• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சொல்ல மறந்த (காதல்) கதை

Chithu

✍️
Writer
மேடையில் இருவரும் சிரித்த முகமாக நின்றிருந்தனர்... மேடை ஏறி வருபவர்கள் எல்லாம் கையில் கொண்டு வந்த, கிப்ட்டை அவர்களிடம் கொடுத்து போட்டோக்குப் போஸ் கொடுத்து விட்டுச் சென்றனர்..

இதெல்லாம் கண்டு கண்கள் கலங்கி, கொஞ்சம் பொறாமை, கோபம், தவர விட்ட ஆத்திரம்
எல்லாம் கலந்த கண்ணீராக இருந்தது அவளுக்கு.

" மச்சி, இப்ப ஃபீல் பண்ணி என்னாக போது எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி எங்கிருந்தாலும் வாழ்க சொல்லிட்டு வந்திடு மச்சி ..." என்று தன் தோழியின் தோளை அழுத்தினாள்.
" நான் இருக்க வேண்டிய இடம் டி... ஒரு நாள் மிஸ் ஆனதுனால என் வாழ்க்கையே மாறிருச்சு..." என்றாள் கண்ணீரைத் துடைத்தவாறு.

"விடு மச்சி, விஜய்தேவரகொண்டா இல்லேன்னா, ஒரு நிவின் பால்(திரிஷா இலேன்னா திவ்யா தேட் டயலாக்)


" இருந்தாலும் என் மனசு கேக்கல டி..." என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு
" சரி சரி வா வா, வந்த வேலையைப் பார்ப்போம்..." என்று அவளை அழைத்துக் கொண்டு மேடை ஏறினாள்.
மேடையில் நின்றிருந்த, நிஷா தன் தோழிகளைக் கண்டதும் கட்டி அணைத்தாள்.


" வாழ்த்துக்கள் டி..." எனக் கைகொடுத்து குலுக்கினாள் ஹரிணி.

" தேங்க்ஸ் டி" என்று அவர்களை அருகில் நிற்க வைத்து போட்டோக்குப் போஸ் கொடுக்க வைத்தாள்.. பின் இருவரும் பேசி விட்டு கீழே இறங்கினார்கள்.
ஹரிணி,

மீண்டும் மேடையைப் பார்க்க ரவியின் கண்கள் அவள் மேல் பதிந்து சென்றது.
'என்னவனாக வர வேண்டியவன். ஒரு நாள்ல என் காதலைச் சொல்லாம விட்டதுனால என் வாழ்க்கையே போச்சு.' என்றவள் வருந்திக் கொண்டு இருக்க,


" மச்சி கூட்டத்தைப் பார்த்தா சாப்பிட எதுவும் இல்லாம போயிடும் போல இருக்கு. பந்தியையாவது மிஸ் பண்ண வேணாம் வா" என்றாள். அவள் முறைப்பையும் சட்டைச் செய்யாது ஹரிணியை அழைத்து சென்றாள் அவளது தோழி.

ஹரிணி அவளிடம் புலம்ப அவ்ளோ காரியமே கண்ணாக இருந்தாள்(சோறு முக்கியம்)
ஹரிணியும் நிஷாவும் ஒரே
கல்லூரியில் தான் பயின்றனர்... ரவி அவர்களது சீனியர். இருவருமே அவன் மேல் கரஷ் என்றே சொல்லித் திரிந்தனர்.


பின் வேலைக்குச் சென்ற இடத்திலும் அவர்ளுக்கு மேல் அதிகாரியாக இருந்தான். இருவருக்கும் மீண்டும் அவன், கரஷ் ஆனான். ஆனால் இம்முறை ஹரிணி மட்டுமே அவன் மேல் காதல் கொண்டாள்.
அதைத் தன் தோழியிடம் சொல்லாமல் மறைத்து வைத்தாள்.. ஒரு நாள் ரவியிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்க, அவனிடம் காதலைத் தவிர மத்த ஊர்கதை உலகக் கதைப் பேசி விட்டு விடைப் பெற்றாள்.

சரி, இதே போல் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அப்போது சொல்லலாம் என்று இருந்தவளுக்குத் தெரிய வில்லை வாய்ப்பு ஒரு நாள் தான் பிரீ ட்ரயல் கொடுக்கும் என்று. அடுத்த வரும் நாளெல்லாம் நாம் தான் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு வாரம் கம்பெனிக்காக வெளியூருக்கு சென்றுருந்தான்.
அவன் வந்ததும் தன் காதலைச் சொல்லலாம் என்று எண்ணி இருந்தவளுக்குப் பெரும் இடியாய் விழுந்தது அவனது நிச்சயம் மறுநாள் கல்யாணம் என்ற செய்தி.
அந்த ஒரு வாரத்தில் அவன் அங்கிருந்தே ஒகே சொல்லிவிட்டான்.சொந்தமென்று நிஷாவைப் பெண் கேட்டனர் ரவியின் பெற்றோர்கள். அவர்களும் ஒத்துக் கொள்ள, இருவீட்டாரின் சம்மதத்தோடு கல்யாணம் ஏற்பாடு நடந்தது.
மணமக்களின் முழு சம்மதத்தோடு முடிவான கல்யாணம் சிறப்பாக முடிந்தது.

அவள் சொல்ல மறந்த (காதல்) கதையினால் அவள் வாழ்க்கையே மாறி விட்டது பாவம்.

ஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டைக்கு கிடைக்கும் என்று கனவா கண்டிருப்பாள்.
வாய்ப்பு கிடைக்கும் போதே பயன் படுத்திக்கணும் இல்லேன்னா இவளை போல மிஸ் பண்ணவேண்டியது தான் காதல் மட்டுமில்லை... அதுக்கும் மேல சில விஷயங்களையும்
..
 

Rajam

Well-known member
Member
சந்தர்ப்பம் யாருக்கும் காத்திருக்காதுனு
இப்போ தெரிஞ்சிரிக்கும்.
காலம் கடந்த ஞானம்.
 

Chithu

✍️
Writer
சந்தர்ப்பம் யாருக்கும் காத்திருக்காதுனு
இப்போ தெரிஞ்சிரிக்கும்.
காலம் கடந்த ஞானம்.
Yes மா...
 

Baby

Active member
Member
வாவ்... குட்டி கதைல க்யூட் மெஸேஜ்.... சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை பயன்படுத்திக்கிறவன் புத்திசாலி அண்ட் அதிர்ஷ்டசாலி....சூப்பர்
 

Chithu

✍️
Writer
வாவ்... குட்டி கதைல க்யூட் மெஸேஜ்.... சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை பயன்படுத்திக்கிறவன் புத்திசாலி அண்ட் அதிர்ஷ்டசாலி....சூப்பர்
ரொம்ப நன்றி மா
 

பிரிய நிலா

Well-known member
Member
க்யூட் ஸ்டோரி சிஸ்..
பட் இப்படி ஒரு டிவிஸ்ட் ஹரிணிக்கு. அப்போவே காதலை சொல்லி இருந்தால் அவள் இருந்திருக்க வேண்டிய இடம்தான்..
பரவால அவ ப்ரண்ட் சொன்ன டையலாக் தான்...
செம சிஸ்...
 

Chithu

✍️
Writer
க்யூட் ஸ்டோரி சிஸ்..
பட் இப்படி ஒரு டிவிஸ்ட் ஹரிணிக்கு. அப்போவே காதலை சொல்லி இருந்தால் அவள் இருந்திருக்க வேண்டிய இடம்தான்..
பரவால அவ ப்ரண்ட் சொன்ன டையலாக் தான்...
செம சிஸ்...
Romba nandri maa
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom