• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கைதி - அத்தியாயம் 18

Nuha Maryam

✍️
Writer
சிதாராவை யுனிவர்சிட்டியில் விட்டு வந்த ஆர்யான் ஆஃபீஸ் கிளம்பினான்.

யுனிவர்சிட்டிக்கு சென்ற சில மணி நேரத்தில் சிதாராவிடம் வந்த அவள் வகுப்புத் தோழி ஒருத்தி,

"சிதாரா... சம்வன் இஸ் வைட்டிங் ஃபார் யூ இன் அவுட்சைட்..." என்று விட்டு சென்றாள்.

சிதாரா, "என்ன யாரு பார்க்க வந்து இருப்பாங்க... ஒரு வேளை ஜிராஃபியா இருக்குமோ... பட் அவன் எதுக்கு இப்போ வரனும்... சரி போய் பார்க்கலாம்..." என நினைத்தவள் யாரெனப் பார்க்கச் செல்ல அங்கே யாருமே இருக்கவில்லை.

சுற்று முற்றும் நன்றாக பார்க்க யாருமே தெரியவில்லை.

சிதாரா, "ச்சே... யாராவது விளையாடுறாங்களா இருக்கும்..." என்றாள் கோவமாக.

பின் மீண்டும் வகுப்பிற்குச் சென்றவள் பாடங்களில் பிஸியாக அது பற்றி மறந்தே போனாள்.

மாலையானதும் வீட்டுக்குச் செல்ல வெளியே வர அவளுக்கு முன்னே அங்கு ஆர்யான் பைக்கில் வந்து காத்திருந்தான்.

அவனிடம் சென்ற சிதாரா, "என்ன ஜிராஃபி... நான் கால் பண்ண கூட இல்ல... நீயே வந்துட்ட..." என்க,

"இன்னைக்கு கொஞ்சம் வர்க் கம்மி மினி... அதான் உன்ன பிக்கப் பண்ண வந்தேன்..." என ஆர்யான் கூறினான்.

சிதாரா ஏறி அமர பைக் வீட்டை நோக்கி புறப்பட்டது.

சிதாராவை வீட்டில் இறக்கியவன், "மினி வெளிய சின்ன வேலை ஒன்னு இருக்கு... நீ டார் லாக் பண்ணிக்கோ... நான் சீக்கிரம் வரேன்.." என்று விட்டு சென்றான்.

சிதாராவும் களைப்பு தீர குளித்து விட்டு வந்தவள் ஆர்யானின் டயரி நினைவுக்கு வர அதனை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

முதல் பக்கத்தைத் திறக்க,

"ஹாய் சேம்ப்... ஐம் ஆர்யான்... யூ நோ வன் திங்... எனக்கு இந்த டயரி எழுதுறதெல்லாம் பழக்கமே இல்ல... பட் இன்னைக்கு எழுதனும்னு தோணுது... என் மனசுல இருக்குறத யாரு கிட்டயாவது சொல்லனும்... ஃப்ரென்ட்ஸ்ட இப்பவே சொல்ல முடியாது... அதான் உன் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு இருக்கேன்... "

என்று இருக்க சிதாராவுக்கு சிரிப்பு வந்தது.

அடுத்த பக்கத்தைப் பார்க்க,

"இன்னைக்கு ஒரு பொண்ண பாத்தேன் சேம்ப்.. இல்ல இல்ல... பொண்ணுன்னு எல்லாம் சாதாரணமா சொல்லக் கூடாது... தேவதை அவள்... அவள பாத்ததும் மனசுக்குள்ள ஒரு சொல்ல முடியாத ஃபீல்... ஷீ இஸ் அ ஸ்பார்க்ல்..."

என்றிருந்தது.

சிதாரா, "பார்ரா... இவன் இது வர என் கிட்ட கூட இதை பத்தி சொல்லி இல்ல... யாரா இருக்கும்..." என்றவள் மறுபக்கத்தைப் பிரட்டிப் பார்க்க அதற்குள் ஆர்யான் பேசும் சத்தம் கேட்டது.

பிறகு பார்க்கலாம் என டயரியை மூடி இருந்த இடத்திலே வைத்தவள் வெளியே செல்ல,

ஆர்யான், "மினி.. நீ நைட்டுக்கு டின்னர் சமைக்க வேணா... நான் வெளியவே வாங்கிட்டு வந்துட்டேன்..." என்றவன் சிதாராவுக்கு பரிமாறி விட்டு தனக்கும் போட்டு எடுத்துக் கொண்டான்.

இருவரும் அமைதியாக சாப்பிட திடீரென சிதாரா,

"ஜிராஃபி... ஊட்டி போய் வந்ததுமே கேக்கனும்னு இருந்தேன்... அதுக்கப்புறம் நடந்த ப்ராப்ளம்ஸ்ல மறந்துட்டேன்... ஆமா அன்னைக்கு மயூ என்ன சொன்னா உன் கிட்ட... நீ கூட வெக்கப்பட்டுட்டு இருந்ததெல்லாம் பார்த்தேன்..." என்க,

ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அன்று நடந்தவற்றை சிதாராவிடம் கூறினான்.

மயூரி, "அது வந்துங்க... நான்.. அது... நீங்க..." என சொல்லாமல் இழுக்க,

ஆர்யான் அவசரமாக, "ஒன்னும் பிரச்சினை இல்லங்க.. நீங்க நிதானமா அப்புறம் சொல்லுங்க.." என அங்கிருந்து செல்லப் பார்க்க,

"இல்ல இல்ல.. நான் சொல்ல வந்த விஷயத்த இப்பதே சொல்லிட்றேன்..." என அவனை நிறுத்தினான் மயூரி‌.

மயூரி, "ஆர்யான்.. அது வந்து.. உங்கள பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி.. உங்க ஹியுமர்சென்ஸ் என்ட் நீங்க சித்துவுக்காக கேர் பண்ற விதம் எல்லாமே என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சி.. ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ.." என ஆர்யானுக்கு மினி ஹார்ட் அட்டேக் ஒன்றையே ஏற்படுத்தினாள்.

அதிர்ச்சியில் வாயடைத்து நின்ற ஆர்யான் பின் மயூரியிடம்,

"மயூரி.. எனக்கு உங்க கிட்ட என்ன சொல்லன்னே புரியல... உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... நேத்து நைட் கூட நீங்க என்னயே பாத்துட்டு இருந்தத்த நான் பாத்தேன்... உங்கள கல்யாணம் பண்ணிக்க குடுத்து வெச்சிருக்கனும்... எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு..." என்றான்.


ஆர்யான் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சிதாரா,

"என்ன... உனக்கும் அவள பிடிச்சிருக்குன்னு சொன்னியா... என்ன சொல்ற ஜிராஃபி... பின்ன எதுக்கு லூஸு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட... மயூ பாவம்... எதுக்குடா அவள ஏமாத்தின..." என்றாள் கோவமாக.

ஆர்யான், "அட இருமா... இன்னும் முழுசா சொல்லி முடிக்கல... அதுக்குல்ல ஏமாத்திட்ட அது இதுன்னு சொல்ற..." என்கவும் அமைதியாகினாள் சிதாரா.

பின் ஆர்யான், "பட் நீங்க சொல்ற பிடிச்சிருக்குன்னத்துக்கும் நான் சொல்ற பிடிச்சிருக்குன்னத்துக்கும் நெறய டிஃபரன்ட் இருக்கு.. ஒரு அழகான பொண்ணையோ பையனையோ பாத்தா நமக்கு அவங்கள ஸைட் அடிக்க தோணும்.. அப்படி தான் எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு.. அதனால தான் சைட் அடிச்சேன்.. அதுக்காக நாம ஸைட் அடிக்கிற எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது... இட்ஸ் ஜஸ்ட் அ நார்மல் ஃபீல்... பட் லவ்வுங்குறது ரொம்ப வித்தியாசமானது... அது யார் மேலயும் அவ்வளவு ஈஸியா வந்துறாது... ஒருத்தர் அழகா இருக்காங்கன்னு அவங்கள நாம லவ் பண்ண முடியாது... அப்படி லவ் பண்ணோம்னா அந்த அழகு போனதும் லவ்வும் முடிஞ்சிரும்... லவ்வுங்குறது மனச பாத்து வரனும்... முடியெல்லாம் நறச்சி போய் தோல் சுருங்கி கண்ணுல குழி விழுந்தத்துக்கு அப்புறமும் உனக்காக நான் எனக்காக நீ.. அப்படி இருக்குறது தான் லவ்.. உங்கள நான் தப்பு சொல்லல.. உங்க ஃபீலிங்ஸ நான் மதிக்கிறேன்... ஒரு பையன் கிட்ட வந்து நேரா எனக்கு உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லவும் ஒரு கட்ஸ் வேணும்.. அந்த வகைல நீங்க ரொம்ப தைரியசாலிங்க.. பட் இப்ப உங்களுக்கு என் மேல வந்திருக்குறது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன்.. அதனால பார்க்க ஆர் ஸைட் அடிக்க தோணும்.. கொஞ்ச நாளெக்கி அப்புறம் அழகான வேறொருத்தர பார்க்க கிட்டயும் ஸைட் அடிக்க தோணும்.. பட் உங்களுக்கானவரு ஏதோ ஒரு மூலைல உங்களுக்காக காத்துட்டு இருப்பாரு.. அவர பாக்க கிட்ட உங்களுக்கு தோணும் இவன் தான் என் லைஃப்னு... அந்த நாள் கூடிய சீக்கிரம் உங்க வாழ்க்கைல வர நான் வேண்டிக்கிறேன்.. மோர் ஓவர் என் லைஃப்ல ஆல்ரெடி ஒரு பொண்ணு இருக்கா.. சாரி மயூரி உங்கள ஹர்ட் பண்ணனும்னு எதுவும் சொல்லல.." என்க,

மயூரி, "நோ நோ சாரி எல்லாம் கேக்காதீங்க ஆர்யான்.. என் மனசுல உள்ளத சொல்ல எனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு உங்க விருப்பத்த சொல்ல உங்களுக்கும் உரிமை இருக்கு.." என்க,

"தேங்க்ஸ் மயூரி என்றான் ஆர்யான்.

பின் மயூரி, "இதை கண்டிப்பா சொல்லனும் ஆர்யான்... நீங்க லவ் பண்ணுற பொண்ணு ரொம்ப லக்கி.." என்க,

"அவ கெடக்க நான் தான் லக்கி.." எனக் கூறி அழகாக வெட்கப்பட்டான் ஆர்யான்.


சிதாரா, "டேய்... அப்போ கூட உன் மனசுல ஆல்ரெடி ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்லி இருக்க.. யாருடா அது..." என்க,

அவளைப் பார்த்து இளித்த ஆர்யான்,

"அது சும்மா... போற போக்குல அடிச்சு விட்டேன்... இவ்வளவு ஹேன்ட்சமான பையன் இன்னும் சிங்கிளா சுத்திட்டு இருக்கேன்னு சொன்னா எனக்கு தானே அசிங்கம்... அதான் அப்படி ஒரு பிட்டு..." என்றான்.

அவனைப் பார்த்து கள்ளப் புன்னகை ஒன்றை உதிர்த்த சிதாரா மனதில்,

"என் கிட்டயே மறைக்கிறியா ஜிராஃபி... நீ சொல்லலனா என்ன.. அதான் உன் டயரி இருக்கே... நானே தெரிஞ்சிக்குறேன்.." என நினைத்துக் கொண்டாள்.

அன்று இரவும் சிதாரா ஹக்கி பிலோவை அணைத்துக் கொண்டு உறங்கி விட,

ஆர்யான் அதனை நன்றாக மனதில் வறுத்தெடுத்தவன்,

"இன்னைக்கு மட்டும் தான் உனக்கு மினி கூட தூங்க கிடைக்கும் பாஸ்... நாளைக்கே உனக்கொரு முடிவு கட்டுறேன்..." என நினைத்தவாறு படுத்துக் கொண்டான்.

_______________________________________________

பிரணவ், "ஆமா... எனக்கு எல்லா டீட்டைல்ஸும் தெரியும்... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்... தாராவுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்... நீங்க எனக்கு எதுவும் தன அவசியமில்ல... இது மூலமா எனக்கும் பெரிய லாபம் கிடைக்குது..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் பிரணவ்வின் முகத்தில் மர்மப் புன்னகை ஒன்று உதித்தது.

பிரணவ்வைத் தேடி வந்த அபினவ், "இங்க தனியா என்னடா பண்ணிட்டு இருக்க... நானும் கொஞ்ச நாளா உன்ன நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்... ரொம்ப வித்தியாசமா பிஹேவ் பண்ற... அடிக்கடி தனியா போய் மொபைல்ல யாரு கூடவோ பேசிட்டிருக்க... என்னடா பிரச்சினை..." என்க,

அபினவ்வைப் பார்த்து சிரித்து சமாளித்த பிரணவ்,

"ச்சேச்சே.. அப்படி எல்லாம் இல்லடா... ஆஃபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம்... அது பத்தி தான் அடிக்கடி கால் வருது..." என்றான்.

பிரணவ் கூறியதை நம்பிய அபினவ் பின் எதுவும் கூறாமல் சென்றான்.

அபினவ் சென்றதும் பெருமூச்சு விட்ட பிரணவ்,

"இவனுக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆதர்ஷ் கிட்டயும் சொல்லிடுவான்... அதுக்கப்புறம் பெரிய பிரச்சினை ஆகிடும்... சீக்கிரம் இந்த வேலைய முடிக்கனும்..." என நினைத்துக் கொண்டான்.

_______________________________________________

மறுநாளும் சிதாரா யுனிவர்சிட்டி முடிந்து வர ஆர்யான் அன்று அவளை தனியே வரக் கூறி இருந்தான்.

முதல் நாள் போலவே இன்றும் யாரோ தன்னைப் பின் தொடர்வது போல் சிதாராவுக்கு தோன்றியது.

அதனால் டாக்ஸி பிடித்து அவசரமாக வீடு வந்து சேர்ந்தாள்.

சிதாரா வந்து சிறிது நேரத்திலே ஆர்யான் கையில் ஒரு நாய்க்குட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

சிதாரா, "ஹேய் ஜிராஃபி... யாரோட பப்பி இது... ரொம்ப கியுட்டா இருக்கு... நாம வளர்க்க போறோமா என்ன..." என கண்கள் மின்னக் கேட்டாள்.

ஆர்யான், "இல்ல மினி... இது என் ஃப்ரெண்டோட பப்பி.. பேரு ஃபெபி... அவன் ஏதோ வேலையா போறானாம்... அதான் கொஞ்சம் நேரம் வெச்சிக்க சொன்னான்... நைட் வந்து எடுத்துட்டு போயிருவான்...." என்கவும்,

"ஓஹ்... அப்படியா... பட் ரொம்ப கியுட்டா இருக்கு..." என்ற சிதாரா அதை தன் கைகளில் வாங்கினாள்.

ஃபெபியும் நாக்கால் சிதாராவின் முகத்தை நக்கி அதன் பாசத்தை வெளிக் காட்டியது.

உண்மையில் ஆர்யான் தான் அவன் நண்பன் ஒருவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தான்.

ஆர்யான், "சரி மினி.. ஃபெபிய என் கிட்ட குடு... நீ ஃபெபிக்கு சாப்பிட கிச்சன்ல இருக்குற பிஸ்கட்ட எடுத்துட்டு வா... நான் இதை நம்ம ரூமுக்கு எடுத்துட்டு போறேன்... ஆஹ் அப்படியே எனக்கும் ஒரு கப் காஃபி எடுத்துட்டு வா மினி.." என்றான்.

சிதாராவும் ஃபெபியை ஆர்யானிடம் கொடுத்து விட்டு கிச்சனுக்கு சென்று விட,

ஆர்யான், "வா ஃபெபி... உனக்கு பெரிய வேலையொன்னு இருக்கு..." என்றவன் ஃபெபியை அறைக்கு எடுத்துச் சென்றான்.

அறைக் கதவை மூடிக் கொண்டவன் ஃபெபியைக் கீழே விட்டான்.

பின் கட்டிலிலிருந்த சிதாராவின் புதிய ஹக்கி பிலோவை எடுத்து ஃபெபியைத் தாண்டி வீசியவன்,

"ஃபெபி கேட்ச்.." என்றான்.

அதுவும் அதனைப் பிடிக்க துள்ளிப் பாய ஆனால் பிடிக்க முடியாமல் போனது.

மீண்டும் மீண்டும் ஃபெபியினால் பிடிக்க முடியாதவாறே எறிந்தவன் இறுதியில் கள்ளப் புன்னகையுடன் ஃபெபியின் அருகில் போட்டான்.

இவ்வளவு நேரமும் தன் கையில் மாட்டாமல் இப்போது மாட்டிய கோபத்தில் ஃபெபியும் தன்னால் முடிந்த அளவு அதனை கடித்து இழுத்து என கொடுமை செய்தது.

அதைக் கண்டு ரசித்தவாறே ஆர்யான் உடை மாற்றி வர குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

சற்று நேரத்தில் சிதாரா ட்ரேயில் தனக்கும் ஆர்யானுக்கும் காஃபியும் ஃபெபிக்கு பிஸ்கட்டும் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைய அவள் கண்டது என்னவோ ஃபெபியின் கையில் மாட்டி சின்னாபின்னமாகி உயிரை விட்டிருந்த அவளது ஹக்கி பிலோவைத் தான்.

ட்ரேயை அங்கிருந்த மேசை மீது வைத்தவள் அவசரமாக தன் ஹக்கி பிலோவைக் கையில் எடுத்து,

"என்னோட ஹக்கி பிலோ...." என்றாள் கவலையாக.

சரியாக ஆர்யானும் வெளியே வர ஆர்யானுக்கு சிதாராவின் கையிலிருந்த ஹக்கி பிலோவைக் காணக் காண அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாதவன் எதுவும் தெரியாதது போல்,

"என்னாச்சு மினி... ஏன் சோகமா இருக்க..." என்றான்.

சிதாரா, "ஃபெபி என் ஹக்கி பிலோவ பிச்சி போட்டுடுச்சு..." என்றாள்.

ஆர்யான் தனக்கு வந்த சிரிப்பை மறைத்தபடி, "அதுக்கென்ன மினி.. விடு வேற வாங்கிக்கலாம்... பாவம் ஃபெபி... அதுக்கென்ன தெரியும்..." என்றான்.

சிதாரா பாவமாக முகத்தை வைத்தபடி, "இல்ல ஜிராஃபி... எனக்கு வேற வேணாம்... எவ்வளவு ஆசையா வாங்கினேன் தெரியுமா... இனி நான் சும்மாவே தூங்க பழகிக்கிறேன்...." என்றாள்.

ஆர்யானோ உள்ளுக்குள் துள்ளிக் குதித்தான்.

ஃபெபியைத் தூக்கிக் கொண்ட ஆர்யான் அதைக் கொஞ்சியவாறு சிதாரா கொண்டு வந்த பிஸ்கட்டை அதற்கு ஊட்டி விட்டான்.

இரவானதும் சிதாரா ஹக்கி பிலோ இல்லாததால் கட்டிலிலில் ஓரமாகப் படுத்துக் கொண்டாள்.

ஆனால் மறுநாள் காலை அன்று போல் ஆர்யானின் நெஞ்சில் தான் தலை வைத்து அவனை அணைத்தபடி படுத்திருந்தாள்.

அவளுக்கு முன் விழித்த ஆர்யான் சற்று நேரம் சிதாராவின் முகத்தையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவளை இரவு படுத்தது போல் ஓரமாகப் படுக்க வைத்தான்.

சிதாரா எழுந்து பார்க்கும் போது இரவு உறங்கியது போலவே தான் படுத்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்தவள் ஹக்கி பிலோ இல்லாமலே அதன் பின் வந்த நாட்கள் தூங்கினாள்.

ஆனால் அவள் விழித்து விட முன் ஆர்யான் செய்வது எதையுமே சிதாரா அறியவில்லை.

அடுத்து வந்த நாட்கள் சிதாரா யுனிவர்சிட்டி செல்வதிலும் படிப்பதிலும் கவனம் செல்ல ஆர்யானின் டயரி பற்றி மறந்தே போனாள்.

ஆர்யானுக்கும் அந்த தெரியா இலக்கத்திலிருந்து அதன் பின் அழைப்பு வராததால் நிம்மதியாக இருந்தது.

ஆனால் சிதாராவைக் கடத்த முயன்றது யாரென்று தேடிக் கொண்டு தான் இருந்தான்‌.

இருவரின் நாட்களும் எப்போதும் போல ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டு சந்தோஷமாகக் கழிந்தது.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom