கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் 🥰 24 🥰

❣கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்❣


❣ 24 ❣​

வினோத் , ஷர்மி யிடம் பேசுவதற்காக அவளின் அருகில் சென்றான்...


வினோத் , ஷர்மி என்று அழைக்க, அவள் திரும்பிப் பார்த்தாள்... அவளது பார்வையில் பல குழப்பங்கள் இருந்தன... அவன் ஷர்மி யிடம், ஷர்மி நான் அக்‌ஷய் யின் நண்பன்... என்னை நீ அண்ணா என்று அழைக்கலாம்... நான் உன்னை என் தங்கையாக பார்க்கின்றேன்...


அக்‌ஷய் என்னை தவிர இதுவரை யாரிடமும் அன்பாக பேசியதில்லை... எனக்கு அடுத்தபடியாக உன்னிடம் அன்பு செலுத்துகிறான்... அவன் வாழ்க்கையில் பல கடினங்களை தாண்டி வந்திருக்கிறான்... அதனால் அவனது கோபம் அவனுடன் மிகவும் ஒட்டிக் கொண்டது... அதைக் கண்டு நீ பயம் கொள்ள வேண்டாம்.. இங்கிருப்பவர்கள் யாரைக் கண்டும் நீ பயம் கொள்ள வேண்டாம்... உண்மையில் அவன் மிகவும் நல்லவன் மா... என்று கூறினான் வினோத்...


அவன் எதற்காக இவ்வாறு கூறுகிறான் என்று அவளுக்கு தெரியவில்லை... ஆனால் வினோத் அறிந்து கொண்டான்.. ஷர்மி , அக்‌ஷய் யின் வாழ்வில் இன்றியமையாதவள் என்று... ஷர்மி சரி என்று கூறினாள்.... பின் அக்‌ஷய் காரினை எடுக்க, இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர்....


கார் அமைதியாகச் சென்றது...


ஷர்மி : நான் உங்க பிரண்ட் தான....


அக்‌ஷய் : ஆமா... நீ என்னை அக்‌ஷய் னே கூப்பிடலாம்...


ஷர்மி : அப்போ நீங்க நான் கேட்கிறதுக்கு என் கிட்ட உண்மையை சொல்லனும் ல...


அக்‌ஷய், காரினை செலுத்திக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தான்....


ஷர்மி : சொல்லனும்ல


அக்‌ஷய் : என்ன கேட்க போகின்றாய்...


ஷர்மி : ஏன் அந்த சர்வரை அடித்தீர்கள்


அக்‌ஷய் : கோபம் வந்தது...


ஷர்மி : ஏன் அவ்வளவு கோபம்... அவன் தெரியாமல் செய்ததற்கு...


அக்‌ஷய் : அவன் தெரியாமல் செய்யவில்லை...


ஷர்மி : அவன் தெரியாமல் செய்யவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா...


அக்‌ஷய் : தெரியும்...


ஷர்மி : ஏன் அவன் அப்படி செய்தான்...


அக்‌ஷய் : அங்கிருப்பவர்களுக்கு என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அதற்காக உன்னை அவமானப்படுத்த முயன்றார்கள்...


ஷர்மி : சரி. என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தீர்கள்...


அக்‌ஷய், அவளைப் பார்த்து விட்டு அமைதியாக இருந்தான்... எதுவும் சொல்லவில்லை...


ஷர்மி : சொல்லுங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க... ( அவன் எதுவும் கூறாததால் அவளுக்கு கோபம் வந்தது..) சொல்லு அக்‌ஷய் எனக்கு தெரியனும் எதுக்கு கூட்டிட்டு வந்த... ( அவள் தன் உரிமையை அவன் மீது தானாகவே எடுத்துக் கொண்டாள்)


அவள் பலமுறைக் கேட்க, அவன் உண்மையைக் கூறினான்... அதன் பின் தான் ஷர்மி யின் கோபம் மிக அதிகமானது....


ஷர்மி : அப்படி என்றால், உன் சுயநலத்திற்காக என்னை அங்கு அழைத்து சென்றாய்.... அந்த கல்யாணம் உனக்கு பிடிக்கல, அதுனால என்னை கூட்டிட்டு போன... அப்படிதான... அப்போ பிரண்ட்ஸ் னு லாம் எதுவும் இல்ல.... என்னை இறக்கி விடு நானே வீட்டிற்கு போயிக்கிறேன்... என்று கோபமாக கூறினாள்...


அவன் , அவளின் கோபத்தை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் திணறினான்... அவள் ஓடிக் கொண்டிருந்த காரின் கதவை திறக்க முயன்றாள்... அவன் அதனை லாக் செய்து வைத்திருந்தான்.... அவனிடம் என்னை இறக்கி விடு இறக்கி விடு என்று கூறி க் கொண்டே வந்தாள்...


இறக்கி விடும் படி அடம் பிடித்தாள்... ஷர்மி ஏன் இப்படி செய்ற... நான் வீட்டில் இறக்கி விடுறேன்... அவள் கேட்க வில்லை.... அவள் காரில் கத்திக் கொண்டே வந்தாள்... அவனுக்கு அது கஷ்டமாக இருந்தது... அவன் அபம் பிடிக்காதே ஷர்மி.. எனக்கு கோபம் வருகிறது ... என்னால் உன்னை நடுரோட்டில் எல்லாம் இறக்கி விட முடியாது என்று கூறினான்...


அவள், அவனுடைய காரின் ஸ்டியரிங் கைப் பிடித்து மாற்றி சுற்றினாள்... அவனுக்கு கோபம் அதிகமாகி விட்டது... அவளது கையினை கார் ஸ்டியரிங்கில் இருந்து எடுத்து விட்டு , கோபத்தில் அவளை அறைய கை ஓங்கி விட்டான்.... அவள் அவனையே அதிர்ந்து பார்த்தாள்... அவளது கண்கள் கலங்க, அதை அவனிடமிருந்து மறைக்க முயன்று தோற்றாள்....


அவன் காரினை நிறுத்தி விட்டான்.... ஆனால் கதவினை திறக்க வில்லை... அவளிடம் கோபமாக பேசினான்...


அக்‌ஷய் : என்ன தெரிய வேண்டும் உனக்கு... சொல் என்ன தெரிய வேண்டும்... உன்னை எதற்காக அழைத்துச் சென்றேன் என்பது தானே... ஆமா கூட்டிட்டு போனேன்... உன்னை சேலை கட்டி பார்க்க வேண்டும் என்று தோன்றியது... அதனால் உன்னை கூட்டிட்டு போனேன்... உன்னை தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால் கூட்டிட்டு போனேன்... உன்னை மட்டும் தான் என் நண்பன் வினோத் திடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோன்றியது... அதனால்
கூட்டிட்டு போனேன்... ஆமா சுயநலம் தான்... போதுமா ... வேறு எதாவது தெரிய வேண்டுமா.... என்று அவளிடம் கோபமாக பேச, அவள் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது....


அவளது, கோபத்தை தாங்கிக் கொள்வான் அவன்... ஆனால் அவளது கண்ணீர் அவனை உருக்கியது...


அக்‌ஷய் : ஷர்மி , இப்போ எதுக்கு அழுகுற...


அவள் எதுவும் கூறவில்லை...


அக்‌ஷய் : சரி மா... சரி... நான் பண்ணது தப்பு தான்...ஆனா நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்... நீ தண்டனை கொடு நான் ஏத்துக்குறேன்... தயவுசெஞ்சு அழாத....


அவள் தன் முகத்தினை திருப்பிக் கொண்டாள்... அவன் அவளது கையினைப் பிடித்து அவளை தன் புறம் திருப்பினான்... அவன் இறுக்கமாக பிடித்தது அவளுக்கு வலித்தது...


அக்‌ஷய் : நான் பேசிக்கிட்டு இருக்கேன்ல...


ஷர்மி : அக்‌ஷய் என் கையை விடு, எனக்கு வலிக்குது...


அவனது பிடி சிறிது தகர்ந்தது...


அக்‌ஷய் : எனக்கு தண்டனை கொடு ஏத்துகிறேன் னு சொல்றேன்ல...


ஷர்மி : என் கிட்ட பேசாத... (கோபமாக)


அவனுக்கு இது மிகப் பெரிய தண்டனை.... அவனுக்கு மனதில் அத்தனை கோபம்... ஆனால் அமைதியாக இருந்தான்... பிடிவாதக்காரி என்று எண்ணினான்....


அக்‌ஷய் : நிஜமாவா


ஷர்மி : ஆமா என் கிட்ட பேசாத...


அக்‌ஷய் : சரி....


அவன் அமைதியாக காரினை செலுத்த ஆரம்பித்தான்... ஷர்மி தன் மனதில் ,"" கோபத்தில் கூறி விட்டோம் நிஜமாகவே இவன் பேசமாட்டானா.... இவன் பிடிவாதகாரன் பேச மாட்டான்"" என்று நினைத்தாள்...


கார் , ஷர்மி யின் வீட்டை அடைந்தது... அவன் எதுவும் பேசவில்லை... அவளும் எதுவும் பேசவில்லை... அவள் இறங்கி , தன் ப்ளாட்டிற்குள் சென்றாள்.... அங்கே சென்று ஜன்னல்களை திறக்க, கார் அங்கே தான் நின்றது... அவன் காரிலிருந்து இறங்கி அந்த ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தான்... அவளும் அவனை பார்க்க, இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்... பின் அவள் ஜன்னலில் இருந்து விலக, கார் அங்கிருந்து நகர்ந்து சென்றது....

​
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom