சிந்தையில் பதிந்த சித்திரமே - எழிலன்பு

Arthy

✍️
Writer
🌼சிந்தையில் பதிந்த சித்திரமே🌼 🌹எழிலன்பு🌹

நல்லதொரு வாசிப்பு! வழங்கல் சிரத்தையுடன் இருந்தது. எழிலின் கதைகளில் தமிழும் எளிய நடையும் எனைக் கவர்பவை. எல்லோருக்கும் புரியும்படி எழுதுவார். அதே போல் காதல் காட்சிகளிலும் கவனம் இருக்கும். இந்தக் கதையிலும் இவற்றை காண முடிந்தது.

கதையில் ஞானசேகர் - அபிராமி பகுதி ஸ்பெஷல் எமோஷன். ஞானசேகரை வைதுகொண்டே பாராட்டினேன். ஏன் என்று வாசித்தால் தெரியும்.

நயனிகா - துள்ளலுடன் அறிமுகமாகி என்னெவெல்லாம் சந்திக்க நேரிடுகிறது! அப்பா! அந்தச் சம்பவம் உண்மையில் அனுபவித்ததை போன்று கிலியைத் தருகிறது. இவளைக் காப்பாற்ற ஒரு கதிர்நிலவன் வந்தான். நிஜத்தில் எத்தனை பெண்கள் இவ்வகையில் சீண்டப்படுகிறார்கள்? அவர்கள் பயந்து கொண்டிருந்தால் என்னாவது? தயா கேட்பது போல் அவனே துணை நின்றிருக்க முடியும்.

கதிர்நிலவன் - முசுடு போல அறிமுகமாகி எத்தனை விதமான குணாதிசயங்களைக் காட்டுகிறான்! இவன் எப்படிக் காதலிப்பான் என்று முதலில் சந்தேகம் வந்தது. இவனும் காதலிக்கிறான். அதுவும் எப்படி? நெகிழ்ச்சியான சில காட்சிகள்.

தயா - நயனி பாண்டிங் செம!

அரவிந்த் - லூசுப்பய! வேற என்னத்த சொல்ல?

பெற்றோரின் செயல்கள் பிள்ளைகளின் நலனை எண்ணியே என்பது புரிந்து கொள்ளும்படியான ஒரு கதை.

வாழ்த்துகள் எழிலன்பு! 💐

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom