தெய்வம் தந்த வீடு | Ezhilanbu Novels/Nandhavanam

தெய்வம் தந்த வீடு

மீ.ரா

✍️
Writer
தெய்வம் தந்த வீடு

ஜுன்
மாதத்தின் ஒரு நாள். கருமழை மேகங்கள் மாலை நேரத்தை இரவு நேரமாக மாற்றிக் கொண்டிருந்தன. மழை நிதானமாகத்
தூறியது
.

மழைக்காக வயக்காட்டுபுதூர்
கிராமத்தில் உள்ள நிழற்குடையில் முதியவர் ஒதுங்கினார்.
அவர் கையில் ஒரு துணிமூட்டை
. ஒரு வாட்டர்கேன், நான்கு டம்ளர்கள், ஒரு ஏனம் (பாத்திரம் )இவையணைத்தும் அந்த துணிமூட்டையில் அடக்கம். கையடக்கமான சொத்துக்கள். சுத்தமான கால்சட்டை மேல்சட்டை அணிந்து படித்தவர் போல் ஒரு தோற்றம். தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்.

இருள்சூழ்ந்து மணி ஒன்பதைத் தொட்டது. மாடு வளர்ப்பவர்கள் இரவு ஒன்பது வாக்கில் மாடுகளுக்கு ஒரு முறை தீனி போட்டுவிட்டுதான் உறக்கம் கொள்வர். ஒற்றை மாடு வளர்க்கும் தெய்வானை பாட்டி தன் கணவனை புற்றுக்கு பலிகொடுத்தவர். தற்போது தனியாக சமையல் செய்து உழைத்து வாழ்பவர். அவரின் கட்டுத்தாரை நிழற்குடைக்கு பின்புறம் அமைந்துள்ளது. மாட்டுக்கு தீனியளித்து திரும்பியவர் இந்த முதியவரை பார்த்து விசாரித்தார்.

பாட்டி அம்முதியவரை பார்த்து "சாப்பாடு சாப்பிட்டாச்சா ?" என கேட்க ,
"இங்க கடை ஏது இருக்கு ?" பதிலை கேள்வியாகக் கேட்டு வைத்தார்.
பொதுவாக கிராமத்தினர் உதவி என்று கேட்டால் மறுக்காமல் உதவுவர். சில நேரங்களில் தானாக முன்வந்தும் உதவுவர்.

பாட்டி உடனே வீட்டுக்குச் சென்று தனக்காக சுட்டு வைத்திருந்த ஐந்து இட்லிகளில் இரண்டை எடுத்து தக்காளி சாம்பாரை ஒன்றிலும் , காலையில் சமைத்த சோற்றில் இரசமும் ஊற்றி நிழற்குடைக்கு கொண்டு சென்றார்.

"ஏதாவது ஏனமிருக்கா?"என பாட்டி கேட்டார்.
"அதெல்லாம் இருக்கு. ஏதோ உம்புண்ணியத்துல ஆண்டவன் படியளந்துட்டான்."

தனது ஏனத்தில் உணவை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்.

"குடிக்க தண்ணீ இருக்கா ?" மீண்டும் பாட்டி கேட்க,
"இல்லை "என பதில் கிடைத்தது.

பிறகென்ன தண்ணீரும் எடுத்துவந்து ஊற்றிவிட்டு உறங்கச் சென்றுவிட்டார்.
அடுத்தநாள் காலை மழை பெய்த இதத்துடன் விடிந்தது. நந்தினி வழக்கம் 5 மணிக்கு எழுந்து படித்துவிட்டு தண்ணீர் பிடிக்க தன்வீட்டின் முற்புறத்தில் அமைந்த பைப்பிற்கு அருகில் வந்தாள்.

வயக்காட்டுபுதூரில் பொதுக்குழாய் அமைப்பு , ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிக்குழாய் வீடருகே அமைந்திருக்கும். தெய்வானை பாட்டியின் வீடும் நந்தினியின் வீடும் அருகருகில் உள்ளது. தெய்வானை நந்தினிக்கு பாட்டி முறையாகும். தண்ணீர்க்குழாய் கிழக்கு நோக்கி இருக்கும். நந்தினி சோம்பல் முறித்தாவாறே கிழக்கு நோக்கி நின்று குடத்தை குழாயடியில் வைத்தாள்.

அவள் பைப்பின் எதிராக நின்று பார்த்தால் நேராக நிழற்குடை தெரியும். அம்முதியவர் வெளியில் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் இவள் மனதில் குழப்பம் .' தெளிவாக இருக்கற மாதிரியும் தெரியுறாரு..ஆனா மனநிலை சரியில்லாத மாதிரியும் இருக்கு. ' யோசித்தவள் தனது குழப்பத்திற்கு முடிவுகட்ட தெய்வானை பாட்டியிடம் " பாட்டி யாரு அது நிழற்குடையில?" என்று விசாரித்தாள்.

பாட்டி மொத்தக் கதையும் கூற கேட்டு முடித்தவள் வீட்டுக்கு வந்து தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். நந்தினியின் அம்மாய் பால் ஊற்ற சென்றுவிட்டு திரும்பி வரும் போது பாட்டியுடன் வந்தார். இருவரும் ஏதோ கோபமாகப் பேசினர்.

நந்தினியும் என்னாச்சு எனக் கேட்க " அந்த முத்துப் பைய நிழற்குடையில இருந்த ஆள தள்ளி அடிச்சு முடுக்கி விட்டாரு. உங்க அம்மாய் அட ஏன் இப்படி பன்னறனு ?' கேட்டதுக்கு
" உங்களுக்கு ஒன்னும் தெரியாது. திருடிட்டு போயிட்டா என்ன பன்னறது . கொரனா இருக்கற ஆள இருந்த என்ன பன்னறது ? "திருப்பி கேட்டுட்டான்.

"வயசுல எவ்வளவு பெரியவரு. ஏதோ ரொம்ப படிச்சு மண்டக்கோளாறு ஆகிப்போச்சு போல , அவர புடிச்சு தள்ளி விடலாமா? அவன ?"
தெய்வானை பாட்டி கோபத்துடன் நந்தினியிடம் கூற நந்தினி உடனே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாள்.

அவள் வெளியே வந்து பார்க்கும் போது பெரியவர் அடுத்த ஊருக்கு செல்லும் ரோட்டில் பாதிவழி சென்றிருந்தார். கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு மீண்டும் வீடு திரும்பினாள்.

திரும்பி வந்தவள் பாட்டியிடம் " ஏம் பாட்டி அவரப் பார்த்தா திருடற மாதிரியா இருக்கு. திருடன் சொல்லி அந்த தாத்தாவ தொரத்துன இந்த குடிகாரன எப்படி நாம நம்ப முடியும்?."
"அவன் எல்லாம் அப்படி தான் குடிச்சே சீரழஞ்சு போறவன். நீ போய் வேலைய பாரு சாமி."

மனதில் பாரத்துடன் நந்தினியும் அவ்விடம் வீட்டு அகன்றாள்.
பெரியவரும் தெய்வம் தந்த
வீடான இப்பரந்த
உலகத்தில் பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பார்.

...முற்றும்...பெருந்தொற்றுக்காலத்தில் இழக்கக் கூடாதவற்றை. மக்கள் இழந்து கொண்டிருக்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவு இல்லாமல் தெருவில் கிடைத்து உண்டு வாழ்பவருக்கு ஒரு துளி கருணை காட்டினால் நாம் குறைந்துவிடப்போவதில்லை .
 

Attachments

  • eiXJZ5X34113.jpg
    eiXJZ5X34113.jpg
    959.1 KB · Views: 1

Latest profile posts

இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும்II-37👇

New Episodes Thread

Top Bottom