தென்றல் - 10

Umanathan

✍️
Writer
நாட்கள் நகர நகர, இளங்குமணனின் உடல்மொழி பேசும்மொழி அனைத்தையும் அவனறியாமலே மெருகேற்றினாள் வானதி. அதே சமயம் தேவாவும், மிருணாவும் அவளுடன் நன்றாக ஒட்டிக் கொண்டனர்.

அம்பிகாவும் அடிக்கடி வானதியை பற்றிக் கேட்டு அவளை வீட்டுக்கு வர வைத்தார். அவளை தள்ளி வைக்க நினைத்தாலும் அது முடியாமல் போக தடுமாறியது இளங்குமணன் தான்.

இதற்கிடையில் ஆகாஷ் டிராவல்ஸ் டெண்டர் சம்பந்தமான நேர்காணல் வந்தது. அடுத்த நாள் அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்ற நிலையில், அவனின் பிறந்த நாளுக்கு வாங்கித் தந்த உடையைத் தான் அணிந்து வர வேண்டும் என்று பிடிவாதமாய் கூறினாள் வானதி.

ஏற்கனவே எல்லோரும் அவள் பக்கம் இருந்து, அவளை தவிர்க்க முடியாத எரிச்சல் இருக்க, அவளின் இந்த அதிக்கப்படியான உரிமை அவனுக்கு கோபத்தை தந்தது. “ஆபீஸ் வேலையை மட்டும் பார்த்தா போதும். தேவையில்லாம உரிமை எடுத்துக்க வேண்டாம்.”

அவனின் கூர் வார்த்தைகளை கேட்டதும் வானதியின் முகம் கூம்பி விட்டது. சாரி என்று சின்ன குரலில் கூறி விட்டு வெளியே சென்று விட்டாள். அவளின் முகம் வாடியதும் அவனுக்கு கஷ்டமாக போய் விட்டது. இருந்தாலும் இப்படியே விட்டு விடலாம், அது தான் எல்லோருக்கும் நல்லது என்று நினைத்துக் கொண்டான்.

அன்று முழுவதும் வானதி அவனிடம் எதுவும் பேசவில்லை. எதுவானாலும் அவனுடைய செயலாளர் மகேந்திரனிடமே கொடுத்தனுப்பினான். அவனை மொத்தமாய் தவிர்த்தாள்.

அன்றிரவு சரியாக உண்ணாமல் தட்டில் கோலம் வரைந்துக் கொண்டிருந்த வானதியை கேள்வியாய் பார்த்தார் சந்திரன்.

“என்னடா? சரியா சாப்பிடலை? உடம்பு சரியில்லையா?” என்று கேட்ட தந்தையை பார்த்து தலையசைத்தாள்.

“இல்லப்பா. உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு. என்னமோ பசிக்கலை.” என்றவளின் முகம் வாடி இருப்பதை கண்ட சந்திரன், “சரிடா வா கொஞ்சம் வெளிய காலாற நடக்கலாம்.”

எப்பொழுதும் வாளவளவென பேசும் மகள் இன்று அமைதியாய் இருப்பதை கண்டவர் என்னடா என்று கேட்டார். சிறிது அமைதியாய் இருந்தவள், தந்தையிடம் மடமடவென ஒப்பித்தாள்.

“நாளைக்கு இளா, டெண்டர் விஷயமா அந்த ஆகாஷ் டிராவல்ஸ் போகனும்பா. நான் வாங்கித் தந்த டிரெஸ்ஸை போட்டுட்டு போக சொன்னா திட்டிட்டாருப்பா” குறையாக சொல்லும் மகளின் முகத்தை ஆழமாய் பார்த்தார் சந்திரன்.

“எதுக்கும்மா?”

“பின்ன என்னப்பா? நம்மள ஒருத்தர் பார்த்தவுடனே ஒரு மரியாதை தோணனுமில்ல. அதுக்கு தான் சொன்னேன்.”

அவளின் கைப்பிடித்து அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தவர், நேரடியாய் கேட்டார். “நீ எதுக்கும்மா அந்த பையனுக்கு டிரெஸ் வாங்கித் தரனும்?”

நேரடியாய் கேட்ட தந்தைக்கு மறைக்காமல் பதில் சொன்னால் வானதி. “அவரைப் பார்த்ததுமே எனக்கு பிடிச்சிருந்ததுப்பா. எனக்கு இளாவை அம்மா தான் காட்டினாங்கன்னு தோணுது.”

மறைக்காமல் தன் மகள் கூறுவதற்கு மகிழ்வதா, இல்லை இப்படி ஒரு விஷயத்தை கூறியதற்கு திகைப்பதா என்று தெரியாமல் அமர்ந்திருந்தார் சந்திரன்.

தந்தையின் முகத்தை பார்த்த வானதிக்கு அவரின் எண்ணவோட்டம் புரிந்த்து. அவரின் தோளில் சாய்ந்தவள், “அப்பா நான் உங்ககிட்ட எதையும் மறைச்சதில்லை. அதுக்காக என் இஷ்டத்துக்கு நடந்துக்கலை. இளாவை பிடிக்கும்னு, நான் இன்னும் அவர்கிட்ட கூட சொன்னதில்லை. ஆனா என் உள் மனசுல ஆழமான நம்பிக்கை இருக்கு.”

சிறிது அமைதிக்குப் பின், அவளின் தலையை பரிவாய் தலை தடவியவர் “சரிடா நீ போய் தூங்கு.” என்றவுடன், “குட் நைட்பா” என்று கூறி எழுந்து போய் விட்டாள் வானதி.

இதை எப்படி கையாள்வது என்ற யோசனையில் இருந்த சந்திரன் பின் தன் அலைபேசியை எடுத்து, தன் உயிர் நண்பனும், வக்கீலுமான நாகேந்திரனை அழைத்தார். நாகேந்திரனின் மூலம் தான் இளங்குமணனை பற்றி ஏற்கனவே விசாரித்திருந்தார். என்ன தான், தானே பார்த்துக் கொள்வதாய் கூறினாலும் மகள் வேலை செய்யும் இடம் என்பதால் தீவிரமாய் விசாரித்துத் தான் வானதியை அனுப்பியிருந்தார்.

இன்று வானதி பேசியதை கேட்டவர், தன் பெண் இன்னும் குழந்தையல்ல என்பதை உணர்ந்தவராய் இதைப் பற்றி பேசத்தான் நண்பரை அழைத்தார்.

அன்று காலை அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த இளங்குமணன், சந்திரன் எண்ணில் இருந்து அழைப்பு வரவும் குழம்பிப் போனான்.

“வணக்கம் சார்.” என்றவனுக்கு பதில் வணக்கம் சொன்னவர், தன்னை வந்து சந்திக்க முடியுமா என்று கேட்கவும் இன்னும் குழம்பிப் போனான்.

“சரி சார். எங்க வரனும்? உங்க ஆபீஸ்க்கு வரட்டுமா சார்.” என்று கேட்க, “இல்லப்பா” என்று கூறி, ஒரு உணவகத்தின் பெயரை சொல்லி அங்கே வர சொன்னார்.

அங்கே சென்றவன், சந்திரனுடன் இன்னொருவரும் இருக்க அருகில் சென்று வணக்கம் என்றான்.

அவனின் முகத்திலும், உடல் மொழியிலும் தன்னம்பிக்கை நிறைந்திருந்ததை கண்ட சந்திரன், அவனிடம் தெரிந்த மாற்றத்தை கண்டு ஆச்சரியப்பட்டார்.

“உட்காருங்க இளங்குமணன்.” என்றவர், தன் அருகிலிருந்தவரை காட்டி “இவர் என்னோட நண்பர், வக்கீல் நாகேந்திரன்.” என்று அறிமுகப்படுத்தினார்.

“வணக்கம் சார்.” என்று அவரைப் பார்க்க அவரும் பதிலுக்கு வணக்கம் கூறி புன்னகைத்தார். ஆனால் அவரின் பார்வை அவனை எடை போடுவது அவனுக்கு புரிந்தது.

“உன பாடி லாங்குவேஜ்ல நல்ல மாற்றம் தெரியுது தம்பி.” சந்திரனின் குரலில் பாராட்டு தெரிந்தது.

“நன்றி சார். அதுக்கு நான் நன்றி சொல்ல வேண்டியது உங்க பொண்ணுக்கு தான். அவங்க தான் என்னை நான் இப்படி மாத்திக்கறதுக்கு காரணம். அவங்க நிர்வாகம் கத்துகிட்டாங்களோ இல்லையோ, எனக்கு நிறைய கத்து கொடுத்திருக்காங்க.”

சந்திரனும் நாகேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “வானதியை உங்களுக்கு பிடிக்குமோ?” நாகேந்திரன் இளாவிடம் கேட்டார்.

அவரை ஆச்சரியமாய் பார்த்தவன் “அவங்களை யாருக்கு தான் சார் பிடிக்காது? தன்னை சுத்தி இருக்கறவங்க நல்லா இருக்கணும் அப்படீங்கற எண்ணம் எத்தனை பேருக்கு இருக்கும். அவங்க அப்படி தான் பார்ப்பாங்க. பிடித்தம் அப்படீங்கறதை விட எனக்கு அவங்க மேல ரொம்ப மரியாதை இருக்கு சார்” என்றான்.

நாகேந்திரன் புன்னகையுடன் தலையசைக்க, சந்திரன் அமைதியாக இருந்தார்.

“சார், நீங்க என்னமோ கேக்கனும்னு நினைக்கறீங்க. எதுவானாலும் சொல்லுங்க.” என்று கூறினான் இளங்குமணன்.

“ஒன்னுமில்லைபா. எங்க பொண்ணு உன் ஆபீஸ்ல வேலை பாக்கறால்ல. அதான் சும்மா பேசலாம்னு.” என்று கூறினார் நாகேந்திரன்.

அவர்களின் மனம் புரிந்து புன்னகைத்தான் இளங்குமணன். ஒரு மாதமாய் பணிபுரியும் பெண்ணைப் பற்றி இப்பொழுது கேட்கிறார்களே. உண்மையான காரணம் புரியாமலா போகும்.

“கவலைப்படாதீங்க சார். சந்திரன் சாரோட பொண்ணுக்கு என்னோட நிறுவனத்துல எந்த பிரச்சினையும் வராது. அவங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. அவங்க பத்திரமா டிரெயினிங் முடிச்சு, உங்க பேரை காப்பாத்துவாங்க.”

சந்திரனின் முகத்தில் திருப்தி கலந்த ஆச்சரியமும், நாகேந்திரன் முகத்தில் மதிப்பும் தெரிந்தது.

“நான் வரேன் சார். இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்றவனை பார்த்த சந்திரன் “தெரியும்பா. ஆகாஷ் டிராவல்ஸ் டெண்டர் தானே. வானதி சொன்னா. என்னோட வாழ்த்துக்கள்” என்றார்.

“ஆமாம் சார்” என்ற இளாவை பார்த்த சந்திரம் மீண்டும் கூறினார்.

“ஆமாம். வானதி சொன்ன டிரெஸ்ஸை போட மாட்டேன்னு சொல்லிட்டன்னு நேத்து புலம்பிட்டு இருந்தா.” என்று மகளின் நினைவில் மென்மையாய் புன்னகைத்தார்.

ஓ! அதனால் தான் இந்த விசாரிப்போ? ஆனால் தந்தையிடம் மறைக்காமல் கூறிய வானதியை பற்றி ஆச்சரியமாய் நினைத்தான்.

பின் எழுந்தவன் ஒரு தலையசைவுடன் வெளியே வந்தான். ஒரு நொடி நின்று யோசித்தவன், பின் முடிவு செய்தவனாய் தன் இல்லம் நோக்கி சென்றான்.

இங்கே உணவகத்தில் சந்திரன், தன் நண்பரை பார்த்து கூறினார் “நாகு, அந்த பையன் என்ன எப்படின்னு விசாரி.”

நண்பனின் மனம் புரிந்த நாகேந்திரன் சரியென்று தலையசைத்தார்.
 

Apsareezbeena loganathan

Active member
Member
இலா என்ன இது,வானதி பாவம் ,dress change panna sir kilambittaar, appudiyee manasum vanathi பக்கம் கொஞ்சம் change பண்ணலாமே ???? Nice sis
 

Latest profile posts

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 25😎👇

ஓம் சாயிராம்
எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 24😎👇

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வெய்யோனின் தண்மதி அவள் 23😎👇

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
முப்பத்திரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

New Episodes Thread

Top Bottom