவனோ சிகரெட் புகைத்து கொண்டே கேள்வியெழுப்பினான்.

வினோத்தும் அவர்களிடமிருந்து சிகரெட்டை வாங்கி புகைத்து கொண்டே, "மச்சி, எனக்கு உங்க உதவி தேவைடா; இந்த ஒரு உதவி மட்டும் பண்ணிட்டீங்கனா போதும்; நாம பழையபடி பிரண்ட்ஸா இருக்கலாம் சரியா" என கேட்க,

வினோத்தின் நட்பினை இழந்ததால் பள்ளியில் தங்களுக்கிருந்த கெத்தும் பறிபோனதை எண்ணியவர்களோ; இப்போழுது அதெல்லாம் இந்நட்பில் மூலமே திரும்ப கிடைத்துவிடும் என நம்பிக்கை வர உடனே,

"சரி மச்சி, நாங்க உதவி பண்றோம் ஆனா என்ன உதவினு சொல்லவே இல்லையே" என கேட்க

அதற்கு வினோத்தோ, "நான் ஒருத்தியை காதலிச்சேன் டா; ஆனா அவ என்னோட காதலையே வேணாம்னு தூக்கி போட்டுட்டு போயிட்டா அவ மனசுல அவ பெரிய பேரழகினு நினைப்பு போல; என்னோட காதலை நிராகரிச்சதும் இல்லாம படிக்கிற வழியை பாருனு எனக்கே புத்திமதி சொல்றா டா; அவளை சும்மாவே விடகூடாது எனக்கு கிடைக்காதவ யாருக்குமே கிடைக்ககூடாது; அதுனால அவளோட நட்பாகுற மாதிரி நடிச்சு நம்ப வைக்குறேன்; அப்புறமா சரியான நேரமா பார்த்து அவளை தூக்கி அனுஅனுவா சித்திரவதை பண்ணி ரேப் பண்ணி கொல்லலாம்; அதுக்கு தாண்டா நீங்க உதவி பண்ணனும் பண்ணுவீங்களா டா" என கேட்க,

இதனை கேட்டு முதலில் மிரண்ட நண்பர்களின் பயத்தை போக்க நினைத்த வினோத்தோ தன் போனில் அனிதாவிற்கே தெரியாமல் அவளை போட்டோ எடுத்து வைத்திருந்த புகைப்படத்தினை காட்ட அவளின் அழகில் மயங்கியவர்களோ இத்தகைய இழிச்செயலை செய்ய ஒத்துக்கொண்டனர்.

அதன்படி அனிதா பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது துணையாக உடன்வருவதாய் நாடமாடி வந்த வினோத்தோ வழியிலேயே தன் நண்பர்களை வைத்து அவளை மடக்கி நட்பென்ற பெயரில் துரோகத்தினை நிகழ்த்தி அவளின் உயிரிற்கே எமனானான்.

இதையெல்லாம் கூறிய நண்பர்களின் ஒருவனோ, "அன்னைக்கு அனிதாவை வாயை பொத்தி ரேப் பண்ணோம் சார்; அப்புறமா அவளோட அழகால தான் தன்னை நிராகரிச்சானு அழகை அழிக்குறதுக்காகவும் யாருக்குமே அவளோட பொணம் கிடைக்ககூடாதுனும் அவளை உயிரோட ஆசிட் ஊத்தி கொல்ல நினைச்ச வினோத் அவளோட கதறல் சத்தத்தை கேட்க வாயிலிருந்த துணியை எடுத்திட்டு ஆசிட் ஊத்துனான் சார்; அந்த சத்தத்துல தான் அக்கம்பக்கத்துல இருக்கிற பொதுமக்களும் வர நாங்களும் அங்கிருந்து ஓடிட்டோம்" என கூற அதனை கேட்ட அத்துணை காவலர்களுக்கும் நெஞ்சம் பதற இரு மகன்களுக்கு தந்தையான சேகர் ஐ பி எஸ்ஸும் இத்துயரத்தினை கேட்டு ஆடிபோனார்.

இவர்களின் கூற்றை எல்லாம் வாக்குமூலமாய் பதிவு செய்தவர்களோ இவர்களின் செயலுக்காக ஆத்திரம் தீரும்வரைக்கும் மாறி மாறி அடிக்க அக்காவல் நிலையமே இவர்களின் அலறல் குரலால் நிரம்பியது.

💘💘💘💘💘

சத்யமூர்த்தி தன்னறையில் அமர்ந்துகொண்டு வழக்கிற்கு தேவையான பைல்களை பார்வையிட்டு கொண்டிருந்தார்.

அப்பொழுது அவருக்காக காபி கொண்டு வந்த ஜெயாவோ தன் கணவனிடம், "என்னங்க, இந்த கேஸுல நீங்க ஜெயிச்சிடுவீங்களா; எல்லாமே உங்களுக்கு சாதகமா தானே இருக்கு அனிதாவுக்கு நீதி கிடைச்சிடுமா..???
என கேள்வியெழுப்ப,

அதனே கேட்ட சத்யாவோ தன் மனைவியினை கேள்வியாய் நோக்கியபடி, "என்னாச்சு ஜெயாமா, எப்பயுமே நீ என்னோட கேஸ் சம்மந்தமா விசாரிக்க மாட்டீயே ஆனா இந்த கேஸுல அனிதாவுக்கு நியாயம் கிடைக்கணும்னு பிடிவாதமா இருக்க போலயே என்ன விஷயம்" என கேட்டபடி பேனாவை மூடிவைத்து மனைவியின் பதிலுக்காக அவரின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தார்.

அதற்கு ஜெயாவோ, "என்னமோ தெரியலைங்க, இந்த கேஸுல அனிதாவுக்கு நீதி கிடைக்கணும்னே தோணுது ஒருவேளை நம்ம பொண்ணுக்கு அவளோட வயசு தான்ல அதுனால தான் இப்படியெல்லாம் யோசிக்கிறேனோ என்னவோ; ஒவ்வொரு பெத்தவங்களும் தன் பொண்ணு வீட்டை விட்டு வெளியில போயிட்டு மறுபடியும் வீடு திரும்புறவரைக்கும் வயித்துல நெருப்பை கட்டிகிட்டு தான் சுத்தவாங்க ஏன்னா காலம் கெட்டுபோய் கிடக்கு; இதுல நாளுக்கு நாள் இப்படிபட்ட செய்தியெல்லாம் கேட்டா, ஒருபக்கம் கோபமா இருந்தாலும் இன்னொருபக்கம் நம்ம வீட்டுல இருக்கிற பொண்ணுக்கும் இதே நிலைமை வந்திடுமோனு பயமா இருக்குங்க; அதான் இந்த கேஸ்ல நீதி கிடைச்சா இதுவே ஒரு உதாரணமா இருக்கும்ல இதை பார்த்தாவது இனி இப்படிபட்ட தவறுகள் குறையும்ல அதான் இவ்ளோ ஆர்வமா கேட்குறேன்" என கூற,

ஜெயாவின் கூற்றை கேட்டு புன்முறுவல் பூத்தவரோ, "கண்டிப்பா, இந்த கேஸுல நீதி கிடைச்சிடும் மா நீ கவலையேபடாத எனக்குமே இப்படிபட்ட செய்தியை கேள்விபட்டதும் நம்ம பொண்ணு தான் நியாபகம் வந்தா இனியும் எந்த பொண்ணும் இப்படி பாதிக்கபடகூடாது அதுக்கான எல்லா முயற்சியும் நான் பண்ணுவேன் சரியா" என கூறியவரோ மேலும்,

"சரிமா, அனு என்ன பண்றா டிவி பார்க்குறாளா இல்ல படிச்சிட்டு இருக்காளா" என கேட்க

அதற்கு ஜெயாவோ, "அதை ஏங்க கேட்குறீங்க, இவளை படிக்க சொல்லிட்டு வந்தா எதையோ யோசிச்சுகிட்டு சுத்துறா இப்போ மறுபடியும் போய் அவ தலையில தட்டி படிக்க சொல்லணும் நான் அவளை பார்த்துகிறேன்; நீங்க கேஸ் எப்படி ஜெயிக்கலாம்னு யோசிங்க" என கூறி செல்ல செல்லும் தன் மனைவியை பார்த்து சிரித்தவரோ தன் வேலையை தொடர்ந்தார்.

அதேசமயம் வேதாச்சலமோ நாகலிங்கத்திடம் கேஸில் ஜெயிக்க குறுக்கு வழியில் ஒரு ஆலோசனையை போனில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

"இங்க பாருங்க சார், ஆதாரங்கள் எல்லாம் நமக்கெதிரா இருந்தா நம்மலால கேஸை ஒண்ணுமே பண்ண முடியாது; வினோத் இந்த கேஸில இருந்து தப்பிக்கணும்னா சாட்சியங்களை நம்ம அழிக்குறது தான் ஒரே வழி" என போனில் ஆலோசனை கூறியவரின் சொல்லை கேட்டு போனை வைத்த நாகலிங்கமோ அதைபற்றி தன் தம்பியிடம் உரையாடினார்.

அண்ணனின் கூற்றை பொறுமையாக கேட்ட மருதநாயகமோ, "நானுமே இந்த கேஸுல ஆதாரமா எதை கொண்டு வருவாங்கனு தெரிஞ்சிக்க தாண்ணே அமைதியா இருந்தேன்; அன்னைக்கு அந்த போலிஸ் காட்டுன வீடியோல நம்ம காளி கார்ல வரமாதிரியெல்லாம் காட்டல; அதுனால தான் இதை சமாளிச்சுக்கலாம்னு விட்டுட்டேன் ஆனா அதுவே நமக்கு வில்லங்கமா மாறிடுச்சு; இப்பயும் பிரச்சனை இல்லை நமக்கெதிரா இருக்கிற ஆதாரத்தை அழிச்சிட்டு வினோத்தை காப்பாத்திடலாம்" என கூற,

அதற்கு நாகலிங்கம், "ஆதாரத்தை அழிச்சிடலாம்னா எப்படிடா அழிக்கிறது; உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா" என கேட்க,

அதற்கு மருதநாயகமோ, "அண்ணே, ஆதாரத்தை அழிக்கிறதுக்கான எல்லா வேலையையும் நான் ஆல்ரெடி செய்ய ஆரம்பிச்சிட்டேன்; நீ எதைபத்தி கவலைபடாத நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என கூற தன் தம்பியை புதிராய் பார்த்த நாகலிங்கமோ காளிக்கு போன் செய்தார்.

அங்கு காளியோ ஒரு மருத்துவமனைக்குள் வார்ட் பாய் உடையில் மிக சாதூர்யமாக நுழைந்தவனோ தன்னை யாரும் கண்டுபிடிக்க கூடாதென முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் புகுந்தான்.

அந்த அறையில் இருந்த டாக்டரோ அவனை கேள்வியாக பார்த்து, "என்ன விஷயம், டூட்டி டைம்ல டூட்டியை பார்க்காம இங்க என்ன பண்ற; ஏதாவது எமர்ஜென்ஸியா" என கேட்க,

அதற்கு கோணலாய் சிரித்த காளியோ, "ஆமா டாக்டர், எமர்ஜென்ஸி தான் ஆனா பேஷண்ட்டுக்கு இல்ல உங்களோட குடும்பத்துக்கு.." என கூறி ஒரு வீடியோவினை காட்ட,

அதில் அந்த டாக்டரின் குடும்பத்தினை நான்கைந்து தடியர்கள் கத்தி முனையில் நிறுத்தி வைத்திருப்பது போலவும் அவர்களை மிரட்டிகொண்டிருப்பது போலவும் காட்சிகள் ஓடியது.

அதனை பார்த்து அதிர்ந்து போன டாக்டரோ, "ஹேய், யார் நீ உனக்கென்ன வேணும் எதுக்கு என்னோட குடும்பத்தை இப்படி பண்ற; ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லுறீயா இல்ல போலிஸை கூப்பிடவா" என கேட்டு போனில் போலிஸிற்கு அழைக்க முயற்சிக்க,

அதற்குள் போனை பறித்த காளியோ, "இங்க பாரு, இப்போ நீ மிரட்டுற இடத்துல இல்ல நான் சொல்றதை கேட்குற நிலமையில இருக்க; ஒழுங்கா என் பேச்சை கேட்டா உன்னோட குடும்பம் பொழைக்கும் இல்லனா ஒவ்வொருதரா சாக வேண்டியது வரும் எப்படி வசதி" என மிரட்ட,

அதில் அரண்டவரோ, "பீளிஸ், என்னோட குடும்பத்தை ஒண்ணும் பண்ணாத நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன் அவங்களை விட்டுரு" என செஞ்ச அதனை கேட்டு வெற்றி புன்னகையை சூடி கொண்டான் காளி.

தன் வேலையினை கச்சிதமாக முடிந்து வெளியே வந்தவனுக்கு நாகலிங்கத்திடமிருந்து அழைப்பு வர,

அதனை ஏற்று பேசியவனோ, "ஐயா, சொல்லுங்கய்யா என்ன விஷயம்" என வினவ,

அதற்கு நாகலிங்கமோ, "வினோத் கேஸுக்காக சில ஆதாரத்தை அழிக்கணும் அதுக்கு நீ என்ன பண்றேனா.." என பேசிகொண்டு சென்றவரை இடைவெட்டியவனோ,

"நீங்க கவலைபடாதீங்கய்யா, நான் ஏற்கெனவே செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சிட்டேன்; மருதய்யா சொன்னபடி பக்காவா முடிச்சாச்சு நீங்க நிம்மதியா இருங்க" என கூற,

அதனை கேட்டு ஆச்சர்யமான நாகலிங்கமோ தனது தம்பியினை பார்க்க அவரோ, "நீ கவலையேபடாத அண்ணே எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்" என நம்பிக்கையளிக்க,

'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்ற பொன்மொழிகேற்ப தனது தம்பியே தனது மகனை காத்து விடுவான் என்ற நம்பிக்கையோடு நிம்மதியாய் உறங்க சென்றார் நாகலிங்கம்.

காதலில் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
டாக்டர் ரிப்போர்ட் ட மாத்தி எழுதிடுவாரோ.வினோத்
வெளிவரகாகூடாது.
 

Nancy mary

✍️
Writer
டாக்டர் ரிப்போர்ட் ட மாத்தி எழுதிடுவாரோ.வினோத்
வெளிவரகாகூடாது.
ஆமா சகி இதெல்லாம் நடக்ககூடாது தான் ஆனா பார்க்கலாம் என்னாக போகுதோ😔
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

பிரிய நிலா

Well-known member
Member
எவ்வளவு சாதாரணமா வினோத் தப்பை பண்ணியிருக்கான். அவன் ப்ரண்ட்ஸ் இதுல கூட்டு. அவன் அப்பா என்னடான்னா புல் சப்போர்ட்...ச்சே என்ன கொடுமை...
 

Nancy mary

✍️
Writer
எவ்வளவு சாதாரணமா வினோத் தப்பை பண்ணியிருக்கான். அவன் ப்ரண்ட்ஸ் இதுல கூட்டு. அவன் அப்பா என்னடான்னா புல் சப்போர்ட்...ச்சே என்ன கொடுமை...
ஆமா ஆமா தன்னோட அப்பாவோ சித்தப்பாவோ காப்பாத்திருவாங்கனு நம்பிக்கையில தான் ஓவரா தப்பு பண்றான்😑😑😑
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
சை... இந்த அரசியல்வாதிங்க பசங்களாம் பண்ணுற தப்புக்கு தண்டனையே கிடைக்காதா
கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்லுகிறேன்😌😌😌
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom